Showing posts with label சூடான ரிப்போர்ட். Show all posts
Showing posts with label சூடான ரிப்போர்ட். Show all posts

Ilayaraja music copyright Issues | இளையராஜா காப்பிரைட் சர்ச்சை’




இளையராஜாவுக்கும் தனியார் எப்எம் வானொலி நிலையங்களுக்கு இடையே ஆன பனிப்போர்...

disappointments & controversy 9th Annual Vijay Awards 2015|சலிப்பூட்டும் விஜய் டிவி விருதுகள்.




 சன் டிவி தமிழகத்தின்   முதல் சேனல்…திரைப்படங்கள். சீரியல்கள்… என்று அசத்திக்கொண்டு இருந்த போது , விஜய் டிவி பல கை மாறி பேர் மாறி....விஜய் தமிழகத்தில் வலுவாய் கால் பதித்தாலும்... விஜய் டிவி  சன்டிவியோடு எவ்வளவோ  மல்லுக்கட்டி போராடியும் வெற்றிக்கொடியை நாட்ட முடியவில்லை…  இத்தனைக்கும்  புதுப்படங்கள் எல்லாம் வாங்கினார்கள்….

சுஹாசினி பேசியது சரியா?



சுஹாசினி மணிரத்னத்தின் பேச்சால் .. கம்யூட்டர் மவுஸ் பிடிக்க தெரிந்தவர்களால்…. இரண்டு நாட்களாக தமிழ் இணையவெளி சூடாகி கிடக்கின்றது…

ஆழிப்பேரலை...(சுனாமி) ஜப்பான்...2011



இரண்டாம் உலக போருக்கு பிறகு, உலகம் உச்சரிக்கும் பெயராக மார்ச்..11ம் தேதி ஜப்பான் மாறிப்போகும் என்று காலையில் எழுந்து பல் துலக்கும் போது  எந்த ஜப்பானியர்களும் நினைத்து  கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

நல்ல மழை பெய்து கொண்டு இருக்கும்  போது வெள்ளம் வந்தால் அது ஒரு பிரச்சனையே இல்லை.... மழை கொட்டிக்கொண்டு இருக்கின்றது அதனால் படிப்படியாய் வெள்ளம் என்று மனது சமாதனபட்டு விடும்...


அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு என்ன ?சூடான ரிப்போர்ட்

எல்லா சாலைகளும் ரோமை  நோக்கி என்பது போல், இன்று இந்தியாவே லக்னோ பக்கம் பார்வையை திருப்பி வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தியா மட்டும் அல்ல நமது எதிரிநாடுகள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் லக்னோ பக்கம் பார்வையை திருப்பி இருக்கின்றன.


சென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வை....

நேற்று ஞாயிறு....முந்தாநாள் சனிக்கிழமை... இரண்டு நாளும் எக்ஸ்பிரஸ் அவென்யூ போகும்  வாய்ப்பு கிடைத்தது.. நான் போக வேண்டும் என்றால் ஒரு வாரத்துக்கு மேல்  ஆகும்... ஆனால் என் மச்சான் பெங்களுரில் இருந்து வந்தான்.. இன்னும் சில மச்சான்கள்  வந்தார்கள்.. அவர்கள் எல்லாம் ஐடியில் வேலை செய்யும் மச்சகாரர்கள்... அதனால் எந்த மாலிலும் நுழையும் ஆற்றல் பெற்றவர்கள்...


அழகு ஓவியம் பூசிக்கொள்ளும் சென்னை சுவர்கள்....



சென்னையில் சில விஷயங்களை டி பால்ட்டாக பார்க்கலாம்....
ரோடு அப்போதுதான் அழகாய் போட்டு இருப்பார்கள்.. மறுநாள் அந்த இடத்தை குடிநீர் வாரியம் , நேற்று போட்ட ரோட்டை ,தார் மணம் போவதற்க்குள் வெட்டிக்கொண்டு இருப்பார்கள்....எப்போது பார்த்தாலும் ரோட்டின் ஓரம் ஏதாவது வெட்டி போட்டு அதனை மூடிக்கொண்டு இருப்பார்கள்...அந்த குழியை சரியாக மூடாமல் செல்வதால், நாமக்கல்லில் இருந்து சரக்கு ஏத்தி வரும் டிரைவர் முனுசாமிக்கு தெரியவாய்ப்பில்லை. அவர் லாரியை ரிவர்ஸ் எடுக்கும் போது அந்த குழியில் லாரி சக்கரம் மாட்டி, அந்த பக்கம் டிராபிக் ஆகி அப்புறம் கிரேன் வந்து என்று இப்படி சென்னை பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்....

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை மவுன்ட் ரோடில் பயணப்பட்ட போது நான் பார்த்த விஷயங்கள் என்னை வியப்பின் உச்சத்துக்ககே சென்று விட்டேன் ... ஆம் சென்னை மவுன்ரோட்டின் பக்க ஓர சுவர்களில் பல அழகான ஓவியங்கள் இடம் பெற்று இருந்தன...

மவுன்ட் ரோடில் நந்தனம் சிக்னல் தாண்டி ஒய் எம் சியே வாளகத்து மதில் சுவர்களில் பல வண்ண ஓவியங்கள் இடம் பெற்று உள்ளன...இன்னும் வரைந்து கொண்டு இருக்கின்றார்கள்...
நம் கலாச்சார பெருமைகள், நம் ஊரின் முக்கிய சுற்றுலா தளங்கள், என்று ஒவியங்களில் நம் ஊரின் சிறப்பினை பொதுமக்களிடம் கொண்டு செல்கின்றார்கள்... இது சென்னை முழுவதும் அமுல் படுததினால் நிச்சயம் இது சிங்கார சென்னை

தூரிகைகள் எல்லாம் கால மாற்றத்தால் ,பிளக்ஸ்,டிஜிட்டல்போர்டு போன்ற வருகையால் சோம்பி இருந்த வேளையில் அவைகளுக்கு மீண்டும் வேலை கிடைத்து உள்ளது.. வரையும் ஒவ்வோறு ஓவியரிடமும் பெருமை கண்களில் இருக்கின்றது...

என்னதான் லலித் கலா அக்காடமியில் ஓவியம் வைத்தாலும் ஒருவாரம்தான் இருக்கும் ஆனால் இது நாள்கணக்கு என்பது கிடையாது அல்லவா? பேருந்தில் போவோரும், இரு சக்கர வாகனத்தில் பயணிப்போரும் அந்த இடம் கடக்கையில்

“காலையில் வெறும் கிளிதலைமட்டும்தான் வரைஞ்சாங்க..... அதுக்குள்ள பஞ்சவர்ணகிளி வரைஞ்சிட்டாங்க... ”

என்று பேசிக்கொண்டு செல்கின்றாகள்...இதே போல் நமது ஓவியர் கூட்டம் பிரபல ஓவியர் தலமையில் எதோ ஒரு நாட்டின் தெருக்களின் சுவர்களில் இது போல் படம் வரைந்து நம் சென்னை ஓவியர்கள் சிறப்பு சேர்த்தார்கள் என்பதை எப்போதோ ஒரு வார பத்திரிக்கையில் பார்த்த ஞாபகம்.....சென்னை முழவதும் உள்ள சுவர்களில் இது போல படம் வரைந்தால் எப்படி இருக்கும்? என்று கற்பனை செய்து பாருங்கள்....அதே போல் இன்னோரு பயமும் எனக்குள்ளே....

1.. அவசரத்துக்கு இந்த ஓவியங்கள் மேல் யாரும் உச்சா போக கூடாது...

2..யாரும் இதன் மேல் பான்பராக் எச்சில் துப்பக் கூடாது....

3.. கழக தொண்டர்கள் யாரும் தலைவனுக்கோ, தலைவிக்கோ பிறந்தநாள் (வாழும் வரலாறே) வாழ்த்து போஸ்டரை உணர்ச்சி வசப்பட்டு இதன் மேல் ஒட்டக்கூடாது...

4..கரித்துண்டை வைத்து இந்த படத்தின்மேல் படங்கள் வரையக்கூடாது...
அல்லது அந்த ஓவியங்களில் இருக்கும் பெண் படத்துக்கு மீசை வரையக்கூடாது...

5.. நகரத்தின் வாகன புகை அந்த ஓவியங்களை ஒரு மாதத்தில் டல் ஆக மாற்றும். வரைந்ததோடு நம் வேலை முடிந்ததாக என்னாமல் சம்பந்த பட்ட நிர்வாக்ம் மாதம் ஒரு முறை அந்த ஓவியங்களை தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும்...

6..அந்த ஓவியங்கள் இருக்கும் பிளாட்பாரத்தில் எந்த பஞ்சர்கடையோ, அல்லத இளநீர்கடையோ அல்லது வேறு ஏதாவத பிளாட்பாரகடைகள் அந்த இடங்களில் வராமல் இருக்க வேண்டும் ஆண்டவா....

7..தமிழனின் அதிகபட்ச கோப வெளிப்பாடான, சரக்கை போட்டுக்கொண்டு அலப்பறை செய்து, மாடு போட்ட சாணியை தூக்கி அதன் மேல் அடித்து செல்லாமல் இருக்க எல்லாம்வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...

வேறு என்ன நாம் செய்ய முடியும் சொல்லுங்கள்.....

புகை படங்கள்
ஜாக்கிசேகர்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..

அதே இடத்தில் இன்னொரு (அகதி வாழ்க்கை) தீ விபத்து...

(படங்களை கிளிக்கி பெரிதாக பார்த்துக்கொள்ளுங்கள்)


மிகச்சரியாக அரை மணி நேரத்துக்கு முன் நந்தம்பாக்கத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டு இருந்தேன்... ஏற்க்கெனவே அகதி வாழ்க்கை வாழ்பவர்க்ள் சென்னை டிரேட் சென்ட்ர் எதிரில் இருந்த மரங்களில், மரத்துக்கு மரம் தூளி கட்டி குழந்தைகளை தூங்கச்செய்து கொண்டு இருந்தார்கள்.

சிலர் பசியிலோ அல்லது உண்ட களப்பிலோ மர நிழல்களின் புண்ணியத்தால் இளைப்பாறிக்கொண்டு இருந்தார்கள். தூரத்தில் நான் என் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டு இருக்கும் போதே நான் அநத் கரும்புகையை கண்டேன், முதலில் ஏதோ குப்பை எறிகின்றது என்றே எண்ணினேன்...

சில பெண்கள் தலையில் அடித்துக்கொண்டு ஓடுவதை பார்த்ததுமே ஏதோ வீடு எறி்கின்றது என்று நினைத்தேன். அதே போல் நிகழ்ந்து விட்டது... நாம் சில பதிவுகளுக்கு முன் நடந்த சம்பவங்கள் பதிவர்க்ளுக்கு நினைவில் இருக்கலாம் . அதே மியோட் ஆஸ்பிட்டல், அதே அடையார் பாலம், அதன் அருகில் ஒரு வாரத்துக்கு முன் குடிசைகள் எரிந்து சாம்பல் ஆயின... அந்த இடத்தில் இருந்து சரியாக 100 மீட்டரில் அதே ஆற்று ஓரம் வாழ்ந்த மக்களின் குடிசைகள்இன்ற மதியம் 2 மணி வெயிலில் சொக்கபானை போல் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்தன. வாகனத்தில் போனவர்கள் எல்லாம் பாலத்தில் நிறுத்தி வேடிக்கை பார்க்க, சிலர் பயர் சர்விஸ்க்கு கைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்கள் அதற்க்குள் அந்த இடத்தில் டிராபிக் ஜம் ஆக ஆரம்பித்தது....


வீட்டில் இருந்த தட்டுமுட்டு சமான்களை எல்லாம் தம் வீட்டில் தீ பரவும் முன் முன்னேற்பாடாக அடையார் ஆற்றில் எடுத்து கொண்டு பல குடும்பத்தினர் ஓடினர்... சிலர் பாலத்துக்கு மேலேயே செய்வது அறியாது கைபிசைந்து நின்றனர்....

அங்கு தலையில் கைவைத்து இருந்த பெண்மணியிடம் பேசிய போது தொடர்ந்து மூன்று நாட்களாக வீடுக்ள் திடிர் திடிர் என்று எரிவதாகவும்...இது யாரோ செய்கின்ற சதி என்று கோபத்துடன் சொன்னார்...

பயர் சர்வீஸ் வருவதற்க்குள் அங்கு எரிந்த தீ மட்டுப்டுத்தப்பட்டது, அங்கு இருந்த மக்கள் தங்கள் பொருட்களை பாதுகாப்பாக வைத்து விட்டு தலையில் கை வைத்து நின்று கொண்டு இருந்தனர்..

இந்த பதிவு எழுதும் இப்போது கூட அவர்கள் கைகள் பதட்டத்தில் நடுங்கி கொண்டுதான் இருக்கும்... அவர்கள் படபடப்பு இன்று இரவு வரை குறையாது...

இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை என்றும் ஏன் இப்போது மட்டும் அடிக்கடி நிகழ்கின்றது என்று தெரியவில்லை என்றும்,

“ இதை செய்யறவன் மட்டும் என்கைல மாட்னா ங்கோத்தா அவன் கைமாதான்” என்று ஒரு பெரிசு கோபத்தில் புலம்பியது.....

எப்படியும் மூன்று குடிசைகளாவது எரிந்து இருக்கும்...அகதி வாழ்க்கையில் அந்த குடும்பத்தினரும் சேர்ந்து விட்டார்கள்.. இப்படி நெருப்பு வைத்து பலர் குடி கெடுக்கும் அந்த மனிதாபிமானம் இல்லாத நாய்க்கு தெரியுமா? இடப்பெயர்வின் வலியை????

நான் காலையில் இருந்து சாப்பிடாததால் தலை கீர் என்று சுற்ற நான் அந்த இடம் விட்டு நகர்ந்தேன்....நான் அந்த இடம் விட்டு நகரும் வரை பயர் சர்வீஸ் வாகனம் வரவில்லை....

அன்புடன்/நிழற்படம்/ஜாக்கிசேகர்

பரங்கி மலை ஜோதி தியேட்டரை பார்த்தீர்களா?????


அய்யகோ என்ன கொடுமை சரவணன் இது என்பது போல் பரங்கிமலை ஜோதி தியேட்டர் இப்படி மாறும் என்று கனவிலும் நான் நினைக்கவில்லை.
மாற்றம் ஒன்று மட்டுமே மாறாதது என்பதற்க்கு ஜோதி தியேட்டர் நல்ல எடுத்துக்காட்டு ஆகும்


இனி கனவில் கில்மா, சாரி ஆண்ட்டி, வெடக்கோழி, நாட்டுக்கோழி, பருவமங்கை,பருவ சிட்டு போன்ற சதையாழமிக்க படங்களை எங்கு காண்போம்.
ஷகிலா குளிக்கும் காட்சியை காட்டி கரண்ட் பில் கட்டிய தியேட்டர் அல்லவா அது.


வெள்ளிக்கிழமை தோறும் விடலைகளின் கைலிகளையும் ஜட்டிகளையும் வியர்வையில் நனைய வைத்த கோவில் அல்லவா அந்த இடம்.
11 மணிக்காட்சிக்கு போய் 12.30 டிக்கட் கொடுத்து கதவை திறந்து திறந்து வந்து வெறுப்பில் உட்கார்ந்து இருக்கும் நம்மிடம் பிட் ஏதாவது ஓடியதா என 60வது வயசு கிழஆள் கேட்கும் போது பற்க்களை நற நற என கடித்த இடம் அல்லவா.


எத்தனை எத்தனைஎதிர்கால சந்ததியின்ர் அழிந்த அல்லது அழித்த இடம் அது. எதிர்கால டாக்டர்களும்,வக்கில்கள்,முதலமைச்சர்கள், ரவுடிகள் எல்லாம் தியேட்டர் மற்றும் சீட்டுகளில் மோட்ச சரனாகதி அடைந்த இடம் அது.


விடலைகளின் ஏக்கத்துக்கு பாலின துண்டல்களுக்கு தீர்வான தீயேட்டராக இருந்தததால் எதிர் விட்டு தையல்கார அக்கா, பக்கத்து விட்டு பம்மளிமாஸ் ஆண்ட்டி எல்லோரும் கற்போடு தப்பிக்க உதவிய தீயேட்டர் அல்லவா பரங்கிமலை ஜோதி.

கைரேகை ஜோசியர்களை குழப்பிய இடம்
எத்தனையோ ரசிகர்களின் கைரேகை அழிந்து போக காரணமாக இருந்த தியேட்டர் அல்லவா.(பரங்கிமலை ஜோதி பற்றி எழுதும் போது இந்த மாதிரி படம் கூட போடலன்னா எப்படி? அந்த தியேட்டரை அசிங்க படுத்துவது போல் இருக்காதா?)

எல்லா வயதுகாரர்களின் பாலின வடிகாலகஇருப்பதும் இந்த மாதிரி தியேட்டர்கள்தான்.

இந்த மாதிரி பிட் பட தியேட்டர்களில் டிக்ககெட் கொடுத்து கொண்டே இருப்பார்கள், அதே போல் படம் ஆரம்பிக்க அரை மணிநேரம் விட்டத்தை பார்த்தபடி உட்கார்ந்து இருக்க வேண்டும் எந்த பாடலும் போட மாட்டார்கள். எங்கேயோ கிரிஸ் இல்லாத ஃபேன் லோடக்கு லொடக்கு என்று ஓடிக்கொண்டு இருக்கும்.


பாத்ரும் போனீர்கள் என்றால் சகிக்காகது எல்லா இடத்திலும் பாலின உறவுபற்றிய அப்பட்டமான படங்களும் அவர்கள் அங்கங்கள் பற்றிய வர்னனைகள் ரொம்ப ஜாஸ்த்தியாகவே இருக்கும்.

போன காட்சிக்கு பிட் போட்டு அதைபார்பதற்க்காக ஆவலாய் வந்த ஆட்டோ டிரைவர் கூட்டம்இந்த காட்சியில் பிட் இல்லை என்றால் தரை டிக்கெட் பெஞ்சுக்கள் மற்றும் ச்சேர்கள் முறியும் சத்தம் கேட்கும்.


தியேட்டரில் அந்த காட்சிக்கு பிட் போடவில்லை என்றால் அந்த தியேட்டர் ஆப்பரேட்டர் அம்மா வாழ்வு குறித்து சந்தேகப்படுவார்கள், மனைவியை ரோட்டுக்கு இழுப்பார்கள். பாவம் அவர் என்ன செய்வார்.

அறும்பு மீசையோடு உள்ளே வந்த பதினெட்டு வயது பயல்கள் இன்டெர்வெல்லின் போது பொம்பளைங்க பாத்ரூம் பக்கம் அல்லது டிக்கெட் கவுன்டரில் ஒதுங்கி யார் கண்ணி்லும் படாமல் இருப்பார்கள்.

பொதுவாக எல்லா ஆண்களுக்கும் பொம்பளைங்க பாத்ரூம் எப்படி இருக்கும் என்பது ஆங்கில செக்ஸ் படங்கள் போடும் போதுதான் தெரிய வரும்.

அப்பா மகன் இருவரும் ஒரே தியேட்டருக்கு வந்து தலையில் அடித்துக்கொண்டு போனக்காட்சியை பார்த்து இருக்கிறேன். அதே போல் அண்ணன் தம்பி உறவுக்காரர்கள் போன்ற வற்றை நேருக்கு நேர் பார்த்து அசடு வழிந்த நிகழ்வுகள் அதிகம்.

பிட்படம் ஓடும போது தியேட்டர் பின்டிராப் சைலன்டாக இருக்கும். யாரவது ஒருவர் மிக பச்சையாக கமெண்ட் அடிப்பார்.
உதாரணத்துக்கு ஜாக்கெட் கொக்கி அவுக்கவே இவ்வளவு நேரமா ?விடிஞ்சிரும். சீக்கரம் அவுத்து வேலைய ஆரம்பிப்பா.... எங்களுக்கு வேற பொழப்பு இருக்கில்ல என்பார்கள்.

மிகுந்த எதிர்பார்புடன் வந்த படத்தில் ஏதும் இல்லாமல் வெளியே வெறுத்து போய் வரும் போது டிக்கெட் கவுண்டரில் இருக்கும் சில ஆர்வ கோளாறுகள் படத்துல சீன் எப்படி என்று கேட்க நான் குடும்பத்தோட பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு வந்து இருக்கிறேன்

படம் பார்த்தவர்களின் அறியாமையால் லேசாக கை நடுங்கினால் கூட அண்மைதன்மை போய்விட்டதாக நினைத்து சிட்டுக்குருவி லாட்ஜ் டாக்டர்களை மனைவி பிள்ளளைகளுடன் சந்தோஷமாக வாழ வைத்த தியேட்டர்.

பதினைந்து நிமிட பிட்டுக்காக ஆவடி தாம்பரத்தில் இருந்து எல்லாம் வந்து தங்கள் சக்தியை தியேட்டரில் செலவழித்தவர்கள் ஏராளம் ஏராளம்
விஞ்ான வளர்ச்சியினால் வீசிடியில் ஒருமணி நேரமாக சாமி படம் பார்க்கும் பழக்கம் வந்தபோது இந்த மாதிரி தியேட்டர்களில் கூட்டம் குறைய தொடங்கியது எனலாம் .
அதன் பிறகு டிவிடி யில் தொடந்து நாலுமணி நேரம் பிட் படம் பார்த்த காமரசிகர்கள், ஜோதி தியேட்டர் கேண்டீன்காரரை வட்டிக்கு பணம் வாங்க வைத்தார்கள்.

இன்டெர்நெட் வந்ததும் தியேட்டரில் ஸ்கூல் யூனிபார்ம் பசங்கள் காலைகாட்சியை தியாகம் செய்ய சமீப காலமாக கத்திப்பார பாலம் கட்ட வந்த வட இந்திய இளைஞர்களை வைத்து கொஞ்சம் நாட்களாக கல்லா கட்டினார்கள்.

பாலம் வேலை முடியவும் சாய் மீரா தீயேட்டர் லீசுக்கு எடுக்கஅப்புறம் என்ன ஆச்சோ தெரியலை அந்த போர்டு ஓரம் போயிடுச்சி

இப்ப ஜோதி தியேட்டர் டிடீஎஸ் சவுண்டு மாட்டிக்கினு தின்டுக்கல்சாரதி படம் ஓடுது....


இது சென்னையின் சினிமா பாரடைஸோ என்றால் அது மிகையாகாது....




ஒரே ஆறுதல் ஜோதிமாகால் என்று பெயர் மாற்றம் செய்து கல்யாண மண்டபம் ஆகாமல் அது இன்னம் தியேட்டராகவே இருப்பது மனதுக்கு பெரிய ஆறுதல்....


கருத்து புகைபடம்

அன்புடன்/ஜாக்கிசேகர்

நரசிம்மராவுக்கு பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பில்வெற்றி பெற்ற பிரதமர்


முதலில் டிவிஷன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற மன்மோகன் சிங் அரசு மிண்ணணு வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்றது...













டென்ஷன் துளிகள்.............................................


வாக்கெடுப்பு முடிந்து எல்லோரும் டென்ஷனாக இருந்தார்

அத்வானி தன் உதடுகளை தடவிய படியே டென்ஷனில் இருந்தார்

ஆர்வ மிகுதியால் எல்லா உறுப்பினர்களும் எழுந்து நிற்க அவர்களை அடக்க சோம்நாத் சாட்டர்ஜி தவித்து போனார்

நமது பிரதமர் எப்போதும் போல் ஒருமாதிரி ஸ்டைலாக தவக்ட்டையில் கை வைத்த படி இருந்தார்...

மண்ணனு வாக்கெடுப்புக்கு பிறகு துண்டு சீட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு டென்ஷன் எகிறியது...

120 கோடி மக்களை ஆளப்போகும் ,அடுத்து வழிநடத்த போவது யார் என்பதை அறிவிக்க ரொம்ப நேரம் எடுத்துக்கொண்டார்கள்...

தேவகௌடா இப்போதும் எதிர் மேஜையில் படுத்த படியே இருந்தார்...

நாங்களே எல்லாவற்றிலும் சிறந்தவர்கள் என்று நினைக்கும் சன் குழுமம் தன் செய்தி சேனலில் தூர்தர்ஷன் லோக் சபா சேனலின் ஒளிபரப்பை கடன் வாங்கி ஒளிபரப்பியது

எப்போதும் அமளி துமளியாக இருக்கும் நாடளுமன்றம் சென்னை ஜோதி தீயேட்டரில் பிட்டு போடும் போது ஏற்படும் நிசப்தத்தை ஞாபகப்படுத்தியது

முந்தைய பிரதமர் வாஜ்பய் ஒரு ஓட்டு வித்யாசத்தில் தோற்றார். அவரது கட்சியில் எல்லோரும் டென்ஷனாக இருந்தார்கள்


இறுதியில் வெற்றி அறிவிக்க பட்டது ...256லிருந்து 275 ஆக ஆதரவு உயர்ந்தது


வந்தே மாதரம் இசைக்கபட்டு நாடளுமன்றம் இன்றைய கூத்துகளை இனிதே முடித்து கொண்டது

அன்புடன் /ஜாக்கிசேகர்

மன் மோகன் அரசுக்கு வாக்கெடுப்பில் வெற்றி (தப்பித்தது) அமெரிக்கா சந்தோஷப்படும்

மொத்த உறுப்பினர்கள் ........ 541

வராதவர்கள்........... 2 ( அப்படி என்ன கிழிக்கற வேலை யோ)

அதரவு......................253

எதிர்ப்பு........................232

இந்த களேபரத்துக்கு நடுவே நம் சபாநாயகர் சோம்நாத் தன் போண்டா மூக்கை நோன்டிக் கொண்டு இருந்தார்...

மன் மோகன் சிங் உடனே பாத்ரூம் செல்வது நல்லது....அவ்வளவு டென்ஷன் சாருக்கு

அன்புடன் /ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner