Wednesday, September 29, 2010

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/29•09•2010)

ஆல்பம்..
நாளை சர்ச்சைகுறிய நிலத்தின் மீதான தீர்ப்பு வர போகின்றது. இந்த தீர்ப்பு வரும் காரணத்தால்தான் எந்திரன் பட ரிலிசையும் தள்ளி வைத்தது சன்பிக்சர்ஸ். நாளை தீர்ப்பு வர போகின்றது.. மத்திய அரசு அனைத்து மொழி பத்திரிக்கைகளிலும் அமைதி  காக்க வேண்டும் என்று கெஞ்சிகொண்டு இருக்கின்றது. என்னை பொறுத்தவரை அந்த சர்ச்சைக்குறிய நிலத்தின் தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும்… அந்த இடத்தை மத்திய அரசின் தடை செய்யபட்ட இடமாக அறிவிக்க வேண்டும். யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்வதுதான் எனக்கு தெரிந்து சரி என்று படுகின்றது.


அந்த இடத்தில் ராமரோ,அல்லவோ எனக்கு கோவில் வேண்டும் என்று கேட்கவில்லை. காலமாற்றத்தின் காரணமாக முகல் சாம்ராஜ்யம் இந்தியாவில் கோலேச்சியது.  பழையதை எப்படி எடுத்து பார்த்தாலும் பிரச்சனைதான் வரும். நாளை மாலை 3,30க்கு தீர்ப்பு சொல்லபடும் என்று அறிவிக்கபட்டு இருக்கின்றது. நல்லவேளை காலண்டு தேர்வு முடிந்து பள்ளிக்குழந்தைகளுக்கு விடுமுறை விடபட்டு இருக்கின்றது.
=====================
ஒரு வராலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வந்து விட்டது. அது தூத்துக்குடி ஸ்டேர்லைட் ஆலையை முடச்சொல்லிவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்… இந்த ஆலையினால் ஏற்படும் பாதிப்புகளை தொடர்ந்து வலியூறுத்தி வந்தவர் மதிமுக பொது செயலாளர் வைகோ.. தமிழ்நாட்டில் இந்த ஆலை தொடங்க சட்டத்தினை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று  உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்து இருக்கின்றது. அப்படின்னா என்னங்கன்னா????
==================
இன்றிலிருந்து  இந்தியா எங்கும் அனைத்து மக்களுக்கும் தேசிய அடையாள அட்டை கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு துவக்கி வைக்கின்றது. பார்ப்போம் அது நம் கைகளில் எப்போது வருகின்றது என்று???
அனால் ஒரு சந்தேகம் மத்திய அரசு தமிக மீனவ்ர்களுக்கு கொடுக்கும் அடையாள அட்டை இந்திய குடிமகன் என்று குறிப்பிட்டு இருக்குமா? அல்லது தமிழக மீனவன் என்று குறிப்பிட்டு இருக்குமா? ஆஸ்திரேலியாவில் இந்தியனுக்கு உதை கொடுத்தால் லபோ திபோ என்று மீடியாக்களும்,மத்திய அரசும் அலறிதுடிக்கின்றது. தமிழக மீனவன் இலங்கை கடற்படை உதைத்தால், சாகடித்தால் கேட்கநாதியல்லை. பணம் ஸ்டேட்டஸ் ரொம்ப முக்கியம். தட்டிகேட்கவும் கண்டனம் தெரிவிக்கவும்.
=====================
மிக்சர்..
வட நாட்டுல இருந்து குடும்பத்தோட ரமேஸ்வரத்துக்கு ரயிலில் வந்த முதிய பெண்மணி , ரயில் பாம்பன் பாலத்து மேல போகும் போது பாத்ரும் போக டாய்லட் கதவை திற்ப்பதுக்கு பதில் மெயின்டோரை திறந்து கடலில் விழுந்து விட்டார்கள். அப்புறம் போலிசுக்கு தகவல் கொடுத்து அவுங்க போய் கடலில் தேடினால் பக்கத்துல ஒரு பாறையில கோழி குஞ்சு போல நடிங்கிக்குனு உட்கார்ந்து இருந்தாங்களாம். முதலில் இந்த செய்தியை படித்த போது எனக்கு  செம சிரிப்பு. ஆனா பாட்டி உயிரு பாருங்க. செம கெட்டி.
=================
 நன்றிகள்.
ராஜராஜசோழன் ஆயிரமாவது ஆண்டு விழாவில் எந்த இடத்திலும் உடன்பிறப்புகள் திமுக கொடி, பேனர், என்று  எதையும் வைக்காமல் ராஜராஜனுக்கு உரிய மரியதை கொடுத்தமைக்கு.
================
எந்திரன் பீவர்.
எந்திரன் படத்துக்கு டிக்கெட் புக்செய்யவில்லை. புக்செய்து வைத்தால் அன்னைக்கு ஷுட்டிங் வைத்து விடுவார்கள் என்பதால் நான் புக் பண்ணவில்லை.இப்போது திங்கள் கிழமைதான் அடுத்த ஷெட்யூல் ஆரம்பிக்கு என்று கேமராமேன் சொன்னார். தேவியில் இந்த படத்தை பார்க்கலாம் என்றால் அதே விலை 95 புல்லாகிவிட்டது. மயாஜலில் 300ரூபாய். எப்படி இந்த அளவுக்கு ரேட் ஏற்றி விற்க்கின்றார்கள் என்று எனக்கு தெரியவில்லை. இதெல்லாம் விட கொடுமை,மவுண்ட் ரோடு தேவியே 95ரூபாய்க்குதான் டிக்கெட்விலை. ஆனால் விருகம்பாக்கம் தேவி கருமாரி அம்மன் தியேட்டரில் 200ரூபாய் என்ன கொடுமை இது…???வம்சம் படம் பார்க்கும் போதே படம் உதறிகிட்டு இருந்துச்சி… இந்த அநியாயத்தை தட்டி கேட்க ஆளே இல்லையா.
==================
எந்திரன் எல்லா மொழியிலும் சேர்த்து மொத்தம் 3000 பிரின்ட்.போட்டு ரிலிஸ் செய்யறாங்க. சராசரியா தினமும் 4 ஷோ போட்டு 500சீட் கணக்கு போட்டு  ஒரு சீட்டுக்கு 150ரூபான்னு சிம்பிள் ரேட் வச்சாலும் ஒரு நாளைக்கு 90 கோடி 3 நாளில் 270 கோடி வந்துச்சின்னா--??? 3 நாளைக்கு அப்புறம் வரும்பணம் எல்லாம்????இப்படி ஒரு எஸ் எம் எஸ் எனக்கு வந்துச்சி.
நன்றி உதவி இயக்குனர் ரமேஷ்.
=========
படத்தின் வருமானத்தல் பாதி ஷேர் ரஜினி கேட்டு இருப்பதாக காற்று வழி செய்திகள் நம் காதுகளை வந்து அடைகிக்னறன. மேட்டர்  சரியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் பகிருங்கள்
==========
 எந்திரன் படத்தை பற்றி பலர் முச்சு முட்ட பேசிக்கொண்டு இருக்கின்றார்கள்..தீவிர சினிமா விரும்பிகள் மற்றும் ரஜினி ரசிகர்கள் வியாழக்கிழமை இரவு தூங்குவது சந்தேகமே. வெள்ளிகிழமை காலை 8 மணிக்கே ஸ்பெஷல் ஷோ வேறு. திரும்பவும் சொல்கின்றேன்.யாராவது வெள்ளிகழிமை எக்ஸ்ட்ரா டிக்கெட் ஒரு டிக்கெட் இருந்தால் எனக்கு கொடுக்கவும்.. எனது தொலைபேசி.98402 29629.
================
படத்தை மெதுவாக பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் இருந்தேன்… ஆனால் சன்டிவி செய்யும் விளம்பர உத்தி உடனே பார்க்கவேண்டும் என்று தூண்டுகின்றது. மிக முக்கியமாக ரஜினியின் பேட்டி. அதன் பிறகு வரும் காட்டுவாசி சாங் டிரைலரும்.
=========
எனக்கு தெரிந்து இந்த படத்தை தமிழ்நாட்டில் நிறைய  தியேட்டர்களில் ரிலிசாகும் முதல் படம் என்று தைரியமாக சொல்லலாம். ஆதம்பாக்கத்தில் ஷகிலா மார்பை வைத்து கல்லாக்கட்டிய தியேட்டர். ஜெயலட்சுமி அதில் கூட எந்திரன் வருகின்றான்.
====================
இந்தவார நிழற்படம்..

நன்றி நேஷனல் ஜீயாக்ரபிக். (thanks ngc)
================
இந்தவார சலனபடம்...
இந்த விளம்பரங்களில் பென்ஸ்கார் விளம்பரமும் லீவிஸ் ஜீன்ஸ் ஆடடும் செமையா இருக்கும்.

=======================
படித்ததில்  பிடித்தது...

மிகமிக
சாதாரணமான
பேருந்து பயணத்தை
சிற்ப்பாக்கி போகின்றாள்
முன்பின் அறிமுகம் அற்ற
அந்த இளம் பெண்.

வீ சிவக்குமார்.
விழுப்புரம். போனவார குமுதம்.
==================
இந்தவார பதிவர்...
உலக சினிமா எழுத வந்து இருக்கும்   இன்னோரு நண்பர்  வலையுலகத்துக்கும்  இப்போதுதான் வந்து இருக்கின்றார். உலகபடங்கள் மட்டுமே இந்த தளம் முன்னிலைபடுத்துகின்றது.  வாசிக்க இங்கே கிளிக்கவும்.
===================
இந்தவார கடிதங்கள்
நண்பா,

நன்றிகள் உரித்தாகுக. நான் அனுப்பி வைத்த புகைப்படத்தை ப்ளாக்-கில் பிரசுரித்தமைக்கு.

அத்துடன் என்னுடைய பெயர், மற்றும் பஹ்ரைன் என்று குறிப்பிட்டதற்கு மிகவும் நன்றி.

இதனை பார்த்து நண்பர் திரு. MG ரவிக்குமார், அவரும் பஹ்ரைன்-இல் இருப்பதாக கூறி தன்னுடைய அலைபேசி எண்ணும் பகிர்ந்து கொண்டார். உங்களுடைய ப்ளாக்-ஆல் ஒரு புதிய நண்பர் அறிமுகம் ஆகியுள்ளார்.
"மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•09•2010)"-இல் திரு. ரவிக்குமார் இட்ட பின்னூட்டம்.
M.G.ரவிக்குமார்™..., said...
பிரசன்னா, நானும் பஹ்ரைன்ல தான் இருக்கேன்!..முடிஞ்சா கால் பண்ணுங்களேன்!........39470789
Sunday, September 26, 2010 10:57:00 PM
--
என்றும் அன்புடன்,
V.S.Prasanna Varathan - Bahrain.
======================
நம்ம பிளாக்கால ஒரு நட்பு வட்டம் உருவானால் அது குறித்து மிக்க மகிழ்ச்சிதான்.
நன்றி பிரசன்னா
நன்றி ரவி.
===================
அருமை ஜாக்கி அண்ணே,
ஒருகாலத்தில் எனக்கு சோறு போட்டதே இந்த கேசட்தாண்ணே...
நான் எனது ஊரிலேயே சொந்தமாக ”ரதிமீனா மியுசிக்கல்ஸ்” கேசட் ரெக்கார்டிங் செண்டர் வைத்திருந்தேன் குறுகிய காலத்தில் நல்ல பிரபலமானது கொஞ்ச நாளிலேயே எங்கள் சுற்று கிராமங்களிலேயே ரதிமீனா மியுசிக்கல்ஸ் என்றால் தெரியாதவர்களே இல்லை என்ற நிலைக்கு வளர்ந்தது அதற்கு முக்கிய காரணம் பாடல் பதிவின் தரமும் வாடிக்கையாளர்கள் கேட்ட நேரத்தில் தாமதமில்லாமல் பாடல் பதிந்து கொடுப்பதுதான்...
மியுசிக்கின் மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக எட்டாவது படிக்கும்போதே கேசட்டில் பாடல் பதிவது பற்றி சித்தாப்பாவின் நண்பர் மூலம் கற்றுகொண்டேன்
கடை திறந்து நன்றாக போய்கொண்டிருந்தது CDMP3 PLAYER வரும்வரை இதன் வரவிற்கு பிறகு சுத்தாமாகவே வியாபாரம் நின்றுவிட்டது பிறகென்ன பாடல் பதிவதற்கு வாங்கிய ரெக்காடிங் கருவிகள் ஸ்பீக்கர்கள் அனைத்தயும் விற்றாச்சு ஒன்றைத்தவிர அது நான் பயன்படுத்திய AHUJA ரெக்கார்டிங் player
இதை மட்டும் ஞாபமாக வைத்துகொண்டேன்...
இப்போதும் எனது கடை உள்ளது ஆனால் வேறு வடிவில் ”ரதிமீனா டிஜிட்டல் பிளக்ஸ் & வீடியோ கவரேஜ்” என்ன செய்வது கால ஓட்டத்திற்கு ஏற்ற மாதிரி நாமும் மாறித்தானே ஆக வேண்டும் இதுதானே காலத்தின் கட்டாயமும் கூட எது எப்படியோ நீங்கள் எழுதிய பதிவின் மூலம் எனது பழைய நினைவுகள் மனதில் பசுமையாய் அசைபோட்டன... இதுவும் ஒரு சுகம்தான்
ரொம்ம்ம்ம்ப நன்றிண்ணே....
உங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்.....
வாழ்த்துகளுடன்...
மாணவன்
=============
அன்பின் மாணவன் அந்த பதிவு நிறைய பேரை  நிஜமாலும் உலுக்கும் என்று தெரியும் இருந்தாலும் அதிலே உழன்று இருக்கும் உங்களுக்கு அதன் வலி அதிகம் என்பதை இந்த மெயில் உணர்த்துகின்றது
நட்புடன்
ஜாக்கி.
==========================
பிலாசபி பாண்டி
இந்தியாவுல நடக்க போற நம்ம காமன்வெல்த் போட்டியில 100 மீட்டர் ஓட்டபத்தயத்து பினிஷிங் லயின் கிட்ட இப்படிதான் எழுதி வச்சி இருக்கும்.     GO SLOW MEN AT WORK…. JAI HO.
==========
நீ யாருக்காகவும் எந்த சூழ்நிலையிலும் மாற போவதில்லை. நீ மாறும் நிலை ஏற்பட்டால் யாரோ ஒருவரின் மீது நீ அதிக அன்பு வைத்து இருக்கின்றாய் என்று அர்த்தம்.
=========
நடப்பதெல்லம் நன்மைக்கேன்னு சில டொயான்க பிலிங்ல இருக்கச்சொல்ல காதுகிட்ட வந்து சொல்வானுங்கோ… ங்கொய்யால எத்தனை கிலோமீட்டர் நடந்தா நன்மைன்னு சொல்லமாட்டானுங்க பேமானி பயபுள்ளைங்க.
===========
நான்வெஜ் 18+
கணவன்.. தயவு செஞ்சு என் கண்ணை பாரு என்ன தெரியுது???
மனைவி.. உங்க கண்ணுல உண்மையான காதல் தெரியுது.
கணவன்… சனியனே கண்ணுல எதுவோ விழுந்து இருக்கு பாருடி.,
============
ரொம்ப  நேரமா படிக்கறேன்னு கத  உட்டுக்குனு மாடி ரூம் கதவை சாத்திகிட்டு இருக்கும் தன் பையன் என்ன செய்யறான்னு பாக்க அந்த பைனோட  அப்பா மாடிக்கு போய் சட்டுன்னு கதவை திறந்துட்டார். உள்ளை பையன் அவன் லுல்லுவை கையில புடிச்சி ஆட்டிக்குனு இருந்தான். அப்பாவுக்கு பயங்கர ஷாக்.
இடியட் படிக்கறன்னு சொல்லிட்டு இதை பண்ணிகிட்டு இருக்க? என்று அப்பா கேட்க.
அப்பா எங்க ஸ்கூல்ல லாஸ்ட் பிரியட் செக்ஸ் எஜிகேஷன் சொல்லித்தராங்க…
எல்லாம் ஓகே இதை எதுக்கு? அப்பா கேள்வி முடிக்கும் முன் பையன் சொன்னான்.
அப்பா இது ஹோம் ஒர்க்.
============



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

17 comments:

 1. About Rajini..

  http://www.slate.com/id/2267820/pagenum/all/#p2

  ReplyDelete
 2. மிகவும் நன்றி தங்கள் தளத்தில் ஸ்டெர்லைட் ஆலை மூடலை பதிவு செய்ததற்கு.

  தூத்துக்குடி மக்கள் பல மாபெரும் போராட்டங்களை நடத்தினர், அக்கம்பெனி தொடங்கும் போது. அப்போதைய அரசு ஆதரவுடன் கம்பெனி தொடங்கப்பட்டது. பெரும் சுற்றுப்புறச் சீர்கேட்டினை தூத்துக்குடியில் இந்த ஆலை ஏற்படுத்தியது. இந்த ஆலையைச் சுற்றியுள்ள கிராமத்து மக்களுக்கு இரத்தத்தில் தாமிர அளவு அதிகமாக இருப்பதாக பல சமூக நல நிறுவனங்கள் குற்றம் சாட்டின.

  பல அமைப்புகள் உண்ணாவிரதம் இருந்து அவர்களிடமிருந்து பணமும் பெற்றுக்கொண்டனர்.

  இந்நிறுவனத்தில் பணிபுரியும் தமிழர்களின் எண்ணிக்கை மிகச்சொற்பமே. எல்லோரும் வட இந்தியர்களே.

  இதுவரை தாங்கள் போட்ட முதலீட்டிற்கு மேல் பல ஆயிரம் கோடிகளை அவர்கள் எடுத்திருப்பர்.

  இப்போதாவது தூத்துக்குடி மக்களுக்கு நல்ல காலம் பிறந்ததே!!!!!

  ReplyDelete
 3. சூப்பர்ண்ணா இந்தவார ஃபுல் சாண்ட்வெஜ்....
  http://tamiludhayan.blogspot.com/2010/09/blog-post_29.html

  ReplyDelete
 4. வழக்கம்போலவே சாண்ட்வெஜ்& நான்வெஜ்18+ அருமை ஜாக்கி அண்ணே,என்னுடைய மெயிலை இந்த வார கடிதப்பகுதியில் பிரசுரித்தமைக்கு ஒரு பெரிய நன்றிண்ணே....
  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி
  பணி சிறக்க வாழ்த்துக்களுடன்
  மாணவன்

  ReplyDelete
 5. சாண்ட்வெஜ் superb........

  ReplyDelete
 6. Jackie, Friday second show extra ticket eruku, but naan salem la eruken... :-)

  ReplyDelete
 7. நன்றி பத்மநாபன்.

  நன்றி பாலபாரதி.

  நன்றி தாமோதர்.

  ReplyDelete
 8. ஜாக்கிண்ணா...

  சிறப்பான தொகுப்பு.

  அன்பு நித்யன்.

  ReplyDelete
 9. நன்றி நெயதல் மைந்தன்.. அந்த ஆலை தொடர்பாக நிறைய கட்டுரைகள் படித்து இருக்கின்றேன்..
  ஒன்றை கவனித்தீர்களா? தேவையில்லாம ஆபத்து விளைவிக்கும் சமாச்சாரங்கள் எல்லாம் தமிர்நாட்டில்தான் இருக்கின்றது. அதே போல் எங்கள் ஊர் கடலூரில் சிப் காட்டில் இருக்கும் பல தொழிற்சாலைகள் ஆபத்து நிறைந்தவைகளே.

  ReplyDelete
 10. நன்றி தமிழ் உதயம்.
  நன்றி ராம்ஸ்.
  தம்பி சங்கர் நீ காட்டி என் கையில சிக்கினன்னு வை பிதுக்கிடுவேன்...ஏதோ டிக்கெட் இருக்குன்னாவது சொன்னியே.

  ReplyDelete
 11. In Bangalore pvr cinemas gold class, enhiran ticket price is 1500/-

  ReplyDelete
 12. In Bangalore PVR cinemas gold class, Endhiran ticket price is 1500/-

  ReplyDelete
 13. எல்லாப் பகிர்வுகளும் அருமை அண்ணா...
  அதிலும் நண்பர்களின் கடிதங்கள் அருமை.

  ReplyDelete
 14. காஸ்ட்ரோல் விளம்பரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ?
  http://cyberbuddies.blogspot.com/2010/09/rajini-great-ad-castrol-advertisement.html

  ReplyDelete
 15. //அந்த இடத்தை மத்திய அரசின் தடை செய்யபட்ட இடமாக அறிவிக்க வேண்டும். யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்வதுதான் எனக்கு தெரிந்து சரி என்று படுகின்றது.//

  இதுவே சரியான வழி!

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner