சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (26/03/2018)


ஆல்பம்.

 காவிரி மேலாண்மை வாரியம்  உச்ச நீதிமன்றம் தீர்ப்பு  கொடுத்து விட்டது.. ஆனாலும் அதை அமைத்தால் குடுமி தன்னிடத்தில் இருக்காது  என்ற காரணத்துக்காக காவிரிநதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய ஆளும் பாஜக அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்றது… எப்போதுமே  மத்திய அரசுக்கு தமிழகம் என்றால் மாற்றான் தாய் மனப்பாண்மைதான்…  காரணம்  எல்லா மாநிலத்திலும்  எல்லா  ஊரிலும்  ரதம்  ஊர்வலம் வந்தால் கொண்டாடப்படும்.. இங்கே  மட்டும்தான்  ரதம் பின்னங்கால் பிடறியில் படும் அளவுக்கு ஓடும்.. அந்த வன்மம் இருக்காதா பின்னே.?
==========#PacificRim:Uprising (2018) Review By Jackiesekar / பசிப்பிக் ரிம் அப்ரைசிங் திரைவிமர்சனம்.
#PacificRim:Uprising (2018) Review By Jackiesekar
#பிசிப்பிக்ரிம்அப்ரைசிங்
பசிப்பிக் ரிம் அப்ரைசிங் திரைவிமர்சனம்.
2013 பசிப்பிக் ரிம் வந்து பட்டையை கிளப்பிச்சி… டிரான்ஸ்பார்மர் மேட்டரை அப்படியே உல்டா பண்ணி கொஙசம் கரம் மசாலா தூவி.. அப்படியே அரை முழம் மல்லிகை பூவையும் காதில் சுற்ற வச்சி   சக்சஸ் பண்ணிய படம்.
தமிழ்ல கூட ருத்ரநகரம்ன்னு வந்ததா நியாபகம்…

=

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner