Tuesday, April 28, 2015

disappointments & controversy 9th Annual Vijay Awards 2015|சலிப்பூட்டும் விஜய் டிவி விருதுகள்.
 சன் டிவி தமிழகத்தின்   முதல் சேனல்…திரைப்படங்கள். சீரியல்கள்… என்று அசத்திக்கொண்டு இருந்த போது , விஜய் டிவி பல கை மாறி பேர் மாறி....விஜய் தமிழகத்தில் வலுவாய் கால் பதித்தாலும்... விஜய் டிவி  சன்டிவியோடு எவ்வளவோ  மல்லுக்கட்டி போராடியும் வெற்றிக்கொடியை நாட்ட முடியவில்லை…  இத்தனைக்கும்  புதுப்படங்கள் எல்லாம் வாங்கினார்கள்….

Sunday, April 26, 2015

சாண்ட்வெஜ் & நான்வெஜ் | 26/04/2015

ஆல்பம்.

நேபாளத்தில் நில நடுக்கம்… 1500க்கு மேற்ப்பட்டவர்கள் பலி… மலைவாழ் பகுதி என்பதால் இன்னும் சேதவிவரம் அதிகம் இருக்கும்…மனிதனால் ஒரு செயற்கை பரபரப்பு ஏற்படுத்தினால்..இயற்கையால் அடுத்து நொடியே பெரிய பரபரப்பை யாரும்  எதிர்பார்க்காத நேரத்தில் நிகழ்த்தி விடுகின்றது… அதுவும் சுற்றுலா  தொழில் கலைகட்டும் நேரத்தில் பெரிய அளவில் வாழ்வாதார  பாதிப்பினை சந்தித்து இருக்கின்றார்கள்..

Saturday, April 25, 2015

தலையில் உட்காரும் காக்கைகள்.இடத்தை  கொடுத்தால்  மடத்தை பிடிக்கின்றார்கள் என்று ஒரு கிராமத்து பழமொழி யாருக்கு பொருந்துகின்றதோ இல்லையோ.. கேகே நகர் நாகத்தம்மன்  கோவில்  அருகே வசிக்கும்  சில காக்கைகளுக்கு பொருந்தும்…


Tuesday, April 21, 2015

நடிகை லட்சுமி1976,77 களில் வெளியான  சில நேரங்களில் சில மனிதர்கள், காலையிலும்…. ஒரு நடிகை நாடகம் பார்க்கின்றாள்… இப்போது பார்த்துக்கொண்டு இருக்கின்றேன்… நடிகை லட்சுமியின் கங்கா கல்யாணி கதாபாத்திரங்களை கருப்பு வெள்ளையை மீறி மானசீகமாக  காதலித்துக்கொண்டு இருக்கின்றேன்.


Monday, April 20, 2015

மணிரத்னம் மற்றும் ஓ காதல் கண்மணி படம் பற்றி சற்று விரிவான அலசல்…


மணிரத்னமே ஆனாலும்… படம் நல்லா இல்லை என்றால்  நல்லா இல்லை என்றுதான்  சொல்லுவார்கள்… கடல், இராவணன் எல்லாம்…படுதோல்வி படங்கள்…
ஆனால் ஓ காதல் கண்மணி அப்படியில்லை….

Sunday, April 19, 2015

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்|19-04-2015


  ஆல்பம்.
பிரதமர்    வெளிநாடு வெளிநாடாக பறந்துக்கொண்டு இருக்கின்றார் என்பதுதான் டாக் ஆப் த டவுன்..... சமுகவலைதளங்களில் வறுத்து எடுக்கப்படுகின்றார்... ஒரு மாற்றம் வந்தால் நல்லது என்று  நினைத்தவர்கள் எல்லோருக்கும்  மரண அடி... புதிய பூதத்திற்கு பழைய பூதமே தேவலாம் என்ற நிலை...  மக்களுக்காக  சேவை  என்ற  மனப்பான்மையே அறிதாகிவிட்டது... ஆம் ஆத்மியாவது நம்பிக்கை கொடுக்கும் என்று பார்த்தால் அதுவும் ஊத்திக்கொண்டதோடு உட்கட்சி பூசலில் திலைத்து வருகின்றது... அப்போ யார்தான் இந்தியாவை  காப்பாற்றுவது...???


Friday, April 17, 2015

O Kadhal Kanmani‬-2015 ஓ காதல் கண்மணி திரைவிமர்சனம்.
1998 ஆம் ஆண்டு….
கடலூர் திருவந்திபுரம் தேவநாதசுவாமி சன்னதி எதிரே உள்ள…. மலையில் இருக்கும் ஹயக்கீரிவர் சன்னதியின் கிழக்கு பக்கம் இருக்கும் வாயில் படியில் வைத்து,ஓகே உன்னை நான் கல்யாணம் செய்துக்கொள்கின்றேன் என்று அவளிடத்தில் சொன்னேன்…


Thursday, April 16, 2015

GREY-2011- கிரே... சாம்பல் நிற ஓநாய்களுடன் வாழ்வா சாவா போராட்டடம்வாழ்க்கை சில நேரத்துல வாழனும்ன்னு நினைக்கறவனுக்கு இறக்கம் காட்டுவதில்லை.. சாகனும்ன்னுநினைக்கறவனுக்கு…இரக்கத்தை அள்ளித்தெளிக்கும்….

Monday, April 13, 2015

சுஹாசினி பேசியது சரியா?சுஹாசினி மணிரத்னத்தின் பேச்சால் .. கம்யூட்டர் மவுஸ் பிடிக்க தெரிந்தவர்களால்…. இரண்டு நாட்களாக தமிழ் இணையவெளி சூடாகி கிடக்கின்றது…

Wednesday, April 8, 2015

Friday, April 3, 2015

Nanbenda-2015 | நண்பேன்டா…. திரை விமர்சனம்.உதயநிதி நடிக்க  வந்த போது….. அவரது சிறு வயது போட்டோவை  போட்டு… காசு வந்தா காக்கா கூட ஹீரோதான் என்று சமுக வலைதளங்களில் நக்கல் விடப்பட்டார். ஆனால் நக்கல் விடப்பட்டவர்களின்  சிறு வயது போட்டோக்களை நீங்கள்  பார்த்தீர்கள் என்றால் அவர்களும் அப்படித்தான்  சகிக்க முடியாத அளவுக்கு இருப்பார்கள்  என்பது வேறு விஷயம்….

 ஆனால் அப்படி நக்கல் விடுவது போன்றுதான் அவர் நடிப்பும் நாடகத்தனமாக இருந்தது என்பதையும் ஒத்துக்கொள்ள வேண்டும்.…

ஒரு அழகான  பழமொழி ஒன்று உண்டு. ஏழையாக பிறப்பது நம் தவறு இல்லை… ஆனால் ஏழையாக  இறப்பதுதான் தவறு என்று…. அது போல நடிக்க தெரியாமல் முதல் இரண்டு படங்களில் தடுமாறுவது சகஜம்.. ஆனால் இதுதான் வாழ்க்கை என்று ஆன பிறகு…. அதில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு  வெற்றி அடைய வேண்டும்..

இந்த விஷயத்தில் உதயநிதியை நான்  கண்டிப்பாக பாராட்டுவேன்.. காரணம்… முதல் இரண்டு படங்களில்  தடுமாறினாலும்… இந்த படத்தில் நிமிர்ந்து  நின்று இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்..

இந்திய சினிமாவில் சிவாஜி எம்ஆர்ராதா போல நடித்தாலும்  நடனம் அடத்தெரியவில்லை என்றால்  தான் அம்பேல் என உதயநிதி  உணர்ந்து இருக்கின்றார்…  நீ சன்னோ …நீ மூனோ  பாடலில்  ஆடும் அந்த  நடனம் ஒன்று போதும்….  

அவருடைய டெடிகேஷனுக்கு….http://www.jackiecinemas.com/indian-movies/nanbenda-tamil-movie-review-2015

வீடியோ விமர்சனம்.நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ
.....
EVER YOURS...
 

Thursday, April 2, 2015

Komban-2015 கொம்பன் திரைவிமர்சனம்.


சென்சார்  செய்யப்பட்ட திரைப்படத்தை வெளியிடும் முன்பே நிறைய பிரச்சனைகளை சந்திக்க  வேண்டி இருக்கின்றது…  தயாரிப்பாளர் அழுகையோடு வெளியாவதில் பல சிக்கல்களை சந்தித்து, நேற்று மாலை அதாவது  ஏப்ரல்  ஒன்றாம்  தேதி மாலை  வெளியாகி இருக்கும் திரைப்படம்தான்…    கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில்   வெளியாகி இருக்கும் கொம்பன்.

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner