மாநகர பேருந்தை நிறுத்தி, சென்னையை ஸ்தம்பிக்க வைக்க எளியவழிகள்.(சென்னையில் வாழ பழக….)
நேற்று காலையில் என் அத்தை பெண் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு காலையில் வந்த போது முதலில் குறுஞ்செய்தியாக மாநகர பேருந்து ஸ்டிரைக்கா? என்று கேட்ட போது அப்படி எல்லாம் இல்லை என்றேன்.
காலையில் நிறைய பேர் வேலைக்கு போகமுடியாமல் பேருந்து கிடைக்காமல் தவித்து போய் இருக்க என் கசின் சென்னை ஏசி வால்வோ பேருந்தில் கதவு திறந்த நிலையில் படிகளில் தொங்கி கொண்டு மக்கள் போவதாக போனில் சொன்ன போது பிரச்சனையின் தீவிரம் புரிந்தது.
பேருந்து போகாமல் ஸ்டிரைக் நடக்க முக்கியகாரணம் என்ன ? என்று விசாரிக்கும் போது வழக்கம் போல் பேருந்து டிரைவரையும் ஓட்டுனரையும் உதைத்து விட்டார்கள் அதனால் இந்த ஸ்டிரைக் என்று ஊடகங்கள் அலறின.
ஏற்கனவே ஒரு நாள் இரவு பத்து மணிக்கு பணி முடிந்து சின்னமலை அருகில் இருக்கும் ஒருடாஸ்மார்க் கடையில் மாநகர பேருந்து ஓட்டுனர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஏற்பட்ட வாய்தகராறு காரணமாக, டிரைவர்களுக்கு ஆதரவாக மற்ற மாநகர பேருந்து ஓட்டுனர்கள் களம் இறங்கி ஒரு நான்கு மணி நேரம் நகரை திக்குமுக்காட வைத்தனர். அந்த ருசி தெரிந்தவர்கள் இந்த முறை நியாயமாக பணியில் இருக்கும் போதே ஓட்டுனரும் நடத்துனரும் தாக்கபட அவ்வளவுதான் வீறுகொண்டு எழுந்து விட்டனர்.
முதல்வன் படத்தில் பட்டவர்தனமாக சங்கரும் சுஜாதாவும் ரொம்ப டிடெயில்டாக ஒரு பஸ் ஸ்டிரைக் எப்படி நடக்கின்றது? என்று காட்டி இருக்கின்றார்கள்.
சரி இந்த பிரச்சனை எப்படி ஏற்பட்டது தெரியுமா?
சென்னை பாடி பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் இறக்கிவிட்டுக்கொண்டு இருக்கும் போது பின்னால் வந்த ஒரு ஸ்கார்பியோ காருக்கு மாநகர பேருந்து டிரைவர் வழி கொடுக்கவில்லையாம் இதனால் டிரைவர் இருவருக்கும் வாய்தகராறு கைதகராறாக மாற,ஸ்கார்பியோவில் இருந்த அந்த பகுதி கவுன்சிலர் மகன் இறங்கி வீரம் காட்ட, பின்னால் வந்த மாநகர பேருந்து ஒட்டுனர் தட்டி கேட்க, அவருக்கும் உதை விழ அதன் பிறகு கவுன்சிலர் மகன் செல்லில் சிலருக்கு அழைப்பு விடுக்க.. அவர்கள் வந்த எல்லோரையும் கடுமையாக தாக்கி, பேருந்து கண்ணாடிகளையும் உடைத்து இருக்கின்றார்கள். தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநகர பேருந்து ஸ்டிரைக்…இதுதான் பத்திரிக்கை செய்தி.
நடந்தது என்ன என்று ஐயும் பொய்யும், ஆண்டவனுக்கே வெளிச்சம். ஆனால் ஞாயிறு அன்று நகரின் ஒரு இடத்தில் நடந்த தகாராறு காரணமாக பாதிக்கபட்டது பல்லாயிரக்கணக்கான பொது மக்கள். அறிவிக்கபடாத இந்த திடிர் ஸ்டிரைக்கால் பெரும் அவதிபட்டார்கள்.
பணியில் இருக்கும் போது ஓட்டுனரும் நடத்துனரும் தாக்கபட்டதை வண்மையாக கண்டித்தாலும் அந்த பிரச்சனைக்கு புகார்கொடுத்ததும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்து இருக்க வேண்டும்.
திடிர் ஸ்டிரைக் பாதிக்கபட்டவர்கள் பட்டியல்
1.பாக்கெட்டி பத்து ரூபாயுடன் கோயம்பேடு இறங்கி ஐந்து ரூபாய் டிக்கெட்டில் வீடு போய் சேர்ந்து விடலாம் என்று நினைத்தவர்கள் மனதில் மண்.
2.மிக முக்கியமாக பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் மற்றும் முதியவர்கள் பாதிக்கபட்டார்கள்
3. வேலைக்கு போகும் அனைத்து தரப்பினரும் பாதிக்கபட்டார்கள்…
4. கோயம் பேட்டில் இறங்கி பேருந்து பிடித்து வீட்டில் போய் பிரியா கக்கா போகலாம் என்று நினைத்த ஆண் பெண் இருவரும் பாதிக்கபட்டு கோயம்பேடு பப்ளிக் டாய்லட்டில் உட்கார்ந்து ஜென்மசாபம் அடைந்தனர்.
5.புதிதாய் வேலைக்கு நேர்முக தேர்வுக்கு செல்ல இருந்தவர்கள்.. திடிர் ஸ்டிரைக்கில் திக்குமுக்காடி போனார்கள்.
6.பல பேருக்கு இன்று காலை காதலை சொல்ல இருந்து இருப்பார்கள். பேருந்து ஸ்டிரைக் அந்த காதலை குழி தோன்டி புதைத்து இருக்கும்.
7. முதல் நாள் வேலைக்கு சரியான நேரத்தில் டூட்டிக்கு போக நினைத்த கொரியர் பையன் கூட, முதல் நாளே லேட்டாக போய் ஓழ் பாட்டு வாங்கி இருப்பான்.
8, பேருந்தை மட்டும் நம்பி சொற்ப்ப பணத்துடன் குழந்தைகளோடு கோயம்பேடு இறங்கிய பல குடும்பதலைவர்கள் பாதிக்கபட்டு இருப்பார்கள்.
9. அன்றாடம் காட்சிகள் பலர் அம்பத்தூரில் இருந்து சித்தாள், கொத்தனார் வேலைக்கு தாம்பரத்துக்கு சென்று வேலை பார்த்தால்தான் அடுத்த வேலைக்கு சோறு அல்லது பலதேவைகள் பூர்த்தி செய்ய நேற்றைய வேலை கோவிந்தா? கோவிந்தா?
10.பேருந்து இல்லை என்றால் ஷேர் ஆட்டோ கொள்ளையினால் பாதிபணத்தை இழந்தவர்கள் ஏராளம்…
இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
தாக்கியவர்களை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொல்கின்றார்கள். போக்குவரத்து ஊழியர்கள். அப்படி பார்த்தால் சட்டம் ஒழுங்கு சரியில்லை அல்லவா?
ஏற்கனவே சாலைமறியலால் தமிழகம் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றது.
இலவச டிவி கொடுக்கவில்லையா உடனே ரோட்டில் சாலையை மறியுங்கள்.
கழிவு நீர் உங்கள் ஏரியாவில் அகற்றபடவில்லையா? ரோட்டில் வந்து உட்காருங்கள் சாலைமறியல் செய்யுங்கள்.
ஒரு கொலை மீது உங்களுக்கு சந்தேகமா சாலைமறியல் செய்யுங்கள்.
ஒரு சிலையின் கை உடைக்கபட்டு விட்டதா? உடனே சாலைமறியல் செய்யுங்கள்.
ஒரு விபத்தில் மூவர் உயிர் இழந்து விட்டார்களா? உடனே சாலைமறியல் செய்யுங்கள்.
சென்னையில் சாலைமறியல் செய்வது ஈசி… இன்னும் கொஞ்ச நாளில் வட்ட செயளாளர் வண்டுமுருகன் வீட்டு பெண் வயசுக்கு வரவில்லை என்றால் கூட சாலைமறியல் நடக்கும் ஆச்சர்யபட தேவையில்லை. நநாம் இருப்பது சென்னை அல்லவா...
நல்லவேளை எந்திரன் படம் எல்லா இடத்திலும் போட்டு தொலைத்தார்கள். இல்லையென்றால் டிக்கெட் கிடைக்கவில்லை என்று அதற்குகூட சாலைமறியல் செய்யபட்டு இருக்கலாம்.
அண்ணாநகர் டெப்போ என்று நினைக்கின்றேன். மக்கள் படும் அவதியை பார்த்து ஒரு மாநகர பேருந்து ஓட்டுனர் பேருந்தை எடுக்க, அவரை மற்ற ஓட்டுனர்கள் உதைத்து நல்லி எலும்பை நேராக்கி இருக்கின்றார்கள். சக டிரைவரையே உதைத்த ஓட்டுனர்கள்தான் பாடி தாக்குதலுக்கு காரணமானவர்களை கைது செய்ய போராடிகொண்டு இருக்கின்றார்கள்.
பேருந்து ஓட்டுனர்களே ....தாக்குதலை கண்டித்து அடையாள உண்ணாவிரதம் இருங்கள். அப்படியும் அரசு மசியவில்லையா? அறிவித்து விட்டு ஸ்டிரைக்செய்து உங்கள் ஒற்றுமையை காட்டுங்கள் அதை விடுத்து திடிர் ஸ்டிரைக் ஏன்???
நாளை அல்லது மறுநாள் சென்னை பேருந்து இயக்கத்தை நிறுத்தி மீண்டும் சென்னையை ஸ்தம்பிக்க வைக்க வேண்டுமா? ரொம்ப சிம்பிள், வடபழனி டெப்போ டிரைவர் கண்டக்டர் இருவரை உதைத்தால் போதும். சரி தமிழ்நாடு முழுக்க பேருந்து நிறுத்தம் செய்ய வேண்டுமா? எல்லா மண்டலத்திலும் எதாவது பிரச்சனையில் டிரைவர் கண்டக்டரை உதைத்தால் தமிழ்நாடு ஸ்தம்பித்துவிடும். இன்னும் கொஞ்சம் நாளில் இது நடந்தாலும் ஆச்சர்யபடபோவதில்லை
ஏற்கனவே சென்னை மாணவர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஏழாம் பொறுத்தம் அதனால் இது போல் அடிக்கடி பிரச்சனை ஏற்படும்.காவல்துறை மவுனியாகும் .இது போலவே பேருந்து வராமல் ஸ்தம்பிக்க வைப்பார்கள்.
இந்த பிரச்சனையில் அரசு என்ன நடவடிக்கை எடுத்தது. பேருந்து இயக்காமல் பொதுமக்களை பாதிக்க செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து தகவல் ஏதும் வரவில்லை. ஒரு ஒட்டுனர் மற்றும் கண்டக்டர் பணியின் போது தாக்கபட்டால் அது குறித்து என்ன விதமான நடவடிக்கை எடுக்கபடும் என்று தெளிவாக அரசு செய்தி குறிப்பு சொல்லவில்லை.
அவர்களை பொறுத்தவரை எல்லா நாட்களை போல அதுவும் ஒருநாள்..
இது போலான சூழ்நிலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொருத்தி பார்க்க மனது சொல்கின்றது.
சென்னை மக்களே எல்லாத்துக்கும் பழகிக்கிங்க…. சென்னையில் வாழ பழக இதுவும் தெரிந்து வைத்து இருக்க வேண்டும். தினமும் காலையில் வேலைக்கு போகும் போது கருத்தாக இருபதுரூபாய் முப்பது ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு செல்வார்கள்.
தூரத்துக்கு ஏற்றது போல் பையில் 100லிருந்து 200 வரை வைத்துக்கொள்ளுங்கள். பாடியில் நடந்த பிரச்சனைக்கு தாம்பரத்தில் ஷேர் ஆட்டோகாரருக்கு மொய் வைக்க வேண்டி இருக்கும்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..
Subscribe to:
Post Comments (Atom)
Thanks 4 sharing this news. I love my India. I love my Chennai. I love my Bangalore. I will love my Singapore. (I am planning to live there).
ReplyDeleteஇதைப் போன்ற செயல்களுக்கு, தொழிற்சங்கங்ளே பொறுப்பெற்று, பதில் அளிக்க வேண்டும்! அரசாங்கம், திடீர் வேலை நிறுத்தம், செய்த அனைத்து போக்குவரத்து தொழிலாளர்களுக்கும், சட்டப்படி தண்டிக்க வேண்டும்!
ReplyDeleteAnnaaaaa.... ungalukku 100 vayasu.... today kanyakumari dist transport workers strike for same reason. See in Sun TV news...
ReplyDeleteThala,
ReplyDeleteSuper kuthareenga.......
Indha nadu velankathu....
Appadiyae totala Dismiss pannanumm..............
nice
ReplyDeletenice post
ReplyDeleteஆமா தல! அந்த முதல்வன் பட சீன் ஒண்ணே போதும் ஸ்ட்ரைக் பத்தி சொல்ல.. அத பாக்கும்போது நாங்க (யாழ்ப்பாணத்தில்) எல்லாம் அதிர்ந்து விட்டோம் இப்படியும் நடக்குமா என்று.. எப்பிடி எல்லாம் கோர்த்து விடுவாங்க!
ReplyDeleteஇதையெல்லாம் பார்க்கும் பொது பயங்கர கோவம் வருது. ஆனா என்ன பண்றது. இந்த விஷயத்தை ஷங்கர் முதல்வனில் விளக்கமாக காட்டியிருப்பார்.
ReplyDeleteஜாக்கி,
ReplyDeleteஇது போலான சூழ்நிலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொருத்தி பார்க்க மனது சொல்கின்றது.
ஜெயலலிதா ஆட்சியில் MLA மகனே வால் ஆட்ட முடியாது ,One man Army
ஆனால் இப்போது கண்டவன் எல்லாம் ரவுடி,
ஜெ முதலமைச்சராக இருந்திருந்தால் சம்பந்தப்பட்ட அத்தனைபேரின் பேண்டையும் கழற்றி தோப்புக்கரணம் போட வைத்திருப்பார்..டெஸ்மா வந்தபொழுது நான் துரைசாமி சாலை நிறுத்தத்தில் இருந்து ஒரு வாரம் மினிபஸ்ஸில் சென்றிருக்கிறேன். கடைசியில் போக்குவரத்து தொழிற்புலிகள் மண்டியிட்டு மீண்டும் வேலைக்கு திரும்பினார்கள்.இன்னொரு விஷயம் சொல்கிறேன்.. இன்னும் அந்த வழக்கு விசாரணையில் தான் இருக்கிறது. அது தான் ஜெ.
ReplyDeleteஇது போலான சூழ்நிலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொருத்தி பார்க்க மனது சொல்கின்றது.
ReplyDeleteஜெயலலிதா ஆட்சியில் MLA மகனே வால் ஆட்ட முடியாது ,One man Army
ஆனால் இப்போது கண்டவன் எல்லாம் ரவுடி
that's true.
hai jackie , super padhivu
ReplyDeleteஹாய் ஜாக்கி,
ReplyDeleteநான் உங்கள் பதிவை தவறாமல் வாசித்து வருகிறேன். உங்கள் எழுத்து சமுதாயத்தின் அவலங்களை ஹியுமர் கலந்து வெளிச்சம் போட்டு காட்டுகிறது i feel ur thoughts are very close to my heart உங்கள் எழுத்துதான் என்னை யும் எழுத தூண்டியது I have just opened my blog and I am trying KAAMINI SIRUKATHAI at first. ஆசிர்வதியுங்கள். இந்த வாய்ப்பை கொடுத்த பரிசல்காரனுக்கும் நன்றி
//
ReplyDelete1.பாக்கெட்டி பத்து ரூபாயுடன் கோயம்பேடு இறங்கி ஐந்து ரூபாய் டிக்கெட்டில் வீடு போய் சேர்ந்து விடலாம் என்று நினைத்தவர்கள் மனதில் மண்.
4. கோயம் பேட்டில் இறங்கி பேருந்து பிடித்து வீட்டில் போய் பிரியா கக்கா போகலாம் என்று நினைத்த ஆண் பெண் இருவரும் பாதிக்கபட்டு கோயம்பேடு பப்ளிக் டாய்லட்டில் உட்கார்ந்து ஜென்மசாபம் அடைந்தனர்.
சென்னையில் சாலைமறியல் செய்வது ஈசி… இன்னும் கொஞ்ச நாளில் வட்ட செயளாளர் வண்டுமுருகன் வீட்டு பெண் வயசுக்கு வரவில்லை என்றால் கூட சாலைமறியல் நடக்கும் ஆச்சர்யபட தேவையில்லை. நாம் இருப்பது சென்னை அல்லவா...
//
Jackie Jackie Jackie, Nalla think pandreenga sir. Ellaa thamizhanukkum intha sinthanai vara vendum. Excellent.
இதுக்கு காரணமான பொறுக்கி,அடாவடி ஓட்டுனர் நடத்துனர்களை தண்டிக்கவே முடியாது,ஏன்னா அவனுங்க கட்சி தொழில்சங்கத்தை சேர்ந்த மயிறு புடுங்கிகள்,டூவீலர் உள்ளவர்களுக்கு பிரச்சனையில்லை,பாவம் சொற்ப சம்பளம் வாங்கி,தினமும் பஸ்ஸில் போய் வரும் மக்களுக்கு எத்தனை நாள் இப்படி லாஸ் ஆஃப் பே ஆகியிருக்கும்,இதுக்கு காரணமானவனுக்கு டங்குவார் கிழிய,ரத்தபேதி போக,மனசே ஆறலை.
ReplyDeletehttp://www.dinamalar.com/News_Detail.asp?Id=99292
ReplyDelete//லேட்டாக போய் ஓழ் பாட்டு வாங்கி இருப்பான்//
ReplyDeleteஇப்படி ஒரு பாட்டை நான் இதுவரை எந்த படத்துலும் பார்த்ததில்லையே!
ஒரு வேளை நீலபடத்தில் இருக்குமோ!?
:)
நீங்கள் சொல்லியிருக்கும் செய்தியை கருவாகக் கொண்டு ஒரு சிறுகதை எழுதியுள்ளேன். பிடித்திருந்தால் சொல்லவும்.
ReplyDeletehttp://kathirka.blogspot.com/2010/10/blog-post_05.html
நன்றி,
கதிர்கா
//இது போலான சூழ்நிலைக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பொருத்தி பார்க்க மனது சொல்கின்றது.//
ReplyDeleteஉண்மையான ஒரு விஷயம்.
ஜாக்கி இதுக்கு இன்னொரு மருந்து இருக்கு. ஏதாவது ஒரு பிரச்சினையில கண்டக்டரையோ டிரைவரையோ அடிக்க நேர்ந்தால் சும்மா இரண்டு அடி கொடுக்க கூடாது.
இனிமேல் வாழ்க்கையிலேயே எழும்பி நடக்க முடியாத மாதிரி அடிக்கனும். அப்படி அடிச்சா அடிக்குப் பயந்து வேலை செய்வானுங்க.
எப்படியும் ஸ்டிரைக் பண்ண போறாங்க அப்படீங்கும் போது மரண அடிதான் சரி!!
மாயாவி, நீங்க எங்க இருக்கிங்க
ReplyDeleteஉங்களை முதல்ல மரண அடி அடிச்சிட்டு பிறகு மத்தவங்களை அடிக்க போவது தான் சிறந்த மருவாதையா இருக்கும்!
அட்ரஸ் ப்ளீஸ்!
ஷங்கர் படத்தைப் பொருத்தி நிஜ வாழ்க்கையின் பிரச்சினையை எப்படி அணுக முடியும்?
ReplyDeleteகவுன்சிலரின் அல்லக்கைகள் அராஜகமாக ஓட்டுநரைத் தாக்கியபோது நீங்கள் அங்கே இருந்திருந்தால் குங்ஃபூ எல்லாம் போட்டு தட்டிக்கேட்டிருப்பீர்கள்(முதல்வன் அந்நியன் ஸ்டைலில்) . அட்லீஸ்ட், மற்ற பயணிகளையும் திரட்டி ஓட்டுனருக்கு ஆதரவாக சண்டையாவது போட்டிருப்பீர்கள். ஆனால் நிஜத்தில், அங்கு மக்களில் யாரும் தட்டிக் கேட்காத போது ஆதரவாக வந்த இன்னொரு ஓட்டுனரையும் போட்டு அடித்திருக்கிறார்கள்.
பிரச்சினை என்கிற போது ஒதுங்கிக்கொள்கிற அவசர உலக நடுத்தர வர்க்கத்து பொதுஜனத்துக்கு ஸ்ட்ரைக்கால் வரும் அசவுகரியங்களைப் பற்றி கவலைப்படுகிறீர்கள். சரி இருக்கட்டும்.
ஆனால், போகிறபோக்கில் இப்படியும் சொல்லிவிட்டுப் போகிறீர்கள்.
//ஒரு கொலை மீது உங்களுக்கு சந்தேகமா சாலைமறியல் செய்யுங்கள்.
ஒரு சிலையின் கை உடைக்கபட்டு விட்டதா? உடனே சாலைமறியல் செய்யுங்கள்.//
இன்று வினவு தளத்தில் படித்த ஒரு செய்தி. http://www.vinavu.com/2010/10/05/pennadam-murder/
ஆதி திராவிடர் விடுதியில் நடந்த அநீதியைத் தட்டிக்கேட்ட சிறுவன் கொல்லப்பட்டு அதை தற்கொலையென முடிவு செய்து போலீஸ் கேசை மூடியபோது அவனது உறவினர்களும் ஊராரும் சாலையை மறிக்கின்றனர்.
அநீதிகளை வேடிக்கை பார்த்த முதல்வன்கள் / அந்நியன்கள் 'ஸ்ட்ரைக்கால் எவ்ளோ கஷ்டம்' என்பார்கள் .
-போதெம்கின்
:)) நல்ல பகிர்வு!
ReplyDeleteடெஸ்மா ஒரு நல்ல கருவி! ஓட்டு வங்கியைக் கருத்தில் கொண்டு கையிலெடுக்கத் தயங்குகிறார்கள் ஆட்சியாளர்கள்! ஈஸ்ட் ஆர் வெஸ்ட்! அம்மா ஈஸ் தி பெஸ்ட் (இந்த விஷயத்தில்)
வால், நான் இப்போ இந்தியாவில இல்லை. வரும்போது சொல்றேன்.
ReplyDeleteஇங்க வந்து பாரு உனக்கு தெரியும் அப்படீன்னு சொல்லப்போறீங்க!!
மனசாட்சியை தொட்டு சொல்லுங்க, இவனுங்க இப்படி பொது மக்களை அலையவிடும்போது கன்னத்தில ரெண்டு விடனும்போல இல்லை!!
சும்மா நினக்கிறதைவிட செய்யுங்க அப்படீன்னுதான் சொல்றேன்..........இதுல தனிப்பட்ட எந்த ஒரு கோபமும் இல்லை.
இது தொடர்பா பொது நல வழக்கு போட்டா செல்லுமா
ReplyDeleteயாரவது சொல்லுந்க
தல
ReplyDeleteசூப்பர் !!! நச் !! ஆனா ஒன்னு - இனிமேல் ஆபீஸ்ல உங்க ப்ளாக் படிக்க கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கேன் - இத படிச்சுட்டு நான் சிரிச்சத ஒரு வெள்ளைகாரன் ஒரு மாதிரியா பார்த்தான்!!!
பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் நன்றிகள்.
ReplyDeleteஆக்ஷவலா சங்கர் படத்துல எப்படி ஸ்டிரைக் நடக்குதுன்னு ஒரு உதாரணத்துக்கு சொன்னேன்.
ReplyDeleteஓடுனர்கள் உதை வாங்கும் போது தட்டி கேட்டு இருக்க வேண்டும். அடையாள உண்ணவிரத்ம் இருங்கள் அதற்கும் மசியவில்லையா? அறிவித்து விட்டு ஸ்டிரைக் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கேன்.
பணி செய்யும் போது எங்களை அடிச்சிட்டாங்க? அதுக்கு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கலை. அதனால வரும் பத்தாம் தேதி பேருந்து ஓடாதுன்னு அறிவிச்சிட்டு செய்யுங்கன்னு சொல்லறோம்... நாங்க அலர்ட்டா இருப்போம் இல்லை.
ReplyDeleteஞாயிறு நடந்த சண்டையை கூட ஏத்துக்கலாம். அதனால நடந்த திடிர் ஸ்டிரைக் கூட ஒரு நியாயம் இருந்திச்சின்னு ஒரு பேச்சுக்கு ஒத்துக்கிட்ட கூட. சின்னமலையில பார்ல நடந்த வாய்தாகறாறுக்கு சைதாபேட்டையில பேருந்தை நிறுத்தி சென்னையை முடிக்கினவங்கதானே இவுங்க...
ReplyDeleteஅதுதான் சொல்லிட்டேனே.. சட்டம் ஒழுங்கு சரியில்லைன்னு. கொலைக்கு சாலைமறியல் கூட கவன ஈர்ப்புக்கு சரி என ஓத்துக்கொள்ளலாம். பார்ல நடந்த சண்டைக்கு எல்லாம் சாலை மறியல் ஓவரில்லை.
ReplyDeleteமிக நல்ல பதிவு
ReplyDeletehttp://denimmohan.blogspot.com/
மீட்டர் ஜாம் (இது சாபிடுற ஜாம் இல்லீங்கண்ணா... மும்பைலேயும் பெங்களூரிலேயும் ஆட்டோகாரங்க தொல்லை அளவுக்கு மீறி போகுதுன்னு போது மக்களா சேர்ந்து ஆகஸ்ட் 12-ம் தேதியை ஆட்டோ புறக்கணிப்பு தினமாக அறிவிச்சிருக்காங்க) போல ஒரு நாள் மக்களா சேர்ந்து பஸ் ஜாம் (பேருந்து புறக்கணிப்பு) பண்ணனும்... நிறைய பேருக்கு வயிறு காயும்னு கூச்சல் எழும்... ஆனாலும் இது போல அரசின் திட்டங்களை புறக்கணிக்கும் போது அதனால் ஏற்படும் ஒரு நாளைய நஷ்டத்தை கணக்கிட்டாவது அரசு ஏதேனும் நல்லது செய்ய முயற்சி எடுக்கும்...
ReplyDeletemmod//உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். எனக்கு சின்னவயதில் இருந்து ஒரு பழக்கம். பிடிக்காத விஷயத்தை செய்யவும் மாட்டேன், பிடிக்காத பக்கமும் நான் போகவே மாட்டேன்...//
ReplyDeleteஅதான் சரி,
இப்பதான் பிரபல பதிவர் மாதிரி நடந்துகிறிங்க!
mmod//உங்களுக்கு இதில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். எனக்கு சின்னவயதில் இருந்து ஒரு பழக்கம். பிடிக்காத விஷயத்தை செய்யவும் மாட்டேன், பிடிக்காத பக்கமும் நான் போகவே மாட்டேன்...//
ReplyDeleteஅதான் சரி,
இப்பதான் பிரபல பதிவர் மாதிரி நடந்துகிறிங்க!
i was travelling from chengalpat to tnagar and bus stopped in tambaram my ticket money was not returned also i lost 1 hour waiting in queue to get train ticket i was so angry at that time would have slapped any MTC bus driver at that time the government didnt handle that properly
ReplyDeleteஸ்ட்ரைக்கால் பஸ் ஓடலை, பொதுமக்கள் பரிதவிப்பு....
ReplyDeleteஇதுக்கும் இடையில் புகுந்து நம்ம ஜக்கி எப்பிடியெல்லாம் நக்கல்[சிந்திக்க]பண்றார் பாருங்க.
டெஸ்மாவை எடுத்து மதுரை அண்ணன்கிட்டே கொடுக்க சொல்லுங்கப்பு....
எல்லாம் சரியாயிடும்!!!!
ஏய்....யாரங்கே.....கதவை திற ஆட்டோ வரட்டும்.....
:-) ரைட்டு..
ReplyDeleteபேருந்து டிரைவரையும் ஓட்டுனரையும//////irandum onnu thana
ReplyDeletenadathunar endru varavendum sariya
Thalai Jackikku,
ReplyDeleteIntha pathivu mikac chirantha onru. nan yennudaya vote i pathivu seidhu vitten
Amarnath
ம்ம்ம்.. என்று மாறுமோ சென்னை இதுபோல அவசியமற்ற பிரச்சனைகளிலிருந்து!
ReplyDelete