ஜாக்கிக்கு நேர்ந்த வேதனை அதனால் நிகழ்ந்த சாதனை.

நடிகர்  ஜாக்கியால் நான் பட்ட அவமானம் என்ற பதிவுக்கு, பலர் சிரித்து சிரித்து வயிறு புண்ணாகியதாக போன் செய்து சொன்னார்கள். அந்த பதிவை வாசிக்க இங்கே கிளிக்கவும்.   அது போலான சுயசொறிதல் இந்த பதிவு. விருப்பம் இல்லாதவர்கள் இப்போதே வேறு வேலை பார்க்க கேட்டுக்கொள்ளபடுகின்றார்கள்.
===============


வீட்டில் கரப்பான் பூச்சியை பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. எங்கள்  வீட்டின் பக்கத்தில் நீங்கள் குடி இருப்பவர் என்றால் இந்த  வில் என்று ஒரு பெரும் சப்தம், என் வீட்டில் என் மனைவி எழுப்பும் சத்தம் உங்களுக்கு சகஜமானதாக இருந்து இருக்கலாம்.

நானே அடிக்கடி என் மனைவியை கண்டித்து இருக்கின்றேன். இப்படி கத்தினா நான் உன்னை கொடுமைபடுத்தறதா எதிர் வீட்டு ஆண்ட்டி நினைச்சா? நான் வெளிய போகும் போது என் முஞ்சியையும் பார்த்து நட்பா இப்பயாவது  சிரிச்சி வைக்குது. இப்படி அடிக்கடி கரப்பான் பூச்சியை பார்த்தும், பல்லியை பார்த்தும் வீல்ல்ல்ல்னு கத்தி வச்சா? சினேக சிரிப்பு போய்விடும் என்று கோவத்தோடு சொல்லிவைத்தேன். அவ பயம் அவளுக்கு என் பயம் எனக்கு-----

நான் கரப்பான்களை கையால் பிடித்து வெளியில் போடும் ரகம். அதன் மீசைகள் என் உள்ளங்கையில் கிச்சு கிச்சு மூட்டினாலும் அதை பற்றி கவலைபடாமல் அடங்காத எம்எல்ஏக்களை சட்டசபையில் இருந்து காவலர்கள் வெளியே தூக்கி எறிவது போல் கரப்புகளை வெளியே  எறிவேன்…

பல்லிகளை வீட்டை வீட்டு வெளியே இது போல் செய்ய முடிவதில்லை காரணம் அது கையால் பிடிக்கமுடியாத தூரத்தில் இருப்பதும்… வீட்டில் ஒட்டடை செய்யும் பூச்சிகளை கவ்வி பிடித்து கபலிகரம் செய்வதுதான். பல்லிகள் எப்போதாவது கதவிடுக்கில் மாட்டி உயிர் விட்டு கீழே கிடக்கும் போது அதனை சுற்றி சித்தெறும்புகள் அதனை மொய்த்துக்கொண்டு கிடக்கும்.

சிறுவயதில் நான் ஒரு காட்டுப்பய… எதுக்கும் பயபடமாட்டேன் என்பதால் என்னை நம்மி ஆற்றுக்கும், ஒரு மணிக்கு பேய் உலவும் நேரத்தில் அய்யனார் கோவில் பக்கமும் என் நண்பர்கள் என்னை நம்பி வருவார்கள். எனக்கு எட்டுவயது இருக்கும் போது, என் வீட்டில் அந்த சோகம் இந்த ஜாக்கிக்கு நேர்ந்தது.

புடிக்கிற ஆட்டம் போல் ஒரு போதையான விளையாட்டு எனக்கு  வேற எந்த விளையாட்டிலும் ஆர்வம் இருந்ததில்லை.  கண் பொத்தி  ஒன்னு  இரண்டு மூன்று என்று பத்து வரை சொல்லிவிட்டு என் தங்கைகள் பக்கத்து வீட்டு பெண்கள் எல்லாம் ஒரு இடத்தில் அதாவது வரையறுக்கபட்ட எல்லைக்குள் போய் பதுங்கி கொள்ள, ஜெய்சங்கர் போல அடிமேல் அடிவைத்து ஸ்டைலாய் நடந்து ஒவ்வோருவரையும் பிடிப்பதில் எனக்கு கொள்ளை இன்பம்.

என் தங்கைகள் யாரவாது என்னை பிடிக்க வந்தால் அது முடியாத காரியம். சில நேரங்களில் மறைந்து  இருந்து  யாரும் இல்லாத அமைதியான தருணத்தில் ஆட்டத்தில் அவுட் ஆனாலும் பராவயில்லை என்று பே என்று கத்தி பயமுறுத்துவதை வழக்கமாக கொண்டு இருப்பேன்.

இப்போது என் தங்கை பிடிக்க வேண்டும் பக்கத்தில் உள்ள  வேப்பமரத்தில் கண் மூடி ஒன்று ரெண்டு என்று கத்தி சொல்ல  நான் ஓடி என் வீட்டு தின்னை ஓரத்தில் இருந்த படுத்துக்கொள்ளும் பாயால் என்னை மறைத்துக்கொண்டு இருந்தேன். என் பக்கத்தில் வரும் போது பயங்கரமாக கத்த வேண்டும் இதுதான் என் பிளான்…

இது போல் பிடிக்கும் ஆட்டத்தில் ஆவுட் ஆகும் பசங்களும் அர்வத்தில் மற்றவர்கள் எங்கு  மறைந்து இருக்கின்றார்கள் என்று கண்டுபிடித்து பிடிக்கும் ஆளிடம் இலங்கை கருணா போல எட்டப்பன் வேலையும் பார்ப்பார்கள்.

எல்லோரும் அவுட் ஆகிவிட்டார்கள்.  இப்போது நான் மட்டுமே பாக்கி எல்லோரும் என்னை தேடிக்கொண்டு இருக்கின்றார்கள். வீடு  அமைதியாக இருக்கின்றது. நான் எதிர்பார்த்த கூட்டத்தை பாய் இடுக்கு வரியாக பார்த்து விட்டேன். நான்  எதிர்பார்த்த கூட்டத்தையும் இப்போது  பயமுறித்தினால் அந்த கூட்டத்தில்  நான்கு பேர் யார் யார்  பயப்படுவார்கள் என்று என் மூளை மின்னல் வேகத்தில் கணக்கு போட்டது.


இப்போது பாயை தள்ளி தூனை பிளந்து கொண்டு வந்த நரசிம்ம அவதாரம் போல திடிர் என சத்தம் போட்டு காட்சி கொடுத்து மிரளவைக்க வேண்டும். அப்படி திடிர் சத்தத்தில் பயந்து போய் எல்லோரும் நடுங்க வேண்டும்.
நான் ரெடி ஆகி பாயை தள்ளும்  நேரம் என் காதில் எதோ உள்ளே போக முயற்ச்சித்தது. நானும் அசைவு இல்லாமல் அதை தள்ளி விட முயற்ச்சிக்க அது ஏதோ பொந்து என என் காதை நினைத்துக்கொண்டு வெகு வேகமாக முயற்ச்சிக்க, இப்போது நான் பாயைவிட்டு லபோதியோ என்று கத்திக்கொண்டு என்னை தெடிக்கொண்டு இருப்பவர்களின் காலடியில் விழுந்து புரண்டு கொண்டு இருக்க….

எனது ஆயா பேரன் இப்படி கலவரமாய் கத்துவதை கேட்டு ஓடிவர, என் அம்மா ஒரே பிள்ளை இப்படி பேயாய் கத்துகின்றானே என்று ஓடி வந்து  என்னை மடியில் கிடத்தி என்ன என்று கேட்க? நான் கத்திக்கொண்டே காதை காட்டினேன்.

 காதுக்குள் போகும் அளவுக்கு ஒரு  கரப்ப்ன் பூச்சி என் காதை பொந்து என்று நினைத்துக்கொண்டு  உள்ளே போக முயற்ச்சிக்க, பெரிய கரப்பானாக இருந்தால் அதனை இழுந்து போட்டு விடலாம்… ஆனால் அது சின்னது…

 என் அம்மா கரப்பானின் பின் பக்கம் வெட்கம் இன்றி கை வைக்க, அது உயிர்பயத்தில் என்  காதில் மேலும் முன்னேறியது. எவ்வளவு முயற்சித்தும்  கரப்பானக்கு வழி என் காதினுள் போய் அப்படியே வெளியே போய் விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டது…

எனக்கு செவியினுள் இருக்கும் டிரம்மில், கரப்பானின் மீசையா? அல்லது  அது என்ன கருமமோ என் காதில் சுழற்ற எனக்கு பயத்தில் கத்தி கொண்டு  இருந்தேன். என் பாட்டி சுருக்குபையில் இருக்கு இரும்பு கம்பி  பல்குத்தும் சமாச்சாரத்தை எடுத்து எம்பிபிஎஸ்  படித்த டாக்டர் போல் என் பக்கதில் வர  பாட்டி சனியனே அதை தூக்கிகிட்டு எட்ட ஓடுடி என்று கோவத்தில் கத்தினனேன்.

என் அம்மா என் பாட்டியின் கையில் இருந்த அந்த பல்குத்தும் குச்சியை வாங்கி கரப்பானின் பின் பக்கத்தை காதில் வெளியே தெரியும் வரையில் அதனை பின் பக்கம் குத்தி குத்தி கொத்து பரோட்டா போல் சின்ன பிசாக வெளியே எடுக்க… கரப்பான் உயிர்பயத்தில் அது முழுமூச்சாகக என காதினுள் போக முயற்சித்துக்கொண்டு இருந்தது. அதுரைட்டோ லெப்பேடா திரும்ப எந்த வழியும் இல்லாத காரணத்தால் அது முன் பக்கம் போ முயற்ச்சிக்க…

என் அம்மா எவ்வளவோ முயற்சித்தும் கரப்பான் உடலில் பாதி மட்டுமே வெளியே வந்தது. தலைப்பகுதி உள்ளே போய் விட்டது. ஒரு பக்கம்  காது  எனக்கு கேட்கவில்லை  வால் போஸ்டரில் ஷகிலாவின் பெரிய மார்பை பார்க்கும் ஆர்வம் போல என் காதில் என் விட்டு பக்கத்தில் உள்ள அத்தனை பேரும் ஆர்வமாக காதில் லைட் அடித்து உதடு பிதுக்கி விட்டு போய் கொண்டு இருந்தார்கள். யாரும் நம்பிக்கையாக அதை எடுத்து விடலாம் என்று சொல்லவில்லை…

அதை எடுக்க முடியவில்லை என்றால் காதில் சின்னதாக ஆப்பரேஷன் செய்துதான்  கரப்பானின் தலைபகுதியை எடுக்க வேண்டும் என்று ஒர எல்லாம்தெரிந்த ஏகாம்பரம் சொல்ல என் அம்மா என் சோகம் தெரியாமல் அந்த சுவற்று பக்கம் போய் உட்கார்ந்து கொண்டு உன்னை யாரு புடுக்கிற ஆட்டம் விளையாட சொன்னது என்று அப்போது முடி அதிகம் இருந்த என் தலையில் மொட் என்று வைக்க எனக்கு அழுகை பிரிட்டுக்கொண்டு வந்தது.

காதில் கரப்பு  கறபுற என்று சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது. நாள் திடிர் திடிர் என்று கத்த  என் பர்ட்டி உப்பு கரைசலை என் காதில் ஊற்றிய போது பயங்கரமாக கறபுற சத்தம் கேட்டு விட்டு கொஞ்ச நேரத்தில் அமைதியாக, காதை கவுத்து  தண்ணி காதில் இருந்து வெளியே வரும் போது அதுவும் வந்து விடும் என்று தப்புக்கணக்கு போட அது வரவேயில்லை.

காலையில் கடலூர் அரசு  பொதுமருத்துவமனைக்கு போய்  பாக்கலராம் என்று சொல்லிவிட்டார்கள். எஎனக்கு  இரவு முழுவதும் தூக்கம் வரவேயில்லை. காலையில் பேருந்து படித்து நானும் என் அம்மாவும் கடலூர் அரசு பொதுமருத்துவமைனை போக, ஓபி சீட்டு வாங்கும் இடத்தில் என்ன உடம்புக்கு என்று கேட்க கரப்பான் பூச்சி காதில் போய்விட்டது என்று சொல்ல அவன் விளக்கம் சொன்ன என் அம்மாவை ஒரு மாதிரியாக பார்த்து விட்டு என்னை ஒரு மாதிரியாக பார்த்து வைத்தான்.  அவனுக்கு அப்போது 25 பைசா கொடுத்தால்தான் அந்த ஓபி சீட்டு  தருவான் சீட்டில் 25வது வார்டில் காது மூக்கு தொண்டை டாக்டரை போய் பார்க்க சொன்னான்.

எனக்கு தலை சாய்தால் காது மந்தமாகவும்,  தலை நேராக இருந்தால் தெளிவாகவும் கேட்க.. இரவில் இருந்து   நான் அதை ஒரு விளையாட்டாகவே செய்து பார்த்துக்கொண்டு இருந்தேன். தலை சாய்பது நேரக வைப்பதுமாக அதில் ஒரு விளையாட்டு. காது ஆப்பரேஷன் செய்தால் காதில் பிளஸ்குறி போல் பிளாஸ்டர் போட்டுவிட்டால் எப்படி பள்ளிக்கு போய் பசங்களின் கேலியில் இருந்து தப்பிப்பது என்று கற்பனையில்  யோசித்துக்கொண்டு இருந்தேன்.

காது டாக்டரிடம்  பிரச்சனை சொன்ன போது என்னை வியப்பாக  பார்த்தார்.. காதில் டார்ச் அடித்து செக் செய்தார். நாஸ்இடம் ஒரு பிஸ்டன் போல் ஒரு சமாச்சாரத்தை முழுதாக தண்ணீர் நிரப்பி  என்னை கெட்டியாக பிடித்துகொள்ள அந்த சின்ன நாஸ் என்னை சின்னபையன் என்று மார்போடு சேர்த்து அழுத்திதக்கொள்ள… எனக்கு சட்டென நட்டுக்கொண்டது… அதாவது எனது முடிகளை சொன்னேன்.

காதில் பிஸ்டனில் இருந்த தண்ணி பீய்ச்சி அடிக்க,  எனக்கு  என் உடலில்  உள்ள அனைத்து மயிற்களும் சிலிர்த்துக்கொண்டது. அந்த தண்ணி என் காதில்  உள்ளே போனதும் என் தலையை ஒரு வெள்ளை தட்டில் சாய்த்து  பிடிக்க  உயிர் போராட்டத்தில்  என் காதில்  முன்னேறிய கரப்பானின் பாதி தலை அதில் வந்து விழுந்தது.

எனக்கு உயிர் போய் உயிர் வந்தது. அபரேஷனில் இருந்து தப்பித்தேன்  அல்லவா. என் அம்மாவுக்கு ஒரே ஆனந்தம் பிள்ளைக்கு காது  நன்றாக கேட்கின்றது அல்லவா?

நானும் என் அம்மாவும் கிளம்ப எத்தனித்தோம்… அந்த நர்ஸ் ஒரு லெட்ஜரை எடுத்துக்கொண்டு வந்தார். விலாசம் சொல்ல சொன்னார். சொன்னோம்,  என் பெயர், வயதை அந்த கவர்மென்ட் சாணிதாளில் குறித்துக்கொண்டாள். பிறகு எழுதினாள். கரப்பான் பூச்சி காதில் பூந்த முதல் வித்யாசமான கேஸ் கடலூர் அரசு பொதுமருத்துவமைனை வரலாற்றில் இதுவே முதல் கேஸ் என்று விபரமாக எழுதி என்னிடமும் என் அம்மாவிடமும் கையெழுத்து வாங்கபட்டது.

யாருக்காவது ஆர்வம் இருந்தால் கடலூர் அரசு பொதுமருத்துவமனை சென்று, காது மூக்கு டிப்பார்ட்மென்ட், டிபரன்ட் கேஸ் இஸ்ட்ரியில் தேடி பார்த்தால் இந்த ஜாக்கியின் இயற்பெயரான தனசேகரன் என்று பொறிக்கபட்டு இருக்கும்.
கடலூர் மாவட்டத்தில் காதில் கரப்பான் பூச்சி பூந்த முதல் கேஸ்நான்தான்… வரலாற்றில் எழுதியாச்சு இல்லை. வரலாறு முக்கியம் அமைச்சரே.
வீல்ல்ல்ல்ல்……………………..

 ஒன்னும் இல்லை ஜென்டில்மேன் என் மனைவி பால் காய்ச்ச சமையல் கட்டு போய் இருக்கின்றாள் என்பது எனக்கு தெரிகின்றது. ஆனால் எதிர் வீட்டு ஆண்டிக்கு எப்படி புரியவைப்பது???? யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பு……….

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..

17 comments:

 1. பின்னுட்டங்கள் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 2. /யாருக்காவது ஆர்வம் இருந்தால் கடலூர் அரசு பொதுமருத்துவமனை சென்று, காது மூக்கு டிப்பார்ட்மென்ட், டிபரன்ட் கேஸ் இஸ்ட்ரியில் தேடி பார்த்தால் இந்த ஜாக்கியின் இயற்பெயரான தனசேகரன் என்று பொறிக்கபட்டு இருக்கும்.
  கடலூர் மாவட்டத்தில் காதில் கரப்பான் பூச்சி பூந்த முதல் கேஸ்நான்தான்… வரலாற்றில் எழுதியாச்சு இல்லை. வரலாறு முக்கியம் அமைச்சரே.
  வீல்ல்ல்ல்ல்……………………..////

  வியப்பாகவும் அதே சமையம் இதை பற்றி நீங்கள் எழுதி இருக்கும் விதம் நகைச்சுவையாகவும் இருக்கிறது நண்பரே

  ReplyDelete
 3. நல்ல அனுபவம்.

  எனக்கு ஒரு முறை சின்ன எறும்பு காதுக்குள் போய், அது நடக்கும் சவுண்டு, ட்ரம்ஸ் வாசிப்பது போல இம்சையாக இருந்தது. தண்ணீர் காதில் ஊற்றி அதை வெளியே எடுத்தேன்.

  ReplyDelete
 4. நல்ல வேல கரப்பான் பூச்சியை அதே காதில் எடுத்தீங்க. இல்லைன்னா கமெடி ஆயிருக்கும்

  ReplyDelete
 5. எதிர் வீட்டு ஆண்ட்டி நினைச்சா?

  எதிர் வீட்டு ஆண்டிக்கு எப்படி புரியவைப்பது????

  HELLO...IS THIS SARAVANA BHAWAN..? DO YOU HAVE MONTHLY MESS SYSTEM?....YOU CAN DELIVER TO MY FRIEND'S FLAT...? VERY NICE....! PLEASE DELIVER TO BELOW ADDRESS...
  சம்பந்தம் அடுக்குமாடி குடியிருப்பு
  தரைதளம் இரண்டு
  மேக்ஸ் ஒர்த் நகர்...பேஸ்.. 1
  கொளப்பாக்கம்...
  சென்னை 101....
  WHAT FLAT NUMBERAA?...NO...NO HE IS STAYING (LYING) OUT SIDE THE FLAT....!

  HOW MANY MONTHAAAA?...NO IDEA BOSS....YOU KINDLY START SUPPLYING FOOD + WATER ASAP.

  DEAR MR. J
  THEY WAY YOU LINKED... COCKROACH...YOUR PRESENT DAYS...YOUR CHILDHOOD DAYS...NEARBY AUNT!...ARE VERY NICE AND ENTERTAINING.

  ENJOYED READING THE ARTICLE.

  REGARDS

  RAJ

  ReplyDelete
 6. எனக்கு சட்டென நட்டுக்கொண்டது… அதாவது எனது முடிகளை சொன்னேன்.....ANTI CHRIST FILM effect?

  ReplyDelete
 7. " அவ பயம் அவளுக்கு என் பயம் எனக்கு-----"
  :P

  பதிவு முழுவதையும் ரசித்தேன்...

  ReplyDelete
 8. romba satharanma supera eluthureenga..

  ReplyDelete
 9. //சிறுவயதில் நான் ஒரு காட்டுப்பய… //

  இப்ப மட்டும் நல்ல மனுசனாயிட்டாராம்....

  ReplyDelete
 10. சாதனையாளருக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner