பேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...


சும்மா வளவளன்னு ஜல்லியடிக்காம........
ஸ்டெரியிட்டா மேட்டருக்கு வரேன். ஓகே...



நேற்று ஆம்பூர்ல இருந்து பேருந்தில்   சென்னைக்கு வரும் போது  ஸ்ரீபெரும்பத்தூர் தாண்டறச்சே  பஸ் புல்லானதாலே... என் பக்கத்துல இருந்த காலி சீட்டுல...ஒரு டீச்சர் பொண்ணு என் பக்கத்துல உட்கார்ந்துகிச்சி...  பார்க்க நல்ல லட்சனமாதான் இருந்தார்......

இரண்டு சீட் தள்ளி உட்கார்ந்த பெண்மணியிடம் ஏதோ போர்ஷன் பற்றி பேசினார்... ஒரு லாங் சைஸ் நோட்டில் குறிப்பெடுத்தார்.

நல்லா இருக்கற பொண்ணுங்க...  அதுங்களுக்கே  அதுங்க நல்லா இருக்கறது தெரிஞ்சிடுச்சின்னா.. கொஞ்சம் அதிகமாவே அலட்டுங்க...  அந்த பொண்ணு அப்படித்தான் அலட்டுச்சி...அப்ப அப்ப  ஓரக்கண்ணால என்னை பார்த்து கவனிக்கறேனான்னு வாட்ச் பண்ணிக்கிட்டு இருந்திச்சி...

நானே ஒரு பிராடு பய... என்கிட்டயேவா? அந்த பொண்ணு பக்கம் மருந்துக்கு கூட  நான் திரும்பலை... நல்லா இருக்கற பொண்ணு பக்கத்துல உட்கார்ந்தாலும், எதிர்க்க நின்னாலும் நாம உடனே பக்கி போல பார்க்க்கூடாது...  இது  ஆண்களுக்கான பாலபாடம்...

ரவுடி ரங்கன் கணக்கா இருக்கான்.. இவன் நம்ம  பக்கம் திரும்பகூட  இல்லையே? நாம என்ன அவ்வளவு மோசமாவா இருக்கோம்ன்னு நினைச்சி அந்த பொண்ணு கலவரமாச்சி, மொபைலில் இருக்கும் டிஸ்பிளேவில் லைட்டான உதட்டு சாயத்தை சரி பண்ணிக்கிச்சி...

அது  என் பக்கத்துல உட்காந்த அடுத்த  செகன்ட் நான் .ஜன்னல் கம்பியோட தேவாங்கு போல ஒட்டிக்கிட்டேன்... அப்படி இல்லைன்னா.. என்ன ஆகும் தெரியுமா?

 நாம என்னவோ ஒரசரத்துக்கின்னே ஆம்பூர்ல இருந்து டிக்கெட் எடுத்து பஸ்ல வருவது போல நடந்துக்குங்க..  முதல்ல நம்ம பக்கத்துல  பிரியா உட்கார்வது போல உட்கார்ந்துட்டு, கொஞ்சநேரத்துல  அப்படியே நம்மல கெட்ட பையன் போல சித்தரிச்சிட்டு, சீட்டு எட்ஜில போய் உட்கார்ந்துக்கறது போல.... சீன் போடுங்க... இது போல ஒரு சில பொண்ணுங்க செஞ்சி இருக்கு....

 இந்த  பொண்ணும் அப்படித்தான் பண்ணுச்சி...  நான் திரும்பவே இல்லை.. எல்லாம் ஓரக்கண்ணாலதான்... ஏன் என்ங்ககிட்ட மட்டும் ஓரக்கண்ணு இல்லையா?

பஸ்  ஆமை போல போய்க்கிட்டு இருந்திச்சி....குயின்ஸ்லேண்ட் தாண்டினதும்,ஏதோ ஒரு என்ஜினியரிங் காலேஜ் பொண்ணுங்க கூட்டமா, ரம்ஜான் லீவுக்கு  வீட்டு போறதால.. பஸ்ல ஏறிச்சிங்க....

டிரைவருக்கு உற்சாகம் தாங்கலை வண்டியை விரட்டினார்... காத்து சும்மா ஜில்லுன்னு அடிச்சிது..  பொண்ணுங்க எல்லாம் காத்துல பறக்கற முடியை சரி பண்ணி அலட்டுச்சிங்க... நமக்குதான் அந்த பாக்கியம் இல்லையே...? எதுக்கு அந்த பக்கம் பார்த்து பொறாமை படனும்ன்னு  நான் அதுக்கும் அந்த பக்கம் திரும்பலை...

 இரண்டு கிலோமீட்டர்  பேருந்து நல்ல வேகம்... டீச்சர் பெண்ணின் உடம்பு என் மேல  லைட்டா பட  ஆரம்பிக்க... நான் கலவரமானேன்..காரணம் 65 வயசு பொம்பளையா இருந்தாலும் இந்த சிட்டியில் நாம ஜாக்கிரதையா இருக்கனும்... பிளாஷ் கட்டுல போலிஸ் புடை சூழ  இருக்கற போட்டோவோட... மியூசிக் டைரக்டர் ஜேம்ஸ் வசந்தன் வந்துட்டு போனாரு..

 சரி எதெச்சையா படுதுன்னு நினைச்சேன். அப்புறம் புல்லா  அந்த பெண்ணோட உடம்பு என் மேல பட ... இன்னும் கலவரமாகி திரும்பி பார்த்தா ....பஸ்ல இருக்கற  எல்லா பிளடி பேலோஸ் பார்வையும் என்மேலதான் இருக்கு.. எல்லார் காதுலயும்  நெய்வேலி அனல் மின் நிலைய புகை.. ஆனா எனக்கு அது பகை. பல்லை நற நறன்னு கடிச்சிட்டு டீச்சர் பொண்ணை பார்த்தேன்...

அந்த  டீச்சர் பொண்ணு என் மேல தூங்கி சாஞ்சிட்டா...

எத்தனை மணி  நேரம் நின்னு  தொண்டை தண்ணி வற்ற கத்தி பாடம் எடுத்தாலோ? அவ முகத்துல தூக்கத்துல  அப்படி ஒரு டயர்ட்

எனக்கு என்ன  பண்ணறதுன்னே தெரியலை...???

 இப்படித்தான் ஒரு வாட்டி கோவைக்கு பேருந்தில் போகும் போது ,என் பக்கத்துல  உட்கார்ந்து ஒருத்தன் என் மேல தூக்கி தூங்கி விழுந்தான்...  பத்து வாட்டிக்கு மேல சொல்லி  அலுத்து போய்....எனக்கு தூக்கம் வர  நானும் தூங்கிட்டேன்...

 எழுந்து பாத்தா என் தோள்ள ஈரம்...

 அந்த பிளடி என் தோள்ள  தலை வச்சி தூங்கும் போது ஜொள்ளு விட்டு இருக்கான்...

அவனை  எழுப்பினேன்...

 அவன் எழுந்து பார்த்து பதறி போய்  அவன் ஜொள்ளை துடைச்சி விட்டான்... சாரி சார் .. சாரி சார்ன்னு சாரி கேட்டான்.. சரி நம்ம பிரண்டு இப்படி பண்ணா அப்படியா கோச்சுக்குவோம்ன்னு அப்படியே விட்டு விட்டேன்..

 திரும்ப அந்த நாதாரி என்மேல தூங்கி விழறான்... அவனுக்கு ஜன்னல் ஓர சீட்டு அந்த பக்கம் சாய வேண்டியதுதானே...??? புன்னகை மன்னன்ல தற்கொலைக்கு முன்ன ரேகா தலையை பிடிச்சி கிஸ் அடிக்கறதுக்கு பிடிப்பாறே.... அப்படி டமால்ன்னு அவன் தலையை பிடிச்சேன்...

காதுக்கிட்ட என் வாயை எடுத்துக்கிட்டு போய் ,வேகமா காத்தை அவன் காதுல ஊஸ்ஸ்ஸ்ன்னு   ஊதி விட்டேன்... காதுல கட்டெறும்பு பூந்த  கணக்கா துள்ளி எழுந்தான்....

அதை நினைச்சதும் பக்குன்னு  சிரிச்சிட்டேன்....டக்குன்னு அந்த சிரிப்பை கேட்டு அந்த பொண்ணு எழுந்துட்டா...

சாரி சார் அப்படின்னு சொன்னா?

இட்ஸ் ஆல்ரைட்மான்னு  நான் சொன்னேன்...

தூங்கி எழுந்து வெட்கத்துல பேருந்தை ஒரு  முறை நோட்டம் விட்டாள்... எல்லாரும் இவளையே பார்க்கறா போல ஒரு பிரமை...படக்குன்னு தலையில கை வச்சிக்கிட்டு வெட்கபட்டா....

அந்த வெட்கம்  அவளை விட ஐநூறு மடங்கு அழகாய் இருந்தது. ஒரு வானவில்லை போல....



பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்.



நினைப்பது அல்ல நீ 
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

26 comments:

  1. அருமையான அனுபவம் அண்ணே... அப்படியே அந்தப் பொண்ணுக்கு தோள்ல தட்டிக் கொடுத்திருக்கலாம்....
    ஹிஹி...

    ReplyDelete
  2. வானவில்லைப் போல ..... சூப்பர் ஜாக்கி ! ! !

    ReplyDelete
  3. நறநற.......நறநற ........

    ReplyDelete
  4. hallo boss u r lucky boss life na eppdi erukkanum ponga...

    ReplyDelete
  5. nalla varuveenga boss... eppdi ellam ethavathu solli manasa kastappaduthatheenga

    ReplyDelete
  6. அந்த வெட்கம் அவளை விட ஐநூறு மடங்கு அழகாய் இருந்தது. ஒரு வானவில்லை போல....
    நல்ல ரசிகன் யய நீ (மனசு நினைக்கிறது போல நடந்துச்சுனா இப்படி தான் ரசிக்க தோன்றும்)

    ReplyDelete
  7. தோல் கொடுப்பார் நம்ம தல ஜாக்கி........ தல, அந்த பொண்ணு ஜொள்ளு விட்டுச்சா இல்லையா..... அத சொல்லவே இல்ல.....

    அதான் நீங்க விட்ட ஜொள்ளுல தான் பஸ்சு வழுக்கிகிட்டு வேகமா போயிருச்சோ என்னம்மோ.....

    இந்த பதிவு படிக்கும் போது சத்யா படத்துல்ல வர்ற கமல் மாதிரியும், அந்த டீச்சர் அமலா மாதிரியும் தோணிச்சி !!!!!!!

    ReplyDelete
  8. nangalunthan bus-la poram..hmm.. ethukkume kuppinnai venum..

    ReplyDelete
  9. தல, ஐநூறு மடங்கு அழகா தெரிஞ்ச மேட்டரு அந்த டீச்சருக்கு தெரிஞ்சா அவ்வளவு தான்...

    என்னோமோ போங்க....

    பல்லு இருக்கிறவன், பக்கோடா சாப்பிடறன்னு சொன்ன என்னோட
    மைண்டு வாய்ஸ் உங்களுக்கு கேட்டுச்சா.....

    ReplyDelete
  10. வானவில்... வானவில்லா போச்சா....

    ReplyDelete
  11. சூப்பர் ....
    என்ன சார் மஜாவா ?

    ReplyDelete
  12. சுவையான அனுபவ பகிர்வு! வர்ணனைகள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  13. I hope Mrs.Sekar read this.. you have more guts Jackie.

    ReplyDelete
  14. நல்ல கற்பனை..

    இப்படி தான் மனசை தேத்திக்கணும் !!!!!!

    ReplyDelete
  15. நல்ல கற்பனை.

    இப்படி தான் மனசை தேத்திக்கணும்!!

    ReplyDelete
  16. Jackie..Ungal kanavaiyum karpanaiyium pathiva pottu manasa thethikittathu nalla irukku

    ReplyDelete
  17. பின்னுட்டத்தில் வயிறு பார்ன் ஆனா நண்பர்களுக்கு என் நன்றிகள்.. இரண்டு பேர் அப்படி இல்லை அது கற்பனை என்றார்கள்.ஹா ஹா ஹா.... இப்படித்தான் மனசை ஆற்றிக்கொள்ளவேண்டும் என்று சொல்லி இருக்கின்றார்கள்... இருந்து விட்டு போகட்டும் .. அப்படி சொல்வதால் உங்களுக்கு மன நிறைவு எனில் சந்தோஷமே...

    ReplyDelete
  18. wow what a post. while reading i am enjoy. thanks jackie sir

    ReplyDelete
  19. intha post pottathuku...innum veetla adi vizhala jackie...

    ReplyDelete
  20. Jackie unmaya sollunga... intha post padichutu ammani oru moraippu moraichu irupangale.. antha feel epdo erunthuchu... just oru nakkal thaan... manasa kaya paduthi iruntha delete madi...

    ReplyDelete
  21. பக்கத்து சீட்டுலே பாட்டி ஒக்காந்தா TAKE IT EASY POLICY பாடல் நினைவுக்கு வருகிறது

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner