நந்தலாலா பார்க்கவேண்டியபடமா?



மிஷ்கின் அப்படி பேசி இருக்க கூடாது. இப்போதைய உதவி இயக்குனர்கள்  ஏதுவும் தெரியாமல் இருக்கின்றார்கள்.அவர்களுக்கு வாசிப்பனுபவம் மிகவும் குறைவு அனுபவம் இன்றி இருக்கின்றார்கள் என்பது போல பேசிவிட்டு ஜப்பான் படத்தை அப்படியே காப்பி அடித்தது எந்தவகையில் நியாயம் என்று இதுக்கு எதுக்கு உதவி இயக்குனர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்?? இதுக்கு மிஷ்கின் அதிகம் பார்க்க வேண்டும் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்... என்று வடபழனி பக்க பஸ் டிப்போ அருகில் உள்ள டீக்கடைகள் அப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கின்றன.



உதவி இயக்குனர் அதிகம் வாசிப்பது நலம்..  உலகபடங்கள் அதிகம் பார்க்கவேண்டும் என்று சொல்லி இருக்கலாம்... அவர்கள் எல்லோரும் மக்கு என்பது போலான பேச்சுதான் அவர்களை கோபம் கொள்ள செய்துவிட்டது.அல்லது படித்த,வாசிக்கும் அனுபவம் உள்ள உதவிஇயக்குனர்களை தேர்ந்து எடுத்து விட்டு சென்றுவிடலாம். இப்படி பேசி இருக்க கூடாது என்பதே என் எண்ணமும்.

சரி மிஷ்கின் ஒரு படைப்பாளியா? எஸ் அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. காரணம் அவரின் சித்திரம் பேசுதடி படத்துக்கு நான் எழுதிய விமர்சனம் அதை  சொல்லும்.

நல்ல படைப்பாளிக்கு கர்வம் இருக்கும்.. ஜெயகாந்தன், இளையராஜா அதற்கு சரியான உதாரணம்.. ஆனால் அந்த கர்வத்தால் இழந்தவை ஏராளம்.

சரி நந்தலாலா படத்தை பற்றி மிஷ்கின் சொன்ன பேட்டியில் அந்த படம் ஜப்பானிய படத்தின் தழுவல் என்று ஒத்துக்கொண்டு விட்டார்...அந்த ஜப்பானிய படத்தில் வைத்த பல காட்சி போலவே இந்த படத்திலும் பல காட்சிகள் வைத்து விட்டார்.. காரணம் கேட்டதுக்கு அந்த ஜப்பானிய டைரக்டருக்கு டிரிபியூட் செய்து  இருக்கின்றேன் என்று சொல்லிவிட்டார். சரிப்பா இவ்வளவு சொல்லறிங்க...டைட்டிலில் கிரடிட் பெயர் போட்டால் என்ன??


போடமுடியாது...சாமி அப்படி போட்டால் ராயல்ட்டி பிரச்சனை இருக்கின்றது... கேஸ் போட்டால் ஜென்மத்துக்கு  சம்பாதிக்கும் பணத்தை மிஷ்கின் கட்டி தொலையனும்....

அந்த ஜப்பானிய படத்தின் தழுவல் என்று ஒத்துக்கொண்டது பெரிய விஷம்தான்...அந்த படம் 1999ல் வந்தபடம்.. அது பர்மாபஜாருக்கு வர ரொம்ப காலம் எடுத்துக்கொள்ளாது...


சரி நந்தலாலா படத்தின் கதை என்ன??


சென்னையில் இருந்து அம்மாவின் கண்ணத்தில் அறைய செல்லும் மனநலம் பாதிக்கபட்டவனும்,சின்ன வயதில் இருந்தே தனியாக வளர்ந்த ஒரு  சின்ன பையன், அம்மா கொடுக்கும் முத்தத்தை தன் கண்ணத்தில் வாங்க அம்மாவைதேடி செல்லுவதுமாக  இரண்டு காதாபாத்திரங்களின் டிராவல்தான் இந்த படத்தின் கதை.

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

ஒரு அக்மார்க் உலக படம் எப்படி இருக்கும் என்று காப்பி அடித்து படம் எடுத்தாலும், இன்டர்வெல்லுக்கு பிறகு  குத்து பாட்டு போட்டு நமது பாராம்பரியத்தை  திரைக்கதையில் புகுத்தி காம்பரமைஸ் செய்யாமல் மிக இயல்பாக இந்த படத்தை செதுக்கிய மிஷ்கினுக்கு நன்றிகள்.

உலகபடத்தின் மேக்கிங் பரிட்சயத்தை கடைகோடி தமிழனுக்கு சென்றடையவைத்த முதல் தமிழ்பட இயக்குனர் மிஷ்கின் என்பதில் ஜயம் இல்லை..ஆனால் இந்த படத்தை ஜப்பான் படத்தில் இருந்து காட்சிகள், மற்றும்  கரு எடுக்காமல் நமது அறிய்ப்படாத  ஏதாவது ஒரு தமிழ்  சிறுகதையில் இருந்து இந்த படத்தின் காட்சிகளையும் உலகபடங்களின் மேக்கிங்கும் சேர்ந்து இருந்தால் அவருக்கு மேலும் ஒரு மணிமகுடமாக இருந்து இருக்கும்.


காபி அடிக்காமல் அதே போல அரைத்த மாவையே அரைப்பதற்க்கு பதிலாக இது போலான முயற்ச்சிகள் பார்வையாளனின் ரசனையை வேறுதளத்துக்கு எடுத்து செல்லும்.


என்னை பொறுத்தவரை படத்தின் பெரிய ஹீரோ கேமராமேன் மகேஷ்முத்துசாமிதான்... சான்சே இல்லாத ஷாட்டுகள் மற்றும் பிரேம் கம்போசிஷன்.... நிறைய லென்தி ஷாட்டுகள். ரொம்ப அற்புதம் இந்த படத்தை கேமரா கோணங்களுக்கும் மேங்கிங்க்கும் இன்னும் ஒரு முறை பார்க்கவேண்டும்.

எடிட்டருக்கு இந்த படத்தில் வேலை இல்லை.. எனென்றால் அவ்வளவும் லென்தி ஷாட்.. எல்லாம் ஷாட்டும் டிசால்வ் கட்டிங்குகள் ரொம்ப அற்புதம்..

இளையராஜா படத்தின் டைட்டிலில் முதல் பெய்ர் அவருடையதுதான்..அனாதை மட்டும் தனியாக என்ற அந்த பாடல் மனதில் நிற்கின்றது. நிறைய இடங்களில் காட்சிகள் பேச வேண்டும் என்ற காரணத்தால் அந்த இடத்தில் அமைதியாக கையை கட்டிக்கொண்டு நின்று கொண்டு இருந்து இருக்கின்றார்.

விஷுவல் டீரிட்டில் இந்த படம் தமிழ்சினிமாவின் புதிய கோனம் என்று டிதரியமாக சொல்லலாம்.

பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிக்கும் மிஷ்கின் அந்த லாங்ஷாட் எனக்கு பிடித்த ஷாட்...

சினிமா ஒரு விஷுவல் மீடியம் என்பதையும் அது எப்படி ??என்று யாரவது கேட்டால் இந்த படத்தின் பல காட்சிகளை  உதாரணமாக சொல்லலாம்.

மிஷ்கின் நடிப்பு எப்படி?? நன்றாகவே இருக்கின்றது....அவரின் முந்தைய படங்களில் நரேன் மேனாரிசங்கள் இந்த படத்தில் கொஞ்சம் அதிகமாக்கி மனநிலை சரியில்லாதவ்ன் என்று சொல்லிவிட்டார்கள். இருப்பினும் அந்த பேண்ட்  கையில் பிடித்தபடி புதுவகையான பாடி லாங்வேஜ் ஆக இருந்தாலும் அந்த பேன்ட்டை யாரவது மிஷ்கின் இடுப்பில் கட்டிவிடமாட்டார்களா? என்று நினைக்கவைப்பதுதான் அந்த கேரக்டரின் பலம்.

அந்த சின்னபையன் பாஸ்மாக் வாங்குகின்றார்கன்..

ஒரு கலவரகாட்சி டாப் ஆங்கிளில் கேமரா.. கேமரா போர்கிரவுன்டில் ஒருவனை தூக்கி கொண்டு ஓடுவதும் ஒரு பெண்ணை நிறுத்தி அதனோடு  சண்டை போட்டு ஓடுவதுமாக அந்த காட்சி நல்ல உழைப்பு...

ஒரு முடவனின் கால் எது என்பதையும் இப்போதைய வன்முறை எது பற்றியும் பச்சாதாபம் பார்க்காது என்பதையும் மிக அழகாக காட்சிபடுத்தபட்டு இருக்கின்றது.. அந்த முடவனுக்கு மருத்துவ உதவி செய்யும் டாக்டர் அவரும் ஒரு பிசிக்கலி சேலன்ஞ்சுடு பர்சனாக காட்டும் போது தியேட்டரில்  பெரிய விசில்.

ஆட்டோ டிரைவர் மென்ட்ல் என்று சொல்லிவிட்டு வெட்டி வைத்த பள்ளத்தில் போட்டு புரட்டி எடுக்கும் போது மிஷ்கின் நடிப்பு ஓகே... அதே பபோல அந்த சிவப்பு வேன்காரர்களிடம்  உதை வாங்கும் இடத்தில் நன்றாகவே நடித்து இருக்கின்றார்.

சினிக்தா தான் எப்படி இந்த நிலைக்கு வந்தேன் என்று சொல்லும் போது ஒரேர ஷாட்டில்  எந்த உறுத்தலும் இல்லாமல் பயனிக்கஅந்த கதையும் அந்த காட்சியும் நம் மனதில் நிற்க்கின்றன..

ஆள்ஆராவரமற்ற சாலைகளை தேடி தேடி எடுத்த அந்த உழைப்பு காட்சிகளில் தெரிகின்றது. மிக முக்கியமாக ஒரு ஒய்டு ஆங்கில்  லென்ஸ் போட்டு ஒரு லாரி வளைவான ரோட்டில் போகும் அந்த லாங் ஷாட் அற்புதம்.....

எல்லாகதாபாத்திரங்களும் மனதில் நிற்க்கின்றன.. அனால் அந்த பள்ளி படித்து விட்டு சைக்கிளில் வரும் பெண் உப்பு மூட்டை தூக்கி போகும் அளவுக்கோ அல்லது மார்பில் குத்தி வைளையாடும் அளவுக்கோ அந்த பாசத்தின் அழுத்தம் எனக்கு விளங்கவில்லை.

என்னதான் மொட்டை அடித்தாலும் ரோகினியின் இளமை சட்டென அம்மாவாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை.யாராவது அப்பத்தாளை போட்டு இருக்கலாம்.

 இந்த படம் அவசியம் பார்க்கவேண்டியபடம்.. ஆனால் தமிழ் ரசிகன் இந்த படத்தை பார்த்தே தீரவேண்டும்.. என்னை பொறுத்தவரை படம் பார்க்கலாம்....

படத்தின் டிரைலர்



படக்குழுவினர் விபரம்

Directed by     Myshkin
Produced by     K. Karunamoorthy
C. Arunpandiyan
Written by     Myshkin
Starring     Myshkin
Snigdha Akolkar
Ashwath Ram
Music by     Ilayaraaja
Cinematography     Mahesh Muthuswamy
Running time     125 minutes
Country     India
Language     Tamil

சென்னை குரோம்பேட் வெற்றி தியேட்டர் டிஸ்கி.

இந்த படத்தை  பட்டர்பிளை சூர்யாவும் நானும்தான் பார்த்தோம்..
ஏற்கனவே சூர்யா அந்த ஜப்பான் படத்தை பார்த்து விட்ட காரணத்தால் அவரால் அந்தஅ படத்தில் பெரிய அளவில் ஒட்டமுடியவில்லை.
நான் இந்த காரணத்துக்காகதான் நான் அந்த படத்தை பார்த்து தொலைக்கவில்லை.

படத்தில் பல காட்சிகளில் ஆர்ஆர் இல்லை ஆனால் நம்ம  பொது ஜனங்கள் வித விதமா செல் ரிங்டோன் போட்டு படம் பார்க்கும் மூடே போயிடுச்சி...

எங்களுக்கு பின்னாடி ஒரு டொமருக்கு போன் வந்தது.. அந்த சனியன் சொல்லு சித்தி மழை எல்லாம் எப்படி இருக்கு??? சரி அப்படியே சின்னபாப்பாவை கூப்பிடு அதுக்கிட்டயும் பேசறேன்னு என்று சொல்லி பேசிக்கொண்டே இருந்தான்...

நான் சத்தமாக திரையில் ஒடும் கதையை விட இந்த பின் சீட்டுகாரனின் கதை சூப்பராக இருக்கின்றது என்று சொன்னவுடன்தான் அவன் போன் மவுனம் ஆகியது.

வெற்றி தியேட்டர் புது பொலிவுடன் காட்சி அளிக்கின்றது-டிஸ்கோ லைட் எல்லாம் போட்டு படத்தை துவக்குகின்றாகள்.... நன்றாகவும் மெயின்டெயின் செய்கின்றார்கள்.. படம் பார்க்க நல்லதியேட்டர்.



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

19 comments:

  1. //ஏதாவது ஒரு தமிழ் சிறுகதையில் இருந்து இந்த படத்தின் காட்சிகளையும் உலகபடங்களின் மேக்கிங்கும் சேர்ந்து இருந்தால் அவருக்கு மேலும் ஒரு மணிமகுடமாக இருந்து இருக்கும்//
    True! :)

    ReplyDelete
  2. அது எப்படிங்க போஸ்ட் போட்டதும் உங்க கமென்ட் வருது??

    ReplyDelete
  3. Indha vimarsanama edhirmarai vimarsanam nu eduthukala?? nermarai vimarsanama? ore kulappama iruke!!!

    ReplyDelete
  4. மற்றவர்கள் அரைத்த மாவான பழைய தமிழ்சினிமாவைக் copy அடிக்கிறார்கள். ஹாலிவுட் படங்களின் சீன்களை அட்சரம் பிசகாமல் தமது படங்களில் வைப்பவர்கள்.



    கமல் ஏதாவது வித்தியாசமாக செய்தால், உடனே ஒரு கூட்டம் கிளம்பி விடும் ஆராய்ச்சி பண்ண..எந்த படங்களிலிருந்து சீன் உருவப்பட்டது எனக் கண்டறிய.

    அதே போலத்தான், மிஷ்கின் கிகுஜிரோவைக் copy அடித்துவிட்டார் என்று எல்லோரும் கூறுவது.

    நீங்கள் சொல்வது போல் ஒரு தமிழ் சிறுகதையை மிஷ்கின் படமாக எடுத்திருக்கலாம்.

    ReplyDelete
  5. //அது எப்படிங்க போஸ்ட் போட்டதும் உங்க கமென்ட் வருது??//

    உங்களைத்தான் பார்த்திட்டு இருந்தேன் தல! முடிஞ்சா நம்ம பக்கம் வாங்க! :-)

    ReplyDelete
  6. மிகைப்படுத்தப் படாத விமர்சனம்... ஜப்பானிய மொழிப் படத்தின் விமர்சனத்தை கேபிள் அண்ணா தளத்தில் படித்தேன்...

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம் அண்ணே. ஒரு சின்ன டவுட் சார் முடிந்தால் தீர்க்கவும் படம் பார்க்கும் போதே இது லென்தி ஷாட் என்று எப்படி கண்டு பிடிப்பது.

    ReplyDelete
  8. ////ஏதாவது ஒரு தமிழ் சிறுகதையில் இருந்து இந்த படத்தின் காட்சிகளையும் உலகபடங்களின் மேக்கிங்கும் சேர்ந்து இருந்தால்////

    நிறைய படிப்பவர் என்று மிஷ்கின் சொல்கிறார். ஆனால் அதை காட்சிப் படுத்துவதில் உள்ள மனப்பயிற்சி இன்மையாக இருக்கலாம். அல்லது சோம்பேறித்தனத்தால் தான் ஜப்பானிய படங்களின் காட்சிகளை அப்படியே பயன்படுத்துவது என் இறங்கியிருக்கலாம்.

    "Kikujiro no natsu" என்ற அந்த ஜப்பானிய படத்தைப் பார்த்தேன். நல்ல படம். ஆனால் இன்னும் நந்தலாலா பார்க்கவில்லை. பார்க்கவேண்டும்.

    அப்புறம் நந்தலாலாவை நார்வே நாட்டு படவிழாவுக்கு அனுப்புகிறார்களாமே. என்ன ஒரு தைரியம்.

    ReplyDelete
  9. வழக்கம்போலவே உங்களது ஸ்டைலில் விமர்சனம் அருமை அண்ணே,

    தொடரட்டும் உங்கள் பணி...

    நேரம் கிடைக்கும்போது நம்ம தளத்துக்கும் வந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்...

    ReplyDelete
  10. காப்பியடித்தது அடிக்கிறார்கள், அரைத்த மசாலாவையே திருப்பி அரைக்காமல், உலகப் படத்தை காப்பி அடித்திருக்கிறார்களே, அதுவரைக்கும் சரி. இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்!

    ReplyDelete
  11. அண்ணே இது எப்ப நடந்தது.. ஜாக்கி அண்ணன் வாழ்க ... (நயன்தாரா உங்க கூடவுமா?) எல்லா படத்துக்கும் விமர்சனம் போடறிங்களே ஜாக்கி அன்ன இந்த படத்துக்கு என்ன விமர்சனம்.. கலக்குங்க...


    http://sphotos.ak.fbcdn.net/hphotos-ak-snc4/hs746.snc4/64598_160811577271447_100000278186114_447264_6728374_n.jpg

    ReplyDelete
  12. 'baskar' mani eppidi 'balloon' mani aanaaru thala?

    ReplyDelete
  13. நல்ல படம்! நல்ல விமர்சனம்!!!

    ReplyDelete
  14. நல்ல விமர்சனம்

    ReplyDelete
  15. இந்த நெத்தியடி விமர்சனம் வேண்டும் என்றுதான் இதற்கு முன் தங்களிடம் கேட்டிருந்தேன். "அந்த ஜப்பானிய டைரக்டருக்கு டிரிபியூட் செய்து இருக்கின்றேன் " என மிஸ்கின் கூறி இருப்பது செம காமெடி. டிரிபியூட் செய்ய வேண்டுமென்றால் ஜப்பானுக்கு சென்று அந்த இயக்குனரை நேரில் பாராட்டலாம். அல்லது அந்த படம் பற்றி நமக்கு எடுத்து சொல்லி இருக்கலாம். சினிமாவில் இருப்பவர்கள் மட்டுமே அதிக எண்ணிக்கையில் உலக சினிமா பார்ப்பவர்கள் எனும் எண்ணத்தில் இப்படி 'உருவல்' படங்களை எடுக்க நினைப்பது கண்டிக்கத்தக்கது. சினிமாவில் இருப்பவர்களை விட நல்ல சினிமா பார்க்க நினைப்பவனின் உலக சினிமா பற்றிய பார்வை விசாலமானது என்பது என் கருத்து. பொருளை விற்பவனை விடை அதை வாங்குபவன் பன் மடங்கு புத்திசாலி. ஏனெனில்....கஸ்டமர் இஸ் கிங்! By all means.....மிஸ்டர் மிஸ்கின். "மனுசன மனுஷன் சாப்பிடுறாண்டா தம்பி பயலே.. இது மாறுவதெப்போ, தீருவதெப்போ நம்ம கவலை......". காரமான பதிவிற்கு நன்றி சேகர் அண்ணா!

    ReplyDelete
  16. romba nalaga ungal pathivai padikkiren. Indrudhaan vote poduvatharkaga tamilmanam acct open seithen. Enadhu bookmarkil ungal blog nirandharamaga vaithullen. Enge indha vaara mini sandwich?

    ReplyDelete
  17. http://news.moviegalleri.in/2010/11/director-mysskin-apologizes-assistant.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner