கடைசியில் ராசா கைது செய்யப்படலாம் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து கூட தூக்கப்படலாம் என்பதாய் செய்திகள் தெரிவிக்கின்றன..திமுக தலைவரின் சின்ன குடும்பத்தை பழிவாங்க எல்லோரும் ஓர் அணியில் திரண்டு விட்டார்கள் அப்புட்டுதேன்..
===========
வெங்காயம் கிலோ 100ரூபாய்.. அதாவது நல்ல குவாலிட்டி..செகன்ட் குவாலிட்டி 80ரூபாய்.. மூன்றாவது குவாலிட்டி 60ரூபாய்...பருவமழையில் நிலத்தில் தேங்கிய தண்ணீரில் அழுகி இந்த வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்குமோ???
================
மிக்சர்..
நேற்று திரைப்பட விழாவுக்கு வந்த பட்டர்பிளை சூர்யா லேட்டாக வர காரணம் கேட்ட போது... நந்தனம் ஆர்ட்ஸ்காலேஜ் பசங்க தங்கள் ஹாஸ்ட்டலில் அடிப்படை பிரச்சனை சரிசெய்ய சொல்லி சாலையில் வந்து நேற்று நின்றதால் மவுன்ட் ரோடு டிராபிக்கில் தினறி இருக்கின்றது.. ஆறுமணிநேரத்துக்குமேல் டிராபிக் சரியாவில்லை.. டூவிலரில் பலர் கால் கடுக்க உட்கார்ந்து இருந்தனர்.. இதுக்கு தீர்வுதான் என்ன???
ஒரு 200 மாணவர்கள் சென்னை டிராபிக்கை முடக்க முடியும்... இரண்டு டிரைவர்கள் பேருந்தை ரோட்டின் குறுக்கே நிறுத்தி சாலையை மறித்து போக்குவரத்தை முடக்க முடியும்... நல்லா இருக்கு சட்டம் ஒழுங்கு.. போலிஸ் தடியை சுழற்றி இருக்கும்.. ஆனால் லா காலேஜ் பிரச்சனையில் இன்றளவும் போலிஸ்தலை உருண்டு கொண்டு இருப்பதால் அவர்கள் உயர் அதிகாரிகளுக்கு போன் செய்துவிட்டு அமைதியாகிவிட்டனர்.. அவர்கள் அதைதான் செய்யமுடியும்...
நல்ல பீக் அவரில் எல்லோரும் வேதனையில் தவித்துகொண்டு இருக்கும் போது கிரிக்கெட் நடு ரோட்டில் விளையாடியது கொடுமையிலும் கொடுமை...இன்னும் நிறைய காமெடிகாட்சிகள் பார்க்க சென்னைவாசிகள் தயாராக இருக்க வேண்டும்... ஏன்டா எவனும் பாரின் போய் திரும்பமாட்டேங்குறாங்க என்பதற்க்கான காரணம் இந்த மாதிரி கஸ்மாலத்தை எல்லாம் பார்க்கவேண்டாம் என்பதால்தான்... இன்னும் சில நாட்களில் சென்ட்ரல் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் இதேபோல ஒரு கல்லூரி மாணவர்களின் சாலை மறியல் போராட்டம் நடக்க வாய்ப்பு இருக்கின்றது.
=================
எனக்கு இன்டர்நெட்டுக்கும் ஏழாம் பொறுத்தம் போல செட்டிலைட் மூலமா புழுத்தினா எந்த பிரச்சனையும் வராதுன்னு பார்த்தா.. நைட்டு ஒரு மணிக்கு மேல் பிஎஸ்என்எல் 3G நோ சர்விஸ் என்று காட்டுகின்றது...இது நேற்று மட்டும் ஏற்ப்பட்டால் பரவாயில்லை... தூக்கம் இல்லாத பல இரவுகளில் இந்த நோ சர்விஸ் கொடுமைதான்....4500ரூபாய்க்கு நானே தேடி போய் ஆப்பில் உட்கார்ந்து கொண்ட கதை இது...தனியார் துறையில் எதாவது பிரச்சனை என்றாலும் கத்தியாவது தொலைக்கலாம்.. இவனுங்க கஸ்டமர்கேர்ல பிளானையே தப்பு தப்பா சொல்லி என் தூக்கத்தையே ஒரு நாள் நைட்டு கெடுத்த புண்ணியவான்கள்..பகலில் 5 படம் பார்த்து விட்டு நைட்டு ஏதாவது எழுத அடிக்க உட்கார்ந்தால்3ஜி எழவுக்கு மூக்கில் வேர்த்து விடும்.
==================
நேற்றில் இருந்து எனது தளத்தை என்னாலேயே பார்க்கமுடியவில்லை..நண்பர் அடலேறுக்கு போன் செய்ய அவர் டெல்லி நண்பருக்கு போன் செய்து ,தளம் அங்கு ஓப்பன் ஆகி இருப்பதாக சொல்ல எனக்கு நிம்மதி... என்னவென்று தெரியவில்லை.. சர்வர் பிராப்ளமா?தெரியவில்லை.. பலர் போன் பண்ணி சொல்கின்றார்கள்.. பார்ப்போம்...எப்போது எனக்கு தளம் தெரியும் என்று தெரியவில்லை..டேஷ்போர்டு எல்லாம் ஓப்பன் ஆகின்றது.. வீயூவ் பிளாக் போட்டால் சர்வர் பிரச்சனை என்று நேற்றில் இருந்து கூவுகின்றது. தளத்தையே முடக்கிவிட்டார்களா? தெரியவில்லை.--??
========================
பார்த்ததில் வேதனை..
சரவணா பிரமாண்டமாய் ஷோரூமில் பெண்கள்உடை பகுதியில் கவுன்டர் கீழ் உட்கார்ந்து ஒரு பெண் அழுது கொண்டு இருக்க, இரண்டு பெண்கள் ஆறுதல் படுத்திக்கொண்டு இருந்தார்கள்... தனி ஆளாய் அவுங்கதான் எல்லா வேலையும் செஞ்சிக்கனும் என்று சொல்லி அழ... எனக்கு அங்காடி தெரு அஞ்சலி ஏனோ நினைவுக்கு வந்தது. சட்டென வெள்ளை கோட்போட்டுக்கொண்டு இருக்கும் அத்தனை பெண்களுக்கு ஏதாவது சோகம் இல்லாமல் இருக்காது என்பதை நினைக்கும் போது மனது கண்க்கின்றது..
======================
நெகிழ்ச்சி..
நீங்க ஜாக்கிசேகர்தானே..
சொல்லுங்க நான்தான்...
நான்........ பேசறேன்.
நீங்க எக்ஸ்பிரஸ்மால் பற்றி எழுதிய பதிவில் என் அம்மா இருந்து இருந்தால் இங்கெல்லாம் அழைத்து சென்று மகிழ்வித்து இருப்பேன் என்று எழுதியதை படித்து விட்டு என் அம்மாவை அங்கே அழைத்து போனேன்.. என் அம்மாமிகவும் சந்தோஷம் அடைந்தார்கள்.. ஜாக்கி என்னால அந்த சந்தோஷத்தை விவரிக்க முடியவில்லை..இதெல்லாம் அம்மாவுக்கு பிடிக்குமா? என்று நானே யோசித்து மறுத்து இருக்கின்றேன்...ஆனா அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டாங்க..
அதே போல என் மீதான ஒரு சில விமர்சனங்கள் முன் வைத்தார்..அதற்க்கான பதிலை சொன்னேன்.
எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன், கணவர் பிசினஸ் செய்யறார்.... உங்களை தொடர்ந்து வாசித்து வருகின்றேன் என்று சொன்னார்...
அந்த பெண்மணி, நான், உண்மைதமிழன், எல்லோரும் உட்லண்ட்சில் உலகபடவிழாவுக்கு வந்து ஒரு படம் பார்த்து விட்டு, எனக்கு சுவீட்பாக்ஸ் சாக்லெட் கொடுத்து விட்டு சென்றார்...எனக்கு கிடைத்த பெரிய அங்கீகாரமாக நான் இதனை கருதுகின்றேன்...
நான் எக்ஸ்பிரஸ் மால் கட்டுரையில் எழுதிய ஒரு சில வரிகள் யாரோ ஒருவருடைய தாயின் சில மணி நேரங்களை சந்தோஷம் கொள்ள செய்ததே எனக்கான பெரிய சந்தோஷம்.
நன்றி ................. அவர்களே.....
மிக்க நன்றி..
உங்கள் கணவருக்கும் பிள்ளைகளுக்கு என் அன்பும் கனிவும்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.
==========================
நன்றி...
துபாயில் இருந்து பேசிய நண்பர் தியேட்டரில் இருந்த காரணத்தால் பெயர் நினைவில் இல்லை.. படத்தில் இருந்த காரணத்தால் என்னால் விரிவாய் பேச முடியவில்லை மன்னிக்கவும்...
===========
வாழ்த்துக்கள்...
கேவிஆர்ராஜா அப்பாவாகி இருக்கின்றார்... அவருக்கும் எனது வாழ்த்துக்கள்.. பரம் பொருளின் ஆசி எப்போதும் இருக்க வேண்டிக்கொள்கின்றேன்.========
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை தனது கேள்விகளால் துளைக்க உலகபடவிழாவை தியாகம் செய்து விட்டு செல்லும் தமிழ் பிளாக்கின் போர் முரசு அண்ணன் உண்மைதமிழன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
==========
இந்தவாரகடிதம்
அன்புள்ள சேகர்,
தங்கள் வலை பூவை (http://jackiesekar.blogspot. ) கடந்த சில தினங்களாக படித்து வருகின்றேன். பதிவுகள் அனைத்தும் அருமை மற்றும் உலக சினிமா குறித்த தங்கள் எழுத்தும் அருமை. சினிமா பரடிசோ, பை சைக்கிள் திவ்ஸ், பதேர் பாஞ்சாலி போன்ற சில படங்களை மட்டும் பார்த்திருந்த எனக்கு தங்களின் விமர்சனம் மூலமாக இன்னும் பல படங்களை பற்றி அறிந்து கொண்டேன். தங்களுக்கு என்னுடைய நன்றி மற்றும் வாழ்த்துக்கள்.
இளங்கோ.
================
பிலாசபி பாண்டி.
போகும் போதே ரசித்து விட்டு போ திரும்ப வந்தா இருக்காது.. வாழ்க்கையை சொல்லவில்லை.. பஸ் ஸ்டாப்பில் நிற்க்கும் பிகரை சொன்னேன்.
===================
நான்வெஜ்18+
காதலனும் காதலியும் பார்க்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருக்கும் போது இரண்டு நாய்கள் புணர்ந்து கொண்டு இருந்தன.. உடனே காதலின் காதலியிடம் ஜொள்ளு ஒழுக... நானும் அது போல பண்ணட்டா???தாராளமா? ஜாக்கிரதையா பண்ணு வலியில நாய் கடிச்சி கிடிச்சி வைக்க போவுது..
===================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
வழக்கம்போலவே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் அருமை அண்ணே,
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் பணி
இதில் போலீஸ் அடக்கி வாசிச்சதுக்கு காரணம்,இது தலித் மாணவர்கள் (?) நடத்தியது. தலித் ஓட்டு வங்கி அரசுக்கு முக்கியம். இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா.
ReplyDelete"ஏன்டா எவனும் பாரின் போய் திரும்பமாட்டேங்குறாங்க என்பதற்க்கான காரணம் இந்த மாதிரி கஸ்மாலத்தை எல்லாம் பார்க்கவேண்டாம் என்பதால்தான்."
எனக்கு கூட "இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்" என்பதை கேட்டால் எரிச்சல் தான் வருது. எவனாவது வெளின்நாட்டுலேந்து விசா அனுப்புனா போய் ஒண்ணா செட்டிலாகலாமுன்னு இருக்கேன்.
You are not alone...
ReplyDeletehttp://www.google.com/support/forum/p/blogger/thread?tid=1e2800433e48d3e3&hl=en
வழக்கம் போல அருமை
ReplyDelete>> மாணவன் எப்படிபா முதல் வடை??
உங்கள் தளம் எங்களுக்கு பிரச்சினை இல்லாமல் தெரிகிறதே..பிஎஸ்.என்.எல்.என்றாலே பிரச்சினைதானா?..
ReplyDelete----செங்கோவி
ப்ளாக்கை பிரபலமாக்க 7 சூப்பர் டிப்ஸ்
Joke Superb Mr. Jackie...
ReplyDeleteRgrds,
Vijay,
Muscat...
Eppodhum pola endha padhivum arumai..vazhuthugal Jakie anna....
ReplyDeleteவழக்கம் போல் அறுசுவை விருந்தாய் உள்ளது.
ReplyDelete-அருண்-
ாசாவை ஆதரித்து ஊரெங்கும் பிரச்சார கூட்டங்கள் நடத்த வேண்டும், கலைஞர் உத்தரவு.
ReplyDeleteஎக்ஸ்பிரஸ் மால் மூலம் ஒரு குடும்பத்தில் சந்தோசம் வரவழைத்துள்ளீர், வாழ்த்துக்கள்.
வெங்காயம் கிலோ 100ரூபாய்.. அதாவது நல்ல குவாலிட்டி..செகன்ட் குவாலிட்டி 80ரூபாய்.. மூன்றாவது குவாலிட்டி 60ரூபாய்...பருவமழையில் நிலத்தில் தேங்கிய தண்ணீரில் அழுகி இந்த வெங்காய தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்குமோ???
ReplyDeletePathukkal than karanam / vilanja konja nanja vengayathayum pathukuna ipdi than / thamilana poranthathu polambiye sethuruvom pola / :(
//வழக்கம்போலவே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் அருமை அண்ணே,
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
தொடரட்டும் உங்கள் பணி //
இத நீ மாத்தவே மாட்டியா?
:)
ReplyDeleteவழக்கம் போல் அருமை
ReplyDeleteவழக்கம்போலவே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் அருமை அண்ணே.
ReplyDeleteஉங்கள் தளம் எங்களுக்கு பிரச்சினை இல்லாமல் தெரிகிறதே..
innikku vengaayam velai kammiyakiduchchu.35 lirunthu 50 roopa varai 3 vareity irukku.
ReplyDeleteஅந்த மாணவர்களின் சாலை மறியல் வேறு வழியே இல்லாமல் நடந்தது. முன்னர் வைத்த வேண்டுகோள்களுக்கு செவி சாய்த்திருந்தால் இப்படி ஆகி இருக்காது. அந்த விடுதிகுள் ஒரே ஒரு நாள் போய் வாருங்கள். அவர்களின் அவலம் புரியும். அவர்கள் சாப்பிடும் சாப்பாடு எப்படி என்று பாருங்கள். வெறுத்துப் போவீர்கள். அங்கு படிக்கிற மாணவர்கள் என்றில்லை யாராரொவும் வந்து போகவும் தங்கவும் செய்கிறார்கள். இதுமாதிரியான சாலை மறியல்கள் நடக்கும் போது மக்கள் மறியல் பாண்ணுபவர்கள் மேல் வருத்தம் கொள்கிறார்கள். அவர்களின் நியாத்துக்கு துணை நிற்காவிட்டாலும் குறை சொல்லாமல் இருக்கலாம். ஒரு முறை வேளச்செரியில் இதே போல சாலைமறியல். எதோ நிவாரண நிதி கிடைக்காத மக்கள் கவுன்சிலரிடம் போக அவர் மிரட்டி அனுப்பி இருக்கிறார். அபுறம் மக்கள் வேறென்ன செய்வார்கள்?
ReplyDelete////நான் எக்ஸ்பிரஸ் மால் கட்டுரையில் எழுதிய ஒரு சில வரிகள் யாரோ ஒருவருடைய தாயின் சில மணி நேரங்களை சந்தோஷம் கொள்ள செய்ததே எனக்கான பெரிய சந்தோஷம்.////
ReplyDeletesanthosam..... vaalthukkal..
enakku unga site open aakuthu.. no probs here..
நான் கடந்த இரண்டு வருடமாக
ReplyDeleteReliance Netconnect Broandband + use
very good service. speed 3.1Mbps.