உயிர்மை பதிப்பகம் வெளியீடும் எழுத்தாளர் சாருவின் புத்தக வெளியீட்டு விழா சென்னை காமராஜர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. காமராஜர் அரங்கத்தில் நுழையும் போதே சாருவின் துணைவியார் அவந்திகா மற்றும் கருப்பு பேன்ட் ,சிவப்பு சட்டை போட்ட ஒரு பெண்மணியும் வந்தவர்களை வரவேற்று முதலில் டீ , சமோசா சாப்பிட்டு வர அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.
சிலர் என்னை இனம் கண்டு கொண்டு கை குலுக்கினர். தமிழ் வலையுலகத்துக்கு வந்து பத்து நாட்களே ஆன வாசக நண்பர் ஒருவர் என்னிடம் கை குலுக்கி பேசிவிட்டு ,உண்மைதமிழன் எதிரில் வைத்துக்கொண்டு.. உண்மைதமிழன் என்பவர் அரசியல் கட்டுரைகள் மிக சிறப்பாக எழுதுவதாக சொல்ல..இவர்தான் அந்த உண்மைதமிழன் என்று அறிமுகப்படுத்தி வைத்தேன்.
விழா ஆரம்பித்தது.. மனுஷ்யபுத்திரன் வரவேற்று பேசினார்.. இந்த காமராஜர் அரங்கத்தின் பல இருக்கைகள் காலியாக இருக்கின்றன... இதுதான் இன்றையதமிழகத்தின் இலக்கியசூழல் என்று சொன்னார்.. ஆனால் இந்த அரங்கம் மட்டும் அல்ல , இன்னும் எதிர்காலத்தில் மெரினாகடற்கரையில் விழா நடத்தும் அளவுக்கு கூட்டம் சேர வேண்டும் என்றார். அதை செய்து காட்டுவோம் என்று சூளுரைத்தார். ஒரு இலக்கிய விழாவோ அல்லது புத்தக வெளியீட்டு விழாவோ எது நடந்தாலும் தமிழ்நாட்டு ஊடகதுறை கண்டு கொள்வதில்லை என்று அங்கலாய்த்தார்.
ஏழு புத்தகங்களையும் ஏழு பேர் வெளியிட எழு பிரபலங்கள் மேடை ஏற்றப்பட்டார்கள்.
நேற்று வெளியிட்ட ஏழு புத்தகங்கள் பட்டியல்
1. தேகம் (நாவல்) - வாதையின் எண்ணற்ற ரகசியங்களைத் திறக்கும் கதை
2. ஷேக்ஸ்பியரின் மின்னஞ்சல் முகவரி - புதிய & தொகுக்கப்படாத சிறுகதைகள்
3. சரசம்-சல்லாபம்-சாமியார் - நித்தியானந்தர் குறித்த குமுதம் ரிப்போர்ட்டர் தொடர்
4. கனவுகளின் நடனம் - சமகால தமிழக, இந்திய, உலக சினிமா குறித்த பார்வைகள்
5. கலையும் காமமும் - விவாதங்கள்
6. மழையா பெய்கிறது - சர்ச்சைகள்
7. கடவுளும் சைத்தானும் - கட்டுரைகள்
இதில் ஒவ்வொருவர் ஒவ்வோரு புத்தகத்தை பற்றி அறிமுகபடுத்தி பேசினார்கள்...
எஸ்ராமகிருஷ்ணன்,தமிழச்சிதங்கபாண்டியன்,ரவிக்குமார் எம் எல்ஏ,மதன்,இயக்குனர் மிஷ்கின்,கனிமொழி, போன்றவர்கள் மேடையில் வந்து அமர்ந்தார்கள். நல்லிகுப்புசாமி மற்றும் தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராசன் போன்றவர்கள் பேசினார்கள்..
எஸ்ரா மற்றும் மதன் பெயரை உச்சரித்த போதும், அவர்கள் இருவரும் மேடையேறியபோதும், அரங்கம் விசில் அடித்து தனது உற்சாகத்தை வெளிபடுத்தியது..எஸ்ராவுக்கு பெரிய விசில் சத்தம் மற்றும் கைதட்டல் கேட்டது.
நல்லிகுப்புசாமி ,ரவிக்குமார்,நடராசன் மற்றும் பலர் பேசினார்கள். நடராசன் பேசும் போது பதிவர்கள் பலர் தம்மடிக்க கிளம்பிவிட்டார்கள்.அதன் பிறகு பேசவந்த தமிழச்சி தங்கபாண்டியன் , சாரு நூல்களில் வாசித்த விஷயத்தை மேற்கோள்காட்டி பேசினார்.மேடை பேச்சு எனபது மினிஸ்கர்ட் போல் இருக்க வேண்டும்.. சுருக்கமாகவும் அதே சமயம் எதை மறைக்க வேண்டுமோ அதை மறைத்து இருக்கவேண்டும் அது போல மேடைபேச்சு அமைய வேண்டும் என்று சொல்லிய தமிழச்சி தங்கபாண்டியன்.ஆனால் அவர் நிறைய பேசினார்.. அந்த பேச்சு மினிஸ்கர்ட் போல் இல்லாமல் அது பைஜாமா போல நீண்டு கொண்டே போனது.
அடுத்து பேச வந்த கனிமொழி அவர்கள் சாருவின் கருத்துக்களில் பல உடன்பாடு இல்லாதவை . அவரோடு நிறைய சண்டை போட்டு இருக்கின்றேன்.நிறைய நாள் பேசாமல் இருந்து இருக்கின்றேன். இருப்பினும் தனக்கு நல்ல நண்பர் என்றும் இப்போது இருக்கும் ஊடகங்கள் தாங்கள் நினைத்த செய்தியை மட்டுமே முன்னிலை படுத்துவதாகவும்.. ஆனால் சாரு தான் நினைத்த கருத்தினை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிபடுத்துபவர் என்று பேசினார்.
பொதுவாக இலக்கிய விழாவுக்கு ஒரு செட்டப்பான பீப்பிள் மட்டுமே திரும்ப திரும்ப வருவார்கள் என்றும் சாருவின் இந்த விழாவுக்கு நிறைய இளமை பட்டாளம் வந்து இருப்பதையும் இது நல்ல தொடக்கம் என்றும் சொன்னார்.
அதன் பிறகு செத்தவன் கையில் வெற்றிலைபாக்கு கொடுத்தது போல நடந்த விழாவை தனது வசீகர பேச்சால் எல்லோரையும் ஹாய் மதன் கவர்ந்தார்... அரங்கம் நிமிர்ந்து உட்கார்ந்து, தனது கவனத்தை மேடை மீது செலுத்தியது. அவர் நிறைய படித்த வரலாற்று நூலின் கேரக்டர்களை எல்லாம் சொல்லி மேற்கோள் காட்டி சில உதாரணங்கள் வைத்துபேசினார்.
அவர் பேச வரும் போது மேடையில் வீற்று இருந்தவர்கள் பல்வேறுகாரணங்களுக்காக கொஞ்சநேரம் இல்லாமல் போக அத்தனை பேர் அமர்ந்த மேடையில் எஸ்ரா மட்டும் உட்கார்ந்து இருக்க..நல்லவேளை நான் கடைசியாக பேசி இருந்தால் மேடையில் அமர்ந்து இருக்கும் என்ற வார்த்தையை உபயோகபடுத்தி இருக்கமாட்டேன் என்று சொல்ல அரங்கம் சிரிப்பில் மூழ்கியது.
இன்னும் கூட்டம் சேர்க்கவும் மக்களை எண்டர்டெயின் செய்யவும் ரகசியவின் குத்து டான்ஸ் வைத்தால் கூட்டம் அள்ளும் என்று மதன் ஜாலியாக சொன்னார்.
சாரு பிரச்சனையான விஷயத்தையும் தைரியமாக தமிழில் சொல்லும் ஒரு சில எழுத்தாளர்களில் சாருவும் ஒருவர் என்றும் அவர் திரைபடத்தில் நடிக்க வேண்டுமானால் கொஞ்சம் மென்மையான அணுகுமுறையை திரைத்துறையில் பதிக்க வேண்டும் என்று சொன்னார். இருப்பினும் தைரியமான அவர் எழுத்துக்களுக்குதான் தலைவணங்குவதாகவும் மதன் குறிப்பிட்டார்..
என்னதான் மிஷ்கின் நண்பர் என்றாலும் நந்தலாலா படத்துக்கு குறைகளை சுட்டிகாட்டுவது சாருவின் கடமை என்றும் தனக்கு நந்தலாலா திரைப்படம் நல்ல மனநிறைவினை தந்தது என்று சொன்னார்...........
(கனிமொழிக்கும் தமிழச்சிக்கும் நடுவில் சாரு உட்கார்ந்து இருப்பதை பார்த்த போது கங்கைகரை தோட்டம் கன்னிபெண்கள் கூட்டம் கண்ணன் நடுவினிலே என்ற பாடல் எனக்கு நினைவுக்கு வந்தது.)
அடுத்ததாக பேச வந்த மிஷ்கின் தனது நந்தலாலா திரைப்படம் ஒரே அடியாக காப்பி என்று சொல்லுவதை என்னால் எற்றுக்கொள்ளமுடியாது என்றும் தமிழில் ரசனை மாற்றத்துக்கு இந்த படம் வித்திட்டது என்றும்..இந்தபடம் பிளாப் ஆனாலும் எனக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுதந்துவிட்டது...இன்ஸ்பிரேஷன் இல்லாமல் எந்த படைப்பும் இல்லை என்றும் உதவிஇயக்குனர்களை நான் கொஞ்சம் மனவருத்தம் கொள்ளும் படி பேசிவிட்டேன் இருந்தாலும் நான் மன்னிப்பு கேட்டுவிட்டேன்.. அவர்கள் படம் நல்லா இல்லை என்று எழுதினால் கூட பரவாயில்லை அனால் மெத்தபடித்தவர்களே நந்தலாலா படத்தை பற்றி இப்படி சொல்வது நன்றாக இல்லை என்று கோபங்களுடன் தனது தார்மீக கோபத்தை வெளிபடுத்தினார்.
சாருவுக்கு ஒரு வேண்டுகோள் தயவு செய்து படத்தில் நடிக்கும் எண்ணம் இருந்தால் கைவிட்டு விடுங்கள் ஒரு ஆர்மோனிய வாசிப்பு காட்சியை எடுக்க நிறைய பிலிம் ரோல் செலவானதாகவும்..
யாரும் இருக்கும் இடத்தில் இருந்து விட்டால் எல்லாம் சௌவுக்யமே என்பது போல சாரு நடிப்பு கனவை தலைமூழ்கிவிட சொன்னார் இயக்குனர் மிஷ்கின்.
சாரு புத்தகம் பற்றி எதுவும் சொல்லபோவதில்லை என்றும் அந்த புத்தகம் வேறு ஒரு தளத்தில் உள்ள புத்தகம் என்றும் இந்த புத்தகத்தை வாசித்தால் சரோஜாதேவி எல்லாம் தோற்றுபோய்விட வாய்ப்பு உள்ளதாக சொன்னார்.இந்த மேடையில் உணர்ச்சிவசப்பட்டு தவறாக ஏதாவது பேசி இருப்பின் யாரும் வருத்தம் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.
அடுத்ததாக பேசிய எஸ்ரா வதைகள் பற்றியும் அது மனித குலத்தின் தொடக்கம் பற்றியும் பிட்டு பிட்டு வைத்தார்..ஒருவரை வதைப்பது என்பது எங்கள் குடும்பங்களில் சின்னவயதில் இருந்தே நடக்கும் இயல்பான விஷயம் என்றும். பிரம்பால் அடித்து வதைத்தே எங்கள் பால்யபருவம் வளர்கின்றது என்று சொன்னார்..
அதே போல பாலுனர்வின் அடிப்படை என்பது மரணத்துக்கு மிக நெருக்கமான உணர்வு என்பதாய் பாலுனர்வுக்கு புதிய கோணத்தை எஸ்ரா சொன்னார்..நகரத்தின் வாழ்க்கை என்பது சற்றே யோசித்து பார்த்தால் இரவில் நாம் தனியாக படுத்து உறங்கவில்லை .. அப்படியே சற்றே ஒய்டாக பார்த்தால் ஒரு கோடி பேருக்கு மேல் நம்மோடு அனுதினமும் உறங்கிகொண்டு இருக்கின்றார்கள் என்று நினைக்கும் போதும் இவர்களோடுதான் புகுந்து புறப்பட்டு வாழ்ந்து வென்றாக வேண்டும் என்பதையும் மிக அழகாக சொன்னார்...
கடைசியாக சாரு பேச வரும் போது மணி 9,30..உயிர்மையின் கடைநிலை ஊழியர்களுக்கு தனது நன்றியை தெரிவித்தார்.மனுஷ்யபுத்ரனின் உயிர்மை தனக்கு இதுநாள்வரை உயிர்கொடுத்து வாழ வைப்பதாக பொருள்படும்வகையில் பேசினார்... தான் யாரை சாடி பேசினாலும் எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களில் மிக பெரிய பொறுப்பில் இருக்கும் பலர் தனக்கு நண்பர்கள் என்று சொன்னார்... தனக்கும் கனிமொழிக்கும் இருக்கும் நட்பை சிலாகித்து பகிர்ந்து கொண்டார்...கேரளா மற்றும் வட இந்தியாவில் எழுத்தாளர்களை கொண்டாடுவது போல இங்கே தமிழ் சூழலில் பெரிய கொண்டாட்டம் ஏதும் இல்லை வருத்தபட்டார்.
எக்னாமிக்ஸ் டைம்சில் தன்னை பற்றி வந்த கட்டுரையை ஜெராக்ஸ் போட்டு எல்லோருக்கும் காட்டினார்...தான் பட்டகஷ்டங்களை பட்டியலிட்டார்...தானும் எஸ்ராவும் நல்ல நண்பர்கள் என்றும் கஷ்டபட்டகாலத்தில் இருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் என்பதையும் சொன்னார்.
விழாவுக்கு வருகின்றேன் என்று சொல்லிவிட்டு டிமிக்கி கொடுத்த பிரபலம் நடிகை குஷ்பு...விழாவுக்கு சாயந்திரம் 5மணிக்கே வந்து இருந்து விழா முடியும் வரை இருந்தவர் பிரபல எழுத்தாளர் பாலகுமாரன்...
(இரவு பத்துமணிக்கு இளைத்து போன மேடை)
அறிவாலயத்துக்கு போய் உறுப்பினர் கார்டு எடுத்து விட்டு ஸ்டெய்ட்டாக காமராஜர் அரங்கம் வந்தது போல, சிவப்பு சட்டை கருப்பு பேன்ட்,சின்ன ஹீல்ஸ் போட்டு இருந்த பெண்மணி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிகொண்டு இருந்தார்....
நிறைய வாசகர்கள் மனதில் எழுந்த கேள்வியை கடைசிநேரத்தில் சாரு நிவேதிதா தீர்த்து வைத்தார்.. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அழகு புயல் பெயர் சாரதா என்றும் அவருக்கு என் நன்றி என்று கடைசியாக மைக்கில் தெரிவித்தார்...
மிஷ்கினோடுபதிவுலக நண்பர்கள் நந்தலாலா பற்றி பேசி வாழ்த்து தெரிவித்தனர்..
எழுத்தாளர் பாலகுமாரன் பாத்ரூம் போய்விட்டு படி இறங்க சிரமபட நம்ம டிஆர் அசோக்தான் அவருக்கு உதவி செய்தார்... பாத்ரூம் போய்விட்டு வருபவரிடம் என்ன பேச? விழா முடிந்து இரண்டு வார்த்தைகள் பேசலாம் என்று நினைத்து இருந்தேன்.. ஆனால் அதற்குள் அவர் சென்று விட்டார்..ஒரு காலத்தில் வெறித்தனமாய் வாசித்த எழுத்தாளர்... இன்று ரொம்ப இயல்பாய் கடந்து செல்கின்றேன்... காலம்தான் எத்தனை விசித்திரமானது????
வெளியே வந்தால் அந்த கருப்பு சிவப்பு உடை அழகு புயல், ஒரு நாயின் தலையை வாஞ்சையாக தடவிகொடுத்துக்கொண்டு இருந்தது. பெட்ரோல் அதிகம் குடித்து ஏப்பம் விட்டு வேகம் எடுக்கும் ஒரு இரண்டு இலக்க எண் கொண்ட வண்டியில் அந்த அழகுபுயல் கரையைக்கடந்தது...
விழாவின் ஹைலைட்ஸ்..மற்றும் எனது பார்வைகள்.
வந்து இருந்த அத்தனை பேருக்கும் சமோசா மற்றும் சின்ன வாட்டர்பாட்டில்,டி, காபி தொடர்ந்து வழங்கபட்டுக்கொண்டே இருந்தது.
பதிவர்களில் கார்த்திகேயனும் அறிவுத்தேடலும் கீதப்பிரியனை வெகுநாட்களுக்கு பிறகு சந்தித்தேன்.
முதன் முறையாக கருந்தேள் ராஜேஷை நேரில் சந்தித்தேன்.
விழாவுக்கு வந்த பதிவர்கள்.
மணிஜி,அகநாழிகை வாசு,நித்யகுமாரன்,உண்மைதமிழன்,நர்சிம்,லக்கி,நிலாரசிகன்,அதிஷா,சாம்ராஜ்யபிரியன்,ராஜபிரியன்,ஜியரோம்சுந்தர்,
வண்ணத்து பூச்சி சூர்யா, மயில்ராவணன்,கேபிள்,கேஆர்பி செந்தில், காவேரிகணேஷ்,ஊர்சுற்றி,ரமேஷ்வைத்யா, பஸ்சில் தனது உயிர் மூச்சை வைத்து இருக்கும் ஈஸ்வரி,அசோக், போன்றவர்கள் வந்து இருந்தார்கள்.
ஒருவன் சரக்கு அடித்து விட்டு பெனாத்திகொண்டு இருக்க.. கருந்தேள் போய் வெளியே போக சொல்ல அவன் அடம் பிடித்து அந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டு இருந்தான்..
கருந்தேள்.. சாருவுக்கு எக்னாமிக்ஸ் டைம்ஸ் ஜேராக்ஸ் மற்றும் விழா ஏற்பாடுகளில் பிசியாக இருந்தான்.
சாருவை எல்லோரும் சுற்றிக்கொள்ள அவரின் எந்த நூலையும் நான் வாசிக்காத காரணத்தால் அவரிடம் இருந்து நான் விலகியே இருந்தேன்...ஏன்அவர் நூலைவாசித்தது இல்லை..இன்னும் படிக்க தோன்றவில்லை.. சரி அப்படி என்றால் விழா முடியும் வரை எப்படி உட்கார்ந்து இருந்தீர்கள். சாருவைதான் வாசிக்க வில்லை ஆனால் விழாவில் பேசவந்தபலரை வாசித்து இருக்கின்றேன் என்று நண்பரிடம் சொன்னேன்.
ஆனால் ஒரு விஷயம். ஒரு தமிழ் புத்தகவெளியீட்டு விழாவுக்கு காமராஜர் அரங்கத்தில் பாதி அளவுக்கு மேல் மக்களை கூட்டி இரவு 10.30 மணிவரை கட்டி போட்டது போல பல வாசகர்களை உட்காரவைத்து இருக்க பெரிய கட்ஸ் வேண்டும்...ஒரு ஆளுமை வேண்டும் அந்த பவர் சாருவிடம் இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்.
பெரிய அளவில் விளம்பரம் செய்யாமல்,திங்கள் கிழமை மாலையில் புத்தகவிழா வைத்த காரணத்தால் அலுவலகத்தில் இருந்து பலர் வரசிரமபட்டனர். அதனாலும் கூட்டம் குறைந்து இருக்கும்.
எனக்கு தெரிந்து சாருவிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அவரின் சிரிப்புதான். அந்த சிரிப்பில் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கின்றது.
மற்றபடி எனக்கு எதுவும் அவரை பற்றி தெரியாது ஆனால் இனிமாறலாம்...
‘================
கூட்டம் முடிந்தது.. நான், நித்யா,உண்மைதமிழன் அரங்குக்கு எதிரில் இருக்கும் ஒரு உணவுவிடுதியில் இரவு உணவை சுவைத்தோம்.
மவுன்ட் ரோடு வழியாக கிண்டி சென்று வீடு செல்ல என் இருசக்ரவாகனத்தில்
பயணித்தேன்.
மலமும் மக்கிய குப்பையுமாக சேர்ந்த ஒரு நாற்றம் சாலை எங்கும் வியாபித்து இருந்தது. காரணம் தெரியாமல் நானும் வாகனத்தை வேகம் எடுத்தும் வேகம் குறைத்தும் பார்த்து விட்டேன் கடைசிவரை என்ன காரணம் என்று தெரியாமல் இருக்க கவர்னர் வீடு அருகே விடை கிடைத்தது... ஆம் ஒரு குப்பை வண்டி முந்திரிக்கொட்டை போல என் முன் சென்று கொண்டு இருந்தது....
வாகனத்தில் ஓட்டியபடியே வானத்தை பார்த்தேன். வெயில்காலத்தில் பெரிய கனிந்த எலுமிச்சையை பாதியாக வெட்டியது போல், நிலா மஞ்சள் கலரில் காட்சி அளித்தது.
புகைபடங்கள் நம்ம ஆட்டோ போகஸ் கேமராதான்...
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு..
இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.
பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
//மலமும் மக்கிய குப்பையுமாக சேர்ந்த ஒரு நாற்றம் சாலை எங்கும் வியாபித்து இருந்தது. காரணம் தெரியாமல் நானும் வாகனத்தை வேகம் எடுத்தும் வேகம் குறைத்தும் பார்த்து விட்டேன் கடைசிவரை என்ன காரணம் என்று தெரியாமல் இருக்க கவர்னர் வீடு அருகே விடை கிடைத்தது... ஆம் ஒரு குப்பை வண்டி முந்திரிக்கொட்டை போல என் முன் சென்று கொண்டு இருந்தது....
ReplyDeleteஎனக்கு தெரிந்து சாருவிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அவரின் சிரிப்புதான். அந்த சிரிப்பில் ஒரு வசீகரம் இருக்கத்தான் செய்கின்றது.
மற்றபடி எனக்கு எதுவும் அவரை பற்றி தெரியாது ஆனால் இனிமாறலாம்...//
இந்த ரெண்டு பேரா ஆர்டர வச்சு பார்த்தா ஏதோ உள்குத்து மாதிரி தெரியுதே.. அப்படியெல்லாம் ஒண்ணுமிலையில்லே..
விழாவுக்கு வரமுடியலை. ஆனால் உங்க விரிவான பதிவு பார்த்து மகிழ்ந்தேன். நன்றி ஜாக்கி.
ReplyDeleteஅக்னி எந்த உள் குத்தும் இல்லை.. நான் ஆர்டரையே மாற்றிவிட்டேன்...யப்பா சாமி எப்படியெல்லாம் யோசிக்கிறிங்க..??
ReplyDeleteநன்றி டீச்சர் உங்களை சந்திச்சு கூட ரொம்பநாள்ஆச்சு..
ReplyDeleteநன்றி ஜாக்கி,
ReplyDeleteநிகழ்வினை நன்றாக கூர்ந்து கவனித்து எழுதியிருக்கிறீர்கள்.குறிப்பு எதாவது எடுத்து எழுதுவீர்களா அல்லது நினைவில் இருந்து எழுதுவீர்களா.?
அன்புடன்
அரவிந்தன்
பெங்களுர்
அன்பின் அரவிந்..
ReplyDeleteநான் எப்போதும் எந்த குறிப்பையும் எடுப்பதில்லை.. இன்னும் பேசியதை நிறைய எழுதலாம் அது போர் அடித்து விடும் என்பதால் குறைவாக எழுதி இருக்கின்றேன். எல்லாம் நினைவில் இருப்பவைதான்..
//ஒரு தமிழ் புத்தகவெளியீட்டு விழாவுக்கு காமராஜர் அரங்கத்தில் பாதி அளவுக்கு மேல் மக்களை கூட்டி இரவு 10.30 மணிவரை கட்டி போட்டது போல பல வாசகர்களை உட்காரவைத்து இருக்க பெரிய கட்ஸ் வேண்டும்...ஒரு ஆளுமை வேண்டும் அந்த பவர் சாருவிடம் இருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ள வேண்டும்//
ReplyDeleteஉண்மை உண்மை!! :-)
விழாவில் நடந்த நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை அண்ணே,
ReplyDeleteதொடருங்கள்....
பகிர்வுக்கு நன்றி
விழாவுக்கு வர முடிய வில்லை. தங்கள் பதிவு படித்து முழு விபரம் அறிந்தேன். குறிப்பாய் வந்த பதிவர்கள் அனைவர் பெயர் வரை போட்ட உங்கள் பணி அருமை
ReplyDeleteஅண்ணே அட்டகாசமான கவரேஜ்,வீட்ல விரைவில் பார்ப்போம்.
ReplyDeleteNalla pathivu..
ReplyDeletehttp://enathupayanangal.blogspot.com
ஒரு விஷயத்தை நா கவனிசிகிட்டேதான் வரேன். வர வர ஜாக்கி நீ நல்லாதான் எழுத ஆரம்பிச்சிட்டே மச்சி !
ReplyDeleteகீப் இட்டு அப்பு !! :))))))))
என்ன இருந்தாலும் குஷ்பூ வராதது பெரிய குறைதான்..பரவாயில்லை தமிழச்சியாவது வந்தாரே!!
ReplyDeleteபாஸ் ஈரோடு பதிவர் சங்கமத்துக்கு வாங்களேன்.
ReplyDeleteநான் தங்கள் பதிவுகளை அவ்வப்போது வாசித்து வருபவன். தங்களை நேற்று விழாவில் பார்த்தேன். உங்களுக்கு என்னைத் தெரியாததால் பேச ஏனோ தயக்கமாக இருந்தது.
ReplyDeleteசாருவை பிடிக்காவிட்டாலும் அவரை Ignore செய்ய முடியாது என்பது முற்றிலும் உண்மை. நிகழ்ச்சியின் Show Stopper எஸ்.ரா.தான். அவரது பேச்சுக்காகவே என்னைப்போன்ற சிலர் இறுதி வரை அமர்ந்திருந்தனர்.
நூல் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் நந்தலாலா பற்றிய புலம்பலைத் தவிர்த்திருந்திருக்கலாம். அவர் மீதிருந்த மதிப்பு குறைந்துவிட்டது. சாருவின் நன்றியுரையில் சுயதம்பட்டமே மேலோங்கி இருந்தது. தமிழர்கள் அவரைக் கண்டுகொள்வதில்லை என்று சொல்லும்போது ஏன்தான் அங்கு உட்கார்ந்திருந்தோம் என்று மிகவும் வருத்தப் பட்டேன்.
சாருவின் குரலில்கூட இளமையும் வசீகரமும் ததும்புகிறது.
எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் 7 புத்தக வெளீயிடு தொகுப்பும், புகைப்படங்களும்:
ReplyDeletehttp://kaveriganesh.blogspot.com/2010/12/7.html
good.. engalaum antha function la iruntha feel kodutthu irukeenga...
ReplyDeletenalla thelivana vilakkam...
antha ponnu photo pottu irukkalamla..??? venumne en ippadi emathureenga???? :-(...
keep rocking..
விழாவில் நடந்த நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பதிவு செய்துள்ளீர்கள்
ReplyDeleteவிழாவில் நடந்த நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை
ReplyDeleteவிழாவில் நடந்த நிகழ்வுகளை மிகவும் சுவாரசியமாக பதிவு செய்துள்ளீர்கள் அருமை !!!!!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
nice information, about the event, thanks for sharing jacky.
ReplyDeletenice information about the event, thanks for sharing jacky.
ReplyDeleteஉங்கள் பின்னாடிதான் நானும் அமர்ந்திருந்தேன்.. உங்கள் தளத்தை வெகுநாளாக படித்தாலும் நேற்றுதான் முதலில் உங்களைப்பார்த்தேன்..
ReplyDeleteவிழா குறித்த என்பதிவு :http://madhansendhil.blogspot.com
சரவணகார்த்திகேயனின் புத்தகவிழாவுக்கு வந்த சாரு ஒரு வார்த்தை கூட அந்த தொகுப்பை பற்றி பேசாமல் 'தேகம்' நாவலை பற்றி பேசினார். இப்பொழுது மிஷ்கின் 'தேகம்' நாவலை பற்றி பேசாமல் நந்தலாலா பற்றி பேசுவதாக சாரு குறை சொல்லுகிறார். ங்கொய்யாலா..எந்த ஊரு நியாயம் இது?
ReplyDeleteநல்ல பகிர்வு தல.
ReplyDeleteஉங்களுக்கு இரண்டு வரிசைக்கு முன்னால் இருந்தவனின் பார்வை ;) : http://wp.me/pjgWz-4v
மிகவும் விரிவான கவரேஜ்.
ReplyDeleteஅழகுப் புயல் குறிப்புகள் அருமை.
அன்பு நித்யன்
photos are not clear u can take photos from here....
ReplyDeletehttp://photography.selvakumart.com/2010/12/charu7.html
my brother take this photos in the book release...
ஆமாங்க!
ReplyDeleteசனி, ஞாயிறு நிகழ்ச்சியை வச்சிருந்தா அரங்கு நிறைஞ்சிருக்கும்!
உங்களைச் சந்தித்ததிலும் மகிழ்ச்சி!
விழாவை நேரில் கண்ட உணர்வு... நன்றி
ReplyDeleteகாகமும் தன் கூட்டத்தோடுதான் சேரும் என்பது போல், மொக்கைகள் எல்லாம் சேர்ந்து மொக்கை சக்ரவர்த்திக்கு கிரீடம் சூட்டி உள்ளீர்கள்.
ReplyDeleteதேகம் நாவலை படித்து விட்டு அது தொடர்பான தகவலை தேடிய போது உங்கள் இப்பக்கத்தை காண நேர்ந்தது. விழாவை நேரில் கண்ட உணர்வு. நன்றி.
ReplyDelete