Avengers Infinity War | Review In Tamil | (தமிழ்) by Jackiesekar
20க்கு  மேற்பட்ட பெரிய  நடிகர்கள் நடிக்க வைத்து பத்து வருடத்துக்கு மேல் ஒரு  மெகா வில்லனை உருவாக்கி  தற்போது வெளி வந்து இருக்கும் படம்தான்...
 ஆவென்ஜர் இன்பினிட்டி வார்.


79 வயதில் காமம் தவறில்லை.

79 வயதில் காமம் தவறில்லை...
பேரன் பேத்தி வந்த பிறகும் கூட காமம் தவறில்லை.. அது தனிநநபர் உணர்வு சார்ந்த விஷயம்.

வேலை வெட்டி இல்லை ஆனாலும் லட்சத்தில் சம்பளம் , கால் அமுக்க கை அமுக்க சொடுக்கு போட்டால் சொல்லுங்க எஜமான் என்று சொல்ல டஜன் கணக்கிகல் பணியாளர்கள்....


நித்தி மேட்டர் வேற...நித்திக்கு வாழ்வுதான் என்று தன் மன வக்கிரத்தை வெளிப்படுத்தியவர்கள். கவர்னருக்கு மட்டும் பொங்குவதேன்.. என்று ஒரு கருத்தை இணையத்தில் பார்த்தேன்..

நித்தி யார் கையையாவது பிடித்து இழுத்தான் என்றோ அல்லது அவனது ஆசிரமத்தில் இருந்து


மரியா சொன்னாள்... நீங்கள் எனது சேவியர் என்று....கடுமையான உடல் வலி ஜூரம் வாந்தி பேதி என்று கடந்த வாரம் படுத்தி எடுக்க... கொஞ்சமாய் உடல் தேற....


 கடந்த சனிக்கிழமை  (07/04/2018 ) இரவு ரொம்பவும்  போர் அடிக்க  மவுண்ட் ரோட்டுக்கு போய்  தாராபூர் டவர்  அருகில் பத்து ரூபாய்க்கு காபி  வாங்கி குடித்து விட்டு வருவது எங்கள் வழக்கம்...

சனி இரவுதானே நாளை ஞாயிறு என்பதால்  காரில்  பதினோரு மணிக்கு கிளம்பினோம்...


ஆசிஃபா எனும் அப்பாவிகோவில்ல வச்சி ஐந்து நாலு...

வயசு வித்தியாசம் பார்க்காம  ரேப் பண்ணி இருக்கானுங்க... 
வீரியமாக போதை மருந்து கொடுத்து இருக்கானுங்க...

எட்டு வயசு பெண் குழந்தையின் இடுப்பு எலும்பை உடைச்சி வச்சி இருக்கானுங்க...    அந்த அளவுக்கு  ரேப் பண்ணி இருக்கானுங்க...  இதுல  பாரத் மாதகி  ஜே வேற...


கோ பேக் மோடி#gobackmodi டுவிட்டர்ல முதல் இடத்துல டிரென்ட் ஆனதுல பக்தாள் பதறிபோய் கிடக்கறா... நாம மட்டும் விளையாண்ட கிரவுன்ட்ல இந்த பயக கதி கலங்க வைப்பானுங்க என்று நினைத்து பார்க்கவில்லை...

ஏன் அவர்கள் காலம் காலமாய் திராவிடம் என்றாலே வேப்பங்காய் கசப்பாய் கசக்கின்றது என்று புத்தி இருப்பவன் புரிஞ்சிக்கிட்டு இருப்பான்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (2/04/2018)


 ஆல்பம்

உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டும்  காவிரி மேலான்மை  வாரியம் அமைக்காத மத்திய மாநில அரசுகளின் கையாலாகதனத்தை நொந்துக்கொள்வதை தவிற வேறு என்ன செய்ய முடியும்..?? காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கெடுவிதித்திருந்தது. கெடு கடந்த மார்ச் 29 ம் தேதியோடு முடிவடைந்தும் ஆளும் அதிமுக அரசு இன்றுவரை அமைதி காத்து வருகின்றது… 40 எம்பிகள் இருக்கின்றார்கள்….  ஆனாலும் மத்தியில் பப்புவேகவில்லை… காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை  என்றால் தற்கொலை செய்துக்கொள்வோம் என்று அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன்   நாடளுமன்றத்தில் பேசி இருக்கின்றார்… அசிங்கம்தான் என்றாலும் அதையாவது நமது லகுட பாண்டிகள் பேசி இருக்கின்றார்களே என்று  மனதைசாமதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.

========

40 எம்பிகள் இருந்தும் உச்சநீதிமன்றம் தலையிட்டு காவிரிமேலாண்மை வாரியம்  அமைக்க சொல்லியும் முடியாத போது… அடுத்த  நாடனா    இலங்கையில்  நடந்த போரை  இந்தியாவில் இருக்கும் ஒரு  சாதாரண முதல்வர் போரை தடுத்து நிறுத்த வேண்டும் என்று  சொல்வது  நகைப்புக்குறியது… அப்போது கருணாநிதி எல்லா எம்பிக்களையும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பக்தாள் குருப்  கொக்களித்தனர்.. இன்னைக்கு ஒரு பயலும் வாயை தொறக்கவே இல்லை.. கருணாநிதி ஆட்சியில் இருந்தா மட்டும்தான் அவனுங்களுக்கு இலங்கை மீது பற்று  தமிழர்கள் மீது பற்று எல்லாம் வரும்… அவரு இல்லைன்னா  எவன் எக்கேடு  கெட்டா எனக்கு என்னன்னு போயிடுவான். எல்லாத்தையும் விட   சர்வ பலம் பொருந்திய  காங்கிரஸ் ஆட்சி நடந்துச்சி… ராஜிவ்காந்தி நல்லவரோ கெட்டவரோ… ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர்.. அவர்  தேர்தல் பிரசாரத்துக்குவந்த போது அவரை சிதற அடிச்சி  உரு குலைய வச்சி வழிச்சி எடுத்துக்கிட்டு போய் கொள்ளி வைக்க வச்சிங்க இல்லை  அப்ப அவங்க பசங்க ஆட்சி அதிகாரத்துல இருக்கும் போது சும்மா இருப்பாங்களா? என்ன? பிரியாங்காகாந்தி  வந்து வேலூர் சிறையில்  நளினியை  சந்தித்து என் அப்பாவை  போட்டு தள்ளியது யார் என்று கேட்க… நளினி உண்மையை சொல்ல.. போர்  தீவிரம் அடைந்து எல்லா உதவியும் இந்திய அரசாங்கம் செய்து மொத்தமாக அழித்தொழித்தார்கள்… பக்கத்தில் இருக்கும் வலிமையான தேசத்தில் கை வைத்ததன்   விளைவை விடுதலைபுலிகள் அனுபவித்தார்கள்.. இந்த லட்சணத்தில் கலைஞர் போரை நிறுத்தி இருக்க வேண்டுமாம்… போங்கப்பா… போய் புள்ளக்குட்டிங்களை படிக்க வைங்க…..
======
திடிர் என்று எல்லாம்  உளுந்தூர் பேட்டை சுங்கசாவடியை அடித்து நொறுக்கவில்லை…  முன்பே   அறிவித்து அதன் பின்பே… தள்ளு முள்ளு ஏற்ப்பட்டு சுங்கசாவடி அடித்து நொறுக்கி இருக்கின்றார்கள்… தமிழர் வாழ்வுரிமை கட்சியினர் இந்த செயலை பக்தாள்  வழக்கம் போல சட்டம் ஒழுங்கு  என்று ஜல்லியடிக்க…. பொது மக்களிடம் இருந்து செம ரெஸ்பான்ஸ்…. அகிம்சை  போராட்டங்கள் எல்லாம் காலவதி ஆகி பல காலம் ஆகி விட்டன…
==========
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும என்ற உச்சநீதிமன்ற  தீர்ப்பில் சந்தேகம் என்று மத்திய பாஜக அரசு ஐல்லி அடித்து இருக்கின்றது.. எல்லாவற்றையும் விட மூன்று மாதங்கள் வேண்டுமாம்.. வாழ்வாதார பிரச்சனையில் 90 நாட்கள் வேண்டுமாம்  ஏற்கனவே  தீர்ப்பு கர்நாடகாவுக்கு  சாதகமாகத்தான் வந்து இருக்கின்றது….  அதுல கொடுமை என்னன்னா எரியற கொள்ளியில எண்ணெய் ஊத்துவது போல  பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழக மக்களுக்குத் தண்ணீர் வேண்டும் என்றால், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் உதவ நான் தயார். காவிரி நீர் தான் வேண்டும் என்றால் அழுது புலம்பிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்' என பதிவிட்டுள்ளார்.
 வெள்ளை வேட்டி கசங்கமா அப்பன் ஆத்தா சேத்து வச்ச சொத்துல வாழ்ந்த பக்தாளுங்கதான் இப்படி எல்லாம் திமிர் பேச்சு  எல்லாம் பேச முடியும்.
========
மிக்சர்…
ஒரு   போர் எப்போது தொடங்க வேண்டும் என்று  தலைவனுக்கு தெரியும் அதேவேளையில்  எப்போது முடிக்க வேண்டும் என்று தெரிந்து இருக்க வேண்டும்… தமிழ் சினிமா ஸ்டிரைக் ஆரம்பித்து விட்டார்கள்.. ஆனால் எப்படி முடிக்க வேண்டும்  என்று தெரியாமல் கை பிசைந்துக்கொண்டு இருப்பதாகவே தெரிகின்றது. எல்லாம் ஒரே  மாதத்தில் மாறிவிட முடியாது… அல்லது மாற்றி விட முடியாது…  டிஜிட்டல் புரைவைடர் மாற்றுக்கு ஆள் இல்லாதவரை கியூப் மூலம்தான் திரைப்படத்தை திரையிட முடியும்…  தியேட்டர் ஓனர்கள் கியூப் இடம் ஏமாந்மதார்கள் என்று  தயாரிப்பாளர்கள் சொன்னால்…? ஐயா சாமி நாங்க ஏமாந்தாகவே இருந்துட்டு போவட்டும்.. நீங்க எதுக்கு  கியூப்காரன்கிட்ட உங்க படத்து கன்டென்ட்  கொடுத்திங்க என்று எதிர்கேள்வி கேட்கின்றார்கள் தியேட்டர் ஓனர்கள். என்ன நடக்க போகின்றது என்று தெரியவில்லை..   பொருத்து இருந்து பார்ப்போம்.
========
ஸ்டெர்லைட் போராட்டம் , காவிரி மேலான்மை வாரியம் அமைக்காதது என்று எதையும் ஓட்டு போட்டு தேர்ந்து எடுத்த அதிமுக அரசை கேள்வி  கேட்காமல் எதிர்கட்சி  என்ன செய்தது என்று கேட்கும் லகுடபாண்டிகளுக்கு…… பத்து வருஷம் பாலாறும் தேனாறும் ஓடும்ன்னாதானே ஆட்சி அதிகாரத்தை   அந்த திருட்டு  கேசிடம்  கொடுத்திங்க.. இப்ப வந்து எதிர்கட்சி ஏன் போராட்டம் நடத்தலைன்னு.. கேட்டா..??  வரும் 5 ஆம் தேதி திமுக தலைமை பந்து  அறிவித்து இருக்கின்றது.. போதுமா?

========

கலைஞர் பற்றி இப்படி ஒரு மீம் சமுகவளைதளங்களில் ஓடிக்கொண்டு இருக்கின்றது.. உண்மையில் அந்த பெண் கலைஞரை குறிப்பிட்டுதான்   அந்த டூவிட்டை போட்டாரா என்று தெரியவில்லை.. அப்படி தெரிந்தே கலைஞரை  பற்றி டுவிட்   எழுதி  இருந்தால்… ஜாக்கிரதையாக இருப்பது நலம்.. காரணம் கலைஞர்  ராசி அப்படி…


படித்ததில் பிடித்தது..

தமிழக வாழ்வுரிமைக் கட்சித்தலைவர் பண்ருட்டி வேல் முருகன் உள்ளிட்டோர் கட்டணம் செலுத்தி விரைவுப்பயணம் செய்யும் சாலைகளுக்கான டோல்கேட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்திய போராட்டத்தை சிலர் வன்முறைப் போராட்டம் என்று விமர்சனம் செய்துள்ளனர்.

இதுபோன்ற கட்டணம் செலுத்தி பயணம் செய்யும் விரைவுச்சாலைகள் உலகின் பல நாடுகளிலும் உள்ளன. அந்த நாடுகளில் அதே பயணத்தை மேற்கொள்ள சிறப்புக் கட்டணம் செலுத்த தேவையில்லாத சாதாரண சாலைகளும் கட்டாயமாக இருக்கும். விரைவுச் சாலையில் செல்ல விரும்புவோர் மட்டும் சிறப்புக் கட்டணம் செலுத்தி அந்த சாலையில் செல்வர். மற்றவர்களுக்கான சாதாரண சாலையும் இருக்கும். அதில் பயணம் செய்ய சிறப்புக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை.

ஆனால் இந்தியாவிலோ நெடுஞ்சாலைகள் அனைத்துமே சிறப்புக் கட்டணம் செலுத்தி பயணம் செய்ய வேண்டிய சிறப்புச் சாலைகளாகவே உள்ளன. சிறப்புக் கட்டணம் செலுத்தத் தேவையில்லாத சாதாரண சாலைகளே இங்கு இல்லை. இதுவும்கூட வன்முறைதான்! அரசாங்கமே செய்யும் வன்முறை. வன்முறை என்பது கண்ணாடிகளை உடைப்பது மட்டுமல்ல. குடிமக்கள் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி சம்பாதிக்கும் பணத்தை சட்டரீதியாக கொள்ளையடிப்பதும் வன்முறைதான்...!- written by Adv. Sundar Rajan


=====

அனுபவம்

 கடந்த  வாரத்தில் இரண்டு நாள்  ஸ்ரீரங்கம்  நான்கு நாட்கள்  பெங்களூர் என்றாலும்  வெளியே   பெரியதாய் செல்லவில்லை என்றாலும்  ஒருவாரத்தில் நம்ம லட்சுமி ஆல்டோவில் ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்….  ஒரு வாரத்தில் சென்னை டூ  ஸ்ரீரங்கம் …. ஸ்ரீரங்கம் டூ பெங்களூர்… பெங்களூர் டூ சென்னை   என்று 1200 கிலோ மீட்டர் சுத்தி இருந்தாலும்  ஸ்ரீரங்கம் டூ பெங்களூர் பயணத்தை வீடியோ எடுத்து வீலாக்காக பதிவு ஏற்றி இருக்கின்றேன்.
 விருப்பம் இருந்தால் நேரம் இருந்தால் எங்களோடு  எங்கள் காரில் பயணிக்கவும்.


======
சினிமா
நோலன் இந்தியாவுக்கு வந்து இருக்கின்றார் .. இன்னமும் பிலிமை  விடமால் இருக்கின்றார்… கமல் சந்தித்து இருக்கின்றார்… தமிழ் சினிமாவில் டிஜிட்டல் யுகம் தொடக்கி வைத்ததில் கமலுக்கு பெருமை உண்டு அது ஒளி ஒலியாக எதுவாக இருந்தாலும்  கமல்தான் அதில் முதன்மை.. குருதிப்புனல் டால்பி,  மும்மை எக்ஸ்பிரஸ் டிஜிட்டல் மேக்கிங்.
========
கிளாமர்
ரங்கஸ்தலம் இன்னும் பார்க்கவில்லை.. டார்லிங் சமந்தா  செம கிளாமராக நடித்து இருக்கின்றாராம்… அதுக்காகவேனும் பார்த்துட வேண்டியதுதான்..


=====
18+
As a couple gets into bed, the husband starts to rub and kiss his wife.
She turns over and says, "I'm sorry, honey.
I've got a gynecologist appointment tomorrow, and I want to stay fresh."
The husband sadly turns over.
A few minutes later, he rolls back over and taps his wife.
"Do you have a dentist appointment, too?"

==========
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.


நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner