2.0 Movie review in Tamil by Jackiesekar | 2.0 சினிமா விமர்சனம்
நம்ம தமிழ்நாட்டுக்கு இருக்கற ஒரே சூப்பர் அரா சிட்டிதான்... நமக்கு ஏதாவது சயின்ஸ்ஸபிக்ஷ்ன் மூலமா ஆபத்து வந்த காப்பாத்த அவரை விட்டா ஆளே இல்லை...
படத்தின் கதை சூப்பர் ஹீரோக்கள் கதைதான் அடிப்படை.... நிறைய லாஜிக் மிஸ்டேக் இருக்கு...
சூப்பர் ஹீரோ படத்துல வாஜிக் பார்த்தா வேலைக்கு ஆகாது..
சென்னை வெள்ளத்துக்கு காரணம் காசி தியேட்டர் தரைப்பாலமா ?
சென்னை காசி தியேட்டர்ல புது படம் போட்டா... ஜெயா டிவி வரை டிராபிக் தேவுடு காக்கும்..
சட்டுன்னு தரை பாலத்தை புடுச்சி ஜபர்கான் பேட் பக்கமா போயி சைதாட்பேட்டை இல்லை அசோக் நகர் போயிடுலாம்...
அதே போல இந்த பக்கம் இந்திராதியேட்டர் உள்ள இருந்து வருகின்றவர்கள் தரைபாலத்து வழியா மெயின் பாலத்து வழியா பூந்து புதியதலைமுறை பக்கமா கிண்டி போயிடலாம்...
அந்த அளவுக்கு அந்த தரைப்பாலம் பெருமளவு பீக் அவர்ல இருசக்ர வாகன ஓட்டிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றால் அது மிகையில்லை...
105 நாட்கள்… காணாமல் போய் இருந்தேன்… #பிக்பாஸ் #biggbosstamil2
105 நாட்கள்…
காணாமல் போய் இருந்தேன்…
ஆம் சோசியல் மீடியாவில் லைக் ஷேர் கமென்ட் எதுவும் அதிக அளவில் செய்யவில்லை.. அதில்நண்பர்களுக்கு கோபம் கூட இருக்கலாம்…
105 நாள் பிக் பாஸ் ரிவியூவ் விடாமல் செய்தேன்… அதுவும் பத்து நிமிடம் எல்லாம் இல்லை.. குறைந்தது ஒரு மணிநேரம்…
முதலில் இதை நான் ஏன் செய்கிறேன் என்று கேள்விகள்தான் அதிகம்..
என்னை பொருத்தவரை…
அங்கே நடமாடும் மனிதர்களின் சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் மனிதர்களின் எண்ண வோட்டத்தை நான் படிக்க இந்த ரிவியூவை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டேன்…
Labels:
அனுபவம்,
சமுகம்,
தொலைக்காட்சி
Seema Raja Tamil movie review by #Jackiesekar | #Seemaraja #சீமராஜா
விடியற்காலை ஐந்து மணி படத்துக்கு சினிமா ரசிகன் காலை மூன்று மணிக்கே எழுந்து திரைப்படத்துக்கு வர வேண்டும்… காலை ஐந்து மணிக்கு காசி தியேட்டர் வாசவில் ஜெ ஜெ என்று கூட்டம்… எத்தனை நாளைக்குதான் இந்த ஜெ ஜெ … விடியற்காலை ஐந்து மணிக்கு காசி தியேட்டர் வாசலில் கருணாநிதி பேச்சை கேட்க கூடிய கூட்டம் போல அவ்வளவு கூட்டம்… ஜிஎஸ்ட்டி சாலையில் டிராபிக்… எல்லாம் மீறி காசி தியேட்டர் வாசலை மிதித்தால் ஐந்து மணி ஷோ கேன்சல் என்கின்றார்கள்.
சமீபகாலமாக வெளியாகும் திரைப்படங்கள் விடியற்காலை ஷோ கேன்சல் செய்து ரசிகர்களை அலைய வைப்பது என்பது தமிழ் சினிமாவின் எதிர்காலத்துக்கு நல்லது இல்லை என்பேன்…
Labels:
டைம்பாஸ் படங்கள்,
தமிழ் சினிமா விமர்சனம்
#Junga Review By Jackiesekar #VijaySethupathi #Sayyeshaa, #MadonnaSebastian
இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாராவிற்கு பிறகு விஜய் சேதுபதி இயக்குனர் கோகுல் ஒன்று சேர்ந்து இருக்கும் படம் என்பதால் எப்படியும் காமெடி ஜானரில் கால் பதித்து இருப்பபார்கள் என்பதை உணர முடிந்தது..
கண்டக்டர் விஜய்சேதுபதிக்கு ஒரு பிளாஸ்பேக்.. விஜய்சேதுபதி அப்பா சென்னையில் ஒரு தியேட்டர் நடத்தி நஷ்டப்பட்டு அதை ஒரு செட்டியார்கிட்ட வித்துட்டார்... அந்த தியேட்டரை எப்படி விஜய் சேதுபதி மீட்டார் என்பதே ஜுங்கா படத்தின் கதை.
சூரி என்கிற சுரேஷ்குமார்
கடந்த வாரம் முழுவதும் வலியும் வேதனையுமாக கடந்து போனது...
எட்டாம் வகுப்பு வரை கடலூர் திருப்பாதிரிப்பூலியூர் அக்கிள் நாயுடு தெருவில் இருக்கும் ராமகிருஷ்ணா உதவி பெறும் நடுநிலைப்பள்ளியில்தான் எட்டாம வகுப்பு வரை...
சென்ட் ஜோசப் கம்மியம் பேட்டை பள்ளியில் 9ஜி வகுப்புல் நான் சேர்ந்து ஒரு வருடம் பெயில் வேறு ...
அப்பதான் சூரி எனக்கு பழக்கம்..
Labels:
அனுபவம்
கடைக்குட்டிசிங்கம் திரைவிமர்சனம் #KadaikuttySingam Movie Review
#கடைக்குட்டிசிங்கம்
#KadaikuttySingam Movie Review
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்துக்கு விமர்சனம் எழுதுபவர்கள் எல்லோரும் ஒரு விஷயத்தை தவறாமல் கண்டிப்பாக எழுதுவார்கள்.. அடித்து துவைத்து காயப்பபோட்ட அரத பழசான கதை என்று... ஆனால் பிரசன்டேஷன் என்று ஒன்று இருக்கின்றது அல்லவா?
ஒரு நல்லவனை கெட்டவனாகவும் ஒரு கெட்டவனை நல்லவனாகவும் உருமாற்றும் சக்தி திரைக்கதைக்கு உண்டு அதனை சரிவர கற்று தேர்ந்வர்களே சினிமா உலகில் மூன்று படத்துக்கு மேல் இன்னமும் வலம் வந்துக்கொண்டு இருக்கின்றார்கள்.
#auravatham Review #அசுரவதம் திரைவிமர்சனம்
2003 ஆம் ஆண்டு கொரியாவில் வெளியான ஓல்ட் பாய் திரைப்படத்தின் கதையின் ஒன்லைன் 15 வருடம் தனிமை சிறையில் இருந்தவன் வெளி வருகின்றான். வெளி வருகின்றான் என்றால் தப்பித்து அல்ல.. விடுவிக்க படுகின்றான்..
ஆனால் எவன் கடத்தினான் என்பது தெரியாது... ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை.. பதினைந்து வருடம்.. தனிமை சிறை வேறு... சாப்பிட்டு பேண்டு.... என்ன வாழ்க்கை...? அதற்கு காரணமாவனை ங்கோத்தா எவன்டா அவன் என்று கண்டு பிடித்து சல்லி சல்லியாக செதில் செதிலாக வெட்டி போட வேண்டும் என்று ஒரு கோவம் வரும் அல்லவா.? படம் பார்க்கும் நமக்கே வரும் போது...? அவனுக்கு வராதா? என்ன-
யாருக்கிட்ட???
மனைவிக்கு இரண்டு நாளாய் கழுத்து வலி...
சாலையில் இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் போது பள்ள மேடுகளை பார்த்தே வண்டி ஓட்டுவேன்..
என் கிரகம் சில மேன் ஹோல்கள் மற்றும் சிறிய பள்ளங்கள் எனக்கு திட்டு வாங்கி கொடுப்பதாகவே வந்து தொலைக்கும்.
நிற்க
Labels:
அனுபவம்
Lust Stories (2018) Hindi Movie review in Tamil by Jackiesekar | #jackiecinemas
தோழிகளோடு பேசிக்கொண்டு இருந்தேன்.. அவள் குடும்பத்தில் சின்ன ஊடல்..
பேச்சின் சுவாரயஸ்யத்தில் உன் கணவனின் காதலை பார் ... காமத்தை பார் என்று சொல்லிவிட்டேன்..
உற்ற தோழி ஒருத்தி சொன்னாள்... உனக்கு எப்ப பாரு அதே நினைப்புதான் என்றதோடு மட்டுமல்லாமல்... எப்பபாரு எங்க சுத்தினாலும் நீ இங்கதான் வந்து நிப்ப... என்றார்..
Labels:
இந்திசினிமா,
பார்த்தே தீர வேண்டிய படங்கள்
Subscribe to:
Posts (Atom)