தமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க.,…
செஞ்ச உதவியையும்
நன்றியையும் மறக்காதவங்க அவுங்க ரெண்டு பேர்தான்... யாருப்பா…???
சொல்றேன் பா..
வெயிட்… அவசரப்படாதே…
பொதுவா நமக்கு உதவி செஞ்சவங்களை உடனே மறக்க
விரும்புவோம்… உண்மையாக இருக்கறவங்களையும் நம்ம சுயநலத்துக்காக பலி வாங்கி விடுவோம்…
அப்படி பட்ட உயர்வான பழக்கம் உள்ளவங்க நாம..
அப்படி பட்ட இடத்துல நன்றி மறக்காம இருக்கறது பெரிய விஷயம்
இல்லையா??? அப்படி இருக்கறவங்களை பார்க்கும் போது நமக்கு ஆச்சர்யம் ஏற்ப்படுவது இயல்பு
தானே… அவங்களை பாராட்டறமோ இல்லையோ.. இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு பொது மக்களுக்கு
சுட்டிக்காட்டுவதும் நம் கடமைதானே..
நன்றி மறக்காதவங்கன்னு சொல்லலாம் நட்புக்கு மரியாதை கொடுப்பவங்கன்னு சொல்லலாம்...இன்னும் இங்கிலிஷ்ல boundle ன்னும் தமிழ்ல பிணைப்பு அப்படின்னும் சொல்லலாம்.... நட்பாய் இருந்தால் மட்டுமே அந்த பிணைப்பு உருவாகும்... அப்படி பிணைப்போட இருப்பவர்கள் பற்றி.... எனக்கு தெரிஞ்சதை.... சொல்லறேன்...
பீடிகை எல்லாம் இல்லை
முதல்ல நான் சொல்லப்போறது… இயக்குனர்
வெங்கட்பிரபு….
ஒரே மாதிரி ஸ்டைல் மேக்கிங் திரைப்படம்தான் என்றாலும்
தனித்து இன்று வரை தெரிந்தது தெரிவது சென்னை 28 திரைப்படம்தான்… இன்றுவரை
அந்த படத்தில் நடித்த அத்தனை பேரையும் அதன் பிறகு அவர் எடுத்த சரோஜா, கோவா,
மங்காத்தா, பிரியாணி வரை ஒரு காட்சியிலாவது அவர்களை பயண்படுத்தி இருக்கின்றார்…
அவர் மட்டும் அல்ல… சென்னை
28 இல் நடித்த அத்தனை பேரும் நட்புக்கு மதிப்பு கொடுத்து இன்று வரை வெங்கட்
இயக்கும் படங்களில் நடித்து வருவது குறிப்பிடதக்கது….
25 வருடங்களுக்கு முன் வெங்கட் பிரபு பெரிய இயக்குனர்
என்று யாராவது சொல்ல இருப்பார்களேயானால் பெற்ற அப்பாவான கங்கை அமரனே சிரித்து இருப்பார்.... காரணம் வெங்கட்
ரொம்ப வெகுளியான தோற்றம்... எதை பேசும் முன்னும் பக பக என்று சிரிக்கும் குணம் என்று
ஒரு டோட்டல் இன்னோசன்ட் உருவம்... அப்போதைய
தொலைகாட்சி பேட்டிகளில் கூட வெங்கட் பேசுவதை இப்போது பார்த்தால் அதிகம் சிரித்து தேவையில்லாமல் வழிந்து வைப்பது போல இருக்கும்.
பெரிய வீட்டு கல்யாணங்களில் இசைகச்சேரிகளில் பாடி வந்த
எஸ்பி சரண், மற்றும் வெங்கட் பிரபு வாழ்வில் சமுத்ரகனி உள்ளே நுழைந்து உன்னை சரணடைந்தேன் படம்
மூலம் சினிமா ஆசையை இன்னும் கிளரிவிட ... அது கொழுந்து விட்டு எரிந்து இன்று தமிழ்
திரையுலகில் மினிமம் கேரண்ட்டி டைரக்டர் வெங்கட் பிரபு என்று வளர்வது சாதாரணம் இல்லை....
சென்னை 28 .... படம் தன் நண்பனுக்காக சரண்
வெங்கட்பிரபுவுக்காக இயக்க அந்த படம் பட்டி தொட்டி எங்கும் நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது...
எந்த இடத்தில் மாங்கா விழும் என்று கணித்த வெங்கட் இன்றுவரை குறி பார்த்து அடித்து
வருகின்றார்... ஒவ்வோரு முறை அடிக்கும் போது மாம்பழம் விழுகின்றதோ இல்லையோ.. மாங்கா
பிஞ்சாவது விழுந்து வைக்கின்றது....தற்போது
வெளியாகி இருக்கும் பிரியாணி ஆகா ஓகோ இல்லை என்றாலும் பசியை தணித்தது அவ்வளவே.
எனக்கு தெரிந்து நண்பர்கள்தான் வெங்கட்
பிரபுவின் வாழ்க்கையைதிசை மாற வைத்தார்கள்...அதுதான் நட்பு…. பெரிய ஆக்டராக
மாறியும் இன்னும் ஜெய் சின்ன வேடத்தில் பிரியாணியில் தலை காட்டி இருப்பதும், மார்க்கெட்
பெரியதாக இல்லாத விஜயலட்சுமி முதற்கொண்டு திரும்ப திரும்ப தன் திரைப்படங்களில்
வாய்ப்பு வழங்கி வருவதும் பெரிய விஷயம்..
முன்பு பாலச்சந்தர்
தனது அத்தனை படங்களிலும் பார்பார்மென்ஸ் ஆர்ட்டிஸ்ட்டுகளை அவர் விட்டுக்கொடுத்ததே
இல்லை… தொடர்ந்து வாய்ப்பு கொடுப்பார்… ஆனால் வெங்கட்
படங்களில் பெர்பாமன்ஸ் என்பதே மருந்துக்கு கூட இல்லை ஆனாலும் தொடர்ந்து வாய்ப்பு
தருவது பெரிய விஷயம்…
சென்னை 28இல் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்தவர் ஆராண்ய
காண்டம் படத்தில் நடித்தார்… மடியற ஆண்டிக்கிட்ட உனக்கு கமல் புடிக்குமா?
ரஜினி புடிக்குமான்னு கேட்கனும்ன்னு சொன்ன அந்த பையன் எங்க காணாம போனாருன்னு தெரியலை…
நல்ல பர்பாமர்…
சரி அடித்தது யாருன்னு கேட்கறிங்களா-?
அது ஒரு நிறுவனம்….
அது ஒரு டிவி சேனல்...
பொதுவா ஒரு நிறுவனம் தன்னை எப்பயுமே உயர்வா நினைச்சிக்கும்..
காசு விட்டு எரிஞ்சா ஆயிரம் காக்கை என்ற அதப்பு எல்லா நிறுவனத்துக்கும்
உண்டு… அதனால தன்னை விட யாரையும் மேல வளர ...அந்த நிறுவனமும் அதை சுத்தி இருக்கும்
அல்லக்கைகளும் அதனை விரும்புவதில்லை…. இல்லாததையும்
பொல்லாததையும் போட்டுக்கொடுத்து திறமையாளர்களை வெளியேற்றி விட்டு ஜல்ரா
அடிப்பவர்களை தன் பக்கத்தில் வைத்துக்கொண்டு பல வளரும் டிவிக்களை அழித்தவர்கள்
லிஸ்ட் தமிழ் சேனல் உலகில் மிகப்பெரியது…
ஆனாலும் ஒரு நிறுவனம்… தன்னோடு வளர்ந்தவர்களிடம் ஈகோ
காட்டாமல் தட்டிக்கொடுத்து காலையில் வாக்கிங் செல்ல வரும் ஒரு நண்பன் போல
தன்னோடு வைத்துக்கொள்வது பெரிய விஷயம்…
நன்றி மறக்காத அந்த நிறுவனம் விஜய் டிவி….
விஜய் டிவியிடம்
இரண்டு விஷயங்கள்… முக்கியமானவை
தொலைகாட்சிக்கு முகம் ரொம்ப முக்கியமான விஷயம்… அது
ஒரு மயக்கும் விஷயம்.. அழகான முகம் கொண்ட , அதே வேளையில் நன்கு அறிமுகமான
முகமாக இருந்தாலும் ...அவர்களை வைத்துக்கொண்டு எல்லா ஷோவையும் பண்ணி விடமுடியாது…அதுக்காக அழகுதான் தொலைகாட்சிக்கு முக்கியம் என்று ஒரே அடியாக சொல்லிவிடவும்
முடியாது…
அப்படி அழகுதான் முக்கியம் என்றால்...? மார்கெட்
போனதும் தாம்பரத்தில் நின்று அடுத்து பீச் ரயில் பிடித்து படிக்கட்டில்
தொற்றி செல்வது போல…. தொலைகாட்சி உலகம் வந்த பல முன்னாள் நடிகைககள் சாதித்து இருக்க
வேண்டுமே?
சிம்ரன் ஏன் தொற்றுப்போனார்…சிம்ரன் இடுப்பை
விட தொலைகாட்சி பார்வையாளர்கள்… த கேர்ள் நெக்ஸ் டோர்
டைப்பில் இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள்….
உதாரணத்துக்கு விஜய் டிவி திவ்யதர்ஷினி போல….‘
குடும்பபாங்கான தோற்றம் ரொம்ப முக்கியம் … உதாரணத்துக்கு
பெப்சி உமா திருமணம் ஆகி உடம்பு பெருத்தும் கூட, அவருக்காக
ரசிகர்கள் கூட்டம் போனிலேயே பெப்சி போல பொங்கி அடங்கியதை தமிழ்நாடே
அறியும்…
ஒரு முகத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்க பாடாத பாடு படவேண்டும்..
அப்படி பதியவைத்த முகத்தை எளிதில் மாற்றினால் டீஆர்பி படுத்துக்கொள்ளும்… குஷ்பு ஜாக்கெட்டு
போல சிம்ரன் போட்டு வந்தாலும் குஷ்பு இடத்தை நிரப்ப முடிவதில்லை என்பதுதான்
உண்மை…
ஒரு நிகழ்ச்சிக்காக ஒரு முகத்தை பதியவைத்த பின்
காசுதான் கொடுக்கிறோமே என்று டாப்டென், வந்ததும் வருவதும், திரைவிமர்சனம், திரைக்ககொண்டாட்டம்
என்று ரீட்டெய்டு டயர் போல போட்டு அடி அடி என்று காம்பயரரை படுத்தி எடுக்க கூடாது…
காபி வித்த டிடியை, புடவையை கட்டி ....பெரிய பொட்டு வச்சி… காலையில்
ஆன்மிக உலாவுல... பழனிமலை முருகனுக்கு பால்காவடி எடுப்பதால் என்ன பலாபலன்னு விடியகாத்தலே
வந்து பெரிய பொட்டோடு மூஞ்சியை காட்டிட்டு சாயங்காலம் சூப்பர் சிங்கர்
நிகழ்ச்சிக்கு ஜீன்ஸ் டி ஷர்ட்டோட டிடிவந்து நின்னா…. மக்கள்
சுத்தமா ஏத்துக்க மாட்டாங்க…ஆதனால டிடி போன்ற காம்பயரரை மார்டன்
டிரஸ்ல ஊலாவ விட்டு நல்ல நாள் அதுவுமா கபால்ன்னு புடவைல வந்து திடிர்ன்னு நின்னா… ரிமோட்ல
சேனல் மாத்தாம நின்னு தொலைக்கும்.
விஜய் டிவி வளர்த்து விட்ட எத்தனையோ பேர் பல இடங்களில்
பயணித்தாலும்… விஜய் டிவி பிராண்ட் ஆளாக மாறியபின் அவர்களை தன் வசம்
வைத்துக்கொண்டு , சென்ட்டி மென்ட்டாக ஒரு இனிய பந்தத்தை உருவாக்கி வைத்து இருப்பதில்
விஜய் டிவியின் வியாபார தந்திரமும் அடங்கி இருப்பதை மறுக்கவில்லை…
டிடி, மாகாபா, கோபிநாத்தை வேறு டிவியில் பார்ப்பதை
பார்வையாளனால் ஏற்றுக்கொள்ள முடியுமா? பலகோடி ரூபாய் செலவு செய்து ஒத்த அலைவரிசை இல்லாத
காம்பயரைரை வைத்துக்கொண்டு எப்படி ஷோ பண்ண இயலும்? ஷோவும் நல்லா வராது.. ரீடேக் போக
போக.. புரொடெக்ஷன் காஸ்ட்…. தற்போதைய பெட்ரோல் விலை போல ஏறிக்கிட்டே இருக்கும்…அதை சரியா உணர்ந்துக்கிட்ட விஜய் டிவி.. கூடுமானவரை தங்கள் டிவியை விட்டு
தாங்கள் வளர்த்த ஆட்களை பிய்த்து கொண்டு செல்வதை கூடுமானவரை தவிர்க்க பார்கின்றது என்பதுதான்
நிதர்சன உண்மை…
நன்றி என்பதை விட திறமைக்கு சம்பளம், சம்பளத்துக்கு விசுவாசம்
என்பதாய் விஜய் பிரபலங்கள் இருக்கின்றார்கள்…. அடுத்து
ரொம்ப முக்கியமான விஷயம்..சுதந்திரம்…கட்டற்ற சுதந்திரம் மட்டுமே
கலையை வளர்க்கும் என்பதையும் நன்றாகவே புரிந்து வைத்து இருக்கின்றது… விஜய்டிவி., அது இது எது...நிகழ்ச்சி நல்ல உதாரணம்... காசெப்ட் சுமார்தான்..
சிவகார்தியில இருந்து மாகாபா வரை இன்னும் அந்த டெம்ட் மெயின்டேயின் ஆகுது கண் கூடான
உண்மை.... அதே போல சேனல் புரொட்யூசர் கொடுக்கும் சுதந்திரம், அதை தலைமை கொடுக்கும்
சுதந்திரம் என்று இன்னும் இன்னும் விஜய் வளர்கின்றது...
அதே போல கோபி... இன்னை வரைக்கும் அவரை வளைக்க எத்தனையோ
நிறுவணங்கள் வளச்சி இருப்பாங்க.. இன்னைக்கு வரைக்கும் விஜய்டிவி விட்டு அவர் வரவேயில்லை...
அப்படி வரலைன்னா என்ன அர்த்தம்.. அவருக்கான ஸ்பேஸ் எந்த டிஸ்டர்ப்பும் இல்லாம இருக்குன்னு
அர்த்தம்.... மாட்டை மேச்சமா கோலை போட்டாமான்னு இருந்தாலும்... அந்த டிவியில அவர்தான்ராஜா இல்லையா???
அதே போல தன் கிட்ட வேலை பார்த்த பையன் இன்னைக்கு பெரிய ஆக்டர் மாறிட்டான்... அவனைஇன்னும் இன்னும் வளர்த்து விட்டுக்கிட்டுதான் இருக்கு விஜய்... அதுக்கு உதாரணம் சிவ கார்த்திகேயன்...
தான் உருவாக்கிய முகங்களை இழக்காது அதே வேளையில் இன்னமும் ‘ அந்த சேனலுக்காக
நன்றி பாராட்டும் காம்பயரர்கள் நன்றி மறக்காதவர்கள்தான் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்......
இப்படி நன்றி மறக்காம இருக்கறவங்களை அப்ப அப்ப எழுதி வைப்போம்.....
பிரியங்களுடன்
ஜாக்கி சேகர்
நினைப்பது அல்ல
நீ நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
100% unmai
ReplyDeleteம்.............உண்மை தான்!"அம்மா" மாதிரி இல்ல,விஜய் டீ.வீ!
ReplyDelete//அதே போல கோபி... இன்னை வரைக்கும் அவரை வளைக்க எத்தனையோ நிறுவணங்கள் வளச்சி இருப்பாங்க.. இன்னைக்கு வரைக்கும் விஜய்டிவி விட்டு அவர் வரவேயில்லை... அப்படி வரலைன்னா என்ன அர்த்தம்//.....director Antoni-thaan....visaarichchu paarunga...avarudaiya munthaiya nigashchikalin
ReplyDeleteanquor-kall enge-nnu?
Nice jackie.
ReplyDeleteNice Jackie
ReplyDeleteசென்னை 28இல் ஆம்புலன்ஸ் டிரைவராக நடித்தவர் ஆராண்ய காண்டம் படத்தில் நடித்தார்…///
ReplyDeleteதல அவர் டான்ஸ் மாஸ்டர் நல்ல பிரபலம் கூட சிவா மனசுல சக்தி எப்படியோ மாட்டிகிட்டேன் பாடல் இவர் நடனம் அமைத்தவர் தான் பாரதிராஜாவின் தாஜ்மஹால் படத்தில் கூட இவர் நடனம் அமைத்திருக்கிறார்....
amam nijamdan
ReplyDeleteஅருமையான பதிவு! நீங்கள் சொல்லும் விசயங்கள் நிதர்சனமானது! சிறப்பான பதிவு! நன்றி!
ReplyDeleteதாங்கள் எழுதியது போல விஜய் டிவி ஒரு அற்புதம்தான்.
ReplyDeleteகலக்க போவது யாரு நிகழ்ச்சியை இயக்கிய ராஜகுமாரன் பணத்துக்காக தனது பரிவாரங்களோடு சன் டிவி சென்றார்.அங்கு அவர்களுடைய உழைப்பை உருஞ்சிவிட்டு வெளியே துரத்திவிட்டது்.
இன்று அவர்கள் இருக்குமிடம் இல்லாமல் போய்விட்டார்கள்
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
santhanathai vetuvitirgale ;)
ReplyDeletesanthanathai vetuvitergale ;)
ReplyDeleteசரியாக சொன்னீர்கள் ..... .. . ..
ReplyDeleteedhukku ippo intha sombu :-)
ReplyDeletejackey sir dog tooth movie review pannunga plz
ReplyDeletejackey sir dog tooth movie review pannunga
ReplyDelete100% true Jackie sir... Please write often like this post.
ReplyDelete