சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(29•12•2010)

ஆல்பம்..

2010 ஆம் ஆண்டின் கடைசி சாண்ட்வெஜ் அண்டு நான் வெஜ்...  விளையாட்டாய் ஒரு வருடம் ஓடி விட்டது.தொடர்ந்து சாண்ட்வெஜ் வாசித்து வரும் பதிவுலக நண்பர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் என்  நன்றிகள்..
================
மன்மதன் அம்புவிமர்சனத்தை நான் நடுநிலை தவறி எழுதிவிட்டதாக சிலர் வருத்தபட்டு சொல்லி இருந்தார்கள்.. எனக்கு படம் பார்க்கலாம் .. படம் பார்க்க கூடாத அளவுக்கு அம்பு  ஒன்றும் அவ்வளவு மொக்கை இல்லை... ரெண்டாவது நீங்கள் நினைப்பது  போல் எல்லாம் என்னால் விமர்சனம் எழுத முடியாது.. எனக்கு என்ன பிடிக்குதோ.. அதைதான் எழுத முடியும்...



===============
வெங்காயம் விலை சரிந்துவிட்டாலும்..விலை ஏற்றத்தின் காரணமாக ஆம்லெட் ரூபாய் பத்துக்கு விற்ற கடைகளில் இன்னும் விலை குறைந்தபாடில்லை..
=========
எங்கள் ஊர் பக்கத்து ஊர் பாதிரிகுப்பம் அங்கு வசித்த பால்காரர் ஏழுமலை உட்பட 40 பேருக்கு மேல் ஒரு மாசிமகத்தின் போது கடலில் போட்டில் ஜாலியாக ரவுண்டு போனார்கள்.போட்டில் ஓட்டை விழுந்து நீர் வர எல்லோரும் பயந்து போட்டின் ஒரு பக்கத்தக்கு போக, போட் நடுக்கடலில் கவிழ்ந்து விட்டது.. 30 பேருக்கு மேல் பலியானார்கள்.கடலூர் சில்வர் பீச்சில் நடந்த பெரிய கடல் விபத்து அதுதான்... கடந்த 26 ம் தேதி சுனாமி தினத்தன்று இராமநாதபுரத்தில் சுற்றுலா செல்ல 40க்கு மேற்பட்டவர்கள் ஒரு படகில் சென்றனர்...அதில் பெண்களும் குழந்தைகள் மட்டும் இருந்தனர்.. பெரிய கடல் அலை போட்டின் மீது மோத  போட் தடுமாறிய போது எல்லோரும் ஒரே பக்கம் பயத்தில் வந்து குவிய, போட் கவிழ்ந்து 15 பேருக்கு மேல் பலி.. பலர் பெண்கள் குழந்தைகள்..கடலில் விழுந்தால் தப்பிக்க வாய்ப்பே இல்லை...எங்கள் ஊரில் நடந்த விபத்தில் பால்காரர் ஏழுமலை உடல் இரண்டு நாளைக்கு பிறகு கரை ஒதுங்கியது..அவரது இரண்டு  கண்களை மீன்கள் தின்று விட்டன...
=============

நேற்றும் வட சென்னையில்  மாநகர பேருந்து ஒட்டுனர்கள் போராட்டம் காரணமாக  பேருந்துகள் நடுவழியில் நிறுத்தபட்டு பொதுமக்கள் நடு இரவில் நடு ரோட்டில் தவித்து போய் இருக்கின்றார்கள்... காரணம்..ஓட்டுனரை போதை ஆசாமிகள் அடித்து விட்டார்கள்.. அடிக்க காரணம் பேருந்தை ஏன் ஓரமாக நிறுத்த வில்லை.... ??ஏன் ஓரமாக நிறுத்தவில்லை?? முன்னே வாகனம் இருந்ததே காரணம்.. பொதுமக்கள் நாலு பேரில் ஒருவரை பிடித்து போலிஸ் வசம் ஒப்படைத்து விட்டார்கள்..இருப்பினும் கமிஷ்னர் இன்று வெளியிட்ட அறிக்கையில் பணியின்  போது டிரைவர் கண்டக்டரை அடித்தால் அல்லது தகராறு செய்தால்  அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என்று அறிக்கை  விட்டு இருக்கின்றார்...ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் பாதுகாப்பு நிச்சயம் தேவை... முன்பு எல்லாம் கல்லூரி மாணவர்கள்தான் பேருந்தில் வம்பு செய்வார்கள்.. இப்போது 12ம் வகுப்பு மாணவர்களே பேருந்தில் வம்பு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்... அதனால் இந்த சட்டம் தேவைதான்....
===========================


மிக்சர்..


தமிழ்மணம் விருதுகள்.. முதல் கட்ட தேர்வில் எனது மூன்று இடுக்கைகளும் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றன.... இரண்டாம் கட்ட தேர்வுக்கு  உங்கள் வாக்குகளை செலுத்த மறந்துவிடாதீர்கள்..


 பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்


பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.... - ஜாக்கி சேகர்
வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை....
பிரிவு: செய்திகள்/நிகழ்வுகளின் அலசல்கள்..

 அகரம் ஆரம்பித்த நடிகர் சூர்யாவுக்கும், விஜய்டிவிக்கும் நன்றிகள்.


 பிரிவு: திரைப்பட விமர்சனங்கள் – தமிழ் சினிமா விமர்சனங்கள்
 (AFTER. LIFE-2009) 18+ ஆத்மாவோடு பேசுபவன்.


போன்ற மூன்று பிரிவுகளிலும் முதல்கட்ட வாக்கெடுப்பில் தேர்வாகி இருக்கின்றன...முதல் வாக்கெடுப்பில் வெற்றிபெறசெய்தது போல இரண்டாம் வாக்கெடுப்பிலும் உங்கள் ஜனநாயக கடமை ஆற்ற மறவாதீர்... நன்றி...
=========================
சென்னையில் குளிர் ஆரம்பித்து விட்டது..நள்ளிரவில் வெளியே போய் போன் பேச முடியவில்லை.. குளிர் எலும்பை ஊடுருவுகின்றது..மதியத்தில் ஜெர்க்கின் அணிந்து சென்றால் கூட வியர்ப்பதில்லை...
====================


இந்தவார சலனபடம்...

ஒரு நல்ல  காதல் காட்சி.. மிஸ் செய்யாதீர்கள்..


சில பெண்கள் நம் பக்கத்தில்தான் இருப்பார்கள்.. அவர்கள் மேல் பெரிதாய் ஈர்ப்பு எல்லாம் வந்து தொலைக்காது... சில  நேரத்தில் ஏதாவது ஒரு புள்ளியில் அந்த ஈர்ப்பு சனியன் வரும் போது,  ஒன்று அந்த பெண் வேறு ஒருவனை காதலிக்க தொடங்கி இருக்கும்...

  சிலருக்கு நிச்சயம் கூட நடந்து விடும். அதுக்கு பிறகு நாம் எதுவும் செய்ய முடியாது... கல்யாணத்துக்கு போய் சரக்கு அடித்து விட்டு பிலிங்கில்  பாத்ரூமில் அழுது விட்டு, கண்ணை  துடைத்துக்கொண்டு மேடையில் ஏறி ஆல்த பெஸ்ட் சொல்லிவிட்டு வர வேண்டியதுதான்..

ஆனால் அந்த பெண்ணுக்கும் இவன் மேல் காதல் இருந்து இருக்கும்.இருவருக்கும் காதலை  பகிர்ந்து கொள்ளாத அந்த தயக்கம் எல்லாத்தையும் தவிடு பொடி ஆக்கிவிடும்.

கீழே உள்ள காட்சியில் அப்படி  பக்கத்தில் இருந்து நட்பாய் பழகிய பெண்ணுக்கு பெண் பார்க்க வருகின்றார்கள்.. பெண்பார்க்க வரும் வரை எந்த உணர்வும் இல்லை..ஆனால் மாப்பிள்ளை வந்து உட்கார்ந்ததும், மாப்பிள்ளைமேல் ஒரு வெறுப்பு வந்து விடுகின்றது... இவன் நம்ம கீதா கூட வாழ்க்கையை ஷேர் பண்ண போறவானா? ஏனும் பொறாமை...


அந்த பெண் டிரஸ் செய்து வந்து அடுத்தவன் பக்கத்தில் உட்கார்ந்ததும் ஷாருக்கானுக்கு வயிற்றில் புகைவது நல்ல  காட்சி.. மிக முக்கியமாக அவள் டிரஸ் செய்து நடந்து வருவதை ஷாருக் பக்கி மாதிரி பார்ப்பதை அவள் கவனிப்பதும்...அப்போது இசைக்கும் பியானோ இசையும். அவனுக்கு அந்த பெண் பார்க்கும் படலம் பிடிக்கவில்லை அதனால், அவன் நகருவதை அவள் பார்த்து விடுகின்றாள்... வெளியே போய் ஒரு தம் பற்ற வைக்கும் போது உள்ளே என்ன நடக்குமோ?

சட்டென திருமணத்துக்கு நாள் குறித்து விடுவார்களோ என்று நினைத்துக்கொண்டு இருக்கும் போது, உள்ளே கருத்து மோதல் நடப்பதை பார்த்து விட்டு மனதில் மகிழ்ச்சியடைகின்றான்...அப்போது கீதா பேசும் வசனங்கள் பெண்ணாக பிறந்த அத்தனை பேருக்கும் பூரிப்பை ஏற்படுத்தும்..அப்போது அவள் பேசும் வசனங்களை கூர்மையாக பார்த்து விட்டு அவள் மேல் நாயகன் பிரமிப்பாகின்றான்..


அந்த  வரன் அமையவில்லை என்று தெரிந்ததும் அவர்கள் நடந்து  போகும் போது ஷாருக் குறு குறுப்புடன் கை கூப்பி வழி அனுப்பி வைப்பதும்.. இவன் செய்கையை அவள் பார்த்து விடுவதும்... இருவருக்கான ஆழமான பார்வையை பாட்டி பார்த்து  விட... அந்த பெண் அறை நோக்கி நடக்க... ஷாருக் அந்த பாட்டியை பார்த்து என்ன செய்வது எல்லாம் விதிப்படி நடக்கும் என்று நடக்கும் இந்த காட்சி மெல்ல காதல் உருவாக ஏதுவான  காட்சி என்றாலும் நான் எப்போதும் ரசித்து பார்க்கும் சுவதேஸ் படத்தின் காட்சி... ஷாருக்கும் அந்த பெண்ணின் கண்களை பாருங்கள்...  காட்சியின் பலத்தையும் காதலையும் அவைகள் சொல்லும்....




பார்த்ததில் பிடித்தது...

ஈரோடு  சங்கமத்துக்கு போன போது ஈரோட்டு பதிவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பும், அவர்களின்  உபசரிப்பும்...வாழ்வில் மறக்கமுடியாதவை... யாருமே அவர்களுக்கு கொடுத்த பொறுப்பை தட்டிக்கழிக்காமல் கொடுத்த வேலையை திறம்பட செய்தது ஆச்சர்யமாக இருந்தது...
===============
ஒரு சின்ன திரைப்படவிமர்சனம்..

தென்மேற்கு பருவக்காற்று  படத்தின் பிரிவியூவுக்கு  போய்  இருந்தேன்... அம்மாவை பற்றிய ஒரு பாடல் அற்புதமாக இருந்தது.. கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி... சரண்யா மொத்த படத்தையும்  தன் தோளில் சுமந்து இருக்கின்றார்.. முதல் பாதியை விட இரண்டாம் பாதி நன்றாக இருந்தது...இவ்வளவு பாடுபட்டு நான் பட்ட கஷ்டம் நீ ஜெயிலில் போய் இருக்கவா? என்ற அந்த நியாமான கேள்விதான் மொத்தபடமும்....

செழியன் கதைக்கு தேவையான ஒளிபதிவை செய்து இருக்கின்றார்.. கதாநாயகி பேராண்மையில் நடித்த பெண்தான் இருந்தாலும் அந்த நெடு நெடு உயரத்துக்கு தாவணி செமையாக செட் ஆகின்றது...துடப்பத்தால் நாயகியை உதைக்கும் போது அதை தடுக்கும் நாயகனை பார்க்கும் அந்த பெண்ணின் விழிகள் அற்புதம்...கமர்ஷியல் விஷயத்தை மருந்துக்கு கூட நினைத்து பார்க்கவில்லை இயக்குனர்...சிலருக்கு இந்த படம் பிடித்து இருக்கின்றது..

பிரிவியூவுக்கு சுஹாசினிமணிரத்னம், சினேகா,பிரசன்னா, சரண்யா,பொன்வண்ணன் போன்றவர்கள் வந்து இருந்தார்கள்.

போர்பிரேம்ஸ் வெளியே காவேரி கணேஷ் உடன்  கொபசெ பற்றி பேசினோம்.. அது பற்றி எழுதினால் அடிக்க வருவீர்கள்..
===================

இந்தவார பதிவர்...


பதிவர் வால்பையன்..ஈரோட்டில் திரும்ப சந்தித்தேன். சரக்கு சாப்பிடும் போது நிறைய பேசினோம்... நான் ஒரு ரசனைக்காரன் என்று சொன்னார்... ஏன் இப்போதெல்லாம் பதிவுகள் போடுவதில்லை என்று  கேட்டபோது கோவையில் ஆர் எஸ் புரத்தில்   ஹோட்டல் ஆரம்பித்து இருப்பதாக சொன்னார்.....ஹோட்டலின் பெயர் பூர்வாஸ் பைன் டைன்....எண் 2, வெங்கடசாமி ரோடு கிழக்கு, கோவை...மல்ட்டி கசின் ரெஸ்டாரன்ட் ஏசி... ஏதோ ஒரு பெயர் சொன்னார்.. வாயில் நுழையவில்லை...சைனிஸ்பெயர் அது போலான சுவை தனது ஹோட்டலில் மட்டும் இருக்கின்றது என்று சொன்னார்... நண்பர்கள்.. வால் ஹோட்டலில் ஒருமுறை சாப்பிட்டு விட்டு கருத்து சொல்லவும்... கோவை வரும் போது அவசியம் வருகின்றேன் வால்பையன்...சில நாட்கள் பழகினாலும் நெடுநாள் பழகியது போல பாசம் வைக்கும் நண்பர்...வால்பையன் புதிய  ஹோட்டல் மேன் மேலும் வளர வாழ்த்துகின்றேன்..
==================

இந்தவார கடிதம்..


Dear Mr. Sekhar,

I am a regular reader of your blog spot.  Really I appreciate and like your way of writing.  In the recent days, I am unable to open your blog spot.  If any discrepancy, please rectify it to view your blog spot without any hindrance.   Refer the print image screen. I have also checked with our IT engineer, he informed that our server is clear.  It is small request and information.

Regards

Ahmed Mohideen
Post Box No. 55624, Dubai, U.A.E. 

================
வணக்கம் சார்,
என் பெயர் லியோன்.நல்லா இருக்கீங்களா.எனக்கு தூத்துக்குடி.நான் உங்க கிட்ட போன்ல பேசி இருக்கேன்.உங்க பிளாக்க ரெகுலரா follow பண்ணறேன்.தப்பா நினைக்காதிங்க.இப்போ ஒரு வாரமா உங்க பிளாக்க open பன்னும் பொது open ஆஹாம பிரச்னை பண்ணுது.என் கம்ப்யூட்டர் லதான் ப்ரோப்லேம் இருக்குனு நினைச்சு வேற கம்ப்யூட்டர் ல open பண்ணினா அங்கும் ப்ரோப்லேம் ஆகுது.என்னனு தெரியல.வேற ஏதும் font டவுன்லோட் pannanumaanu  கொஞ்சம் சொல்லுங்க.உங்க பிளாக்க படிச்சு ஒரு வாரத்துக்கு மேல ஆகுது.நான் எனக்கு உள்ள ப்ரோபெல்ம் எ ஸ்க்ரீன்ஷாட் எடுத்து அட்டச் பண்ணி இருக்கேன் பாருங்க.ப்ளீஸ் டென்சன் ஆகாதிங்க.ஒரு advisea  சொலுங்க.
நன்றி
Thanks & Regards
V.Leon
===========================

அன்பின்  நண்பர்களுக்கு.. அது எதனால் அப்படி ஆகின்றது என்று எனக்கு தெரியவில்லை.. நானும் விசாரித்து விட்டேன்.. பலர் தங்களுக்கு தளம் தெளிவாக தெரிவதாக சொல்லிவிட்டார்கள்... எனக்கே என் தளம் சில நாட்களாக தெரியவில்லை...நண்பர் வடிவேல் குக்கிகளைகிளியர் செய்து விட்டுஓப்பன் பண்ண சொன்னார் தளம் ஓப்பன் ஆனது... அவ்வளவுதான் நமக்கு கம்யூட்டர் அறிவு... இந்த பிரச்சனைக்கு யாராவது தொழில் நுட்பம் தெரிந்த நண்பர்கள்.. பதில் தெரிந்தால் சொல்லுங்கள்...
===============
பிலாசபி பாண்டி

எல்லா சக்சஸ்புல் மேன் பின்னாலயும்  ஒரு பெயின்புல் கதை இருக்கு...பெயின்புல் கதையோட என்ட் எப்பயும் சக்சஸ்புல் என்ட்தான்..அதனால் பெயினை அனுபவிப்போம்.. வேற என்ன சொல்லறது இப்படி சொல்லிதான் மனதை தேத்திக்கனும்..
=============

நான்வெஜ் 18+

whats is the similarities between bar and bra//

1. both words have the same letters
2.both are drinking zone
3. both have restricted timeing for opening and closing
4.more importantly both makes men crazy when open

=======================
புதுவருட சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் இல் சந்திப்போம்..நன்றி
========


ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

21 comments:

  1. Dear Mr. Jakie,
    One year ivlo sekirama mudichipochu!!!! Valakampol sandwich arumai...
    Advance New Year Wishes..... All the best to you.

    Regards,
    Vijay,
    Muscat.

    ReplyDelete
  2. பிரிவியூவுக்கு சுஹாசினிமணிரத்னம், சினேகா,பிரசன்னா, சரண்யா,பொன்வண்ணன் போன்றவர்கள் வந்து இருந்தார்கள்.//////////

    ங்கொய்யால...... பதிவர்கள் யாரும் வரலையா..?

    ReplyDelete
  3. //whats is the similarities between bar and bra//
    லொள்ளு.... :)
    புத்தாண்டு வாழ்த்துக்களப்பா :)

    ReplyDelete
  4. ஜாக்கி... இந்த கேரிகேச்சர் திருமண அழைப்பிதழை காண அழைக்கிறேன்... Caricature

    ReplyDelete
  5. என்னுடைய கணினியில் கூட உங்களுடைய வலைப்பூ மக்கர் பண்ணுகிறது... ரொம்ப சிரமப்பட்டு தான் படிக்கிறேன்...

    ReplyDelete
  6. அலுவலகத்தில் இருந்து பார்த்தன் சிறிது பிரச்சனை உள்ளது நண்பரே.. உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. நீங்க பெரிய ஆளு தான் போல! ஊனா தானா அண்ணாச்சிய பிரச்சனைக்குள்ளாக்கின உஜிலா தேவி நீங்க தானே!

    ReplyDelete
  8. வழக்கம்போலவே அருமை அண்ணே

    கலக்கல்.......

    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. //டிரைவர் கண்டக்டரை அடித்தால்//
    அப்போ கண்டக்டர் மட்டும் டிரைவரை அடிக்கலாமோ?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  10. //ஈரோடு சங்கமத்துக்கு போன போது ஈரோட்டு பதிவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பும், அவர்களின் உபசரிப்பும்...//

    அடுத்து ஈரோட்டில் ஓர் நிகழ்ச்சி இருக்கு அழைக்கிறோம் மறக்காம வந்திடுங்க...

    ReplyDelete
  11. புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Swades is a feel good movie, that will surely create many thoughts.

    ReplyDelete
  13. நல்லாயிருக்கு பாஸ்,உங்க விமர்சனத்த படிச்சுட்டு தான் வேற்று மொழி சினிமாக்களையும் பார்க்க ஆரம்பிச்சுருக்கேன்.வரும் புதிய வருடத்தில் ஒரு ஒளிப்பதிவாளராய் உருவெடுக்க வாழ்த்துக்கள்.
    புதுவருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் உரித்தாகட்டும்.

    ReplyDelete
  14. வழக்கம்போலவே கலக்கல் அண்ணே
    உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. \\இப்போ ஒரு வாரமா உங்க பிளாக்க open பன்னும் பொது open ஆஹாம பிரச்னை பண்ணுது.என் கம்ப்யூட்டர் லதான் ப்ரோப்லேம் இருக்குனு நினைச்சு வேற கம்ப்யூட்டர் ல open பண்ணினா அங்கும் ப்ரோப்லேம் ஆகுது\\
    இது browser இன்டர்நெட் explorer problem தான்
    நெருப்பு நரி ( mozilla firefox ) பயன் படுத்தி open பண்ணினால் எந்த பிரச்சனையும் தருவது இல்லை .

    ஜாக்கி அண்ணன் ப்ளாக் யாராலும் பிளாக் செய்ய முடியாது.

    Happy New Year

    ReplyDelete
  16. The screenshot shared by your follower is in IE6, Please ask them to upgrade to IE8 or IE9. This is the solution. Please ask them try. Thanks.
    Uvaraj..
    9600032570

    ReplyDelete
  17. அடுத்து வரும் ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்

    இதையும் படிச்சி பாருங்க
    சித்தரை நேரில் பார்த்த அனுபவம் உண்டா?

    ReplyDelete
  18. அருமை. வழக்கம்போல் அருமை. புத்தாண்டிலும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. மிக்க நன்றி தல!

    உங்கள் அன்பு நெகிழவைக்கிறது!

    ReplyDelete
  20. Unable to view fonts in my lenovoA6000

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner