kakki sattai-2015 காக்கி சட்டை திரைவிமர்சனம்.



மிமிக்ரி பண்ணி நாயகனாக உயர்ந்தவர் என்று பார்த்தால் அது சிவாதான்...மயில்சாமி, தாமு, சின்னிஜெயந், என்று மிமிக்கிரியில் பலர் சாதித்தாலும் சிவகார்த்திகேயனின் இளமையும்.... அவரின் உழைப்பும் இந்த வளர்ச்சியை பெற்றுக்கொடுத்து இருக்கின்றது எனலாம்...

சினிமாவுக்கென புதிய தளம்.... ஜாக்கி சினிமாஸ்...



அன்பின் நண்பர்களே...

சினிமாவுக்கென புதிய தளம் ஆரம்பித்துள்ளேன்..முழுக்க முழுக்க சினிமா சார்ந்த செய்திகளை  கட்டுரைகளை  விமர்சனங்களை ஜாக்கி சினிமாஸ் என்ற பிரத்யோக வலைதளத்தில் எழுத இருக்கின்றேன்....


சிண்டி கிராப்போர்ட்.


தாவணி கட்டிய பெண்களை  பார்த்து அவர்கள்மீது கொண்ட  ஈர்ப்பினை  தவிடு பொடியாக்கி....ஒரு வெள்ளைக்கார நடிகை ஒரே படத்தின் மூலம்  தூக்கத்தை கெடுக்க  வைத்தார்...  அவரின்பெயர் சின்டி கிராப்போர்ட்...


கோவம்.



மனைவியை ஓஎம்ஆரில்  உள்ள  அவர் அலுவலகத்தில் பைக்கில்  விட செல்கையில் இரண்டு மூதேவிகளை சந்தித்தேன்..


துரத்தும் கேள்விகள்.






மேலே  உள்ள புகைப்படத்தை பார்த்த  கணத்தில் மனம் சொல்லொன்னா துயரத்தில் ஆழ்ந்தது என்பேன்.

சிலபுகைப்படங்கள் நிறைய  சேதிகளையும் கேள்விகளையும்விட்டு செல்லும் அப்படியான புகைப்படம் இது...


காத்திருத்தல்....





பத்து வருடம் காத்திருந்து காதலித்த என் மனைவியை கைபிடித்தேன்... என்பது பெருமைதான் என்றாலும்...ஒரு புள்ளியில் இவள்தான் இவளை விட்டுவிடக்கூடாது என்று ஒரு கணம் தோன்றுமே... அதைதான் இப்போது இந்த காதலர் தினத்தில் பகிர்ந்துகொள்ள போகின்றேன்...


காதலர் தின ஸ்பெஷல்.

காதலர் தின ஸ்பெஷல்.....


ஒரு மெச்சூர்டான லவ் எப்படி இருக்க வேண்டும்... அது எப்படி வெளிப்படுத்த வேண்டும்...? இரண்டுபேர் மனம் முழுக்க காதல் பூத்து இருந்தால் அடுத்த கட்டமான காமத்தை நோக்கி அது எப்படி செல்லும்... ????என்பதற்கு நம்மவர் திரைப்படத்தின் இந்த காதல் காட் சி ஒரு உதாரணம் என்பேன்...




மனம் முழுக்க காதல் உடனே பூக்க வேண்டும் என்றால் இந்த காட்சியை திரும்ப பார்ப்பது என் வழக்கம்.. மிக அற்புதமான காட்சி இது.
வீட்டுக்கு வெளியே கவுதமி., கமல், ஸ்ரீவித்யா பின்னி இருப்பார்கள்...

கமல் சொல்லுவார்...சாரிங்க... எங்க அக்கா... கொஞ்சம் லூசு.. அதற்கு கவுதமி உங்க குடும்பத்துல எல்லோருமே அப்படித்தான் போல என்று சொல்லுவார். என்னங்க எங்க குடும்பத்தை பத்தி என்று கமல் கேட்கும் போது... நானும் உங்க குடும்பத்துல ஒருத்தின்னு நினைச்சேன் என்பார் கவுதமி.

மழை சீன் ஆரம்பித்ததும்....4,59 இல் இருந்து 7,48 வரை
ஒரே ஷாட்... கட் ஷாட் ,இல்லை...
காமத்துக்கு முன் ஒரு அர்த்தமற்ற உளறல் இருக்குமே இது போலான உளறல் மற்றும் உரையாடல் அது...........

அதன்பின் உள்ள காட்சிகளை எழுதினால் ரொமான்டிக் மூட் வந்து நிறைய பணிகள் பாதிக்கப்படும் என்பதால் நான் இத்துடன் அபீட் ஆகிக்கொள்கின்றேன்.

14 நிமிட வீடியோவை பாருங்க.. ரோமான்டிக் பில் வரவில்லை என்றால் நல்ல மருத்துவரை அனுகுவது உசிதம்.






கண்டநாள் முதல் .. காதலர் தின ஸ்பெஷல்.

ஸ்கிரிப்ட்டில் இருப்பதை தன் உணர்வுகளையும் சேர்த்து செல்லுலாய்டுக்கு கடத்துபவனே நல்ல இயக்குனர் என்பேன்... அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த படம் கண்டநாள் முதல்..

எப்போது அந்த படத்தை பார்த்தாலும் பிரசன்னா லைலா கெமிஸ்ட்ரி அவ்வளவு அழகாக ரம்யமாக இருக்கும்... பார்த்தாலும் சாகடிக்கறா... பார்க்காம இருந்தாலும் சாகடிக்கறா என்று கதறும் வசனங்கள் சிறப்பானவை. நம் கண்ணிலும் நீர் கசியும் காட்சி அந்த கிளைமாக்ஸ்...

ஏதோ இரண்டாம் படத்தில் சருக்கினாலும் பிரியா போன்ற இயக்குனர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தர வேண்டும்...







நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Anegan-2015- அனேகன் திரைவிமர்சனம்



எழுத்தாளர்கள் சுபாவோடு  சூப்பர் நாவல் காலத்தில் இருந்து  கேவி ஆனந்துக்கு  உள்ள நட்பு அனேகன் வரை தொடர்ந்து வந்துக்கொண்டு இருக்கின்றது... இன்று படம் பார்ப்பவர்கள் இளைஞர்கள் என்பதால்   அவர்களுக்கு மிகவும் பிடித்த கிரைம் திரில்லர் கதைகளை கையில் எடுத்துக்கொண்டு சேப்ட்டியாக பயணிக்கின்றார்கள்... அதில் பெரியசருக்கலை மாற்றன் திரைப்படத்தில் சந்தித்தார்கள் என்றே சொல்ல வேண்டும்....  அயன் திரைப்படத்துக்கு பிறகு... வெற்றி பெற்றாக வேண்டிய சூழல்,  சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயம்... தனுஷ்வுடன்  முதல் முறையாக கை கோர்த்து இருக்கின்றார்கள்...  ஒரளவுக்கு அதில் வெற்றியும் பெற்றுள்ளார்கள் என்றே சொல்ல வேண்டும்...


காத்திருந்து கிடைக்கும் வெற்றி... கண்ணீரை வரவைக்கும்.



உங்களுக்கு பிடித்த  காதல் பாடல் எது? என்று கேட்டால் நிறைய  பேர் நிறைய பாடல்கள் சொல்லுவார்கள்... ஆனால் எனக்கு 1996 ஆம்  ஆண்டு   அருண்  மந்தரா நடித்த திரைப்படம் பிரியம் திரைப்படத்தில் வரும்..

 உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஓருமுடி
களைகின்ற சிறுநகம்
சிருங்கார சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்
ப்ரியம் ப்ரியம்
என்ற பாடல்   பலருக்கு  நினைவுக்கு இருக்கின்றதா ? என்று தெரியவில்லை... வித்யாசாகர் இசையில் வெளியான இப் பாடல் என் ஆல்டைம் பேவரைட்...

அருண்மேல் பெரிய ஈர்ப்புஇல்லை என்றாலும் அந்த பாடலின் வரிக்காக அந்த  பாடல் ரொம்பவே பிடிக்கும்... அதன் பின் தில்ரூபா தில்ரூபா  பாடல் கூட   அருண் விஜய்யை விட மந்தராவின் பெரிய  கண்ணுக்கும் அதன் பின்  அதே போன்று அவரின்பிரமாண்ட மனசுக்கும் ரொம்பவே  அன்றைய காலத்தில்  பிடித்தது..

Yennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.




ஒரு திரைப்படம்  நன்றாக ஒடுகின்றதா-? இல்லையா ? என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல்   சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இருக்கும்... ஆனால் ஒரு  இயக்குனர் ஒரு படத்தை   நன்றாக இயக்கி அந்த படம் தோல்வி படமாக மக்கள் நிராகரித்தாலும், நான்  என்னுடைய பெஸ்ட்டை கொடுத்தேன் மக்கள் அங்கீகரீக்கவில்லை என்று சொன்னால்அதில் ஒரு நியாயம் இருக்கின்றது... எந்த பெஸ்ட்டையும் கொடுக்காமல் ஆற்றில் ஒருக்கால் சேற்றில் ஒருக்கால்  வைத்தால் என்ன  செய்வது...?? அதுதான் தமிழ் திரையுலகில்  தற்போது நடந்துவருகின்றது.


பரிசு பொருட்கள்

பரிசு பொருட்கள்
என்பது இப்போது சாதாரணம்... ஐந்து பிள்ளைகள்  உள்ள வீட்டில் மூன்று வேளை உணவே சரியாக கிடைத்தால் போதுமானது என்ற வாழ்க்கை...


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner