நீங்கள் உங்கள் படைப்புகளை தாராளமாக நீட்டி சுருக்கி நீங்கள் எழுதுங்கள்.. எனக்கு இப்படித்தான் எழுத வரும்…. கதையில் நிறைய இடங்களில் சினிமா டெக்னிக்கல் விஷயங்கள் போகிற போக்கில் வரும், அதனை தவிர்த்து விடுங்கள். எல்லாவற்றையும் விளக்க ஆரம்பித்தால் கதையை முடிக்க முடியாது…இந்த கதை 1600 வார்த்தைகளை உள்ளடக்கியது… படித்து விட்டு பின்னுட்டத்தில் பகிர்ந்துகொள்ளவும்….இந்த கதை எழுத 5 மணி நேரம் பிடித்தது…
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்….
ஒரு படபிடிப்பும் சில வருத்தங்களும்……..சிறுகதை
ஒரு ஏக்கரில் தோட்டத்துடன் கூடிய அந்த ரம்யமான அழகிய வீடு கிழக்கு கடற்கறைசாலையில் இருந்தது….ராஜேஸ்வரியும் ரங்கராஜனும் வாழ்க்கை எனும் போராட்டகளத்தில் எதிர்நீச்சல், காக்கா நீச்சல் உள் நீச்சல் எல்லாம் போட்டு ஒரு வழியாக மிகுந்த போராட்டங்களுக்கு இடையே செட்டில் ஆன தம்பதிகள்…
ஒரே பிள்ளை ஸ்ரீராம்… சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் கருத்தாக கல்விபயன்று, அப்பா வாங்கி கொடுத்த பைக்கில் எந்த பெண்ணையும் முகத்தை மூடி பூலான்தேவி போல் மகாபலிபுரம் பக்கம் அழைத்து செல்லாமல்,தான்உண்டு தன் வேலைஉண்டு என்று படித்து சிற்றின்பத்துக்கு இடம் கொடுக்காமல், ஸ்டேட் பர்ஸ்ட் வாங்கி, சென்னை அண்ணா மேம்பாலத்துக்கு அருகில் காலையில் இருந்து அமெரிக்கன் கான்ஸ்லேட் வாசலில் மொட்டை வெயிலில் காத்து கிடந்து, அந்த பக்கம் போவோர் வருவோரின் ஏளனபார்வையை தவிர்க்க, சார்டிபிகேட் பைலால் முகத்தை மூடியபடி பாவ்லா காட்டி, நேர்முகதேர்வில் வெற்றிபெற்று, உலகின் தாதாவின் காலடியில் வேலை செய்ய தன்னை தகுதி ஆக்கி கொண்டவன்….
ரங்கராஜன் தம்பதிகள் முன்பு மைலாபூரில்தான் வாழ்ந்தார்கள்…தாத்தா வாங்கி வைத்த சொந்த வீடு இருந்தது.. இருவரும் அரசு ஊழியர்கள் செக்கரிட்டிரியேட்டில் இருவருக்கும் வேலை என்பதால் காலை பத்து மணி ஆபிசுக்கு ரிலாக்சாக 9,30 மணிக்கு கிளம்பி பீச் ரோட்டில் இருசக்கர வாகனத்தில் இருவரும் வேலைக்கு போய் வருவார்கள்…
ஒரு காலத்தில் மயிலை சொர்கமான இடம்… பதினைந்து வருடத்தில் பறக்கும் ரயில், அதிகமான டிராபிக் என மயிலை அழகையே மாற்றிவிட்டது…
ரங்கராஜன் ரொம்ப சாது… யாரையும் எதிர்த்து சத்தம் போடமாட்டார்.. ஒரு முறை இருசக்கரவாகனத்தில் மயிலை டேங்க் பேருந்து நிறுத்தம் அருகில் ஒருவனை தெரியாமல் இடித்து வைக்க, ஒரு சின்ன பையன் ஏன்டா பேமானி வண்டி ஒழுங்க ஒட்டத்தெரியலைன்னா எதுக்கு வண்டி எடுத்துக்குனு வரிங்க என்று பலர் முன்னிலையில் சத்தம் போட, இனி மயிலையில் வாழ்வது இல்லை என்று சபதம் போட்டு விட்டார்…
ரங்கராஜன் பாலவாக்கம் பக்கத்தில் கடற்கரையை ஒட்டி பியூன் செல்வம் வற்புறுத்தல் காரணமாக ஒரு காலத்தில் ஒரு ஏக்கர் 7 லட்சத்துக்கு வாங்கி போட்டார்… ஆனால் இன்று அதை கோடிக்கணக்கில் கொட்டி வாங்க பலர் தினமும் போட்டி போடுகின்றார்கள்… ஒரே மகனும் சிலிக்கான் பள்ளதாக்கில் செட்டிலாகி, கெட்டபழக்கம் ஏதும் இல்லாத காரணத்தால், டாலர்கள் எல்லாம் இந்திய ரூபாயில்மாறத்தொடங்க,ரங்கராஜன் தம்பதிகள் இருவரும் விருப்ப ஓய்வு எழுதி கொடுத்தார்கள்…
மயிலை வீட்டை நல்ல விலைக்கு விற்று பாலவாக்கத்தில் கடற்கரை பார்த்தபடி இருந்த ஒரு ஏக்கர் நிலத்தில் தோட்டத்துடன் பார்த்து பார்த்து இழைத்து இழைத்து அந்த வீட்டை கட்டினார்கள்…. பையன் வெப்கேம் வழியாகவும், வீட்டு அமைப்பு, கார்டன் அமைப்பை ஈமெயில் மூலமாகவும் இண்டிரியர் டெக்ரேட்டர் மூலமாகவும் நிறைய டிஸ்கஷனுக்கு பிறகு அந்த வீடு கட்டி முடிக்கபட்டது…
இந்தகதையில் வீடு ரொம்ப முக்கியகதாபாத்திரம் என்பதால் அதை நீங்கள் கற்பனை செய்து கொள்ள ஒரு விஷவல் எபக்ட் கொடுக்கின்றேன்…
கமலின் வேட்டையாடு விளையாடு படத்தில் பார்த்த முதல் நாளே பாடலில், கமல் ஒரு கடற்கரை வீட்டின் தென்னைமரத்தில் ஊஞ்சலில் படுத்து இருப்பது போல ஒரு காட்சி வருமே …. அது போலான வீட்டையும் அவ்வைசண்முகி படத்தில் ஜெமினிகணேசன், மீனாவின் வீடாக ஒரு பெரிய வீடு வருமே, அந்த வீட்டையும் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
எனக்கு கமலை சின்ன வயதில் இருந்தே பிடிக்காது. அவரின் ஒரு படத்தையும் பார்த்தது இல்லை. நான் என்ன செய்ய?? என்று குழந்தை போல் கேட்பவர்கள்… இந்த கதையை இதுக்கு மேலே தொடரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்…
ரங்கராஜனின் கடற்கரை வீடு ஹைடெக்காக கட்டி முடிக்கபட்ட வீடு. வீட்டு தோட்டத்தில் எல்லா வகையான செடிகொடிகளும் இருந்தது.தோட்டத்தை நிர்வாகிக்க இரண்டு தோட்டகாரர்கள் மற்றும் வீட்டை பெருக்கி துடைக்க இரண்டு வேலைகாரர்கள் இருந்தார்கள்…
ரங்கராஜனும் ராஜேஸ்வரியும் மிகுந்த மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தினார்கள்…. சொந்தகாரர்கள் வீட்டுக்கு வந்தால் வீட்டை பற்றிய பெருமை பேச்சு, சென்னை நடைபாதை வியாபரிகள் போல் வீடு கட்டி முடிக்கபட்ட கதைகள் ஆக்கிரமித்துக்கொண்டன.
ஒரு நாள் ஒரு நண்பரின் கைகுழந்தை போர்ட்டிக்கோவில் காக்கா போய்விட, அதை துடைத்து போட்டு விட்டு, வேலைகாரர்கள் அந்த இடத்தை பினாயில் போட்டு துடைத்து துடைத்து வேலைகாரர்கள் இருவரும் வெறுத்துபோய் விட்டார்கள்… இருப்பினும் ராஜேஸ்வரி இன்னோரு முறை துடைக்க சொன்னாள்.
இரண்டு வாரத்துக்கு முன் ராஜேஸ்வரி கார்டனில் பூ பறித்துக்கொண்டு இருக்கும் போது சுவற்றுக்கு அந்த பக்கம் யாரோ சிகரேட் பிடிக்க அந்த நாற்றமும், பேசி சிரித்த குரல் வெகுவாய் பழக்கபட்டது போல இருக்கவும் ஆர்வத்தில் ராஜேஸ்வரி வெளியே வந்து எட்டிபார்த்தாள்.. ஆக்டர் தினேஷ் கையில் சிகரேட்டோடு காரில் உட்கார்ந்து கொண்டு இருந்தான்..
ராஜேஸ்வரியில் நம்பமுடியவில்லை…. தினேஷ் இப்போதைக்கு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாது சக்தி…. காரில் உள் பக்கம் பார்த்தால், நடிகை ரோஷினி சமீபத்தில் இருவரும் லிப்லாக் சீனில் நடித்த அந்த படம் வெகுவாய் ரசிக்கபட்டது…. அவன் சிகரேட்டை போட்டு விட்டு, ஒரு ஹாய் சொல்லிவிட்டு காரை கிளம்பிக்கொண்டு போய் விட்டான்….
அன்று இரவு ஆக்டர் தினேஷ் பார்த்த காட்சியை கணவர் ரங்கராஜனிடமும், சொந்தகாரர்களிடமும், போன் செய்து தான்பார்த்த காட்சியை வண்ணதிரை கிசுகிசு பாணியில் சொல்லிவிட்டுதான் ஓய்ந்தாள். இரவு 12 மணிக்கு மேல் சிலிக்கான் பள்ளத்தாக்குவிற்க்கு, வெப்கேம் வழியாக அந்த பரவச செய்தி போனது.அம்மா வெப்கேமில் திரும்பும் போது மகன் தலையில் அடித்துக்கொண்டான்…
வேலைக்காரர்கள் அடிக்கடி சொல்லி இருக்கின்றார்கள்… பக்கத்து பண்ணை வீடுகளில் ஷுட்டிங் நடப்பாதாகவும், நான் இந்த நடிகரை பார்த்தேன் அந்த நடிகரை பார்த்தேன் என்று தினமும் எதாவது ஒரு கதை சொல்லிக்கொண்டு இருப்பார்கள்.
ராஜேஸ்வரி வாழ்வில் ஒரு முறைகூட ஷுட்டிங் பார்த்தது இல்லை…. பத்து பேர் சுற்றி இருக்கும் போது எப்படி இயல்பாய் கட்டி பிடித்து, முத்தம் கொடுத்து, கண்ட கண்ட இடங்களில் கைவைக்க இந்த நடிகைகள் எப்படி அனுமதிக்கின்றார்கள்? என்ற கேள்வி பல நாட்கள் ராஜேஸ்வரிக்கு உண்டு… ரங்கராஜனுக்கு சினிமா சுத்தமாக பிடிக்காது…. அதுக்கு ஒரு கேவலமான பிளாஷ்பேக் இருக்கின்றது… ஆனால் அது இப்போதைக்கு இந்த இடத்தில் தேவை இல்லை….
ராஜேஸ்வரியும் ரங்கராஜனும் மாலையில் கார்டனில் காப்பி குடித்துக்கொண்டு இருந்தபோது ஒரு பென்ஸ் வந்து நின்றது….அவரை பார்த்ததும் தெரிந்து விட்டது… தமிழின் பெரிய கமர்சியல் டைரக்டர் சிவக்குமார் மற்றும் அவர் உதவியாளர்கள்….என்று தெரிந்தது... வந்த அறிமுகபடுத்திக்கொண்டார்கள் அந்த குழுவில் புரடெக்ஷன் மேனேஜர் ரத்னம் என்பவர் தன்னை அறிமுகபடுத்திக்கொண்டு….
சார் உங்க வீடு பார்தோம்…
அருமை… நாளைக்கு ஒரு நாள் உங்க விட்ல ஷுட்டிங் நடத்த அனுமதி கொடுப்பிங்களா ??என்று கேட்க,
ரங்கராஜன் தன் மனைவியை பார்க்க அவள் முகம் முழுவதும் சந்தோஷமாக இருப்பதை பார்த்து விட்டு ஓகே சொன்னார்… காலையில் 9க்கு வந்து இரவு9க்கு போய்விடுவதாகவும்… ஒரு நாளைக்கு 30 ஆயிரம் பணம் கொடுப்பதாகவும் சொல்ல… சினிமா ஆசை… ஒரே நாளில் 30,000 பண ஆசையும் சேர்த்து ஒத்துக்கொள்ள, ரஜேஸ்வரியின் கண்பார்வை வற்புறுத்தலாலும் ஒத்துக்கொள்ளசெய்தார் திரு ரங்கராஜன்…
முதல் முறையாக ராஜேஸ்வரி ஷுட்டிங் பார்க்க போவதாலும், அதுவும் தனது வீட்டில் நடக்க போகின்றது என்று நினைக்கும் போதே அவளுக்கு இரவு தூக்கம் வரவில்லை….
காலையில் ரங்கராஜன் தன் மனைவியிடம், செகரட்டிரியேட்டில் கொஞ்சம் வேலை இருப்பதாகவும், அப்படியே பழைய நண்பர்களை பார்த்து விட்டு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு காலையில் எழு மணிக்கே புறப்பட்டு விட ராஜேஸ்வரி மட்டும் வீட்டில் இருந்தார்…
காலையில் ரங்கராஜன் போன சிறிது நேரத்தில் ஜெனரேட்டர் வண்டி வந்தது … லைட்மேன்கள் லைட்கள் இறங்கி கீழே வைத்தார்கள்…பங்களாவின் சுவற்றை ஒட்டி புரடெக்ஷன் கடை திறந்து வைத்து இருந்தார்கள்… காலையில் படபிடிப்பு குழுவினர்களுக்கு டீ போட ஸ்டவ் ஜுவாலை காற்றில் அலைபாய வெள்ளை சுவற்றில் முட்டுக்கொடுத்து சுற்றியும் மேரி பிஸ்கட் அட்டையை பிடித்து காற்றில் தீ ஜுவாலை அலையாமல் டீ தாயாரிக்க, வெள்ளை சுவர் கருப்பாக மாற ஆரம்பித்து விட்டது.. ராஜேஸ்வரிக்கு அதை பார்த்தும் ரொம்ப கஷ்டமாக போய் விட்டது… எதையாவது சொல்லலாம் என்றால் இத்தனை ஆண்கள் மத்தியில் யாரிடம் சொல்வது என்று தெரியவில்லை… சிறுவயதில் இருந்தே ராஜேஸ்வரிக்கு யாரிடமும் அதிர்ந்து பேசி பழக்கம் இல்லை…
நேற்று லோக்கேஷன் பார்க்க வராமல் வேறு ஷுட்டிங்கில் பிசியாக இருந்த, கேமராமேன் பிரகாஷ் இடம் டைரக்டர் சிவகுமார் வீட்டை சுற்றி காட்டி காட்சிகளை விளக்க….
டோன்ட்வொரிசார்…,சூப்பரா பண்ணிடலாம்
என்று கேமராமேன் சொல்ல…. முதல் காட்சி கார்டனில் சாப்பிட்டு கொண்டு இருக்கும் அப்பாவிடம், கதாநாயகி தன் காதலை சொல்வது போலான காட்சியை கேமராமேனிடம் சொல்ல, அந்த காட்சிக்குகேமராமேன் லைட்டிங் செய்ய ஆரம்பித்தார்…. ராஜேஸ்வரி பால்கனியில் இருந்து அந்த காட்சியை பார்த்து கொண்டு இருந்தாள்…
புல்தரையில் 3பிட் டிராக் போட்டு அதில் மினி கிரேன் ஏத்திடுங்க…
அப்பா ,கதநாயகி இரண்டு பேரும் மீட் பண்ணறதுக்கு பக்கத்துல டுவல்பை டுவல் ஸ்கிம்மர் வச்சிடுங்க… என்று சொல்ல…
டுவல்பை டுவல் எனும் ஸ்கிம்மர் சமாச்சாரம் ஸ்கிம்மர்துணியை 12x12 இரும்பு பிரேமில் கட்டி வைத்து இருப்பார்கள்…. அதனை எடுத்து வரும் போதே போர்ட்டிக்கோவில் இருக்கும் சின்ன சுவற்றில் வரிசையாக அழகுக்காக வைத்து இருந்த பட்ரோஸ் செடி இருந்த தொட்டியை தட்டிவிட, டமால் என்று உடைந்து ஈர மண்ணோடு சரிந்தது….ராஜேஸ்வரிக்கு ஈரக்குலை நடுங்கியது… அவர்கள் ஸ்கிம்மர் எடுத்து போய் வைப்பதில்தான் குறியாக இருந்தனர்...
கதாநாயகியும் அவள் அப்பா கேரக்டரும் கார்டனில் இருந்த சேரில் உட்கார்ந்தபடி ரிகர்சல் பார்க்க டேக் ஆரரம்பிக்கும் போது கேமராமேன் ததன் உதவியாளரிடம்
ஒரு பார்லைட் பில்டர் மூணு போட்டு, ரைட்ல கீ லைட்டா வச்சிக்க…
அப்படியே கேட்வே ஷீட் பிடிச்சிக்க என்று சொல்லிவிட்டு கேமராமேன் போக….
லைட்மேன் மற்றும் உதவியளர்கள் பம்பரமாக சுற்றி அந்த லைட்டை வைக்க அந்த லைட்டை சென்டர் வாங்கும் அசிஸ்டன்ட் கேமராமேன் அந்த சற்று வலது புறம் தள்ள சொல்ல லைட்மேன் லைட்டை தூக்கி வைக்காமல் அவசரத்தில் அப்படியே இழுக்க கார்டனில் தரையில் இருந்த புற்கள் அப்படியே பெயர்ந்தன… அப்படியே லைட்டை வைத்து விட்டு பச்சக் என்று பான்பராக் எச்சிலை நத்தியவட்டை செடியில் துப்பி வைக்க ராஜேஸ்வரிக்கு லைட்டாக மயக்கம் வந்தது…
அதன் பிறகு ஷுட்டிகின் மேல் ராஜேஸ்வரிக்கு கவனம் போகவில்லை… ஆக்டர் தினேஷ் வந்தான் ஹாய் ஆண்டி என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திராமல் நேராக தனது பையன் தாதா ஊரில் இருந்து வந்தால் தங்கும் தன் மகன் பெட்ரூமில் போய் கட்டிலில், ஷு காலோடு படுத்துக்கொண்டு யாருடனோ சிரித்தபடி போனில் பேசிக்கொண்டு இருந்தான்..
ராஜேஸ்வரிக்கு ஷுட்டிங் கேன்சல் செய்து இந்தாப்பா நீங்க கொடுத்த முப்பதாயிரம் உடனே எடத்தை காலி பண்ணுங்க... நீங்க இப்படி எல்லாம் நடந்துப்பிங்கன்னு எனக்கு தெரியாது? என்று சொல்ல வேண்டும் என்று தோன்றியது… ஆனால் அத்தனை பேரும் வேலைசெய்வதை பார்த்து விட்டு அப்படி சொல்ல, அவளின் மிடிள் கிளாஸ் மனசாட்சி அதற்கு இடம் கொடுக்கவில்லை….
லைட்மேன் எல்லோரும் வீட்டின் உள்ளே சகல இடத்துக்கு செருப்போடு வந்தார்கள்…. காரணம் கேட்டதற்கு ஹைபவர்ல வேலை செய்யறோம் செருப்போடுதான் வேலைசெய்வோம் என்று சொல்ல,ராஜேஸ்வரியால் பதில் எதும் பேச முடியவில்லை….நடிகர் தினேஷையே எதுவும் கேட்கமுடியவில்லை என்ன செய்வவது? கேட்கும் கணவனும் இன்றைக்கு என்று பார்த்து வெளியில் போய் விட்டானே என மனதில் வருத்தம்கொண்டாள்…
மதியம் பிரேக்கில் எல்லோருக்கும் நான்வெஜ் சாப்பாடு, மீன் நாற்றம் வயிற்றை கலக்க ரஜேஸ்வரிக்கு வாந்தி வருவது போல் இருக்க, ஹாலில் உள்ள பாத்ரூமுக்கு போய் பார்க்க, யாரோ கக்கா போய் தண்ணி பிளஷ் செய்யாமல் போய் இருந்தார்கள்…வாஷ் பேசினில் சளியோடு பாண்பராக் எச்சில் துப்பி தண்ணீர் ஊற்றி கபவாமல் இருக்க, வாழ் பேஷனில் ஒரு பீடி துண்டும் கிடந்தது…
வயிறு எறிய வெளியே வந்து பார்த்தால் ஹாலில் உள்ள லட்சரூபாய் மதிப்புள்ள இம்போர்ட்டேட் சோபாவில்இரண்டு பேர் படுத்துக்கொண்டு கதை பேசிக்கொண்டு இருந்தார்கள்… சொந்த வீட்டில் தான்கூட அப்படி படுத்து இருந்தது கிடையாது... எல்லாம் நேரம் என்று நினைத்து தலையில் அடித்துக்கொண்டாள். வேலைகாரர்கள் பரிதாபமாக தன்னை பார்பதை உணர்ந்து, ராஜேஸ்வரி தலைதாழ்ந்து கொண்டாள்… எல்லா இடத்திலும் கருப்பு துணியை விரித்து பிரேக்கில் படுத்துக்கொண்டு இருந்தார்கள்…
மதியம் மூணு மணிக்கு கதாநாயகி அழும் அந்த குளோஸ் காட்சியில் பேக்ரவுண்ட் எம்டியாக இருக்கு என்று டைரக்டர் பீல் செய்ய, செட் டிபார்ட்மென்ட் என்று குரல் கொடுக்க, டபுள் டேப் போட்டு சுவற்றில் ஒரு படத்தை ஒட்டி வைத்தார்கள்… காட்சி முடிந்து அந்த படத்தை எடுக்க, சுவற்றில் உள்ள பெயிண்ட் உரித்துக்கொண்டு அசிங்கமாக காட்சி அளித்தது. ராஜேஸ்வரிக்கு கண்ணில் நீர்கோர்த்துக்கொண்டது…
மாடியில் உள்ள ஒரு அறையில் நைட் எபெக்ட் சீன் எடுக்கின்றேன் என்று சொல்லி ரூமை பிளாக் கிளாத் மற்றும் பிளாக் சாட் பேப்பர் எல்லாம் ஒட்டி ரூமை இருட்டாக்கி ஒரு காட்சி எடுத்தார்கள்….. அந்த அறையே நாஸ்த்தி…. பர்மிஷன் கேட்ட புரொடேக்ஷன் மேனேஜர் அங்கு இல்லவே இல்லை. அவரின் அசிஸ்டேன்ட்தான் இருந்தான்…. அவனிடம் எது பற்றி சொன்னாலும் ஷுட்டிங் முடிக்கும் போது எடுத்ததை எடுத்த எடுத்துல வச்சி கொடுத்து போவோம் என்று சொல்லி விட்டு செட் டிபார்ட்மென்டில் இருந்து ஒரு ஆளைகூப்பிட்டு பேருக்கு
“அம்மா ஷுட்டிங் முடிஞ்சி என்ன கரெக்ஷன் சொன்னாலும் மறக்காம செஞ்சி கொடுத்துடு..” நாளை பின்ன நாம இங்க வரனும் இல்லை.., என்று தேன்தடவி பேசினான்…
மயிறு என்ற வார்த்தையே தப்பான வார்த்தை என்று நினைத்தவளுக்கு வீட்டின் உள்ளேயே அதி பயங்கரமான கெட்ட வார்த்தைகள் பேசினார்கள்…ஒரு ஷாட்டில் கேமரா டிராலியில் லோ அங்கிளில் கேமராவில் அந்த காட்சியை படமாக்கி கொண்டு இருக்கும் போது லைன்ட் லைன் போன் அந்த நேரம் பார்த்து அடிக்க, அதை எடுக்கும் அவசரத்தில் தெரியாமல் ராஜேஸ்வரி பிரேமில் வந்து விட….
எந்த சனியன் அது பிரேமில் வருது???
அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாம் என்ன பண்ணிகிட்டு இருக்கானுங்க...
எவன்………………………………….இருக்கானுங்க என்று,
இயக்குனர் ஓப்பன் மைக்கில் தெள்ள தெளிவான சென்னை பாஷையில் திட்ட, ராஜேஸ்வரிக்கு உடம்பில் ஆயிரம் பூரான் ஒரு சேர ஓடுவதாக இருந்தது….
சாமி ரூமுக்கு பக்கத்தில் யாரோ சாப்பிட்ட டீ பேப்பர் கப்பில் மிச்சத்தோடு இருக்க, அதனை கேமராமேன் அசிஸ்டென்ட் தேர்மகோல் எடுத்து போகும் அவசரத்தில் அதை தள்ளிவிட, செட் அசிஸ்டேன்ட் அதை சுத்தபடுத்தினான்….
ராஜேஸ்வரி படும் அவஸ்தையை பார்த்த செட் அசிஸ்டென்ட், டீ குடித்து விட்டு, ஸ்நாக்ஸ் சாப்பிட்டு விட்டு தட்டுகளையும் ,டீ கப் குப்பைகளையும் கீழே போடாமல் ஒரு குப்பை தொட்டி வைத்து அதில் போட சொன்னான்… ம்ஹும் 40 பேர் வேலை செய்யும் இடத்தில் ஒரு பத்து பேர்தான் அந்த குப்பை தொட்டியில் குப்பையை போட்டர்கள்….
இரவு எழு மணிக்கு நாற்பது அடி கிரேனை புல் தரையில் செட் பண்ணினார்கள்…. அதில் டினோ லைட் ஏற்றினார்கள் ஷேடோ பிடிங்க ஒரே பிளாட்டா இருக்கு என்று மேரமேன் சொல்ல, நன்றாக பூத்து குலுங்கிய ஒரு செம்பருத்தி செடியின் கிளை சட்டென ஒடிக்கபட்டு ஷேடோ பிடிக்கபட்டது….ராஜேஸ்வரி மனதுக்குள் கதறியே விட்டாள்….
ஏரி 435 கேமரா ஜிம்மி ஜிப்பில் டாப் ஆங்கிளில் இருந்தது.. ரங்கராஜன் தன் வீடு முற்றிலும் மாறி இருப்பதையும் ஜெனரேட்டர் வண்டி மேல் ஒரு பார்லைட் எரிந்து கொண்டு இருக்க அதன் முன் வேப்பமரத்தின் கிளை ஒடிக்கபட்டு கீழே கிடப்பதை பார்த்தேபோதே தெரிந்துவிட்டது…. அவசரமாக உள்ளே நுழைய ரெடி மானிட்டர் என்று கேமராமேன் சொல்ல, பிரேமில் ரங்கராஜன் அவசரமாக நுழைய நேற்று கேமராமேன் லேகேஷன் பார்க்க வராத காரணத்தால் ரங்கராஜன் ஹவுஸ் ஒனர் என்று தெரியாமல்
ஹுஸ் தட் இடியட் … கெட் அவுட் என்று சொல்ல சட்டென ரங்கராஜன் ஒதுங்கி விட்டு காத்து இருந்தார். . சொந்த வீட்டுக்காரனை கெட் அவுட் சொல்ல சினிமாகாரனால் மட்டுமே முடியும் என்று மனதில் நினைத்துக்கொண்டார். மானிட்டர் முடிந்ததும் நேரா தனது பெட்ரூமுக்கு போனார்.. அங்கு தலைவலி தைலத்தை தலையில் வேலைக்கார பெண் பர பர என தேய்த்துக்கொண்டு இருக்க,
சிரியலில் இதுவரை என்று சொல்லிவிட்டு நடந்த கதையை கொஞ்சம் காண்பிப்பார்களே அது போல முழுகதையும் ராஜேஸ்வரி மூச்சுவிடாமல் கணவனிடம் சொல்லிமுடித்தாள்.
இப்ப மணி எட்டு இன்னும் ஒரு மணிநேரம்தான் இருக்கு. அவுங்க போயிடுவாங்க.. கவலைபடாதே இதெல்லாம் தெரிஞ்சிதான் நான் யோசிச்சேன்..ரங்கராஜனுக்கு கோவம் கோவமாக வந்தது… இயலாமையில் எதும் செய்யமுடியாமல் தவித்தார்… கணவன் மனைவி இருவரும் ஒரு மணி நேரம் எப்போது முடியும் என இருவரும் கடிகாரத்தை உற்றுபார்த்துக்கொண்டு இருந்தார்கள்….எப்படியாவது அவர்கள் எல்லோரும் விட்டை விட்டு உடனே போனால் நல்லது என்று அவர்கள் இருவரும் நினைத்துக்கொன்டார்கள்.. ஆப்பு இருக்கும் இடத்தை தேடி போய் உட்கார்ந்த வருத்தத்தை இருவரின் முகத்திலும் பார்க்க முடிந்தது….
புரடெக்ஷன் மேனஜர் என டைரக்டர் கத்த.. அப்போதுதான் லேபில் பிலிம் கேன் வாங்கி வந்த கையோடு டைரக்டரிடம் எதிரில் வந்து புரடெக்ஷன் மேனேஜர் நிற்க்க….
நைட்டு இரண்டு மணி வரைக்கும் இன்னைக்கு ஷீட்டிங் போவுது… ஒரு கள்ளகடத்தல் நைட் சீன் இங்க மேச் பண்ணி எடுத்துப்போம்…
.புரடெக்ஷன்ல நைட்க்கு, சாப்பாடு சொல்லிடுங்க…
நேத்து ஹவுஸ் ஓனர் கிட்ட தளுக்கா பேசி பர்மிஷன் வாங்கினது போல் இப்பயும் வாங்கிடுங்க….
சாப்பாடு ஒரு பத்துமணிக்குமேல வந்தாலும் கவலை இல்லை…நான் யூனிட்ல பேசிக்கிறேன் என்று டைரக்டர் சொல்லிக்கொண்டே போக….
மேனேஜர் இரவு ரெண்டு மணிவரை ரங்கராஜன் வீட்டில் ஷுட்டிங் நடத்த பர்மிஷன் கேட்க வீட்டின் உள்ளே போனதும் எதிரில் இருந்த வேலைக்கார பெண்ணிடம்,
ரங்கராஜன்சார் எங்கே? என்று கேட்க, அவள் பெட்ரூம் பக்கம் கைகாட்ட…
ரங்கராஜனும்,ராஜேஸ்வரியும் கடிகாரத்தை கண் இமைக்காமல் எப்போது ஒரு மணிநேரம் முடியும் என்று பார்த்துக்கொண்டு இருக்கு போது, யாரோ அவர்கள் இருக்கும் பெட்ரூம் கதவை தட்டுவது இருவருக்கும் தெளிவாக காதில் கேட்டது…..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
Nice Story. why you have taken 5 hours?
ReplyDeleteSUPER
ReplyDeleteநல்லாயிருக்கு,உணர்வுகள் தெளிவாய் தெரியுது.
ReplyDeleteIt has come out good jackie.
ReplyDeleteபடம் பாத்தமா கம்முனு இருந்தமான்னு இருக்கணும்.
ReplyDeleteபுரியுது புரியுது.
அன்பு நித்யன்
o.k,good. keep it up.thankyou
ReplyDeleteExcellent!
ReplyDeleteVery nice Story Jackie. However, it sounds like someone's real life experience.
ReplyDeleteகதை அருமையாக இருந்தது. நீங்கள் எழுதியள்ளது போல் கண்டிப்பாக பல ரங்கராஜனும்,ராஜேஸ்வரியும் இருப்பார்கள்.
ReplyDeleteஉங்களுக்கு நேரமிருந்தால் என்னுடைய இந்த கதையைப்படித்து Feedback சொல்லவும். நேரமில்லையெனில் புரிந்து கொள்வேன்.
http://kathirka.blogspot.com/2010/09/blog-post_24.html
You are one of my inspiration to start writing a blog in Tamil. This is my first story (ignoring my scribbles during my college days) I have been reading your blog for so many months. I am glad I found your blog.
நன்றி,
கதிர்கா
shooting mudinthathum veettai sari seyya 30,000 kku mel selavayirukkum. Ithukkellam empty house than sari. vaazhum veedu sari alla.
ReplyDeleteஅண்ணே குடும்பஸ்தங்க ஷூட்டிங்கு வீடு மட்டும் வாடகைக்கே விடக்கூடாது,வெங்கலக்கடைல யானை புகுந்ததுபோலதான்,கதை அருமை
ReplyDeleteSuper Story Sekar.
ReplyDeleteNice story :))
ReplyDelete