Onaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை

வணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை  தனது ஆக்மார்க் முத்திரை மூலம் எதை பற்றியும் கவலைபடாமல் திரையில் சேர்ப்பித்த இயக்குனர் மிஷ்கினுக்கும் அந்த அட்டிடுயூட்க்கும்.... கட்ஸ்க்கும் ஆயிரம் ரூபாய்   மிதிப்புள்ள பிளவர் பொக்கே முதலில்  பிடியுங்கள்..….

 இது உண்மையான வாழ்த்து… அதே நேரத்தில் அடுத்த படத்தில் இயக்குனர் மிஷ்கின் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வணிகசமரசங்களோடு ஒரு படம் கொடுக்க வேண்டும்.. காரணம்… இப்படி சொல்லி எழுதி, உசுப்பிட்டு,  நாங்க ராஜாராணியை ரசிக்க போய் விடுவோம்… ஆனா இதே போதைக்கு பீல்  ஆயி… இதே போல நாலு படம் எடுத்தார்ன்னா மிஷ்கின் நடுத்தெரு நாராயணணா மாற நிறைவே சான்ஸ் இருக்கு.. 

அப்புறம் ஜோல்னா பையோட கருப்பு கண்ணாடி  போட்டுக்கிட்டு சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோ வாசலில் இருக்கும் காவேரி டீ ஸ்டாலில் டீ குடிச்சா..  கிட்ட வந்து பேசறதையே கவுறவ கொறச்சலா நினைச்சுக்குவானுங்க…

அவள் அப்படித்தான் படம்  பார்த்து இருக்கியா?

செமை படம்.. சான்சே இல்லை.. இன்னா டயலாக்... வாட் ஏ மேக்கிங்.??
ருத்தரைய்யா    தெரியுமா?

ஹூஸ் தட்…,? பேரே வித்தியாசமா இருக்குன்னு ஒரு முப்பது வருஷம் கழிச்சி ஓநாய் கடத்தை பத்தி பேசும் போது..? மிஷ்கின் பேரே வித்தியாசமா இருக்குன்னு  சொல்லுவானுங்க….

அதனால அடுத்த படத்துல மிஷ்கின் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள வணிக சமரசங்கள் செய்துக்கொண்டு ஒரு படம் எடுக்க வேண்டும் என்பதே இந்த ஜாக்கிசேகரின் அவா… அப்புறம் மகனே உன் சமத்து…

சரி  இதை எதுக்கு சொல்லறேன்னா? ஞாயிற்றுக்கிழமை காலையில்   உதயம் காம்ளக்ஸ் சந்திரன்ல ஒரு 100 பேர் பார்த்து இருப்போம்… அதுக்குதான்…
 ஒகே  லெட்ஸ் கோ டூ த மூவி…

ஒருநாள்  நைட்டு ஒருத்தன் துப்பாக்கி குண்டு காயம்பட்டு  ரோட்டுல கிடக்கறான்(  ஓநாய் /மிஷ்கின்)அவனை ஒரு மருத்துவமாணவன் ஸ்ரீ/ஆட்டுக்குட்டி பரிதாபப்பட்டுஆப்பரேஷன் பண்ணி காப்பத்துறான், கடைசியில அவன் ஒரு தேடப்படும் பயங்கர குற்றவாளி…  அவனை சுட்டு பிடிக்க போலிஸ் மற்றும் அவன் எதிரி கோஷ்ட்டி தேடுது. இதுக்கு நடுவுல கண் தெரியாத ஒரு குடும்பத்தை அவன் காப்பாத்த போராடுறான்..ஏன்? ஏதுக்கு? வெண்திரையில் அவசியம் பாருங்கள்.

 இந்த படத்தை பற்றி எல்லோரும் இணையத்தில் கொண்டாடுகின்றார்கள்.. மிஷ்கின் பேக்… அசத்தல் என்று சொன்னதால் நான்  தியேட்டருக்கு ஞாயிறு காலை பல்விளக்கி விட்டு சாப்பிடாமல் தியேட்டருக்கு போய் விட்டேன்…
அக்மார்க் மிஷ்கின் படம்.. சென்னையின் இரவு வார்ம் டோன் விளக்கு வெளிச்சத்தை அப்படியே செல்லுலாய்டில் சிறை பிடித்ததிர் இருந்து ரயில் கடந்தல் சேசிங் என்று ஒரே பரபர….சரசர ஆனால்???

முதல்  பாதியில் இருந்த விறு விறுப்பு…சாரி…  இப்படி சினிமாவை இரண்டா பிரிச்சா குறியீடு இயக்குனர்  கோச்சிக்குவார். சோ முதல் ஒரு மணி நேரத்தில் இருந்த விறு விறுப்பு ஒரு மணி நேரத்துக்கு மேல்   லாஜிக் குழப்பங்கள் நம்மை கேள்வி கேட்க?? படத்தில் ஒன்ற விடாமல் தடுக்கின்றன…

ஆனாலும் அந்த  இரண்டு மெழுகு வெளிச்சத்தில் மிஷ்கின் பினாஷ் பேக்கை நீட்டி முழங்காமல் கதை போல ஒரே ஷாட்டில் சொல்லும் போது கண்களை ஈரப்படுத்துகின்றார்… சான்சே இல்லை.. நீ  நல்ல நடிகன்யா …..

ரோட்டில் கிடப்பவனை காப்பாற்றும் இயல்புடைய  இரக்க இளைஞன் கண் தெரியாதவர்களை  காப்பாற்ற போராடும் போதும் முதலில் ஒநாயிடம் முன் கதை கேட்டு அவனும் உதவி இருப்பான்.. ஒரு மருத்துவமாணவனுக்கு குண்டு அடிபட்டவனுக்கு மறுநாள் பரிட்சையை வைத்துக்கொண்டு உதவும் ஒரு மாணவன் அந்த அளவுக்கு இரக்கமுள்ள  ரிஸ்க் எடுக்க கூடிய மாணவன்..  கண் தெரியாதவர்களையும்  ஒரு பார்வையற்ற சிறுமியை வைத்துக்கொண்டு பாடு படும் போது உதவாமல்  சாக்கடை மேன்  ஹோலில் போட்டு விடுவேன் என்று மிரட்டவே மாட்டான்…

இரண்டாவது லாஜிக்… போலிஸ்  நகரத்தின் சந்து பொந்து எங்கும் துரத்துகின்றது, கரடியும் துரத்துகின்றான், அவனுடைய ஆட்களும் துரத்துகின்றார்கள்…  அப்படி இருக்க…? முதலில் மூன்று  பேரையும் தப்பிக்க வைக்காமல் அவர்கள் ஒன்று சேர்க்க  கல்லறையை களமாக வைத்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம்… அது மட்டுமல்ல.. பார்வையற்ற சிறுமியாக இருந்தாலும்   நிசப்த இரவில் அமைதியாக இரு என்று அந்த குழந்தையை யாருமே   அறிவுருத்தவில்லை… அது மட்டுமல்ல நேரம் காலம் தெரியாமல்  கதை சொல்ல சொல்வது எரிச்சல்….

கதையை விட  உயிர் முக்கியம் சார்….. மூன்று பேரையும்  காப்பாற்ற உல்ப் போரடிக்கொண்டு இருப்பதில் பார்வையாளர்கள்  ஒன்றிப் போய்  கிடைக்கையில்   அவர்கள் மூன்று பேரிடமும் ஒரு சின்ன சீரியஸ்நஸ் கூட இல்லை…அதுவே பெரிய சருக்கல்… ஒரு கட்டத்தில்  பார்வையாளனுக்கு  பரிதாபம் வரவே தூக்கிக்கொண்டு ஒடுவது போல இருக்கின்றது….

சென்னை இரவு நேரத்தில் வாஷ் அவுட் சென்னையாக இருக்கின்றது… சென்னை இரவில் இப்படி இருக்காது… விடிய விடிய ஜனநடமாட்டம் இருந்துக்கொண்டே இருக்கும் நான் சொல்வது முக்கிய வீதிகளில்  கூட… வாஷ்   அவுட் ஆக இருக்கின்றது…சென்னைவாசிகள் பிரச்ச்சனை வந்தா எவனாவது அடிச்சிக்கிட்டு சாவட்டும்னு ஓடிபோய் ஒளிந்து கொள்வோமே தவிர இரவில் சாலையில் திரியாமல் இருக்க மாட்டோம்.

தயவு செய்து இனி வரும் படங்களில்  கீலா போல ஓடி நின்று   சற்று யோசித்து திரும்பி  சட்டையை மடித்துக்கொண்டு சண்டை போடுவதை   அல்லது தன்னை நம்பியவர்களை காப்பாற்றும் காட்சியை அடுத்த படத்தில் வேறு மாதிரியாக கம்போஸ் செய்யுங்கள்…. நாலு படி ஏறி திரும்பி இறங்கி அடிப்பது போலவாது எடுங்கள் மிஷ்கின்.-..

நரேன் சித்திரம் பேசுதடி, அஞ்சாதேவுல அதையே செஞ்சார்.. யுத்தம் செய்ல  சேரன்…  முகமூடி இப்படி ஒநாயும் படத்துல நீங்க… எம்ஜிஆர் பல படங்களில் கைய கடிச்சிக்கிட்டு அழுதார்…ஒரே ஆள்… மாஸ் ஹீரோ அவரு அப்படித்தான்.. ஆனால் உங்க படத்துல வேவ்வேறு ஆளுமை கொண்ட பாத்திரங்கள் அவர்கள்   அத்தனை பேரிடமும் ஒரே  மேனாரிசம் வாழையடி வாழையா வருவது நல்லா இல்லை மிஷ்கின் சார். 

ராஜா சார்  இசையை முதல் அரைமணி நேரத்துக்கு கேட்கும் போது இளையமைப்பாளர் கே வந்து ராஜவை தள்ளி விட்டு விட்டு உட்கார்ந்து மியூசிக் போட்டாறோன்னு நினைக்க வைக்கிறார்.. ஆனால் கல்லறை மற்றும் பார்க்கிங் பிளேசில் ராஜா அசத்தி இருக்கின்றார்…

 கருப்புக்கண்ணாடி இல்லாமல் மிஷ்கினை பார்க்கறது எவ்வளவு அழகு… சார் அடையாளத்தை விட கண்ணு ரொம்ப முக்கியம்…. அதை மட்டும் மனசுல வச்சிக்கோங்க… பதிவுலகில் அறியப்பட்ட  நர்சிம் இந்த படத்தில் டாக்டர் வேடத்தில் நடித்து இருக்கின்றார்… பதட்டத்தை விட சீன் முடிஞ்சா போதும் என்ற பயம் உடம்பில் நடுக்கத்தில் கண்ணில் தெரிகின்றது… காரணம் அது போல  ஒரு அனுபவம் எனக்கும் நடந்து இருக்கின்றது.

ஷாஜி குரல் போலிஸ் மிடுக்கிற்கு கூடுதல்  பலம்.. ஆனால்   குற்றவாளியை  தேடி ஓடும் போது, சில இடங்களில் பதட்டத்தின் காரணமாக சொப்பி இருக்கின்றார்…  நிறைய காட்சிகளில் நன்றாகவே நடித்து இருக்கின்றார்…
பறக்கும்  ரயில் காட்சி  நல்ல  சேசிங்.. பட் ஒரு வரியில் எழுதி விடுகின்றோம்.. ஆனால் அதுக்காக எப்படி உழைத்து இருப்பார்கள் என்று  என்னால் உணர முடிகின்றது… அந்த உழைப்புக்கு  ஒரு ராயல் சல்யூட்...

================
படத்தின் டிரைலர்

==========
படக்குழுவினர்  விபரம்

 Directed by     Mysskin
Produced by     Mysskin
Written by     Mysskin
Starring     Sri
Mysskin
Adithya
Shaji
Music by     Ilaiyaraaja
Cinematography     Balaji V Rangha
Studio     Lone Wolf Productions
Release date(s)   

    27 September 2013

Country     India
Language     Tamil

=============
பைனல் கிக்.

மிஷ்கின் சார்... இதுக்கு முன்ன நீங்க இயக்கிய அத்தனை படத்துக்கும்அ உலகசினிமா என்று கேப்ஷன் வைத்துதான் எழுதி இருக்கின்றேன்.. ஏன் முகமூடி படத்துக்கு கூட அப்படித்தான் எழுதினேன்... ஆனால் இந்த படம் எல்லோரையும் போல உசுப்பி விடு நான்  இந்த  திரைப்படத்தை ஆஹா ஓகோ  என்று  உங்களை உசுப்பி விட  எனக்கு விருப்பம் இல்லை... இந்த திரைப்படம்  உலகதிரைப்படத்தின் நேர்த்தி அதில் எந்த மாற்றமும் இல்லை ஆனால் நான் குறிப்பிட்ட லாஜிக் மீறல்கள் ரசிக்க முடியவில்லை... இல்லை இது  அடுத்த கட்டத்துக்கான திரைப்படம் என்று நீங்கள்  சொல்வீர்களே ஆனால் ஒன்றும் சொல்ல இல்லை...ஓநாயும் ஆட்டுக்குட்டியும்... ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்...

ஆனால் ஆஞ்சாதே படத்தில்  போலிஸ் நிலைய காட்சி... ஒருத்தன் பை எடுத்துக்கிட்டு வருவான் .. என்னன்னு கேட்கும் போது தொறந்து காமிப்பான்... அவனை ஓரமா உட்கார சொல்லுவார் போலிஸ்கார்.. நரேன் என்னன்னு கேட்கும் போது அதுல பொண்டாட்டி தலை இருக்கும்... அந்த காட்சி தமிழ்சினிமாவுக்கு புதுசு... பகிர் காட்சி... அது ஒரு உதாரணம்.. அது போல உங்களை எதிர்பார்க்கறேன்... மிஷ்கின்...  வாழ்த்துகள்...   கவிதையாக சொல்வதில் இருந்த கவனம், லாஜிக் காட்சிகளில் கோட்டை விட்டாலும்,மற்றவர்கள் போல அரைத்த மாவையே அரைத்து தள்ளாமல்  ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற வித்தியாசமான படைப்பை கொடுத்தமைக்கு...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
 
நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 
28 comments:

  1. என்னால் உணர முடிகின்றது… அந்த உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட்...

    ReplyDelete
  2. Anne ..Indha blog first la director ku kudutha advice is outstanding ...ullagam apadithan..

    ReplyDelete
  3. Nice Review Jackie sir,,,,,, Regards to Yazhini baby............

    ReplyDelete
  4. ஓநாயும் ......திரைபடத்தை பற்றி ஒரு அருமையான விமர்சனத்தை உங்களிடம் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டேன் உங்களுக்கும் மிஸ்கின் இடையில் எதாவது லடாய் போல் தெரிகிறது Darwaso bandh rakho என்ற ஹிந்தி படத்தை உல்டா பண்ணி எடுத்த மூடர்கூடம் என்ற மொக்க தர்பாருக்கு இதைவிட சூப்பர் விமர்சனம் தந்த உங்களிடம் நல்லதொரு விமர்சனம் எதிர்பார்த்தது தப்பு (இந்த குறும்பட இயக்குனர்கள் தொல்லை எப்போது தீரும் என்று தெரியாது )

    ReplyDelete
  5. ஓநாயும் ......திரைபடத்தை பற்றி ஒரு அருமையான விமர்சனத்தை உங்களிடம் எதிர்பார்த்து ஏமாந்துவிட்டேன் உங்களுக்கும் மிஸ்கின் இடையில் எதாவது லடாய் போல் தெரிகிறது Darwaso bandh rakho என்ற ஹிந்தி படத்தை உல்டா பண்ணி எடுத்த மூடர்கூடம் என்ற மொக்க தர்பாருக்கு இதைவிட சூப்பர் விமர்சனம் தந்த உங்களிடம் நல்லதொரு விமர்சனம் எதிர்பார்த்தது தப்பு (இந்த குறும்பட இயக்குனர்கள் தொல்லை எப்போது தீரும் என்று தெரியாது )

    ReplyDelete
  6. அன்பின் பாலகிருஷ்ணன்... உங்கள் அவதனிப்புக்கு நன்றி.. ஓநாய் படம் நல்ல படம்... அதில் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டினேன்... அம்புட்டுதான்... மற்றபடி உங்க அவதனிப்பு மெய்சிலிர்க்க வைக்கின்றது..

    ReplyDelete
    Replies
    1. jackie sir எந்த படத்தில் தான் குறைகள் இல்லை .இந்த படத்திலும் இந்த குறைகள் சரி செய்தால் ஓநாயும் ஒரு சுமாரான படமாகும் அபாயமும் இருக்கு
      (வழக்கு என் படத்தில் திரைக்கதையில் உள்ள சிறிய தவறு இன்றும் எனக்கு நெருடலாக இருக்கு ) பாலாவிடம் ஒரு ஸ்டையில் மிச்கின்ன்க்கு வேறு மாதிரியாக இருக்கும் . உங்களிடம் நான் எதிர்பார்த்த விமர்சனம் மற்ற பதிவுலக நண்பர்களின் சராசரியான விமர்சனம் போல் இல்லாமல் நல்ல சினிமாவுக்கு ஆன விமர்சனமே.
      (உங்கள் விமர்சனகள் மூலம் நான் நல்ல திரைப்படங்கள் தேடி பார்க்கிறேன் நன்றி )

      Delete
    2. jackie sir எந்த படத்தில் தான் குறைகள் இல்லை .இந்த படத்திலும் இந்த குறைகள் சரி செய்தால் ஓநாயும் ஒரு சுமாரான படமாகும் அபாயமும் இருக்கு
      (வழக்கு என் படத்தில் திரைக்கதையில் உள்ள சிறிய தவறு இன்றும் எனக்கு நெருடலாக இருக்கு ) பாலாவிடம் ஒரு ஸ்டையில் மிச்கின்ன்க்கு வேறு மாதிரியாக இருக்கும் . உங்களிடம் நான் எதிர்பார்த்த விமர்சனம் மற்ற பதிவுலக நண்பர்களின் சராசரியான விமர்சனம் போல் இல்லாமல் நல்ல சினிமாவுக்கு ஆன விமர்சனமே.
      (உங்கள் விமர்சனகள் மூலம் நான் நல்ல திரைப்படங்கள் தேடி பார்க்கிறேன் நன்றி )

      Delete
  7. மருத்துவமாணவன், கவுறவ, பல்விளக்கி, கடந்தல், கிடைக்கையில், ஒடுவது, பிரச்ச்சனை, படத்துக்கும்அ, உசுப்பி விடு. Last but not least காரணமாக சொப்பி இருக்கின்றார்…

    We can't write a post without grammatical or typo error, but we criticize about loop holes in logic of a film, irony isn't it?

    Reminds me dialogue in the movie Raja Rani 'பேட்டரியே நிக்காத செல் போனுக்கு dual sim கேக்குதா......'

    ReplyDelete
  8. Jackie ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தோட போஸ்டர் டிசைன் பாருங்களேன். அது the chaser படத்தோட போஸ்டர் மாறி இருக்கு.

    ReplyDelete
  9. முருகனும் கர்த்தரும் கைவிட்ட போலிசை "அய்யா" காப்பாத்தும் காட்சி அருமையான காமடி.மிஸ்கின் கதை சொல்லும் போது அவருக்கு குரல் இசைராஜா தானே?

    ReplyDelete
  10. முருகனும் கர்த்தரும் கைவிட்ட போலிசை "அய்யா" காப்பாத்தும் காட்சி அருமையான காமடி.மிஸ்கின் கதை சொல்லும் போது அவருக்கு குரல் இசைராஜா தானே?

    ReplyDelete
  11. jackie enna dhan logic ottaya irundhalum ... padam ninu pesunichu... first scenla seat nuniku vandhaven... kadesiya mysikkin flash back sonadhku appuram dhan seat la sanchen... Dark thriller... Chance less amazing...

    ReplyDelete
  12. படத்துல ஒரு போலீஸ் கேரக்டர் வராரே அவர பாக்கும் பொது அஞ்சாதே படம் நியாபகத்துக்கு வந்திட்டு போகுது. மத்த படி கால கட்டுவாரு ஆனா இந்த படத்துல நல்ல வேலை கால காட்டல அது வரைக்கும் சந்தோஷம்.. படம் நல்ல இருக்கு ஆனா கொஞ்சம் கொஞ்சம் போர் அடிக்குது...உலக சினிமான்னு பாத்தா நல்ல படம் .
    கல்லா கட்றதுக்கு இந்த படம் நம்ம ஆளுங்களுக்கு செட் ஆகாது . எத பத்தியும் கவலை படமா பாட்டே இல்லாம ஒரு தமிழ் படம் எடுக்குறதுக்கு தைரியம் வேண்டும் அது மிஸ்கின் னுக்கு நெறைய இருக்கு பாராட்டலாம்.

    ReplyDelete
  13. ஜாக்கி, நான் இன்னும் படம் பார்க்கவில்லை. இருந்தாலும், பெரும்பாலானோர் சுட்டிக்காட்டாத லாஜிக் மீறல்களை நீங்கள் சுட்டிக் காட்டி இருப்பது தான் நியாயமான விமர்சனம். எப்படிப்பட்ட சிறந்த படைப்பாக இருந்தாலும் லாஜிக் மீறல்கள் படத்தின் நம்பகத்தன்மையை குறைத்து விடுவதால், உலக தரம் என்று சொல்லும் தகுதியை இழந்து விடுகின்றது. 100 ஆண்டு கண்ட இந்திய சினிமா என்று பீற்றிக் கொண்டாலும், தமிழில் எந்த காம்ப்ரமைசும் இல்லாத ஒரு உலகத் தர படைப்பிற்கு இன்னும் காத்துக் கொண்டு இருக்கிறோம் என்பது தான் உண்மை.

    அதுவரை ..... //வாழ்த்துகள்... கவிதையாக சொல்வதில் இருந்த கவனம், லாஜிக் காட்சிகளில் கோட்டை விட்டாலும்,மற்றவர்கள் போல அரைத்த மாவையே அரைத்து தள்ளாமல் ஓநாயும் ஆட்டுக்குட்டியும் போன்ற வித்தியாசமான படைப்பை கொடுத்தமைக்கு...// இப்படித்தான் ஆறுதல் பெருமூச்சு விட்டுக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  14. படம் பார்த்தேன்... ராசாவின் பின்னணி இசை மிரட்டல்...

    ReplyDelete
  15. jackie two days before had u presented a news article in any channel(i think polymer). i heard ஒளிபதிவாளர் கருபையவுடன் ஜாக்கி. is it u jackie? the news is about film festival without charges.......

    ReplyDelete
  16. நீங்க சொன்ன லாஜிக் தவறுகள் எனக்கும் தெரியும். ஆனால் மற்ற குப்பைகளை பார்க்கும் பொழுது, இது அருமைதானே?. ஒரு படத்தைப் பற்றி குறை சொல்ல வேண்டுமானால் எவ்வளவோ சொல்லலாம், அதன்படி எந்தப் படமும் சிறந்த படமாக இருக்க முடியாது. ஏன் நீங்கள் கதை எழுதுங்களேன் அதில் எத்தனை லாஜிக் மிஸ் என்று பார்போம். "முட்டை போடுற கோழிக்குதான் வலி தெரியும்"

    ReplyDelete
  17. நீங்க சொன்ன லாஜிக் தவறுகள் எனக்கும் தெரியும். ஆனால் மற்ற குப்பைகளை பார்க்கும் பொழுது, இது அருமைதானே?. ஒரு படத்தைப் பற்றி குறை சொல்ல வேண்டுமானால் எவ்வளவோ சொல்லலாம், அதன்படி எந்தப் படமும் சிறந்த படமாக இருக்க முடியாது. ஏன் நீங்கள் கதை எழுதுங்களேன் அதில் எத்தனை லாஜிக் மிஸ் என்று பார்போம். "முட்டை போடுற கோழிக்குதான் வலி தெரியும்"

    ReplyDelete
  18. .நீங்கள் சொன்ன லாஜிக் விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்தவையே. ஆனால் மற்ற குப்பைகளைப் பார்க்கும் போது ( வருத்தப் படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, யா யா, தில்லு முல்லு, சேட்டை, சமர், பட்டத்து யானை,ஆதிபகவன், வணக்கம் சென்னை, பிரியானி, எதிர் நீச்சல், குட்டி புலி, மரியான், தலைவா, தேசிங்கு ராஜ,...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.) இந்தப் படம் நல்லப் படம்தான். அப்படியானால் எந்தப் படத்தை நல்லப் படம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். சரி நீங்கள் ஏன் இந்த லாஜிக் இல்லாமல் கதை எழுதக்கூடாது. முடிஞ்சா எழுதிதான் பாருங்களேன். முட்டை போடுற கோழிக்குதான் வலி தெரியும்.

    ReplyDelete
  19. .நீங்கள் சொன்ன லாஜிக் விவரங்கள் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்தவையே. ஆனால் மற்ற குப்பைகளைப் பார்க்கும் போது ( வருத்தப் படாத வாலிபர் சங்கம், ராஜா ராணி, யா யா, தில்லு முல்லு, சேட்டை, சமர், பட்டத்து யானை,ஆதிபகவன், வணக்கம் சென்னை, பிரியானி, எதிர் நீச்சல், குட்டி புலி, மரியான், தலைவா, தேசிங்கு ராஜ,...இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.) இந்தப் படம் நல்லப் படம்தான். அப்படியானால் எந்தப் படத்தை நல்லப் படம் என்று நீங்கள் சொல்கிறீர்கள். சரி நீங்கள் ஏன் இந்த லாஜிக் இல்லாமல் கதை எழுதக்கூடாது. முடிஞ்சா எழுதிதான் பாருங்களேன். முட்டை போடுற கோழிக்குதான் வலி தெரியும்.

    ReplyDelete
  20. //ஆதிபகவன், வணக்கம் சென்னை, பிரியானி, எதிர் நீச்சல், குட்டி புலி// யோவ் டுபுக்கு.."பிரியாணி, வணக்கம் சென்னை" படங்கள் இன்னும் வரவே இல்ல...அதுக்குள்ள குறை சொல்லை ஆரம்பிச்சிட்டியா...அவ்ளோ பெரிய அப்பாடக்கரா பா நீயி???

    ReplyDelete
  21. //வணக்கம் சென்னை, பிரியானி, எதிர் நீச்சல், குட்டி புலி, // யோவ் டுபுக்கு.."பிரியாணி, வணக்கம் சென்னை" படங்கள் இன்னும் வரவே இல்ல...அதுக்குள்ள குறை சொல்லை ஆரம்பிச்சிட்டியா...அவ்ளோ பெரிய அப்பாடக்கரா பா நீயி???

    ReplyDelete
  22. -//கண் தெரியாதவர்களையும் ஒரு பார்வையற்ற சிறுமியை வைத்துக்கொண்டு பாடு படும் போது உதவாமல் சாக்கடை மேன் ஹோலில் போட்டு விடுவேன் என்று மிரட்டவே மாட்டான்//--- அந்த ஆட்டுக்குட்டி ஓநாயாக மாறிவிட்டதை எப்படி காட்சி படுத்த ?............
    --//இரண்டாவது லாஜிக்… போலிஸ் நகரத்தின் சந்து பொந்து எங்கும் துரத்துகின்றது, கரடியும் துரத்துகின்றான், அவனுடைய ஆட்களும் துரத்துகின்றார்கள்… அப்படி இருக்க…? முதலில் மூன்று பேரையும் தப்பிக்க வைக்காமல் அவர்கள் ஒன்று சேர்க்க கல்லறையை களமாக வைத்து இருப்பதை தவிர்த்து இருக்கலாம//-- சி பி சி ஐ டி போலீஸ் சொல்லும் வசனம் . இந்த தேதி இந்த கேசில் எங்கியோ வருகின்றது என்பார் ...கிராமத்து பின் புலத்தில் வந்த உங்களுக்குமா இது புரியவில்லை ( அவர் வாழுந்த வீட்டுல தான் தெவெசம் கொடுக்கணும் என்று பட்டினத்தில் வாழும் அனைவரையும் கிராமத்து இழுக்கும் பெருசுகள் பற்றி என்ன சொல்ல )
    --//அது மட்டுமல்ல.. பார்வையற்ற சிறுமியாக இருந்தாலும் நிசப்த இரவில் அமைதியாக இரு என்று அந்த குழந்தையை யாருமே அறிவுருத்தவில்லை… அது மட்டுமல்ல நேரம் காலம் தெரியாமல் கதை சொல்ல சொல்வது எரிச்சல்//-- இருபது வருடம் கழித்து மணிரத்தினத்திடம் சாரி கேட்டது போல்,, இன்னும் இரண்டு வருடம் கழித்து மிஸ்கின் இடம் வருத்தம் கேட்பிர்கள்.. குழந்தைகள் அப்படித்தான்.........( எனது சிறிய மகன் நேரம் கேட்ட நேரத்தில் தான் கதை கேட்பான் )

    -//கதையை விட உயிர் முக்கியம் சார்….. மூன்று பேரையும் காப்பாற்ற உல்ப் போரடிக்கொண்டு இருப்பதில் பார்வையாளர்கள் ஒன்றிப் போய் கிடைக்கையில் அவர்கள் மூன்று பேரிடமும் ஒரு சின்ன சீரியஸ்நஸ் கூட இல்லை…அதுவே பெரிய சருக்கல்//-- உலகத்தில் ஒவ்வொரு குடும்பமும் ஒரே சமாசாரத்திற்கு வெவ்வேறு விதமாக ரியாக்ட் செய்வார்கள்.. உங்களுக்கு பிடித்தமாதிரி ரியாக்ட் செய்ய சொல்வது ...........
    -//சென்னை இரவு நேரத்தில் வாஷ் அவுட் சென்னையாக இருக்கின்றது… சென்னை இரவில் இப்படி இருக்காது… விடிய விடிய ஜனநடமாட்டம் இருந்துக்கொண்டே இருக்கும் நான் சொல்வது முக்கிய வீதிகளில் கூட… வாஷ் அவுட் ஆக இருக்கின்றது…சென்னைவாசிகள் பிரச்ச்சனை வந்தா எவனாவது அடிச்சிக்கிட்டு சாவட்டும்னு ஓடிபோய் ஒளிந்து கொள்வோமே தவிர இரவில் சாலையில் திரியாமல் இருக்க மாட்டோம்//-- கெருகம்பாக்கம் சுய உதவி குழு கொலை யாராவது அந்த நேரம் ரோடில் திரிந்து இருந்தால் தவிர்த்து இருக்கலாமே........போரூர் ஏரியில் கம்யூனிஸ்ட் வரதராஜன் பிணம் ஒன்றும் பட்ட பகலில் நடந்தது அல்லவே?
    --//
    நரேன் சித்திரம் பேசுதடி, அஞ்சாதேவுல அதையே செஞ்சார்.. யுத்தம் செய்ல சேரன்… முகமூடி இப்படி ஒநாயும் படத்துல நீங்க… எம்ஜிஆர் பல படங்களில் கைய கடிச்சிக்கிட்டு அழுதார்…ஒரே ஆள்… மாஸ் ஹீரோ அவரு அப்படித்தான்.. ஆனால் உங்க படத்துல வேவ்வேறு ஆளுமை கொண்ட பாத்திரங்கள் அவர்கள் அத்தனை பேரிடமும் ஒரே மேனாரிசம் வாழையடி வாழையா வருவது நல்லா இல்லை மிஷ்கின் சார். //-- எந்த விதமான சினிமா வாக இருந்தாலும் I will be back என்று வசனம் சொல்லும் அர்னோல்ட் பற்றி யாரும் ஒன்றும் சொல்வது இல்லை...

    வத்திகுச்சி பட மோகன் குமார் விமர்சனத்தில் - தமிழ் சினிமா-வின் இன்றைய நிலைமையை சொல்லி இனைய தள நண்பர்கள் நெகடிவ் விமர்சனம் செய்ய வேண்டாம் என்று பாணியில் நீங்கள் சொன்னது மிஸ்கின் -கு இல்லை போலும்.

    -//ராஜா சார் இசையை முதல் அரைமணி நேரத்துக்கு கேட்கும் போது இளையமைப்பாளர் கே வந்து ராஜவை தள்ளி விட்டு விட்டு உட்கார்ந்து மியூசிக் போட்டாறோன்னு நினைக்க வைக்கிறார்//-- பட்ஜெட் பொறுத்து குறைந்த இசை கருவியை வைத்து இந்த படம் இசை அமைக்க பட்டது போல் தெரிகிறது...முதல் இரண்டு கட்டத்தில் violin சுருதி சுத்தம் ராஜாவின் இசை இது என்று கட்டியம் கூறுகிறது....

    எனது பெரியவன் புத்தக புழு (ஆங்கிலம்)... நாவல் -சினிமா ஆக்கம் பற்றி தர்க்கம் செய்வதில் வல்லவன்.. அவன் பார்த்து முடித்து கைதட்டிய தமிழ் சினிமா ரொம்ப குறைவு... மௌனராகம் , நாயகன், பிறகு இந்த படம் முடிந்ததும் எழுந்து கை தட்டி பாராட்டினான் .

    ReplyDelete
  23. -//கண் தெரியாதவர்களையும் ஒரு பார்வையற்ற சிறுமியை வைத்துக்கொண்டு பாடு படும் போது உதவாமல் சாக்கடை மேன் ஹோலில் போட்டு விடுவேன் என்று மிரட்டவே மாட்டான்//--- அந்த ஆட்டுக்குட்டி ஓநாயாக மாறிவிட்டதை எப்படி காட்சி படுத்த ?............

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner