(BUTTERFLY ON A WHEEL-2007) கனடா/ குழந்தை கடத்தல் நடந்தது என்ன??
 நீங்க உங்க ஒய்ப் மேல ரொம்ப காதலா இருக்கிங்க.. அதே போலதான் உங்க ஒய்ப்பும்.. அவ்வளவு காதல்  உங்க ரெண்டு பேருக்கும்.. உங்களுக்கு ஒரு பொண் கொழந்தை இருக்கு... ஒரு நாள் ஜாலியா பொண்டாட்டி கூட அவுட்டிங்போலாம்னு நினைக்கிறிங்க்.. குழந்தைய ஒருத்தங்க கிட்ட பார்த்துக்க  சொல்லிட்டு வெளியே போலாம்னு போகும் போது காரில் ஏற்கனவே ஒருத்தன் உட்கார்ந்துகிட்டு உங்களை துப்பாக்கி முனையில் மிரட்டுகின்றான்.. நான் சொல்லற வேலை எல்லாம் நீ செய்யலைன்னா  உன் குழந்தை உயிரோடு இருக்காதுன்னு மிரட்டறான்...சரி அவன் பொய் கூட சொல்லறான்னு நினைக்க முடியலை காரணம்.. உங்ககளை பற்றிய எல்லா விபரமும் அவன் விரல் நுனியில் வைத்து இருக்கின்றான்...  எப்படி இருக்கும்??? 


ஆஸ்கார் விருது வழங்கும் விழா-2011...ரகுமான்இன்று 83வது  ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெற்றது...இரண்டு விருதுகளுக்கு நம்ம ரகுமான் பெய்ர்  நாமினேஷனில் இருந்த காரணத்தால் இந்த விருது வழங்கும் விழாவை நிறையவே எதிர்பார்த்தேன்...


காலையில்4,30மணிக்கு   இந்திய நேரப்படி ரெட்கார்பெட்  வரவேற்பை சோனிபிக்ஸ்சில் காட்டினார்கள்..


சோனிபிக்ஸ் காலை 6 மணியோடு அவர்கள்  அக்காடமி ஒளிபரப்பை நிறுத்திவிட்டார்கள்...


ரெட்கார்பெட் வரவேற்ப்பிலேயே நம்ம ரகுமான் வருவார் என்று மிகுந்த ஆர்வ்த்தோடு இருந்தேன்... வரவில்லை...

மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) 27/02/2011

ஆல்பம்

 இரண்டரை வருடத்துக்கு முன் வலையுலகத்தில்  நுழைந்த போது நான் எழுதிய முதல் பதிவு இது... வாத்தியாருக்கு  என் அஞ்சலிகள்..

சமர்பணம்


கிராமத்தில் பிறந்த எனக்கு கனிப்பொறியும் ,வானவியலும் கற்றுக் கொடுத்த துரோணர், கற்றதும் பெற்றதுமில் நான் பெற்றதே அதிகம், ஏன் எத்ற்க்கு எப்படி படிக்கவில்லை எனில் இன்னும் நான் கோவில் கோவிலாக அலைந்து கொண்டுஇருப்பேன் ,ப்த்தாம் வகுப்பு படித்த நான் blog எழுத இவரே காரணம் என் எழுத்தையும் ஆசிர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் , அன்புடன் / ஜாக்கி சேகர் 

 =================

கலாச்சார காவலர்களே…ஒரு நிமிடம்நடுநிசிநாய்கள் படத்தை பற்றி விமர்சனங்கள் நிறைய படித்து விட்டேன்..ஏதோ இந்த பூமி எனும் கிரகத்தில் தன் அரிப்பை தீத்துக்கொள்ள வேறு வழியே இல்லாமல் கவுதம் மேனன், ஒரு படம் எடுத்து அந்த அரிப்பை தீர்த்துக்கொண்டு விட்டதாகவும் நிறைய பேசுகின்றார்கள் எழுதுகின்றார்கள்...இன்னும் ஒருபடி மேலே போய் அந்த படைப்பை பான்பராக் எச்சிலால் நிரப்ப வேண்டும் என்று சொல்லிகின்றார்கள்..

இந்த கட்டுரை கவுதம்மேனனுக்கு வக்காலத்து வாங்கும் கட்டுரை  அல்ல என்பதை புரிந்துக்கொள்ளவேண்டும்..

அந்த படம் காப்பிபடம்
அந்தபடம் நல்ல திரில்லர் படம் இல்லை
அந்த படம் செமை போர் உட்காரமுடியவில்லை.. குட் இதை பற்றி நான் எதுவும்  சொல்லபோவதில்லை....

இந்த படத்தின் அடிநாதமாக பலர் முன் வைக்கும், கேள்வி.....

அப்பா தன் மகனை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துகின்றார்...

இதுக்கு பதில் சொல்லிவிடுகின்றேன்...


உலகம் சுபிட்சமாக இயங்குகின்றது என்று சொல்லிவிட்டால் இலக்கியமும் இதிகாசமும் தோன்றி இருக்க வாய்ப்பே இல்லை...எல்லோரும் சுபிட்சமாக நேர்மையாக  இருந்துவிட்டால் எந்த பிரச்சனையும் இல்லையே....அப்புறம் எப்படி இலக்கியம் இதிகாசம் எல்லாம்...

ஜாக்கியும். பெங்களூர்(YAHOO) யாஹு அலுவலகமும்....

இந்தியாவில் நெட் வருகை பரவாலாக  வந்த போது எனக்கு தெரிந்து ஒரு மதுரை நண்பர்  ரெடிப்மெயிலில்  எனக்கு ஒரு அக்கவுன்ட் ஆரம்பித்து கொடுத்தார்.. அது மூன்று மாதத்துக்கு மேல் சீண்டவில்லை என்பதால் அந்த முதல் மெயில் ஐடி இட்ஸ்கான் ஆகியது...

அடுத்து பல வருடங்கள் நெட்  பக்கமே நான் வரவில்லை... ஆனால் இன்று நிலைமையே வேறு...திரும்ப நான் மெயில் பக்கம்  வந்த போது எனது  காதலிக்கு மெயில் ஐடி யாஹு டாட்காம்மாக இருந்த போதே மெயில் ஐடி இருந்தது.. சிலதகவல்கள் தெரிந்து கொள்ள ,, பகிர்ந்து கொள்ள நான் யாஹு மெயிலில் போய் ஒரு ஐடி ஆரம்பித்து போது  டாட் கோ டாட் இன் ஆனது..

அதன்பிறகு அந்த மெயில் ஐடியைத்தான் நான்  பலகாலம் உபயோகபடுத்திக்கொண்டு இருந்தேன்... காதலியோடும் மனைவியோடும் சாட் செய்ய யாஹு  மேசஞ்சர் கை கொடுத்தது...


(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/6

ரகோத்தமன்  என்பவர் ஒரு  பின்னுட்டம் அனுப்பி இருந்தார்....
very good Jackie. you are using your popularity in a right way and hope it will be useful to lot of people.thanks for caring about others.
 
உண்மைதான் ரகோத்தமன் இந்த பகுதிக்காக நிறைய பேர் வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.. நிறைய தகவல்கள் அளித்து வரும் தம்பி ரோஸ்விக் இன்னும் முகம் தெரியாத நண்பர்களுக்கு எனது நன்றிகள்..
 
 ============================================
 

பெங்களூர்(பெண்களூர்) நண்பர்களின் சந்திப்புகள்..
 குறிப்பு... இது ஒரு சுய சொறிதல்...

ஒரு பதிவர் சந்திப்பு என்று அறிவித்து விட்டு அங்கு நானும் போய் இருக்கும் போது, நீங்க ஜாக்கிதானே என்று நலம் விசாரிப்பார்கள்... நாமும் நிறைய பேரை சந்தித்து இருப்போம், சிலரை படித்து இருப்போம்.. அந்த எழுத்தை வாசித்து ஒரு பிம்பத்தை மனது உள்வாங்கி இருக்கும் (ஈரோடுகதிர் கவனிக்க) அதனால் அவர்களை எளிதில் இனம் கண்டுக்கொள்ளலாம் ஆனால் எனது தளத்தை தொடர்ந்து வாசிப்பவர்கள் எப்படி இருப்பர்கள் என்பது எனக்கு தெரியாது? அப்படி நான் சந்தித்த  நண்பர்களை பற்றிய சுவாரஸ்யங்கள்... இங்கே...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்( பதினெட்டுபிளஸ்/புதன் 23/02/2011)

ஆல்பம்

இனிதமிழர்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் என் மீது விழும் அடியாக நினைத்து போராடுவேன் என்று நடிகர்  விஜய் சூளுரைத்து இருக்கின்றார்...மகிழ்ச்சி ஒரு பிரபலம் அடிமட்டத்து மனிதருக்கும், மக்களுக்கும் குரல் கொடுத்து இருப்பதை வரவேற்கின்றோம்.. ஒரு நடிகன் அரசியலில் புகுந்து முதல்வர் பதவிவரை செல்வது எம்ஜிஅருக்கு பிறகு அது யாருக்கும் சாத்தியபடாது. காரணம் எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் சினிமா பொத்திவைக்கபட்ட விஷயம்.. ஆனால் இப்போது அப்படி இல்லை....அதே பொதுக்கூட்டத்தில் நான் அடிச்சா தாங்க மாட்ட நாலு நாள் தூங்க மாட்ட என்று பேசியது கொஞ்சம் ஓவர்...


(PAYANAM-2011)ராதாமோகனின் திரில்லர் பயணம்மொழி படத்துக்கு பிறகு இயக்குனர் ராதா மோகன் தமிழில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய இயக்குனர் பட்டியலில் தனக்கென தனி இடம் ஒதுக்கியவர்..

ஆனால்  இவரின் முதல் படமான அழகியே தீயேவை பெரும்பாலும் எவரும் சொல்லமாட்டார்கள்.. ஆனால் எனக்கு ரொம்பவும் பிடித்த படம் அழகிய தீயே..

அந்த படம் பார்க்கும் போது எல்லாம் எனக்கு எப்போதும் ஒரு உற்சாகம் பூரிக்கும்... காரணம் மென்மையாக கதை சொல்லிய முறை... காதலுக்கு பூம் என்று ஒரு சவுன்ட் கொடுத்தது...

மென்மையாக இயல்பாக கதை சொல்லும் இயக்குனர் ஒரு திரில்லர் படத்தை இயக்குகின்றார் என்றால் உங்களுக்கு அந்த படைப்பின்  மீது இயல்பாகவே ஒரு எதிர்பார்ப்பு வரும் இல்லையா-?  எனக்கும் இந்த படத்தை  பார்க்க வேண்டும் என்ற ஆசை இயல்பாய் எழுந்தது..


DUSKA-2007 உலகசினிமா/டச்சு/நெதர்லேன்ட்/சனியன் பனியனுக்குள் வந்த கதை..சனியன் சகடை நம்ம பனியனுக்குள்ள போவதை யாராலும் தடுக்க முடியாது. விதி அப்படித்ததான் இருந்திச்சின்னா அதை யாராலும் மாற்றமுடியாது என்பதே உண்மை.

நாம் சும்மாதான் சிவனேன்னு இருப்போம் அதுவா வந்து நம்ம மேல ஏறி உக்காந்துகிட்டு இல்லாத ஆட்டம் எல்லாம் போடும் ...சின்னவயசுல கன்னித்தீவு கதையை தந்தியில் தினமும் படிச்சேன்.. அதுல ஒரு சம்பவம் இன்னமும் என் நினைவில் இருக்கு...

சிந்துபாத் ஒரு தீவுல நடந்து போயிகிட்டே இருப்பான்... அந்த தீவுல ஒரு ஆறு ஓடும்... அந்த இடத்தில் ஒரே ஒரு ஆள் நடக்ககமுடியாம உட்கார்ந்துகிட்டு இருப்பான் என்னை ஆத்துக்கு அந்த பக்கம் அழைச்சிக்கினு போய்விடேன்னு கெஞ்சி கேட்டுக்குவான்..

(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/5

நண்பர் ஒருவர் ஒரு மெயில் அனுப்பி இருந்தார் வேலை வாய்ப்பு செய்திகளில் வரும் பல செய்திகள் பொய்யானவை  என்று சொல்லிவிட்டு சில உதாரணங்களை அனுப்பி இருந்தார்.. படித்ததும் பகீர் என்று இருந்தது.. அதனால் வேலை வாய்ப்பு செய்தி அனுப்புகின்றவர்கள்.. தங்களை பற்றிய முழு விபரங்கள் அளிக்க வேண்டுகின்றேன். தம்பி ரோஸ்விக் அனுப்பி இருக்கும் இந்த செய்திகள் சிலருக்கு உபயோகமாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது...

சஞ்சய் காந்தி திருமணம்...பதிவுலக நண்பர்களோடு சந்திப்பு..சஞ்சய்காந்தி யார்-?எனக்கு தெரிந்து தமிழ் பிளாக்கர் போரம் ஆரம்பித்த போது அதில் வந்து கும்மி அடிக்கும் போது அந்த பெயரை நான் கவனித்து இருக்கின்றேன்.

அதன்பிறகு  சஞ்சய் திருமண இன்விடேஷன் வந்த போது வாழ்த்து சொன்னேன்...கேபிள் பஸ்சில் நான்  பேசும் போது,அண்ணே அவசியம் வந்துடுங்க என்று சஞ்சய்   அழைத்த போது திருமணத்துக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தேன்...


பட்டர்பிளை சூர்யா  ஞாயிறு காலை ரயிலில் மொரப்பூரில் நடக்கும் சஞ்சய் கல்யாணத்துக்கு போக டிக்கெட் புக் செய்கின்றேன் என்று சொன்ன போது அண்ணன் உதா ஜகா வாங்கினார்..

வெள்ளிக்கிழமை காலையில் மணிஜி.. ஜாக்கி கார்ல இடம் இருக்கு வரியா? என்று கேட்க.. நான் அன்று நண்பர் ஒருவருக்கு சில போட்டோக்கள் எடுத்து தரேன் என்று வாக்கு கொடுத்து இருந்தேன் அதனால் என்னால் வர இயலவில்லை என்று சொன்னேன்.

13மணி/46நிமிடம் 45 நொடிகள் தாமதமாக மினி சா.வெ/ நான்.வெ -ஞாயிறு(20/02/2011)

அல்பம்..

30 சட்டசபை சீட், ஒரு ராஜ்யசபா சீட்  பா.ம.க.வுக்கு கொடுத்ததில் தெரிகின்றது .. கலைஞரின்  பயம்...அதிமுகவிடம், நடிகர். கார்த்திக் பத்து சீட் தனது கட்சிக்கு வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கின்றார். காங்கிரசும், திமுகவும் தொகுதிப் பங்கீடு பற்றி பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். தே.மு.தி.க.வுக்கு எத்தனை சீட் என்று இன்னமும் தெரியவில்லை.. பார்ப்போம்.
==========

பாராளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாடளுமன்ற கூட்டுக்குழு தேவை என்பதை வலியுறுத்திய எதிர்கட்சிகளின் கோரிக்கை ஏற்கப்பட்டு விட்டது. டெல்லியில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுத்துள்ளார்கள்.  போன குளிர் கால கூட்டத்தொடர் முழுவதும் அவை முடங்கியது.. இன்று ஒத்துக்கொண்ட ஆளும்கட்சி அன்றே ஒத்துக்கொண்டு இருந்தால், அவை நடந்து இருக்கும் .. ஏதாவது நல்ல காரியம் இரண்டு அல்லது மூன்றாவது நடந்து இருக்கும்.......

=======================
செல்போனில் பேசியபடி சென்னை சைதாப்பேட்டையில் ரயில்வே டிராக்கை கிராஸ் செய்த பெண் ரயில் மோதி பலி.. அடுத்த மாதத்தில் அந்த பெண்ணுக்கு திருமணம். ஒரு தனியார் சேனலில் எடிட்டராக வேலை செய்கின்றார்... செல்போன் பேசிய படி டிராக் கடப்பது இப்போ  சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது.. இது பற்றி நான் விரிவாக  ஒரு பதிவு எழுதி இருந்தேன். ரயில் டிராக்கை பாதுகாப்பாக கடப்பது நமது பொறுப்பு என்பதை நாம் எப்போது உணரப் போகின்றோம்.???
===================

நடுநிசி நாய்கள்..தமிழில் சென்டிமெண்ட் இலக்கணம் உடைத்த படம்.இந்திய அளவில் உறவுக்குள்  ஒரு பிம்பம் இருக்கின்றது.. அப்பா அப்படி செய்யமாட்டார்...,அண்ணன் அப்படி செய்யமாட்டான், அம்மா அப்படி செய்யமாட்டார், தங்கை அப்படி செய்யமாட்டார், என்மகள் அப்படி செய்வே மாட்டார்... இந்த மாட்டர்கதை  இந்தியாவில் அதுவும் தமிழகத்தில் இங்கு பிரபலம்...புனித பிம்பங்களில் இருப்பவர்கள் எதையும் செய்யமாட்டார்கள் என்ற நம்பிக்கையைதான் இன்னும் பொது மக்கள்  நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஆனால்அடிப்படையில் அவர்கள் மனிதர்கள்...மனிதன் ஒரு கூடிவாழும் விலங்கு என்பதை அவ்வப்போது மறந்து விடுகின்றோம்...


நாம் விலங்கா என்றால் ஆம்.. இதை எழுதுபவனும் படிப்பவனும் அடிப்படையில் விலங்குகள்தான்.. எல்லோரும் மனிதர்கள்.. கடவுள் யாரும் இல்லை.. அப்படி பட்ட சூழ்நிலைககளால் விலங்குநிலைக்கு தள்ளபட்ட மனிதனின் வாழ்வை இந்த படத்தில் பதியைவைத்து இருக்கின்றார்.இயக்குனர் கவுதம்..

என்னோடு பயணித்த காதலர்கள்.


லாகர்தம்மாக டிக்கெட் புக் செய்து பயணப்படுவது என்பது எனக்கு இன்னும் கைவரவில்லை.  ஒரு வேளை, மூன்று மணி நேரத்தில் எனது சொந்த ஊருக்கு போய் விடலாம் என்ற அலட்சியம் கூட காரணமாக இருக்கலாம்.

பெங்களுருவில் இருந்து சென்னைக்கு போக தாவது டிக்கெட் புக் செய்து வைத்து இருக்கின்றீர்களா? என்று  பெங்களுர் நண்பர்கள் கேட்ட போது இல்லை. அப்படி ஒரு பழக்கமே என்னிடத்தில் இல்லை என்றேன்.


கடந்த செவ்வாய் இரவு பதினோரு மணிக்கு மடிவாலா பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டு இருந்தேன். கர்நாடக அரசின் ராஜஹம்சா பேருந்து வந்து நின்றது. அதில் ஏறினேன்.

17 மணி நேரம் தாமதமாக சா.வெ/நான்.வெ..(புதன் 16/02/2011).நிறைய  முறை மீனவர்கள் கைதாகி இருக்கிறார்கள்..  சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.அப்போதெல்லாம் கண்ணம்மா கம்னுகிட! என்பது போல இருந்து விட்டு, தலைவரின் பெண் நேற்று  இலங்கை ராணுவத்தின் அத்து மீறலைக் கண்டித்து, காலையில்  போராடி, ஜன்னல் ஓர போலீஸ்  வாகனத்தில் உட்கார்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு, சாயந்திரம்  ஆபீஸ் முடிந்து வீட்டுக்கு வருவது போல கனிமொழி வந்து இருப்பது, படித்தவர்கள் மத்தியிலேயே அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. எலெக்சன் வரும் வரை  இன்னும் நிறைய நாடகங்களைக் காண தமிழக மக்கள் காத்து இருக்கின்றார்கள்.
======================


திரும்பவும் ஒரு பள்ளிமாணவி தீக்குளித்து தற்கொலை..

 பாவம்  இந்த மாணவி காப்பியடிக்கவில்லை.. இந்த மாணவியை நிர்வான சோதனை செய்யவில்லை... திருடி என்று தலைமை ஆசிரியர் திட்டிவிட்டார்.. காரணம்.. தலைமை ஆசிரியர் பையில் வைத்து இருந்த ரூபாய் 500யை திருடி விட்டதாக ஆசிரியர் இந்த பெண்ணை திட்டஅவமானத்தால் இந்த பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கின்றார்... இது நான்கு நாளைக்கு முன் நடந்த கொடுமை  இது...தமிழகத்தின்  கடை கோடி கிராமங்களில் இருக்கும் பள்ளிகளில் இப்போதும் ஆசிரியர்களின் சைக்கிள்,டீவிஎஸ்50  போன்றவற்றை துடைத்து வைப்பது மாணவச்செல்வங்கள்தான்... அப்படி வாத்தியாரின் வாகனத்தை துடைத்து வைக்கும் பசங்களுக்கு ஆசிரியர்  லீடர் போல ஒரு பதவி கொடுத்து வைப்பார்... அவன்  கை காட்டும்  பசங்களுக்கு கேள்வி கேட்காமல் உதை விழும்... ஆசிரியருக்கு குளோசாக இருக்கு இது போலான  உதவிகள் ஆசிரியர்களுக்கு  செய்வது வழக்கம்


(JOB NEWS) வேலைவாய்ப்பு செய்திகள்.பகுதி/4

படித்தவர்களுக்கு மட்டும் இந்த தளம் அல்ல  நேர்மையாக  உழைக்க தயாராக இருக்கும் அத்தனை பேருக்கும் இந்த வேலைவாய்ப்பு செய்தி பயண்பட வேண்டும் . நன்றி மோகன் குமார் உங்கள் தகவலுக்கு மிக்கநன்றி

====================
 
 
 
அன்புள்ள ஜாக்கி,
 
நலமா? நான் மோகன் குமார் வீடுதிரும்பல் ப்ளாகின் பதிவர்.
  
சவேரா ஹோட்டல் எட்டாவது வரை படித்த இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு வழங்குகிறது. இது குறித்த தகவல் பின்வரும் மெயிலில் உள்ளது. தயவு செய்து இதனை தங்கள் ப்ளாகில் பகிரவும். நமது மற்ற சில நண்பர்களுக்கும் இதே கோரிக்கையை நான் அனுப்புகிறேன். எனினும் உங்களை போன்ற பிரபல ப்ளாகர்கள் பகிர்ந்தால் நிறைய பேரை போய் சேரும். அவசியம் பகிரவும்.
 
நன்றி
 
மோகன் குமார்
 

காதலர்தினம்...ஒரு பிளாஷ்பேக்...


எனக்கு நிறைய காதலிகள்...நிறைய பகிர்தல்கள்...மனதாலும், உடம்பாலும் நிறையவே கடந்து வந்து இருக்கின்றேன்.யாரையும் நம்பவைத்து கழுத்து அறுத்ததில்லை..நம்பிக்கை வார்த்தை கூறியதில்லை,பெண் நண்பிகள் நிறைய...அழகை ரசித்து இருக்கின்றேன்... நெருங்கிய பெண்களிடம் என் சூழ்நிலை சொல்லி  விலக்கி இருக்குன்றேன்...மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞாயிறு/13/02/2011


ஆல்பம்.

பெண்களூரில் நிறைய நேரம் இருப்பதால் கூகிள் பஸ் பக்கம் போகும் வாய்ப்பு வந்தது... போனதும் நிறைய பேர் ஜாலியாகப் பேசினார்கள். சிலர்  வாரினார்கள்.. அது தெரியாமல் இல்லை...ண்டா தம்பிகளா? உயர்வு நவிற்சி என்னன்னு தெரியாமையா நான் இங்க வந்து உட்கார்ந்து இருக்குறேன்?


எந்த கேள்வி என்னை வாரும் கேள்வி? எது என்னை தட்டிக்கொடுக்கும் கேள்வின்னு எனக்குத் தெரியாதா???  ஆனால்,  ஒன்று  எனக்கு புரிந்து போனது.... என்னை நக்கல் பண்ண பெரும்பான்மையோர் என் எழுத்துப் பிழைகளை கோடிட்டுக்  காட்டி இருந்தார்கள்.. சிலர் அதை நக்கல் விட்டு இருந்தார்கள்....அதே பஸ்ல சின்ன பாக்ஸ்ல நாலு வரி அடிச்சி அனுப்பறதுக்கே அத்தனை மிஸ்டேக்....நான் டெய்லி இரண்டு மணி நேரம் உட்கார்ந்து  டைப் செய்யறேன் ... எனக்கு டைப்பிங் தெரியாது.. கூகுள் டிரான்ஸ்லேட்டரில் நான் அடிக்கவில்லை...


GUCHA-2006 உலகசினிமா/செர்பியா/ இசைக்கும் காதலன் அவனை நேசிக்கும் காதலி.நம்ம ஊரில் ஊரே ஒரு நாதஸ்வர திருவிழாவை ஒரே இடதிதில்  கொண்டாட முடியுமா? எங்கு காணினும் நாதஸ்வரகாரர்கள், தவில்காரர்கள், மழிக்க பட்ட மீசை இல்லாத முகங்கள்..வெற்றிலைபோட்டு குதப்பும் வாய்கள்,தெய்வமகன் சிவாஜி வைத்து இருந்த ஹேர்ஸ்டைலை இன்னமும் பாலோ செய்து கொண்டு இருப்பவர்கள்.

பட்டு வேட்டி சில்க் ஜிப்பா என்று ஊரே நாதஸ்வர திருவிழாவை கொண்டடி இருக்கின்றதா? இல்லை... சரி பறையடிப்பவர்கள் தப்புக்கொட்டுபவர்கள் ஒரு நான் தமிழகத்தில் இருந்து ஒரே இடத்தில் கூட தாங்கள் அனுதினமும் வாசிக்கும் இசையை கொண்டாடி இருக்கின்றார்களா?பெங்களூர் ஷக்கிலா ச்சே டக்கிலா..
அறிவிப்பு....

குடி நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.......

வாழ்வில் சில விஷயங்களை எளிதில் மறந்து விட முடிவதில்லை.. எனக்கு இன்னமும் நினைவில் இருக்கின்றது.. நான் முதன் முறையாக பியர் எங்கே குடித்தேன் என்று.. கடலூர் பாண்டி பார்டரில் இருக்கும் கன்னியக்கோவில் கென்னடி ஒயின்சில் 10ம் வகுப்பு படித்து விட்டு ஒரு வீடியோ கடையில் வேலை செய்த போது நான் மற்றும் ஸ்ரீகாந் என்ற நண்பரும் அவருடைய நண்பருமாக சேர்ந்து குடித்தது நன்றாக ஞாபகம் இருக்கின்றது...


சன்டிவி முன்னனியில் ஏன் இருக்கின்றது ?


நிறைய சிரியல்களில் வேலை செய்து இருந்தாலும் .. நான்  சீரியல் பார்க்கமாட்டேன்.எப்போதுவது சேனலை மாற்றிக்கொண்டு வரும் போது நாதஸ்வரம் சீரியல் வந்தால்  கொஞ்சநேரம் வைத்து பார்ப்பேன். காரணம் அந்த தொடரில் சில காட்சிகள்.. சில டயலாக்குகள் நன்றாக இருக்கும்.


சேனல்களில் நான் விரும்பி பார்ப்பது டிஸ்கவரி சேனல்தான்...அப்புறம் மூவிஸ்நவ்... ஆனால் பெங்களூரில்  லுமியர்மூவிஸ் மற்றும் வேர்ல்டு சினிமா தெரிகின்றது கொடுத்த வைத்தவர்கள்... நல்ல நல்ல உலகபடங்கள் போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. நேற்று கூட கிம்கிடுக்கின் பிரீத் படம் ஒளிபரப்பானது... பார்க்க கொடுத்து வைக்கவில்லை.... எந்த நேரமும் சீரியல்தான் ஓடிக்கொண்டு இருக்கின்றது....நிறைய வீடுகளில் அததான் நிலைமை...பாவத்தின் சம்பளம் மட்டும் மரணம் அல்ல.. ஏழையாய் பிறப்பதும் கூட...


அந்த ஆசிரியர்கள்  வாரத்தின் தொடக்கத்தில் கூட  அப்படி நடக்கும் என்று யோசித்து இருக்கமாட்டார்கள்... போலிஸ்காரர் இருக்கும் பக்கம் தலைவைத்து கூட படுத்து இருக்கமாட்டார்கள்.. மகாநதி படம் பார்த்து விட்டு சிறையில் இவ்வளவு கொடுமைகள் நடுக்குமா? ஜென்மத்துக்கு சிறைபக்கம் போகவே கூடாது, அந்த பக்கம் தலைவைத்து படுக்க கூட கூடாது என்று வைராக்கியமாக  வாழ்ந்து இருக்க வேண்டும்.....


( job news)வேலைவாய்ப்பு செய்திகள்.. பகுதி...3

நான் பெங்களூரில்  இருக்கின்றேன் நான் இத்தனையாவது படித்து இருக்கின்றேன் எனக்கு  வேலை வேண்டும் என்று வாங்கி தாருங்கள் என்று அனுப்பும் கடிதங்களை தவிர்த்து விடுங்கள்...என்னால் வேலை வாங்கித்தர முடியாது..நான் வேலை வாய்ப்பு அலுவலகம் வைத்த நடத்தவில்லை என்பதை நண்பர்கள் புரிந்து கொள்ளுங்கள்..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18பிளஸ் புதன் (09/02/2011)

ஆல்பம்

உத்ரபிரதேச முதல் மந்திரி மாயாவதி செருப்பை துடைத்து விட்ட அதிகாரி மேல் பரிதாபம்தான் வருகின்றது.. உடம்பு முடியவில்லை என்று மனைவி எவ்வளவோ சொல்லியும் ஒரு கிளாஸ் தண்ணி எடுத்து வந்து கொடுக்க கூட ரொம்பவும் யோசித்து இருக்கவேண்டும்....
==============


பெண்களூர்....


காலையில் பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் பிடிக்க   ரொம்ப நாளைக்கு அப்புறம் நானும் என மனைவியும் திருடா திருடா எஸ்பி பாலசுப்ரமணியம் வெக்கேஷனுக்கு டிரைன் பிடிக்க   போவது போல்  அவசர அவசரமா நாங்கள் நடந்து போனோம்.. 

சோம்பல் முறித்து தனது வழக்கமான வேலைக்கு ரொம்ப ஸ்லோவாக கிளம்பி வந்து கொண்டு இருந்தது.. புதுபெண்ணை மணவறைக்கு அழைந்து வருவது போல  ஒரு இன்ஜின் தூக்க கலக்கத்தோடு  மெல்ல அழைத்துக்கொண்டு வந்தது.


Twice a women-2010 உலகசினிமா/கனடா/உதைக்கும் கணவன் உயிர் பிழைக்க ஓடும் மனைவி..
சில பெண்களை பார்த்து இருக்கின்றேன். சக்கையாக புருசன் போட்டு உதைத்தாலும் அவனை விட்டு போகாமல் அவனோடு குடும்பம் நடத்தி வாழ்க்கையை தொலைப்பவர்கள் நிறைய பேர்...


Somersalt -2004/உலகசினிமா/ஆஸ்திரேலியா(பதினெட்டுபிளஸ்)வயதுப்பெண்ணின் குட்டிக்கரண வாழ்க்கை
குட்டிக்கரணம் போடுவது எல்லோராலும் முடியாது.... நாம் அனைவருமே நம் சிறுவயதில் குட்டிக்கரணம் அடித்து இருக்கின்றோம். ஆனால் சம்மர் சால்ட் என்பது என்ன தெரியுமா? தரையில் உடலோ அல்லது தலையோ படாமல் அடிப்பது... ஜின்ஸ் படத்தில் கூட கொலம்பஸ் பாடலுக்கு பிரசாந்த் தரையில் தலை படாமல் கடல் ஓரம் டைவ் அடிப்பாரே.. அதேதான்.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்/பதினெட்டு பிளஸ்/ ஞாயிறு(06/02/2011)

ஆல்பம்..


எதுவந்தாலும் எதுவும் அழிச்சிபோயிடபோறதில்லை ரசிக்கும் ஆட்கள் இருக்கும் வரை அது எதாவது ஒரு வடிவத்தில் மக்களிடம் செல்வாக்கு பெற்றுக்கொண்டுதான் இருக்கும்..பிளாக் வந்தபிறகு பேஸ்புக் வந்ததது.. அதுக்கு பிறகு டுவிட்டர் வந்துச்சி.. ஆனா எதுவும் அழிஞ்சி போயிடலை..மக்கள் தங்களுக்கு எது சௌகர்யமோ அதை தேர்ந்து எடுத்துக்கொண்டார்கள்.... ஆனால் 2006ல் பிளாக்கில் எழுதிய அளவுக்கு 2010ல் பிளாக் எழுதும் அளவு குறைந்து இருப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா கருத்து தெரிவித்து இருக்கின்றது...ஆனால் தமிழ் வலைபதிவுகள் முன்னைகாட்டிலும் அதிக மக்களிடம் சென்று  சேர்கின்றது.. அதே போல நிறைய புது நண்பர்கள் எழுத ஆரம்பித்து இருக்கின்றார்கள்.. என்பது தமிழ் வலைக்கு ஒரு பெரிய பலம் என்று  சொல்லிக்கொள்ளலாம்.
============================

(thief of hearts-1984) 17+ ஒரு அமெரிக்க களவானியின் காதல்.
சென்னையில் ஸ்பென்சர் பின்பக்கம் இருக்கும் ஒரு பைவ் ஸ்டார் ஒட்டலுக்கு ஒருவன் தன் மனைவியுடன் செல்லுகின்றான்.. அவன் பெயரை எளிதில் நினைவில் வைக்க அவக் பெயரை குமார் என்று வைத்துக்கொள்ளுங்கள்.. ஒட்டலில் காரை பார்க் பண்ணும் இடத்தில் என்ன குமார் சார் ரொம்ப சந்தோஷமா இருக்கிங்க? என்று செக்யூரிட்டி கேட்க இன்னைக்கு எங்க ரெண்டு பேருக்கு கல்யாணநாள் என்று சொல்லி விட்டு ஹோட்டலுக்கு போய் விடுகின்றான்..job news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி..2)

அன்பின் நண்பர்களுக்கு...  உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி.. ஒரு வாராத்துக்கு பிறகான நேர்முகம் என்றால்  பிளாக் படித்து விட்டு செல்ல வசதியாக இருக்கும்... நானும் ரெண்டு மூன்று சேர்த்தே போடும் கட்டாயத்தில் இருக்கின்றேன்.. அதனால் ஒப்பனிங் இருப்பதை ஒரு வாரத்துக்கு முன்னே மெயில் அனுப்பினால் அதனை பப்ளிஷ் பண்ண வசதியாய் இருக்கும்....பகிர்வுக்கு நன்றி....

(yaddham sei..2011) யுத்தம் செய்... மிஷ்கினின் அசத்தல்....சென்ற குடியரசு தின விழா விஜய் டிவி யுத்தம் செய் படத்தை பற்றிய  சிறப்பு நிகழ்ச்சியில் நான் கேட்ட கேள்விகள் ஒளிபரப்பாயின அதில் இந்த படத்தை பற்றிய உங்கள் எதிர்பார்ப்பு என்ன என்று கேட்டார்கள்..மென்மையாக கதை சொல்லும் சேரனும் மிக ராவாக கதை சொல்லும் மிஷ்கினும் இணைந்தால் அந்த படம் நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும் என்றேன்.. அதுக்கு மிஷ்கின் மிகச்சரியாக சொன்னார்.. நான்  ஒரு ராவான ஆள்தான் என்றார்..அதை இந்த படத்திலும் நிருபித்து இருக்கின்றார்....


ஒரு இயக்குனர் தனது படத்தை எடுத்து விட்டு அந்த படத்தில் எதாவது ஒரு இடத்தில் தனது பெயர் வருவதையோ விரும்புவார்.. ஆனால் இந்த படத்தில் தனது பெயர் எந்த இடத்திலும் வராமல் பார்த்துக்கொண்டு  இருக்கின்றார்...முதல் முறையாக  டைட்டிலில் பெயர் போடாமல் இருக்கின்றார்...ஒரு தமிழ் இயக்குனர்....மிஷ்கின்... யுத்தம் செய் படத்தை பற்றி பேசும் போது எனது பெயர் பேசபட்டால் போதும்  என்று நினைத்து இருக்கலாம்... எது எப்படி இருந்தாலும் இதுவும் புது முயற்சிதான்.


Ultimate Heist-2009/ பிரான்ஸ்/கொள்ளை தொழில் குடும்ப தொழில்...


சென்னையில் நேற்று கூட பார்த்தேன்... அடையாறு பஸ் டிப்போகிட்ட அதாவது அம்பிகா அப்பளத்துகிட்டு இருந்து அந்த கார் ஜுயிங்னு செம பாஸ்ட்டா பறந்து வந்துச்சு.. எல்லாரும் கிளிபிடிச்சு நகர்ந்து வழி விட்டாங்க... இதுல கொடுமை என்னன்னா? அந்த கார்ல இரண்டே பேர்தான் உட்கார முடியும்... அது ஒரு பாரின் கார்.. ஒயிட் கலர்... நம்பர் கூட 5ன்னு நினைக்கின்றேன்.. சரியா நினைவு இல்லை... அப்ப என்  பைக்குக்கு பக்கத்துலேயே ஒரு  ஆண்ட்டி ரொம்ப ஸ்டைலா அக்டிவாவுல போனாங்க.. அதனால் நம்பர் சரியா நினைவு இல்லை..

இப்ப பெட்ரோல் லிட்டர் 64ரூபாய்.. ஒரு லிட்டருக்கு அந்த கார்  மிஞ்சி போனா லிட்ருக்கும் நாலு கிலோமீட்டர் கொடுப்பதே பெரிய விஷயம்.. ஆனால் அந்த கார் சென்னைக்கு புதுசு..வெள்ளைக்கலர் நீங்க கூட அதை எங்கயாவது பார்த்து இருக்கலாம்.. அனா அந்த காரை  ஓட்டும் அளவுக்கு சென்னை சாலைகள் வேலைக்கு அகாது...லாங் வேண்டுமானால் எடுத்துகிட்டு போகலாம்... சென்னையில் இருந்து பெங்களுருக்கு இரண்டு மணி நேரத்தில் போய் விடலாம்...

அந்த கார் யாரோ ஒரு பிரபல நடிகர் காருன்னு கேள்வி நமக்கு சரியா தெரியலை...  பட் அந்த விலை உயர்ந்த காரை  செம் பாஸ்ட் ஓட்டிகிட்டு வர்ரிங்க..... பெட்ரோல் போடனும்.... பின்னாலேயே இன்னோரு கார் அதே போல இரண்டு பேர் மட்டும் உட்காரும் கார்... அதுவும் செம பாஸ்ட்டா வருது... அதுல இரண்டு பேர் உட்கார்ந்து இருக்காங்க.. பின்னாடி வந்த காரில் இருந்த இரண்டு பேரில் ஒருத்தன் லூவுக்காக டாய்லட் போகின்றான்..அவன் போனதும் பெட்ரோல் போடும் காரை லேசாக இடித்து விட வண்டி ஓனர் வெளியே வந்து எப்படி என் காரை இடிக்காலம்? என்று சத்தம் போடும் போது டாய்லட் போனவன்  நைசா  முன்னாடி இருந்த காரில் ஏறி வண்டியை எடுத்துகிட்ட சிட்டா பறக்க... என் காரு என்று  கத்த வாயை திறப்பதற்குள் பின்னாடி இடித்தக்காரும் சிட்டாக பறந்து விட்டால் எப்படி இருக்கும் வாயிலும் வயிற்றிலும்அடித்துக்கொள்ள தோனாது...? தோனும் அது சென்னையா இருந்தா... அது பிரான்ஸ் அதனால் அப்படி அடித்துக்கொள்ளவில்லை.....இப்படித்தான் இந்த பிரெஞ் படம் தொடங்குது..

Ultimate Heist-2009(Le Premier Cercle) படத்தின் கதை என்ன?

1915ல் டர்கிஷ் இராணுவம்  ஆர்மினிய மக்களை இனப்படுகொலை செய்கின்றது... ஒரு ஆயிரம் பேர் அந்த இனப்படுகொலையில் இருந்து தப்பிக்க கப்பல் மூலம் பிரான்சுக்கு அகதிகளாக வருகின்றார்கள்... அதில் பல குடும்பங்கள் சோத்துக்கு கஷ்டமான வேலைகளில் ஈடுபட்டு  தனது வாழ்வை வாழ்கின்றார்கள்.. ஆனால் சில  ஆர்மினியன் அகதிகள் அப்படி வாழவில்லை... அப்ப சோத்துக்கு ?? குட் கொஸ்ட்டின்...ரொம்ப சிம்பிள்... திருடுவதுதான்.. குடும்ப தொழிலாக இருக்கின்றது... அப்படி குடும்பமே சேர்ந்து தண்ணி அடிப்பது போல திருடும்  குடும்பத்தை பற்றிய கதை இது...

இந்த மாதிரி திருடும் பேமலிக்கு பேர் மாவாக்கைன்னு பேரு... மிலோ(ஜேன் ரினோ)  இரண்டு பிள்ளைகளுக்கு தகப்பன்.. பெரிய பையனை ஒரு திருட்டு சம்பவத்தில் இழந்து விடுகின்றான்.. இரண்டாவது பையனை வைத்துக்கொண்டு கார் திருடுவதில் இருந்து சகல திருட்டும் செய்கின்றான். இப்படியே லைப்போய்கிட்டே இருந்த டுவிஸ்ட் வேனாம்... மிலோ அம்மாவுக்கு உடம்பு சரியில்லை அந்த அம்மாவ கவனிச்சிக்க வரும்  நர்ஸ்பெண்ணை மிலோ வோட இரண்டாவது பையன் ஆன்டன் உசார் பண்ணிடுறான். உசார்னா? லட்டர், கிஸ்ன்னு மட்டும் இல்லை.. பிரெக்லர் கார்டு வாங்கும் அளவுக்கு வச்சிடுறான்..படுக்கும் போது அவன் யார் என்ன? அவன் தொழில் என்னன்னு  சரியா தெரிஞ்சிக்கறது இல்லை.... பட் புள்ள வரும் போது யாருன்னு விசாரிச்சா  ஆன்டன் மற்றும் அவன் குடும்பமே திருட்டுக்குடும்பம்ன்னு தெரியுது.. போலிஸ் வலை விரிக்குது... இரண்டு கொள்ளை சம்பவங்கள் நடந்தால் காவல் துறை கொஞ்சுமா?- ஆனா எவிடேன்ஸ் இல்லாம தவிக்குது...நர்ஸ் காதல் பிடிக்காத மிலோ தன் மருமகளை கொலை செய்ய சொல்லறான்... ஆனா அதில் இருந்து தப்பித்து தன் பொண்டாட்டியை கொலை செய்ய சொன்னவனே தான் அப்பான்னு தெரிஞ்சிகிட்ட இரண்டாவது பையன் அப்பாவை போட்டுத் தள்ளும் முடிவுக்கு வரான்... அந்த நேரம் பார்த்து  பிளைட்டில் ஏறும் ஐந்து மில்லியன்  யூரோக்களை கொள்ளை  அடிக்க  வீடு கட்ட பிளான் போடுவது போல் திட்டம் போட்டு இருக்கும் போது.. அந்த கொள்ளையில் இரண்டாவது மக்ன் ஆன்டன் ஈடுபடுகின்றான்.. காரணம் அவனுக்கும் பணம் வேனுமில்லை. கொள்ளை அடிச்சாங்களா? மருமகள் என்ன ஆனாள்-? அப்பாவை சுட்டானா? என்பதை  வெண்திரையில் பாருங்கள்.


படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

ஜென் ரினோ இந்த படத்தில்  ரொம்ப அமைதியான டான் கதாபாத்திரம்...  ரொம்ப அமைதியா நடிச்சி இருக்கார்...ஆனா இவருக்கும் இந்த மாதிரி படங்கள் அல்வா சாப்பிடுவது போல..

இரண்டாவது பையான ஆன்டன் கேரக்டரில் நடித்து இருக்கும் அந்த பையன் கிட்ட ஒரு பெரிய ஸ்மார்ட்நஸ்  இல்லை என்பது குறைதான்..

அந்த நர்ஸ் கேரக்டர் பெண்ணேடு திடிர்ன்னு ஒரு படுக்கை சீன் சரிஆர்வமா  பார்க்க ஆரம்பிக்கும் முன்  அந்த பெண்ணுக்கு மார்பு தெரிவதோடு  அந்த சீங்ன கட் செய்து விடுகின்றார்கள்... அந்த பெண் உடலில் நிறைய மச்சம் வேறு....டிரைலர் பாருங்கள்.

இந்த படத்தோட பெரிய பிளஸ் போட்டோகிராபி.. முக்கியமா அந்த கார் சேசிங் காட்சிகள்... ஆங்கிள்ஸ் என அச்த்தலாய் இருக்கும்.

ஒரு கேங் ஸ்டார் படம் பெரிய துப்பாக்கி வெடித்தல் பெரிய  வன்முறைன்னு
எதுவும் இல்லை. ஆனால் விறு விறுப்பு இல்லாமல் இல்லை.. அந்நத லாஸ்ட் பிளைட் கொள்ளை சம்பவம் கொஞ்சம் தான்.

பட் அந்த கிளைமாக்ஸ் நெகிழ்ச்சி..

படத்தின் டிரைலர்..படக்குழுவினர் விபரம்.


Directed by     Laurent Tuel
Produced by     Alain Terzian
Christine Gozlan
Written by     Laurent Tuel
Laurent Turner
Simon Moutaïrou
Starring     Jean Reno
Gaspard Ulliel
Vahina Giocante
Sami Bouajila
Music by     Alain Kremski
Cinematography     Laurent Machuel
Editing by     Marion Monestier
Studio     Alter Films
Thelma Films
TF1 International
TF1 Films Production
Medusa Film
Distributed by     TFM Distribution (FR)
Hollywood Classic Entertainment (CZ)
Release date(s)     March 4, 2009 (2009-03-04)
Running time     94 minutes
Country     France
Language     French
Armenian
Budget     €15,000,000
$19,500,000 (approx.)
Gross revenue     $2,226,117

பைனல்கிக்...

இந்த படத்தை பார்க்கவேண்டியபடங்களில் என்னால் சொல்ல முடியவில்லை ரொம்ப ஸ்லோவாக நகரும் திரைக்கதை... ஆனால் ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம்.. காந்தி ஜெயந்தியின் போது சரக்கை வாங்கி வர போன  நண்பன் வேகு நேரம் ஆகியும் வராமல் இருக்கும் போது அந்த நேர இடைவெளியை குறைக்க இந்த படத்தை பார்த்து வைக்கலாம்..இந்த படம் டைம்பாஸ்படம்..
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்...


குறிப்பு..
 
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 
 
 
 
 

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+ புதன்(02/02/2011)

ஆல்பம்..

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா  இன்று கைது செய்யப்பட்டார்.   நேற்று முன்தினம் விசாரிக்கப் பட்டு இன்று சிபிஐ அவரை  கைது செய்து இருக்கின்றது... ராஜாவின் அண்ணன் மற்றும் இரண்டு அதிகாரிகளையும் சேர்த்து கைது வைபவத்தை செய்து இருக்கின்றது சிபிஐ.. செய்தியின் விவரத்தை சன் சொல்கின்றது.. கலைஞர் மவுனம் காக்கின்றது..அவரின் சொந்த ஊரில் வழக்கம் போல அரசு பேருந்துகள் நாசம் செய்யப்பட்டன.
==============

job news- வேலைவாய்ப்பு செய்திகள்.(பகுதி1)

எதாவது ஒப்பனிங் இருந்தால் சொல்லுங்கள் என்று சொன்ன வரிகளுக்கு மதிப்பு கொடுத்து  சில கம்பெனி ஓப்பனிங் விஷயங்கள் மெயிலில் வந்து இருக்கின்றன.. சரி அதனை  சாண்ட்வெஜ்ல் போட்டால் அது ரொம்ப பெரிய பதிவாக போய் விடும் என்பதால் இதுக்கு தனியாக ஒரு பதிவு போட முடிவு எடுத்தேன்...


மறக்கமுடியாத பிறந்தநாள் பரிசு....

சின்ன வயதில் அப்பா எங்கள் ஐவருக்கும் பிறந்தநாள் தினம் என்றால் கூடைகேக் ஒரு பத்து  வாங்கி வந்து காலையில் குளித்து விட்டு வந்ததும் அந்த கூடைகேக்குகளை வாய்முழுவதும் கொள்ளாத சந்தோஷத்தோடு  தின்று மகிழ்ந்த நினைவுகள் எனக்கு நினைவுக்கு வருகின்றன...
(சிறுவயதில் பூப்போட்ட சட்டையோடு)
காலையில் எழுந்ததும் எனது அம்மா என்னை குளித்து விட்டு கோவிலுக்கு போக வற்புறுத்துவாள் கோவிலுக்கு போவதே எனக்கு  அபத்தமாக இருந்து இருக்கின்றது...திடிர் என்று காலையில் கோவிலுக்கு போய் சேவித்து விட்டு வருவது என்னவோ போல் இருக்கும்.Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner