நான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர் எழுதிய பதிலும்....


ஒரு ஜனாதிபதி அதுவும் நம் தாய் மொழி நன்கு தெரிந்த நபர்.... இனிவரும் காலம் இளைஞர் காலம் என்பதை கண்டு ,தனக்கு பிள்ளை இல்லாவிட்டாலும் இந்த தேசத்தில் உள்ள எல்லா பிள்ளைகளையும் தன் பிள்ளையாக நினைக்கும் அந்த பெரியவர். அப்படி எளிமையாக நம் இந்தியநாட்டின் ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாமுக்கு, அவர் ராஷ்ட்ரபதி பவனில் வாசம் செய்த போது அவருக்கு ஒரு கடிதம் எழுதினேன்.... என்னவென்றால் அவர் சென்னை வந்த போது அவர் பாதுக்காப்பு எல்லை தாண்டி துரு துரு என்று வெளியே வந்து விடுகின்றார் என்ற செய்தி பத்திரிக்கைகளில் படித்த போது அவருக்கு ஒரு கடிதம் எழுத தோன்றியது.... அது உங்கள் பார்வைக்கு.....

20/12/2002
வெள்ளிக்கிழமை
காலை 10.30
சென்னை 87

“பாதுகாப்பு வளையங்களை மீறி பொதுமக்களை ஜனாதிபதி சந்தித்தார்” என்று நாளேடுகளில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன...
ஐயா , நீங்கள் எளிமையானவர்தான்... இந்தியாவை தவிர வேறு எது குறித்தும் கவலை கொள்ளாதவர் நீங்கள்... ஆனால், எதிர்கால இந்தியா உங்களை போன்ற ஒரு சிலரை மிகுந்த நம்பிக்கையோடும், மிகுந்த எதிர்பார்ப்புகளோடும் கவனித்து கொண்டு இருக்கின்றது....

கவர்னர் மாளிகை காட்டுக்குள் 2 மணிநேரம் நடைபயணம்...
“அதுவும் பாதுகாப்பு வளையத்தை தாண்டி” இதே இடத்தில் தமிழர் வெங்கட்ராமன் ஜனாதிபதியாக இருந்த போது இது போல் கவலை கொண்டதில்லை...

நாட்டின் எதிர்காலம் இளைஞர் கையில் என்பது பலரின் எண்ணம்... சாரி அது பலரின் தவறான கணிப்பு... ஆம் உங்கள் எண்ணப்படி பள்ளிக்குழந்தைகள் கையில்தான், இந்தியாவின் எதிர்காலம் உள்ளது...அவர்கள் மனதில் இந்திய முன்னேற்ற விதை ஊன்றினால் அது பசு மரத்தானிபோல் பதிந்து விடும்... என்பதை புரிந்தவர் நீங்கள் ... அந்த வகையில் நான் உங்களுக்கு நன்றி சொல்கின்றேன்....

எந்த ஒரு தீவிரவாத குழுவும் தமிழகத்தை சிறந்த இடமாக தேர்வு செய்து கொள்கின்றன... இங்குள்ள மக்கள் வெகுளிகள்... வெளுத்தது எல்லாம் பால் என்று நம்புபவர்கள்...ஸ்ரீ பெரும்பத்தூர் சோககறை இன்னும் மறையவில்லை, மறக்கடிக்கபடவில்லை... சோ தயவு செய்து பாதுகாப்பு வளையத்தை மீறாதீர்கள்...
எல்லா தீவிரவாத அமைப்புகளும் உலகத்தின் கவனம் தங்கள் மீது திரும்ப எதுவும் செய்ய தயாராகிவிட்டன என்பதை நாம் கவனித்து கொண்டுதான் இருக்கின்றோம்...

வார்வில் எவ்வளவோ பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம் இந்த விஷயங்கள் கவலை அளிப்பதால் இந்த கடிதம் உங்களுக்கு எழுத தோன்றியது... அதுவும் தாய் மொழியில் நான் எழுதிய விஷயங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ளவிரும்பினேன் நீங்கள் தமிழர் என்பதால்.....

ஆடம்பரம் இல்லாத ஜனாதிபதிக்கு இந்த மடல் பிடிக்கும் என்று நம்புகின்றேன்...நிகழ்ச்சி நிரல் படி நடக்கும் விழாக்களை யே புறக்கனிக்கும் இந்த காலத்தில்....உங்கள் நிகழ்ச்சி நிரலில் இல்லாம ஆலந்தூர் மகளீர் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி...
இந்த கடிதத்தை நீங்கள் எந்தளவுக்கு மதிப்பீர்கள் அல்லது புரிந்து கொள்வீர்கள் என்று தெரியவில்லை எதிர்காலத்தில் நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமான உடம்புடன் நீர் நலமுடன் இன்னும் பபல அரிய சேவைகள் செய்ய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கின்றேன்.....

அன்புடன்...
தனசேகரன்(ஜாக்கிசேகர்)

ஒரு மூன்றுமாதம் கழித்து அவர் அனுப்பிய பதில் கீழே....

ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்
ராஷ்ட்ரபதி பவன்
நியூடெல்லி. 1100004


திரு தனசேகரன் அவர்களுக்கு,
வணக்கம்
தங்கள் அன்பான கடிதம் கிடைத்தது
என் வாழ்த்துக்கள்.

அன்புடன்
ஆ.பெ.ஜெ. அப்துல் கலாம்....

கடிதம் என்கைகளில் தவழ்ந்த அன்று நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை....

அவரை ஜனாதிபதியாக சென்னை சிவானந்த குருகுலத்துக்கு வந்த போது பத்தடி தூரத்தில் கேமரா அசிஸ்டென்டாக அந்த நிகழ்ச்சிக்கு போன போது பார்த்தது....
மிகவும் எளிமையான மனிதர் கலாம்...

அந்த நிகழ்ச்சியில் பல பிள்ளைகளின் கேள்விக்கு பதில் அளித்ததும் ரொம்ப பொறுமை காத்ததும் எனக்கு மிகுந்த ஆச்சர்யத்தை தந்தன....இப்படியும் ஒரு மனிதர் சுயநலமில்லாமல்.....நம்மோடு வாழ்கின்றார் அதுவே பெரிய விஷயமில்லையா???,

அன்புடன்
ஜாக்கிசேகர்

(Final Destination 2)படம் பார்த்து விட்டு பாத்ரூம் போகவே பயந்தபடம்...


இரவில் சிறு வயதில் நீங்கள் தனியாக சு்சுசு போகும் போது கொடுர முகங்கள்,வெள்ளை சேலை பேய் போன்றவை நம் அருகே வந்து கற்பனை வெளியில்,மற்றும் மனத்திரையில் வந்து பயமுறுத்தி சுச்சு ஒழுங்காக போகவிடாமல் தொந்தரவு செய்யும்.... இதனால் சுச்சு அவசர அவசர முடித்து என்பதைவிட, பயத்தில் பாதியில் செயல் முழுமை பெறாமல், தூக்கி உள்ளே போட்டுக்கொண்டு ஓடகால்டவுசரில் அதன் மிச்சம் வீட்டின் வெளிச்சத்தில் எட்டிப்பார்க்கும்.....

ஆனால் இந்த படம் பார்த்து விட்டு அதுவும் இரவில் பார்த்துவிட்டு சுச்சுவோ அல்லது வெளித்தெருவுக்கோ சட்டென போக முடியாது என்பதே உண்மை... அப்படி பட்ட பயமா? எனக்காக? என்று யாரும் சொல்ல வேண்டாம்... எங்க தலைவர் கமல் குருதியுனல் படத்திலேயே வீரம்ன்றது பயம் இல்லாதது போல நடிக்கிறதுன்னு சொல்லிட்டார்....

நீங்கள் இயல்பான வாழ்க்கையில் கடந்து போகும் அல்லது கவனிக்க மறந்து போகும் சின்ன சின்ன விஷயங்கள் கூட உங்கள் உயிருக்கு உலைவைக்கலாம் என்பதுதான் பைனல் டெஸ்ட்டினேஷன் 2 படத்தின் கதை .....

வெக்கேஷனுக்கு தன் நண்பர்களுடன் காரில்செல்லும் Kimberly Corman ( A.J. Cook)க்கு தன் மனத்திரையில் அவள் போகும் ஹைவேசில் நடக்கும் மிகப்பெரிய சாலை விபத்து அவள் மனக்கண்ணில் தெரிகின்றது... அவள் அலரி அடித்து நடக்கவிருந்த பெரும் விபத்தை தடு்த்து நிறுத்துகின்றாள்... அவள் தடுத்து நிறுத்தியதால் ஒரு 9 பேர் உயிர் பிழைத்து இருப்பார்கள்...

உயிர் பிழைத்த அவர்கள் எப்படி கொடுரமாக சாகின்றார்கள் என்பதும் அவர்களுக்கு இறப்பு என்பது எப்படி வருகின்றது என்பதையும் சுவாரஸ்யத்தோடு கொடுரத்தையும் அள்ளி தெளித்து கதை சொல்லி இருக்கின்றார்கள்....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....
இந்த படத்தின் முதல்பாகம் ரசிகர்களிடம் பெருத்த வரவேற்பை பெற்றது... அந்த படத்தில் விமானவிபத்து இந்த படத்தில் நெடுஞ்சாலை விபத்து...ஏனோ முதல் பகுதி, மூன்றாம் பகுதியை விட இந்த படம் எனக்கு பிடித்து படம்....

ஆப்பு ஒருவனக்கு ரெடியாகி விட்டால் அவன் எந்த தேசத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் அவன் மரனத்துக்கு தப்ப மடியாது என்பதுதான் படத்தின் ஒன்லைன் ஆர்டர்....

அந்த நெடுஞ்சாலை விபத்தை எப்படித்தான் கற்பனை செய்தார்களோ? அதே போல் அதற்க்கு திரைக்கதை எழுதிவிட்டு அதை திரையில் கொஞ்சமும் பிசகில்லாமல் திரையில் கொண்டு வந்தார்கள் பாருங்கள் அதற்க்கு இந்த படகுழுவுக்கு ஒரு ராயல் சல்யூட்.....

பெரும்பாலும் எல்லோரும் இந்த படத்தின் விப்ததை ஆக ஓஹோ என்றாலும் அந்த சமையலறையில் நுடுல்சை வெளியில் கொட்டி, அவன் கண்ணில் ஏணி வந்து குத்தி இறப்பது... கொடுரத்தின் உச்சம் என்றாலும் அதனை லாஜிக்கொடு பாடமாக்கியது அருமை....

இந்த படத்தின் சாலை விபத்து காட்சியை தமிழ் படத்தில் தழுவி எடுத்து இருப்பார்கள் என்ன படம் என்று நினைவு இல்லை....


அடுத்து என்ன நடக்க போகின்றது, இவன் எப்படி சாக போகின்றான் என்று பதபதைப்பிலேயே நம் உயிர் போய் விடும் அளவுக்கான திரைக்கதை அமைப்பும் அதன் அபார குழு உழைப்பும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்....

வசிஸ்டர் வாயால் பிரம்மரிஷி வாயால் பட்டம் வாங்குவது போல், இயக்குனர் குவண்டன் டிரான்டினோ இந்த படத்தின் சாலைவிபத்து காட்சியை பார்த்து மெய்சிலிர்த்தேன் என்று பாராட்டி இருக்கின்றார்....


இந்த படத்தை குழந்தைகளுடன் பார்க்காதீர்கள், வளர்ந்த நமக்கே பயம் என்றால், அவர்கள் மனம் ரொம்ப பாதிக்க படும்...

இந்த படம் பாத்து விட்டு, காய்வெட்டுவது ,பாத்ரூமில் ஹீட்டர்போடுவது, அயன் பண்ணுவது, என்று எது செய்தாலும் பயம் வந்து தொலைக்கும்....

ஒரு ஆமானுஷ்ய சக்தி நம்மை கவனிப்பதாகவே நமக்கு படும்....

சிறுவர்களை பயமுறுத்துவது ஒரு பெரிய விஷயமே அல்ல, அனால் இரண்டு கழுதை வயசான நம்மளை பயமுறுத்துறாங்க பாருங்க... அதுதான் பெரிய விஷயம் அந்த வகையில் இந்த படத்தின் இயக்குனர் David R. Ellis பெரும் வெற்றி பெற்று இருக்கின்றார் என்பேன்....

இந்த படத்தை தியேட்டரில் பார்க்கவும், அல்லது 5,1 ஹோம் தியேட்டரில் பார்க்கவும்....
Directed by David R. Ellis
Produced by Craig Perry
Warren Zide
Associate Producer:
Sheila Hanahan
Co-Producer:
Justis Greene
Executive Producer:
Toby Emmerich
Richard Brener
Matt Moore
Jeffrey Reddick
Written by Screenplay:
J. Mackye Gruber
Eric Bress
Story:
J. Mackye Gruber
Eric Bress
Jeffrey Reddick
Characters:
Jeffrey Reddick
Starring Ali Larter,
A. J. Cook,
Michael Landes,
Keegan Connor Tracy,
Jonathan Cherry,
James Kirk,
Lynda Boyd,
Justina Machado,
Sarah Carter,
TC Carson,
David Paetkau,
Tony Todd
Music by Shirley Walker
Cinematography Gary Capo
Editing by Eric Sears
Studio Zide/Perry Productions
Distributed by New Line Cinema
Release date(s) United States:
January 31, 2003
U.K:
February 7, 2003
Australia:
March 6, 2003
Running time 90 min.
Country Flag of Canada Canada
United States
Language English
Budget $26,000,000
Gross revenue Worldwide: $90,426,405

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(xxy) 18+ (அர்ஜென்டினா/ உலகசினிமா)பெண்பிள்ளை ஆணாக மாறினால்?

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது,அதனினும் குருடு ,செவிடு போன்ற குறைபாடுகள் இல்லாமல் பிறத்தல் வேண்டும் என்று, ஔவை பாட்டி சொல்லி இருக்கின்றார்....

ஒரு தகப்பன் தன் பிள்ளையிடம் எந்த குறைபாடுகளையும் தாங்கி கொள்ள முடியும், ஆனால் வளர்ந்த பிறகு மெல்ல மெல்ல வேற்று பாலினமாக மாறுவதை எப்படி தாங்கி கொள்ள முடியும்.... அதே போல் அந்த குறைபாடுகளோடு இருக்கும் அந்த பெண்ணை அவர் வெறுக்கவில்லை...


ஒரு பெண் தனது 15 வயதில் தனக்கு ஆண்தன்மை இருப்பதாக நினைத்து, அவள் மெல்ல மெல்ல ஆணாக மாறும் போது அது எந்த வகையில் அந்த குடும்பத்தையும், சமுகம் எப்படி அந்த குடும்பத்தை உற்று நோக்கும் என்பதை உனர்வுபூர்வமாக அர்ஜெண்டினாவின் பெண் இயக்குனர்Lucía Puenzo இந்த படத்தை இயக்கி இருக்கின்றார்....

எக்ஸ் எக்ஸ் ஒய் படத்தின் கதை இதுதான்....
அலெக்ஸ் ஆண்மை பெண்மை இரண்டும் கலந்து வளரும் பெண் அவள் தந்தை அர்ஜென்டினாவில்,Néstor Kraken (Darín) மெரைன் பாயாலிஜீஸ்ட் ஆக பணி புரிகின்றார்.... அலெக்ஸ் இந்த குறைபாட்டுக்காக மருந்து எடுத்தக்கொள்கின்றாள்... அனால்ல் சட்டென அவ்ள மருந்து சாப்பிடுவதை நிறுத்த அவளை அர்ஜென்டினாவில் இருந்து உருகுவே எனும் கடற்கரை கிராமத்து ஒதுக்குபுற வீட்டிற்க்கு குடி போகின்றார்கள்......ஏனென்றால் சமுகம் தன் மகளை எந்த வகையிலும் குத்திக்காட்டிவிடும் என்ற பயம்தான் அதற்க்கு காரணம்...

ஒருநாள் நெஸ்டர் மனைவியின் நண்பியும் அவள் சர்ஜன் கணவன், அவளது மகன் Álvaro (Piroyansky) ஆகியோர் அர்ஜென்டினாவில் இருந்தது வருகின்றனர்... காரணம் அலெக்ஸ்க்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு சம்திக்கவைக்க அல்லது பேசி பார்க்க வருகின்றனர்...
வந்த இடத்தில் அலெக்ஸ் அல்வரோ உடன் செக்ஸ்வைத்துக்கொள்ள விரும்புகின்றாள்.... அவள் செக்ஸ் வைத்க்கொள்ளும் போது அவளது அப்பா பார்த்து அதிர்ந்து போகின்றார்....அந்த பெண் அல்வரோ வை குப்புற படுக்கவைத்து அவள் பி்ன்புறமாக புனரும் போதுதான்.... தன் இதுவரை நினைத்தது போல் தனது மகள் அல்ல அவள் மகனாக மாறிவிட்டான் என்று தகப்பன் புரிந்து கொள்கின்றான்..... அதன் பிறகு அந்த பெண்ணின் பெற்றோரின் நிலைப்பாடு என்ன? அவள் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு அந்த அலெக்ஸ் பெண் ஒத்துக்கொண்டாளா? அந்த அல்வரோடு நட்பாக இருந்தாளா? போன்றவற்றை வெண்திரையில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படத்தை ஒரு பெண் இயக்கி இருக்கின்றார் என்பது பெருமைக்கு உரிய விஷயம்....இதுவே நமது ஊராக இருந்து இருந்தால் கலாச்சார போர்வை அந்த பெண் இயக்குனரை (Lucía Puenzo) வாங்கு வாங்கு என்று வாங்கி இருப்பார்கள்...

படத்தின் பல நிர்வாணகாட்சிகள் இருந்தாலும்,ஒரு பெண்ணாக இருந்தது ஆணாக மாறுபவனின் மன வேதனையையும் உளவியல் காம சிக்கலையும் அழகாய் பதிவு செய்ய Lucía Puenzo தவறவில்லை....

படத்தின் டைட்டில் பெயர் போடும் காட்சி அற்புதம்....

படத்தின் போஸ்டரில் அந்த பெண்ணின் நிர்வாணத்தில் ஒய் போட்டு அவள் அங்கத்தை மறைத்து இருப்பது நல்ல கற்பனை..


எந்த இடத்திலும் அந்த பெண்ணி்ன் உறுப்பை காண்பிக்காமல் எல்லாவற்றையும், வசனங்களில் சொன்னது நீட் ரகம்...

அந்த பெண்ணுக்கு ஆண் குறி வந்து விட்டது என்பதை,அவளும் அவள் நண்பனும் நின்று கொண்டே சிறுநீர் கழிக்கும் அந்த காட்சி இயக்குனரின் காட்சிஅழகுக்கு சான்று எனலாம்....

எல்லா ஊரிலும் உள்ள இளவட்டங்கள் போலவே
“உன்னை ஏதும் செய்யமாட்டோம் ... உனக்கு எப்படி இருக்குன்னு நாங்க தெரிஞ்சிக்கனும் ” என்று அந்த பெண்ணை மறைவுக்கு தூக்கிபோய் உடை களைவதையும் அந்த பெண் அதற்க்கு புழுவாய் துடிப்பதையும் நன்றாக பதிவு செய்து இருக்கின்றார் இயக்குனர்...

கொஞ்சமும் உறுத்தாத ஒளிப்பதிவு படத்துக்கு பக்கபலம்...

தனது பெண் நன்பி அப்பா முன் எந்த விகல்பமும் இல்லாமல் உடை மாற்றுவது ஆண் தன்மை வந்து விட்டதாய் காண்பிக்கும் காட்சிகள்... அதே போல் அன்று இரவு அலெக்ஸ்க்கு நெயில் பாலிஷ் வைத்து விட அவள் அதை அழிப்பது போன்றவை நல்ல காட்சிகள்....

நம் ஊர் போலவே அவளுக்கு இளவட்டங்கள் பாலியல் தொந்தரவு கொடு்த்தும் அவள் குடும்பம் நம்ம ஊர் போலவே போலிசுக்கு பேகவில்லை... காரணம் சமுகபயம்.....

இந்த படம் பல விருதுகளை பெற்று இருந்தாலும் இது பார்த்தே தீர வேண்டிய படங்கள் லிஸ்ட்டுக்கு போகாமல் பார்க்க வேண்டிய லிஸ்ட்டுக்கு போகின்றது.... ஏதோ ஒரு நுலிழை குறைகின்றது....
அது என்ன வென்று எடு்த்து சொல்ல எனக்கு தெரியவில்லை... படம் பார்த்து விட்டு யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்...

Directed by Lucía Puenzo
Produced by José María Morales
Carla Pelligra
Luis Puenzo
Fernando Sirianni
Fabienne Vonier
Written by Lucía Puenzo
Starring Ricardo Darín
Valeria Bertuccelli
Inés Efron
Martín Piroyansky
Carolina Peleritti
Music by Andrés Goldstein
Daniel Tarrab
Cinematography Natasha Braier
Editing by Alex Zito
Release date(s) June 14, 2007
Running time 87 minutes
Country Argentina
Language Spanish

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

இந்த லகுட பாண்டிகளுக்கு சென்னையில் எதற்க்கு இலவச வீடு????


ஒவ்வோறு சட்ட மன்ற தொகுதியிலும் தேர்ந்து எடுக்கப்படும் சட்ட மன்ற உறுப்பினர் தன் சொந்த ஊர் பிரச்சனையை மக்கள் மன்றத்தில் வைத்து விட்டு சட்ட மன்ற கூட்டத்தொடர் முடிந்ததும் கூட வந்த அல்லகைகளை அழைத்துக்கொண்டு ஊர் திரும்ப வேண்டும் இதுதான் நியாயம், தர்மம்...

அதை விடுத்து விட்டு சென்னையில் எங்களுக்கும் வீட்டு மனை அல்லது வீடு வேண்டும் என்று கேட்க உங்களுக்கு உடம்பு கூசவில்லை???, என்னை போல் பஞ்சம் பொழைக்க சென்னை வந்தேன் என்று சொல்லுங்கள்.... உழைப்பு, திறமை ,அதிஷ்டம் இருந்தால் சென்னையில் போட்டி போடுங்கள் வீட்டுமனை வீடு வாங்குங்கள்..... அதை விடுத்து மக்களுக்கு சேவை செய்கின்றேன் என்று சொல்லி விட்டு, அதுவும் அரசு செலவில் இலவசமாக வீடு வேண்டும் என்று கெட்பது எந்த வகையில் நியாயம்???

234 தொகுதிகளில் இருந்து தேர்ந்து எடுக்கபடும் இவர்கள் சென்னை வந்து தலமை செயலகத்தில் தன் தொகுதி பிரச்சனை பற்றி பேச வேண்டும்... இவர்களுக்கு மாதம் எல்லா படிகளும் சேர்த்து 50 ஆயிரம் வரை செலவு செய்கின்றது, தமிழக அரசு... அதே போல் இவர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து சென்னை வந்து மக்கள் பணி யற்ற வேண்டும் என்பதற்க்காகவும்,மெரினாபீச் பிளாட்பாரத்தில் படுத்தூங்க கூடாது என்பதற்க்காகவும், சேப்பாக்கத்தில் எம்எல்ஏ ஹாஸ்டல் என்ற ஒன்றை கட்டி கொடுத்து இருக்கின்றது அரசு... பொதுவாக இதில் யாரும் தங்குவது இல்லை இவர்கள் கூட வரும் தொண்டரடி பொடியாழ்வார்கள்தான் இந்த வளாகத்தை நிரம்ப ஆக்கிரமித்து இருப்பார்கள்.....மாசம் சொலையா 5000 வீட்டு வாடகை கொடுக்கற கஷ்டம் வேதனை எனக்கு மட்டுமே தெரியும்... அந்த 5000த்தை எண்ணி கொடுக்கும் போது அவ்வளவு கஷ்டமா இருக்கும்....ஐடி காரர்கள் ஏற்றி விட்ட வாடகையால் பல குடும்பங்கள், சென்னையில் குடும்பம் நடத்தவே சிரமம் கொள்கின்றன... பல நடுத்தர குடும்பங்கள் உன்னை பிடி என்னை பிடி என்று வீட்டு லோன் போட்டு அந்த கடனை அடைக்க முடியாமல் விழி பிதுங்கி கிடக்கின்றன....

இவர்கள் நோவாமல் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு சென்னைக்கு வருவார்களாம்... இவர்களுக்கு சென்னையில் வீடு கொடுத்து குடும்பத்தோடு டேரா போட்டு சென்னையில் நோகாமல் நோம்பு குளிப்பார்களாம்....நாம் வாயில் விரல் வைத்து பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமாம்....

தான் ஊட்டுக்கு ஒரு பைப் கனெக்ஷன் கூட எடுத்துக்காம சி்எம்மா இருந்து செத்து போனவர் காமராஜர்... கடைசிவரை சைக்கிள்ள போனார் கக்கன்... இவுங்க என்னடான்னா எனக்கு வீடு வேனும் சொல்லறாங்க.... என்ன ஒரு மக்கள் சேவை...

எங்க ஊரு பிரச்சனையை பேசுங்கன்னு உங்களை அனுப்பி வச்சா? நீங்க உங்க வீட்டு பிரச்சனையை பத்தி பேசறிங்க.... நல்லா இருக்கு உங்க நியாயம்...

இந்த விஷயத்துக்கு மூல காரணம் யார் தெரியுமா? சமஉ ஞானராஜசேகரன் என்ற காங்கிரஸ் எம் எல்ஏ தான்... இவர் இந்திய இறையாண்மை கட்டிகாக்க அரும்பாடு பட்டவர்...ஈழ தமிழர்களை இந்திய அரசு நலமாக வாழவைத்துக்கொண்டு இருக்கின்றது என்று தெடர்ந்து சொல்லிவருபவர்... ஈழபிரச்சனைக்கு விடுதலைபுலிகள்தான்முதல்காரணம், மூலகாரணம் என்று தமிழ்நாட்டின் பாதுகாப்பு வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு தொடர்ந்து சூளுரைத்து வருபவர். தொடர்ந்து தமிழ் சமுதாய மக்களுக்கு அரும்பாடுபடவே சென்னையில் அவர் இலவச வீ்ட்டுமனை கேட்கின்றார்....

கலைஞர் அவர்களே ஏதோ போகும் போது நல்லது செய்து விட்டு போகின்றேன் என்று நினைத்தக்கொண்டு, இலங்கைபிரச்சனையை போல் இந்த விஷயத்தில் சொதப்பாதீர்கள்....நீங்கள் உங்கள் வாழ்ந்த விட்டை மருத்துவமனைக்கு கொடுக்கலாம்....ஆனால் ஊரில் இருந்து மக்கள்சேவை செய்ய வந்து விட்டு, உழைக்காமல் சட்டமன்ற உறுப்பினர் என்ற காரணத்துக்காக, இலவசமாக சென்னையில் வீட்டை கேட்பதை தயவு செய்து ஊக்கபடுத்தாதீர்கள்...

மீறியும் நீங்கள் இந்த விஷயத்தில் ஊக்கபடுத்தினால் மக்கள் மத்தியில் நீங்களும் திமுக கழகமும் டரியல் ஆகிவிடுவீர்கள்....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(SOLLAMALE) தாழ்வு மனப்பான்மை காதல்...
நீ அழகாய் இருக்கின்றாய் , என்று அம்மா சொல்லுவது ஒரு மேட்டரே அல்ல... காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு....நாம் வளரும் பருவத்தில் நம்மோடு நட்பு பாராட்டக்கூடிய நபர்கள் நாம் அழகாக இருப்பதாக சொல்ல , சொல்ல நாமும் அழகாய் இருப்பதாக நம் மனம் நம்பத்தொடங்குகின்றது...

ஆனால் சிறுவயதில் நம்மை எதாவது ஒரு வகையில் நம் முகத்தை கேலி செய்ய,செய்ய அது பிஞ்சுமனதில் பதிந்து..தான் மற்றவர்கள் பார்க்கும் அளவுக்கு அழகாக இல்லையோ என்று நம் மனதில் தாழ்வு மனப்பான்மை அரக்கள் குடி கொள்கிறான்...

அதன் பிறகு நுகர்வு காலாச்சரத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் செய்யும் விளம்பர ஜோடனைகளை நம்பி, பேரன் லவ்லி, அழகு சாயங்கள் என மனம் அடுத்தக்கட்டத்திற்க்கு சென்று தன்னை அடுத்தவரிடம் அழகாக அடையாளப்படுத்த துடிக்கின்றது....

எனக்கு எனது 16 வயதில் தாழ்வுமணப்பான்மை எனக்கு அதிகம் அதிலும் 22 வயதில் மண்டையில் முடி உதிரும் போது அது இன்னும் அதிகம் அயிற்று.... எனக்கு காதல் என்பது என் வாழ்வில் நட்க்க வாய்ப்பே இல்லாத சமாச்சாரம் என்று என் மனம் சத்தியம் அடித்து நம்ப தொடங்கியது... விடியலில் சேவல் கத்தும் வரை உறங்காமல் கற்பனை காதலியோடு, ஊடலாகவும், காதலாகவும் வாழ்ந்த இரவுகள் நிறைய...

அப்படி இருக்கும் போதே நிஜத்தில் எனக்கு காதல் வரத்தொடங்கியது.. என்னை காதலித்த பெண்கள் மிக அழகாய் இருந்தார்கள், அது எப்படி என்று எனக்கு விளங்கவில்லை... நான் ரசிக்கபடதவன் என்ற எண்ணம் எனக்கு மட்டும்தானே ஒழிய மற்றவர்களுக்கு இல்லை என்பது எனக்கு என்னோடு பழகிய பெண்கள் மூலம் எளிதில் விளங்கிற்று....
காதல் என்பது அழகாய் இருப்பவனுக்கு மட்டுமே அழகான பெண் கிடைப்பாள், காதல் வயப்படுவாள் என்பது எல்லாம் பேத்தல்....

சரக்கு இருப்பவனிடம் மட்டுமே காதல் சாத்தியம்... வெள்ளைதோலை வைத்து வரும் காதல்கள் வெகுசிலதே... நான் பொய் சொல்லிகின்றேன் என்றால் மெரினா போய் பாருங்கள்... பொன்னு பார்பதற்க்கு ஏப்ப சாப்பையாக இருக்கும் பையன் செம சூப்பரா இருப்பான்.... அதே போல் பொண்ணு செம அழகா இருக்கும் பையன் பொறுக்கி போலவே இருப்பான்..... அவனிடம் அல்லது அவளிடம் ஏதோ ஒரு நல்ல விஷயம் அல்லது ரசிக்கும் செயல் இருக்க வேண்டும்.....
உதாரணம் ராஜகுமாரன் தேவயானி நட்சத்திர தம்பதிகள்... அந்த பெண்ணுக்கு வேறு யாருமே கிடைக்கலையா? என்று அப்போது உரெல்லாம் ஒரு பேச்சு இருந்தது....ராஜகுமாரனிடம் ஏதோ ஒரு வசீகரம் இருந்து இருக்க வேண்டும்....

அப்படி தான் அவலட்சனமான இருக்கின்றோம் என்ற தாழ்வு மனப்பான்மையில் இருக்கும் ஒருவனுக்கு காதல் வந்தால்????

சொல்லாமலே படத்தின் கதை இதுதான்....

தாழ்வு மனப்பான்மையில் வாழ்க்கை நடத்தும் நட்ராஜ் (லிவிங்ஸ்டன்) வேலை தேடி சென்னைக்கு வருகின்றான்... ஸ்வேதா(கௌசல்யா) இந்திய கலை மீதும் கல்சர் மீதும் காதல் கொண்டவள் அமெரிக்க பிரஜை வேறு.. இரக்க சுபாவத்தின் மறுபிறப்பாய் அந்த பெண்.... அவள் பரதநாட்டியம் கத்துகொள்ள சென்னை வருகின்றாள்... சென்னை வந்த நட்ராஜ் தனது நண்பன் ரூமில் தங்கி வேலை தேடுகின்றான்... சென்னை பெண்களும், அவனது நண்பர்கள் அழகான பெண்களுடன் பேசும் போது தாழ்வுமனப்பான்மையில் தலை குனிந்து ஏங்கி நிற்க்கின்றான்.... அவனுக்கு சென்னையில் பேனர் ஆர்டிஸ்ட் வேலை கிடைக்கின்றது அப்போ அந்த நடராஜனுக்கு ஸ்வேதாவுக்கும் ஒரு எதிர்பாபராத சந்திப்பில் நட்பு உருவாகின்றது... சந்தர்ப்ப சூழ்நிலையால் நடராஜ் உமை என்பதை தவறாக புரிந்து கொள்ளுகிறாள்... உண்மை தெரிந்த நடராஜ் அவள் நட்பு போய்விடக்கூடாது என்பதற்க்காக..அவளிடம் ஊமையாக நடிக்கின்றான்... அவளுக்கு உண்மை தெரிந்ததா? அவள் அவனை காதலித்தாலா? நட்பு எப்போது காதலாக மாறியது போன்றவற்றை வெண்திரையில் காண்க....

படத்தின் சுவாரஸ்யங்களில் சில....

இயக்குநர் சசி படங்களில் ஒர யதார்த்தம் இருக்கும் அவர் படைப்புகளில் இந்த படம் ஒரு அற்புதமான பதிவு...

இந்த படத்தின் வசனங்கள் ரொம்ப அற்புதமாக இருக்கும்... இந்த படம் 1998 ஆகஸ்ட்டில் வெளி வந்தது...

இசை பாபி... இவரின் இசையில் வ்நத சொல்லதே சொல்ல சொல்லதே என்ற பாடல் நல்ல மெலடி ரகம்...

“ஒருத்தனை நீ உண்மையா நேசிச்சா நீ அவன்கிட்ட உன்னால பொய் சொல்ல முடியாது... அப்படி பொய் சொல்லறன்னா.. நீ அவனை உண்மையா நேசிக்கலைன்னு அர்த்தம்” என்கின்ற வசனங்களாகட்டும்...

நீ ஒரு பொருளை உண்மையாக நேசித்தால் அதனை சுதந்திரமாய் பறக்கவிடு அது எங்கு சென்றாலும் உன்னை தேடி வரும் என்ற பொருள் கொண்ட அந்த பிறந்தநாள் கவிதை போன்றவைகளை குறிப்பிட்டு சொல்லலாம்....

படம் நெடுக இந்த படத்தின் காமெடி அற்புதம்... சென்னைக்கு வரும் கிரமாத்து பசங்கள் சென்னை வந்ததும் எப்படி எல்லாம் பெயர் மாற்றம் செய்து கொண்டு பில்டப் கொடுக்கின்றார்கள்... என்பதை ஏலே வையாபுரி விவேக் கத்தும் போது தியேட்டரில் சிரிப்பலை....

எப்போதுமே நகரம் ஒருவனைதன் அடையளங்களை தொலைத்து விட்டு நிற்கதியாய் நிற்க்க வைக்கின்றது.... ஒருவன் தெரிந்தோ, தெரியாமலோ, இந்த நகரங்கள் ,வேஷக்காகரனாக மாற்றி விடுகின்றது என்பதை அழகாகய் குத்தி காட்டி இருப்பார் இயக்குனர் சசி...சென்னையில் உள்ள எல்லோருமே என்னையும் சேர்த்துதான் புற அடையாளங்களையும், அகடையாளங்கயையும் சற்றே தொலைத்துவிட்டுதான் இருக்கின்றோம்...

கௌசல்யா நண்பர்கள் டிரிட் கேட்டார்கள் என்று ஒரு ரெஸ்டரண்ட் போய் பாத்ரூம் பக்கம் போய் லிவிங்ஸ்டன் தன் பர்ஸ் திறந்து பணம் இல்லாமல் தவிப்பதும்,தன் நிலை குறித்து புழுங்குவதும்.... அந்த இடத்தில் ரகசிமாக கெளசல்யா லிவிங்ஸ்டன் பாக்கெட்டில் பணத்தை திணித்து நீ தான் , எங்க எல்லாருக்கும் செலவு பன்னனும் என்று சொன்னதும் அதற்க்கு லிவிங்ஸ்டன் ஒரு பார்வை பார்பார் பாருங்கள் அது ஆயிரம் நன்றிகளுக்கு சமமான பார்வை.... இந்த காட்சியில் எனக்கு கண்களில் நீர் தளும்பி நெகிழ்ந்து பார்த்த இடம்...

கிளைமாக்சில் பிரகாஷ் ராஜுடன் அவர் தன் தரப்பை பற்றி வேகமாக பேசும் டயலாக் தாழ்வுமனப்பான்மை உள்ளவனால் அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியும்....

லிவி ஆங்கிலம் படிப்பதும், அதற்க்கு விவேக் அடிக்கும் டைமிங்கும் சூப்பர்....

கரன் அவருக்கு கொடுத்த வேலையை நம்மவர் படத்தில் வந்தது போல் சிறப்பாய் செய்து இருப்பார்....
கௌசல்யாவுக்கு லிவி மேல் காதல் உருவாகும் அந்த இடம் அற்புதமான இயக்கம் என்பேன்....

நானும் ஒரு பெண் படம்கூட ஒரு பெண்ணின் தாழ்வுமனதை ஒத்த திரைக்கதை என்றாலும் எப்படியாகட்டும் அதனை பறிமாறும் இடத்தில் வித்யாசம் காட்டுவதே நல்ல இயக்குனருக்கு அழகு என்பேன்.....
நல்ல நடிகனான லிவிங்ஸ்டனை தமிழ் திரையுலகம் அவரை காமெடியனாக மாற்றியது பெரிய சோகம்... இப்போது அவர் என்ன செய்து கொண்டு இருக்கின்றார் என்று தெரியவில்லை...

கடைசியாக சிவாஜி படத்தில் பார்த்தது..... நல்ல நடிகர்....


இந்த படத்தின் கமெடி பலம் விவேக் நக்கல் நையாண்டிதான்....

தாழ்வு மனப்பான்மை கொண்டவனை இந்த சென்னை நகரம் எப்படி எல்லாம் படுத்தி எடுக்கும் என்பதையும்... மனிதனாக பார்க்காமல் அவனை மனதளவில் குத்தி கிழிப்பார்கள் என்பதை லிவிக்கு, விவேக்கின் பெண் நண்பர்கள் மார்க் போடும் அந்த காட்சி போதுமானது....இயக்குனர் சசி உணர்வுபுர்வமாக இயக்குபவர் என்பதை புரிய வைத்த படம்

Hero ....... Livingston
Heroine ....... Kausalya
Director ....... Sasi
Producer ....... R.B.chowdry
Director ....... Sasi
Producer ....... R.B.chowdry
Hero ....... Livingston
Heroine ....... Kausalya
Actor ....... Anand
Dhamu
Karan
Mohan ram
Prakashraj
Raju sundaram
Sakthi kumar
Vaiyapuri
Vivek
Actress ....... Fathima babu
Music director ....... Bobby
Lyricist ....... vasan
Arivumathi
Kalaikumar
Playback ....... Bobby
Hariharan
Mano
S.P.balasubramaniam
Sabesan
Screenplay ....... Sasi
Dialog ....... Sasi
Editor ....... Jai shankar
Photography ....... Arthur wilson
Art ....... Maniraj
Country: India
Language ....... Tamil
Censor date ....... 30-07-1998
Release date ....... 01-08-1998

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

சாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் 18+(27,07,09)

ஆல்பம்...

கேமரா செல்போன் பிரச்சனை குறித்து நான் தொடர்ந்து எழுது வருகின்றேன்.. நேற்றைய தினத்தந்தியில் திருமணமான மூன்று மாதத்தில், கட்டிய காதல் கணவனே தனது மனைவியை ஆபாச படம் எடுத்து தினமும் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக ஒரு பெண் போலிசில் பிராது கொடுத்து உள்ளார்... காதலனை பிடித்து போலிஸ் நைய புடைத்துக்கொண்டு இருக்கின்றது.....

தமிழக முதல்வர் தனது 8 கோடிமதிப்பிலான கோபாலபுரத்து வீட்டை தனது காலத்துக்கு பிறகு அதனை மருத்துவமனையாக மாற்ற இடம் கொடுத்த்து இருப்பது மகிழ்வை தருகின்றது... அவர் சொன்னது போல கோபலபுரத்தில் அந்த வீட்டுக்கு பக்கத்தில் உள்ளவர்கள், விலாசம் சொல்வது என்றால் சீஎம் வீட்டுக்கு பக்கத்து வீடு என்று பெருமையாக சொல்லிக்கொள்ளாலாம்....ஆனால் அந்த வீடு மருத்துவமனையாக மாற்றக்கூடாது என்று நக்கீரன் கட்டுரை வெளியிட்டு இருக்கின்றது... அது நினைவு சின்னமாக இருக்க வேண்டும் என்று அது சொன்ன காரணம் நியாயமாக இருக்கின்றது.....

நம் தாய் மொழியில் பிறந்த குழந்தைக்கு பெயர் வைத்தால் மோதிரம் பரிசு என்று சொல்வது நம்மை நாமே கேவலப்படுத்திக்கொள்ளும் செயல்....தமிழில் பெயர் வைத்ததால் தமிழ் திரைப்படங்களுக்கு வரி விலக்கு என்பது போல இதுவும் செம காமெடிதான்....மிக்சர்...

போனவாரம் எல்லாம் ரொம்ப வேலை பளு அதனால் பதிவுலகம் பக்கமே வர முடியவில்லை... வீட்டுக்கு வந்ததும் அசதியில் தூங்கி காலையில் கண் விழித்து வேலைக்கு போக வேண்டி இருக்கின்றது... நேரம் கிடைக்கும் போது உங்களோடு நான் இருக்கின்றேன்....உங்கள் ஆதரவு நாளுக்கு நாள் வளர்ந்து வருவது எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது....

நேற்று சன்டிவியில் ஆயிரத்தில் ஒருவன், பாடல் வெளியீட்டு விழா ஒளிபரப்பினார்கள், அதில் நடித்த நடிகை ஆண்டிரியா பாடிய பாடல் கிரங்கவைத்தது.....நல்ல குரல் வளம் என்று கூட சொல்லலாம்.... அதே போல் தனுஷ் ஐஸ்வர்யா பாடிய பாடல் கூட நன்றாகவே இருந்தது....

மூன்று எழுத்தில் ஒரு நிறுவனம், கல் வைத்த மோதிரம் வாங்கி போட்டு்க்கொண்டால் எல்லாம் நல்லதே நடக்கும் என்று டிவியில் விளம்பர படுத்துகின்றார்கள்.... யாரங்கே உடனே நம்ம முதல்வருக்கு சொல்லி கலர் டிவியை குடும்பம் தோறும் கொடுப்பதை நிறுத்தி விட்டு அந்த கல்வைத்த மோதிரத்தை வாங்கி கொடுங்கள்....

நமக்கு மக்களின் சுபிட்சம் முக்கியம் அல்லவா? ஏன்டா காசுக்காக இப்படி ஊரை ஏமாத்திகிட்ட திரியுரிங்க.....

விஷுவல் டேஸ்ட்.. நம்ம எடுத்ததுதான்...

ஊட்டி பஸ் நிலையத்தின் எதிர்புரத்தில் காலை எழு மணிவாக்கில் பஸ் ஏற காத்து இருந்த முதியவர்.. போட்டோ எடுத்துக்கொண்ட பின் பத்து ரூபாய் அவருக்கு கொடு்த்து விட்டேன்... அழகான காலை சன் லைட் கீ லைட்டாக இருக்க ரம்யமான போர்ட்ரைட்....
கேரளாவில் கண்ணுர் கடற்கரை... கலங்கரை விளக்கம் அருகில்....

பறவையின் பார்வையில் சென்னை டைடல் பார்க்.....

படங்களை கிளிக்கி பெரிதாக பார்க்கலாம்....


நான்வெஜ்...

இன்னம்மா யோசிக்கிறானுங்க பாருங்க.....

ஜோக்...1

மாப்பிள்ளையை பிடித்து இருக்கின்றதா? என்று அம்மாகேட்ட போதுமகள் சொன்னால் அம்மா மாப்பிள்ளை குண்டா இருக்கறாபோல இருக்காறே என்றாள்... அதற்க்கு பெண்ணை பெற்றவள் சொன்னாள் என் அனுபவத்தில் சொல்லுகின்றேன்.... கேட்டுக்கோ, டிவி பொட்டி 14 இன்ச்சா இருந்தாலும்,21 இன்சா இருந்தாலும்,29இன்சா இருந்தாலும் எல்லாத்துக்கும் ரிமோட் ஆறு இன்ச்தான்டி.....போக்கத்தவளே....

ஜோக்....2

ஒரு பதினெட்டு வயது பெண் அம்மாவிடம் ஓடி வந்து சொன்னாள்... அம்மா எதிர்வீட்டு பையன் என்னை பார்க்கும் போது என் பிரா டைட் ஆகுது என்றாள் அதற்க்கு அந்த பெண்ணி்ன் அம்மா நாளையில இருந்தது நீ பிரா போடாதே, அந்த எதிர்வீட்டு சண்டாளன் ஜட்டி கிழியட்டும் என்றாள்....


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

அழகு ஓவியம் பூசிக்கொள்ளும் சென்னை சுவர்கள்....சென்னையில் சில விஷயங்களை டி பால்ட்டாக பார்க்கலாம்....
ரோடு அப்போதுதான் அழகாய் போட்டு இருப்பார்கள்.. மறுநாள் அந்த இடத்தை குடிநீர் வாரியம் , நேற்று போட்ட ரோட்டை ,தார் மணம் போவதற்க்குள் வெட்டிக்கொண்டு இருப்பார்கள்....எப்போது பார்த்தாலும் ரோட்டின் ஓரம் ஏதாவது வெட்டி போட்டு அதனை மூடிக்கொண்டு இருப்பார்கள்...அந்த குழியை சரியாக மூடாமல் செல்வதால், நாமக்கல்லில் இருந்து சரக்கு ஏத்தி வரும் டிரைவர் முனுசாமிக்கு தெரியவாய்ப்பில்லை. அவர் லாரியை ரிவர்ஸ் எடுக்கும் போது அந்த குழியில் லாரி சக்கரம் மாட்டி, அந்த பக்கம் டிராபிக் ஆகி அப்புறம் கிரேன் வந்து என்று இப்படி சென்னை பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்....

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை சென்னை மவுன்ட் ரோடில் பயணப்பட்ட போது நான் பார்த்த விஷயங்கள் என்னை வியப்பின் உச்சத்துக்ககே சென்று விட்டேன் ... ஆம் சென்னை மவுன்ரோட்டின் பக்க ஓர சுவர்களில் பல அழகான ஓவியங்கள் இடம் பெற்று இருந்தன...

மவுன்ட் ரோடில் நந்தனம் சிக்னல் தாண்டி ஒய் எம் சியே வாளகத்து மதில் சுவர்களில் பல வண்ண ஓவியங்கள் இடம் பெற்று உள்ளன...இன்னும் வரைந்து கொண்டு இருக்கின்றார்கள்...
நம் கலாச்சார பெருமைகள், நம் ஊரின் முக்கிய சுற்றுலா தளங்கள், என்று ஒவியங்களில் நம் ஊரின் சிறப்பினை பொதுமக்களிடம் கொண்டு செல்கின்றார்கள்... இது சென்னை முழுவதும் அமுல் படுததினால் நிச்சயம் இது சிங்கார சென்னை

தூரிகைகள் எல்லாம் கால மாற்றத்தால் ,பிளக்ஸ்,டிஜிட்டல்போர்டு போன்ற வருகையால் சோம்பி இருந்த வேளையில் அவைகளுக்கு மீண்டும் வேலை கிடைத்து உள்ளது.. வரையும் ஒவ்வோறு ஓவியரிடமும் பெருமை கண்களில் இருக்கின்றது...

என்னதான் லலித் கலா அக்காடமியில் ஓவியம் வைத்தாலும் ஒருவாரம்தான் இருக்கும் ஆனால் இது நாள்கணக்கு என்பது கிடையாது அல்லவா? பேருந்தில் போவோரும், இரு சக்கர வாகனத்தில் பயணிப்போரும் அந்த இடம் கடக்கையில்

“காலையில் வெறும் கிளிதலைமட்டும்தான் வரைஞ்சாங்க..... அதுக்குள்ள பஞ்சவர்ணகிளி வரைஞ்சிட்டாங்க... ”

என்று பேசிக்கொண்டு செல்கின்றாகள்...இதே போல் நமது ஓவியர் கூட்டம் பிரபல ஓவியர் தலமையில் எதோ ஒரு நாட்டின் தெருக்களின் சுவர்களில் இது போல் படம் வரைந்து நம் சென்னை ஓவியர்கள் சிறப்பு சேர்த்தார்கள் என்பதை எப்போதோ ஒரு வார பத்திரிக்கையில் பார்த்த ஞாபகம்.....சென்னை முழவதும் உள்ள சுவர்களில் இது போல படம் வரைந்தால் எப்படி இருக்கும்? என்று கற்பனை செய்து பாருங்கள்....அதே போல் இன்னோரு பயமும் எனக்குள்ளே....

1.. அவசரத்துக்கு இந்த ஓவியங்கள் மேல் யாரும் உச்சா போக கூடாது...

2..யாரும் இதன் மேல் பான்பராக் எச்சில் துப்பக் கூடாது....

3.. கழக தொண்டர்கள் யாரும் தலைவனுக்கோ, தலைவிக்கோ பிறந்தநாள் (வாழும் வரலாறே) வாழ்த்து போஸ்டரை உணர்ச்சி வசப்பட்டு இதன் மேல் ஒட்டக்கூடாது...

4..கரித்துண்டை வைத்து இந்த படத்தின்மேல் படங்கள் வரையக்கூடாது...
அல்லது அந்த ஓவியங்களில் இருக்கும் பெண் படத்துக்கு மீசை வரையக்கூடாது...

5.. நகரத்தின் வாகன புகை அந்த ஓவியங்களை ஒரு மாதத்தில் டல் ஆக மாற்றும். வரைந்ததோடு நம் வேலை முடிந்ததாக என்னாமல் சம்பந்த பட்ட நிர்வாக்ம் மாதம் ஒரு முறை அந்த ஓவியங்களை தண்ணீர் ஊற்றி கழுவி விட வேண்டும்...

6..அந்த ஓவியங்கள் இருக்கும் பிளாட்பாரத்தில் எந்த பஞ்சர்கடையோ, அல்லத இளநீர்கடையோ அல்லது வேறு ஏதாவத பிளாட்பாரகடைகள் அந்த இடங்களில் வராமல் இருக்க வேண்டும் ஆண்டவா....

7..தமிழனின் அதிகபட்ச கோப வெளிப்பாடான, சரக்கை போட்டுக்கொண்டு அலப்பறை செய்து, மாடு போட்ட சாணியை தூக்கி அதன் மேல் அடித்து செல்லாமல் இருக்க எல்லாம்வல்ல பரம்பொருளை வேண்டிக்கொள்கின்றேன்...

வேறு என்ன நாம் செய்ய முடியும் சொல்லுங்கள்.....

புகை படங்கள்
ஜாக்கிசேகர்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..

சாண்ட்விச் அண்டு நான்வெஜ்..(20,07,09)

ஆல்பம்...

தமிழ் மண திரட்டி நிர்வாகம் என்னை தமிழ்மண நட்சத்திர பதிவாராக என்னை தேர்ந்து எடுத்து உள்ளது... அடுத்த மாதம் ஆகஸ்ட்டு மாதம் 3ல் இருந்து ஆகஸ்ட் மாதம் பத்தாம் தேதிவரை என்னுடைய வாரமாக தேர்வு செய்து இருக்கின்றாகள் ...தமிழ் மண நிர்வாகிகளுக்கும் என் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்களுக்கும் சக பதிவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்....போனில் செய்தி சொன்னதும் ரொம்ப வெளிப்படையாக,

ஜாக்கி, “ரொம்ப பெரிய விஷயம்
எழுத வந்த குறுகிய காலத்துல இந்த அங்கீகாரம் பெரிய விஷயம்” என்று வாழ்ந்து சொன்ன நண்பர் கேபிள் சங்கருக்கும் உடன் வாழ்த்து சொன்ன தண்டோராவுக்கும், அண்ணே உங்க பதிவுகல படிக்க ஆவலாய் இருக்கின்றோம் என்று சொன்ன நைனாவுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல.....

இதுவரை என் எழுத்தை தொடர்ந்து வாசிக்கும் 142 பாலோயர்களுக்கும் எனக்கு தொடர்ந்து பின்னுட்டம் இட்டு உற்சாகபடுத்தும் அனைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்....

தற்போது சில பல வேலைகள் வந்து கொண்டு இருப்பதால் , ஒரு நாளைக்கு 3 பதிவு எல்லாம் இனிஎழுத முடியாது .. ஒரு நாளைக்கு ஒன்றுதான் அதுவே ரொம்ப கஷ்டம் என்று எண்ணுகிறேன்.. முடிந்த வரை நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாக நிறைய எழுதுகின்றேன்...ஆனால் ஒரு நாளைக்கு ஒரு பதிவு என்பது உள்ளுரில் இருக்கும் போது நிச்சயம்... அதுவே பிரியாக இருந்தால் அதகளம் செய்வோம்...

நான் எழுதும் பட விமர்சனங்களுக்கு எனது மெயில் முகவரிக்கு பல நண்பர்கள் வாழ்த்து அனுப்பியபடி இருக்கின்றார்கள்... அதில் குறிப்பிடபட வேண்டிய செய்தி அவர்கள் சில படங்களின் லிங்கையும் சேர்த்து அனுப்புவது மகிழ்வை தருகின்றது...எனக்கான மெனெக்கெடல் அந்த முகம் தெரிய நட்புகளை அதிகம் நேசிக்க வைக்கின்றது... அதே போல் நான் நெட்டில் குஜால் படங்களை தவிர வேறு படங்களை பார்க்கமாட்டேன்.... அதிக பட்சமாக தியேட்டர்,
அல்லது, என் வீட்டு ஹோம் தியேட்டரில் 5.1 சவுண்டில் சப்டைட்டிலோடு பார்த்தால்தான் எனக்கு தூக்கமே வரும்....

அறிவிப்பு....
ஒரு புகைபட காரணாக இருந்து கொண்டு சில படங்களை எடுத்து அதனை பெட்டியில் வைத்துக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.... இந்த வாரத்தில் இருந்து விஷுவல் டேஸ்ட் என்ற தலைப்பில் நான் எடுத்ததில் பிடித்த படங்களை, சாண்ட்விச் அண்டு நான் வெஜ் பகுதியில் வைக்கின்றேன்....

மிக்சர்...

ஏதோ ஒரு சிலை என்றால் கூட பரவாயில்லை... நகரம் எங்கும் சிலைகள் வைத்துக்கொள்ளும் மயாவதி..... அவரை நினைத்தால் பார்க்க பாவமாய் இருக்கின்றது.... இந்தியாவில் இது போன்ற ஆட்டங்களை நிறைய பார்த்தாகிவிட்டது...

நாடோடிகள் டிரைலர் பார்க்க அற்புதமாக இருக்கின்றது... அவர்கள் ஒர்கிங் ஷாட் அற்புதம் ... சினிமா என்பது கூட்டு முயற்ச்சி என்பதை விஷுவலாக சொல்லி இருக்கி்ன்றார்கள்.... நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்....

பைலட் தியேட்டரில் டிரான்ஸ்பர்ஸ் படம் பாத்தேன்.. ஏனோ தெரியவில்லை சென்டர் ஸ்பீக்கர்ஸ் சரியாக ஒர்க் ஆகவில்லை.... அல்லது தமிழ் படுத்தும் போது சரியாக வாய்ஸ் பதிவாகவில்லையா என்பது தெரியவில்லை....மொத்தத்தில் ரொம்ப டென்ஷனாக இருந்தேன் ....சரியாக இல்லை படம் பார்க்க வரும் பார்வையாளனை கொடுமை படுத்தினால், அப்புறம் அவன் எப்படி தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பான் சொல்லுங்கள்......

விஷுவல் டேஸ்ட்....(நான் எடுத்த புகைபடத்தில்பிடித்தது)
படத்தை கிளிக்கி பெரிதாக பார்க்கவும்

ஒரு ஓவியரின் துரிகை செயல்பட்டு கொண்டு இருந்த அந்த நொடியில் கிளிக்கியது.... இடம்.. சென்னை அண்ணாசாலை ஓய் எம் சி யே வளாகம் அருகில்,நேரம் மாலை ஆறு முப்பது மணி...


வயிற்று பிழைப்புக்காக பெங்களுர் போரம் ஷாப்பிங்மால் எதிரில்

வயிற்று பிழைப்புக்காக
வானம் ஏற முயற்ச்சிப்பவன்....

சென்னை அடையாற்றில் 17 மாடி கட்டத்தின் மேல் தளத்தில் எனது நண்பர் சுகுமாருடன்....

நான்வெஜ்....ஜோக்...1

அவன் ஒரு தண்ணி வண்டி, எப்போது பார்த்தாலும் தண்ணியில் மிதப்பவன்,விஸ்க்கியில் பல் துலக்கி, விஸ்க்கியில் முகம்கழுவி என்று எப்போதும் தண்ணி தண்ணிதான்..அப்படிபட்டவன் இரவில் பாரில் இருக்கும் போதே அவனுக்கு சட்டென காமம் கிளற, சட்டென மனைவிக்கு போன் அடித்தான்... நான் விட்டுக்கு வரும் போது நீ தயாராக இரு என்றான்...வெறியோடு வீட்டுக்கு வந்தான்...அவள் உடைகளைந்தான் , முத்தமிட்டான். என்ன, ஒரே உப்புகரிக்குது என்றான்... சனியன் புடிச்சவனே, நான் நிக்கறேன் நீ முட்டிபோட்டுக்குனு இருக்குற முதல்ல எழுந்துரு என்றாள்....

ஜோக் பன்ச்....2

பட்டுதுணி அணிந்து நடப்பது சுபமுகூர்த்தம்,ஒட்டு துணி கூட இல்லாம நடப்பது சாந்தி முகூர்த்தம்..... எப்புடி????


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி..


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner