Showing posts with label எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்? எனக்கு பிடிக்கும். Show all posts
Showing posts with label எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்? எனக்கு பிடிக்கும். Show all posts

ஆண்டிப்பட்டி கணவாய் காத்து


இப்போது என் ரிப்பிட் மோடில் தினமும் நான் கேட்டுக்கொண்டு இருக்கும் பாடல்
தர்மதுரை படத்தில் வரும் ஆண்டிப்பட்டி கணவா காத்து பாட்டுதான் என்ன அற்புதமான வரிகள்….

வைரமுத்து யுவன் கூட்டனியில் அசத்தலோ அசத்தல் பாடல்இது.
பாடலில் வரிகள் மனதுக்கு இணக்கமாய் இருக்கின்றன…
மாமன் விஜய் சேதுபதி டாக்டராகி விட்டான்… அத்தை பெண் ஐஸ்வர்யா கிராமத்தில் விவசாய வேலைகளை பார்த்துக்கொண்டு கிளை நுலகத்தில் புத்தகங்கள் படித்த படி ராணி வாரஇதழுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருக்கின்றாள்…

மாமன் டாக்டராகி வந்து விட்டான்… ஆனால் அவன் உயரத்துக்கு அதாவது படிப்பு மற்றும் வேலையில் இல்லை என்பதால் கொஞ்சம் சிறிய தாழ்வு மனப்பான்மை.
அதில் ஒரு வரி வரும்..

இந்த பாட்டுல 3:54 இல் இருந்து பாருங்க…
உன் பவுஷுக்கும் உன் பதவிக்கும் வெள்ளக்காரி புடிப்ப..
இந்த கிரிக்கியை ஏழை சிறுக்கியை எதுக்காக பிடிச்ச.?
ஒரு வெள்ளக்காரி காசு தீர்ந்தா வெளுத்து ஓடிப்போவா?
இவ வெள்ளரிக்கா வித்து கூட வீடு காத்து வாழ்வா…
இரண்டு பேரின் மன உணர்வுகளும் வார்த்தைகளாய்…
ஐஸ்வர்யாவின் கண்ணும்… படித்த மாமன் அதுவும் டாக்டர் மாமன் தன்னை கட்டிக்கொள்வானா என்ற ஏக்கம் இருக்கும் பாருங்க…

ஐ லவ்யூ ஐஸ்
சான்சே இல்லை…
பாடல் காட்சியை படமாக்கிய விதமும் அருமை.

ரொம்ப நாள் கழிச்சி உள்ளுக்குள்ள இருந்த கிராமத்தானை தட்டி எழுப்பிய திரைப்பட பாடல் இது…..

ஜாக்கிசேகர்
18/08/2016



#dharmadurai #vijaysethupathi #ishwarya #தர்மதுரை #வைரமுத்து #யுவன் #சினுராமசாமி #yuvan #jackiecinemas




நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

உனக்காக பிறந்தேனே எனதழகா.. பிரியாம இருப்பேனே பகல் இரவா....



பொதுவாக வயது  முதிர்ந்தவனின் காதலையும் காமத்தையும் ஊடலையும் தமிழ் சினிமா புறந்தள்ளி இருக்கின்றது...

எதிர்ப்பார்த்து காத்து இருக்கும் படம்….



அந்த படத்தின் டிரைலரை சில நாட்களாக விரும்பி பார்க்கின்றேன்.டிரைலர் அப்படி என்ன இருக்க முடியும்? என்று உங்கள் மனதில் எழும் கேள்வி நியாயம்தான்.

ஆயிரத்தில் நான் ஒருவன்....

தனிமையில் வீட்டில் இருக்கின்றீர்கள்... பிளாக் எழுதி விட்டீர்கள்...ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கும் போது அதில் மனது லயிக்கவில்லை.. சர்வ நிச்சயமாக அந்த  வெற்றிடத்தை நிரப்ப இசைக்கு முக்கிய பங்கு உண்டு...

எனக்கு பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும் நிறைய பேருக்கு மெல்லிசை பிடிக்கும் எனக்கு வெஸ்டர்ன் இசை...பிடிக்கும்..அதே போல் எனது மூட் மாற மிக முக்கிய பங்கு இசைக்கு உண்டு...நான் மிகுந்த யோசனையில் மன உளைச்சலில் இருக்கும் போது நான் இந்த பாடலைதான் கேட்பேன்...


நடிகர் கமலுக்கு மகுடம் சூட்டிய பாடல்...


கமல் நடிப்புதிறமை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான்... இருப்பினும் அவர் சினிமாவுக்கு தன்னை அப்படியே அற்பணித்துக்கொண்டவர்.. சினிமாவில் கமலுக்கு அனைத்து துறைகளும் அத்துபடி என்றாலும்... 1980களில் அவரை காதல் இளவரசன் என்றே தமிழ் சமூகம் கொண்டாடியது எனலாம்...

அதன் பிறகு அம்மா நான் காலேஜ்க்கு போயிட்டு வரேன் என்று என்னால் நடிக்க முடியாது.. என்று உதறிவிட்டு குணசித்திர பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்த நடிகர்...

கமலை நான் மிகவும் ரசித்த படம் என்றால் அது காக்கிசட்டையும்,விக்ரமும்தான்.... அந்த இரண்டு படங்களில் கமலிடம் உள்ள இளமை கொப்பளிப்பு எனக்கு பிடித்தமான ஒன்று...


ஒரு கலைஞன் என்னதான் திறமையாளனாக இருந்தாலும்... ஒரு நல்ல இயக்குனரிடம் சிக்கும் பட்சத்தில்தான் அவன் மேலும் மெருகு ஊட்டபடுகின்றான்...பல திறைமையான இயக்குனர்கள்.. கமல் என்னும் கல்லில் சிற்பம் வடித்தாலும்.. கவுதம்மேனன்.. கமலை வைத்து சிற்பம் வடித்த அழகே அழகு...

கமல் எனும் கலைஞனை வெகுநாட்களுக்கு பிறகு மிகவும் அழகாகய் அவன் ஆளுமையை வெளிக்கொணர்ந்த பாடல் இது... என்பேன்...
வேட்டையாடு விளையாடு படத்தில் கற்க்க கற்க்க என்ற அந்த பாடல் என்னதான் கமல் எனும் கலைஞன் பல படங்கள் நடித்தாலும் இந்த பாடல் கமல் கேரியரில் கலக்கிய பாடல் எனலாம்...

ஒரு போலிஸ் ஆபிசர், அவர் செய்யும் உத்தியோகம் சம்பந்தமான காட்சிகள்.. அவரின் குணநலன்கள் போன்றவற்றை மிக அழகாக சொன்ன பாடல் அது...ராகவன் எனும் ஆபிசர் அதை செய்வான் இதை செய்வான் என்று வாயால் சொல்லாமல் விஷுவலாக மெனெக்கெட்டு எடுத்த பாடல் இது...


இந்த பாடலின் வரிகள் மிகவும் அற்புதமானது...

சுற்றும் சுற்றும் காற்றை போலே எங்கும் செல்வான் இவன்... போன்ற வரியும்...

மாவீரமும் ஒரு நேர்மையும் கை கோர்த்து கொள்ள அகராதியோ அதை ராகவன் என அர்த்தம் கொள்ள.... என்ற வரிகளும்...


திரியும் நெருப்பும் காதல் கொண்டால் தோன்றும் தோற்றம் இவன்தானே... அப்பா என்ன வரிகள்... தாமரை சான்சே இல்லை




KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN
KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN

MAAVEERAMUM ORU NERMAYUM KAI KORTHU KOLLA
AGARAADHIYO ADHIRAAGHAVAN YENA ARTHAM SOLLA
ADHIGAARAMO AARPAATAMO IVAN PECHIL ILLAI
MUNAAIVADHIL PINAAIVADHIL IVAN PULYIN PILLAI
OOO..KAAKHI SATTAIKKUM UNDU NAL KARPUGAL KARPUGAL YENDRU
KATTIYA THANTHAVAN NAANE IRU KAIGALAI KULIKKIDUM MAANE
ORU THIRIYUM NERUPPUM KAADHAL KONDAAL THONDRUM THOTRAM IVANDHAANE

KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
NIRKA NIRKA NERMAIYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
OH MAA..YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN OO..OO
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN

KAN AAYIRAM KAI AAYIRAM YENA VEGAM KOLLA
IBBOOMIYIL NADAMAADIDUM IVAN DEYVUM ALLA
VAAN SURIYAN ORU NAALILE KAANAAMAL POONAA
AVVANAIYE MULU VIRPANAI SEITHENUM NIRPAAN
NARA VETTAYIGAL VETTAYAIGAL AADA IRU KAIGALIN VIRALGAL NEELA
YETHIRIGAL YETHIRIGAL KAAGA SENKURIDHIYIL DHEGANGAL THOOYA
ORU ACHCHAM ACHCHAM ENNUM SOLLAI THEEYIL ITTU THEERTHANE

KARKA KARKA KALLAM KARKA ENDRU SONNA NAMAN
KALLAM PATRA KALVAR YELLAAM MATTIKKOLLUM ARAN
AAA..NIRKA NIRKA NERMAIYIL NIRKA KATRUKKONDA NARAN
SUTTUM SUTTUM KAATRAI POOLE YENGUM SELVAAN IVAN
THUPPAAKI MATRUM THOOTAAVAI THAAN KAADHALITHAAN
YENDRAALUM KAAKHI SATTAYAITHAAN KAI PIDITHAAN
THAN SAAVAI SATTAI PAYIL VAITHU YENGEYUM SELKINDRAAN

இந்த பாடலின் முடிவில் கமல் வெள்ளை சட்டையும் காக்கி பேண்டும் போட்டுக்கொண்டு 48 பிரேம்சில் நடந்து வரும் அழகே அழகு... இந்த பாடலின் முடிவில் இந்த படத்தின் படத்தின் மேக்கிங்கும் இடம் பெற்று இருக்கும்...

கமல் கேரியரில் இந்த பாடல் ஒரு அசத்தலான பாடல் என்றால் அது மிகையில்லை...இந்த பாடலுக்கு உழைத்த அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் நன்றிகள்..

அன்புடன்
ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும், சினிமா சுவாரஸ்யங்கள் தொடரையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

பெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...

எவ்வளவோ பாடல்களை நாம் அனுதினமும் ரசிக்கின்றோம்... கேட்கின்றோம்.. எனக்கு மென்மையான பாடல்கள் மேல் காதல் கடந்த பத்து வருடங்களாகத்தான்... உதாரணத்துக்கு அஞ்சலி படத்தை எடுத்து்கொண்டாள்.. அதில் குழந்தைகள் பாடும் அஞ்சலி, அஞ்சலி... சின்ன கண்மணி .. பாடலை விட சம்திங் பாடல்தான் என் பேவரைட்....

ஆனால் இப்போது அப்படி அல்ல....

ஒரு பெண்ணை எந்தளவுக்கு உயர்வாய் சொல்ல முடியும்... வாழ்வின் ஆதார தேவையான நீருடன் பெண்ணை இனைத்து எழுதிய இந்த பாடல் என் பேவரிட்...

நீரின்றி அமையாது உலகு.... அது போல் பெண்ணின்றி அமையாது உலகு... என்ற தத்துவத்தை முன்னிறுத்தி சொன்ன பாடல் இது... அதில் வரும் வரிகள் என்னை எப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும்... வைரமுத்து எனும் கவிஞனை நான் மானசீகமாக காதலித்த பாடல் இது...

தண்ணிரையும் பெண்ணையும் கம்பேர் செய்யும் இடங்களையும், அதற்க்கான வைரமுத்துவின் கற்பனையும் வாவ் ரகம்...

கவிஞன் நதியிடம் சொல்கின்றான்... நீ பெண் போன்றவள் என்று... எப்படி?என்று நதி கேட்டால் சொல்வதாக சொல்கின்றான்... கேட்காமல் சொன்னால் அதற்க்கு சுவாரஸ்யம்இ இருக்காது அல்லவா? ஏனெனில் கேட்டு சொன்னால்தான் மரியாதை அல்லவா அதற்க்காகத்தான்....அதற்க்கு நிறைய காரணங்களை சொல்கின்றான்... அவை என்ன என்ன???


நடந்தால் ஆறு , எழுந்தால் அருவி, நின்றால் கடல் என்ற மூன்று நிலைகளை சொல்லிவிட்டு...
சமைந்தால் குமரி,மணந்தால் மனைவி, பெற்றாள் தாய் அல்லவா என்கின்றான்...

இப்போது பெண்ணையும்... நீரையும் கம்பேர் செய்கின்றான்...

காதலின் அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே.....

வெட்கம் வந்தால் உறையும்
விரல்கள் பட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே....


பாருங்கள் நீர் உறைவது வெட்கத்தினாலாம்.... அதை விட அற்புதவரி எது வென்றால் தண்ணீர் குடத்தில் பிறக்கின்றோம்... தண்ணீர் கரையில் முடிக்கி்ன்றோம்....இந்த வரி சான்சே இல்லை.....

அடுத்த கம்பேர்....

வண்ண வண்ண பெண்ணே வட்டம் இடும் நதியே வளைவுகள் அழகு...மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே... அது நங்கையின் குணமே... இரண்டு மே மேடு பள்ளம் மறைக்குமாம்...

தீங்கனியில்சாரகி, பூக்களிளே தேனாகி, பசுவினிலே பாலகும் நீரே...தாய் அருகே சேய் ஆகி தலைவனிடம் பாயகி, சேய் அருகே தாயாகும் பெண்ணே... பூங்குயிலே, பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்... நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கறைந்து போக கூடும்...

பெண்ணை, நீரும் நினைத்து விட்டால் எல்லா வற்றையும் துவசம் செய்து விடுவார்களாம்...

அத்தியாவசிய தேவையான நீருடன் கவிஞரின் ஒப்பீடு என்பது மெய்சிலிர்க்க வைக்கும்... இந்த பாடலை நீங்கள் எத்தனை முறை கேட்டாலும்....உங்கள் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்து அம்மா, மனைவி இருவரையும் மனதில் வைத்து அல்லது வார்க்கையில் உங்கள் உயர்வுக்கு காரணமான பெண்ணை மனதில் வைத்து கேட்டு பாருங்கள்... உணர்ச்சியில் கண்ணீர் வரும் என்பது நிச்சயம்...

இந்த பாட்டில் போட்டோகிராயியும் எடிட்டிங்கும் எனக்கு பிடிக்கும்




ரிதம் படத்தில் ஏஆர்.ரகுமான் இசையில் பாடகர் உன்னிமேனன் பாடிய பாடல் இது...


அந்த பாடல் காட்சிகளை.... கேளுங்கள் பாருங்கள்....




அந்த பாடலின் முத்தான வரிகள்(நன்றி பிரியமுடன் வசந்த்)
தமிழ் வரிகளோட பாடல் கேட்டுப்பாருங்க....



தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

நடந்தால் ஆறு எழுந்தால் அருவி நின்றால் கடலல்லோ
சமைந்தால் குமரி மணந்தால் மனைவி பெற்றால் தாயல்லோ
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

தினம் மோதும் கரை தோறும் அட ஆறும் இசை பாடும்
ஜில் ஜில் ஜில் என்ற சுருதியிலே
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
ஜல் ஜல் ஜல் என்ற நடையிலே

காதலி அருமை பிரிவில் மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே
வெட்கம் வந்தால் உரையும் விரல்கள் தொட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே
தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தண்ணீர் குடத்தில் பிறக்கிறோம் ஓஹோ
தண்ணீர் கரையில் முடிக்கிறோம் ஓஹோ

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

வண்ண வண்ண பெண்ணே வட்டமிடும் நதியே வளைவுகள் அழகு
உங்கள் வளைவுகள் அழகு
ஹோ மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே
அது நங்கையின் குணமே
சிறு நதிகளே நதியிடும் கரைகளே கரைதொடும் நுரைகளே நுரைகளில் இவள் முகமே (2)

தினம் மோதும் கரை தோரும் அட ஆறும் இசை பாடும்
...
கங்கை வரும் யமுனை வரும் வைகை வரும் பொருணை வரும்
...

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா

தேன்கனியில் சாராகி பூக்களிலே தேனாகி பசுவினிலே பாலாகும் நீரே
தாயருகே சேயாகி தலைவனிடம் பாயாகி சேயருகே தாயாகும் பெண்ணே
பூங்குயிலே பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவம் மாறக்கூடும்
நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

நதியே நதியே காதல் நதியே நீயும் பெண்தானே
அடி நீயும் பெண்தானே
ஒன்றா இரண்டா காரணம் நூறு கேட்டால் சொல்வேனே
நீ கேட்டால் சொல்வேனே

தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா
தீம்தனனா தீம்தனனா தீம்தனனா தீம்தனனா
தீம்தனனா தீம்தனனா திரனா


அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

பெண்களை மிக உயர்வாய் சொன்ன பாடல் இது...

எவ்வளவோ பாடல்களை நாம் அனுதினமும் ரசிக்கின்றோம்... கேட்கின்றோம்.. எனக்கு மென்மையான பாடல்கள் மேல் காதல் கடந்த பத்து வருடங்களாகத்தான்... உதாரணத்துக்கு அஞ்சலி படத்தை எடுத்து்கொண்டாள்.. அதில் குழந்தைகள் பாடும் அஞ்சலி, அஞ்சலி... சின்ன கண்மணி .. பாடலை விட சம்திங் பாடல்தான் என் பேவரைட்....

ஆனால் இப்போது அப்படி அல்ல....

ஒரு பெண்ணை எந்தளவுக்கு உயர்வாய் சொல்ல முடியும்... வாழ்வின் ஆதார தேவையான நீருடன் பெண்ணை இனைத்து எழுதிய இந்த பாடல் என் பேவரிட்...

நீரின்றி அமையாது உலகு.... அது போல் பெண்ணின்றி அமையாது உலகு... என்ற தத்துவத்தை முன்னிறுத்தி சொன்ன பாடல் இது... அதில் வரும் வரிகள் என்னை எப்போதும் மெய்சிலிர்க்க வைக்கும்... வைரமுத்து எனும் கவிஞனை நான் மானசீகமாக காதலித்த பாடல் இது...

தண்ணிரையும் பெண்ணையும் கம்பேர் செய்யும் இடங்களையும், அதற்க்கான வைரமுத்துவின் கற்பனையும் வாவ் ரகம்...

கவிஞன் நதியிடம் சொல்கின்றான்... நீ பெண் போன்றவள் என்று... எப்படி?என்று நதி கேட்டால் சொல்வதாக சொல்கின்றான்... கேட்காமல் சொன்னால் அதற்க்கு சுவாரஸ்யம்இ இருக்காது அல்லவா? ஏனெனில் கேட்டு சொன்னால்தான் மரியாதை அல்லவா அதற்க்காகத்தான்....அதற்க்கு நிறைய காரணங்களை சொல்கின்றான்... அவை என்ன என்ன???


நடந்தால் ஆறு , எழுந்தால் அருவி, நின்றால் கடல் என்ற மூன்று நிலைகளை சொல்லிவிட்டு...
சமைந்தால் குமரி,மணந்தால் மனைவி, பெற்றாள் தாய் அல்லவா என்கின்றான்...

இப்போது பெண்ணையும்... நீரையும் கம்பேர் செய்கின்றான்...

காதலின் அருமை பிரிவில்
மனைவியின் அருமை மறைவில்
நீரின் அருமை அறிவாய் கோடையிலே.....

வெட்கம் வந்தால் உறையும்
விரல்கள் பட்டால் உருகும்
நீரும் பெண்ணும் ஒன்று வாடையிலே....


பாருங்கள் நீர் உறைவது வெட்கத்தினாலாம்.... அதை விட அற்புதவரி எது வென்றால் தண்ணீர் குடத்தில் பிறக்கின்றோம்... தண்ணீர் கரையில் முடிக்கி்ன்றோம்....இந்த வரி சான்சே இல்லை.....

அடுத்த கம்பேர்....

வண்ண வண்ண பெண்ணே வட்டம் இடும் நதியே வளைவுகள் அழகு...மெல்லிசைகள் படித்தல் மேடு பள்ளம் மறைத்தல் நதிகளின் குணமே... அது நங்கையின் குணமே... இரண்டு மே மேடு பள்ளம் மறைக்குமாம்...

தீங்கனியில்சாரகி, பூக்களிளே தேனாகி, பசுவினிலே பாலகும் நீரே...தாய் அருகே சேய் ஆகி தலைவனிடம் பாயகி, சேய் அருகே தாயாகும் பெண்ணே... பூங்குயிலே, பூங்குயிலே பெண்ணும் ஆறும் வடிவமாறக்கூடும்... நீர் நினைத்தால் பெண் நினைத்தால் கரைகள் யாவும் கறைந்து போக கூடும்...

பெண்ணை, நீரும் நினைத்து விட்டால் எல்லா வற்றையும் துவசம் செய்து விடுவார்களாம்...

அத்தியாவசிய தேவையான நீருடன் கவிஞரின் ஒப்பீடு என்பது மெய்சிலிர்க்க வைக்கும்... இந்த பாடலை நீங்கள் எத்தனை முறை கேட்டாலும்....உங்கள் வாழ்க்கையில் பெரும் பங்கு வகித்து அம்மா, மனைவி இருவரையும் மனதில் வைத்து அல்லது வார்க்கையில் உங்கள் உயர்வுக்கு காரணமான பெண்ணை மனதில் வைத்து கேட்டு பாருங்கள்... உணர்ச்சியில் கண்ணீர் வரும் என்பது நிச்சயம்...

இந்த பாட்டில் போட்டோகிராயியும் எடிட்டிங்கும் எனக்கு பிடிக்கும்




ரிதம் படத்தில் ஏஆர்.ரகுமான் இசையில் பாடகர் உன்னிமேனன் பாடிய பாடல் இது...


அந்த பாடல் காட்சிகளை.... கேளுங்கள் பாருங்கள்....




அந்த பாடலின் முத்தான வரிகள்(மன்னிக்கவும் ஆங்கிலத்தில்)
Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Nadhiyae Nadhiyae Kaadhal Nadhiyae Neeyum Pendhaanae Adi Neeyum Pendhaanae Onraa Irandaa Kaaranam Nooru Kaettaal Solvaenae Nee Kaettaal Solvaenae Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa

Nadandhaal Aaru Ezhundhaal Aruvi Ninraal Kadalalloa Samaindhaal Kumari Manandhaal Manaivi Petraal Thaayalloa (Siru Nadhigalae Nadhiyidum Karaigalae Karaithodum Nuraigalae Nuraigalil Ival Mugamae) - 2 Dhinam Moadhum Karai Thoarum Ada Aarum Isai Paadum Jil Jil Jil Enra Sruthiyilae Gangai Varum Yamunai Varum Vaigai Varum Porunai Varum Jal Jal Jal Enra Nadaiyilae Dhinam Moadhum Karai Thoarum Ada Aarum Isai Paadum Jil Jil Jil Enra Shrutiyilae Gangai Varum Yamunai Varum Vaigai Varum Porunai Varum Jal Jal Jal Enra Nadaiyilae

Kaadhali Arumai Pirivil Manaiviyin Arumai Maraivil Neerin Arumai Arivaay Koadaiyilae Vetkam Vandhaal Uraiyum Viralgal Thottaal Urugum Neerum Pennum Onru Vaadaiyilae Thanneer Kudaththil Pirakkiroam Oahoa Thanneer Karaiyil Mudikkiroam Oahoa Thanneer Kudaththil Pirakkiroam Oahoa Thanneer Karaiyil Mudikkiroam Oahoa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa


Vanna Vanna Pennae Vattamidum Nadhiyae Valaivugal Azhagu Ungal Valaivugal Azhagu Hoa Mellisaigal Padiththal Maedu Pallam Maraiththal Nadhigalin Gunamae, Adhu Nangaiyin Gunamae (Siru Nadhigalae Nadhiyidum Karaigalae Karaithodum Nuraigalae Nuraigalil Ival Mugamae) - 2 Dhinam Moadhum Karai Thoarum Ada Aarum Isai Paadum... Gangai Varum Yamunai Varum Vaigai Varum Porunai Varum... Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa

Thaenkaniyil Saaraagi Pookkalilae
Thaenaagi Pasuvinilae Paalaagum Neerae Thaayarugae Saeyaagi Thalaivanidam Paayaagi Saeyarugae Thaayaagum Pennae Poonguyilae Poonguyilae Pennum Aarum Vadivam Maarakkoodum Neer Ninaiththaal Pen Ninaiththaal Karaigal Yaavum Karaindhu Poagak Koodum Nadhiyae Nadhiyae Kaadhal Nadhiyae Neeyum Pendhaanae Adi Neeyum Pendhaanae Onraa Irandaa Kaaranam Nooru Kaettaal Solvaenae Nee Kaettaal Solvaenae Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dheemthananaa Dhiranaa

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றும் டைம்பாஸ் படங்களையும்,மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

என் மனைவிக்கு இந்த பாடலை சமர்பிக்கின்றேன்...



ஒரு சில பாடல்கள் எப்போது கேட்டாலும் ஒரு உற்சாகம் நம்மை தொற்றிக்கொள்ள வைக்கும் அந்த வகையில் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தமானதும் கூட...

இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என் மனைவி ஞாபகம் வந்து விடும்... திருமணம் ஆகாதவர்கள் கேட்டால் அவர்கள் காதலி ஞாபகம் நிச்சயம் வந்து தொலைக்கும்....

அந்த பாடல் அந்த அளவுக்கு பேமஸ் ஆகவில்லை இருந்தாலும் அந்த பாடலின் வரியும் வசீகரமும் என்னை கவர்ந்தது என்பேன்....


காதலன் காதலியை பிரிந்தாலும் அல்லது வீடு செல்லும் போது இன்னும் கொஞ்சம் நேரம் அந்த கை பிடித்து இருப்பது போல் அல்லது இருக்க வேண்டும் என்று நினைத்து பாடும் பாடல் இது...


அந்த பாடல் தொட்டி ஜெயா படத்தில் சிம்பு்வும்,கோபிகாவும் பாடும் பாடல்...இசை ஹரீஸ்...

பாடல் தொடங்கும் முன் வரும் தாரா தாரா என்ற கோராசும் அதன் பிறகு தொடங்கும் படலும் அற்புதம்....


காதலன்...
உயிரே என்னுயிரே என்னமோ நடக்கதுடி...
அடடா இந்த நொடி வாழ்வில் இனிக்குதடி
ஒரு நிமிடம் ஒரு நிமிடம் எனை நீ பிரியாதே...
எனது அருகில் நீ இருந்தால் தலைகால் புரியாதே
நிஜம்தானே கேளடி நினைவெல்லாம் நீயடி....
நடமாடும் பூச்செடி நீ என்னை பாராடி...

இது வரை எங்கிருந்தோம்
இதயமும் என்னை கேட்கின்றதே
பெண்ணே எங்கே மறைந்து இருந்தாய்
என்னுள் எப்படி நுழைந்து கொண்டாய்..... என்று காதலன் கேட்க அதற்க்கு காதலி சொல்கின்றாள்

உனக்குள்ளே ஒளிந்திருந்தேன்
உருவத்தில் உதிரமாய் கலந்து இருந்தேன்
உனக்கே உன்னை தெரியலையா?
இன்னும் என்னை புரியலையா? ... என்று போகும் பாடல்...

அதில் காதலி நடுவில் சொல்லுவாள் ...

எங்கே யோ உன் முகம் நான் பார்த்த ஞாபகம்...

எப்போதோ உன்னுடன் நான் வாழ்ந்து ஞாபகம்.....

நீங்கள் இந்த பாடலை கேளுங்கள் எப்போதும் இனிக்கும் பாடல்...



Singers : Karthik,Anuradha Sriram,Bombay Jeyashree


M:
Uyire en uyire ennavo nadakuthadi
Adada intha nodi valvil inikuthadi
Oh oru nimidam oru nimidam enai nie piriyathe
Enatharugil nie irunthal thalai kal puriyathe
Nijam thane kel adi ninaivellam nie adi
Nadam adum poochedi nie ennai par adi

Ithu varai engirunthom
Ithayamum unnai kekurathe
Penne enge marainthirunthai
Ennul epadi nulainthu kondai

F:
Unnakulle olinthirunthen uruvathil uthiramai kalanthu irunthen
Unnai unake theriyalaya ennum ennai puriyalaya

M:
Nan sirithu magilnthu silirkum payathai nie koduthai
Nan ninathu ninaithu nesikum kalathai nie anaithai

F:
Engeyo un mugam nan partha nyabaham
Epotho un unudan nan valntha nyabaham

M:
Uyire en uyire ennavo nadakuthadi
Adada intha nodi valvil inikuthadi
Oh oru nimidam oru nimidam enai nie piriyathe

F:
Enatharugil nie irunthal thalai kal puriyathe

M:
Nijam thane kel adi ninaivellam nie adi
Nadam adum poochedi nie ennai par adi

F:
Unnudan irukayile nilavukum siragugal mulaikirathe
Ithuvarai nanum partha nilava
Ithanai velicham kodutha nilava

M:
Unnudan nadakayile en ninal kandamai mariyathe
Munne munne nam ninalgal
Ondrai ondrai kalakindrathe

F:
Nie pesum varthai serthu vaithu vasikiren
Un swasa katru muchil vangi swasikiren

M:
Nijam thane kel adi ninaivellam nie adi
Nadam adum poochedi nie ennai par adi

F:
Uyire en uyire ennavo nadakuthadi
Adada intha nodi valvil inikuthadi
Oh oru nimidam oru nimidam enai nie piriyathe

M:
Oh oru nimidam oru nimidam enai nie piriyathe
Enatharugil nie irunthal thalai kal puriyathe

F:
Engeyo un mugam nan partha nyabaham
Epotho un udan nan valntha nyabaham
Nan valntha nyabaham






காதலியாகவோ,மனைவியாகவோ இருக்கும் ஒரு பெண்ணி்ன் சில கண பிரிவுக்காக பாடும் பாடல்.. பாடல் எழுதியவரை மட்டும் நீங்கள் சொல்லுங்கள்

அன்புடன்/ஜாக்கிசேகர்
தமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்
நன்றி.....

(ladam)காதல்வயப்பட்டவரா அல்லது காமவயப்பட்டவரா? இந்த பாடலை கேளுங்கள்...


காதல் வயப்படு்ம் போதும், காம வயப்படும்போதும், முழுமையான போதை சமாச்சாரம் காதல் பாடல்களை கேட்பதுதான் என்பேன். இந்தக்கையில் சிகரேட் புகைய அடுத்த கையால் தொடையில் தாளம் போட்டபடி சிஸ்டத்தில் காதல் பாடல்கள் கேட்கும் எத்தனையோ நண்பர்கள் கூட்டத்தை நான் பார்த்து இருக்கி்றேன்.

இது எனக்கு கல்லூரி பேருந்தில் பயணம் செய்யும் போது இந்த பாடலை கேட்க சொன்னாள் என்னோட தினம்பயணம் செய்யும் பெண். முதலில் அந்த படம் ஓடவில்லை அதில் எந்த பாடலும் பெரிய அளவில் வெற்றி பெற்றது போலவும் தெரியவில்லை என்பதால் நான் அந்த பாடலின் மேல் கவனம் செலுத்தவில்லை.
ஒரு நாள் ஏதெச்சையாக கவனம் செலுத்த அந்த பாடல் என்னை மிகவும் வசீகரிக்க வைத்து விட்டது.

சில படங்கள் ஓடாது ஆனால் அதில் ஏதாவது ஒரு பாடல் பட்டையை கிளப்பும். அந்த வகையில் சமீபத்தில் வெளி வந்து பெரிய அளவில் வெற்றி பெறாத படம் லாடம் இந்த படத்தில் தரன் இசையில் ஒரு பாடல்...


சிறு தொடுதலிலே சின்ன சின்னதாய் சிறகுகள் பூக்க..
வரும் இரவுகளில்இன்னும் இன்னும் நான் கேட்க......
இதுவரையிலும் நான் என்னவில்லையே இனிமையை வாங்க
சில நொடிகளிலே உன்தன் அன்பிலேநான்...

என்ற தொடங்கும் பாடல் கேட்டுபாருங்கள் மெய் சிலிர்த்து போவீர்கள். காதலியோ, மனைவியோ இருவரில் யார் இருந்தாலும் மனதில் குதி ஆட்ட போடுவார்கள்.

நான் ரசித்த வரிகள் சில ....

ஆண் /எனக்கே என்னை தெரியாமல் இருந்தேன் அன்பே எதற்க்காக

சிரிப்பால் உலகை கொடுத்தாயே,இரண்டாம் தாய் போல் கிடைத்தாயே?

பெண்/ நான் உனக்கென இருப்பது தெரியாதா? எதை நான் சொல்வேன் பதிலாக?
இனிப்பாய் எனை நீ கவர்ந்தாயே, இயல்பாய் மனதை திறந்தாயே...

இப்படியே போகும் பாடலில்

ஆண் /அலையே இல்லா கடல் போல இருந்தேன் அன்பே எத்ற்க்காக?

கிடைத்தாய் கரையாய் நடந்தேனே..., கிழக்காய் உதித்தாய் விடிந்தேனே...

பெண்/ மழையே இல்லா நிலம் போல,பொறுத்தேன் அன்பே உனக்காக....

கொடுத்தாய் உனை நீ முழுதாக... எடுத்தாய் எனை நீ அழகாக என்ற அற்புதமான வரிகளை நீங்கள் ரசிப்பீர் என்று என்னுகிறேன்.

http://www.musicindiaonline.com/music/tamil/s/movie_name.10109/




அன்புடன்/ஜாக்கிசேகர்

எனக்கு பிடித்த பாடல்... அது ஏன்? எனக்கு பிடிக்கும்


எல்லோரும் ஏதாவது ஒரு விதத்தில் இசையையும் பாடல்களையும் ரசிக்கின்றோம்... பாடல்கள் பலருக்கு அரும் மருந்து , கல்லூரி பெண்களுக்கு, ஆண்களுக்கும் அதுதான் சாப்பாடு, பாடலால் எழுந்து பாடலால் குளித்து பாடலால் பல் துலக்கி பாடலால் தலை துவட்டி என பாடல்களின் பயன் பாடுகள் பெண்களுக்கு ஆண்களுக்கும் தவிர்க்க முடியாதாகிறது.

ஒருகாலத்தில் துர்தர்ஷனில் ஒளியும் ஒளியும் போடும் போது தெருவில் வாகன போக்குவரத்து வெள்ளி இரவு 8 லிருந்து 8•30வரை சற்றே மந்த நிலையில் காணப்படும்....

இப்போது சன்மியுசிக், இசைஅருவி, எஸ் எஸ் மியுசிக், போன்ற சேனல்கள் தமிழில் பாடல்கள் ஒளிபரப்பினாலும் மற்ற சேனல்கள் இரவு முழுவதும் பாடல்கள் ஒளிபரப்பிய வண்ணம் உள்ளன...

தமிழ் படங்களில் பாடல்கள் இல்லாத படங்கள் ஒருசிலதான் அல்லது விரல் விட்டு எண்ணி விடலாம் எனெனில் கூத்து பார்த்து வளர்ந்த சமுகம் நம்முடையது... கூத்தில் வசனங்களை விட பாடல்க்ளே அதிகம் முக்கியத்துவம் பெரும் கூத்து எப்படி இருக்கும் என்று தெரியாதவர்கள் மக்கள் தொலைக்காட்சி பார்த்து தெரிந்து கொள்ளவும்....

பாடல்கள் இல்லாத நம் வாழ்க்கை முறை யோசித்து பார்க்க முடியவில்லை செத்தாலும் பாட்டு, வயசுக்கு வந்தாலும் பாட்டு, கல்யாணத்துக்கும் பாட்டு, என்று பாட்டு என்பதும் நம் தமிழர் வாழ்வில் ஒன்றாகி விட்ட ஒன்று...

நான் பாடல்களின் ரசிகன் ஆனால் எப்போதும் இயர் போன் வைத்துக்கொண்டு பாடல் கேட்கும் வெறியன் இல்லை... ஆனால் நல்ல பாடல்களை ரசிப்பேன் அதன் வரிகளை மிகவும் ரசிப்பேன். அந்த ரசிப்புகளை அந்த கவிதைகளை அந்த வைர வரிகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்...

சென்னையில் இருந்த கடலூருக்கு இதுவரை எனது இரு சக்கர வாகனத்தில் எப்படியும் 40 முறைக்க மேல் போய் இருக்கிறேன் கிழக்கு கடற்க்கரை சாலையில் சத்தம் போட்டு பாடியபடி வாகனம் ஓட்ட எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.

ஒடிய படம் ஓடாத படம் என்பது முக்கியம் அல்ல,
பாடல் முக்கியம் அந்த பாடல் எப்படி என்னை கவர்ந்தது ஏன் கவர்ந்தது என்பதை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

அடஜாக்கி இந்த வரியைதான் குறிப்பிட்டு சொன்னானா? என்று நீங்கள் அந்த வரியை இன்னும் கவனத்துடன் கேட்பீர்கள். அதுவும் நான் காதல் வயப்பட்ட போது என்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றிய போது, தபால்காரன் தெய்வமாக ஆன போது, பாடல்கள் பரம சுகமாய் இருந்தது,


காதல் வயப்பட்டவன் கள்ளு குடித்தவன் போல் இருப்பான் அவனுக்கு பாடல்கள்தான் சோறு, அதுவும் காதல் பாடல்கள் கேட்டு அவன் வேறுஉலகத்தில் மிதப்பான்,. நான் ரசித்த அந்த போதை பாடல்களையும் உங்களுக்கு தருகிறேன்

என் பார்வையில் நான் மிகவும் ரசித்த பாடல்களை இங்கு எழுத போகிறேன் அப்படி ரசிக்க எந்த தளத்தில் வேண்டும் ஆனாலும் பயணிக்கலாம் அது டப்பாங்குத்து பாடல்களாக கூட இருக்கலாம் ரசிப்பு ஒன்றே நம் குறிக்கோள் அது சில நேரத்தில் இந்த பாடலுக்கு கூட ஒரு பதிவா? என்று வியக்கலாம் அது ரொம்ப அட்டு பாடல்களாகவும் இருக்கலாம்... உங்களுக்கு ஈர்பில்லாத பாடலாக கூட இருக்கலாம் நன்றாக இருந்தால் பின்னுட்டம் இட்டு வாழ்த்துங்கள்



சமுகத்தை பற்றி நாம் எப்போதாவது கவலை பட்டு இருக்கின்றோமா? பக்கத்து வீட்டுகாரன் பெயர் கூட கேட்டு வைத்துக்கொள்ள கூச்சபடுகின்றோம்,ஈழத்தில் நம் உறவுகள் கொத்துக்கொத்தாய் பலியாகும் போது நாம் இங்கு அறிக்கை போர் நடத்திக்கொண்டு இருக்கின்றோம்....



காதலனும் காதலியும் படுக்கை அறையில் இல்லற விஷயங்களை விட சமுக விஷயங்களுக்க முக்கியத்துவம் கொடுத்து இருவரும் பேசிக்கொள்வதான பாடல் அது பாவேந்தர் பாரதிதாசன் வரிகளை எடுத்துக்கொண்ட பாடல் அந்த படம் அழகன் பாடல் ஜாதி மல்லி பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே...


மனதுக்கு பிடித்த பெண் எதிரில் இருக்கிறாள் அவளை அள்ளி அனைக்காமல் தலைவன் சொல்கிறான்.
காதலில் உண்டாகும் சுகம் இப்போது மறப்போம் , கன்னித்மிழ் தொண்டாற்று அதை முன்னேற்று பின்பு கட்டிலில் தலாட்டு...


காதலி எதிரில் இருக்கும் போது கன்னித்தமிழை முன்னேற்ற சொல்கிறான் பாருங்கள்...

எனது வீடு எனது வாழ்வு என்று வாழ்வது வாழ்க்கையா? இருக்கும் நாளு சுவருக்குள்ளே வாழ் நீ ஒரு கைதியா?இன்று கேட்டு விட்டு

தேசம் வேறல்ல தாயும் வேறல்ல ஒன்றுதான் தாயை காப்பதும் நாட்டை காப்பதும் ஒன்றுதான் கடுகு போல் உன் மனம் இருக்க கூடாது கடலை போல் விரிந்ததாய் இருக்கட்டும்....

சென்னைக்காரர்கள் எதிர்கால மனநிலையை எப்படி புட்டு வைத்து இருக்கிறார் பாருங்கள்

அடுத்தாக உலகம் எல்லாம் உண்னும் போது நாமும் சாப்பிட எண்னுவோம் உலகம் எல்லாம் சிரிக்கும்போது நாமும் புன்னகை சிந்துவோம்

அது நம்ம தமிழனுக்க வரவே வராத விஷயம்....

யாலரும் ஊரென யாரு சொன்னது சொல்லடி..
பாடும் நம் தமிழ் பாட்டன் சொன்னது கண்மணி


படிக்கத்தான் பாடமா? நினைச்சி பார்த்தோமா?
படிச்சத புருஞ்சி நாம் நடக்கத்தான்
கேட்டுக்கோ ராசாத்தி தமிழ் நாடாச்சி இந்த நாட்டுக்கு நாம் ஆச்சு..


பாருங்கள் எந்த இடத்திலும் அவன் நாட்டையும் மக்களையும் விட்டுக்கொடுக்கவேயில்லை அதனதலே இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்

உங்களுக்கும் இந்த பாடல் பிடிக்கும் என்ற் நம்புகிறேன்... இவரை இந்த பாடலை கேட்காதவர்கள் இரவு பதினோறு மணிக்கு விளக்கு அனைத்து கேட்டுபாருங்கள் மரகதமணி இசையில் பாலசுப்ரமணியம் பாடிய இந்த பாடல் 1991ல் அழகன் படத்தில் வந்தது இயக்கம் பாலச்சந்தர்



பொதுவாய் பெண்களுக்காக இந்த பகுதியை எழுதுகிறேன் ஏனென்றால் ஆண்களை வி்ட பெண்கள்தான் அதிகம் பாடல்களை ரசிக்கின்றார்கள் இன்னும் பாடல்கள் அடுத்த பதிவில்....

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner