திரும்பி பார்க்கின்றேன் 2010 ஒரு பார்வை..வருட கடைசியில் அந்த வருடத்தை திரும்பி பார்ப்பது சுவையான அனுபவம்தான்... முன்பு நான் வருட வருடம் டைரி எழுதி வருவேன்.. ஆனால் பதிவு எழுத அரம்பித்ததில் இருந்து டைரி எழுதுவதை குறைத்து விட்டேன். காரணம் நிறைய பதிவுகள் எழுதுவதால் டைரி எழுதுவது குறைந்து விட்டது..சரி 2010 சும்மா விரிவா பார்க்காவிட்டாலும் ஜஸ்ட் என்ன என்பதை பார்ப்போம்...hello how are you/ உலக சினிமா/ருமேனியா/ 40வயதுக்குமேல் காதல் வருமா??40 வயதுக்கு மேல் காதல் வருமா? வரும் என்று சொல்கின்றார்க்ள்.. ஆனால் அந்த காதல் என்பது தன் கணவனிடம் மனைவியிடம் வர வேண்டும் அல்லவா?? ஆனால் பலருக்கு அது போல் வந்து தொலைக்கமாட்டேன்கின்றது... அதுதான் பிரச்சனை..


தமிழ் சினிமாக்களில் ஆண் மட்டுமே 40 வயதுக்கு மேல் அடுத்த பெண்னோடு தொடர்பு வைத்து இருப்பதாக காட்டுவார்கள்.. பெண்கள் வீட்டில் மஞ்சள் பூசி குளித்து சாமி கும்பிட்டு கணவனே கண் கண்ட தெய்வமாக வாழ்வதாக காட்டுவார்கள்.. ஆனால் தமிழகம் எப்போதோ மாறிவிட்டது.. அதை எந்த சினிமாவும் பதிவு செய்வது  இல்லை..அப்படியே பதிவு செய்தாலும் காமெடிக்காக பதிவு செய்யபடுகின்றன.


சுனாமிக்கு மறுநாள் நான் எடுத்த மறக்கமுடியாத போட்டோக்கள் ..

சுனாமி வந்து 6 ஆண்டுகள் முடிந்து விட்டன. சுனாமி வந்த போது வடபழனி குமரன் காலனியில்  இருந்தேன்..மீட்பு பணிக்கு இடையூறு செய்யாமல் இருக்க யாரும் கடற்கரைக்கு வரைவேண்டாம் என்று தொலைகாட்சியில் அறிவிப்பு வந்த காரணத்தால் நான் வெளியே போகவில்லை..

தொலைகாட்சியில் ஒரு அம்பாசிட்டர் கார் அண்ணாசமாதி அருகே தண்ணீரில் குதித்துக்கொண்டு இருக்கும் போதே எனக்கு சுனாமி கோரமுகம் தெரிந்து விட்டது...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)

ஆல்பம்..

2010 ஆம் ஆண்டின் கடைசி சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்...  விளையாட்டாய் ஒரு வருடம் ஓடி விட்டது.தொடர்ந்து சாண்ட்வெஜ் வாசித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் என்  நன்றிகள்..
================
மன்மதன் அம்புவிமர்சனத்தை நான் நடுநிலை தவறி எழுதிவிட்டதாக சிலர் வருத்தபட்டு சொல்லி இருந்தார்கள்.. எனக்கு படம் பார்க்கலாம் .. படம் பார்க்க கூடாத அளவுக்கு அம்பு  ஒன்றும் அவ்வளவு மொக்கை இல்லை... ரெண்டாவது நீங்கள் நினைப்பது  போல் எல்லாம் என்னால் விமர்சனம் எழுத முடியாது.. எனக்கு என்ன பிடிக்குதோ.. அதைதான் எழுத முடியும்...


COLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித கொத்துக்கறி..போன ஏழாவது சென்னை உலக படவிழாவில் ஆன்ட்டி கிரைஸ்ட் என்ற டென்மார்க் படம் .. படம் பார்ப்பவர்களை  போட்டு தாக்கியது... நிச்சயம் அந்த படத்தை பற்றி எப்படியும் இரண்டு  நாளைக்கு மேல் யோசித்துக்கொண்டு இருந்து இருப்பார்கள்...

பெண் உறுப்பில் இருக்கும்  மொட்டை கத்திரிக்கொலால் வெட்டியும்,கணவனின் ஆணுறுப்பை கட்டையால் அடித்து நசுக்குவதுமாக , அந்த படம் ரத்த வீச்சாக ஒரு பெரிய பரபரப்பை போனசென்னை உலக படவிழாவில் ஏற்படுத்தியது..  அதை விட இன்னும் ஒரு படி மேலே போய் இருக்கின்றது இந்த  கோல்ட் பிஷ் என்ற ஜப்பான் படம்....


Memories of Murder -2003 உலகசினிமா/சவுத்கொரியா( வாழ்வில் மறக்கமுடியாத கொலைகள்...)மறதி நல்ல விஷயம் தான்ஆனால் அதுக்காக முக்கியமான சில விஷயங்களை மறக்கவே முடியாது அல்லவா?? எந்த வேலை செய்தாலும் சில விஷயங்கள் நம் நினைவுகளில் அசைபோட்டுக்கொண்டேதான் இருப்போம்...அதுவும் காவல் துறையில் இருந்தால் கேட்கவே வேண்டாம்..


ஈரோட்டு பசங்க பாசக்கார பயபுள்ளைங்கதான்...(ஈரோடு தமிழ் வலைபதிவர் சங்கமம்)

வெளியூர் ஷுட்டிங் போய் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஈரோடுவலைபதிவர் குழுமத்தில் கலந்து கொள்ள நிறைய அன்பான அழைப்புகள் வந்தன...நான்  போவதா வேண்டாமா? என்ற இரட்டை மன நிலையில் இருந்தேன். இருப்பினும் சனி இரவு 8,30 மணிக்கு போவது  என்று முடிவு செய்து ஈரோடுக்கு வண்டி ஏறினேன்.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•12•2010)

ஆல்பம்..

இன்னும் 100 நாட்களில்  சென்னை சாலைகள் சரிசெய்யபடும்... அதுவும் மழைபெய்யவில்லை என்றால் சொன்ன நேரத்துக்கு சரி செய்து விடுவோம் என்று துணைமுதல்வர் சொல்லி இருக்கின்றார்.. பார்ப்போம்.. நல்ல சாலை வசதி சென்னைக்கு எப்போது வாய்க்குமோ? பகவானுக்கே  வெளிச்சம்..
===========

இனிதே நிறைவு பெற்ற சென்னை 8வது உலகதிரைப்படவிழா..நேற்றோடு  சென்னை உலக திரைப்பட விழா நிறைவு பெற்றது. ஒன்பது நாட்கள் நடந்த இந்த திருவிழாவில் 40 நாடுகளில் இருந்து 130க்கு மேற்ப்பட்ட படங்கள் திரையிடப்பட்டன...


மன்மதன் அம்பு...திரிஷா உதடு தப்பிய படம்.கமல் படத்தில் முதல் காட்சியிலேயே நடிகர்  சூர்யாவும் திரிஷாவும் ஆட்டம் போடும் போது இது தமிழ்படம்தானா? என்ற ஆச்சர்யங்கள் நம்மை சூழ்ந்து கொள்கின்றன..ஒரு பெரிய நடிகர் படத்தில் வளர்ந்து வரும் ஒரு நடிகர் ஈகோ பார்க்காமல் நடித்து இருப்பது பாராட்டுக்குறியது.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(22•12•2010)

ஆல்பம்...
கடைசியில் ராசா கைது செய்யப்படலாம் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து கூட தூக்கப்படலாம் என்பதாய் செய்திகள் தெரிவிக்கின்றன..திமுக தலைவரின் சின்ன குடும்பத்தை பழிவாங்க எல்லோரும் ஓர் அணியில் திரண்டு விட்டார்கள் அப்புட்டுதேன்..
===========

நடு ரோட்டில் நிறுத்தும் மாநகர பேருந்தும், நடு ரோட்டில் நிற்கும் பொதுமக்களும்.

சென்னையில் பல காரணங்களை டிராபிக்கு சொன்னாலும் ஷேர் ஆட்டோ மீது பெரும்பாலானவர்கள் பழி போட்டு தப்பி விடுகின்றார்கள்..
ஆனால் அவர்கள் மட்டும் காரணம் அல்ல...


உலகத்திலேயே பேருந்தினை எத்தனை பெரிய டிராபிக்காக இருந்தாலும் நடு ரோட்டில் நிறுத்தி, பயணிகளை ஏற்றி இறக்கும்  பேருந்து ஓட்டுனர்கள்... நமது அரசு பேருந்து ஓட்டுனர்கள்தான்... அவர்களை  யாரும் கேட்க முடியாது.. ஏனென்றால் அவர்களுக்கு சங்கம் இருக்கின்றது.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•12•2010)

ஆல்பம்..
அவர்கள் அப்படித்தான் பேசி இருக்கவேண்டும். என்ன பேசி இருக்கவேண்டும்..?? மச்சி இதுதான் நல்ல நேரம்.. நாடளுமன்றம் முடங்கி 20 நாளைக்கு மேல ஆக போகுது..  சோ இந்த நேரத்துல பெட்ரோல் விலையேத்த சரியான நேரம் என்று ஆயில் கம்பெனிகள் அவசர கூட்டம் போட்டு சரக்கு அடித்தபடி இப்படித்தான் பேசி இருக்கவேண்டும்.


(SERBIS)18++ உலக சினிமா/பிலிப்பைன்ஸ்.. ஒரு கலீஜ் தியேட்டர்...


நாம் கலீஜ்  என்று முகம் சுளிக்கும் இடத்தில்தான் பல பேர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள்... அவர்களும் மனிதர்கள்தான்... அவர்களும் நம்மை போலவே இந்த பூமியில் வாழ வந்தவர்கள்...பிறப்பின் பின் புலத்தால் அந்த இடத்தில் வாழ்கின்றார்கள்...இந்த உலகில் எதுவுமே கலீஜ் இல்லை... முகம் சுளித்தால் எங்கும் வாழ முடியாது....உயிர் வாழ தகுதியுடையவனாக தன்னை மாற்றிக்கொள்ள எந்த இடத்திலும் எது செய்தாவது வாழ வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் விளிம்பு நிலை மனிதர்கள் பற்றிய கதை இது....சென்னையில் உற்சாகமாக துவங்கிய 8வது உலகபடவிழா...(புகைபடங்களுடன்)

(உட்லண்ட்ஸ் தியேட்டரின் முகப்பு வழக்கமான கூட்டத்தை விட இந்த முறை அதிக கூட்டம்.)

எட்டு வருடங்களுக்கு முன் உலக திரைப்படம் கிலோ என்னவிலை?? என்று  நான் கேட்ட நேரம் அது... மிகசரியாக எட்டு வருடங்களுக்கு முன் ஒரு நண்பர் பிலிம் பெஸ்ட்டிவலுக்கு பாஸ் வாங்கிவிட்டு தன்னால் போக முடியவில்லை நீ வேண்டுமானால் போய் விட்டு வா என்று சொன்னார்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(15•12•2010)

ஆல்பம்.


பெட்ரோல் விலை லிட்டருக்கு 3ரூபாய் ஏறி இருக்கின்றது ஒரு பத்து வருடத்துக்கு முன்பு லிட்டர் 35ரூபாய் விற்ற போது பெட்ரோல் விலையேற்றங்கள் 30 காசு மற்றும் 75 காசுகளில் மட்டுமே விலையேற்றம் இருக்கும் ஆனால் இப்போது எல்லாம் அப்படி இல்லை... ரூபாய்களில் விலை ஏறிக்கொண்டு இருக்கின்றது. முன்பு பெட்ரோல் டீசல் விலையேற்றத்தை காரணம் காட்டி நான்கு ரூபாய்க்கு விற்ற டீ 5ரூபாய்க்கு ஆனது. இப்போது  டீசல் விலை உயர்வை அறிவிக்கவில்லை அறிவித்து இருந்தால் சிங்கள் டீ ஆறுரூபாய் ஆகி இருக்கும்..


சாருநிவேதிதாவின் ஏழு நூல்கள் வெளியீட்டு விழா ஒரு பார்வை.(13/12/2010)
உயிர்மை பதிப்பகம் வெளியீடும்  எழுத்தாளர் சாருவின் புத்தக வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில்  நேற்று மாலை நடைபெற்றது. காமராஜர் அரங்கத்தில் நுழையும் போதே சாருவின் துணைவியார் அவந்திகா மற்றும் கருப்பு பேன்ட் ,சிவப்பு சட்டை போட்ட ஒரு  பெண்மணியும் வந்தவர்களை வரவேற்று முதலில் டீ , சமோசா சாப்பிட்டு  வர அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•12•2010)

ஆல்பம்.
நாடளுமன்றம் இருபது நாட்களுக்கு மேல் தொடர்ந்து முடங்கி கிடக்கின்றது.. இந்த வாய்ப்பு   எப்போதும் கிடைக்கபோவதில்லை என்று எதிர்கட்சிகளும் விடாபிடியாக இருக்கின்றன...என்றைக்கு மக்கள் நலன் மீது இவர்களுக்கு அக்கறை இருக்கின்றது. இப்போது மட்டும் இருக்கபோவதற்கு??
====================

8வது சென்னை உலகதிரைப்படவிழா பற்றிய அறிவிப்பு...எனக்கு ஒரு கடிதம் வந்தது.. அந்த கடிதம்  சினிமாவை விரும்பி  பார்ப்பவரின் கடிதம்...

 
அன்புள்ள ஜாக்கி ஸாருக்கு,சென்னை அடையாறு ஆற்று வெள்ளம் ஒரு அட்வென்சர் பயணம் (புகைபடங்களுடன்)

நம்மை பொறுத்தவரை மழை நின்று விட்டது.. குண்டு குழியான சாலைகள் ஏன் இன்னும் செப்பனிடபடவில்லை என்ற கேள்வி மட்டுமே நம் செசன்னைவாசிகள் பெரும்பாலோனோர் மனதில் தொங்கி நிற்கும் கேள்வி.


சென்னை மழை என் கேமராவில் கிளிக்கியவை...

 சென்னையில் மழை நின்றுவிட்டது.ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது ஆனாலும் என் கேமராவை வெளியே எடுக்காமல் இருந்தேன்...இந்த  மழைக்கு வீட்டுக்கு அக்கம் பக்கத்தில் என் பார்வைக்கு பட்டவைகளை உங்கள் முன் காட்சியாக..

 இது நம்ம ராமபுரம் பக்கத்தில் இருக்கும் மியோட் மருத்துவமைனைக்கு அருகே இருக்கும்  பாலம்... செம்பரம்பாக்கம்  ஏரியில் தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இது. மூன்று வருடங்களுக்கு முன் இதே போல தண்ணீர் பார்த்தேன் அதன் பிறகு இப்போதுதான் பார்க்கின்றேன்.
===========

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)


ஆல்பம்..

சென்னை மிதந்து கொண்டு இருக்கின்றது. நேற்று இரவோடு மழை விட்டு விட்டாலும் மழை ஏற்படுத்திய சுவடுகள் மறைய எப்படியும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம். காரணம்.. அவ்வளவு தண்ணீர். இத்தனைக்கு மழை பெரிதாக பேயவில்லை என்பதே உண்மை.. ஒன்பது சென்டிமீட்டர் மற்றும்  பத்து பண்ணிரண்டு சென்டிமீட்டர்தான் பேய்ந்து இருக்கின்றது..15 நாட்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் மழை பெய்து இருக்கின்றது. ஆனால் அதனை ஒப்பிடும் போது சென்னையில் மழையின் அளவு குறைவு என்பேன்... சென்னை புறநகர் பகுதியான கேளம் பாக்கத்தில் மழையின் அளவு 17 சென்ட்டிமீட்டர் பேய்ந்தது.. சில வருடங்களுக்கு முன் மும்பையில் ஒரேநாளில் 90 சென்ட்டிமீட்டர் மழை பதிவானது அப்படி பெய்து இருந்தால் சென்னை மூழ்கி இருக்கும்.
===========================


வழிப்பறி சென்னை சாலை...

ஏற்கனவே  இந்த பக்கத்தில் சில ஆபத்தான சென்னை  சாலைகள் பற்றி எழுதி இருக்கின்றேன்.  மதுரவயல் பெருங்களத்துதூர்  பைபாஸ் ரோடு பற்றியும் சென்னை ஈசிஆர் சாலை பற்றயும் தொடர்ந்து இந்த தளத்தை வாசித்து வருபவர்களுக்கு நிச்சயம் தெரியும்.


சென்னை மாநகர பேருந்து இருக்கை மாற்றமும்,அறிவுக்கொழுந்து அதிகாரிகளின் யோசனையும்...


உலகின் மிககொடுமையான பயணம் என்பது பீக் அவரில் சென்னை மாநகர பேருந்து பயணம்தான்.

சரி பேருந்தில் செல்வது கொடுமையா?

பேருந்தில் செல்வது கொடுமை என்று யார் சொன்னது.. சராசரியாக 45 பேர் பயணம் செய்யும் பேருந்தில் 100 பேருக்குமேல் தினசரி பயணித்தால் அது கொடுமைதானே.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/05•12•2010)

ஆல்பம்.. 

இன்று சரியாக (இன்னும் சில மணி நேரங்களில்) மதியம் இரண்டு மணிக்கு விஜய்டிவியில் இந்தவார தமிழ்சினிமா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது அதில் நந்தலாலா படம் பற்றி நான் உட்பட சென்னை பதிவர்கள் பலர் கலந்து கொண்டு பேசி இருக்கின்றோம்.


ரத்த சரித்திரம் விமர்சனம்.ரத்தசரித்திரம்... பழிவாங்கும் கதையை நாம்  கதைகதையாக  பார்த்து இருந்தாலும் இந்த கதை ஒரு உண்மைசம்பவத்தினை அடிப்படையாக கொண்டது. இந்த படம் இரண்டாம் பாகம்..


(READ MY LIPS-2001/உலக சினிமா/பிரான்ஸ்) காது கேட்காதவளின் காதலும் காமமும்.... மனநெகிழ்ச்சியாக படம் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது.இந்த படம் சமீபத்தில் அந்த குறையை போக்கியது என்பேன்..உலகபடம் என்றால் ஒருவர் வெகுதூரம் நடந்து போவதுதானே என்ற என்பர் ஒருவர் சலித்துக்கொண்டார்.. அப்படி அல்ல பல பேரின் பார்வை அவ்விதமாகவே இருக்கின்றது.. அந்த கருத்தை உடைக்கவே நான வேறுதளத்தில் உள்ளபடங்களை எழுதி வருகின்றேன்.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(01•12•2010)

ஆல்பம்..

இன்று எயிட்ஸ் தினநாள். தமிழகத்தில் கடந்த பத்து வருடத்தில் எலக்ட்ரானிக் மீடியா போல பிரபலமான நோய் எயிட்ஸ் நோய்.. எனது கல்லூரியில் சில வருடத்துக்கு முன் ஒரு டிசம்பர் முதல் நாளின் போது எயிட்ஸ் பற்றிய கருத்தரங்கத்திற்கு ஒரு எயிட்ஸ் பாதிக்கபட்ட நபரை மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தோம்..


நந்தலாலா பார்க்கவேண்டியபடமா?மிஷ்கின் அப்படி பேசி இருக்க கூடாது. இப்போதைய உதவி இயக்குனர்கள்  ஏதுவும் தெரியாமல் இருக்கின்றார்கள்.அவர்களுக்கு வாசிப்பனுபவம் மிகவும் குறைவு அனுபவம் இன்றி இருக்கின்றார்கள் என்பது போல பேசிவிட்டு ஜப்பான் படத்தை அப்படியே காப்பி அடித்தது எந்தவகையில் நியாயம் என்று இதுக்கு எதுக்கு உதவி இயக்குனர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்?? இதுக்கு மிஷ்கின் அதிகம் பார்க்க வேண்டும் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்... என்று வடபழனி பக்க பஸ் டிப்போ அருகில் உள்ள டீக்கடைகள் அப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கின்றன.


ஒரு அராஜக சென்னை ஹவுஸ் ஓனர்...சொந்த வீடு வாங்கி விட்டாலும் நண்பர்களுக்கு உறவுகளுக்கு வீடு தேடுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. காரணம் எனது அத்தை வீடு திண்டிவனம் அவர்களது பிள்ளைகள் இரண்டு பேருக்கு சென்னையில் தங்க வீடு பார்க்க சொன்னார்கள். சென்னைக்கு வந்து சுற்றி வீடு தேட முடியாது என்பதால் என்னிடத்தில் சொன்னார்கள்....அதில் ஒரு கொம்பு முளைத்த அவுஸ் ஒனர் பற்றிய பகிர்தல் கிழே...எப்படி எல்லாம் இருக்கின்றார்கள் பார்....என்பதற்க்காக...இந்த பதிவு


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/28•11•2010)

ஆல்பம்..
இரண்டு வாரங்கள் அப்படி இப்படி என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடக்கவில்லை...பல கோடி மக்கள் வரிப்பணம் நட்டம்..எதிர்கட்சிகள் நாடளுமன்ற கூட்டுக்குழு விசாரனை கேட்கின்றது.. ஆளும் கட்சி விடாப்பிடியாகபொதுகணக்கு குழு விசாரனையே போதுமானது என்கின்றது.


மந்திரப்புன்னகை தமிழ் சினிமாவில் ராவான திரைப்படம்,ஏம்பா ஆங்கில படங்கள் எழுதிகிட்டு இருக்கே... புது படம் ரிலிஸ் ஆகி இருக்கு எழுதலையா என்று வெள்ளிக்கிழமை நண்பர் கேட்ட  போது, இப்ப  கைல துட்டு இல்லை பட் என் சாய்ஸ் மந்திரபுன்னகை என்று ஒரு சில பதிவுகளுக்கு முன் சொல்லி வைத்து இருந்தேன். காரணம் கரு பழனியப்பன்... அவரின் வசனங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(24•11•2010)

ஆல்பம்..
ஆரம்பிச்சிட்டானுங்கப்பா அடுத்தது அடிச்சிக்குனு சாவறதுக்கு..தென்கொரியாமீது வடகொரியா ராக்கெட் உட்டு சண்டையை வம்புக்கு இழுத்து விட்டு இருக்குது.. இனி ஆங்கில செய்தி சேனல்களில் இரவு நேரத்தில் பறக்கு ஏவுகனைகளை விடாமல் காட்டிக்கொண்டு இருப்பார்கள்.
====================


சென்னை பதிவர்களுக்கு பிரிவியூ ஷோ. இயக்குனர் கருபழனியப்பனுக்கு என் நன்றிகள்..

பிளாக் ஊடகம் மிக பெரிய அளவில் ரீச் ஆகி இருப்பது  என்பது உலகம் ஒத்துக்கொண்ட உண்மை. அதற்கு இப்போது தமிழ்பட இயக்குனரால் அங்கீகாரமும் கிடைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி...


(BURNING BRIGHT-2009) உங்கள் வீட்டுக்கு எலி வரலாம் ஆனால் புலி வந்தால்??? உங்கள் வீட்டில் நீங்கள் பயப்படும் பூச்சி  எது??? பல்லி , கரப்பான் பூச்சி, சித்தெறும்பு, சரி.... இத எல்லாம் அப்பார்ட்மென்ட் வாசிகளுக்கு.... குடிசைவாசிகளுக்கு மேலுள்ள பூச்சிகள் அல்லாமல் எலி,பூனை, நாய், பாம்பு,கீரி,உடும்பு போன்றவைகளை பார்த்து  பயப்படலாம்... மேலுள்ளவைகளை பார்த்து சிலர்மட்டும் பயம் கொள்ளலாம்..


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/21•11•2010)

ஆல்பம்..
ஆனந்த விகடனில் முதன் முறையாக எனது பெயர் தாங்கிய செய்தி வந்து இருக்கின்றது..டுவிட்டரில் ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதிய கமென்ட்டை பப்ளிஷ் செய்து இருக்கின்றார்கள்.தகவலை முதன் முதலில் பகிர்ந்துகொண்ட பட்டர்பிளை சூர்யாவுக்கும், அண்ணன் உண்மைதமிழனுக்கு மற்றும் தகவலை பார்த்து குறுஞ்செய்தியில் தகவல் பறிமாற்றம் செய்த நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
===============


the Consequences of Love (உலகசினிமா/இத்தாலி)எட்டு வருடமாய் ஒரே ஒட்டல் அறையில் குப்பை கொட்டும் பிசினஸ்மேன்.

சமீபத்தில் மியான்மரில் புரட்சி தலைவி(இவுங்க மெய்யாலுமே புரட்சி பண்ணி இருக்காங்க)சூகி 21 வருடம் வீட்டு காவலில் இருந்து விட்டு சமீபத்தில் விடுதலை செய்தது நேற்றைய பர்மிய அரசு. 21 வருடங்கள் அதே டைனிங், அதே கிச்சன், அதே டாய்லட் என வெறுத்து போய் விடும்... பர்மிய ராணுவம் குற்றவாளியாக  அந்த பர்மாவின் புரட்சிதலைவியை  21 வருடங்கள் வீட்டு சிறையில் வைத்து இருந்து சில தினங்களுக்கு முன் அவரை விடுதலை செய்தது.


Halfaouine: Boy of the Terraces18+ (உலக சினிமா/அரேபியா) 11வயது சிறுவனின் மாறுபட்ட பார்வை.


உங்களுக்கு காமம் இச்சை பற்றிய புரிதல் எப்போது ஏற்பட்டது என்ற கேள்வியை, தமிழ்நாட்டில் கேட்டால் ஆபாசத்தை பேசிகின்றோம் என்று சொல்லிவிடுவார்கள்..ஆனால் வதவதவென பெற்றுக்கொள்வோம். தெளிவின்மைதான்.நிற்க.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(17•11•2010)

ஆல்பம்..

சீனாவில் தீவிபத்து 50க்கு மேற்பட்டவர்கள் பலி என்று முதல் நாள் செய்தி அடுத்த நாள் இந்தியாவில் டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து அறுபதுக்கு மேற்பட்டவர்கள் பலி.. என்ற செய்தி. அனுமதி இல்லாமல் ஐந்தாவது  மாடி எழுப்பும் போது இந்த துயரம் நிகழ்ந்து இருக்கின்றது..வழக்கம் போல இறந்தவர்குடும்பங்களுக்கு 2 லட்சம் வழங்கபட்டது.


அகரம் ஆரம்பித்த நடிகர் சூர்யாவுக்கும், விஜய்டிவிக்கும் நன்றிகள்.


தாம் வாழும் சமுகத்துக்கு எவன் ஒருவன் நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்கின்றானோ அவனே நல்ல மனிதன் என்பது என் கருத்து...

ஒரு பேட்டியில் பிரபல நடிகர்  விக்ரம் சொல்லி இருப்பார். ஐம்பது லட்சம் வரைதான் அது பணம் அதுக்கு மேல இருந்தா அது பேப்பர்  என்று சொல்லி இருக்கின்றார்.


பிளாட்பாரம் என்பது சடங்கு…. சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ...


பல கோடி  ருபாய் செலவு செய்து சென்னையில் ரோடு ஓரத்தில் பிளாட்பார்ம் கட்டினால் அது ஒரு கண்காட்சிக்காக இருப்பது போலவே இருக்கின்றது…


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/14•11•2010)

ஆல்பம்.
ராசா ராஜினாமா குறித்து இந்தியாவே எதிர்பார்த்து காத்து இருக்கின்றது..மத்திய அரசில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர் தப்பு செய்து இருக்கின்றார்... இது பிரதமருக்கு தெரியாமல் நடந்து இருக்க வாய்பே இல்லை...ஜெ சொல்வது என்னவென்றால் ராசா ராஜினாமா செய்யவைத்தால் தான் மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொல்லி இருக்கின்றார்..அப்போது ஜெ சொல்ல வரும் சேதி என்ன தெரியுமா? தப்பு செய்தாலும் உங்களோடு நான் குப்பை கொட்டதயார் என்பதே....வௌங்கிடும்....


மைனா..குறைந்தசெலவில் நிறைந்த வருமானம்.


மைனா பார்க்கவேண்டிய பட்டியலில் இருந்தது ஆனால் அது பார்த்தே தீர வேண்டிய பட்டியலில் இந்த படம் மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...


மிக்க நன்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே....சென்னை வாழ்க்கையில் நண்பர்கள் எனக்கு மிகவும் குறைவு..ஆனால் இந்த இணையம் மூலம் எனக்கு கிடைந்த நண்பர்கள் மிகவும் அதிகம்..அப்படி சென்னையில்  இணையத்தில் எழுத வந்த இரண்டரை வருடத்தில் ஒரு சிலரால் நல்ல விதமாகவோ, அல்லது நக்கலாகவோ, கவனிக்கபட்டால் அது என்னை பொறுத்தவரை மகிழ்ச்சியான விஷயம்தான்..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(10•11•2010)

ஆல்பம்..

11வயது சிறுமியை கடத்தி கற்பழித்து அந்த சிறுமியின் தம்பியையும்  கொன்றவனை நேற்று காலையில் கோவை போலிஸ் பரலோகம் அனுப்பினார்கள்...அதில் அகமகிழ்ந்தது தமிழகம். ஒரு மாஸ் எழுச்சி என்பது எப்போதாவதுதான் நிகழும்...இறந்து போன சிறுவன் சிறுமி இறுதி ஊர்வலத்துக்கு 5000பேருக்கு மேல் கலந்து கொண்டனர்....கோவை முழுவதும் பிளக்ஸ் வைத்து அஞ்சலியை மக்கள் தெரிவித்தனர்... அரசு இந்த சென்சிட்டிவ் மேட்டருக்கு எதாவது செய்ய அப்போதே உத்தேசித்தது..உடனே சென்னையில் ஒரு கடத்தல் சம்பவம்.. அதற்கு பணம் கொடுத்து அந்த பையனை உயிருடன் மீட்டது....பிறகு குற்றவாளிகளை கைது செய்தது.. அதன் பிறகும் குழந்தை கடத்தல்கள் தொடர சட்டென ஒரு பயம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்க்காக, இந்த என்கவுன்டர் நிகழ்த்த பட்டு இருக்கின்றது என்பது என் அனுமானம்...


”வ“ குவாட்டர் கட்டிங்...தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி...


படத்தின் விளம்பரங்கள், அந்த படத்தின் டிரைலர்கள் எல்லாமே அந்த படத்தை  ஒரு காமெடி படம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றன... ஆனால் படத்தை பற்றிய ரிசல்ட் என்று பார்க்கும் போது  சிலருக்கு இந்த படம் பிடித்து இருக்கின்றது.. பலருக்கு இந்த படம் பிடிக்கவில்லை. நான் சிலர் லிஸ்ட்டில் இருக்கின்றேன்...

எனக்கு இந்த இயக்குனர்கள் இயக்கிய ஓரம்போ படம் எனக்கு ரொம்ப பிடித்த படம்... படத்தில் லோக்கல் டயலாக் அதிகமாக வைப்பவர்கள்..மெல்லிய நகைச்சுவை இழையோடும்...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/07•11•2010)

ஆல்பம்..
சென்னையில் பத்தாம் எண்  எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டு இருக்கின்றது… ஆனாலும் புயல் வலுவிழந்து விட்டது. இது பெரிய புயல் எச்சரிக்கை எண் ஆகும்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டு இருக்கின்றது…


தீபாவளி - 2010

 

போன வருட அமெரிக்க பொருளாதாரம் போல் இந்த தீபாவளி என்னை சந்தித்த காரணத்தினால் இந்த தீபாவளி மீது பெரிய பற்று எனக்கு வரவில்லை. தீபாவளிக்கு முதல்நாள் இரவு நானும் மனைவியும் போய் கூட்டமில்லாத திநகரில் உடுப்புகள் வாங்கினோம்.


எண்ணெய்சட்டி..

அம்மா
தீபாவளிக்கு முறுக்குசுடும் நேரம்.
என்வீட்டை பொறுத்தவரை
நள்ளிரவுநேரம்தான்....


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(3•11•2010)

ஆல்பம்...

பேப்பரை திறந்தால், செய்தி சேனலை பார்த்தால், கடத்தல் சம்பவங்கள் பற்றிய செய்திகள் அதிகரித்துவிட்டன.. வழக்கம் போல சினிமா பார்த்துவிட்டு இது  போல சம்பவங்கள் நடப்பதாக சிலர் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்..


மிக்க நன்றி புதியதலைமுறை மற்றும் லக்கி(எ)யுவகிருஷ்ணா....

 மிகச்சரியாக இந்த வலைதளத்தை 2008ம் வருடம், நான்காம் மாதத்தில் ஆரம்பித்தேன். இப்போது சரியாக கணக்கு செய்கையில் 2வருடம் ஆறுமாதங்கள் ஆகின்றது....


பண்டிகை கால அவசரம்... ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை....

சென்னைவாசிகள் என்று பார்த்தால் குறைந்த அளவு மக்களே இருப்பார்கள்.. ஆனால் தென்மாவட்டத்து மக்கள்தான் சென்னையை ஆக்கிரமித்து இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.


வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை....


முதன் முதலாக சென்னையில் இருந்து புதுவைக்கு ஈசிஆரில் சாலை அமைத்து அதனை விரிவாக்கிய போது... சென்னையில் மட்டும் அல்ல தமிழகத்தில் பலர் பார்த்து வியந்தனர்..  அந்த சாலை உலகதரமான சாலை....ஒரு சாலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமானசாலை அந்த சாலை...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/31•10•2010)

ஆல்பம்..
காங்கிரஸ், பாஜக  இரண்டுமே திருடர்கள்தான் என்பது மீண்டும் நிரூபனம் ஆகிவிட்டது. பாஜக ஆட்சியில் கார்கில் சவபெட்டி ஊழல் பெரிதாக அடிபட்டது, நம் எல்லோருக்கும் நினைவு இருக்கலாம்.. இப்போது காங்கிரசின் டேர்ன்... எஸ், கார்கில் போர் தியாகிகளுக்கு  வீடுவழங்கும் திட்டத்தின் கீழ் கட்டபட்ட வீடுகளில் கார்கில் போரில் உயிர் நீத்த மற்றும் அதனால் விதவை ஆனாவர்களுக்கு இந்த வீடுகள் வழங்க கட்டபட்டது.. ஆனால் மாராட்டிய முதல்  மந்திரி அசோக் தவான் மாமியார், மைத்துனி என சொந்தங்களுக்கு வீடு வழங்கி அசத்தி இருக்கின்றார்.. பிரச்சனை பெரிதாக இப்போது சோனியாவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்து இருக்கின்றார்.....அடுத்த அமைச்சர் ராசாகூட ராஜினாமா செய்யலாம் என்று டெல்லி பட்சிகள் சொல்லிக்கொண்டு இருக்கின்றன.


நசுக்கப்படும் நல்ல உள்ளங்கள்...(சிறுகதை)

இரவு மணி ஒன்பதரைக்கு,  அந்த கடைசி லெவன் எச் பேருந்தை நான் சென்னை பூக்கடை பேருந்து நிறுத்தத்தில் நின்று கை கட்டிய போது,ஷேர் ஆட்டோ தொந்தரவு இல்லாத காரணத்தால் சத்தியத்துக்கு கட்டுபட்டது போல மிக சரியாக அந்த வழித்தடத்துக்கு ஒதுக்கபட்ட நிறுத்தத்தில் அந்த பேருந்து நின்றது.


இன்றாவது உன் நினைவுகளை....இன்றாவது
உன் நினைவுகளை
கழற்றிவைத்து
உறங்க நினைத்தேன்.....
முடியாது என்பது போல
உறுத்தியது
நீ தலையில் வைத்துவிட்ட மல்லிகை.
===========

தமிழக சிலை அவமதிப்பு விவகாரம்,சிக்கலில் பொது மக்கள்...(சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ)


ஒரு சிலையை வச்சிட்டு அது கையை காலை  சேதபடுத்தி அதன் மூலம் கலவரத்தை உண்டு பண்ணி குளிர்காயும் பேடித்தனம் வேற எந்த ஊர்லயும் நடக்காது என்பது என் கருத்து..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(27•10•2010)

ஆல்பம்..

ஒபமா இந்தியா வருகின்றார்... அதாவது  பதவிகாலம் முடியும் நேரத்தில் இந்தியா வந்து நல விசாரிப்புகளை செய்து விட்டு, அரசு செலவில் தாஜ்மஹால் போய் பொண்டாட்டியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு செல்லும் போது, மற்றகாமல் எரிசக்தி விஷயத்தில் இந்தியாவை ஏய்த்து விட்டு செல்லும் அமெரிக்க அதிபர்களில்,


(AFTER. LIFE-2009) 18+ ஆத்மாவோடு பேசுபவன்.


இறப்புக்கு பிறகு என்ன நடக்கும் என்பது எப்போதும், மனித குல வரலாற்றில்  மில்லியன் டாலர் கேள்விதான்.. ஆனால் பொதுவாக இறப்புக்கு பிறகு உடலை விட்டு ஆத்மா மட்டும் சுற்றிக்கொண்டு இருக்கும்...என்பதாக நம்படுகின்றது. இதுதான் பெரும்பான்மைகாரர்களின் கூற்றாக இன்றளவும் இருக்கின்றது..


அப்பல்லோ மருத்துவமனை சென்னை ஒரு பார்வை..

கடந்த மூன்று நாட்களாக நான் சென்னை கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ பக்கம் சுற்றிக்கொண்டு இருக்கின்றேன்..என் அத்தைக்கு குடல் ஆப்பரேஷன்.நல்லபடியாக முடிந்தது...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/24•10•2010)

ஆல்பம்..
மிக முக்கிய அறிவிப்பு....
தமிழ் வலைபதிவர்கள் மற்றும் டுவிட்டர் தோழமைகளுக்கு....
இன்று ஞாயிறு(24/10/2010) மாலை மிகசரியாக 5.30 மணிக்கு, சென்னை காந்தி  சிலைக்கு அருகாமையில்,   தமிழ்பதிவர் மற்றும் டுவிட்டர் நண்பர்களின் சந்திப்பு நடைபெறுகின்றது...   எல்லோரும் கலந்து கொள்ள வேண்டுகின்றோம்..
============

நடுநிசி நாய்களும், சில உண்மைகளும்.....18+


பதிவுலகம் நான் வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன... இதுவரை பெரிய பிரச்சனைகளை நான் சந்தித்தது இல்லை...பெரிய பிரச்சனைகளில் நான் தலையிட்டதும் இல்லை... காரணம் இது நம்ம பொழப்பு இல்லை என்பதில் மிக தெளிவாக இருக்கின்றேன்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/20•10•2010)

ஆல்பம்..

திருமணநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை உள்ளங்களுக்கும் என் நன்றிகள்..

வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே...


நேற்றுதான் கழுகு வலைப்பூவில் எனது பேட்டியை வெளியிட்டு இருந்தார்கள்....திங்கள் கிழமை கொடுக்க முடியுமா?  என்று கேட்டதால் ஞாயிறு இரவே பதில் டைப்பினேன்..  ஒன்றரை மணி நேரம் எடுத்துக்கெண்டது  அதன் பிறகு தூக்கம் கண்ணை சொக்கியதால் ஏதும் எழுதவில்லை அதனால் திங்கள் கிழமை  எனது  வலைப்பூவில் ஏதும் போஸ்ட்போட வில்லை...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/17•10•2010)

ஆல்பம்..
நேற்று அகநாழிகை பதிப்பகத்தின் சென்னையில் பரத்தை கூற்று கவிதை புத்தக வெளியிட்டு விழா, கே கே நகர் டிஸ்கவரி புக் பேலசில் நடந்தது... நல்ல கூட்டம்.நான் ஆயுதங்களை எல்லாம் கழுவி பொட்டு வைத்து, படையல் போட்டு கிளம்பி செல்ல நேரமாகிவிட்டது... எழுத்தாளர் சாரு பேசிக்கொண்டு இருந்தார்...அந்த சிறிய ஹாலில் 1000 வாட்ஸ் லைட் போட்டு ஒரு வீடியோகிராபர் நிகழ்வை டேப்பில் திண்னகொடுத்துக்கொண்டு இருந்தார்... அதனால் அத்தனை பேரின் கபாலங்களிலும் வியர்வை வழிந்து ஓடிக்கொண்டு இருந்தது...சாரு அந்த கவிதை புத்தகத்தில் இருக்கும் ஒரு கவிதையை வாசித்தார்...


(BRINDAAVANAM-2010)TELUGU ஜுனியர் என்டிஆர்,காஜல்,சமந்தா. முக்கோணகாதல்.


நான் முதலில் தியேட்டரில் பார்த்த நேரடி தெலுங்கு படம் சிரஞ்சிவி நடித்த முட்டா மேஸ்திரி... திருப்பதியில் உள்ள பிரகாஷ் திரையரங்கம் என்று நினைக்கின்றேன்.. அதில்தான் அந்த படத்தை பார்த்தேன்..குடும்பமாக வந்து அந்த படத்தில் வரும் கெட்ட ஆட்டங்களை பார்த்து ரசித்தார்கள்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/13•10•2010)

ஆல்பம்..

காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் நிறைவு விழாவுக்கு தலைமை தாங்க போகின்றவர்... நம்ம ராஜபக்சே...நான் பொங்குவது போல வைகோ பேசிவிட்டார்.... தமிழ்களை கொன்று குவித்தவனை கூப்பிட்டு எதுக்கு இப்போது ராஜ உபச்சாரம்.. அட இலங்கை தமிழர்களுக்கு குரல்  கொடுக்காவிட்டாலும்... இந்திய தமிழக  மீனவர்கள் தினமும் தாக்கபடுவது குறித்து எந்த கண்டன அறிக்கையும் இல்லை... தமிழர்களும் இந்தியர்கள்தானே என கேள்வி எழுப்பி இருக்கின்றார்...


100%நான் லோக்கல்தான்.... அதுல யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்....

ஆரம்பத்தில் இருந்தே நான் சில விஷயங்களை வெளிப்படையாகவே எழுதி வந்து இருக்கின்றேன். எனக்கு அப்படித்தான் எழுத வரும். அதே போல் என்னை அவமானபடுத்தலாம் என்று கங்கனம் கட்டிக்கொண்டு  அலைய ஒரு கூட்டமே இருக்கு....


(MERANTAU WARRIOR-2009) இந்தோனேசியா. ஜகார்தா தலைநகரின் கருப்பு பக்கம்..

ஒரு தமிழ் படத்துக்கு குறைந்த பட்சம் ஆக்ஷன் முலாம் பூசினால் எப்படி இருக்கும்?? அதுதான் இந்த படம்… நிறைய இடங்களில் தமிழசாயல் வீசுகின்றது…


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/10•10•2010)

ஆல்பம்..
ஆஸ்திரேலியாவில் இனவெறியை தூண்டும் வகையில் ஒரு போலிஸ்காரர் நடந்து கொண்டு விட்டதாக செய்தி வர, இந்திய  உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டிஸ் அனுப்பி இருக்கின்றது. நான் தெரியாமல் கேட்கின்றேன் இப்ப கூட இந்திய மீனவர்களை இரும்பு கம்பியால் செக்கையாக மாத்து கொடுத்து அனுப்பி இருக்கின்றது…


(THE KILLING JAR-2010) ஏழு பினைகைதிகள்,ஒரு ஓட்டல் ஹால், ஒரு கொடுரகொலைகாரன்.


இதற்கு முன்  நாம் ஒரே அறையில் மட்டுமே நடக்கும் ஒரு முழுநீள திரைப்படத்தை பார்த்து இருக்கின்றோம். அந்த படம் எக்சாம். மூன்றே பேர் மட்டும் படம் முழுவதும் நடித்த படத்தையும் இதே தளத்தில் அறிமுகபடுத்தி இருந்தேன். அந்த படம் டிஸ்ப்பியரன்ஸ் ஆப் ஆலிஸ் என்ற அந்த படத்தையும் பார்த்து ரசித்து  இருப்பீர்கள். இப்போது இந்த படம் முழுக்க முழுக்க ஒரு  ஓட்டலின் சின்ன ஹாலில் முழுபடமும் எடுத்து முடித்து இருப்பார்கள். அது போலான திரைக்கதை.


(KHALEJA) மகேஷ்பாபுவின் கலேஜா. தெலுங்கு பட விமர்சனம்.


ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின்படம். எந்திரன் படத்தை போலவே இரண்டு வருடம் உருவாக்கத்திற்க்கு எடுத்துக்கொண்ட படம்.கடைசியா அதிதி படத்தை பார்த்ததோடு சரி. அந்த படம் சரியாக போகவில்லை என்று இந்த படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உழைத்து வெளிவந்து இருக்கும் படம்.சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/06•10•2010)

ஆல்பம்.
காமன்வெல்த் போட்டியின் தொடக்கவிழாவின் போது, இரண்டு தமிழர்கள் பெயரை அறிவித்த போது, அரங்கம் கரகோஷத்தில் அதிர்ந்தது.  முன்னாள் குடியரசுதலைவர் அப்துல்கலாம் பெயரை பிரதீபா பாட்டில் வாசித்த போதும், கலைநிகழ்ச்சி நடத்த வந்த ஏஆர் ரகுமான்  பெயரை உச்சரித்த போதும்  எழுந்த கரகோஷத்தின் சத்தம் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது.

மாநகர பேருந்தை நிறுத்தி, சென்னையை ஸ்தம்பிக்க வைக்க எளியவழிகள்.(சென்னையில் வாழ பழக….)நேற்று காலையில் என் அத்தை பெண் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு காலையில் வந்த போது முதலில் குறுஞ்செய்தியாக மாநகர பேருந்து ஸ்டிரைக்கா? என்று கேட்ட போது  அப்படி எல்லாம் இல்லை  என்றேன்.


ஜாக்கிக்கு நேர்ந்த வேதனை அதனால் நிகழ்ந்த சாதனை.

நடிகர்  ஜாக்கியால் நான் பட்ட அவமானம் என்ற பதிவுக்கு, பலர் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகியதாக போன் செய்து சொன்னார்கள். அந்த பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.   அது போலான சுயசொறிதல் இந்த பதிவு. விருப்பம் இல்லாதவர்கள் இப்போதே வேறு வேலை பார்க்க கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.
===============


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/03•10•2010)

ஆல்பம்..
இன்று காமன்வெல்த் போட்டிகள் மாலையில் தொடங்குகின்றன.  கப்லேறிய மானத்தை திரும்பகொண்டு வருவதில் இந்த இரண்டு வார காலத்தில் பல அரசு அதிகாரிகள் இரவு பகல்பாராது பணி செய்து இருப்பார்கள். சிரத்தை எடுத்துக்கொண்ட இந்தியாவை நேசிக்கும் அத்தனை அதிகாரிகளுக்கும் என் நன்றிகள். துவக்க விழாவில்  ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்துகின்றார்
===============

கலக்கும் எந்திரன் தமிழ் சினிமாவின் புதிய பரிமாணம். சினிமா விமர்சனம்.


டிக்கெட் புக் பண்ணாத  எனக்கு சாண்ட்வெஜ் பகுதியில் ஒரு டிக்கெட்  இருந்தால் எனக்கு கொடுக்கவும் என்று  எழுதியதும் அதை படித்து விட்டு இன்று விடியற்காலை 5,30மணிக்கு சென்னை வில்லிவாக்கம் ஏஜிஎஸ் தியேட்டரில் விடியற்காலை முதல் காட்சி பார்க்கவும். 200 மதிப்புள்ள டிக்கெட்டை பணம் பெற்றுக்கொள்ளாமல் கொடுத்த நுங்கம்பாக்கம் ஐசாப்ட்டில் வேலை செய்யும் வாசக நண்பர் குறும்பழகன் மற்றும் அவரது நண்பர் விஜய்க்கும்  இந்த பதிவு சமர்பணம். கொளத்தூர் கங்காவில் ஒரு டிக்கெட் இருக்கின்றது வரமுடியுமா? என்று கேட்ட வாசக நண்பர் பாலமுருகனுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.


அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு என்ன ?சூடான ரிப்போர்ட்

எல்லா சாலைகளும் ரோமை  நோக்கி என்பது போல், இன்று இந்தியாவே லக்னோ பக்கம் பார்வையை திருப்பி வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தியா மட்டும் அல்ல நமது எதிரிநாடுகள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் லக்னோ பக்கம் பார்வையை திருப்பி இருக்கின்றன.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/29•09•2010)

ஆல்பம்..
நாளை சர்ச்சைகுறிய நிலத்தின் மீதான தீர்ப்பு வர போகின்றது. இந்த தீர்ப்பு வரும் காரணத்தால்தான் எந்திரன் பட ரிலிசையும் தள்ளி வைத்தது சன்பிக்சர்ஸ். நாளை தீர்ப்பு வர போகின்றது.. மத்திய அரசு அனைத்து மொழி பத்திரிக்கைகளிலும் அமைதி  காக்க வேண்டும் என்று கெஞ்சிகொண்டு இருக்கின்றது. என்னை பொறுத்தவரை அந்த சர்ச்சைக்குறிய நிலத்தின் தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும்… அந்த இடத்தை மத்திய அரசின் தடை செய்யபட்ட இடமாக அறிவிக்க வேண்டும். யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்வதுதான் எனக்கு தெரிந்து சரி என்று படுகின்றது.


பாட்டியின் சுருக்கு பைகள். (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்…)


எனக்கு இரண்டு பாட்டிகள். ஒருவர் அம்மாவை பெற்றவள், அடுத்தவர் அப்பாவை வளர்த்தவள். அப்பாவை பெற்று கொஞ்ச நாளில் பாட்டி இறந்து போய்விட்டதாகவும், பாட்டியின் உடன்பிறந்த தங்கை சின்னபாட்டி அப்பாவை வளர்த்ததாக சொல்லுவார்கள்.


(MULLUM MALARUM)முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக்கான மகுடம்.

எனது வலைப்பூவில் முதல் முறையாக ரஜினி படத்துக்கு நான் எழுதும் விமர்சனம் இந்த படம்தான்…

ரஜினி நடித்த திரைபடங்களில்  பார்த்தேதீரவேண்டியபடங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அது ஒரு சில படங்களை மட்டுமேசுட்டிக்காட்டும்.ரஜினி நல்ல நடிகர்.. அவர் மீது வெறியனாக இருந்த போது இதே முள்ளும் மலரும் படத்தை நான் மதிக்கவில்லை… ஏன் சீன்ட கூட இல்லை.. ஒரு பைட்டு இல்லை. ஒரு டான்ஸ் இல்லை இதெல்லாம் ஒரு படமா என்று பள்ளி காலத்தில் தூற்றி இருக்கின்றேன்…மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•09•2010)

ஆல்பம்..
ராஜராஜசோழன் தமிழ்நாட்டு ராஜா.  அவனின் மிச்சம் இன்றும் இருக்கின்றது. 1000 ஆண்டு  கழித்தும் இன்னும் அந்த கம்பீரம் குறையாமல் இருக்கின்றது.. எனக்கு தமிழக கோவில்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த  கோவில் தஞ்சை பெரிய கோவில்தான்…


சென்னை வடபழனி முருகன் கோவில், ஒரு பார்வை…


அண்ணன் உண்மைதமிழனை விட அதிகம் என் வீட்டில் உச்சரிக்கபடும் வார்த்தை, அப்பனே முருகா ! இந்த வார்த்தையை  என் அப்பா சொல்லாத நாள் இல்லை... அப்பா தீவிர முருகபக்தர். சின்னவயதில் இருந்தே முருககடவுள் மேல் என் வீட்டு நபர்களுக்கு தீவிர பக்தி உண்டு.


ஒரு படபிடிப்பும், சில வருத்தங்களும். (சிறுகதை) சினிமாகதைகள் 2

 சினிமா கதைகள் வரிசையில் இது இரண்டாவது கதை.. போட்டோகிராபர் மோகன் கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி…அந்த கதை வளவள என்று இருப்பபதாகவும் அதனை சுருக்கி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூட நண்பர்கள் பின்னுட்டத்தில் சொல்லி இருந்தார்கள்… நான் குமுதம் பத்திரிக்கையில் ஒரு பக்க கதை எழுதவில்லை.. நான் எழுதும் கதைகளில் நிறைய டிடெயில் மற்றும் நான் உற்றுபார்த்த பலவிஷயங்கள் இடம் பெற வேண்டும் என்று நினைக்கின்றேன்..


டேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்… கா..ஓ..கா.. போனவைகள்…


என்  வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால்  ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் 80களில் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… 3 வருடத்துக்கு பிறகுதான் அந்த பாடல்  ஒளிபரப்பபடும்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/22•09•2010)

ஆல்பம்..

நல்ல வேலை பாலம் காமன்வெல்த் போட்டி நடக்கும் போது இடிந்து விழவில்லை... விழுந்து இருந்தால் சர்வதேச அளவில் நம்ம மானம் கப்பலேறி இருக்கும்.. அந்தளவுக்கு ஊழல் மிதமிஞ்சி போய் இருக்கு என்பது நன்றாக தெரிகின்றது....
==========================

சில இன்பாக்ஸ் ஜோக்ஸ் மற்றும் பீலிங்ஸ்

காய படுத்தி காணமல் போகும் காதலை விட…

காரி துப்பினாலும் டிரீட் கேட்கும் நட்பே சிறந்தது……

நண்பேன்டா……

======================

அன்புள்ள அம்மாவுக்கு..!

அன்புள்ள அம்மாவுக்கு.. 

ஜாக்கி எழுதிக் கொள்வது...!

உனக்கு இன்னைக்கு திவசம். நீ எங்களையெல்லாம விட்டுப் போயி எப்படியும்  பதினைஞ்சு வருசத்துக்கு மேல இருக்கும். நான் சொன்ன கணக்கு தப்பாக்கூட இருக்கலாம்.. கிருஷ்ணர் சொன்னதுபோல நான் மறந்தால் அல்லவா, உன்னை நினைப்பதற்கு.. ஆனாலும் அம்மா.. இன்று உனக்கு திவசம்.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•09•2010)

ஆல்பம்..
சமீபத்தில் தமிழகத்தில் மோசமான சாலைகள் பற்றி அனைத்து பத்திரிக்கைகளும் ஆளும் கட்சியை கிழி கிழி என்று கிழிக்க.. இப்போது அரசுக்கு பயம் வந்து ரூபாய் ஆயிரம் கோடி செலவில், எல்லா ஊர் நகராட்சி, போருராட்சி, கிராமம் என பாகு பாடு இல்லாமல் எல்லா சாலைகளையும் போட போகின்றார்களாம்..  எல்லா சாலைகளையும்  அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள்  போட்டு முடிக்க திட்டமாம்... இந்த ஞானோதயத்துக்கு தேர்தல் காரணத்தை சொன்னாலும்... ரோடு போடாமல்  ஆளும் கட்சி தேர்தலை  சந்தித்தாலும் நாம் யாரும் எதையும் கேட்க முடியாது என்பதே இந்தியாவின் ஜனநாயக  உண்மை.... என்ன நான் சொல்லவது???


(ANTI CHRIST-2009) 18++ உலகசினிமா/டென்மார்க்... காமத்தின் உச்சம், குழந்தையின் மரணம்???

எச்சரிக்கை.... இந்த படத்தின் பதிவை மட்டும் பொது இடத்தில் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்...
நீங்கள் எதாவது ஒரு வேலை செய்து  கொண்டு இருக்கின்றீர்கள்... உதாரணத்துக்கு கார் ஓட்டிக்கொண்டு  இருக்கினிறீர்கள்... செல்போனில் கால் வருகின்றது என்னசெய்வீர்கள்..? ஒன்று காரை ஓரம் நிறுத்தி கால் அட்டென்ட் செய்வீர்கள்... அல்லது காரை ஓட்டிக்கொண்டே பேசுவீர்கள்...


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner