(BRINDAAVANAM-2010)TELUGU ஜுனியர் என்டிஆர்,காஜல்,சமந்தா. முக்கோணகாதல்.


நான் முதலில் தியேட்டரில் பார்த்த நேரடி தெலுங்கு படம் சிரஞ்சிவி நடித்த முட்டா மேஸ்திரி... திருப்பதியில் உள்ள பிரகாஷ் திரையரங்கம் என்று நினைக்கின்றேன்.. அதில்தான் அந்த படத்தை பார்த்தேன்..குடும்பமாக வந்து அந்த படத்தில் வரும் கெட்ட ஆட்டங்களை பார்த்து ரசித்தார்கள்...




இப்போது நமது படங்களிலும் வந்து விட்டது என்றாலும், அந்த காலகட்டத்தில் இது பெரிய விஷயம்...டபுள் மீனிங் ஜோக்குக்கு வயது பெண்களே கைதட்டி ஆரவாரம் செய்ததை பார்த்த போது எனக்கு வியப்பு மேலோங்கியது...


அதன் பிறகு அதிகமான தெலுங்கு படங்களை ரசிக்க ஆரம்பித்தது மிகச்சரியாக சொன்னால் 2005ல் இருந்துதான் என்று நினைக்கின்றேன்.


இப்போதும் என் தெலுங்கு ஆல்டைம் பேவரைட் அனுக்கு குன்டே ஒக்கரோசு என்ற சர்மி நடித்த தெலுங்குபடம்தான்...


2005ல் பைலட்டில் இந்த படத்தை பார்த்து விட்டு இது போல ஏன்தமிழில் வரவில்லை என்று ஆதங்கபட்டேன். நான் திரை விமர்சனம் பிளாக்கி எழுத ஆரம்பித்து போது 9வது படமாக அந்த படத்தை எழுதினேன்... அந்த விமர்சனத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்.     


அப்புறம் கோதாவரி,அத்தடு,அயித்தே, ஆனந் என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

இதுவரை நான் ஜுனியர் என்டிஆர் நடித்த படங்களை பார்த்தது இல்லை .. என் மனைவி அப்போது பெங்களுரில் பொட்டி தட்டிக்கொண்டு இருந்த நேரம். அவளுடைய தெலுங்கு நண்பர்களோடு நான் வேண்டா வெறுப்பாக திரையரங்கம் போய் பார்த்தபடம் எமதுங்கா....

எனக்கு ஜுஎன்டிஆர் பிடிக்காமல் போக மிக முக்கியகாரணம்... உடம்பின் கணம்... ஆனால் அந்த உடம்பை வைத்துக்கொண்டு போடும் அந்த ஆட்டங்கள் மெலிதான உடம்புகாரர்கள் மூக்கில் விரல்வைப்பது போல இருக்கும் அப்படி ஒரு நெளிவு சுளிவு  அந்த நடன அசைவுகளில் இருக்கும். ஆனால் எமதுங்கா படத்தில் உடம்பை குறைத்து அவர் போடும் ஆட்டத்தை பாருங்கள்...






அடுத்து தெலுங்கு படங்களில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் அவர்கள் பாடலுக்கு செலவு செய்யும் தொகைகள்... செட்டு போட அவர்கள் யோசிப்பதே இல்லை மேலே உள்ள பாடலுக்கு மிக அழகாக செட் போட்டு இருப்பார்கள். சில செட்கள் கேவலமாக இருக்கும்... இந்த பாடலில் வரும் செட் அந்த மயில் செட் கலர்ஸ் திரையில் பார்க்கும்  போது மனதை கொள்ளை கொள்ளும்...

சரி அடுத்த விஷயம் என்னவென்றால் தெலுங்கில் எந்த பெண் நடிக்க வந்தாலும் அவர்களை பொறுத்தவரை பிராய்லர் கோழி போல உறித்து தொங்கவிட்டு விடுவார்கள்..தமிழில் ரொம்ப கண்ணியம் என்று பெயர் எடுத்த நடிகைகள் தெலுங்கில் மிக சுதந்திரமாக இயங்குவார்கள்.. அவுங்க இண்டஸ்ட்ரி அது போல.......

இந்த ஜுஎன்டிஆர் படம் வழக்கமான முக்கோணகாதல் கதைதான்... புதிதாக ஏதுவும் சொல்லவில்லை....

(BRINDAAVANAM-2010)TELUGU  படத்தின் கதை என்ன??

ஜுனியர் என்டிஆர் , சமந்தா இரண்டு பேரும் காதலர்கள். என்டிஆர் அப்பா பெரிய கோடிஸ்வரர்.... என்டிஆர் பெற்றோருக்கு மகனின் எந்த செயலுக்கு தடை போடுவது இல்லை.

சமந்தாவின் நண்பி காஜல்அகர்வாலுக்கு வீட்டில் பிரச்சனை இருப்பதால்  காஜல் பாய் பிரண்டாக நடிக்க தனது காதலன் என்டிஆரிடம் சமந்தா உதவி கேட்கின்றாள்.... அதற்கு என்டிஆர்  சம்மதித்து காஜலுடன் அவளது சொந்த ஊருக்கு போகின்றார்..காஜல் அகர்வால் விட்டுக்கு  பெயர் பிருந்தாவனம்... அந்த பிருந்தாவனத்தில் சந்தோஷமே இல்லை.



காஜல் அப்பா பிரகாஷ்ராஜ், குடும்ப பகை காரணமாக ஊரும் ரெண்டு பட்டு கிடக்கின்றது... இவைகளை எல்லாம் எப்படி நமது என்டிஆர் சரிபடுத்துகின்றார் என்பதும்... நடுவில் காதலனாக நடிக்க உதவி செய்யதால் போதும் என்று அழைத்து வந்த நண்பியின் காதலனின் மேல் காதல் பூப்பதும், ஒரே கல்லில் எப்படி (சுமந்தா,காஜல்) ரெண்டுமாங்காய்  அடிப்பது என்று  காதில் பூ சுற்றி சொல்லி இருக்கின்றார்கள்... அது எப்படி என்பது வெள்ளித்திரையில் பாருங்கள்..


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

படத்தின் அவதார புருசன் ஜுனியர் என்டிஆர்தான்...முதல் நாள் முதல் ஷோ மோட்சத்தில் பார்த்தேன்... செம கிளாப்ஸ் கைதட்டல் விசில், திரைக்கு பேப்பர் அபிஷேகம் என களை கட்டியது என்பேன்..

அவதாரபுருஷனாக மட்டுமே எங்களால் ஹீரோவை சித்தரிக்கமுடியும் என்று கங்கனம் கட்டிக்கொண்டு இயக்குனரும்,ஒளிப்பதிவாளரும் சத்தியம் செய்து கொண்டது பல கேமரா கோணங்களில் தெரிகின்றது....

முதல் காட்சி ஒருவனை சுமோவில் துரத்துகின்றார்கள்... அவன் ஓடுகின்றான் போனில் ஹீரோவுக்கு தகவல் கொடுக்க அப்போது ஹீரோ நீச்சல் குளத்தில் குளித்துக்கொண்டு இருக்கின்றார்... அதன்  பின் கட் ஷாட்டில் பைக்கில் பறந்து இடத்தை கண்டு பிடித்து ஒரு 40 பேர் இடம் இருந்து அவனை அலேக்காக ஒரே கையில் பைக்கில் உட்கார்ந்து இருந்த படியே அவனை தூக்கி பில்லியனில் உட்கார வைத்து பறக்கின்றார்...படத்தில் எல்லா சண்டைகளும் அதே ரகம்தான்...

ஒரு காட்சியில் முன்னால் காரில் உட்கார்ந்து இருப்பவனுக்கு பின்னால் நிற்க்கும் அடியாட்கள்  உதைகொடுக்கும் சந்நதம் கேட்க கூடாது என்று என்டிசூர் போடும் அந்த சண்டைகாட்சி நிச்சயம் சிரிப்பை வரவழிக்கும் என்பது உண்மை...

உதாரணத்துக்கு ஒருவனை அடித்து அவன் பறந்து கீழே விழும் போது தனது காலல் புட்பாடில காலில் நிறுத்துவோமே அது போல அவனை நிறுத்தி பொறுமையாக கீழே பூமியில் வைப்பார்... இது போல அந்த சீக்வென்ஸ் முழுவதும் காமெடிதான்...

பிருந்தாவனம் என்று அழைக்கபடும் காஜல்அகர்வால் வீட்டு செட் மிக பிரமாண்டம்... எனக்கு தெரிந்து சமீபத்தில் இவ்வளவு பெரிய செட்டை பார்க்கவில்லை...  முக்கியமாக வீட்டின் கொல்லை பக்கத்தை காட்ட ஒர பெரிய செட்டைஒரு ஏரிக்கு பக்கத்தில் போட்டு மேட்ச் செய்து இருக்கின்றார்கள் என்பது பார்க்கும் போது தெரிகின்றது...

தெலுங்குபடத்தில் நான் கவனிக்கு விஷயம் என்னவென்றால் ஒரு படத்தில் நடிக்கும் அத்தனை குணசித்திர நடிகர் நடிகைகளும் எல்லாபடத்திலும் இருக்கின்றார்கள்... ஒருவர் விடாமல் அது எப்படி என்று தெரியவில்லை... ஏனெனில் அவர்கள் கூட்டு குடும்பத்தை திரைக்கதையில்  முன் வைக்கும் போது இது  சாத்தியபடுகின்றது என்று நினைக்கின்றேன்....

அதே போல் விட்டில் இருக்கும் பெண்கள் அத்தனை பேரும் டிரெடிஷனில் இருக்கின்றார்கள்.. கதாநாயகி இருவரை தவிர....

இந்த படம்  எடுக்க ஒரு வருடம் ஆனது... இந்த படத்தின் போதுதான் கோட்டா சீனுவாசராவ் மகன் சாலைவிபத்தில் இறந்து போனார்... ஜுனியருக்கும் சண்டைகாட்சியின் போது அடிபட்டது....

அதே போல் படத்தின் செட் ஒர்க்குக்கே பல  நாட்கள் ஆகி இருக்கும்....

சமந்தா.... அழகு கூடிக்கொண்டே போகின்றது.... சில காட்சிகளில் உதடுக்குமேல் மூக்குக்கு கீழே என்னவோ போல் இருக்கின்றது...
மற்றபடி டக்கான் குதிரை போல நிற்க்கின்றார் நடக்கின்றார்... சமந்தாவின் வெற்றி என்பது கொடுக்கும் உடையை பொட்டுக்கொள்வது என்பது அவர் நடித்த படங்களை பார்க்கையில் தெரிகின்றது

காஜல் அகர்வால் படம் முழுக்க ஆப் சாரியில் வரவதால் அந்த தேன்கின்ன இடுப்பு தெரியும் படியும் பல காட்சிகளில் தொப்புள் தெரிவதாகவும் வருகின்றார்... அந்த உயரமும் காண்டிராஸ்ட் உடைகளுக்கு இடையே தெரியும்  அந்த வளைவான இடுப்பும் படம் பார்க்கும் என்னை என்னவோ செய்தது...

ஆனால் காஜல் முகத்தில் ஒரு மென் சோகம் இருந்தபடியே இருக்கின்றது.. அது ஏன் என்று தெரியவில்லை.. ஆர்யா டுவில் இருந்த பிரஷ்னஸ் அந்த படத்தில் இல்லை....



மெயின் கேரக்டர் பிரகாஷ்ராஜ் மற்றும் ஸ்ரீஹரி, கோட்டானிவாசராவ் செய்து இருக்கின்றார்கள்...

இசை தமன்... மூன்று பாடல்கள் கேட்கும் படி இருக்கின்றது.. முதல் பாடல் காட்சியில் என்டிசூர் போடும் நடனங்கள்  செமை....

ஒளிப்பதிவு சோட்டாகோநயிடு... கேமராமேன் கேட்ட விஷயத்தை புரோட்யூசர் செய்து கொடுத்து இருப்பது படத்தின் பல பிரேம்களில் தெரிகின்றது....அந்த வயலில் ஆடும் சாங்கும் அதற்கு ஒரு தட்டை பிரிசல் செட்டும் கொஞ்சம் ஒவர்தான்.... பட் பார்க்கையில் அருமை.


படத்தில் சாங்குக்காக உழைத்த உழைப்பை வெகுவாக பாராட்ட வேண்டும்... செட்டும் அந்த கலர்சும் மனதை  கொள்ளை கொள்கின்றன...


இப்போது தொடர்ந்து தெலுங்கு படங்கள் சப் டைட்டில் இல்லாமல் பார்க்கவேண்டும் என்பதால் தியேட்டரில் பார்த்து வருகின்றேன். பட் இந்த படத்தை பார்க்க மிக முக்கிய காரணம் சமந்தா, காஜல்தான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கின்றேன்.....

அந்த கடைசி அயிட்டம் சாங் செம கலக்கல் அந்த செட்டும் டிரஸ் சென்சும் அவ்வளவு அற்புதம்.... ஹகிளாஸ் ரெக்கார்ட் டான்ஸ் பார்த்து போலான பீலிங் அது... யார் இடுப்பு தெகிலானது என போட்டி போட்டு ஆடும்  அந்த பாடலின் ஸ்டில் மேலே...

படம் பார்க்கும் உங்களுக்கு ஒரே கல்லில் நாலு மாங்க ச்சே கைதடுமாறுது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் ஜுனியர் என்டிஆர் மீது  பொறாமை, வயிற்று எரிச்சல், என் இன்னபிற விஷயங்கள் வருவதை தவிர்க்க முடியாது...

ஊரில் படம் பார்க்கும் போது பசங்கள் சொல்லுவார்கள்..அது போல .கொடுத்து காசுக்கு அந்த ஒரு பாடல் போதும்....

பல காட்சிகளில் ஜுனியர் சரக்கு அடித்து விட்டு தூங்கி எழுந்து வந்து நடிக்க வந்தது போல இருந்தது..

கடைசி காட்சியில் அவர் தாத்தா என்டிஆர் கிராபிக்சில் வருகின்றார்..
அதே போல் தெலுங்கு மிஸ்சியம்மா படத்தில் வரும் பிருந்தாவனமும் நந்தகுமாரனும் பாடலை கலர்படுத்தி அதில் டைடில் போட்டதையும் பாராட்டலாம்......

படத்தின் டிரைலர்...




படக்குழுவினர் விபரம்...

Directed by     Vamsi Paidipally
Produced by     Dil Raju
Sirish
Laxman
Starring     NTR Jr.
Kajal Aggarwal
Samantha
Srihari
Prakash Raj
Music by     S.S. Thaman
Editing by     Marthand K Venkatesh
Release date(s)     October 14, 2010 (2010-10-14)
Country     India
Language     Telugu



சென்னை மோட்சம்  தியேட்டர் டிஸ்கி.....


மோட்சம் தியேட்டர் முன்பு பிட்டு படத்துக்கு பேமஸ்.வண்டி பார்க்கிங்கில் விடும் போது பிட்டு படம் ஒடும் தியேட்டரில் எப்படி பெண்கள் வந்தார்கள் என்று கண நேரம் நினைத்து பின்பு சுதாரித்துக்கொண்டேன்...

நிறைய கூட்டம்..

மோட்சமும் 70, மற்றும் 100 ரூபாய் என டிக்கெட் விலையை மாற்றிக்கொண்டது.....

இந்த படம் குயூப் புரஜெக்ஷன்.. படம் துல்லியம்... ஆனால் ஒலியில் சென்டர் ஸ்பீக்கரில் இருந்து வரும் டயலாக் சவுண்ட் ரொம்பவும் குறைவு...பிரன்ட். ரியர்,லெப்ட் ரைட் ஸ்பீக்கர் சவுண்டினால் பல டயலாக் புரியவில்லை...

எனக்கு பின்னால் ஒரு பெரிய ரோ முழுவதும் கல்லூரி மாணவர்கள்... ஜுனியர் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், சிரித்தால் என்  எல்லாத்துக்கும் கத்தி கொண்டு இருந்தார்கள்...சரி அந்த இம்சையை விட பெரிய இம்சை... எனக்கு பக்கத்தில் ஒரு பாடு மாவா போட்டு விட்டு பிச்சிக் பிச்சிக் என்று துப்பிக்கொண்டு இருக்க, வெறுத்து போய் முன் பக்கம் காலி சீட்டில் போய் உட்கார்ந்து கொண்டேன்....

காஜல், சமந்தா, தொப்புள் மார்பு தெரியும் போது எல்லாம் தியேட்டரில் ஒரே சத்தம்...

பழைய என்டிஆர் கிளைம்க்சில் காட்டும் போது செம ஆர்பாட்டம்....

இடைவேளையில் சிறுநீர் கழிக்க அவசரத்தில் முதல் ஆளாக போனேன்... கடைசியில் இருக்கு   ஒன்றில் ஒன்னுக்கு அடிக்கபார்த்தால் அதில் சுருள் சுருளாக முடிகள்... எவன் படம் ஓடும் போது  என்ன செஞ்சான்னு தெரியலை....இருந்தாலும் அந்த பிளக் அண்டு ஒயிட் நன்றாகவே இருந்தது..

தியேட்டரில் முன் சீட்டில் கால் வைத்தால் விளக்கு அடித்து காலை கீழே இறக்க சொல்கின்றார்கள்.. நல்ல விசயம்... அதே போல உள்ளே வரும் பார்வையாளனிடம் இருந்து மாவா, பான்  போன்றவற்றை பிடுங்கிவிடுதல் நலம்...

விளம்பரம் ஒடும் போது சவுண்டே இல்லை செத்தவன் கையில் வெத்திலை பாக்கு கொடுத்தது போல இருக்கின்றது... விளம்பரத்துக்கு காசு வாங்கிறிங்கல்ல...சவுண்ட் வச்சா  என்ன????


டிஸ்கி.....

அண்ணன் உண்மைதமிழனோட பழகி...வர வர ஷாட்ட பதிவு எழுதவே முடியலை.. ஒரு டைம்பாஸ் படத்துக்கு நான் பெரிதாக எழுதிய விமர்சனம் இதுவாகதான் இருக்கும்...

படம் டைம்பாஸ்படம்தான்...




பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

15 comments:

  1. தலைவரே...

    ”ஜாக்கி” னு ஒரு கன்னட படம் ரிலீஸ் ஆகியிருக்கு. மாயாஜால்ல பாத்துட்டு ஒரு பதிவு போடுங்க.

    தமிழ் ப்ளாக் வரலாற்றில் முதன் முறையாக ஜாக்கி எழுதும் ஜாக்கி விமர்சனம் வரட்டும்.

    ஒரு தெலுங்குப்படம் விடமாட்டீங்க போல இருக்கே...

    அன்பு நித்யன்

    ReplyDelete
  2. காஜல், சமந்தா, தொப்புள் மார்பு தெரியும் போது எல்லாம் தியேட்டரில் ஒரே சத்தம்...//

    உண்மைய சொல்லுங்க...அது நீங்க தானே பாஸ்??

    ReplyDelete
  3. //கடைசி காட்சியில் அவர் அப்பா என்டிஆர் கிராபிக்சில் வருகின்றார்..//

    என்.டி.ஆர்ன் பேரன் தான் ஜூனியர் என்.டி.ஆர். திருத்திக்கொள்ளவும் ;)

    ReplyDelete
  4. அப்ப கொடுத்த காசுக்கு நல்ல காட்டுரங்கனு சொல்லுரிங்க அப்படிதானே ?

    ReplyDelete
  5. நன்றி நித்யா நானும் கேள்விபட்டேன்...

    உங்க இண்டர்வியூ பூதிய தலைமுறையில் வந்து இருக்கின்றது வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. மைந்தன் சிவா உங்ககிட்ட சொல்லறதுல என்ன இருக்கு... இதுவரை தியேட்டரில் ஜாக்கிசானின் ஸ்டன்டில் அற்புதமான விஷயத்துக்குமட்டும் இதுவரை என்னை மறந்து கைதட்டி இருக்கேன்..

    அதே போல மன்னன் படத்துக்கு,வேட்டையாடு விளையாடு கற்க் கற்க சாங்குக்கு...

    ReplyDelete
  7. நன்றி செந்தில் வேலன்... திருத்திவிட்டேன்...

    ReplyDelete
  8. பாலபாரதி... உண்மைதான் கொடுத்த காசுக்கு நல்லவே படம் காட்டுறாங்க..

    ReplyDelete
  9. This comment has been removed by the author.

    ReplyDelete
  10. என்ன பண்றது ஜாக்கி ரெண்டு கதாநாயகிகள் அவங்கள பத்தி விமர்சிப்பதற்கே நாலு மாங்கா வேணும் .ச்சே உங்களோட சேர்ந்து வாய் குளறுது நாலு பத்தி வேணும் அப்படி இருக்கும்போது கொஞ்சம் நீண்டுதான் போகும் !?
    விமர்சனம்.
    (இருந்தாலும் அந்த பிளக் அண்டு ஒயிட் நன்றாகவே இருந்தது..)இதுதான் கேமரா கண்ணு அப்படின்னு சொல்வாங்க
    அப்புறம் சென்னையில் வாழ பழக அப்படின்னு எழுதுவது போல் தியேட்டரில் படம் பார்க்க பழக அப்படின்னு ஒரு தனி பதிவு போடுங்க ஏன்னா ரொம்ப கஷ்டமா இருக்கு.

    ReplyDelete
  11. கலக்கல் கவரேஜ் ஜாக்கி

    ReplyDelete
  12. \\படம் பார்க்கும் உங்களுக்கு ஒரே கல்லில் நாலு மாங்க ச்சே கைதடுமாறுது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் ஜுனியர் என்டிஆர் மீது பொறாமை, வயிற்று எரிச்சல், என் இன்னபிற விஷயங்கள் வருவதை தவிர்க்க முடியாது..\\

    படிக்கும் போதே எனக்கு வயித்தெரிச்சலா இருக்கு!

    \\பல காட்சிகளில் ஜுனியர் சரக்கு அடித்து விட்டு தூங்கி எழுந்து வந்து நடிக்க வந்தது போல இருந்தது..\\

    அவரு எப்போதுமே அப்படித்தான் இருப்பாரு!

    ReplyDelete
  13. Andha Anako konda Okka Roju Padatthai Romba Naalagave Thedi Kondiruken...

    ReplyDelete
  14. தோழரே விமர்சனம் சூப்பர், படம் பார்த்த திருப்தி.
    இந்த வாரம் டிக்கெட் புக் செய்து விட்டேன்.
    பார்த்து விட்டு சொல்கிறேன் :)

    ReplyDelete
  15. படம் பார்க்க ஆர்வத்தை தூண்டும் பதிவு.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner