குண்டு வெடித்ததும் இந்தியாவில் நிகழ்வது என்ன?

நேற்று அசாம் கவுகாத்தியில் குண்டு வெடித்து 70 பேர் பலியானார்கள்(30/10/2008) இந்த பதிவு டெல்லி குண்டு வெடிப்பின் போது எழுதியது. இப்போதும் எப்போதும் இந்தியாவிற்க்கு பொறுந்தும்.....

இன்னும் குண்டு வெடிக்கும் போதெல்லாம் இதே பதிவை உயிர் சேதம் மற்றும் நாளை மடடும் மாற்றி போடலாம் என்று இருக்கிறேன். எனெனில் இத்தனை பலியாகி இருக்கிறார்கள் உளவுதுறை என்ன செய்கிறது? அவர்களுக்கு கெபடுககும் சம்பளம் எல்லாம் விழலுக்கு இறைத்த நீர்தானா?

இதற்க்கு மேல் பழைய பதிவை படியுங்கள் இது எப்போதும் பொறுந்துவது போல்தான் எழுதியுள்ளேன்


நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,


பெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


இதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...

1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்

2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.

3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.

4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.

5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.

6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.

8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.



9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.



10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .


அடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

பதிவர்களுக்கு என்நன்றிகள் (எனக்காக நேரம் ஒதுக்கியவர்களுக்கு மட்டும்)




வாழ்த்துவது என்பது ரொம்ப ரொம்ப மனதை மகிழ்விக்கும் செயல் என்பேன், நீங்க நல்லா இருக்கனும் அப்படி சொல்லரதுக்கு காசு பணம் தேவை இல்லை. அப்படி சொல்லறதையே சோம்பேறி தனமா நினைக்கறவங்களும் இருக்கதான் செய்யறாங்க.


கடந்த அக்டோபர் மாதம் 19ம் தேதி என் திருமணம் மிக சிறப்பாக நடந்தது, பொதுவாக இயற்கையை ரசிப்பவன் நான் என்பதால் கல்யாணத்திற்க்கு முதல் நாள் இயற்கை என் கல்யாணத்தை ரொம்பவே ரசித்தது. புதுச்சேரி அருகே இருக்கும், கடலூரில்எனது திருமணம் இனிதே நடந்தேறியது . சென்னைக்கும் கடலூருக்கான பயணதூரம் 3மணி நேரம் 45 நிமிடங்கள்.


அதுமட்டும் இல்லாமல் தேமுதிக மாநாடு சென்னையில் நடந்ததால், டிராபிக் ஜாம் வேறு அதிக அளவில் இருந்ததாக சென்னையில் இருந்து நேரில் வந்து வாழ்த்திய நண்பர்கள் சொன்னார்கள்.

நான் மிகவும் எதிர்பார்தத்த நபர்கள் வெவ்வேறு சூழ்நிலை கைதியாகி சில பல ஏற்புடைய காரணங்கள் சொன்னாலும் நான் எதிர்பார்க்காத நபர்கள் மற்றும் முகம் பார்த்திராத பதிவர்கள் வாழ்த்தியது என்னை மெய் சிலிர்க்க செய்தது.

பதிவர் அதிஷா என் திருமண அழைப்பை தன் பதிவில் இட்டு என் வேலை பளுவை வெகுவாய் குறைத்தார். அதை ரொம்ப உரிமையாகவும் செய்தார்.




பதிவர் நித்யகுமாரன் அந்த கொட்டும் மழையிலும் தன் ஒருவயது குழந்தையுடன்,குடும்பத்துடன் வந்து வாழ்த்தினார். தன் வார இறுதி நாட்களை தியாகம் செய்து வந்து இருந்தார்.

பதிவர் முரளி கண்ணன் அவர்கள் என்னை கைபேசியில் தொட்ர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
எனக்கு ரொம்பவே ஆச்சர்யம் முடிந்த வரை வர முயற்ச்சி செய்வதாக சொன்னார்.

பதிவர் தங்க முகுந்தன் சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து போன் செய்து வாழ்த்து தெரிவித்தார் ரொம்பவும் மகிழ்வாக உணர்ந்தேன் வாழ்ந்து சொல்ல எனக்காக கொஞ்ச நேரம் மெனக்கெட்டார் பாருங்கள் , அது எனக்கு மிகுந்த மகிழ்வை தந்தது.

பதிவர் நிர்ஷான் கொழும்பிலிருந்து திருமண்த்தன்று கைபேசியில் வாழ்த்து தகவல் அனுப்பினார்

அதே போல் பல முகம் தெரியாத பதிவர்கள் கைபேசி முலம் வாழ்த்து செய்தியை சொன்னார்கள் திருமண வேலை பளுவில் மறந்து தொலைத்து விட்டேன். மன்னிக்கவும்.


வாழ்திய பதிவர்கள்

1. தங்கராசா ஜீவராஜ்
2.புகழேந்தி
3.ஜ்யோவராம்சுந்தர்
4.புதுகை தென்றல்
5.அரவிந்தன்
6.புதுவைசிவா
7.யேகன்பாரிஸ்
8.வெண்பூ
9.யாழ்
10.ரமேஷ்
11. சந்திரன்
12. பின்னுட்டம் பெரியசாமி
13.சரவணகுமரன்
14. கானாபிரபா
15.கிரி
16தெகா
17.நவநீதன்
18. தமிழ்பறவை
19.ராஜநடராஜன்
20.புதுகை அப்துல்லா.
21.முகுந்தன்
22. அத்திரி போன்ற பதிவர்கள் பின்னுட்டம் போட்டும் மெயில் அனுப்பியும் வாழ்த்து சொன்னார்கள்


பொத்தாம் பொதுவாய் கைபேசியிலும் நேரிலும் பின்னுட்டம் இட்டும் வாழ்த்து சொன்ன நல்ல உள்ளங்களுக்கு என்று என்னால் என் நன்றியை தெரிவிக்க எனக்கு இஷ்டம் இல்லை . அப்படிதான் பொத்தம் பொதுவாக ஒரு நன்றி தெரிவிக்கபடுகிறத தென்றால் அந்தநன்றியை நான் தெவிக்காமலே இருந்து இருப்பேன்.

எல்லாவிலை உயர்வையும் சமாளிக்க,வாழ்ந்தே தீரவேண்டிய கட்டயாத்தில் பொங்கியதை டிபன் பாக்ஸில் சுட சுட அடைத்து கொடுத்த அன்னைக்கு, “போயிட்டுவரேன்மா ” என்று சொல்ல கூட மறந்து, மாநகர பேருந்து பிடிக்கவும், புறநகர்மின் தொடர் வண்டி பிடிக்கவும் சிட்டாக பறந்து செல்லும் இன்றைய கால கட்டத்தில் எனக்காக நேரம் ஒதுக்கி,


என் எதிர்கால வாழ்வு சிறக்க வாழ்த்திய மேலே பெயர் குறிப்பிட்ட எனதருமை பதிஉலக நண்பர்களுக்கு இந்த ஜாக்கிசேகரின் நெஞ்சார்ந்த நன்றிகள்



அன்புடன்/ஜாக்கிசேகர்

இயக்குநர்கள் அமீர் மற்றும் சீமான் திடிர் கைது.....அண்மைசெய்தி

இரமேஸ்வரத்தில் இலங்கை தமிழர்களுக்கு அதரவாக சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசிய இயக்குநர்கள் அமிர் மற்றும் சீமான் இருவரும் இன்று மாலை இலங்கை தமிழருக்கு அதரவாக மனித சங்கிலிநடத்திய பிறகு பிரிவினையை தூண்டியதாக புகாரின் அடிப்படையில் இருவரும் திடிரென கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலையிலேயே தினமலர் நாளிதழ் கலக்கத்தில் இயக்குனர்கள் என்ற தலைப்பில் வால் போஸ்டர் பார்த்ததுமே எனக்கு லேசாக மனதில் பட்டது...

இன்னும் என்ன என்ன நடக்க போகிறதோ ?

அனைத்து பதிவர்களும் என் திருமணத்திற்க்கு் வந்து ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்....


அன்பார்ந்த பதிவர்களே வணக்கம் .


வரும் ஞாயிறு(19/10/08)அன்று கடலுரில் கூத்தப்பபாக்கத்தில் முருகாலயா திருமண மண்டபத்தில் எனது திருமணம் நடக்க இருக்கிறது . அனைத்து வலைபதிவர்களும் இதையே அழைப்பாக ஏற்று நேரில் வந்து வாழ்துத்த வேண்டுகிறேன் .

சென்னையில் ஏதாவது வரவேற்ப்பு வைக்கலாம் என்றால் சென்னையில் விலைகள் கேட்ட போது எனக்கு மயக்கமே வந்து விட்டது போங்கள். அதனால் (18/10/08) சனிக்கிழமைகடலூரில் அதே முருகாலயா மண்டபத்தில் வரவேற்ப்பும் வைத்து இருக்கி்றேன்.


இவ்வளவு லேட்டாக சொல்வதால் என்னை தவறாக என்ன வேண்டாம். வீடு இப்போதுதான் மாற்றினேன். அதனால் வலை இயக்கம் இல்லாமல் போய்விட்டது.

உங்கள் ஆசிர்வாதங்களை எதிர்பார்த்து காத்து இருக்கும்



ஜாக்கிசேகர்

எனது கைபேசி 9840229629

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner