(பாகம்/2)கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை...தண்ணீர் பாட்டில்...


சரியாக பதினைந்து வருடங்களுக்கு முன் காசு கொடுத்து தண்ணீர் வாங்கிகுடித்தேன் என்ற சொன்னால் வாயால் மட்டும் அல்ல வேறு ஏதாவது ஆலும் சிரிப்பார்கள். பதினைந்து வருடங்களுக்கு முன்பு கூட வாட்டர் பாக்கெட் வாட்டர் பாட்டில் போன்றவை இருந்தது ஆனால் பெரும்பாலான மக்களால் அறியப்பட்டு பயண்படுத்தபட்டது பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்தான்.


சென்னைக்கு என்று பெரிய கல்சர் என்று எதுவும் கிடையாது. அது பிழைப்பு தேடி வந்த அனைத்து சமுக மக்களின் கலாச்சாரத்தின் சங்கமம். அனால் தென்மாவட்டத்தில் நீங்கள் எந்த வீட்டிக்கு போனாலும் வந்து இருக்கும் விருந்தாளிக்கு வீட்டு பெண்கள் முதலில் செம்பில் தண்ணீர் கொடுத்த பிறகு அப்புறம்தான் நலம் விசாரிப்பார்கள்.

அப்படி நலம் விசாரிக்க கொடுக்கப்பட்ட தண்ணீர் இப்போது தமிழகம் எங்கும் பாக்கெட்டுகளில் அடைத்து ஒன்றரை ரூபாய்க்கு விற்க்கப்படு்கின்றது. தண்ணீர் வேண்டும் என்று கேட்டால் கேன் வாட்டர் கொடுக்கப்டுக்கின்றது.

சென்னையில் நடுத்தர வீடுகள் எல்லாம் கேன் வாட்டர் வாங்கி குடிக்கும் பழக்கத்துக்கு எப்போதோ வந்து விட்டார்கள். சமையலுக்கு மட்டும் கார்ப்ரேஷன் வாட்டர் அல்லது பில்டர் வாட்டர், வீட்டு உறுப்பினர்கள் குடிக்க கேன் வாட்டர்.

எப்படியோ பொதுமக்களை காசு கொடுத்த தண்ணீர் வாங்க வைத்த உத்தியில் பண்ணாட்டு நிறுவணங்கள் வெற்றி பெற்றுவிட்டன என்பதே நிஜம்.

எப்பாடு பட்டாவது நல்ல குடிநீர், நல்ல சாலைகள் வழங்குவதுதான் எந்த அரசாக இருந்தாலும் அதன் கடமை. அனால் நம் ஊரில் கார்ப்ரேஷன் தண்ணி குடிச்சா வாந்தி பேதி வந்திரும், சில நேரங்களில் குடிநீர் குழாயில் சாக்கடை கலந்து விடுகின்றது, அந்த நீரை குடித்ததால் வாந்தி பேதி வரும். அப்புறம் எந்த மக்கள் சுத்தம் இல்லாத கார்ர்ரேஷன் குழாய் தண்ணீர் குடிப்பார்கள்?.

இன்னமும் அதே கார்ப்பரேஷன் தண்ணீர் குடித்து, பிள்ளையை கார்ப்பரேஷன் பள்ளியில் படிக்க வைத்து உடம்புக்கு நோவு என்றால் கார்ப்பரேஷன் ஆஸ்பத்திரியில் த/அ மாத்திரை வாங்கி சாப்பிட்டு உயிர் வாழும் வெள்ளந்தி மக்கள் இன்றும் நிறைய பேர் இருக்கின்றார்கள்.

அவர்களை பற்றி எப்போதாவது வாட்ட்ர்பாட்டிலில் தாகம் தீர்க்கும் மேல்தட்டு சமுகம் நினைத்து பார்த்து இருக்குமா? அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்த சொல்லி கேட்கவில்லை, அவர்கள் வாழ்வு ஆதாரமான குழர்ய்களில் நல்ல குடிநீர் கிடைக்க, அதாவது கழிவு நீர் கலக்காத குடிநீர் எப்போதும் கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.

பொதுவாக வாட்டர் பாக்கெட் பயன்பாடு என்பது சாமான்ய மக்களும் பயண்படுத்தும் பொருளாக மாறி விட்டது. என்பதே நெருடும் உண்மை. இது இந்த பதினைந்து வருடகாலத்தில் புதிதாய் வந்த மாற்றம்.

அதைவிட முக்கியம் முன்பெல்லாம் பாருக்கு போனால் சரக்கு கலப்பதே தெரியாது. குடிமகன்களின் அலப்பரை மட்டுமே காதில்கேட்கும் இப்போதெல்லாம் சரக்கு ஒரு கட்டிங் வாங்கி கூடவே ஒரு வாட்டர் பாக்கெட் வாங்கி அதன் முனையை வாயால் கடித்து துப்பி வாங்கிய கட்டிங் கிளாசில் சொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் என்று சரக்கு கலக்கும் சத்தம், கால ஓட்டத்தில் பதிதாய் வந்தது என்பேன்.


அன்புடன்/ஜாக்கிசேகர்


குறிப்பு / எழுதியது படித்தால் மட்டும் போதாது ஓட்டு போட்டு என்னை உற்சாகபடுத்த மறவாதீர்

நீங்கள் வேலை செய்த நிறுவனத்தை எப்போதாவது நேசித்து இருக்கின்றீர்களா?

நான் நேசித்து இருக்கிறேன், நீங்கள் இதுவரை எந்த வேலையெல்லாம் செய்து இருக்கின்றீர்கள். சிலருக்கு படித்து முடித்து குடும்ப நண்பர் சிபாரிசில் ஒரு தனியார் கம்பெனிக்கு வேலைக்கு போய் அந்த வேலையில் காலம் முழுவதும் உழல்வது ஒரு வகை...இன்னொன்று அரசாங்க வேலைக்கு போய் காலம் முழுவதும் உழல்வது ஒரு வகை. அல்லது அப்பா வாங்கி கொடுத்த அல்லது வைத்துக்கொடுத்த கடையில் மூளையை உபயோகித்து முன்னேறுவது ஒரு வகை.
அல்லது அப்பா வைத்து இருந்த தொழிலில் அளுங்காமல் குலுங்காமல் வந்து சீட்டில் உட்கார்ந்து முகேஷ் அம்பானி டைரக்டர் என்று போர்டு போட்டுக்கொள்வது ஒரு வகை.

படிப்பும் இல்லை, சொந்த பந்தங்கள் உதவ ஆள் இல்லை, கோபம் மூக்குமேல் வரும்,அப்பாவுடன் உள்ள பாசம் என்பது அக்னி நட்சத்திரம் கார்த்திக்,பிரபு போல் என்றால் எப்படி முன்னேறுவது...

ஒரு காலத்தில் நான் எப்படி முன்னேற போகிறேன் என்று யோசித்து மண்டை காய்ந்து இருக்கின்றேன். ஆனால் இந்த உலகில் தனிதன்மையாய் வாழ வேண்டும் பத்து பேர் இருக்கும் கூட்டத்தில் அதோ ஜாக்கி என்ற அடையாளப்பட வேண்டும் என்ற வெறி என்னுள் இருந்தது

நான் இதுவரை வேலை செய்த இடங்கள்...

1.நகை கடையில் கவுண்டர் சேல்ஸ்..
2.நகை டிசைன் வெட்ட வைர ஊசி செய்யும் வேலை.
3.வெல்டிங் கடையில் வெல்டர் வேலை
4. சித்தாள் வேலை
5.செருப்புக்கடையில் வேலை.
6.வீடியோ லைப்பேரரியில் வேலை
7.கடலூர் கமலம் தியேட்டரில் டிக்கெட் கொடுக்கும் வேலை.
8.ஒரு வருடம் கடலூரில் ஆட்டோ ஓட்டுநர்.
9.பறக்கும் ரயில் பாதையில் கம்பி பிட்டிங்வேலை
10. பறக்கும் ரயில் பைலிங் ஒர்க்.
11.சென்னை கடற்கரை காந்தி சிலை பின் உள்ள சாகர் ஓட்டலில் சர்வர் வேலை
12.எல்ஐசி எதிரில் செக்யூரிட்டி வேலை.
13.மவுன்ட் ரோடு நிர்மலாதக்ஷன் ஓட்டல் அருகில் பீடா கடையில் வேலை.
14,தேவி, அலங்கார் தீயேட்டர்களில் பிளாக்கில் டிக்கெட் விற்க்கும் வேலை.
15.லூனா டிரைவராக ஒரு வருடம்.
16.மாருதி காருக்கு டிரைவராக...சைடில் வால் பேப்பர் ஒட்டுவது..
17. பாண்டி, கடலூர் பகுதிகளில் ஐந்து வீடியோக்கடையில் கேமரா மேனாக 4 வருடங்கள்..
18.சென்னை வடபழனி கிரீன் லேண்ட் வாட்டர் சர் வீஸ் கடையில் சில நாட்கள்.
19. சென்ளை சரவண வீடடியோ சென்டர் இரண்டு வருடங்கள்
20கேமராமேன் டீஎஸ் விநாயகம் கேமாராவில் கேமரா அசிஸ்டென்டாக ஒன்றரை வருடம்
21,சென்னை எஸ்எஸ் மீடியாவில் ஒரு வருடம்.
22.கேமராமேன் பால முரளியிடம் அசிஸ்டென்ட் கேமராமேனாக இரண்டு வருடங்கள்...
23.எப்டிடிவி எனும் நிறுவனத்தில் கேமரா மேனாக வேலை.
24. சைடில் திருமணத்துக்கு போட்டோ எடுப்பது ,
25பூக்கடையில் வேலை
25.நான் ஒரு குறும்பட இயக்குநர் முதல்படம் துளிர் மாநில அளவில் நடந்த போட்டியில் மூன்றாம் பரிசு பெற்றது. என்று இப்படியாக நம் கதை ஓடியது விடுபட்டவை நிறைய......
இப்படியாகத்தான் என் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருந்தது, எந்த இடத்திலும் மிக நீண்ட நாட்கள் நீடித்தது இல்லை.
காரணம் நான் செய்யும் வேலையை ரசித்து செய்வேன்,நான் வேலை செய்யும் நிறுவனத்தை நேசிக்க மாட்டேன் அது நம் வளர்ச்சியை தடை படுத்தும் என்ற எங்கோ படித்தஞாபகம். அப்படி இருந்த நான் நான்கு வருடம் ஒரு கல்லூரியை நேசித்த கதை இங்கே...

நான் ஜீசஸ் கால்சில் பிரிலான்சராக கேமரமேன் வேலை செய்த போது சென்னை இந்துஸ்தான் கல்லூரியில் (கேளம்பாக்கம்) எலக்ட்ரானிக் மீடியா வீஷுவல் கம்யுனி்கேஷன் பசங்களுக்கு கேமரா பற்றி பிராக்டிக்கல் வகுப்பு எடுக்க ரெகுலராக வர வேண்டும், வர முடியுமா என்றார்கள்? நான் வேலையில் சேர்ந்தேன்,

நான் கேமரா மேனாக இருந்ததால் நேற்று ஐதராபாத்தி்ல் இருந்தால் இன்று மதுரையில் இருப்பேன். அதற்க்கு அடுத்த நாள் பெங்களுர் என்ற ஊர் சுற்றி வாழ்க்கை வாழ்ந்தவனை காலை 9 மணி மாலை4 மணி என்ற வேலையில் முதலில் செட்டாக மிகவும் சிரமப்பட்டேன்.


பத்தாவது படித்து விட்டு,காலேஜ் வாழ்க்கையை பற்றி சினிமாவில் மட்டுமே ரசித்த எனக்கு காலேஜ் வாழ்க்கை மிகுந்த சுவாரஸ்யத்தை தந்தது. எனக்கு அப்போதே எட்டாயிரம் சம்பளம் தந்தார்கள். இதற்க்கு முன் நான் செய்த வேலைகக்கும் கல்லூரி வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடு இருந்தது.

இதுவரை கோத்தா கொம்மா என்று பேசி பழகிவிட்டு கல்லூரியில் சார் போட்டு ஆரம்பத்தில் பேச ரொம்ப சிரமமாக இருந்தது. என் இயற்பெயர் தனசேகரன்.

நான் இருப்பது தெரியாமல் தனசேகரன் சார் எங்கே என்று கேட்க, தனசேகரன் சார் மீடியா டிப்பார்ட்மென்டில் இருப்பதாக சொல்ல எனக்கு மயக்கமே வந்து விட்டது. என்னை சார் என்று அழைத்த போது காலடியில் பூமி நழுவவது போல் ஒரு பிரமை.

நான் வாத்தியாராக போய் கிளாஸ் எடுத்தது, மாணவர்கள் என் மேல் கொண்ட பாசம் , மாணவிகள் என்மேல்காட்டிய தனிப்பட்ட பாசங்கள், மதிக்கத்தக்க நபராகவும் கலகலகப்பான மனிதராக அந்த கல்லூரி வளாகத்தில அறியப்பட்டது, கம்யூட்டர் பற்றிய சிறிய அறிவு, கொஞ்சம் ஆங்கில அறிவு, என்னோடு பழகிய லெக்சரர்கள் என்று, நான் இந்துஸ்தான் கல்லூரியில் நிறைய கற்றக்கொண்டு இருக்கின்றேன்.நிறைய சோகங்கள், நிறைய மகிழ்ச்சிகள், நிறைய மாணவ மாணவர்களின் வெற்றி தோல்விக்ள், காதலில் விழுந்து எழுந்தவர்கள் என்ற அதை பற்றி எழுத ஒரு ஜென்மம் போதாது..

பத்தாவது படித்து விட்டு இந்த கல்லூரிக்கு வேலைக்கு போனேன். எல்லோரும் படித்தவர்கள் என்பதால் நான் மட்டும் பத்தாவது . அதாவது பத்தாவது படித்து விட்டு எப்படி பத்தாயிரம் சம்பளம் வாங்கலாம் என்ற மனக்கேள்வி என்னை சுற்றி சிலரிடம் இருக்க செய்தது.அதனால் நான் அஞ்சல் வழியில் பிஏ சோசியாலஜீ படித்தேன்,அதன் பிறகு இப்போது எம்ஏ மாஸ்கம்யுனிக்கேஷன் ஜெர்னலிசம் முதல் வருடம் பாஸ் செய்து இரண்டாம் வருட தேர்வு எழுத காத்து இருக்கின்றேன், நான் செகன்ட் இயர் பசங்களுக்கு டியுட்டராக வேறு இருந்தேன்.
கல்லூரி காலங்கள் வசந்தமானவை,பசங்களோடு பழகி என்னை இளமையானவனாக உற்சாகப்படுத்தியது. நான் பல விஷயங்களை என் மாணவ செல்வங்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இருக்கின்றேன், எனக்கு தெரிந்ததை அவர்களுக்கு கற்றுக்கொடுத்து இருக்கி்றேன். ஆட்டோ ஓட்டும் போது காதலித்த பெண்ணை பத்துவருடங்களுக்கு பிறகு வாத்தியாராக மாறி இந்த கல்லூரியில் வேலை செய்த போது தான் மணந்தேன். திருமணம் முடிந்து ஆறுமாதங்கள் ஆகின்றது.

என் மேல் பாசம் கொண்ட மனிதர்கள் எத்தனை எத்தனை பேர். ஒருவர் பேர் எழுதினாலும் மற்றவர் வருத்தப்டுவர் அதனால் தவிர்க்கின்றேன். எவ்வளவோ இடத்தில் வேலை செய்தாலும் இந்த கல்லூரி வேலையை என்னால் மறக்க முடியாது...

லாஸ்ட் பன்ச்.இன்றிலிருந்து மிகச்ரியாக 23 நாளுக்கு முன் கல்லூரிக்கும் எனக்கும் உள்ள தொடர்பை துண்டித்துக்கொண்டேன். என் வேலையை ராஜீனாமா செய்து விட்டேன் .காரணம் ரொம்ப தூரம். பஸ் பயணத்தில் பாதி நேரம் போய்விடுகின்றது. இப்போது எதாவது சேனலில் கேமரா மேன் வேலை தேடிக்கொண்டு இருக்கன்றேன்.

எல்லோரும் சொன்னார்கள் எப்போதும் எதாவது வேலை தேடிக்கொண்டுதான் அந்த வேலையை விட வேண்டும் என்று நான் மேலே எவ்வளவு வேலை செய்து இருக்கின்றேன் என்று உங்களுக்கு தெரியும். நான் எப்போதும் ஒரு வேலை தேடி அது கிடைத்ததும் செய்த வேலைவிட்டது இல்லை.
ஏன் என்றால் நான் செய்யும் வேலையை நேசிக்கின்றேன் நிறுவனத்தை அல்ல..

அன்புடன்/ஜாக்கிசேகர்


குறிப்பு)
உங்களுக்கு நான் எழுதியது பிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஓட்டு போடவும் பின்னுட்டம் இடவும் மறவாதீர்

ஆனந்த விகடன் குழுமத்தால் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவம்...


சில அனுபவங்கள் கோடி கோடியாய் கொட்டிக்கொடு்த்தாலும் எவருக்கும் கிடைக்காது. அது போன்ற அனுபவம் இது.
இயக்குநர் பாக்கியராஜ் அடிக்கடி சொல்லுவார் சந்தோஷத்துலேயே பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்டுத்தி் பாக்குறதுதான். அப்படி ஒரு ஏழைக்குடும்பம் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த கதையை இப்போது பார்ப்போம்.

பத்து வருடங்களுக்கு முன்பு என்று மிகச்சரியாக ஆரம்பிக்காவிட்டாலும் ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு விகடன் டெலிவிஸ்டாஸ் பேரைச்சொல்லவா என்ற நெடுந்தொடர் தயாரித்து அது சன் டிவியில் சக்கை போடு போட்டது, உங்கள் எல்லோருக்கும் நினைவில் இருக்கும் என்று எண்ணுகிறேன், அது ஒரு திகில் தொடர். அந்த தொடரை இயக்கியது ஒளிப்பதிவாளர் ps. தரன் அவர்கள். நாசர் படத்தின் ஆஸ்தான கேமாராமேன்.


தமிழகத்தின் எல்லா இடத்திலும் சின்ன சின்ன பசங்கள் எல்லாம் அந்த தொடரில் வரும் டயலாக்கை பேசி காட்டுவார்கள். “பேரைச்சொல்லவா” என்று சற்றே இழுத்து பயமுறுத்துவது போல் பேசுவார்கள். அந்த அளவுக்கு அந்த சீரிய்ல் சக்கை போடு போட்டகாலம் அது. அந்த சீரியலின் 100 எப்பி்சோட் என்று நினைக்கிறேன், அப்போது விகடன் குழுமம் ஒரு பரிசு போட்டி அறிவித்தது. அதாவது அந்த தொடரில் கேள்விபதில் போட்டி வைத்து வெற்றிபெரும் அதிஷ்டசாலி நேயருக்கு125 பவுன் தங்க நகைகள் கொடுப்பதாக திட்டம்.

தமிழகம் முழுவதும் சொக்கா சொக்கா என்று மக்கள் ஆர்வமாக பங்கெடுத்தார்கள், தமிழகம் முழுவதும் லட்சக்கனக்கான கடிதங்கள் விகடன் அலுவலகத்தில் வந்து குவிந்தன.

நான் அப்போது சென்னை சரவண வீடியோ சென்டரில் கேமரா அசிஸ்டென்டாக வேலைபார்த்து வந்தேன். சீரியல் கதாநாயகி ஈஸ்வரிராவ் மற்றும் சில பிரபலங்கள்(யார் யார் என்று சரியாக நினைவில் இல்லை) முன்னிலையில் குலுக்கள் முறையில் மதல் பரிசு தேர்ந்தெடுக்கப்பட்டது. அந்த 125 பவுன் பரிசு போட்டியில் சரியான விடைஎழுதிய அதிஷ்டசாலி வால்பாறையை சேர்ந்த ஒரு பெண். இதை முதலில் வீடியோவாக எடுத்து அதனை அடுத்த வாரம் ஒளிபரப்பும் எப்பிசோட்டில் சீரியல் முடியும் போது ஒளிபரப்ப முடிவு செய்யபட்டது.

அந்த வால் பாறை பெண் வெற்றி பெற்ற தகவல் எவர் மூலமும் வெளியில் கசியாமல் வைத்தார்கள். வரும் வாராம் வெள்ளிக்கிழமை இரவு 8,30லிருந்து9மணிக்குள் போட்டி முடிவுகள் அறிவிக்கப்டும். அந்த 125 பவுன் வெற்றிபெற்ற செய்தியை அறிவிச்சதும் அந்த வீட்டில் ஒரு சந்தோஷ கூச்சல் ஒரு படப்டப்பு ஏற்படும் அந்த படபடப்பை அந்த நேரத்தில் அங்கு இருந்தால்? அந்த அனுபவத்தை வீடியோவாக எடுத்தால் எப்படி இருக்கும்? என்ற கற்பனைக்கு விகடன் குழுமம் செயல்வடிவம் கொடுத்தது.

கேமாராமேன் மற்றும் இயக்குநர் தரன் சார், போட்டோகிராபர் ராஜசேகர் என்ற நினைக்கின்றேன் ,நான் அப்புறம் கேமரா எக்கியூப்மென்ட் உடன் விகடன் மவுன் ரோடு ஆபிசில் இருந்து கிளம்பினோம், சிறு வயதில் இருந்து நான் விரும்பி வாசித்த அந்த பிரபல பத்திரிக்கையின் அலுவலகத்தை அப்போதுதான் நேரில் பார்த்தேன். இந்திரா காந்தி ஹேர்ஸ்டைலில் வந்த ஒரு பெண்மணி எங்கள் பயணத்துக்கு ஆல்தபெஸ்ட் சொன்னார். அவர் பெயர் சுபாவோ அல்லது சுபஸ்ரீயா சரியாக நினைவு இல்லை கொஞ்சம் தடித்து காணப்பட்டார். பத்து வருடத்துக்கு மேல் ஆவதால் நினைவுகள் மங்கி அவுட் ஆப்போகசில் தெரிகின்றன.

நாங்கள் வால்பாறை போகும் போதே மங்கி பால்ஸ் போன்றவற்றில் காரை நிறுத்தி என்ஜாய் செய்து விட்டு சென்றோம், வால்பாறைக்கு அதுதான் எனது முதல் பயணம் என்பதால் அது எனக்கு கூடுதல் மகிழ்வை கொடுத்தது எனலாம். நாங்கள் வால் பாறை சென்று லாட்ஜீல் ரூம் எடுத்து தங்கினோம் நான் கேமரா பேட்டரி எடுத்து சார்ஜ் எல்லாம் போட்டுரெடியாக வைத்து இருந்தேன். சப்போஸ் கேமராவில் எதாவது பிரச்சனை என்றால் டோட்டல் புரோகிராமும் சொதப்பி விடலாம் என்பதால் எல்லாரையும் விட எனக்கு பக்கு பக்கு என்றது.

நாங்கள் முதலில் அந்த பெண் விலாசத்தை தேடிப்போனோம்.எனென்றால் இரவில் அந்த மலை பள்ளத்தாக்கில் எங்கு போய் தேடுவது.மாலை 5 மணி வாக்கில் அந்த பகுதியில் அந்த பெண்ணின் தகப்பன் பெயரை சொல்லி விசாரித்த போது அவர் பக்கத்தில் இருக்கும் டீ எஸ்டேட்டில்கூலித்தொழிலாளியாக வேலைபார்ப்பதாக சொன்னார்கள். இயக்குநர் தரன் சொன்னார் நல்ல வேளை இந்த 125 பவுன் ஒரு ஏழைக்குடும்பத்துக்கு சென்று சேர்வது குறித்து அவர் மகி்ழ்வதாக சொன்னார் நாங்கள் அந்த மகிழ்வில் பங்கெடுத்தோம்.

சிறிய நகரம் என்பதால் விசாரனையை ரொம்ப ரகசியமாக நடத்தினோம் கிராமத்தில் எட்டு கிலோமீட்டர் சுற்றளவுக்கு பெயர் தெரிந்து வைத்து இருப்பார்கள். அதில் விசாரிப்பவரே கூட அவரது சொந்தமாக இருந்தால் எதற்க்கு வந்து இருக்கின்றீர்கள்?,ஏன் தேடுகின்றீர்கள்?, என்ற கேள்வி மேல் கேள்வி கேட்டால் குட்டு உடைந்து விடும் என்பதால் மேம்போக்காகவே விசாரித்தோம். அதே போல் நாங்கள் வந்த காரை அரை கிலோமீட்டருக்கு முன்னே நிறுத்தி நடந்து வந்து விசாரித்தோம்.

மாலை 5 மணிக்கே குளிர் வாட்ட தொடங்கி விட்டது ரோட்ல் ஆள் ஆரவாரமே இல்லை. அப்படியும் ஒருவர் கேட்டார் ஊருக்கு புதுசா? இங்க நிக்காதிங்க, முள்ளம் பன்றி, காட்டுயானை போன்றவை எப்ப வேனா வரும் அதனால ஜாக்கிரதை என்று எச்சரிக்க, கொஞ்ச நேரத்திற்க்கு முன் குளிர் போக்க குடித்த டீ வயிற்றில் கலக்கி குதியாட்டம் போட்டது.

காரில் கேமராவோடு இரவு ஏழு மணிவாக்கில் அதே பகுதியில் வெயிட் செய்தோம். யானை வந்தால் கார் பறக்க வேண்டும் என்று எற்க்கனவே டிரைவரிடம் சொல்லி இருந்தோம். ஊர் அமானுஷ்ய அமைதியாக இருந்தது.

இரவு எட்டரை மணியை உறுதி செய்து மெல்ல அந்த பள்ளதாக்கில் பயணப்ட்டோம் சின்னதாக குடிலை போன்று எழு எட்டு வீடுகள் இருந்தன எல்லோர் வீட்டிலும் பேரை சொல்லவா சீரியல் ஓடிக்கொண்டு இருந்தது எட்டு ஐம்பத்து அஞ்சுக்கு பரிசு பெற்றவர் விவரம் அறிவிப்பார்கள். அதற்க்குள் நாங்கள் கேமராவோடு ரெடியாக இருக்க வேண்டும்.

பக்கத்து வீட்டுகாரர் கதவை தட்டி அவரிடம் விவரம் சொல்லி சென்னையில் இருந்து வந்து இருப்பதாகவும் ஒரு பத்து நிமிடத்திற்க்கு ஒரு இன்டர் வியுவுக்காக லைட் போடுவதற்க்கு மின்சாரம் தேவை என்பதை விளக்கினோம். அவர்கள் ஏற்றக்கொண்டர்கள். நாங்கள் எட்டு ஐம்பத்தி ஐந்தாவது நிமிடத்திற்க்காக நகம் கடித்து வெயிட் செய்தோம்.

அந்த நொடி வந்தது சென்னையில் பரிசு பெற்ற பெயரை அறிவித்த வீடியோ சன்டிவியில் ஒளிபரப்பானது. நாங்கள் அந்த பெண் வீட்டின் கதவருகில் வெயிட் செய்தோம், எனக்கு படபடப்பில் உள்ளங்கை வேர்த்தது, அந்த பெண் பெயர் அறிவித்ததும் வீட்டில் ஒரே மகிழ்ச்சி ஆராவாரம் அடுத்த நொடி கதவை தட்டி உள்ளே போனால் நீங்கள் யார் இந்த இரவு நேரத்தில் என் வீட்டில் என்ற கேள்வி குடும்ப உறுப்பினர்கள் அத்தனை பேர் முகத்திலும் தொங்கி நின்றது.

நாங்கள் ஆனந்த விகடன் குழுமத்தில் இருந்து வருகின்றோம் என்று சொல்லி இந்த 125 பவுன் கிடைத்ததை வைத்து நீங்கள் என்ன செய்ய போகின்றீர்கள் என்று வினவ?அவர்கள் தங்கள் மரிழ்ச்சியின் ஊடே தங்கள் எதிர்கால லட்சியங்களை சொன்னார்கள். அந்த குடும்பத்தில் அந்த லட்சியங்கள் இப்போது நிறைவேறியதா? என்று எனக்கு தெரியவில்லை. அந்த பரிசு பெற்ற பெண் அந்த குடும்பத்தின் பெரிய பெண் அந்தவீட்டில் அந்த பெற்றோருக்கு மூன்று பெண்கள்.அந்த பெரியபெண் அங்கு இல்லை. அந்த பெண் கோவையில் ஒரு பிரபல மருத்துவமனையில் பணி புரிகின்றாள் அவள்தான் போட்டிக்கு கடிதம் எழுதி போட்டு இருப்பாள் என்று சொல்ல நாங்கள் மற்ற குடும்ப உறுப்பினர்களை இன்டர்வியூ எடுத்து அந்த குடும்பத்தினரிடம் விடை பெற்று மறுநாள் கோவை வந்து அந்த பிரபல மருத்துவமனையில் அந்த பெண்ணை சந்தித்து இன்டர்விஹயு எடுத்து சென்னை வந்து சேர்ந்தோம். அந்த பெண் அடைந்த மகிழ்ச்சியை, வார்த்தைகளில் விவரிக்க முடியாது.விகடன் மாணவர் பத்திரிக்கையாளர் திட்டத்தில் கலந்து பெரிய ஆளாக ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் பத்தாவது படித்த என்னை எப்படி அவர்களால் எடுத்து கொள்ள முடியும். இருப்பினும் இந்த அனுபவம் எனக்கு ஒரு செய்தியை எப்படி சேகரிக்கலாம் என்ற செயல் முறை பாடமாக எனக்கு இது அமைந்தது என்றால் அது மிகையில்லை.

அதன் பிறகு பேரைச்சொல்லவா அடுத்த எப்பிசோட்டில் நாங்கள் வால்பாறையில் எடுத்த மகிழ்வு கணங்கள் சன்டிவியில் ஒளிபரப்பட்டது. அதே வாரம் ஆனந்தவிகடனில் நாங்கள் கஷ்டப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் அப்போதைய சின்ன ஆனந்த விகடனில் ஒரு பக்க அளவில் வந்ததாக நினைவு. அது எனக்கு அதிர்ச்சியும் கூட....

வாழ்வில் பல அனுபவங்கள் எனக்கு இருந்தாலும் என் வாழ்வில் மறக்க முடியாத அனுபவம் இது....


அன்புடன்/ஜாக்கிசேகர்
குறிப்பு)
உங்களுக்கு நான் எழுதியது பிடித்து இருந்தால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஓட்டு போடவும் பின்னுட்டம் இடவும் மறவாதீர்

உங்கள் பெண் வேலைக்கு போய் விட்டு வீடு திரும்பவில்லை என்றால் எங்கே தேடுவீர்கள்.?..(border town)

உங்கள் பெண் பதினேழு வயது பருவ மங்கை, வேலைக்கு போய்விட்டு வீடு திரும்பவில்லை என்றால் நீங்கள் எங்கே தேடுவீர்கள்? முதலில் நண்பர்கள் வீட்டில், அப்புறம் உறவினர்கள் வீட்டில், அப்புறம் போலீ்ஸ். சரி அந்த போலீஸ் கயவர்களுக்கு வேண்டியவர்கள் என்றால்?

சரி பெண் காணவில்லை அதற்க்காக கையில் ஒரு கம்பு எடுத்துக்கொண்டு நகரத்துக்கு பக்கத்தில் இருக்கும் மலைபகுதி மணலில் மணலை நகர்த்தி உங்கள் பெண் பிள்ளையின் பிணம் இருக்கின்றதா? என்று உங்களால் தேட முடியுமா? சொல்லுங்கள்.

அப்படியும் தேடிக்கொண்டுதான் இருக்கின்றார்கள் மெக்சிக்கோ நாட்டில். 1993 ஆம்வருடத்தில் 450 பெண்கள் கொடுரமாக கற்பழிக்கப்பட்டு இறக்கின்றார்கள். அந்த வருடத்தில் 750 பெண்கள் கதி என்ன வென்றே இதுவரை தெரியவில்லை. அப்படி தன் பெண் என்ன ஆனாள் அவள் கதி என்ன என்று தெரியாத பெற்றோர் வேறு என்ன செய்ய முடியும்? அவர்கள் கம்பு எடுத்துக்கொண்டு மணலை சீச்சி தன் பெண்ணை தேட வேண்டியதுதான்.


உலகில் மிக கொடுமையான செயல் கற்பழிப்புதான். உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் உடலின் பல பகுதிகளில் அத்து மீறும் செயல் என்றால் அது கொடுரமான கற்பழிப்புதான். உலகில் முதல் சுகமான கலவி சுகத்தை குரங்கு கையில் கிடைத்த பூமாலை கதையாக மாற்றுவதற்க்கு பெயர் கற்பழிப்பு.

பிரிந்து ,கிழித்தது, நசுக்கி , கசக்கி,கடித்து,உதைத்து, மூர்கமாகஇயங்கி, பாருங்கள் தொடர்ச்சியாக இந்த வார்த்தைகளை நீங்கள் படிக்கும் போதே ஒரு வன்முறை உணர்வு வருகின்றதே, அதே வார்த்தைகள் இரக்கம் இல்லாத மனித மிருகத்திடம் ,கட்டற்ற சுதந்திரம் கொடுத்து, இந்த வார்த்தைகளை பதினேழு வயது பருவபெண்ணிடம் செயல்வடிவம் கொடுக்க சொன்னால் அந்த பெண்ணின் நிலையை சற்றே யோசித்து பாருங்கள்.

அப்படி ஒரு கொடுமை இன்றும் மெக்சிக்கோ நாட்டில் ஜீரஸ் நகரத்தில் வயதுக்கு வந்த பெண்கள் காணமல் போய் கொண்டு இருப்பதாக வும் அதற்க்கு மெக்சிக்கோ அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை செருப்பால் அடித்து சொல்லி இருக்கின்றார் “ பார்டர் டவுன் ”படத்தின் இயக்குநர் “கிரகோரி நோவா”.

இதே போல் பாலிய்ல் வன்கொடுமை ,எம் இனதமிழ்சமுதாய பெண்களுக்கு சிங்கள ராணுவத்தால் அனுதினமும் இலங்கையில் நடத்தபட்டு வருகின்றது அது பற்றி படம் எடுக்க தமிழில் எந்த இயக்குநரும் முன் வருவதில்லை. அப்படியே வந்தாலும், நம் நாட்டு சென்சார் போர்டு அயல் நாட்டு விவகாரம் என்ற பெயரில் தடை போட்டுவிடுகின்றது. நம்மை பொறுத்த வரை தொட்டுக்கொள்ள ஊறுகாயக மட்டுமே அந்த விஷயம் பயன்பாட்டில் இருக்கின்றது.

பார்டர் டவுன் படத்தின் கதை இதுதான்.நீங்கள் சென்னையில் கூட பார்த்து இருக்கலாம் . சோப்பு ,ஷாம்பு,கார்மெண்ட் வேலைக்கு, பேருந்து முழுவதும் அடிதட்டு வாழ்க்கை வாழும் பெண்கள் பயணிப்பதை,அவசரத்தில் பிள்ளைகளை பால்வாடிக்கு அனுப்பி விட்டு, வெந்ததை டிபனில் கட்டி, பேருந்து உள்ளே தலைவாரி, அதிகப்படியாக மேக்கப் போட்டு, வயது பெண்கள் காண்டிராஸ்ட் கலரில் உடை உடுத்தி சொற்ப சம்பளத்துக்கு வேலைக்கு போய், நின்றபடியே வேலை பார்த்து சாத்துக்குடி பழம் போல் கசக்கி பிழிந்து சக்கையாக,டயர்டாக வரும் பெண்ணை ஊருக்கு ஒதுக்குபுறத்துக்கு கடத்தி போய் கொடுரமாக கற்பழித்தால் எப்படி இருக்கும், அந்த பெண் பிள்ளை நிலையை சற்றே நினைத்து பாருங்கள்.

அமெரிக்கா நாட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏழை நாடு மெக்சிக்கோ, அந்த நாட்டின் அமேரிக்க பார்டரில் இருக்கும் சிறு நகரம்தான் ஜுராஸ் இந்த நகரத்தில் 1000க்கு அதிகமானபண்ணாட்டு கம்பெனிகள் பல தங்கள் பேக்டிரியை இங்கே அமைக்கின்றன. காரணம் மெக்சிக்கோ நாட்டு வறுமை, அதனால் குறைந்த பட்ச கூலிக்கு வரும் அந்நாட்டு பெண்கள். ஒவ்வொறு 3 நொடிக்கு ஒரு டிவி பொட்டியும், 7நொடிக்கு ஒருகம்ப்யூட்டரும் , இங்கு 5 டாலர் தினக்கூலி்க்கு வேலை செய்யும் மெக்சிக்ன் பெண்களால் தயாரிக்கபடுகின்றது. அதில் ஷீப்டு முடிந்து வேலைக்கு போகும் பல பெண்கள் வீடு சென்ற சேர்வதில்லை, கடத்தி கற்பழித்து கொலை செய்யப்ட்டு பாலைவன மணலில் புதைத்து விட்டு செல்கின்றார்கள். அப்படி அங்கே வேலை செய்யும் பெண் ஈவா அவள் விடியற்காலை வீடு செல்லும் போது அவளை கற்பழித்து மண் போட்டு அவளை மூடிசெல்கின்றனர், அனால் அவளுக்கு சுயநினைவு திரும்ப அவள் வீடு திரும்புகிறாள் ,இந்த விஷயத்தை செய்தி சேகரிக்க அமெரிக்காவில் இருந்து மெக்சிக்கோவுக்கு நம்ம பாப் பாடகி ஜெனிபர் லோபஸ் வருகிறார் அவருக்கு மெக்சிக்கோவில் இருக்கும் லோக்கல் பத்திரிக்கையாளர் ஆண்டோனியா பேன்ட்ரஸ் உதவி செய்கிறார்,

பாலியல் வன்முறைக்கு உட்படுத்தபட்ட ஈவா என்ன ஆனாள்,பத்திரிக்கையாளர்கள் நடக்கும் உண்மையை சர்வதேசமுகத்திடம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தார்களா? என்பதை வெள்ளித்திரையில் பாருங்கள்.


படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

இந்த படத்தின் திரைக்தை உண்மைசம்பவங்களின் அடிப்படையில் பின்னப்பட்டது.

ஈவா வாக நடித்த பெண்ணின் அப்பாவிதனமான குழந்தை தோற்றம் இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுனை.

அவளை பாலியல் கொடுமை செய்யும் போது அந்த பெண்ணின் போராட்டமும்,நடிப்பும் அபாரம்.

அவள் தட்டுதடுமாறி குனிந்த படி நடப்பதை சில்லவுட்டிலும் புளு டோனி்லும் காட்டி இருப்பார்கள் ரொம்ப அற்புதமான காட்சி , அந்த காட்சி மனதை பிசையும் காட்சி.

பாலியல் கொடுமைக்கு பிறகு அவள் மனதளவில் பாதிக்கப்பட்ட விஷயங்ளை மிக அழகாக சொல்லி இருப்பார் இயக்குநர்.

படம் முழுவதும் வார்ம் டோனை பயன் படத்தி இருப்பார்கள், அதனால் படம் முழுவதும் ஒர வெறுமையை அதாவது சிக்கலை உணர்த்தும் விதமாக படமெடுத்து இருக்கின்றார்கள்.Reynaldo Villalobos ஒளிப்பதிவாளருக்கு வாழ்த்துக்கள்


சிறந்த இயக்குநருக்காக இந்த படம் நாமினேஷன் செய்யப்பட்டது.Berlin International Film Festival: Golden Berlin Bear; Gregory Nava; 2007.

இந்த படம் பெர்லின் பெஸ்டிவலில் ஜெனிபருக்கு ஆவார்டு வாங்கிதந்தது.

Directed by Gregory Nava
Produced by Executive Producers:
David bergstein
Cary Epstein
Tracee Stanley-Newell
Barbara Martinez-Jitner
Producers:
Gregory Nava
Jennifer Lopez
Simon Fields
Tony Mark (Co-prod.)
Written by Gregory Nava
Starring Jennifer Lopez
Antonio Banderas
Martin Sheen
Maya Zapata
Sonia Braga
Music by Graeme Revell
Cinematography Reynaldo Villalobos
Editing by Padraic McKinley
Distributed by THINKFilm
Capitol Films
Release date(s) February 22, 2007
(Germany)

அன்புடன்/ஜாக்கிசேகர்


(குறிப்பு)
உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஜனநாயக கடமை ஆற்ற மறவாதீர்

சென்னையில் யாரிடமும் வழி கேட்காதீர்கள்..

முன்பெல்லாம் மேற்க்கு மாம்பலத்தில் வந்து ஆரிய கவுடா ரோட்டுக்கு பக்கத்தில் இருக்கும் கணபதி தெரு ஏது என்ற கேட்டால்? கடைவிட்டு வெளி வந்து,

“ இப்படி நேரா போனா இந்தியன் பேங்க் வரும், அதற்க்கு பக்கத்தில் இருக்கும் ரைட் எடுத்துங்கினா அதுதான் கணபதி தெரு என்ற சொல்லூவார்கள்.

அதே போல் இப்போதும் கிராமங்களில் வழி கேட்டால்அற்புதமாக வழி சொல்லுவார்கள். போகும் இடத்துக்கு 4 வழி இருந்தாலும் அதில் எந்த வழி சிறந்தது என்றும் ரோடு எந்த தடத்தில் மிக அற்புதமாக இருக்கும் என்று ஒன்றுக்கு மூன்று பேர் சேர்ந்து டிஸ்கஸ் செய்து சொல்லூவார்கள்...


பொதுவாக நாம் இரண்டு விஷயத்துக்கு வழி கேட்போம்.ஒன்று அவசரத்துக்கு ஏடிஎம் எங்கே இருக்கின்றது மற்றொன்று குடும்பத்துடன் செல்லும் போது கல்யாண மண்டபத்துக்கு, அல்லது தெரு பேர், என்று வழி கேட்போம் இன்னும் பல விஷயங்களுக்கு கேட்டாலும் இந்த மூன்று விஷயங்கள் பிரதான இடத்தை பிடித்து இருக்கும்.

ஒரு பூக்கார பெண்மணியிடம், அண்ணாநகர் திருமங்கலத்தில் பாலாஜி மண்டபத்துக்கு வழி கேட்க அது முகப்பேர் வரை வழிகாட்டி என் மனைவியுடன் அலைய வைத்தது , அது பக்கத்து தெருவில் இருக்கும் மண்டபம்.

இரண்டாவதுஅவசரத்துக்கு ஏடிஎம் கேட்டால் எதாவது ஒரு வழியை காட்டி அனுப்பிவிடுவார்கள், அடித்து பிடித்து போய் பார்த்தால் அங்கு மாட்டு தொழுவம்தான் இருந்தது.

அது மட்டும இல்லாது தெரியாது என்ற சொல்ல ஏனோ அவர்கள் விரும்பவில்லை, தெரியாது என்பதை தெரியாது என்று தானே சொல்லவேண்டும். தெரிந்தவன் போல் காட்டிக்கொள்வதில் என்ன சுகமோ.. தெரியாது என்று சொன்னால் எப்படி இவர்களுக்கு கௌரவக் குரைச்சல் வரும் என தெரியவில்லை.

இந்த மனோபாவம் எப்படி இவர்களுக்கு வந்தது என்று தெரியவில்லை. அதனால் சென்னை வரும் அன்பர்களே தயவு செய்து சரியான லேண்ட் மார்க்கை அறிந்து வரவும், அல்லது பார்க்க போகிறவரின் கைபேசி எண்ணை கையில் வைத்துக்கொள்ளவும். சென்னையில் வழி கேட்டு செல்லும் இடத்தை ஒருவருக்கு இரண்டு பேரை கேட்டு தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இந்த அனுபவங்கள் மட்டுமே அல்ல இந்த பதிவை எழுத இன்னும் பல அனுபவங்கள் எனக்கு. நீங்கள் குடும்பத்தோடு போகும் போது இப்படி அலையக்கூடாது என்பதே இந்த பதிவின் நோக்கம்.
சென்னையில் எல்லோரும் கெட்டவர்கள் இல்லை கொஞ்சம் நல்லவர்களும் உண்டு.

நான் இப்போதெல்லாம் 4 பேரிடம் வழி கேட்டு உறுதிபடுத்திக்கொண்டே செல்கிறேன்.

அன்புடன்/ஜாக்கிசேகர்

(குறிப்பு)
உங்களுக்கு ஆட்சேபனை ஏதும் இல்லை என்றால் தமிழ்மணத்திலும் தமிளிஷ்லிம் ஜனநாயக கடமை ஆற்ற மறவாதீர்

என் முதல் சிறுகதை , ஒரு உண்மை காதல் கதை...கதையின் கதாபாத்திரங்கள் தேவைக்கு ஏற்றவாறு மாற்றப்பட்டு எழுதி இருக்கின்றேன்,அது ஒரு பெண் வாழ்க்கை சம்பந்த பட்டது என்பதால்....

உலகின் மிகப்பெரிய பாவம்

ராஜகோபால் ரங்கநாதன் தெருவில் நடந்து போனால் அவ்வளவு கூட்டத்தில் அவனை கடந்து போகும் பெண்களில் ஒரு 15 பேராவது இவன் நம் காதலன் ஆனால்,இவன் நம் வருங்கால கணவன் ஆனால், என்று பாரதிராஜாபடம் போல் ஃபரீஸ் ஆகி, பலவாறு யோசித்து அந்த இடம் விட்டு நகர்வார்கள், இந்த உலகத்தில் அவனால் மட்டுமே கள்ளமில்லாமல் சிரிக்க முடியும். ராஜு ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறான். தினமும் பத்து நண்பர்களுடன், சத்யம் ,மாயஜால் தியேட்டர்களுக்கு காரில் சென்று படம் பார்க்கும் அளவுக்கு மாதா மாதம் சம்பாதிக்கின்றான்.


ராஜுவின் எதிர் பிளாட்டில் வசிப்பவள்தான் சித்ரா சுமாரான அழகு என்றாலும் படிப்பிலும் பொது அறிவிலும் கெட்டிக்காரி, அவளின் கலகலப்பான பேச்சு எவரையும் எளிதில் கவர்ந்து விடும் தன்மை உள்ளது,ராஜு அவளின் அறிவுக்கூர்மைக்கு கலகலப்புக்காகவே, ராஜு சித்ரா மேல் காதல் வயப்பட்டான்...
சித்ரா புறநகர் கல்லூரியில் எம்,எஸ்,சி மைக்ரோபாயாலஜீ படித்து வருகின்றாள் அவள் படிப்பில் கெட்டிக்காரி, அவளின் கனவு அவளது துறையில் பெரியவிஞ்ஞானியாக வர வேண்டும் என்பதுதான்...

ராஜுபெற்றோரும் சித்ரா பெற்றோரும் எதிர் எதிர் வீடு என்பதால் நண்பர்கள், அதனால் அவளோடு பழகும் வாய்ப்பு அவனுக்கு அதிகம் கிடைத்தது.

ராஜகோபால் சிறுவயதில் இருந்தே அதிக புத்தகங்கள் படித்து வளர்ந்ததால் இந்த காதல் கத்தி்ரிக்காய் எல்லாம் நம்மை தாக்காது என்று கம்பீரமாக நகர் வலம் வந்தான், காதல்வயப்பட்ட நண்பர்களை பரிகாசம் செய்தான். காதல் என்பது கண்ணம்மா பேட்டை சூடுகாடுகிட்ட இருக்கிற ஆலமரத்துக்கு கீழே பீடி வளிச்சிக்குனு இருக்கறவனுக்குதான் காதல் வரும் என்ற ராஜகோபல் எண்ணத்தை தவிட பொடி ஆக்கிவிட்டாள், சித்ரா. சித்ராவின் அறிவுக்கூர்மை அவள்மேல் அவனை காதல் கொள்ள செய்தது.

வாயில் பிரஷ்உடன் யோசிப்பது,பத்து நிமித்தில் கழிவறை விட்டு வெளியே வர வேண்டியவன் ஒருமணிநேரம் கழித்து யோசித்துக்கொண்டே வெளி வருவது, காதல்பாடல் வரிகளின் போதைக்கு அடிமையாவது,மியுசிக் சேனல்களுக்கு,

“ ஐ லவ் சித்ரா,அவள் என் மனைவி ”என்று எஸ் எம் எஸ் செய்து காசை கரியாக்குவது,விக்கெண்ட் பார்ட்டியில் எல்லாரும் முழு போதையில் இருக்க, இவன் மட்டும் ரசிக்க தக்க போதையில் கற்பனையில் சித்ரா அயன் பண்ணி போட்டு வந்த சுடிதாரை ஈவு இரக்கம் இல்லாமல் கசக்கி அனுப்புவது என்று தமிழ்நாட்டு இளைஞர்கள் தற்போது காதல் போதையில் செய்யும் எல்லா வேலைகளையும் செய்தான்.ராஜகோபால் மனதில் இருக்கும் காதலை இதயம் முரளி போல்சித்ராவிடம் ஒரு போதும் வெளிப்படுத்தியதில்லை. அதற்கு காரணம் சித்ரா வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்? பிளாட்டி்ல் சித்ரா சட்டென வடிவேலு போல் சீன் போட்டு பாத்துட்டான் பாத்துட்டான் என்று கூச்சல்போட வெண்ணிற ஆடை மூர்த்தி போல் தான் பதறக்கூடாது என்பதாலேயே தன் காதலை ராஜகோபால் மனதுள் புதைத்து வைத்தான் , நாடளுமன்றத்தில் தேர்தலில் ஏழு இடத்திலும் அடிவாங்கிய பிரபல கட்சி போல மனதுக்குள் தினம் தினம் அழுதுக்கொண்டான்.

சித்ரா எப்போதும் போல் கலகலப்பாக பழகினாள் பைக்கில் உட்காரும் போது இயல்பாய் மார்பு உரசி உட்கார்ந்தாள், ராஜகோபாலுக்கு காதல் தீயோடு காமத்தீயும் பற்றி எரிந்தது.

அந்த வாரக்கடைசியில் நண்பர்களிடம் சத்தியம் செய்தான் கல்யாணம் பண்ணா சித்ராவைதான் கல்யாணம் பண்ணுவேன் என்று....

சில மாதங்களில் கழித்து கல்யாண பத்திரிக்கையோடு ராஜு வந்தான் பெண்பெயர் இடத்தில் சித்ரா பெயர் இல்லை, அதிர்ந்து காரணம் கேட்ட போது..

மூனுமாசத்துக்கு முன்ன அவகிட்ட என் காதலை சொல்லபோனேன், உன் எதிர்காலம்பற்றி கேள்வி கேட்ட போது அவ சொன்ன,
எல்லாரு மாதிரியும் கல்யாணம், புள்ளகுட்டி, மளிகைசாமான் என்று என்னால் வாழ முடியாது, எனக்கு மைக்ரோபயாலாஜீயில் அடுத்து பிஹெச்டி பண்ணனும்,ஸ்காலர்ஷிப் கிடைச்சி ஸ்டேட்ஸ் போய் , பெரிய சயிண்டிஸ்ட் ஆகனும். கீரின் கார்டு கிடைச்சி அங்கேயே செட்டில் ஆகாம என்தாய் நாட்டுக்கு வந்து என் மக்களுக்காக உழைக்கனும் என்று சொன்னாள் என்று சொன்னேன்.

நண்பர்கள் கேட்டார்கள் அப்ப நீ பட்ட வலி, வேதனை, அவ மேல வச்சிருந்த உயிருக்குயிரான காதல் என்று எதையுமே அவகிட்டசொல்லலையா??? என்று சட்டை பிடித்து கேள்வி கேட்டார்கள்


நான் நிதானமாக உலகில் மிகப்பெரிய பாவம் தெளிவாக இருக்கும் மனதை குழப்புவதுதான் என்றேன்.

அன்புடன்/ஜாக்கிசேகர்


உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா தமிழ்மணத்திலியும் தமிளிஷ்லியும் ஓட்டு போடுங்க தலைவா..

ஒரே ஒரு ஆள் கொல்லப்பட்டான் அவ்வளவுதான் பஞ்சாப்பும் ஹரியாணாவும் எரிகின்றது...ஆனால்???

சிங்கள ராணுவத்தினர் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 35 ஆயிரம் தமிழர்கள் கொடுரமாக கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

மகிந்தா பதவி எற்ற நாளில் இருந்து இதுவரை ஒரு லட்சம் தமிழர்கள் அவர்கள் தாயகத்திலேயே குண்டு வீசி கொல்லப்பட்டு இருக்கின்றார்கள்.

பத்து ஏக்கர் நிலப்பரப்புக்குள் 2 லட்சம் பேரை அகதியா அடிப்படை வசதி இல்லாமல் வெட்டவெளிச்சிறையில் இலங்கை அரசு அடைத்து வைத்து இருக்கின்றது.

போரில் இறந்து போனவர்களில் அதிகம் குழந்தைகள்தான் என்று யுனிசெப் கவலை தெரிவித்து உள்ளது.

தமிழர்கள் தாயகத்தில் சிங்கள ரவுடிகள் வலுக்கட்டாயமாக குடி அமர்த்துகிறது சிங்கள அரசு.

அகதிகள் திறந்தவெளியில் உடுப்பு மாற்ற பெண்களை வற்புறுத்தி அழகு பார்க்கின்றது சிங்கள ராணுவம்.


அழகான பெண்களின் கற்பு நாளொறு மேனியும் பொழுதொறு வண்ணமாக காணமல் போகின்றது.

கர்பினி பெண்யையும் கயவர்கள் பாலியல் வன்புனர்ச்சிக்கு ஆளாக்குகின்றார்கள்.

தமிழ் நாட்டில் மட்டும் உயிருக்கு பயந்து உறைவிடத்தை விட்டு வந்தவர்களின் எண்ணிக்கை 73,433 பேர்


உலகம் எங்கும் பல லட்சக்கனக்காகனவர்கள் புலம் பெயர்ந்து தன் சமுக அடையாளத்தை இழந்து விட்டார்கள்.


இதையெல்லாம் தட்டி கேட்டவனை இறையான்மை என்ற பெயரில் என்ன செய்தார்கள் என்று தெரியவில்லை.

ஆனால் இன்று ஆஸ்த்திரியாவில் இரண்டு சிங் கோஷ்டிகள் அடித்துக்கொண்டதில் ஒருவன் பலியானன். நன்றாக கேட்டுக்கொள்ளுங்கள் ஒரே ஒரு உயிர்பலிதான் நடந்து இருக்கின்றது.


ஆனால்பஞ்சாப் ,ஹரியான பற்றி எறிகின்றது.

நாம் தமிழர்கள் திரைகடல் ஓடியும் ஒருகாலத்தில் திரவியம் தேடியவர்கள்,இன்று எல்லா இடத்திலும் உதை வாங்கி கொண்டு இருக்கின்றோம், நாம் இழப்புகளை அதிகம் சந்தித்து விட்டு சொரனை அற்று இருக்கின்றோம், மாற்றான்தாய் மன நிலையில்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

கொல்லூர் முகாம்பிகையும் கூடஜாதிரி ஆபத்தான மலைபயணமும்.போன மாதம் என் மனைவியின் நண்பி திருமணம் கேரளாவில் உள்ள கன்னூரில் நடை பெற்றது. அங்கேயிருந்து எனது மாமியாரின் நெடுநாள் ஆசையை பூர்த்தி செய்ய கொல்லூர் முகாம்பிகை கோவிலுக்கு பயணப்பட்டோம்.
கொல்லூர் மூகாம்பிகை கோவில் எம்ஜியார் ஆட்சிகாலத்தில் ரொம்பவும் பிரபலம்.
நான் போனதில்லை இப்போதுதான் முதன் முறையாக சென்றேன்.

கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் ஆண்களை அரை நிர்வாணப்படுத்திய பிறகே அம்பாளை சேவிக்கவைத்தார்கள், கூட்டடத்தில் ஒரு பதினாறு வயசு பெண் என் பின் பக்கம் வந்து என் வெற்று முதுகை உரசியது. அம்பாளை மழுமனதோடு தரிசனம் செய்ய முடியுமா என்ற பயம் வந்தது.நல்ல வேளை அந்த பெண்ணின் அப்பா எனக்கு முன்னால் வந்து நின்றுநான் முழு ஈடுப்பாட்டுடன் கவனம் சிதறாமல் சாமி கும்பிட வழி செய்தார்.

கொல்லூர் மூகாம்பிகை கோவிலை விட பக்கத்தில் மலை மேல் இருக்கும் கூடஜாதிரி மலை மேல் இருக்கும் கோவில் தரிசனத்தின் மேல்தான் எனக்கு ஆவல் அதிகமாக இருந்தது. அங்கு என்ன சாமி இருக்கின்றது என்று இப்போது கேட்டாலும் தெரியாது?

கோவிலில் இருந்து கூடஜாதிரி மலைக்கு போக ஜீப் மட்டுமே போகும் ஒரு ஆளுக்கு 175 ரூபாய் என்றார்கள். காரெல்லாம் போகாது என்றார்கள். நாங்கள் தனியாக ஜீப்பை வாடகைக்கு அமர்த்தி் சென்றோம்.

20 கிலோமீட்டர் வரை ஒரு சாதாரன மலைப்பதையாகவே இருந்து அதன் பிறகு ரோடு இல்லை அடுத்த 20 கீலோமீட்டருக்கு ,வெறும் பாறைகளின் மேல் ஜீப்பை ஓட்டுகின்றார்கள்.. வயதானவர்கள் அழைத்து போனால் பாதி வழியில் மோட்சம் போக வேண்டியதுதான்.

இவ்வளவு ஏன் அதிக வரதட்சனை கேட்டு சண்டித்தனம் பண்னும் மாப்பிள்ளைகளை கோவிலுக்கு வேண்டுத்ல் என்று அழைத்து வந்து பெண்டு நிமித்தலாம்.

மேலே போவதற்க்குள் வாந்தி நிச்சயம். வளைந்த செல்லும் பாறை பாதைகளில் அங்கு ஜீப் ஓட்டும் டிரைவர்கள் மிக அநாயாசமாக வண்டி ஓட்டுகின்றார்கள். ரொடு இல்லாத பாறைகளின் மேல் ஜீப்பை கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் ஏற்றுகின்றார்கள்.

நான் மட்டும் அந்த ஜீப்பாக இருந்து இருந்தால் டிரைவர் மூஞ்சியில் காரி துப்பி போடாங் கோத்தா என்று திட்டி இருப்பேன். 40 கிலோமீட்டருக்கு 175 ரூபாய் ஒருவருக்கு என்ற போதே என்க்கு பொறி தட்டியது.

நிச்சயமாக பைக்கில் அங்கு போக முடியாது ஸ்கார்பியோ கார் போகும் ஆனால் வண்டி கலகலத்துவிடும். மாலை மேலே இரண்டு கோவில்கள் இரக்கின்றன அங்கே போகவும் ரொடு கிடையாது செங்குத்தான மலை பாதையில் தடவி தடவிதான் ஏற வேண்டும்..

திரும்ப ஜீப்பில் கிழே வந்தால் எவெரஸ்ட் போன அலுப்பு உங்களிடம் குடி கொண்டு இருக்கும். அதே போல் வரும் போது வாந்தி நிச்சயம்.மூகாம்பிகை சேவித்து விட்டு கூடாதிரி போன அனுபவத்தை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். பதிவர்களில் சட்டேன போய் அந்த பயணத்தை அனுபவிக்கும் பாக்கியம் எனக்கு தெரிந்து மங்களுர் சிவாவுக்கு மட்டுமே உண்டு அங்கிருந்து கொல்லூர் கோவில் 2அரை மணிநேர பயணம்...

ஒரு கரடு முரடான2 மணி நேர காட்டு பயணத்துக்குஅன்மிக போர்வையில் தயாராகுங்கள் .

அன்புடன் /ஜாக்கிசேகர்

தமிழ்மண வாசகர்களுக்கும் பதிவர்களுக்கும் என் நன்றிகள்...
நான் பதிவேழுத வந்து இத்தோடு பதிமூன்றரை மாதங்கள் ஆகின்றது, எனது பல இடுக்கைகள் சூடான இடுக்கையில் வந்து இருக்கின்றது. அதே போல் நான்கோ அல்லது ஐந்து இடுக்கைகள்தான் வாசகர் பரிந்துரைகள் பகுதியில் வந்து இருக்கின்றது. அனால் இதுவரை ஒரு முறை கூடதமிழ் மண மகுடத்தில் எனது பதிவு வந்தது இல்லை.

ஆனால் இப்போதுதான் தமிழ் மணம் மகுடத்தில் எனது பதிவு வந்து இருக்கின்றது.


வாசகர் பரிந்துரையில் என் பதிவான இலங்கை பிரச்சனையில் தமிழன் ஏன் மிக மிக மட்டமாக நடந்து கொள்கிறான் என்ற பதிவுக்கு 96/106 என்ற அளவுக்கு ஓட்டு விழுந்து இருக்கின்றது. இத்தனைக்கு அது பல மாதங்களுக்கு முன்பு எழுதிய பதிவு. அனால் அது எப்போது வேண்டுமானாலும் தமி்ழ் சமூகத்துக்கு பொறுந்தும்.

நேற்று மாலைதான் நண்பர் புருனோ எனக்கு 100க்கு மேல் ஓட்டு விழுந்துள்ளதாக கைபேசியில் தெரிவித்தார், அதன் விளக்கத்தை பதிவர்கள் முரளி கண்ணன்,உ.த, அக்னி மூலமாக அறிந்து கொண்டேன்.


என்க்கு பதிவுலகை அறிமுகப்படுத்திய பதிவர் நித்யாவுக்கும்,என் பதிவை வாசித்து ஓட்டிட்ட வாசகர்கள், பாலோவர்கள்,பதிவர்கள், பதிவுலக நண்பர்கள் மற்றும் கையேசியில் வாழ்த்து சொன்ன அனைவருக்கும் என் உளம்கனிந்த நன்றிகள். பதிவு சிறப்பாக இருந்தால் தொடர்ந்து தமிழ் மணத்திலும் தமிலிஷ் ஓட்டு போட்டு என்னை மேலும் உற்சாகப்டுத்துவீர் என்று நம்புகிறேன்.

தொடர்ந்து தமி்லிஷ்ல் வாக்களிக்கும் வாசகர்களுக்கு நன்றி

தொடர்ந்து எனது பதிவுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் தமிழ்மணம் மற்றும் தமிளிஷ்க்கும் மற்றும் பல வலைமனைகளுக்கும் இந்த ஜாக்கியின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

இந்த அங்கீகாரம் இன்னும் என்னை மேலும் எழுத உற்சாகப்டுத்தும் இன்னும் சிறப்பான பதிவுகளை எழுத எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டுகிறேன்.

அன்புடன்/ஜாக்கிசேகர்

தேர்தல் முடிவுகள் சொல்லும் சேதி....தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்ட போது அதன் முடிவுகள் யாரும் எதிர்பாபராத வண்ணம் இருந்தது என்பதே உண்மையிலும் உண்மை.திமுக கூட்டனி17 அல்லது 20 சீ்ட்டுகளில் ஜெயிக்கும் என்ற நிலை மாறி அது 28ல் ஜெயித்த போது எல்லோரையும் புருவம் உயர வைத்து விட்டது.

இலங்கை பிரச்சனையையும் நம் நாட்டு தேர்தலையும் பெருவாரியான மக்கள் போட்டுக்குழப்பி்கொள்ளவில்லை.அல்லது ஈழத்தின் பால் திடிர் அன்பும் பாசம் வைத்த கட்சிகளை மக்கள் புறக்கனித்து விட்டார்கள் என்பதே உண்மை.

பணம் தேர்தலில் விளையாடியதுஎன்கிறார்கள். எந்த தேர்தலில் பணம் விளையாடவில்லை? இந்த தேர்தலில் விளையாடி விட்டதாக கூக்குரல் இடுகின்றீர்கள் அப்படியே பணம் விளையாடினாலும் அது குப்பத்து மக்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. அப்படி கொடுத்தாலும் அங்கே போய் மாற்றி போட்டு வரும் மக்களை நான் அறிவேன். என் வீட்டு பக்கத்தில் அதிமுக,திமுக இரண்டு பேரும் பணம் கொடுக்க ரெண்டையும் வாங்ககி வைத்துக்கொண்டு ஓட்டு போட்டார்கள்.


எந்த தேர்தலிலும் இல்லாது இந்த தேர்தலில் இளைஞர் கூட்டம் பெரும் அளவில் வாக்கு அளித்தது. அது கூட இந்த நிலைப்பட்டை எடுக்கவைத்திருக்கும்.

மாறன் சகோதரர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பை தீர்த்துக்கொண்டதும் கூட இந்த தேர்தலில் திமுகாவுக்கு சாதகம் எனலாம்.


சீமான்,தாமரை,பாரதிராஜா போன்றவர்களின் ஆவேச பேச்சு, ஜெவின் தனி ஈழம், ராமதாசின் தைலாபுர பிரஸ்மீட்,வைகோ போன்றவர்களின் எழுச்சியான பேச்சு இவைகளையும் மீறி இந்த வெற்றி என்கிற போது யோசிக்க வேண்டிய விஷயம்.

அரசு உழியர்கள்மற்றும் சிறுபாண்மையர் ஓட்டுக்கள் அபபடியே திமுகாவுக்கு வந்து விட்டது.

அதே போல் பாமக அடிக்கடி கூட்டனி மாறுவதை இந்த முறை மக்கள் ரசிக்கவில்லை,

ஜெயலலிதா ஹெலிகாப்ட்ரில் வந்து பிரசாரம் செய்வதையும் தேர்தலுக்கு முன்பு மட்டும் வந்து தமிழகம் முழுவதும் காட்சி கொடுப்பதையும் அல்லது பிரசாரத்தில் எழுதி வைத்து படித்து பிரசாரம் செய்வதையும் மக்கள் ரசிக்கவில்லை.

விஜயகாந் கூட்டனி பற்றி இனி அவர் யோசிக்கவேண்டும்.

வைகோ எப்போது அதிமுகழகத்தில் இனைந்தாரோ அப்போதே மக்கள் மன்றத்தில் அவருக்கு செல்வாக்கு சரிந்து விட்டது.

தற்போது ஈழத்தை கையில் வைத்து பிரச்சாரம் செய்த பாமக, மக்கள் தொலைக்காட்சியில் சீமான் பேச்சும் ஈழ மக்கள் பிரச்சனைகளும் திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆனால் அது ஒரு இடத்தில் கூட வரவில்லை. வெளிப்படையாக ஆயுதம் கொடுத்தது காங்கிரஸ் கட்சி என்று மக்களுக்கு தெரிந்தும் 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று இருக்கிறது.

மக்களுக்கு ஈழத்தின் வேதனைகள் புரிந்தாலும் இந்தியா ஒரு அளவுக்கு மேல் இலங்கையில் தலையிட முடியாது என்று நினைத்தார்களா? அல்லது இவனுங்களுக்கு வேற வேலையே இல்லை என்ற அலட்சியமா? அல்லது நான் என் குடும்பம் தமிழகத்தில் சொளக்கியமாக இருக்கின்றோம் யார் எக்கேடு கெட்டு போனால் எனக்கு என்ன என்ற மனோபாவமா? ஒன்றுமே புரியவில்லை.

வைகோ தோல்வி அதிர்ச்சியை கொடுக்கின்றது. நல்ல பேச்சாளர், நல்ல மனிதரும் கூட ஆனால் எல்லாம் விழளுக்கு இறைத்த நீராயிற்று...

எல்லா தேர்தலிலும் நாங்கள்தான். நாங்கள் நிற்க்கும் கூட்டனிதான் வெற்றிக்கூட்டனி என்று தலைகனத்தோடு சொன்னவர்கள். கிராமத்தை மையமாக வைத்து அரசியல் நடத்தும் லாலுவும்ம் ராமதாசும் இந்த தேர்தலில் மரணஅடி வாங்கினார்கள் என்பதே உண்மை.

அன்புடன்/ஜாக்கிசேகர்

ஒரு சின்ன ஏ ஜோக் (கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும்)

எலெக்சன் ரிசல்ட் பார்க்க காலையில் இருந்தே டிவி பொட்டி முன்னாடி உங்காந்துட்டதால இன்னைக்கு சின்ன ஒரு ஏஜோக் மட்டும...

ஒருவர்/ உங்க பையன் பேரு என்னங்க...?


மற்றவர்/ நிரோத்குமார்


ஒருவர்/ ஏன்க இப்படி ஒரு பேரை வச்சிங்க?


மற்றவர்/ அவன் அதையும் மீறி பொறன்தான் அதான்...


அன்புடன்/ஜாக்கிசேகர்

பசங்க படத்துக்கு விகடன் 50மார்க்கு போட்டது தப்பேயில்லை...(PASANGA)

அஞ்சலி திரைப்படத்திற்க்கு பிறகு தமிழில் குழந்தைகளின் பிரச்சனைகளை உளவியல் ரீதியாக சொல்ல வந்து இருக்கும் மற்றும் ஒரு படம் பசங்க... இதில் ஒரளவுக்கு வெற்றியும் பெற்று இருக்கின்றார்கள் என்பது பாராட்டுக்கு உரியது. கொஞ்சம் சினிமாதனம் இருந்தாலும் கூட முடிந்த வரையில் எதார்த்தத்தை மீறாமல் படம் எடுத்த பசங்க குழுவினருக்கு என் நன்றிகள்.

தமிழில் பசங்க பிரச்சனைகளை சொன்ன படங்கள் மிக மிக குறைவு அப்படியே காட்டினாலும் கல்ப் அடிக்கும் போது தொட்டுக்கொள்ளும் பூண்டு உறுக்காய் போலவே குழந்தைகளை பற்றி தமிழ்சினிமாவில் காட்டி இருப்பார்கள் அதிலும், கிராமத்து, சிறு நகரத்து பசங்களின் வாழ்க்கையை தமிழ் சினிமாவில் அதிகமாக பதியப்படவில்லை. அந்த குறையை இந்த படம் போக்கி விட்டது எனலாம்.
குழந்தைகளின் சமீபத்திய திரைப்பதிவுகளாக குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் அழகி, வெயில்,போன்ற படங்களை சொல்லலாம். ஆனால் முழுக்க முழுக்க பசங்களின் நிறை குறைகளை மையப்படுத்தியே வந்து இருக்கும் படம் பசங்க...

வானம் பொய்த்து வேலைதேடி சென்னை வந்து ஆஸ்பெட்டாஸ் ஷீட்டு வேய்ந்த, அநியாய கொள்ளை அடிக்கும் வாடகைவீட்டில் கரண்டு போய் வியர்வை புழுக்கத்துக்கு நடுவில், பட்டிணப்போடி விசிறியால் விசிறிக்கொள்ளும் தென்மாவட்டத்து குடும்பத்தினர்களே, உங்கள் பள்ளி வாழ்க்கையை இரண்டு மணிநேரத்தில் (கடந்த காலத்தை) அசை போட வந்து இருக்கும் படம் பசங்க...

குழந்தைகள் உலகம் வேறானது, அவர்கள் வாழ்க்கை முறையும் வேறு. சிலேட்டு அழிக்க இரண்டு கோவஇலை அவசரத்துக்கு கொடுக்காமல் அ லைகழித்த கந்தகுமாரை பள்ளி விட்டதும் நான் மண்ணில் புரட்டி எடுத்தது ஞாபகம் வருகின்றது . ஆனால் இன்று அதை நினைக்கும் போது சிரிப்பாக இருகின்றது.


என் வகுப்பில் எல்லா கிளாசிலும் பெயிலான ஒரு தடிமாடு படித்து கொண்டு இருந்தது, அவனை இன்று நினைத்தாலும் எனக்கு வயிறு பற்றிக்கொண்டு வரும். எனென்றால் அவன் என்னைஒன்றாம் வகுப்பு படிக்கம் போது அப்படி அழ வைத்து வேடிக்கை பார்ப்பான். என் சிலேட்டில் (+) சிலுவை குறி இட்டு அதன் மேல் கை வைத்தால் அப்பாவும் அம்மாவும் இறந்து விடுவார்கள் என்று சொல்ல நான் கதறி அழுவேன் என்னை அந்த பிளஸ் குறியில் கை வைக்க இழுத்து கொண்டு செல்வான், நான் அழுது புரளுவேன், அது ஒரு கனா காலம். காலங்கள் உருண்டு ஓடி அவன் திருமணத்தை நான் தான் போட்டோ எடுத்துக்கொடுத்தேன். அவன் பெயர் உதயகுமார் கடலூர் திருப்பாதிரிபுலியூரில் உள்ள ராமகிருஷனா உதவிபெரும் நடுநிலை பள்ளியல் படித்தோம்.

பொதுவாக கிராமத்து பள்ளிகளில் காமெடி “குசு” விடுவதும் “ஒன்னுக்கு” அடிப்பதும்தான், நாங்கள் எல்லாம் பள்ளி்வி்ட்டு வரும் போது ஒரு பூண்டு செடியில் தொடர்ந்து ஒன்னுக்கு அடித்து அதை காய்ந்து போக வைப்போம். அவ்வளவு குருர எண்ணம். ,பெரும்பாலும் ஆண்பிள்ளைகளின் விளையாட்டு ஒன்னுக்கு அடிக்கும் இடத்தில்தான் உசுப்பி விடப்படும்.ராஜி இங்க நின்னுக்குனு அந்த சுவத்துல ஒன்னுக்கு அடிச்சான் எங்க நீ அடி பாப்போம்? என்று இங்குதான்
ஈகோ ஸ்டார்ட் ஆகும்,

பசங்க படத்தின் கதை இதுதான்.....

சிறு நகரத்தில் இருக்கும் பள்ளியில் ஆங்கில மீடியத்தில் படித்து விட்டு குடும்ப பொருளாதாரத்தினால் தமிழ் மீடியத்தில் அரசு பள்ளியில் படிக்க வரும் அன்பு எனும் மாணவனுக்கும் அதே பள்ளியில் ஆசிரியராக வேலை பார்ப்பவரின் மகனான ஜீவாவுக்கு நடக்கும் சண்டைதான் பசங்க படத்தின் கதை இதில் இரண்டு குடும்பமும் எதிர் எதிரில் வசிக்க நடக்கும் சுவாரஸ்யங்கள்தான் படத்தின்கதை, ரொம்பவும் பசங்களை காட்டி ஓவர் டோசாக மாறி விடக்கூடாது என்பதற்க்காக அன்புவின் சித்தப்பாவும்,ஜீவாவின் அக்காவும் காதல் செய்ய, படம் ஆரம்பம் முதல் இறுதிவரை ஜாலி ஜாலிதான் போங்கள்... கதை என்ற பெயரில் முழக்கதையும் சொல்வது எனது கம்பெனி பாலிசிக்கு எதிரானதால் நீங்கள் திரையில் குழுந்தைகளுடன் பார்த்து மகிழுங்கள்.கடைசி காட்சியில் மருத்துமனையில் எல்லோரும் கைதட்டிக்கொண்டு இருக்க ஒருவர் எழுந்து ரபரப கலிபிலி அலேலுயா...கார்த்தவே என்று கத்த தியேட்டர் முழுவதும் சிரிப்பலை அடங்க வேகு நேரம் ஆயிற்று...படத்தின் சிறப்புகள்.....


ரொம்ப நாளைக்கு பிறகு தபால் பெட்டி ட்ரவுசர்,விளையாட்டு சிறுவர் பாடல்கள்,அந்த வெள்ளந்தி சிறுவர்களின் குறுக்கு புத்தி என்று படம் நெடுக இயக்குநர் தன் முத்திரையை பதித்து இருக்கின்றார்.

படத்தின் திரைக்கதைக்கு வசனங்களுக்கு அவர்கள் கவலை படவே இல்லை,நாம் நினைவில் எப்போதும் இருக்கும் வசனங்கள் (உம்) ரன் படத்தில் வில்லன் பேசும் வசனம், அவன் வருவானாடா? போன்ற வசனங்களையும் சம காலத்தில் எல்லா தமிழ் படத்தில் வரும் வசனங்களையும் பசங்கள் பேசினால் என்ற இயக்குநரின் கற்பனை நன்றாகவே ஒத்துழைக்கின்றது.

குழந்தைகளின் எல்லா தவறுகளுக்கும் முதல் படி பெற்றோர்கள்தான் என்றும் அதற்க்கு குளக்கரையில் அந்த பிள்ளைகளின் தகப்பன்கள் பேசம் ஒரு லெக்சர் சூப்பர்.

பிள்ளைகளை கனவுகானுங்கள் என்ற அப்துல்கலாம் சொன்ன வார்த்தைக்கு சிறப்பாக திரைக்கதை கொடுத்த இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அதிலும் பெயருக்கு பின்னால் நீ என்னவாகப்போகிறாய் என்று சேர்த்துக்கொள்ளும் ஜடியாவும், பாராட்டும் ஐடியாவும், ரொம்ப சூப்பர்.

காதல் ஜோடிகளாக வரும் இருவர் நடிப்பும் மிகவும் அருமை...அந்த பெண் சரோஜா படத்தில் நடித்ததாம்.

ஜீவாவின் அப்பாவாக நடித்து இருக்கும் வகுப்பு ஆசிரியர் கேரக்டர் மெருகு ஏறிய நடிப்பை வெளிபடுத்தி இருக்கின்றார். முக்கியமாக பாடம் எடுத்து கொண்டு இருக்கும் போது ஹெட்மாஸ்டர் அழைப்பதாக குரல் வாய்ஸ் ஓவரில் வர மிக அழகாக தலையசைப்பார் பாருங்கள் அது ஒன்று போதும் . கல்லூரி படத்தில் ஆசிரியராக நடித்த உதவி இயக்குநர், அன்பு பையனின் அப்பா கேரக்டரை அசத்தலாக பண்ணி இருக்கின்றார் வாழ்த்துக்கள்

கற்றதுதமிழ் படத்தில் நடித்த பையனை தவிர எல்லோரும் புது முகங்கள் அதிலும் பிள்ளைகளை வைத்து வேலை வாங்குவது கொடுமையிலும் கொடுமை அந்த உழைப்புக்கு பலன் இருக்கின்றது.


கமல் படத்தை போல் சின்ன சின்ன ஜோக்குகள் படம் முழுக்க விரவி கிடைக்கின்றது. பார்த்து ரசிப்பதற்க்குள் அடுத்த ஜோக் வந்து விடுகின்றது.

கேமரா பிரேம் குமார் அறிமுகம்,பசங்க சைக்கிளில் டிரிபிள்ஸ் போகும் போது அன்புவை வீழ்த்துவதை பற்றி பேசிக்கொண்டு போவதை ஒரே ஷாட்டில் எடுத்து இருப்பார்கள், ஒரு கேமராமேனாகவும் ஒரு குறும்பட இயக்குநாராகவும் அதற்க்கு அவர்கள் எவ்வளவு மேனக்கெட்டு இருப்பார்கள் என்பதை என்னால் உணர முடிகின்றது. ஹெட்ஸ் அப், பிரேம்குமார் இயக்குநர் பாண்டிராஜ்.

முகம் பார்த்து உருவம் பார்த்து முடிவு செய்யும் உலகம் இது. நானும் இந்த கேவலமான எண்ணவோட்டத்துக்கு விதிவிலக்கல்ல, அப்படி உருவம் பார்த்து எடை போட்டு இந்த சமுகம் கஜினி இயக்குநர் முருகதாஸை எப்படி ஒதுக்கியதோ, அது போல் இந்த படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் முதல் பார்வையில் ஒரு வெகுளித்தனமான தோற்றத்தோடே இருந்தார். அவர் எப்படி இப்படி ஒரு சினிமா கொடுக்கப்போகின்றார் என்று அவர் பேட்டி கொடுத்த விதத்தை பார்த்து நான் யோசித்து இருக்கிறேன். வித்தான விதை பாலைவணத்தில் கூட வளர்ந்து விடும் என்பதற்க்கு பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் மிகச்சிறந்த உதாரணம்.

நல்ல படத்தை எடுக்க துணிந்த இயக்குநர் தயாரிப்பாளர் சசிக்குமாருக்கும் அந்த வாய்பை மிகச்சரியாக பயண்படுத்திய இயக்குநர் பாண்டிராஜ்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்

Category:

Children, Comedy

Language:

Tamil

Time Duration:

02:20 Hours

Year of Release:

2009

Color:

Colored

Director:

Pandiraj

Studio:

Company Productions

Cast:

Jeeva, Anbu, Manonmani, Kuttymani, Mangalam, Pakkada
Tit Bits:படம் பார்த்தது சத்யம் காம்ளெக்ஸ்,மனைவியுடன்தான் படத்துக்கு போனேன்.

தியேட்டரில் மஞ்சள் டாப்பும் சின்ன ஸ்கர்ட் போட்டு வந்த பெண்ணை பார்க்க என் மனைவி நீ எந்த ஜென்மத்திலும் திறுந்த போவதில்லை என்று தலையில் அடித்துக்கொண்டாள்.

காபி இரண்டு கையில் வாங்கி வந்த போது திறக்க யாரும் இல்லாத காரணத்தால் கதவில் இடித்து 40ரூபாய்க்கு வாங்கிய காபி என் மனைவி உட்கார்ந்த இடத்துக்கு வந்த பேது 37.50 காசு காபியாக மாறிப்போனது.


ஒன்னுக்கு இருக்கும் இடத்தில் ஒருவன் என்னை குறு குறுன்னு பார்த்தான்.பயத்தில் கழுத்து பக்கம் வியர்த்து வெளி வந்தேன்.


சன் காம்யிரர் குருப் படத்துக்கு வந்து அலட்டியது.

என் பக்கத்தில் வர்ஷா என்ற பெண் டிக்கெட் புக் செய்து படத்துக்கு வர வில்லை சோ மூன்று சீட் என் பக்கத்தில் காலியாக இருந்தது வீதியை நினைத்து நொந்தபடி...


பாத்தே தீர வேண்டிய படங்கள் வரிசையில் இன்னும் தமிழில் பல படங்கள் எழுத இருந்த நேரத்தில் இது முந்திக்கொண்டதிற்க்கு இந்த படத்தில் உள்ள சரக்குதான் காரணம்.

நண்பர்கள் படி்த்து ரசித்து விட்டு தமிழ் மணத்திலும், தமிலிஷ்லும் ஓட்டு போடுவது உங்கள் ஜனநாயக கடமை அல்லவா? மறக்காமல் ஓட்டுப்போட்டும், பின்னுட்டம் இட்டும், இன்னும் என்னை மென்மேலும் எழுத உற்சாகப்படுத்துவீர் என்ற நம்பிக்கையுடன்

அன்புடன்/ஜாக்கிசேகர்

தேர்தல் ஆனையத்திற்க்கு யார் புத்தி சொல்வது????


நேற்று இந்தியாவில் கடைசிகட்ட தேர்தல் நடந்தது முடிந்தது. புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை இருந்தால்தான் வாக்களிக்க முடியும் என்ற நிலைப்பாட்டை தேர்தல் கமிஷன் எடுத்து இருந்தது. நல்ல விஷயம் போட்டோ இல்லாமல் யார் வந்தாலும் அதனை கண்டு பிடிக்கவும் கள்ள ஓட்டை தடுக்கவும், இந்த திட்டத்துக்கு ஈடு இனையில்லை.

கள்ள ஓட்டை தடுப்பதற்க்காக இந்த நடவடிக்கையை நான் ஆதரிக்கின்றேன், இல்லை என்றால் காலையில் யாராவது நமது ஓட்டை போட்டு விட்டு செல்ல பதினோரு மணிக்கு நாம் போகும் போது நம் ஓட்டை வேறு யாரோ, போட்டு வி்ட்டு போய் இருப்தாக சொல்லுவார்கள் அதனால் புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை சிறந்ததுதான்.

ஆனால் அந்த புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை சரியாக தேர்தல் ஆனையம் வழங்கியதா? என்பதில் ஏகப்பட்ட குளறுபடிகள், இந்த திட்டம் நல்ல திட்டம்தான் ஆனால் இது நகர்புற மக்களை மட்டுமே கருத்தில் கொண்ட வந்த நடைமுறையாகும்.

புகைப்பட வாக்காளர் அடையாள அட்டையை கொடுத்து அதற்க்கு கடைசி தேதி அறிவித்தது எல்லாம் சரி, அனால் இது குப்பத்து மக்களையும் பாமர மக்களையும் சென்று அடைந்ததா? எனறால் இல்லை, எங்காவது இலவசசேலை கொடுக்கின்றார்கள் என்றால் காட்டு தீ போல் பரவும் விஷயம் இது போன்ற விஷயங்களுக்கு பரவுவதில்லை.

நேற்று வாக்களிக்க வந்த பல தலைகாய்ந்த பொது மக்கள் திருப்பி அனுப்பட்டனர், பலருக்கு இப்படி ஒரு அறிவிப்பு வந்தது தெரியவில்லை அப்படி வந்தாலும் நாளைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று நினைத்து மறந்து போனவர்களும் நிறைய பேர். எல்லாம் அன்னாடங்காச்சிகள், மாம்பலம் அண்ணாநகரில் இருப்பவன் தினமும் பேப்பர் பார்பான் டிவியில் நியுஸ் பார்ப்பான் நம்மாளு டிவியில் கோலங்கள்தவிர ஏதும் பார்பதில்லை....

நாங்கள் அறிவித்து விட்டோம் அவர்கள் கேட்கவில்லை என்றுபொத்தம் பொதுவாக சொல்லி எம் மக்களை கை கழுவி விட முடியாது, தெரு தெருவாக விழுப்புரத்தில் ஜாக்கெட் துணி விற்ற எனது பாட்டி, என் அம்மாவை படிக்க வைத்ததால் அவள் படிப்பின் மேன்மை தெரிந்ததால் நான் படித்தேன் வெளியுலகுக்கு வந்தேன் அனால் இன்னும் எத்தனை எத்தனை குடுங்பங்கள் இன்னும் அடிமட்டத்தில் இருக்கின்றன தெரியுமா?

இன்று டெக்னாலஜி எவ்வளவோ வளர்ந்து விட்டது ஒரு 100 மொபைல் அடையாள அட்டை வழங்கும் வாகனங்கள் ரெடி செய்து ஒரு நாளைக்கு ஒரு ஏரியா என்று சனிக்கிழமைகளில் ஞாயிற்று கிழமைகளில் கொடுத்து இரு்ந்தாலே தமிழகம் முழவதும் ஏன் இந்தியா முழுவதும் கொடுத்து இருக்கலாமே... அப்படி அதிக செலவு பிடிக்கும் என்று தோன்றினால் அந்த திட்டத்தை கை விடுங்கள், வாக்காள அடையாள அட்டை வைத்திருக்கும் படித்தவன் எவனும் அதிக அளவில் ஓட்டு போட வரவில்லை என்பதே உண்மை...


நாம் வளர்ந்து வரும் நாடு... வளர்ந்த நாடு அல்ல என்பதை தேர்தல் ஆனையம் கருத்ில் கொள்ள வேண்டும் . அதே போல் எல்லா விஷயத்துக்கும் அலட்சியம் நம் மக்களிடம் கூடி கொண்டு இருக்கும் இல்லையென்றால் இலங்கையில் நம் இன மக்கள் கொத்து கொத்தாக செத்து மடியும் போது டிவியில் திருடா திருடி பார்க்க முடியுமா?

கணக்கு எடுப்பவர்கள் கொஞ்சம் வேலை செய்பவர்களாக போட வேண்டும் யாரு வீ்ட்டு எழவோ பாய போட்டு அழுவோ என்பது போல் வேலை செய்கின்றார்கள், பெயர்களில் தவறு, வீட்டு விலாசங்களில் தவறு, பக்கத்து வீட்டுகாரார் பெயரை கணவர் பெயராக போட்டு லேமினேஷன் வேறு போட்டு கொடுத்த கொடுமை.
(அதன் பிறகு அந்த அக்காவை தண்ணி பிடிக்கும் இடத்தில் எல்லாம் காமெடி யென்ற பெயரில் அவளை போட்டு கலாய்த்து விட்டார்கள்)

எவ்வளவோ தவறுகள் இந்த தவறுகளை எல்லாம் சரி செய்து விட்டு 99 சதவிகதம் மிகச்சரியாக புகைப்பட அடையாள அட்டை வழங்கி விட்டு மக்களை வீரமாய் நெருக்குங்கள்... அதை விட்டு அப்பாவிகளை அலைகழிக்காதீர்கள்..


என் மனைவி இது வரை ஓட்ட போட்டதில்லை திருமணம் முடிந்து முதல் வேலையாக ஜனநாயக கடமையாற்ற புகைப்படம் எடுத்து இனைத்தேன். மூன்ற மாதங்களுக்கு முன்பு என் ஹவுஸ் ஓனர் அதீத பண ஆசையால் வீடு மாற நேரிட்டது.

சரி ஓட்டு போட போகலாம் என்று போனேன் கணவன் என் பெயர் இருக்கின்றது என்மனைவி பெயர் பக்கத்தில் வீடு ஷீப்ட் என்று எழுதி இருந்தது. கணக்கு எடுத்த சோமாறி என்னை அதே வீட்டிலையும் என் பொண்டாட்டியை வேற விட்டுக்கும் அனுப்பி வச்சி இருக்கான், இரண்டு பேர் பேரையும் ஹவுஸ்ஷீப்டட் லீஸ்ட்ல வச்சி இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பேன்...


தேர்தல் ஆனையத்தின் மேல் எரிச்சல் அடைந்தது நடிகர் கமல் மட்டும் அல்ல என் மனைவியும்தான்....இதுதான் தேர்தல் அனையத்தின் லட்சனம்
அன்புடன்/ஜாக்கிசேகர்

சென்னையில் ஏன் சத்தியம் தியேட்ட்ர் சிறந்தது...


பத்து வருடத்துக்கு முன் ரிபான்விங்கிள்போல் யாராவது படுத்து தூங்கி இப்போது எழுந்து சத்தியம் தியேட்டர் போனால் அவன் மயக்கம் அடைந்து விழுந்து விடக்கூடும் எந்த இடத்திலும் பழமையை அந்த தியேட்டர் நிர்வாகம் கொஞ்சம் கூட
மிச்சம் வைக்கவில்லை, சம காலத்தில் எல்லா இடத்திலும் புதுமை புகுத்திய ஒரே தியேட்டர் சத்தியம் தியேட்டர்தான்...

முதலில் அடிப்படை வசதியான கழிவறை.
என் வீட்டில் கழிவறை கட்டியதும் நான் சாக்பீசால் என் வீட்டு டாய்லட் சுவற்றில் எழுதிய முதல் வாசகம், உங்கள் வீட்டு டாய்லட்டின் சுத்தத்தை வைத்தே வெளியார் உங்களை மதிப்பிடுவார்கள் ஆகவே டாய்லட்டை சுத்தமாக வைத்து இருங்கள் என்று எழுதி வைத்து இருந்தேன். என்னை பொறுத்தவரை டாய்லட் சுத்தத்துக்காகவே சத்தியம் தியேட்ட்ரில் படம் பார்க்கலாம். அதே போல் ஒவ்வோறு உச்சா போகும் இடத்தின் மேலேயும் ஒரு சின்ன டிவி வைத்து விளம்பரம் படுத்தும் ஒரே தியேட்டர் சத்தியம்தான்.
படம் பார்க்க வரும் எல்லோருமே மனிதர்கள் அவர்கள் ரோபோ அல்ல... என்பதை மற்ற தியேட்டர் நிர்வாகங்கள் புரிந்து கொள்ள வேண்டும்..

இரண்டாவதாக பார்க்கிங்
எனக்கு தெரிந்து சென்னையில் பெரிய ஏரியாவை வாங்கி பார்க்கிங் பர்ப்பசுக்காக வைத்து இருக்கும் ஒரே நிர்வாகம் சத்தியம் நிர்வாகம் மட்டுமே... கார் எடுத்துக்கொண்டு வந்து எங்கே எப்படி பார்க் செய்வது என்று விழி பிதுங்கி நிற்கத்தேவையில்லை. சென்னையில் முதன் முதலில் இரு சக்கர வாகனத்துக்கு பத்து ரூபாய் வசூலித்த முதல் தியேட்டர் சத்தியம் தியேட்டர்தான்.


முன்றாவதாக ஒளி ஒலி

ஆர்டி எக்ஸ் என்ற டிஜிட்டல் புரொஜெக்ஷன் மூலம் படங்கள் திரையிடுவது இந்தியாவிலே சத்யம் தியேட்டர்தான் முதலிடம். டிடிஎஸ் சவுண்டும் மிக அற்புதமாக இருக்கும். ஆங்கில படங்கள் சத்யத்தில் பார்பது என்பது அலாதி பிரியமான விஷயம் எனக்கு .

நன்காவது ஃபயுல் கார்டு

நீங்கள் 300 ரூபாய் கொடுத்து இந்த ஃபயுல் கார்டு வாங்க வேண்டும் அதில் 50ருபாய் ஒரு வருடக் கார்டு கட்டணமாக எடுத்துக்கொள்வார்கள். அதன் பிறகு எவ்வளவு ரூபாய் வேண்டுமானாலும் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம் அதன் பிறகு நீங்கள் போன் மூலமாகவும் நெட் மூலமாகவும் டிக்கெட் புக் செய்து கொள்ளலாம்...

படம் ஓடிக்கொண்டு இருக்கும் போது பாப்கார்னும் கோக்கும் வேண்டும் என்றால் நீங்கள் முன்பே இந்த கார்டு மூலம் புக் செய்து விட்டால் சரியாக அந்த நேரத்துக்கு படம் ஓடிக்கொண்டு இருக்கும் போதே டார்ச் லைட் அடித்து வந்து உங்கள் சீட்டில் டெலிவரி செய்வார்கள்.


இன்னும் சில சின்ன சின்ன விஷயங்கள்...

மேல் உள்ள தளங்களில் சின்ன பசங்களுக்காக பிளேஸ்டேஷன் வைத்து இருக்கின்றார்கள்.

முதல்தளத்தில இட்லி தோசை கிடைக்கும் வகையில் ரெஸ்ட்டாரண்ட் வைத்து இருக்கின்றார்கள்.

பத்து ரூபாய் டிக்கெட் சீட் தவிர அனைத்தையும் குஷன் சீட்டாக மாற்றி விட்டார்கள் இன்னமும் பத்து ரூபாய் டிக்கெட் கொடுக்கும் ஒரே தியேட்டர் சத்யம்தான்.
(மற்ற தியேட்டர்கள் அதை கொடுத்தாலும் அது முழுக்க பிளாக்கிள்தான் போகும்)

350 சீட் கெப்பாசிட்டி உள்ள தியேட்டரை பெரிய பெரிய குஷன் சீட் வைத்து 250 சீட்டாக குறைத்து விட்டார்கள் அதே போல் நன்றாக இடம் விட்டு சீட்களை அமைத்து இருக்கின்றார்கள் அதனை ஈடுகட்ட ரூபாய் பத்துக்கு பிறகு டிக்கெட் ரேட் ரூபாய் 100, 110,120 என்று ஏற்றி வைத்து இருக்கின்றார்கள்.

சுத்தம் சுத்தம் எங்கும் சுத்தம் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து போகும் தியேட்டரில் எங்கும் ஒரு சாக்லேட் பேப்பர் கூட பார்க்க முடியாது. காபி வாங்கி வரும் போது கைதவறி காப்பி்கொட்டி ஈ மிக்கும் பேச்சக்கே இடம் இல்லை.

டிக்கெட் கிழித்து உள்ளே போகும் போது வெல்கம்சார் என்று எல்லோருக்கும் சொல்ல தவறுவது இல்லை.

பத்தேகாலுக்கு படம் என்று சொல்லி பத்து பத்துக்கு தியேட்டர் உள்ளே விட்டு, சீட் தேடி உட்காருவதற்க்குள் படம் போட்டு விடும் தியேட்டர்களுக்கு மத்தியில் பத்தேகால் படத்துக்கு பத்து 5க்கு உள்ளே வி்ட்டு மிகச்சரியாக பத்தேகாலுக்கு படம் போடும் ஒரே தியேட்டர் சத்யம்தான்.

ரூல்ஸ் என்பது எல்லோருக்கும் பொது என்பதை சத்யம் நிர்வாகம் செவ்வனே செய்து வருவதை பார்த்து இருக்கிறேன்.

எல்லா சிப்பந்திகளும் எல்லோரிடமும் மிக மரியாதையாய் நடந்து கொள்கிறார்கள் அந்த தியேட்டர் ரூல்ஸ் மீறப்படும் போதுதான் அவர்கள் கோபமாக பேசுகின்றார்கள். எங்கும் சிகெரெட் குடிக்க கூடாது என்பது ரூல் ஆனால், பாத் ரூமில் மறைந்து தம் அடித்தால் கோபம் வருமா? வராதா?


நான் இரண்டு கப் காபி வாங்கி வருகிறேன். ஸ்விங் டோர் என்பதால் சில பேர் போனதும் முடிக்கொள்கின்றது. நான் கதவை திறக்க யார் உதவியை நாடலாம் என்ற யோசித்து நடந்து வருவதற்க்குள் ஒரு சத்யம் கடைநிலை சிப்பந்தி ஓடி வந்து கதவை திறந்து விட்டான் பாருங்கள், அதுதான் சத்தியம். அந்த நிறுவனத்தை மிக நன்றாக நேசிப்பவனால்தான் அதை செய்ய முடியும். (அவனுடைய செயல்தான் இந்த பதிவை எழுத வைத்தது)கிராமத்தில் டென்ட் கொட்டாயில் படம் பார்த்த நண்பன் சென்னை வந்தால் அவனுக்கு சென்னையை சுற்றி்க்காட்டும் போது அதில் சத்யம் தியேட்டரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


பெண்களை எவரும் ஈவ்டீசிங் செய்ய முடியாத படி எல்லா இடத்திலும் சத்தியம் ஆட்கள் இருக்கின்றார்கள்

ஓத்தா, உன் பருப்பை எடுத்துடுவேன் என்று கைலியை தூக்கி கட்டிக்கொண்டு போடும் தியேட்டர் சண்டையை நான் இந்த வளாகத்தில் பார்த்தது இல்லை.

முன்பெல்லாம் படம் ஒடிக்கொண்டு இருக்கும் போது இதே சத்தியத்தில் பின் சீட்டில் இருக்கும் ஒரு கபோதி பச்சக் என்று பான்பராக் எச்சிலை துப்பி வைக்கும் சில நேரங்களில் அதன் சாரல்கள் என் கால்களில் கூட பட்டு இருக்கின்றது. இப்போது அந்த கபோதிகளை சத்தியம் நிர்வாகம் இனம் கண்டு உள்ளே விடுவதே இல்லை.


படம் ஓடும் போது தடிக்கி விழாமல் நடந்து போகும் அளவுக்கு மெல்லிய விளக்கு வெளிச்சம் தியேட்டரின் படிக்கட்டு சீட்டுகளில் வைத்து இருப்பார்கள்.

அதே போல் புதிதாய் வரும் ரசிகனுக்கு எதாவது பிரச்சனை என்றால் அரங்கத்தின் எமெர்ஜென்சி வழியை கம்யுட்டர் கிராபிக்சில் காட்டி வழி எங்கு இருக்கின்றது என்பதை படம் ஆரம்பிக்கும் முன் ஷோவ் ரீலாக போடுகின்றார்கள்.

மக்கள் கூடும் எல்லா நிறுவனத்துக்கும் சமுக பொறுப்பு இருக்கின்றது அதனை நிர்வாகம் உணர்ந்து சத்தியம் தியேட்டரே தயாரித்த எயிட்ஸ் விழிப்புனர்வு விளம்பரபடங்களை படம் போடும் முன் போடுகின்றார்கள் முன்பு ஜனகனமன போட்டார்கள் இப்போது நிறுத்தி விட்டார்கள் ஏன் என்று தெரியவில்லை.

நான் சத்தியம் பக்கம் மூன்று மாதத்துக்கு ஒரு முறைதான் செல்லுவேன் நேற்று கூட நியுட்டன் முன்றாவது வீதி படம் மனைவியோடு பார்க்க சென்றேன். இரண்டு டிக்கெட் 240ரூபாய், பார்க்கிங் பத்து ரூபாய், இரண்டு காப்பி40 ருபாய், ஆக மொத்தம் 290ரூபாய் செலவு செய்து படம் பார்த்தேன்... ஒரு மாச சமையல் கேஸ் அமவுண்ட் கொடுத்து படம் பார்த்து விட்டு வந்ததாகவே என் மனம் சொல்லியது..
( நம்ம எல்லாம் மிடில்கிளாஸ் இல்லை?)

படம் சொல்லிக்கொள்ளும் படி இல்லை...நல்ல திரைக்கதை பட் எஸ்ஜே சூர்யா நடிப்பை பார்த்தால் சிரிப்புதான் வருகின்றது.

எல்லா பணக்கார வீட்டு பிள்ளைகளின் பாக்கெட் மணிதான் சத்யத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகது அவ்வளவு இளைஞர்கள்...கூட ஒரு ஜீன்ஸ் டிசர்ட் அணிந்த பெண்ணுடன்...


இப்போது தியேட்டரின் சில மைனஸ்கள்...


தியேட்டர் புல்லும் ஏசி என்பதால் 7 ரூபாய் காப்பியை 20 ரூபாய்க்கு விப்பது ரொம்ப ஓவர்.

சமான்ய குடும்பம் சத்யத்தில் படம் பார்க்க ஒரு படத்துக்கு 750 ரூபாய் கொடுக்க வேண்டும்.
டிக்கெட் விலையேற்றத்தை நிர்வாகம் குறைக்க வேண்டும். பர்மா பஜாரில் ஒரு 5,1 டிவிடி 50 ரூபாய் என்பதை சத்யம் நிர்வாகம் உணர வேண்டும்


அவ்வளவுதான் இருப்பினும் இதே அளவுக்கு பணம் பெறும் தியேட்டர்கள் சத்தியம் அளவுக்கு சென்னை வாழ் ரசிகனுக்கு சேவை செய்ய வில்லை என்பதே உண்மை...


குறிப்பு/ எனக்கு கமலா தியேட்டரில் 40 ரூபாய் டிக்கெட்டில் படம் பார்க்கதான் ஆசை.( நம்ம பட்ஜெட் அப்படி) என் மனைவிக்கு சத்யம்தான் பிடிக்கும் காரணம் அந்த தியேட்டரில்தான் அவளால் முழுதிரையையும் பார்க்க முடியும். அதனால்தான் நம்ம சாய்ஸ சத்யம்.

அன்புடன் /ஜாக்கிசேகர்

ஊட்டி மலை ரயில் ஒரு பார்வை, ஊட்டி ரயில் டிரைவரின் சோகம்???பாரம்பரிய ஊட்டி மலைரயிலில் பயணம் செய்வது என்பது மிகவும் கொடுத்து வைத்த விஷயம் என்று அனைவரும் சொல்லுவார்கள் நான் ஊட்டிக்கு பல முறை சென்றாலும் மலை ரயில் பயணம் இது வரை சாத்தியப்பபட்டதில்லை. அதற்க்கு காரணம் அதற்க்கு முன்பே ரிசர்வ் செய்ய வேண்டும் என்பதால் அது நடுத்தர குடும்பமான எனக்கு சாத்தியம் இல்லாத விடயம்.

கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வந்து பஸ் ஏறினால் மட்டுமே என் பயணம் சாத்தியப்படுவதாக அர்த்தம் அது வரை அந்த பிளான் ஜெயலலிதா ஈழ ஆதரவு போல் தெளிவில்லாமல் இருக்கும். இந்த முறை நான் குடும்பத்துடன் ஊட்டியில் இருந்ததால் அது சாத்தியப்பட்டது .

“சார் ரிசர்வ் இல்லாத ஓப்பன் டிக்கெட் கிடைக்கும் ஒரு 50 டிக்கெட் வரை கவுன்டர்ல கொடுப்பாங்க”

நீங்க வரிசையில நில்லுங்க உங்க லக் கிடைச்சாலும் கிடைக்கும் என்ற அந்த ஊர் ஆட்டோ டிரைவர் சொல்ல என் லக்கை சோதித்தேன் லக்கில் டிக்கெட் கிடைத்து . ஊட்டி டூ குன்னுர் டிக்கெட் எடுத்தோம் ஒரு டிக்கெட் விலை வெறும் 3 ரூபாய் மட்டுமே இதில் கொடுமை என்ன வென்றால் பிளாட்பார்ம் டிக்கெட் அதே மூன்று ரூபாய்தான்...

நான் எப்போதுமே எந்த ஊர் சென்றாலும்அந்த ஊரின் ஆட்டோ டிரைவ்ர் பொதுஜனம் போன்றவர்களிடம் எனக்கு எழும் சந்தேகங்களை தயங்காமல் கேட்பேன்.அப்போதும் பல சுவாரஸ்யமான உண்மைகள் வெளி வரும்.

எல்லோரும் ரயிலில் ஏற முண்டியடித்து கொண்டு இருக்கும் போது நான் ரயில் டிரைவரிடம் பேச்சு கொடுத்தேன், ஏனென்றால் மக்கள் எல்லோரும் மிக ஆவலாக பயணம் செய்ய இருக்கும் ரயிலை ஓட்டும் டிரைவரிடன் மன நிலை எப்படி இருக்கும் என்று பேச்சுக்கொடுத்தேன் , அவரிடம் பேச வேறு காரணமும் உண்டு . நான் பள்ளியில் படித்த போது பெரியவர்களாக மாறியதும் என்ன வேலைக்கு போவிர்கள் என்ற அரத பழசான கிராமத்து கேள்வியை எங்கள் முன் ஆசிரியர் கேட்ட போது நான் தயங்காமல் சொன்ன வேலை ரயில் என்ஜீன் டிரைவர் ஆக வேண்டும் என்பதுதான். அது என் கனா, வாழ்வின் மிகப்பெரிய லட்சியம் ஆனால் கால ஓட்டத்தில் அந்த லட்சியம் கரைந்தோடி விட்டது.

ஊட்டி ரயில் டிரைவர் சோகம் இங்கே...
உலகத்துல கொடுமையான வேலைன்னா அது இந்த மலை ரயிலை ஓட்டறதுதான் இப்ப நான் குன்னுர் போறேன் திரும்ப சரியான நேரத்துக்கு திரும்ப வருவன்னு சொல்ல முடியாது, சில நேரத்துல நிறைய மழை பேஞ்சு பாறை டிராக்ல சரிஞ்சு கிடைக்கலாம்,


இதோ இந்த பயோ என்ஜீன் திடிர்னு மக்கார் பண்ணலாம், திடிர்னு கூட்டமா காட்டு விலங்குகள் டிராக்கை வழிமறிச்சு நகராம நிக்கும், அதனால இந்த வேலை ரொம்ப கொடுமையானது சார் அது மட்டும் இல்லாது எல்லா பயணிகளின் பாதுகாப்பு ரொம்ப முக்கியம் இவங்களை எல்லாம் கொண்டு போய் பத்திரமாய் சேர்க்கும் வரை எனக்கு டென்ஷன்தான் என்று, பீலிங்கை என்னிடத்தில் கொட்டினார். பெயர் போட்டோ வெளியயிடக்கூடாது என்ற கன்டிஷன் வேறு...

எல்லாவற்றையும் விட கொடுமை எந்த ஸ்டேசன்லியும் வண்டியை நிறுத்திட்டு ஒன்னுக்கு கூட போக முடியலை. வியாசர்பாடி சென்டரல் ஸ்டேசன்ல ஒரு கேனை வண்டியை கடத்தி போய் இடிச்சாலும் இடிச்சான், எங்கலை வண்டியை வீட்டு டீக்கூட குடிக்க போக கூடாதுன்னு சொல்லறாங்க.. இவ்வளவு ஏன் வண்டியை விட்டு எறங்கவே கூடாதுன்னு சொல்லறாங்க...
நீங்க சொல்லுங்க குளிர்ல அடிக்கடி உச்சா வேற வந்து தொலையுது, எங்களுக்கு என்ஜீன்ல டாய்லட்டா கட்டி கொடுத்து இருக்காங்க? நியாமான கேள்வி பதில் பேசாமல் அவர் பரிதாப முகத்தை பார்த்து கொண்டு இருந்தேன். இதைதான் எங்க ஊர்ல தென்னை மரத்துல தேள் கொட்டனா, பனமரத்துல நெறிக்கட்ம்னு சொல்லுவாங்க... ரயிலை கடத்துனது சென்னைசென்ட்ரல்ல அது ஊட்டி டிரைவர் ஃபரியா உச்சா போறதை தடுக்குது இது தான் நியுட்டன் முன்றாவது விதியா????

நமக்கு ஒரு எண்ணம் எப்போதும் இருக்கும் பிரபல நடிகை அல்லது நடிகரை பார்க்க நாம் முன்டியடித்து கொண்டு இருப்போம் ஆனால் அவர் அவரின் கார் டிரைவரிடம் சகஜமாக தோளில் கை போட்டு பேசுவார், ச்சே அந்த டிரைவர் எவ்வளவு சந்தோசமா? இருப்பார்னு நாம நினைச்ச அது முட்டாள்தனம்தான். பிரபல நடிகை அல்லது நடிகர் கொடுக்கிற ஓத்தாம்பட்டு அவனுக்குதான் தெரியும். அதுபோல்தான் ஊட்டி ரயிர் என்ஜீன் டிரைவர் நிலையும்.

ரயில் நிலையத்தில் வரிசையில் நிற்க்க வைத்தார்கள் அதனால் நிறைய பேரின் கைக்குட்டைக்கும், ஹென்ட் பேகுக்கும் அவசியம் இல்லாமல் போனது. ரயில் வந்தது. கூட்டம் நின்ற கொண்டு பயணித்தது. குகை வரும் போது விளக்கு எறிந்து பெட்டி இருட்டாகி பின்பு குகைவிட்டு வெளிச்சம் வந்த போது ரயி்லில் குழந்தைகளின் சத்தம் காதை பிளந்தது.

எனக்கு அப்படி ஒன்றும் ஊட்டி மலை ரயில் ஈர்க்க வில்லை. ஒரு வேளை பன்னிரன்டு வயதில் ஊட்டி ரயிலில் ஏறி இருக்க வேண்டுமோ?????

பதிவர் சந்திப்பும், குட் டச் பேட் டச் பற்றிய கருத்தரங்கமும்....(நிழற்படங்களுடன்)


something is better than nothing என்று சொல்லுவார்கள் அதாவது எதவுமே செய்யாமல் வெட்டியாக இருப்பதை விட எதையாவது செய்யுங்கள் என்பதே மேலுள்ள ஆங்கில வாக்கியத்தின் தமிழாக்கம். ஒன்னு வீரப்பன் போல மாறு இல்லை அப்துல்கலாம் போல மாறு அல்லது எதாவது செய் ஆனால் ஏதும் செய்யாமல் இருக்காதே...

இதுவரை நான் கலந்து கொண்டது வரை பதிவர் சந்திப்பு கும்மி, அரசியல், போட்டோ ,மெரினா லைட்ஹவுஸ் டீக்கடை,நீங்கதான் ஜாக்கியா? என்ற வினாவுடனான முகங்கள்,சிகரேட், டீ, மானிக்சந்த், உலக சினிமாக்கள், இடஒதுக்கிடு, பிராமனதுவேஷம்,ஜெயலலிதா, கருணாநிதி அரசியல் நிலைப்பாடு போன்றைவைகளோடு பொதுவாக இதுவரை நான் கலந்து கொண்ட பதிவர் சந்திப்புகள் நடந்து முடிந்து இருக்கின்றன.. கவனிக்கவும் நான் கலந்த கொண்ட...

ஆனால் இந்த சந்திப்பு சற்றே வித்யாசமாக இருந்தது, பதிவர் சந்திப்பு ஆரம்பித்து 15 நிமிடத்தில் உத்தி பிரிந்து சின்ன சின்ன குழுவாக மாறி மெரினா டீக்கடை சென்று கலைந்து போகும் அந்த வகையில் இந்த பதிவர்சந்திப்பை பாராட்டலாம்.
வந்த 50 பேரும் எங்கும் நகரவில்லை மூன்று மணிநேரம் கூட்டம் கலையாமல் அமைதி காத்தது...

நல்ல பச்சை பேக்குரவுண்டுடன் மைக் செட் எல்லாம் அமைத்து கொடுத்து, நடுவில் காரசேவ், காபி,ஸ்விட் மற்றும் இலவச புத்தகங்க்ளை யும் கொடுத்து அதற்க்கு மேல் கிழக்கு பதிப்பக மொட்டைமாடியை கொடுத்த பத்ரி சாருக்கு என் நன்றிகள்.

குழந்தைகளிடம் எப்படி பெரியவர்கள் நடந்து கொள்வது, அதுவும் 9 வயதிலிருந்து 13வயது அதாவது அவள் பருவம் எய்துவது வரை அவளை சில கயவர்களிடம் எப்படி காப்பது என்று கருத்தரங்கு நடந்தது.

கருத்தரங்குக்கு டாக்டர் ஷாலினி மறறும் டாக்டர் ருத்ரன் தலமை தாங்கி வாசகர்கள் ஐயப்பாட்டையும் ஆழ்ந்த கருத்துக்களையும் சகித்து ஏற்று பதிலலித்தனர். பெண்பதிவர்களா? அல்லது வாசகர்களா என்று தெரியவில்லை, முதன் முறையாக 33பர்சென்ட் இடத்தை அடைத்து கொண்டு இருந்தனர்.

பொதுவாக எந்த பிரச்சனையையும் குழந்தைகளுக்கு கதைகள் முலமாவே சொல்ல வேண்டும் என்று இருவரும் சொன்னார்கள். பொதுவாக இருவரின் அளுமையும் எனக்கு பிடித்து இருந்தது. ஒரு நண்பன் போலே இருவரும் உரையாடினார்கள்.

எந்த இடத்திலும் தான் என்று அகந்தை கிஞ்சித்தும் எட்டிப்பார்க்கவில்லை உதாரணமாக டாக்டர் ஷாலினி 15 நிமடம் பேசிய கருத்துதனக்கு ஏற்புடையதல்ல என்ற பதிவர் பைத்தியக்காரன் மறுதலித்தார் , டாக்டர் ஷாலினி ரொம்ப கூலாக டென்ஷனாகாமல் பரவாயில்லை சார் நீ்ங்க கண்டுபிடித்து விட்டீர்களே என்று அந்த கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்தார்..கிஞ்சித்துத் தன் கருத்து சரியென்று வாதாடவில்லை.

பல பதிவர்க்ளின் கேள்விகள் சிறுபிள்ளைதனமாக இருந்தாலும் அது அவர் அவர் கருத்தாக எடுத்துக்கொன்டேன். மற்றபடி இந்த சந்திப்பு மிகுந்த மன மகிழ்வை தந்தது.

நான் புகைப்படம எடுக்கும் போது என் வலைதளத்தில் ஓப்பன் செய்ய முடியவில்லை என்றும் அதில் வைரஸ் இருப்பதாகவும் அது என் தமிள் எச்டிஎம்மளை எடுத்து விட சொன்னார்கள். எடத்து விட்டேன் அப்படி ஏதாவது பிரச்சனை என்றால் dtsphotography@gmail.com என்ற எனது வலை முகவரியில் தயவு செய்து தெரிவிக்கவும்.

டெக்னிக்கல் விஷயங்களை என்க்கு எப்போதும் போதிப்பவர்கள் நட்டு போல்டும் அக்னி பார்வையும்தான்.

அதிஷா வந்த பதிவர்களிடம் பெயர் மற்றும் இமெயிலை டோண்டு சார் போல எழுதி வாங்கி கொண்டு இருந்தார். சந்திப்பில் நடந்த கேள்விபதில்கள் சாரம்சம் ஒரு வரி விடாமல் தெரிய

Good touch, bad touch


நம்ம பதிவர் டொண்டு சார் விடிய விடிய கண்விழித்து எழுதிய பதிவை படித்த பயன் பெறவும். தண்டோராவை தனியாக படம் எடுத்து அவர் ஆசையையும் கேபிள் ஆசையையும் நிறைவேற்றினேன்.

பொதுவாக பெண்கள் இருந்ததால் நான் படம் எடுக்க தவிர்த்தேன் அப்புறம் செறங்கு சொறிஞ்ச கையும் கேமரா பிடிச்ச கையும் சும்மா இருக்குமா? அப்புறம் பர பரன்னு நம்ம வேலையை காட்டிட்டேன்.

சரி முக்கிய சில போட்டோ எடுத்துட்டமே என்று கேமராவை உள்ளே வைத்தால் சால்வை போர்த்துவதை படம் எடுக்க லக்கி கேட்டுக்கொண்டார் படம் எடுத்துதேன், பெயர் போடவில்லை அதற்க்கு நேரம் இல்லை, பெயர் போட்டர்ல் எல்லா பெயரையும் போட வேண்டும். அடுத்த முறை பதிவர் சந்திப்புக்கு இது போல் என் கேமராவை எடுத்து போய் பெயரோடு படம் போடுகிறேன்...

விழா முடிவில் ருத்ரன் சார் சொன்னார் உங்களை எல்லாம் வலைதளத்தில் பார்ப்பதை விட உங்களை உணர்வு பூர்வமாய் நேரில் பார்க்கும் போது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக சொன்னார்... அந்தத கூற்றில் இருந்த உண்மையை என் மணம் அசைப்போட்டபடி என் வாகனத்தை எடுத்து பெருங்களத்துரில் அவள் அத்தை வீட்டில் மொக்கை போட்டுக்கொண்டு இருந்த என் மனைவியை அழைத்து வர கிளம்பினேன்.

அன்புடன் /ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner