ஆந்திராவின் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின்படம். எந்திரன் படத்தை போலவே இரண்டு வருடம் உருவாக்கத்திற்க்கு எடுத்துக்கொண்ட படம்.கடைசியா அதிதி படத்தை பார்த்ததோடு சரி. அந்த படம் சரியாக போகவில்லை என்று இந்த படத்தை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று உழைத்து வெளிவந்து இருக்கும் படம்.
2005 ல் இருந்து தெலுங்கு படங்களின் மேல் எனக்கு காதல்வர காரணமாக இருந்தவர் இந்த படத்தின் இயக்குனர் திருவிக்ரம்... இவர் மகேஷ்பாபுவை வைத்து எடுத்த அத்தடு படம்தான்... என்னை நிறைய தெலுங்குபடங்களை பார்க்க தூண்டியது எனலாம். இப்போதும் எனக்கு போர் அடித்தால் அத்தடு படத்தை பார்ப்பேன்... கலைஞர் டிவியில் கூட நந்து என்று டப் செய்து வெளியிட்டு இருப்பார்கள்.
கலேஜா தெலுங்கு படத்தின் கதை என்ன??
ராஜு (மகேஷ்பாபு) ஒரு டாக்சி டிரைவர்.... அவருடைய காரை மட்டும் அதிகம் இடித்து மகேஷ்இடம் கெட்டபெயர் எடுக்கும் சுப்பு(அனுஷ்கா) இரண்டு பேருக்கும் பார்க்கும் போது எல்லாம் தகராறு வருகின்றது. ஒரு நாள் ஏர்போர்ட்டில் இருந்து ஒரு டிராப்புக்கு மகேஷ் போகின்றார் பயணிகள் இறங்கி போய் விடுகின்றார்கள்.. காரை எடுக்கும் போது பின் சீட்டில் வந்த ஒரு பயணியின் பர்ஸ் இருப்பதை பார்த்து விட்டு, அதை திருப்பிக்கொடுக்க போக அவரை ரத்தம் தெரிக்க ஒரு கூட்டம் சுட்டு கொல்கின்றது. அவரோடு வந்த உதவியாளரும் சுட்பபட்டு மகேஷ்பாபுவின் கார் மேல் வந்து விழுந்து இறந்து போக, இறந்து போன உதவியாளருக்கு நஷ்ட்ட ஈட்டு தொகைக்கான 5 லட்சத்துக்கான செக்கை எடுத்துக்கொண்டு ராஜஸ்தான் போக அங்கே மகேஷ் முதுகில் குத்த ஒரு கத்தி தயாராக இருக்கின்றது. அது என்? அவ்? எலா? என்பதை திரையில் பார்த்து ரசிக்கவும்.
படத்தின் சுவாரஸ்யங்களில் சில.
அத்தடு படத்தின் வெற்றியிலும் பணத்திலும் நனைந்த கூட்டனி இது என்பதால் 43 கோடி முதலீட்டில் வெளி வந்து இருக்கும் படம் இது.
காதில் பூ சுற்றி எள்ளி நகையாடிவிடும் கதையாக இது இருந்தாலும் முடிந்தவரை லாஜிக்கோடு கொடுத்து இருக்கின்றார்கள்.
மகேஷ்பாபு செம இளமையாக இருக்கின்றார். நிறைய உழைத்து இருக்கின்றார்கள்.
செம காமெடி பண்ணி இருக்கின்றார்...சுகருக்கு பதில் பேதி மருந்தை கலந்து அனுஷ்கா முழிக்க, அதை சட்டென குடித்து விடும் மகேஷ்க்கு வயிறு கலக்கும் போது அதை கண்ட்ரோல் செய்வதும் அதனோடு டாய் கலக்காதே என்று வயிறுடன் அவர் அவருக்கே உரிய பாணியில் பேசுவதும் கலகல.
இடைவேளைக்கு பிறகு பிரம்மானந்தத்துக்கு அடி கொடுத்து நான் சாமியா என்று கேட்டு கேட்டு அடி கொடுக்கும் இடத்திலும் அதற்கு பின் பிரேமுக்கு வரும் குளோஸ் ஷாட்டுகளும் அருமையும் சிரிப்பும். சுனில் பிரம்மானந்தம் வரும் காட்சிகளின் நகைச்சுவையால் தியேட்டர் கல கல.
கிராமத்து மக்கள் நீ சாமி என்று மகேஷ்ஷை பார்த்து சொல்ல அதற்கு இல்லை என்று வாதாட ஒரு கட்டத்தில் இது ரொம்ப ஓவரா இல்லை என்று ரசிகர்களுக்கு சொல்வது போல் இருப்பது செம காமெடி.
இந்த படத்தின் பெரும் பகுதி ராஜஸ்தான் மற்றும் புனேயிலும் அதனை சுற்றி உள்ள பகுதிகளிலும் ஷுட் செய்து இருக்கின்றார்கள்.
டாக்சி செட் சாங்கில் நிறைய டினோ லைட் யூஸ் செய்து சில்லவுட்டில் ஆட விட்டு மகேஷ்க்கு மட்டும் ஸ்பாட் லைட் போட்டு எடுத்து இருக்கின்றாகள்.. அந்த சாங்குக்கு மட்டும் யூனிட் பில் நன்றாக எகிரி இருக்கும்.
அனுஷ்கா தொடை நிறைய தெரிய நடித்து இருக்கின்றார். சாங்கில் நன்றாக அட்டம் போடுகின்றார்.
இன்றைய அனைத்து நாட்டு நடப்புகளையும் திரைக்கதையில் அலசி மேய்ந்து இருக்கின்றார்கள்... என்ன அதிகமான வெட்டுக்குத்துகளுடன்.
சண்டைகாட்சிகள் ராம் லக்ஷமன்... பின்னி பெடலெடுத்து இருக்கின்றார்கள்.
பிரகாஷ்ராஜ் வில்லன். கிளைமாக்சில் நன்றாக நடித்து இருக்கின்றார்... பிரகாஷ்ராஜ் நெற்றியை வருடும் மேனரிசத்தை மாற்றிக்கொள்வது நலம்..
முன்பு ஒரு விரல் நீட்டி பேசுவார் இப்போது அது இல்லை.கிளைமாக்சில் நன்றாக நடித்து இருக்கின்றார்.
கேமராமேன் சுனில்பட்டேலுக்கு பதில் பாதிபடத்துக்கு மேல் யாஷ்பட்டேல் செய்து இருக்கின்றார். தேங்ஸ் கேவி குகன் என்று டைட்டிலில் போடுகின்றார்கள்.. எதாவது சாங் செய்து இருப்பார்.
படம் முழுவதும் ராஜஸ்தான் பக்கம் என்பதால் படம் ஒரு விதமான வாம் டோனில் இருக்கின்றது.
முதல் காட்சி மகேஷ்பாபு என்ட்ரி நமது கலாச்சாரத்துக்கு ஏற்றது போல் ஜாக்கிசான் நடித்த ஆர்மர் ஆப் காட் படத்தின் முதல் சண்டைகாட்சியை நினைவுபடுத்துகின்றது.
டான்ஸ் ராஜுசுந்தரம் மற்றும் தமிழில் ஷக்கலக்கபேபி பண்ண டான்ஸ்மாஸ் பெயர் நினைவில் இல்லை... அகமதுகானா?
கடைசி செட் பிரமாதம்.
படத்தின்மேக்கிங்
படக்குழுவினர் விபரம்.
Directed by Trivikram SrinivasProduced by
Singanamala Ramesh
C. Kalyan
S. Satya Rama Murthy
Written by Trivikram Srinivas
Starring Mahesh Babu,
Anushka Shetty,
Prakash Raj,
Sunil
Brahmanandam
Music by Mani Sharma
Cinematography Yash Bhatt,
Sunil Patel
Editing by A. Sreekar Prasad
Distributed by Geetha Arts
Release date(s) October 7, 2010 (2010-10-07)
Country India
Language Telugu
Budget Rs 43 crores
கலேஜா பார்த்து ரசிக்கலாம்...
சென்னை அனுஈகா தியேட்டர் டிஸ்கி.
அதிகமாக சௌக்கார் பேட் சிட்டுகள் சிறகடிக்கும் அனுஈகாவில் இந்த படம் பார்த்தேன்.
பணி நிமித்தமாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு வந்த பல ஆந்திர நண்பர்கள் தமிழ் படத்துக்கான ஓப்பனிங்கை போல் இந்த படத்துக்கு கொடுத்து இருக்கின்றார்கள்.
ஒரு சின்ன பெண்ணை ஒருவன் அழைத்து வந்து இருந்தான்... அவன் பண்ண அராஜகம் சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஈகா வில் டபாங் பக்க வந்த பெண்கள் சௌக்கார் பேட் செழுமையை ரொம்ப பிரதிபலித்தார்கள்.
படம் போடும் போது அனுஈகா ஊழியர்கள் மகேஷ்பாபு என்டிரியின் போது கைதட்டலை ரசித்தார்கள்.
இன்டர்வெல் முடிந்து ஜினியர் என்டிஆரின் பிருந்தாவனம் டிரைலர் போட்டர்கள். செம கைதட்டல்.,...
கடைசி செட் சாங்கில் கால் இழுந்து ஆடும் மகேஷ் நடனத்துக்கு செம ரெஸ்பான்ஸ்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
keep it up, wonderful comment
ReplyDeletekalakkal vimarsanam..
ReplyDeleteகண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். தியேட்டர் பிட்ஸ் நைஸ்..
ReplyDeleteகடைசியா இந்த படத்தை விஜய் பண்ணுவாரா இல்லையான்னு சொல்லவே இல்லை....தல....
ReplyDeletemahesh allways rock.....
ஜாக்கி ஜி உங்க கூட நான் கா!? இருந்தாலும் ஓட்டு போட்டுவிட்டேன் மகேஷ்பாபு எனக்கும் பிடித்த நடிகர் என்ன charming சான்ஸே இல்லை .அத்தடு எனக்கும் பிடித்த படம் அந்த opening ஹோட்டல் மழை சீன் பட்டாசாக இருக்கும் visual ஆக.
ReplyDeleteவிஜய்கு அடுத்த படம் ரெடி.
ReplyDeleteஇப்பவே படம் பாக்க கிளம்பிட்டேன். உங்க விமர்சனத்துகதான் வெய்டிங் . அப்புறம் ஒரு விஷயம் அதிதி தோல்விக்கு பிறகு "மகேஷ்" படமே நடிக்கமாட்டேன் என்று சும்மா இருந்தார் . த்ரிவிக்ரம் தான் வாங்க கண்டிப்பா ஹிட் படம் பண்ணுவோம் என அழைத்து வந்தார் தெரியுமா உங்களுக்கு?, எதோ நம்மளால முடிஞ்சது ....................
ReplyDeleteஅப்புறம் தலைவி, தங்க தாரகை, கற்புக்கரசி, அக்கா அனுஷ்கா ஸ்டில் 3 போட்டுட்டு 2 வரி மட்டும் எழுதி இருக்கும் உங்களை வன்மையாக கண்டிக்கிறேன்
அதிதி மாதிரி இதுவும் சொதப்பிருமோன்னு கொஞ்சம் பயத்தோடதான் இந்த ஞாயிறு டிக்கெட் புக் பண்ணிருந்தேன்.. நம்பி பாக்கலாம் போல இருக்கு.. உங்கள் விமர்சனத்துக்கு நன்றி ஜாக்கி..
ReplyDelete""சங்கில் நன்றாக அட்டம் போடுகின்றார்"" - எழுத்து பிழைகளை கொஞ்சம் கவனிங்க ஜாக்கி.. முதல்ல படிக்கும்போது கொஞ்சம் ஏடாகூடமா அர்த்தம் எடுத்துக்கிட்டேன்.. :-)
நான் உங்க பதிவ தொடர்ந்து வாசிச்சிட்டு வர்றேன் ஜாக்கி ரொம்ப அருமை. இன்னும் ஒரு ரெண்டு மாசத்துக்கு நீங்க இந்தமாதிரி வேற்று மொழி படங்களோட விமர்சனம் தான் எழுதணும் போல,நன்றி எந்திரன்.
ReplyDeleteஎனக்கு வந்த ஒரு எஸ்.எம்.எஸ்... "விஜய் என்பது யார்? எவன் ஒருவன் தெலுங்கில் நன்றாக ஓடிய ஒரு படத்தை கர்ச்சீஃப் கலர் கூட மாற்றாமல் தமிழில் ரீமேக் அடித்து நாஸ்தி செய்து ஃப்ளாப் ஆக்குகிறானோ அவனே" எப்பூபூடி....
ReplyDelete//ராஜு (மகேஷ்பாபு) ஒரு டாக்சி டிரைவர்.... அவருடைய காரை மட்டும் அதிகம் இடித்து மகேஷ்இடம் கெட்டபெயர் எடுக்கும் சுப்பு(அனுஷ்கா) இரண்டு பேருக்கும் பார்க்கும் போது எல்லாம் தகராறு வருகின்றது//
ReplyDeleteஇதை எங்கயோ பாத்த, கேட்ட மாதிரி இருக்கே...
but padam avalavu nalla illanu sonaanga.... irunthaalum pathudalaam
ReplyDeleteஅண்ணே, ஆந்திராவுல இந்த படமும் ஊத்திக்கிச்சாம். என்னோட ஹைதராபாத் நண்பன் சொன்னான்.
ReplyDeleteதங்கள் விமர்சனப் பார்வை அருமையாக இருக்கிறது...
ReplyDeleteappo vijay kku oru hit film ready-nu sollunga.....
ReplyDeleteInteresting vimarsanam.waiting to see the movie...
ReplyDeleteI like your review on all the movies. I want you to give the review for the " super " film also.
ReplyDeleteIt is my request. Thanks in advance
Kannada “ Super” film :
In india cinema feild, the only one director Upendra who has guts to direct this kind of movie. You never expect what happens next. Of course you can guess what is the next scense in the horror movie, but not on Uppendra movies.
Special about the Super movies :
1.While they title the screen back ground peoples names are different.
2.
Example:
""
Story
Screen play
Die Lock
Direction
Uppendra ""
2.The person who loves “ Only “ india, he loves this movie. Uppendra directed like , the foreigner being begger at india in 2030.
3.The people who hates foreign countries, they can also watch the movie.
4.When Uppendra explain about the india to his father, the dialouges are die lock.
5.Giving important role to the heroin.
6.Different type of screen play.
If you get a time, you can watch this movie.
--Satheesh