ஆல்பம்..
சீனாவில் தீவிபத்து 50க்கு மேற்பட்டவர்கள் பலி என்று முதல் நாள் செய்தி அடுத்த நாள் இந்தியாவில் டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து அறுபதுக்கு மேற்பட்டவர்கள் பலி.. என்ற செய்தி. அனுமதி இல்லாமல் ஐந்தாவது மாடி எழுப்பும் போது இந்த துயரம் நிகழ்ந்து இருக்கின்றது..வழக்கம் போல இறந்தவர்குடும்பங்களுக்கு 2 லட்சம் வழங்கபட்டது.
===========
ஸ்பெக்ட்ராம் ஊழல்,ராசா ராஜினாமா என தலைநகர் அரசியல் மிக பரபரப்பாக இருக்கின்றது. அவை நடத்த விடமாட்டோம் என்று ஒற்றை காலில் எதிர்கட்சிகள் தவம் கடக்கின்றன.. ஆளும் அரசு திருடனுக்கு தேள் கொட்டியதாக விழித்தபடி இருக்கின்றது.
==========
மங்களூர் விமான விபத்துக்கு காரணம் விமானி தூக்கியதுதான் முக்கிய காரணம் என விமானதுறை அமைச்சகம் சொல்லி இருக்கின்றது.இறங்கும் போது டேய் மச்சான் ஸ்டேஷன் வந்துடுச்சி... எழுந்துரு என்பது போல துணைவிமானி சொல்லி இருக்கலாம்...காலம் கடந்து விட்டது...ஆனால் ஒரு கேள்வி? விமானம் தரை இறங்கும் முன் தரைகட்டுபாட்டு நிலையத்துக்கு நான் இறங்கலாமா? என்று கேட்டுவிட்டுதானே இறங்கமுடியும்... அனுமதி கொடுத்து விட்டு இறங்கும் கேப்பில் கண் அயர்ந்து விட்டார் என்று சொல்ல வருகின்றார்களா?? ஒன்னும் புரியவில்லை.
==============
மிக்சர்..
இரண்டு நாட்களாக நல்ல மழை சென்னையில் பெய்து வருகின்றது.. நகரில் எல்லா இடங்களிலும் வெள்ளக்காடாக மாறி இருக்கின்றது.. போருர் வடபழனி ரோட்டில் போய் வர முடியவில்லை. கிண்டி டூ சைதாப்பேட்டை, கிண்டி டூ கோயம்பேடு டிராபிக்கில் நெளிகின்றது.. பறக்கும் ரயில் பிராஜக்ட் பாதி ரோட்டை அடைத்துக்கொள்வதால் டிராபிக் எருமைமாடு போல நகருகின்றது. கோயம்பேடு மேம்பாலங்களில் மதுரவாயல் டூ சென்ரல் செல்லும் பாலம் போக்குவரத்துக்கு திறந்து விட்டார்கள்.. அந்த இடத்தை இப்போது கடப்பது மிக எளிதாக இருக்கின்றது.=================
நீங்க ஜாக்கிஅண்ணன்தானே? ஆமாம்
அண்ணே எனக்கு ஒரு உதவி?
எனக்கு பக் என்றது நானே இப்போ வெட்டி ஆபிசர்... சரி தைரியத்தை வரவழைத்து கொண்டு சொல்லுப்பா என்றேன்..எனக்கு துபாய்ல வேலை கிடைச்சி இருக்கு.. நான் இப்ப திருவனந்தபுரத்துல இருக்கேன். துபாய் விமான பயணசெலவு எல்லாம் எவ்வளவுன்னு எனக்கு தெரியனும்.. கொஞ்சம் உதவி செய்யமுடியுமா? யார் கிட்டயாவது கேட்டு சொல்ல முடியுமா? தப்பி நான் என் வீட்டுக்கு போகும் போது தலைக்கு மேல பறந்து போகும் விமாணத்தை பார்த்ததோடு சரி. இதுக்கு சரியான ஆள் கேஆர்பி செந்தில் என நம்பர் கொடுக்க... விவரம் கேட்டுவிட்டு நன்றி சொன்னது அந்த தம்பி...
==============================
அது எப்படின்னே தெரியலை நம்ம காசுலேயே குளிர் காயுறானுங்க...ரிங்டோனுக்கு நீங்க பணம் கட்டறிங்க.. மாசம் 30 லவட்டிக்கிறானுங்க. அப்புறம் நீங்க கால் பண்ணும் போது பாட்டு கேட்காம.. இந்த பாட்டு உங்களுக்கு பிடிச்சி இருந்தா எண் இரண்டை அழுத்துங்க, மாத வடகை முப்பது ரூபா என்று சொல்லிவிட்டு பாட்டு கேட்கின்றது.. இவனுங்களை என்ன செய்யலாம்? இவனுங்க புராணம் சொல்லி முடிச்சி பாட்டு ஒரு வார்த்தை ஆரம்பிக்கும் போதே கால் அட்டென்ட் பண்ணிடறோம்.... அப்புறம் எதுக்கு ரிங்டோன்... அதனால மகா ஜனங்களே.. தயவு செய்து உங்க 30ரூபாய் மிச்சபடுத்த அவனுங்ககுளிர் காய்வதை தடுக்க தயவு செய்து உங்க செல்போனில் ரிங்டோன் கட் பண்ணுங்க சாமியோவ்.
=====================
இந்தவார நிழற்படம்..
இந்த படம் நம்ம கைங்கர்யம்...மதுராந்தகம் அருகில் எடுத்த புகைபடம்.
==========
பார்த்ததில் பிடித்தது...
நேற்றுகாலை நல்ல மழை சென்னை முழுவதும் கிண்டி ஸ்பிக் பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் ஒதுங்கி இருந்தேன்.சைக்கிளை தள்ளியபடி அப்பாவும் மகளும் நடந்து வந்து கொண்டு இருந்தார்கள்.திடிர் மழையை எதிர்பார்க்காத அப்பாவும் மகளும் சைக்கிளை தள்ளியபடி பெட்ரோல் பங்கில் ஒதுங்கினார்கள். சைக்கிளின் செயின் அறுத்துக்கொண்டு இருந்தது.மழை விட்டபாடில்லை பள்ளிக்கு நேரமாகி கொண்டு இருப்பதால் அப்பா மகளிடம் சொல்கின்றார்.. நான் நனைஞ்சு சைக்கிளை தள்ளிகிட்டு போறேன் டீந நனையாம பார்த்துக்கோ? இல்லை உங்களுக்கு குடை பிடிப்பேன் என்று சொல்லுகின்றார் மகள்...மகளின் பிடிவாதம் தெரிந்த தந்தை நடக்க ஆரம்பிக்க, அப்பாவும் பெண்ணும் வெளுக்கும் மழையில் அப்பாவின் தலையும் தன் தலையும் நனையாமல் குடைபிடித்த படி அந்த பிவைத மகள் நடந்து போய் கொண்டு இருந்தாள்... அவளின் திருமணத்துக்கு பிறகும் தந்தையிடம் இதே பாசம் இருக்க வேண்டி இறைவனை வேண்டிக்கொண்டேன்.
வாழ்த்துக்கள்.
வாசக நண்பர்கள் அனைவருக்கும் பக்ரீத் தின நல்வாழ்த்துக்கள்.
பதிவுலக நண்பர் வடிவேலனுக்கு பெண் குழந்தை பிற்நது இருக்கின்றது அவருக்கும் தாய் சேயிக்கும் எனது வாழ்த்துக்கள்...
இன்று ரிசப்ஷனில் பதட்டத்தோடு நின்று நாளை முழு தைரியத்தையும் வர வழித்துக்கொண்டு, நாளை காலை கை நடுங்காமல் தாலி கட்ட போகும், பதிவுல சினிமா விமர்சன புயல் ஜெட்லி என்ற சரவணனுக்கு எனது இதயங்கனிந்த திருமண நல் வாழ்த்துக்கள்.
====================
அறிவிப்பு..
சிங்கை பதிவர்கள் நடத்தும் மணற்கேணி கட்டுரை போட்டிக்கு கட்டுரை அனுப்ப கடைசி இந்த மாத இறுதி...பதிவு எழுதும் அனைவரும் இதில் கலந்து கொள்ள வேண்டுகின்றேன்... விபரங்களுக்கு...இங்கே கிளிக்கவும்
=================
இந்தவார கடிதம்..
டியர் ஜாக்கி
மைனா விமர்சனம் அருமை .படம் பார்க்கவேண்டும் என்ற ஆசையை அதிகமாக உண்டாக்கி விட்டது .
நானும் கேள்விப்பட்டிருக்கிறேன் இயக்குனர் பிரபு சாலமன் கொஞ்சம் அதிகமாக பேசுகிறார் என்று .நல்ல
படைப்பாளி கொஞ்சம் பேசட்டுமே.ஒரு கிருஸ்துவ எழுத்தாளர் சந்திப்பில் அவரை நான் சந்தித்தேன் .
அவர் பேசியவுடன் நிறைய பேர் அவருடைய தொலைபேசியை வாங்கினார்கள் .நானும் அவரிடம் சென்று
என்னை அறிமுகம் செய்து கொண்டு அவருடைய தொலைபேசியை கேட்டேன் .இசை அமைக்க வாய்ப்பு
கேட்டு தொல்லை பண்ணுவேன் என்று நினைத்தாரோ தெரியவில்லை .பக்கத்தில் இருந்த ஒரு அல்..... கை ...
காட்டி அவரிடம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார் .அந்த அல்.... கை ....என்னை மிகவும் எரிச்சல்லுக்குல்லாகியது .
உடனே நான் நினைத்தேன் இயக்குனர் அடிக்கடி சொல்கிற கர்த்தரை யார்வேண்டுமானாலும் சந்திக்கலாம்
அவர் என்னுடைய நண்பன் .வழிகாட்டி .இவர் அவரை விட அதிகம் பிசியானவர் .நான் தொல்லை பன்ன்னக்கூடாதென்று.
அதற்குப்பிறகு அவரை நான் சந்திக்க எந்த முயர்ச்சியும் எடுக்கவில்லை .பிரபு சாலமன் இயக்கிய எந்தப்படமும் நான் இதுவரை
பார்கவில்லை .அவருடைய படத் தலைப்புகளைப் பார்த்து அப்படி ஒரு பயம் .ஆனால் மைனா ஆரம்பம் முதலே ஒரு ஈர்ப்பை
உண்டாக்கிவிட்டது .படத்தினுடைய கதையை கேட்கும்போது இயேசு சொன்ன போதனையை நினைக்கவைத்துவிட்டது .
உனக்கு தீமை செய்தவனையும் மன்னித்து அவனுக்கு நன்மை செய் .அந்த பஸ் காட்சி இதையே சொல்கிறது .
இன்றைக்கு உலகம் முழுதும் தமிழ் ரசிகர்கள் மைனாவை கொண்டாடுகிறார்கள் அவரையும் என்னையும் வழி நடத்தும்
கர்த்தர் இன்னும் பல சிகரங்களை மைனாவுக்கும் பிரபு சாலமனுக்கும் வழங்கட்டும் . ஜாக்கி மனம் திறந்த உங்கள் விமர்சனத்துக்கு
நன்றிகள்.
உதயா இசை அமைப்பாளர்
=====================
=====================
இந்தவார சலனபடம்...
செமையான விளம்பரம்... நம்ம ஊர்ல இப்படி யோச்சிச்சா அவ்வளவுதான் தாயை கேவலபடுத்தி விட்டதாக கூப்பாடு போடுவார்கள்.
=====================
பிலாசபி பாண்டி
இந்தியாவில் பஸ்ட் கிளாஸ்ல பாஸ் பண்ணவன் டாக்டர் இன்ஜினியரா ஆவரான், செகன்ட் கிளாஸ் பாஸ் பண்ணவன் எம்பிஏ படிச்சி அட்மினிஸ்டேட்டரா மாறி பஸ்ட் கிளாஸ் மார்க் வாங்கறவனையும் கண்ட்ரோல் பண்ணறான். தேர்ட் கிளாஸ் மார்க் வாங்கினவன் பாலிடிக்ஸ்ல நுழைஞ்சு பர்ஸ்ட் கிளாஸ் செகன்ட்கிளாஸ் ரெண்டு பேரயும் கண்ரோல் பண்ணறான்.. பெயிலியர் மார்க் எடுத்தவன் தாதாவா மாறி எல்லார் கண்ணுலயும் விரல் விட்டு ஆட்டுறான்.. இதுதான் இந்தியா புரிஞ்சிதா மச்சி??
==============
நான்வெஜ் 18+
மூணு பொண்ணுங்க பேசிக்கிட்டாங்க... பேச்சு என்ஜாய்மென்ட் பக்கம் போச்சு...ஒருத்தி சொன்னா... நான் என் லவ்வரோடு வெளியே போய் விட்டு வரும் போது என் கன்னம் மற்றும் உடல்பாகங்கள் சிவந்து இருந்தா நான் ரொம்ப என்ஜாய் பண்ணி விட்டு வந்து இருக்கேன் என்று அர்த்தம் என்றாள்.. இரண்டாவது ஒருத்தி சொன்னா, என் உள்ளாடை கிழிஞ்சி இருந்தா நான் ரொம்ப என்ஜாய் பண்ணிட்டு வந்தேன் என்று அர்த்தம் என்று சொன்னாள்.. மூணாவது பொண்ணுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை சட்டுன்னு யோசிச்சா... நான் என் லவ்வரோடு என்ஜாய் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து என் பேண்டிஸ் அவுத்து சுவத்துல அடிப்பேன் அது சுவத்துல ஓட்டிகிச்சின்னா? என்று சொல்லும் போதே ரெண்டு தோழிகளும் சைலன்ட் ஆயிட்டாங்க....
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
Me the Firstaaaa!!!
ReplyDeleteபிலாசபி பாண்டி சொன்னது உண்மையிலேயே உண்மை...வழக்கம் போல் அருமை....
ReplyDelete///.. இந்த பாட்டு உங்களுக்கு பிடிச்சி இருந்தா எண் இரண்டை அழுத்துங்க, மாத வடகை முப்பது ரூபா என்று சொல்லிவிட்டு பாட்டு கேட்கின்றது.. ///
ReplyDeleteகடுப்பேத்தறான் மை லார்ட்!
Hey... Heyy... Vadai.. enakke enakku!
ReplyDeleteபிலாசபி பாண்டி - உண்மை
ReplyDeleteநான்வெஜ் 18+ - சூப்பர் தல!
Nice foto!!
உங்களுக்கு காமிக்ஸ் பிடிக்குமா? அப்பிடின்னா நம்மை பக்கம் வாங்க! :)
//மூணு பொண்ணுங்க பேசிக்கிட்டாங்க... பேச்சு என்ஜாய்மென்ட் பக்கம் போச்சு...ஒருத்தி சொன்னா... நான் என் லவ்வரோடு வெளியே போய் விட்டு வரும் போது என் கன்னம் மற்றும் உடல்பாகங்கள் சிவந்து இருந்தா நான் ரொம்ப என்ஜாய் பண்ணி விட்டு வந்து இருக்கேன் என்று அர்த்தம் என்றாள்.. இரண்டாவது ஒருத்தி சொன்னா, என் உள்ளாடை கிழிஞ்சி இருந்தா நான் ரொம்ப என்ஜாய் பண்ணிட்டு வந்தேன் என்று அர்த்தம் என்று சொன்னாள்.. மூணாவது பொண்ணுக்கு என்ன சொல்லறதுன்னு தெரியலை சட்டுன்னு யோசிச்சா... நான் என் லவ்வரோடு என்ஜாய் பண்ணிட்டு வீட்டுக்கு வந்து என் பேண்டிஸ் அவுத்து சுவத்துல அடிப்பேன் அது சுவத்துல ஓட்டிகிச்சின்னா? என்று சொல்லும் போதே ரெண்டு தோழிகளும் சைலன்ட் ஆயிட்டாங்க....//
ReplyDeleteஇதுக்கு ஒனக்கு இருக்குடி சரக்கு சேவர் தளத்துல..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஜாக்கி அந்த புகைப்படம் நல்லா இருக்கு..
ReplyDelete// விமானம் தரை இறங்கும் முன் தரைகட்டுபாட்டு நிலையத்துக்கு நான் இறங்கலாமா? என்று கேட்டுவிட்டுதானே இறங்கமுடியும்... அனுமதி கொடுத்து விட்டு இறங்கும் கேப்பில் கண் அயர்ந்து விட்டார் என்று சொல்ல வருகின்றார்களா?? ஒன்னும் புரியவில்லை.
ReplyDelete//
மைக்ரோ ஸ்லீப் என்று இதற்கு பெயர், ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் கண் அயர்ந்துவிடுவோமே அது போலத்தான், தொடர் வேலையினால் இம்மாதிரி நேரிடும் கார் ஓட்டுபவர்கள் சாலையில் வண்டி ஓட்டுபவர்கள், ஒரே வேலையே செய்து கொண்டிருப்பவர்கள் அனைவருக்குமே இந்த மைக்ரோ ஸ்லீப் ஏற்படும்... டேபிள் டாப் வானூர்தி பாதையில் வானூர்தியை தரையிறக்கும் போது இந்த மைக்ரோ ஸ்லீப்பினால் சில மீட்டர்கள் தள்ளி இறக்கிவிட்டார் வானூர்தி ஓட்டுனர் என்கிறது அறிக்கை....
மணற்கேணி போட்டி பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி
முதன்முறையாக உங்கள் தளத்தில் பின்னூட்டுகிறேன் :-)
இந்த சாண்ட்விச்சும் அருமை அண்ணா...
ReplyDeleteஅப்பா மகள் பாசம் மனசைத் தொட்டது...
இசையமைப்பாளர் உதயாவின் கடிதம் உண்மையை பிரதிபலித்தது
fine
ReplyDeleteபின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்... நண்பர்களே..
ReplyDeleteஸ்ரீராம் யாரை சொல்லற.. சாணியக்காவையா??? அட போப்பா...
ஒரு வாராமா எந்த இடத்திலயும் நம்ம பேர் அடிபட மாட்டேங்குது போர் அடிக்குது...
/// இந்த பாட்டு உங்களுக்கு பிடிச்சி இருந்தா எண் இரண்டை அழுத்துங்க, மாத வடகை முப்பது ரூபா என்று சொல்லிவிட்டு பாட்டு கேட்கின்றது ///
ReplyDeleteகஸ்டமர் கேர்'ல சொன்னா அந்த விளம்பரத்த கட் பண்ணிடுவாங்க பாஸ்...பாதிக்கப்பட்ட ஜனங்கள் ட்ரை பண்ணவும்...
நீங்க முப்பது ரூபாய்க்கு சொல்றிங்க, பலபேர் எதுக்கு பைசா போகுதுன்னுகூட தெரியாம இருக்காங்க, ப்ரோமொட்டிங் கால்ஸ் வர்றப்போ தப்பா எதாச்சு பிரஸ் பண்ணிட்டு எப்பவுமே மைனஸ் balance வச்சுருக்கற கொடை வள்ளல்கள் ரொம்பபேர் இருக்காங்க.
குறிப்பிட்ட அந்த இடுகையை நீக்கிவிட்டேன் நண்பரே... என் தளத்திற்கு வருகை தந்து நடுநிலையான கருத்துக்களை தெரிவித்ததற்கு நன்றி...
ReplyDeleterittu
ReplyDeleteநல்லா இருக்கு தொடருங்கள்
ReplyDeleteHi jackie,
ReplyDeleteThe length of runway is too less.and the infarstructure (Table top runway) is also Bad. that contributed to this great damage. Ministry is hiding this by putting the micro sleep of the pilot. The ultimate design should be able to accomodate the human error.
இந்த வார ஃபிலாசபி நம்பர் ஒன்னு!! குளிருக்கு சான்ட்விச் ப்ளஸ் பதினெட்டு ம்ம்ம் ராகம் தான்!!
ReplyDeletelate a present sir.............
ReplyDeleteமணற்கேணி போட்டி பற்றி குறிப்பிட்டதற்கு நன்றி
ReplyDeleteமணற்கேணி போட்டியில் மூன்று பிரிவுகளில் இடம் பெறும் கட்டுரைகள் அனுப்ப இறுதித் தேதி 31 / டிச / 2010.
ReplyDeletehttp://sgtamilbloggers.blogspot.com/
SO PLZ UBDATE THAT
THANK YOU
ஸ்பெக்ட்ராம் ராஜா சென்னை திரும்பினார், திமுகவினர் கோலாகல வரவேற்பு - செய்தி
ReplyDeleteஇவர் என்னசெஞ்சுட்டு வந்திருக்கார் இன்னுட்டு இப்போ இந்த வரவேற்பு குடுக்கறாங்க, மக்கள் எல்லாம் என்ன ஒன்னும் தெரியாத முட்டாள்கள் என்று நினைகறான்கள...
விளம்பரம் மிக மோசம். அம்மாவின் கண்ட்ரோலான பாசத்தை காட்ட விளம்பரம் எடுத்த சைக்கோக்கு ஐடியா பஞ்சம் போல..பண்ணாடை..!!இந்த விளம்பரத்துக்கு அந்த நாட்டுலேயே கண்டிப்பா கண்டனம் செஞ்சு இருப்பாங்க பாஸ்!!
ReplyDelete