Tuesday, December 29, 2015

தஞ்சை பெரிய கோவில்.


1995 ஆம் ஆண்டு உலக தமிழ் மாநாடு இதே அம்மாவின் ஆட்சியில் நடைபெற்றது... கடலூரில் இருந்து நண்பர்களோடு தஞ்சை பெரிய கோவிலுக்கு சென்றேன்... அன்று முழுவதும் அந்த பிரமாண்டத்தை விட்டு எங்கேயும் போகவில்லை...

Thursday, December 24, 2015

In Order of Disappearance ( 2014 ) movie review by jackiesekar | world movie norway


இன் ஆர்டர் ஆப் டிஸ் அப்பியரன்ஸ்.

 
அழகான மனைவி….
ஒரே ஒரு பையன்…
நார்வேயின் புற நகரில்   தேசிய நெடுஞ்சாலைகளில்  பனி குவிந்து இருந்தால்… அதனை  விலக்கி பாதை ஏற்படுத்தி கொடுக்கும் வேலையை 60 வயது  நீல்ஸ் செய்கிறார்… அவருக்கு பனி விலக்கும்  வேலையும்.. அவரது குடும்பமும்தான் பிரதானம்.
பனி என்றால்  நம்ம  ஊர் மார்கழி மாதம் போல மப்ளர் கட்டிக்கொண்டு வாங்கிங் போய்விடலாம் என்று நினைக்கும் ரகம் அல்ல….  தாளிக்க கடுகு உளுத்தம் பருப்பு வாங்க வேண்டும் என்றாலும் கூட பத்துக்கு மேற்ப்பட்ட  சமாச்சரங்களை அணிந்துக்கொண்டு வெளியே சென்று வர வேண்டும்… இல்லை என்றால் விரைத்துக்கொள்வீர்கள்..
நம்ம ஊர்ல சின்ன மழை பேஞ்சி லைட்டா ஜில்லிப்பா இருந்தாலே…  கொடைக்கானலில்  ஹெட் போன் போல காதை அடைத்துக்கொண்டு   இருக்கும் சமாச்சாரத்தை  சென்னையில் போட்டுக்கொண்டு திரிபவர்களுக்கும், பனி பெய்தால் காதில் பஞ்சி வைத்துக்கொண்டு செல்லும்  புண்ணியவான்களுக்கும்  நார்வே வாழ தகுதி இல்லாத நாடு என்பதை அறிக…
அப்படியான இடத்தில் நீல்ஸ் தன் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டு இருக்கின்றார்….
ஒருநாள் அவரது  பிள்ளை இறந்து விட்டாதாக  போன் வருகின்றது.
பையன் என்றால் 20 வயது மதிக்கத்தக்க பிள்ளை…  எர்போர்ட்டில் லக்கேஜ் ஏற்றிக்கொண்டு செல்லும் வண்டியை இயக்குபவன்…
ஒரே ஒரு ஆண் பிள்ளை…   நானே இன்னும் சாவாம இருக்கேன்.. அதுக்குள்ள அவன் எப்படி இறப்பான் என்ற கேள்விக்குழப்பத்தோடு… ஆனால் தெளிவாக நீல்ஸ் தன்   மனைவியை அழைத்துக்கொண்டு  பிரேத பரிசோதனை  இடத்துக்கு வருகிறான்..
வந்து பார்த்தால் மகனுக்கு எந்த சின்ன கீறலும் இல்லாமல் இறந்து கிடக்கின்றான்… அட ஒரு விபத்தில் போய்  சேர்ந்து இருந்தாலும் விபத்து  நடந்து விட்டது .. யார் என்ன  செய்யமுடியும் ? என்று மனதை தேத்திக்கொள்ளலாம்.. ஆனால்  எந்த பிரச்சனையும் அவனுக்கு இல்லை… காதல் கத்திரிக்காய், உடல் உபாதையும்  ஏதும் இல்லாமல்  வாழவேண்டிய பையன் இறந்து கிடக்கின்றான்.
 அது மட்டுமல்ல  கேஸ் ஆப் டெத்  என்ன? என்று விசாரித்தால்.. உங்க பையன் அளவுக்கு அதிகமான  போதை பொருள் எடுத்துக்கொண்டதால் இறப்பு சாத்தியமாகியுள்ளது என்று மருத்துவர் கை விரிக்கின்றார்..
நீல்ஸ் என் மகனுக்கு அந்த பழக்கமே இல்லை என்று வாதிட்டாலும் அடாப்சி ரிப்போர்ட் அதைதான் சொல்கிறது என்று டாக்டர் வாதிடாமல் அடுத்த வேலை பார்க்க போகின்றார்…
நீல்ஸ் நிச்சயமாக  தன் மகன் போதை மருந்து எடுக்கும் பழக்கம் இல்லாதவன் என்பதில் திடமா நம்பினாலும், ஒருவேளை எடுத்து இருந்தால் என்ற எதிர்கேள்வி கேட்கும் போது நிச்சயம் நீல்ஸ் மனம் அலைபாய்ந்துகொண்டு இருந்தது..
சரி இனிமே வாழ்ந்து என்ன மயிர புடுங்க போறோம் என்ற தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கும் போது  ஒரு டுவிஸ்ட்… மகன் இறப்பு கொலை… என்ற செய்தி கிடைக்கின்றது…
சாவபோனவனுக்கு இந்த செய்தி வந்தால்  என்ன செய்வான்.. வந்தால் மலை போனா மயிறு என்று களத்தில் இறங்கமாட்டோம்.. எஸ் நீல்ஸ் எப்படி வயதானாலும் தன் மகனை கொலை செய்தவர்களை பழி வாங்குகின்றார் என்பதை சாப்டர்  சாப்டராக  அற்புதமான  கிரைம் திரில்லராக இந்த திரைப்படம் நம்  கண் முன் விரிகின்றது.
 பட்த்தின் சுவாரஸ்யங்கள்..
ஸ்லோவாக இருந்தாலும் இன்ரஸ்டிங்கான திரைக்கதை… இத்தனைக்கும் எத்தனையோ பழி வாங்கும் படங்களை நாம் பார்த்து இருகின்றோம்.. ஆனாலும்  பழிவாங்குவது அதுவும் தனி ஒருவனாக   போதை பொருள் கும்பலை எதிர்ப்பது என்பது சாதாரண விஷயம் இல்ல..
 நன்றாக இருக்கின்றது…..
டிஸ் அப்பியரன்ஸ் ஆகும் பெயர்கள் மற்றும் செப்டர் குளோஸ் செய்யும் இடங்கள்  அருமை.

சினிமாட்டோகிராபி சான்சே இல்லை… படத்தின் பெரிய பலம்…
========
படத்தின் டிரைலர்.


======
படக்குழுவினர் விபரம்.

Directed by                           Hans Petter Moland
Produced by                          Stein B. Kvae
Written by                             Kim Fupz Aakeson
Starring                                 Stellan Skarsgård
Music by                                Brian Batz
Kaspar Kaae
Kåre Vestrheim
Cinematography                   Philip Øgaard
Edited by                               Jens Christian Fodstad
Release dates
10 February 2014 (Berlin)
21 February 2014 (Norway)
Running time
115 minutes
Country                                 Norway
Sweden
Denmark
Language                               Norwegian, Swedish, English, Serbian, Germa
=======
பைனல் கிக்..
நார்வேயின் பனி அழகை கண்டு களிக்கவும்.. ஒரு சுவாரஸ்ய  திரில்லருக்காகவும்
 கண்டிப்பாக இந்த படத்தை பார்க்கலாம்... காரணம்  பிரசன்ட்  செய்த விதம்.
====


வீடியோ விமர்சனம்..
ஜாக்கிசேகர்.
24/12/2015
follows on


நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Monday, December 21, 2015

சகாயம் முதல்வரா?ஊர்ல ஒரு பழ மொழி சொல்லுவாங்க... தேரை இழுத்து தெருவுல உட்ட கதையான்னு பேச்சு வழக்குல சொல்லுவாங்க... அது போலத்தான் சகாயம் கதையும்...
ஒரே ஒரு விஷயம்தான்... சகாயம் யாரு.. என்னன்னு தெரியாம... ஊடகங்கள் எழுதுவதை வைத்து ஒரு கோஷ்ட்டி ஒரு நாள் முதல்வர் ரேஞ்சிக்கு புகழ்பாடுது..
சகாயத்தை விட மிக நேர்மையான அரசு ஊழியர்கள் இருக்கின்றார்கள்.... அவர்களின் பணி தெரிவதில்லை...
சகாயத்தோடு டிராவல் ஆன ஊழியர்களை கேட்டுப்பாருங்க...அப்ப தெரியும்...
அதை விட..
இந்த ஊடகங்கள் இருக்கே.. ஊடகங்கள் தங்கள் சுயநலத்தின் பொருட்டு ஒருவனை கடவுளாக கட்டமைக்கின்றன... நேரம் வரும் போது அதே சுயநலத்தின் பொருட்டு கடவுளாக போற்றப்பட்டவன் களமாடபடுகின்றான்.
டிராபிக் ராமசாமியாகட்டும் அல்லது தமிழக அம் ஆத்மியா இருக்கட்டும்...
ஒருவேளை சகாயம் வேட்பாளராக நின்றால்... பத்தாயிரம் ஓட்டுகள் பெறலாம்...
தமிழ் நாட்டை பொருத்தவரை ரெண்டே கட்சிதான்.. ஒன்னு திமுக மற்றது அதிமுக...
இரண்டு கொள்ளியில நல்ல கொள்ளியை தேர்ந்தெடுக்கும் பாக்கியம்தான் நமக்குன்டு என்பதை மறவாதீர்கள்..
ஜாக்கிசேகர்
21/12/2015
நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

Friday, December 18, 2015

Thanga magan ( 2015 ) movie review | தங்க மகன் திரைவிமர்சனம்
வேலையில்லா பட்டதாரி திரைப்படம் கொடுத்த வெற்றி தெம்பில்…  தனுஷ் தனது ஒன்டர்பார் நிறுவனத்தின் மூலமும்.. அவரது ஆஸ்தான ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான வேல்ராஜூடன் களம்இறங்கி இருக்கும் படம்தான் தங்கமகன்.இந்த திரைப்படத்துக்கு வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகம் என்று நூல் விட்டாலும்… அப்படி எல்லாம் இல்லை இந்த படம்  விஐபி போல இருக்காது ஆனால் இது வேறு ஒரு அனுபவத்தை கொடுக்கும்   என்று படம் வெளிவரும் முன்னே சொல்லி விட்டார்கள்…

Sunday, December 6, 2015

கடந்த ஆறு நாட்களில் மழை பாதித்த நனைந்து போன முகநூல் பதிவுகள்.. #‎chennai‬ ‪#‎chennairains‬ ‪#‎chennaiflood‬ ‪#‎chennaifloodhelp‬
நகரின் மத்தியில் இருக்கும் சைதாபேட்டை பாலமே வெள்ளத்தில் மூழ்கி உள்ளது... ஆற்றங்கரையோரம் இருக்கும் மக்களின் நிலைமையை புரிந்துகொள்ளுங்கள்....
எல்லோரும் மொட்டை மாடியில் தவம் கிடக்கின்றனர்.... மின்சாரம் இல்லாத காரணத்தால் தகவல் தெரிவிக்க முடியாமல் விழி பிதுங்கி உள்ளனர்..

Wednesday, December 2, 2015

வெள்ளக்காடானது சென்னை...
எட்டுமணிக்கே வீட்டுக்கு வந்து விட்டேன்.... ஆனாலும் விலைஉயர்ந்த கார்  மூழ்கும் ஆபாயத்தில் இருப்பதாகவும்... கணவர்  ஓஎம்ஆர் ரோட்டில் சிக்கிக்கொண்டு இருப்பதாக தோழி உதவிக்கு அழைக்க...

Friday, November 27, 2015

Uppu Karuvadu -2015 movie review | உப்பு கருவாடு திரைவிமர்சனம்.

உப்புக்கருவாடு.


2004  ஆம் ஆண்டு அழகிய தீயே திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர்…  இயக்குனர்  ராதாமோகன்…

2004 ஆம் ஆண்டு நானும் எனது நண்பர் சுபாஷும் பாண்டி ராஜா  தியேட்டரில்  முதல்   நாள் முதல் காட்சிக்கு சென்று  அழகிய தீயே படத்தை பார்த்தோம்… 

காரணம் அந்த படத்தின் போஸ்டர்கள்  படத்தை பார்க்க வேண்டும்  என்ற எண்ணத்தை தோற்றுவித்தது எனலாம்…  இத்தனைக்கும் பெரிய ஸ்டார் காஸ்ட் அந்த படத்தில் இல்லை…

Tuesday, November 24, 2015

THIS NOVEMBER HEAVY RAIN AT CHENNAI மறக்க முடியாத மாமழை…23/11/2015

23/11/2015 அன்று இரண்டு மணிக்கு  ஆரம்பித்த மழை… இரவு பதினோரு மணிவரை கொட்டிதீர்க்க… 
முப்பது நாளில் பெய்ய வேண்டிய மழை மூன்று நாளில் பேய்ந்து விட்டது என்று அம்மா சொன்னதற்கு ஆமாம் சாமி  போட்ட போது புளியோதரையும் பொங்கலும் மழைக்கு  வீட்டில்  உட்கார்ந்து சுட சுட சாப்பிட்டவர்கள் எல்லாம் திங்கட்கிழமை வேலை  நேரம் எலிப்பொறியில் சிக்கியது போல   சிக்கிக்கொண்டார்கள்…

Sunday, November 22, 2015

007 bond new movie Spectre review by jackiesekar | ஸ்பெக்ட்ர் திரைவிமர்சனம்


ஸ்பெக்ட்ர்..

 அங்க சுத்தி இங்க சுத்தி அடி மடியிலேயே கை வச்சானாம் என்று ஒரு பழமொழி சொல்லுவார்கள்… இந்த ஒன்லைன்தான் தற்போது வெளியாகி இருக்கும் பாண்ட் திரைப்படத்தின் ஒன்லைன் கதை.
உலகம் எங்கும் பெரும் எதிர்பார்ப்பை  ஏற்ப்படுத்திய பாண்ட் சீரிஸ்சின் 24 வது திரைப்படம் இந்த  ஸ்பெக்டர்…


Saturday, November 21, 2015

Oru Naal Iravil tamil movie Review by jackiesekar | ஒரு நாள் இரவில் திரைவிமர்சனம்சின்ன சபலம்… பெரிய பிரச்சனைக்கு ஊரு விளைவிக்கும்…. தென்மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மாவட்டம் அது..

 நேற்று வரை ஊரே கொண்டாடிய நல்லாசிரியர் அவர்… அவரை போன்ற ஒரு நேர்மையாளரை பார்க்கவே முடியாது… கணக்கு பாடத்தை அவர்  எடுக்க ஆரம்பித்தால் மர மண்டைக்கும் புரியும்  அளவுக்கு எடுப்பதில் வல்லவர்… அரசு ஒதுக்கும் நிதிகளை தன் வீட்டுக்கு ஒதுக்காத மாமனிதர், வயதுக்கு வந்த இரண்டு பிள்ளைகள்… ஆனாலும் காமம் என்பது பொல்லாதது.. அதை அடக்கி ஆள்வது  சிரமத்திலும் சிரமமான விஷயம்….  கொஞ்சம் யோசிக்கா விட்டாலும் முச்சந்தியில்  நிறுத்திவிடும் வல்லமை அதற்கு உண்டு.


chennai Kasimedu fishing harbor place to visit | must visit place Chennai | சென்னை காசிமேடு மீன் பிடி துறைமுகம்

  சென்னை திரையரங்குகளில் பத்து ரூபாய்  பாப்கானை…. காம்போ என்ற பெயரில் மனசாட்சியே இல்லாமல் 110 ரூபாய்க்கும், அரை லிட்டர் தண்ணீர் பாட்டிலை எம்ஆர்பி விலையை  விட அதிகமாக 40 ரூபாய்க்கு விற்கும் திரையரங்கிற்கு  மாதம் இரண்டு முறை  பொழுது போக்கிற்காக  குடும்பத்தோடு சென்றால் மாத பட்ஜெட்டில் நடுத்தர குடும்பத்து தலைவர்கள் தலையில் துண்டு போட்டுக்கொள்ள  வேண்டும்… திருட்டி விசிடியில் படம் பார்ப்பது மனித தன்மையற்ற செயல் என்று டுவிட்டரில் அலறும் நடிகர்கள் இந்த பகல் கொள்ளையை எதிர்த்து ஒரு வார்த்தை பேசுவதில்லை..


Wednesday, November 18, 2015

happy birthday nayanthara | இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நயன்தாரா.
நயன் என்று தமிழ் ரசிகர்களால்   செல்லமாக அழைக்கும் நயன்தாராவுக்கு இன்று பிறந்தநாள்…இதே நாளில் 1984 ஆம் ஆண்டு பெண்களூருவில் மன்னிக்கவும் பெங்களூருவில்  பிறந்தார் நயன்…  டயானா மரியம் குரியன் என்பது நயனின் இயற்பெயராகும்.Saturday, November 7, 2015

My Interview in News 7 channel | நியூஸ் தொலைக்காட்சியில் எனது நேர்முகம்.

தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் சினிமா விமர்சகர் என்ற டேக் லைனோடு தொடர்ந்து கலந்துக்கொண்டு வருகின்றேன்...

இதுவரை தொலைகாட்சி விவாத நிகழ்ச்சிகளில் பதிவு செய்யப்பட்டவைகளில் மட்டுமே நான் பங்கு பெற்று இருக்கிறேன்...

Friday, November 6, 2015

குறள் 110: அதிகாரம் : செய் நன்றி அறிதல்

நேத்து வரை வாக்கர் பாய்ஸ், போர இடம் வௌங்காது... துரோகி,சகோதரின்னு சரணாகதி அடைந்தவர், கூட இருந்தே குழி பறிப்பவர் ... அது  இதுன்னு வைகோவை  வெகு தீவிரமாக வசை பாடிய அத்தனை  திமுக உடன்பிறப்புகள் அத்தனை பேருமே...

Thursday, November 5, 2015

எனக்கு ஒரு டவுட்


ஏஆர் ரகுமானின் ஜெய்ஹோ பேட்டியும்.... பார்த்திபனின்விகடன் பேட்டியும்... பார்த்தேன் படித்தேன்...

ரகுமானின் அம்மா அவர் வந்தார் ஆர்மோனியம் வாசிச்சார்ன்னு பேசறாங்க... அதை விட பார்த்திபன்... ராக்கி படம் பார்த்தார்... அவரோட விமர்சனம் எனக்கு தேவைன்னு பேட்டியில தன்னோட புள்ளைய அவர்ன்னு மரியாதைய விளிச்சி இருக்கார்....

ரகுமான் ராக்கி இரண்டு பேருமே சின்ன வயசுல வளரும் போதே அவர்ன்னுதான் அழைச்சி இருப்பாங்களோ..???


Wednesday, November 4, 2015

A Brief Talk by S.V.Shekhar | S.Ve சேகர் அவர்களுடன் விரிவாய் ஒரு நேர்முகம்ஏசிமெக்கானிக்காக  சென்னை சவேரா ஓட்டலில்  ஒன்றரை வருடம்  பகுதி நேர வேலை..

சென்னை ரேடியோவில் முதல்  முறையாக  சினிமா ஒளிச்சித்திரம் வழங்கியவர்.

ஆடியோ என்ஜினியர்,

அதுவே பாலசந்தரிடம் ஒரு சீனில்நடிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தது..

6000 முறை  நாடகம் போட்டதோடு இன்னமும் நாடகங்கள் வார  வாரம் மேடை ஏற்றுபவர்…

Sunday, November 1, 2015

HE - அவன்


 மயிலை
30/10/2015
 இரவு பதினோரு மணி..
========
 தம்பியும்… தம்பி மனைவியும் வீட்டுக்கு வருகின்றார்கள் என்பதால் வீட்டிற்கு வெளியே நானும் யாழினியும் காத்திருந்தோம்..

 அந்த பையன்  காரணீஸ்வரர் கோவில் பக்கத்தில் இருந்து வந்துக்கொண்டு இருந்தான்… கருப்பு சட்டையும் வெள்ளை பேண்டுமாய்…
இன்  செய்து இருந்தான்…. நவநாகரிகமாய் இருந்தான்… 
 உதாரணத்துக்கு  சொல்ல  வேண்டும் என்றால்..?
 பார்க் ஓட்டல் பப்பில் இருந்து வெளி வந்த  பையனை போல இருந்தான்…Wednesday, October 28, 2015

sanveg and nonveg | சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் | 28/10/2015
சாண்ட்வெஜ்  அண்டு நான்வெஜ்…28/10/2015
  ஆல்பம்.

மத்தியில் பிரதமர்   மோடி ரெஸ்ட் எடுக்காமல்இந்தியாவின்  வளர்ச்சிக்கா நாடு நாடாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்… பெஸ்ட்டிவல் தினம் என்பதால் தீபாவளிக்கு   சொந்த நாட்டுக்கு வந்துள்ளார்… 
 

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner