நந்தலாலா பார்க்கவேண்டியபடமா?



மிஷ்கின் அப்படி பேசி இருக்க கூடாது. இப்போதைய உதவி இயக்குனர்கள்  ஏதுவும் தெரியாமல் இருக்கின்றார்கள்.அவர்களுக்கு வாசிப்பனுபவம் மிகவும் குறைவு அனுபவம் இன்றி இருக்கின்றார்கள் என்பது போல பேசிவிட்டு ஜப்பான் படத்தை அப்படியே காப்பி அடித்தது எந்தவகையில் நியாயம் என்று இதுக்கு எதுக்கு உதவி இயக்குனர்கள் அதிகம் படிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும்?? இதுக்கு மிஷ்கின் அதிகம் பார்க்க வேண்டும் என்று அல்லவா சொல்லி இருக்க வேண்டும்... என்று வடபழனி பக்க பஸ் டிப்போ அருகில் உள்ள டீக்கடைகள் அப்படித்தான் பேசிக்கொண்டு இருக்கின்றன.


ஒரு அராஜக சென்னை ஹவுஸ் ஓனர்...



சொந்த வீடு வாங்கி விட்டாலும் நண்பர்களுக்கு உறவுகளுக்கு வீடு தேடுவது எனக்கு வாடிக்கையாகிவிட்டது. காரணம் எனது அத்தை வீடு திண்டிவனம் அவர்களது பிள்ளைகள் இரண்டு பேருக்கு சென்னையில் தங்க வீடு பார்க்க சொன்னார்கள். சென்னைக்கு வந்து சுற்றி வீடு தேட முடியாது என்பதால் என்னிடத்தில் சொன்னார்கள்....அதில் ஒரு கொம்பு முளைத்த அவுஸ் ஒனர் பற்றிய பகிர்தல் கிழே...எப்படி எல்லாம் இருக்கின்றார்கள் பார்....என்பதற்க்காக...இந்த பதிவு


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/28•11•2010)

ஆல்பம்..
இரண்டு வாரங்கள் அப்படி இப்படி என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடக்கவில்லை...பல கோடி மக்கள் வரிப்பணம் நட்டம்..எதிர்கட்சிகள் நாடளுமன்ற கூட்டுக்குழு விசாரனை கேட்கின்றது.. ஆளும் கட்சி விடாப்பிடியாகபொதுகணக்கு குழு விசாரனையே போதுமானது என்கின்றது.


மந்திரப்புன்னகை தமிழ் சினிமாவில் ராவான திரைப்படம்,



ஏம்பா ஆங்கில படங்கள் எழுதிகிட்டு இருக்கே... புது படம் ரிலிஸ் ஆகி இருக்கு எழுதலையா என்று வெள்ளிக்கிழமை நண்பர் கேட்ட  போது, இப்ப  கைல துட்டு இல்லை பட் என் சாய்ஸ் மந்திரபுன்னகை என்று ஒரு சில பதிவுகளுக்கு முன் சொல்லி வைத்து இருந்தேன். காரணம் கரு பழனியப்பன்... அவரின் வசனங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(24•11•2010)

ஆல்பம்..
ஆரம்பிச்சிட்டானுங்கப்பா அடுத்தது அடிச்சிக்குனு சாவறதுக்கு..தென்கொரியாமீது வடகொரியா ராக்கெட் உட்டு சண்டையை வம்புக்கு இழுத்து விட்டு இருக்குது.. இனி ஆங்கில செய்தி சேனல்களில் இரவு நேரத்தில் பறக்கு ஏவுகனைகளை விடாமல் காட்டிக்கொண்டு இருப்பார்கள்.
====================


சென்னை பதிவர்களுக்கு பிரிவியூ ஷோ. இயக்குனர் கருபழனியப்பனுக்கு என் நன்றிகள்..

பிளாக் ஊடகம் மிக பெரிய அளவில் ரீச் ஆகி இருப்பது  என்பது உலகம் ஒத்துக்கொண்ட உண்மை. அதற்கு இப்போது தமிழ்பட இயக்குனரால் அங்கீகாரமும் கிடைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி...


(BURNING BRIGHT-2009) உங்கள் வீட்டுக்கு எலி வரலாம் ஆனால் புலி வந்தால்???



 உங்கள் வீட்டில் நீங்கள் பயப்படும் பூச்சி  எது??? பல்லி , கரப்பான் பூச்சி, சித்தெறும்பு, சரி.... இத எல்லாம் அப்பார்ட்மென்ட் வாசிகளுக்கு.... குடிசைவாசிகளுக்கு மேலுள்ள பூச்சிகள் அல்லாமல் எலி,பூனை, நாய், பாம்பு,கீரி,உடும்பு போன்றவைகளை பார்த்து  பயப்படலாம்... மேலுள்ளவைகளை பார்த்து சிலர்மட்டும் பயம் கொள்ளலாம்..


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/21•11•2010)

ஆல்பம்..
ஆனந்த விகடனில் முதன் முறையாக எனது பெயர் தாங்கிய செய்தி வந்து இருக்கின்றது..டுவிட்டரில் ஸ்பெக்ட்ரம் பற்றி எழுதிய கமென்ட்டை பப்ளிஷ் செய்து இருக்கின்றார்கள்.தகவலை முதன் முதலில் பகிர்ந்துகொண்ட பட்டர்பிளை சூர்யாவுக்கும், அண்ணன் உண்மைதமிழனுக்கு மற்றும் தகவலை பார்த்து குறுஞ்செய்தியில் தகவல் பறிமாற்றம் செய்த நண்பர்களுக்கும் என் நன்றிகள்.
===============


the Consequences of Love (உலகசினிமா/இத்தாலி)எட்டு வருடமாய் ஒரே ஒட்டல் அறையில் குப்பை கொட்டும் பிசினஸ்மேன்.





சமீபத்தில் மியான்மரில் புரட்சி தலைவி(இவுங்க மெய்யாலுமே புரட்சி பண்ணி இருக்காங்க)சூகி 21 வருடம் வீட்டு காவலில் இருந்து விட்டு சமீபத்தில் விடுதலை செய்தது நேற்றைய பர்மிய அரசு. 21 வருடங்கள் அதே டைனிங், அதே கிச்சன், அதே டாய்லட் என வெறுத்து போய் விடும்... பர்மிய ராணுவம் குற்றவாளியாக  அந்த பர்மாவின் புரட்சிதலைவியை  21 வருடங்கள் வீட்டு சிறையில் வைத்து இருந்து சில தினங்களுக்கு முன் அவரை விடுதலை செய்தது.


Halfaouine: Boy of the Terraces18+ (உலக சினிமா/அரேபியா) 11வயது சிறுவனின் மாறுபட்ட பார்வை.


உங்களுக்கு காமம் இச்சை பற்றிய புரிதல் எப்போது ஏற்பட்டது என்ற கேள்வியை, தமிழ்நாட்டில் கேட்டால் ஆபாசத்தை பேசிகின்றோம் என்று சொல்லிவிடுவார்கள்..ஆனால் வதவதவென பெற்றுக்கொள்வோம். தெளிவின்மைதான்.நிற்க.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(17•11•2010)

ஆல்பம்..

சீனாவில் தீவிபத்து 50க்கு மேற்பட்டவர்கள் பலி என்று முதல் நாள் செய்தி அடுத்த நாள் இந்தியாவில் டெல்லியில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து அறுபதுக்கு மேற்பட்டவர்கள் பலி.. என்ற செய்தி. அனுமதி இல்லாமல் ஐந்தாவது  மாடி எழுப்பும் போது இந்த துயரம் நிகழ்ந்து இருக்கின்றது..வழக்கம் போல இறந்தவர்குடும்பங்களுக்கு 2 லட்சம் வழங்கபட்டது.


அகரம் ஆரம்பித்த நடிகர் சூர்யாவுக்கும், விஜய்டிவிக்கும் நன்றிகள்.


தாம் வாழும் சமுகத்துக்கு எவன் ஒருவன் நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்கின்றானோ அவனே நல்ல மனிதன் என்பது என் கருத்து...

ஒரு பேட்டியில் பிரபல நடிகர்  விக்ரம் சொல்லி இருப்பார். ஐம்பது லட்சம் வரைதான் அது பணம் அதுக்கு மேல இருந்தா அது பேப்பர்  என்று சொல்லி இருக்கின்றார்.


பிளாட்பாரம் என்பது சடங்கு…. சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ...


பல கோடி  ருபாய் செலவு செய்து சென்னையில் ரோடு ஓரத்தில் பிளாட்பார்ம் கட்டினால் அது ஒரு கண்காட்சிக்காக இருப்பது போலவே இருக்கின்றது…


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/14•11•2010)

ஆல்பம்.
ராசா ராஜினாமா குறித்து இந்தியாவே எதிர்பார்த்து காத்து இருக்கின்றது..மத்திய அரசில் அங்கம் வகித்த முக்கிய அமைச்சர் தப்பு செய்து இருக்கின்றார்... இது பிரதமருக்கு தெரியாமல் நடந்து இருக்க வாய்பே இல்லை...ஜெ சொல்வது என்னவென்றால் ராசா ராஜினாமா செய்யவைத்தால் தான் மத்திய அரசுக்கு ஆதரவு தருவதாக சொல்லி இருக்கின்றார்..அப்போது ஜெ சொல்ல வரும் சேதி என்ன தெரியுமா? தப்பு செய்தாலும் உங்களோடு நான் குப்பை கொட்டதயார் என்பதே....வௌங்கிடும்....


மைனா..குறைந்தசெலவில் நிறைந்த வருமானம்.


மைனா பார்க்கவேண்டிய பட்டியலில் இருந்தது ஆனால் அது பார்த்தே தீர வேண்டிய பட்டியலில் இந்த படம் மாறும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை...


மிக்க நன்றி எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களே....



சென்னை வாழ்க்கையில் நண்பர்கள் எனக்கு மிகவும் குறைவு..ஆனால் இந்த இணையம் மூலம் எனக்கு கிடைந்த நண்பர்கள் மிகவும் அதிகம்..அப்படி சென்னையில்  இணையத்தில் எழுத வந்த இரண்டரை வருடத்தில் ஒரு சிலரால் நல்ல விதமாகவோ, அல்லது நக்கலாகவோ, கவனிக்கபட்டால் அது என்னை பொறுத்தவரை மகிழ்ச்சியான விஷயம்தான்..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(10•11•2010)

ஆல்பம்..

11வயது சிறுமியை கடத்தி கற்பழித்து அந்த சிறுமியின் தம்பியையும்  கொன்றவனை நேற்று காலையில் கோவை போலிஸ் பரலோகம் அனுப்பினார்கள்...அதில் அகமகிழ்ந்தது தமிழகம். ஒரு மாஸ் எழுச்சி என்பது எப்போதாவதுதான் நிகழும்...இறந்து போன சிறுவன் சிறுமி இறுதி ஊர்வலத்துக்கு 5000பேருக்கு மேல் கலந்து கொண்டனர்....கோவை முழுவதும் பிளக்ஸ் வைத்து அஞ்சலியை மக்கள் தெரிவித்தனர்... அரசு இந்த சென்சிட்டிவ் மேட்டருக்கு எதாவது செய்ய அப்போதே உத்தேசித்தது..உடனே சென்னையில் ஒரு கடத்தல் சம்பவம்.. அதற்கு பணம் கொடுத்து அந்த பையனை உயிருடன் மீட்டது....பிறகு குற்றவாளிகளை கைது செய்தது.. அதன் பிறகும் குழந்தை கடத்தல்கள் தொடர சட்டென ஒரு பயம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்க்காக, இந்த என்கவுன்டர் நிகழ்த்த பட்டு இருக்கின்றது என்பது என் அனுமானம்...


”வ“ குவாட்டர் கட்டிங்...தமிழ் சினிமாவில் ஒரு புது முயற்சி...


படத்தின் விளம்பரங்கள், அந்த படத்தின் டிரைலர்கள் எல்லாமே அந்த படத்தை  ஒரு காமெடி படம் என்று சொல்லிக்கொண்டு இருக்கின்றன... ஆனால் படத்தை பற்றிய ரிசல்ட் என்று பார்க்கும் போது  சிலருக்கு இந்த படம் பிடித்து இருக்கின்றது.. பலருக்கு இந்த படம் பிடிக்கவில்லை. நான் சிலர் லிஸ்ட்டில் இருக்கின்றேன்...

எனக்கு இந்த இயக்குனர்கள் இயக்கிய ஓரம்போ படம் எனக்கு ரொம்ப பிடித்த படம்... படத்தில் லோக்கல் டயலாக் அதிகமாக வைப்பவர்கள்..மெல்லிய நகைச்சுவை இழையோடும்...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/07•11•2010)

ஆல்பம்..
சென்னையில் பத்தாம் எண்  எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டு இருக்கின்றது… ஆனாலும் புயல் வலுவிழந்து விட்டது. இது பெரிய புயல் எச்சரிக்கை எண் ஆகும்… பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபட்டு இருக்கின்றது…


தீபாவளி - 2010

 

போன வருட அமெரிக்க பொருளாதாரம் போல் இந்த தீபாவளி என்னை சந்தித்த காரணத்தினால் இந்த தீபாவளி மீது பெரிய பற்று எனக்கு வரவில்லை. தீபாவளிக்கு முதல்நாள் இரவு நானும் மனைவியும் போய் கூட்டமில்லாத திநகரில் உடுப்புகள் வாங்கினோம்.


எண்ணெய்சட்டி..

அம்மா
தீபாவளிக்கு முறுக்குசுடும் நேரம்.
என்வீட்டை பொறுத்தவரை
நள்ளிரவுநேரம்தான்....


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(3•11•2010)

ஆல்பம்...

பேப்பரை திறந்தால், செய்தி சேனலை பார்த்தால், கடத்தல் சம்பவங்கள் பற்றிய செய்திகள் அதிகரித்துவிட்டன.. வழக்கம் போல சினிமா பார்த்துவிட்டு இது  போல சம்பவங்கள் நடப்பதாக சிலர் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்..


மிக்க நன்றி புதியதலைமுறை மற்றும் லக்கி(எ)யுவகிருஷ்ணா....

 மிகச்சரியாக இந்த வலைதளத்தை 2008ம் வருடம், நான்காம் மாதத்தில் ஆரம்பித்தேன். இப்போது சரியாக கணக்கு செய்கையில் 2வருடம் ஆறுமாதங்கள் ஆகின்றது....


பண்டிகை கால அவசரம்... ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை....

சென்னைவாசிகள் என்று பார்த்தால் குறைந்த அளவு மக்களே இருப்பார்கள்.. ஆனால் தென்மாவட்டத்து மக்கள்தான் சென்னையை ஆக்கிரமித்து இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.


வேண்டாம் அந்த ஈசிஆர் சாலை....


முதன் முதலாக சென்னையில் இருந்து புதுவைக்கு ஈசிஆரில் சாலை அமைத்து அதனை விரிவாக்கிய போது... சென்னையில் மட்டும் அல்ல தமிழகத்தில் பலர் பார்த்து வியந்தனர்..  அந்த சாலை உலகதரமான சாலை....ஒரு சாலை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமானசாலை அந்த சாலை...


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner