Wednesday, December 31, 2014

குட் பை 2014


1994 ஆம் ஆண்டு கடலூரில் இருந்து  சென்னைக்கு பேருந்தில் செக்யூரிட்டி வேலைக்கு சரியாக 31 ஆம் தேதி பெரியார் பேருந்தில் சென்னை நோக்கி  வரும் போது  பிரபு ரசிகர் மன்றத்தினர் மெட்டாடர் வேன்களில்  நடிகர் பிரபு பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல  சென்னை நோக்கி விரைந்தனர்… அவர்களோடு எதிர்கால கனவுகளோடு நானும் சென்னை நோக்கி……

மகிழ்திருமேனி பேசறேன்.நான் இயக்குனர் மகிழ்திருமேனி பேசறேன்… ஜாக்கிசேகர்…??

எஸ்சார் நான் தான் பேசறேன் சொல்லுங்க..

Tuesday, December 30, 2014

Kayal /2014/ கயல் சினிமா விமர்சனம்.
பரிட்சார்த்த முயற்சிகள் தன் திரைப்படங்களில்  அதிகம் செய்து பார்த்த பிரபுசாலாமன் கடைசியில் காதலை கையில்  எடுக்க தொடர்ந்து இரண்டு படங்கள் வெற்றியோ வெற்றி.. அது மட்டுமல்ல...  மைனா திரைப்படம் அதன் திரைக்கதை கட்டமைப்பு... கேரக்டர் சேஷன் எல்லாம்  தமிழ் சினிமாவில் கொண்டாடப்படவேண்டிய திரைப்படம்  இது என்றால் மிகையில்லை...


Saturday, December 27, 2014

Meaghamann-2014- மீகாமன் திரைவிமர்சனம்.
தடையறதாக்க மகிழ்திருமேனியின் இரண்டாவது  திரைப்படம் முதல் படம் முன் தினம் பார்த்தேனே..  செவன்த் சேனலுக்காக செய்த படம்… பத்தோடு பதினொன்றாக போய் விட்டது..

மகிழ் செல்வராகவன், மற்றும் கவுதமிடம் அசிஸ்டென்டாக இருந்தவர்… அதனால் தனது இரண்டாவது திரைப்படமான தடையற தாக்க திரைப்படத்தை  ஆக்ஷன் மூலம் பூசி கொடுத்தார்… இதில் பெரிய விஷயம் என்னவென்றால் அருன் விஜய் போன்ற  பிரேக்  இல்லாத நடிகரை வைத்து தன்னம்பிக்கையோடு  ஒரு ஆக்ஷன் திரைப்படத்தை கொடுக்க செம தில் வேண்டும்… தடையறதாக்க மகிழ் பெயரை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த திரைப்படம் என்றே சொல்ல  வேண்டும்…

Wednesday, December 24, 2014

இயக்குனர் சிகரம் மற்றும் வானொலி அண்ணாவுக்கு என் அஞ்சலிகள்.

அஞ்சலி.
ஒரு எழவு மயிறும் தெரியாத சொந்தக்காரன் நமக்கு அட்வைஸ் பண்ணுவான்...

கருப்பு.

நான் ஆசைப்பட்டு கட்டிகிட்டதும்… நான் தவமாய் தவம் இருந்து பெத்ததும் சேர்ந்து….


Saturday, December 20, 2014

PISAASU -2014- பிசாசு திரை விமர்சனம்.
பொதுவா தமிழ்  திரைப்படங்களில்  பேய் படம் பார்த்து பயப்படுவதற்கு பதில்  சில நேரங்களில் சிரிப்பை வரவைத்து விடுவார்கள்... அந்த  அளவுக்கு பேயை சிரிப்பு  பொருளாக மாற்றும் வித்தை தெரிந்தவர்கள்… மற்றும்  புரிதல்  அதிகம்  உள்ளவர்கள் என்றும் சொல்லலாம்.
இன்னைக்கு வரைக்கும்  பிளாக் அண்டு ஒயிட் திரைப்படங்களில் நான் பார்த்து பயந்த திரைப்படம் நெஞ்சில் ஓர் ஆலயம்.


Thursday, December 18, 2014

ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் (இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்)உலகில் மிக  கொடுமையான விஷயம் என்னவென்றால் இரண்டு அப்பா  இரண்டு அம்மாவோடு வாழ்வதும் வளர்வதும்தான்.. அவன்  பிள்ளையை  நன்றாக பார்த்துக்கொள்வான் என்று இவளும்… இவள்  நம் பிள்ளையை நன்றாக பார்த்துக்கொள்ளுவாள் என்று அவனும்   நினைத்து இருக்க… இரண்டு பேரும் இணைந்து பெற்ற பிள்ளையை   பார்த்துக்கொள்ளாமல் நட்டாற்றில் விடப்படுபவர்கள்  கண்டிப்பாக விவாகரத்து செய்யப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகளே….

Wednesday, December 17, 2014

Good People-2014 /மாட்டிக்கொண்ட நல்லமனிதர்கள்பணம் பிரதானம்தான் ,இருந்தாலும் சில நேரங்களில்  அதீத  பணத்தேவையின் போது தெரிந்தோ தெரியாமலோ சில  தவறுகளை மனிதர்கள் செய்து தொலைத்து விடுகின்றார்கள்… சில நேரங்களில்   நேரம் நன்றாக இருந்தால் செய்த தவற்றில்  மாட்டிக்கொள்வதில்லை… நேரம் நன்றாக இல்லாமல் ஏழரை சனி புல் போக்கசில் தவறு செய்தவர்களை  பார்த்துக்கொண்டு இருப்பாரேயானால்  ஆப்பு  தவறு செய்தவர்களுக்கு  உருவாகி விட்டது என்று அர்த்தம்.

Monday, December 15, 2014

எனது சிறுவயது ரோல் மாடல்.யாரையாவது   ரோல் மாடலாக வைத்துக்கொண்டு வளர்ச்சி பெறுவது என்பது எல்லோருடைய வாழ்விலும்  நடக்கும் செயல்தான்... அதே போல நாம் யாரை  ரோல்  மாடல்களாக வைத்து இருக்கின்றோம் என்பது அவர்களுக்கே தெரியது என்பதுதான் நிதர்சனம்.


Saturday, December 13, 2014

LINGA-2014 /ரஜினியின் லிங்கா திரைவிமர்சனம்.நான்கு வருடங்களாக நடிக்காமல் இருந்து விட்டு கோச்சடையான் திரைப்படத்துக்கு பிறகு  ரஜினி நடிக்கும் நேரடி படம்... கோச்சடையன்  அனிமேஷன் திரைப்படம் என்பதால் அதை கனக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.


Thursday, December 11, 2014

ரகுவரன் தமிழ் சினிமா மறக்க முடியாத பெயர்.ரகுவரன்

1990 ஆம் ஆண்டு கடலூர் ரமேஷ் தியேட்டரில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான  புரியாத புதிர் திரைப்படம்  ரகுவரன் என்ற நடிகரை எனக்கு அறிமுகப்படுத்தியது…   ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ ஐ நோ…. ஒரு சைக்கோ கேரக்டர் எப்படி இருக்கும் என்பதை கண்முன்  நிறுத்தினார் ரகுவரன்.. அதற்கு முன் தமிழ் சினிமாவில்  வில்லன் என்றால் அவன் மேல்  சிவப்பு கலர்  லைட் லோ  ஆங்கிளில் இருந்து அடிக்க அவன் கண்களை உருட்டி பார்ப்பான்..

Sunday, November 30, 2014

KAAVIYATHALAIVAN- 2014 -காவியத்தலைவன் விமர்சனம்.


உண்மைக்கு மிக நெருக்காமான கதைகளே ஜெயித்து இருக்கின்றன... எழுத்தாளர் ஜெயமோகனோட பேசிக்கொண்டு இருக்கும் போது கிட்டப்பா , கேபி சுந்தராம்பாள் கதை பேச்சுவாக்கில் வர.... காவியத்தலைவன் பிறந்ததாக  முன்னர்  வசந்தபாலன் ஒரு பேட்டியில் சொல்லி இருந்தார். Friday, November 28, 2014

ஜூராசிக் பார்க் திரைப்படம் ஒரு பிளாஷ் பேக்.அந்த திரைப்படம் 1993 ஆண்டு வந்தது... அந்த திரைப்படம் தமிழ் நாட்டில் மட்டுமல்ல... உலக  நாடுகள்  அத்தனையிலும் அதிர்வலைகளை  அது உண்டு பண்ணியது என்றே சொல்ல  வேண்டும்...

 பின்னே?  பல்லாயிரக்கணக்கான  வருடங்களுக்கு முன் நாம் வாழும் பூமி பந்தில்  வாழ்ந்த உயிரினம்  கண் முன்னே நிற்பது என்பது சாத்தியாமா? அது எப்படி இருக்கும் ??? அது என்ன செய்யும்..??? போன்ற வினாக்களுக்கு  அந்த திரைப்படம்  பதில் சொல்லியது…  அது ஏதோ ஏப்பைக்கு சோப்பையாக வந்து சென்றால் கூட பரவாயில்லை… அது மனித இனத்தை பந்தாடியது… அதனாலே அந்த திரைப்படம் பார்த்து  மிரண்டு போனதும் உண்டு.


Tuesday, November 25, 2014

இரண்டு விபத்துகள். நேற்று இரவு பாரிஸ் வரை ஒரு வேலை…. 


மன்ரோ சிலை வழியாக பாரிஸ் சென்று விட்டு கடற்கரை சாலை , லைட் ஹவுஸ் வழியாக வீடு திரும்ப திட்டம்.

Armour of god-1986/Thirudan Police-2014/naigal jakkirathai-2014/ ஆர்மா ஆப் காட், திருடன் போலிஸ், நாய்கள் ஜாக்கிரதை

ஆர்மர் ஆப் காட்...  இந்த படத்துக்கு ஏற்கனவே விமர்சனம் எழுதி  விட்டாலும் வீடியோ பிளாக் பண்ணும் போது என்னை மிகவும் கவர்ந்த படத்தைதான் முதலில் செய்ய வேண்டும் என்று  நினைத்து இருந்தேன்... அதனால் அதை முதல் திரைப்படமா  செய்து இருக்கின்றேன்..

Saturday, November 22, 2014

முத்தப் போராட்டம்…..மடியில் உட்கார்ந்துக்கொண்டு விளையாட்டின் ஊடே…ஐ லவ் யூப்பா என்று சொல்லியபடி யாழினி எனக்கு உதட்டில் முத்தமிட்டால்…

ஹே..???.-! யார் இப்படி முத்தா கொடுத்தா உனக்கு?? என்றேன்..
 யாருமில்லைப்பா…

குட்.. இப்படி முத்தா  கொடுக்க கூடாதுடா செல்லம்… வாய்ல இருக்கற ஜெம்ஸ் ஸ்பிரட் ஆவும் இல்லை அதனால இது வேணாம்டா….

 சரிப்பா.


Wednesday, November 19, 2014

எனது முதல் முயற்சி வீடியோ பிளாகிங். நண்பர்களின் ஆதரவு தேவை.ஏன் ஜாக்கி சார் இந்த வேண்டாத வேலை உங்களுக்கு?


இதை விட எழுதிடுங்க... கொடுமையா இருக்கு...

நீ எழுதறதே படிக்கறதே எங்க விதின்னு நினைச்சிக்கிட்டு இருந்த இதுல இது வேறயா?
ஏன்யா படுத்தி எடுக்கற..??

என்பது போன்ற விம்ர்சனங்கள் வரலாம்.... ஆனால்  எனக்கு  தோன்றியைதை இன்றுவரை செய்து இருக்கின்றேன்...

நான் எடுத்து  வைத்த எந்த முதல் முயற்சிக்கும் முதலில் எதிர்ப்பையும்  அவ நம்பிக்கையான பேச்சுக்களைதான் அதிகம் சந்தித்து இருக்கின்றேன்... ஆனால் அவைகளை தகர்த்து முன்னேறிய  போதுதான் நிறைய சாதிக்க முடிந்து இருக்கின்றது..
பத்தாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் ஒரு கதையை சொன்னால் லஞ்சு பிரேக்கில்  என்னை சுற்றி 20 பேர் இருப்பார்கள்.. 

Tuesday, November 11, 2014

வலி பொதுவானது
யாழினிக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு ...  வீட்டை கூட்டி பெருக்கி,சமையல் கட்டில் இருந்து வெளியே வந்து சொன்னாள்...


ஏங்க நடுமுதுகுல பயங்கர வலி...


மயிறு...அப்படி இன்னா  வெட்டி கிழக்கற வேலை  செஞ்சிட்டே  என்று கிராமத்து  மனது  மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டது....


அவள் சொன்ன வார்த்தையை காதில் வாங்கிக்கொள்ளாமல்.... கம்யூட்டரில்  ஒரு வார்த்தைக்கு அர்த்தம் தேடிக்கொண்டு இருந்தேன்..

நேற்று மாலை போன்...

Monday, November 10, 2014

Munnariyippu-2014/மலையாளம்/ஒரு பெண் பத்திரிக்கையாளரும் ஒரு கொலைக்காரனும்.ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா இயக்குனரானார்
வெற்றிபெற்றார்...

ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம் இயக்குரானார்...(குருதிப்புனல்)
வெற்றிபெற்றார்.

ஒளிப்பதிவாளர் தங்கர்பச்சான் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்

ஒளிப்பதிவாளர் ஜீவா  இயக்குனரானார்
வெற்றி பெற்றார்...

ஒளிப்பதிவாளர் ராஜீவ்மேனன் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்.

ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்...

ஒளிப்பதிவாளர் கேவி ஆனந் இயக்குனரானார்
வெற்றிபெற்றார்...

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குரானார்
வெற்றிபெற்றார்.

THE TARGET-2014/தென் கொரியா/ 36 மணி நேர பரபரப்புஅடித்து பிழிந்து  சக்கையாக்கி  தூர எறிந்த திரைக்கதைதான்... இருந்தாலும் சுவாரஸ்யமான சென்டிமென்ட் காட்சிகளின் காரணமாக இந்த கொரிய  திரைப்படமான டார்கெட் திரைப்படம்  இரண்டு மணி நேரம் உட்கார வைத்து சுவாரஸ்யம் கூட்டி பார்க்க வைக்கின்றது என்பேன்.


துப்பாக்கி குண்டு அடிப்பட்டு ஒருவன் உயிருக்கு  போராடிக்கொண்டு ஓட்டமாக ஓடுகின்றான்... அவனை இரண்டு பேர் துரத்துகின்றனர். அவன் மருத்துவமனையில் உயிர் பிழைக்க ஒரு நேர்மையான  டாக்டர் முயல... அவன் உயிர் பிழைக்கின்றான்...

Thursday, November 6, 2014

உடல்கள்...சென்னை அரசு பொது மருத்துவமனை மார்ச்சுவரி பக்கத்தில் சற்று நேரம் நின்றுக்கொண்டு இருந்தால் போதும்... வாழ்க்கை மீதான கேள்விகள் ஏகத்துக்கு எகிறி தினறடிக்கின்றன..

விடியற்காலை 5 மணிமுதல் மதியம் மூன்று மணி வரை அரசு மருத்துவமனையை நானும் தம்பி பாலாவும் சுற்றிக்கொண்டு வர சங்கர் மச்சியும் பதினோரு மணியளவில் எங்களோடு சேர்ந்துக்கொண்டான்...

பெரிய புடுங்கி மயிறு போல நான் தான் நான்தான்னு புதுப்பேட்டை தனுஷ் போல கத்திக்கொண்டு இருப்பவனை ஒரு மணி நேரம் அரசு மருத்துவமணை மார்ச்சுவரி பக்கம் சும்மா காத்திருக்க வைத்தால் போதும்... மனம் திடிர் என்று ஜென் நிலைக்கு செல்வது சர்வ நிச்சயம்.

ஆழ்ந்த இரங்கல்
ஆழ்ந்த இரங்கல்.

நேற்று இரவு நண்பர் புருனோவின் மனைவி மரித்த செய்தி அறிந்து துடித்து போய்விட்டேன்...

இளம் வயதில் மரணம் ரொம்பவும் கொடுமை...

புருனோ எல்லோருக்கும் நல்லது மட்டுமே செய்து இருக்கின்றார்.... பெரிய பெரிய பிரச்சனைகளில் பதிவுலகத்தினர் சந்தித்த போது ஒரு நண்பனாக தோழனாக தோள் கொடுத்து இருக்கின்றார்.


Monday, November 3, 2014

சவுஜன்யா…


சவுஜன்யா…

இந்த பெயரை  கடந்த மே  12 ஆம் வகுப்பு  ரிசல்ட்  வெளியான போது  சென்னை மாநகராட்சி பள்ளியில் படித்து 1200க்கு ஆயிரத்து 1168 மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்ற மாணவி…

அப்போது இந்து இதழில் ஒரு புகைப்படம் வெளியானது… அந்த புகைப்படத்தை பார்த்து விட்டு அந்த போட்டோவை போட்டு கீழ் வருமாறு எழுதினேன்.


Sunday, November 2, 2014

Shah Rukh Khan- ஷாருக்கான் /உலகின் 50 ஆளுமை மனிதர்களில் ஒருவர்.
ஷாருக்கான்...

நீங்கள் மதிய சாப்பாடு சாப்பிடுகின்றீர்கள்...  ஒரு அரைமணி நேரத்துக்கு சாப்பிடுகின்றீர்கள் என்று வைத்தக்கொள்ளுங்கள்.. அந்த அரைமணி நேரம் சாப்பாடும் நேரத்தின்  மதிப்பு  5 லட்ச ரூபாய் அளவுக்கு மதிப்பு  வாய்ந்தது என்று சொன்னால்  எப்படி இருக்கும்...? 

சும்மா தலை கிர்ர்ன்னு சுத்தாது???

Saturday, November 1, 2014

யாழினி அப்பா (01/11/2014)
மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றேன்...யாழினிக்கு காலையில் ஒரு பர்ஸ் எடுத்து வந்து என்னிடத்தில் காசு கேட்டாள்... நான் பத்து ரூபாய்  பணம் கொடுத்தேன்... அதை பர்சில்  பத்திரபடுத்திக்கொண்டு இருந்தாள்...

 தேவி தியேட்டர் பின்னே இருக்கும் எல்லிஸ் ரோட்டில் இன்று கொஞ்சம் வேலை இருந்தகாரணத்தால்... நானும் யாழினியும் அங்கு சென்றோம்..

கிளம்பும் போதே பர்சேசுக்கு  செல்லும்  பெரிய மனுஷி போல  பர்ஸ் எடுத்து வைத்துக்கொண்டாள்...


Thursday, October 30, 2014

ஒளிப்பதிவாளர் கே.வி ஆனந்கே.வி ஆனந்...

தமிழ் சினிமாவின் ஒளிப்பதிவு துறையில்  உச்சம் தொட்டு அசத்திய மனிதர்…

அவர் ஒளிப்பதிவில் மிகப்பெரிய சவாலான பணி என்றால்  சிவாஜி படத்தில் வரும் சஹான பாடலில் சுற்றிலும் கண்ணாடி மாளிகையில் லைட்  வைத்து இருப்பதும் தெரிய கூடாது.. கிளாரும் தெரியக்கூடாது   … முக்கியமாக ஆர்ட்டிஸ்ட் உட்கார்ந்து பேசும்  காட்சியும் கூடாது.. மூவ்மென்ட் இருக்கும் நடனகாட்சி… அப்படி என்றால் டிராலி, ஜிம்மி ஜிப்  எல்லாம் மூவ் ஆகும் இருந்தாலும் எதிர்கண்ணாடியில்  பிம்பம் வராமல் படம்பிடித்து இருப்பார்…  அது போன்று  நிறைய பாடல்களையும் காட்சிகளையும் சொல்லிக்கொண்டே போகலாம்…


Tuesday, October 28, 2014

எழுத்தாளர் பாலகுமாரன் பேட்டி.தந்தி டிவியில்  கிழக்கு பதிப்பகம் பத்ரி ராஜபாட்டை என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்து இருக்கின்றார்...


 தந்தியை விட்டு வெளிவந்து ஒன்றரை வருடங்கள் ஆனாலும் அதுதான் என் தாய் வீடு என்பதால் சில நிகழ்ச்சிகளில் அவ்வப்போது கவனம் செலுத்துவேன்...

நண்பர் ரசனை ஸ்ரீராம் பேஸ்புக்கில்  எழுத்தாளர் பாலகுமாரனை  பத்ரி நேர்முகம் செய்த ராஜபாட்டை நிகழ்ச்சியின் லிங்க் கொடுத்து இருந்தார்... அள்ளி அள்ளி பருகும் அமிர்தமடா  என்று கேப்ஷன் வேறு எழுதி இருந்த காரணத்தால் மிகவும் ஆர்வமானேன். அதனால் யூடியூபில் அதனை  பார்த்தேன்..Monday, October 27, 2014

Commitment (2013)/உலக சினிமா/தென்கொரியா/ பாசமலர் உளவாளி,


  எப்படி இந்தியா பாகிஸ்தான்  ஒன்னா இருந்து… சுதந்திரம் கொடுக்கறேன்னு ரெண்டுத்தையும் பிரிச்சி வச்சிட்டு போனதில் இருந்து  இன்னைக்கு வரைக்கும் அடிச்சிக்கிட்டு மங்கம் மாய்கின்றோம்..


அதே போலதான்  ஒன்னா இருந்த நாடு  கொரியா… நம்மளை எப்படி பிரிட்டிஷ்காரன் மேல உட்கார்ந்துக்கிட்டு ரவுண்டு கட்டினானோ.. அது போல  கொரியாவை ஐப்பான்காரன்  காய் அடிச்சான்.. விளைவு சவுத்  கொரியா.,.. நார்த் கொரியான்னு பிரிஞ்சி போய் அடிச்சிக்கிட்டு இன்னைக்கு வரைக்கு கொய்யால  அடிச்சிக்கிட்டு சாவரனுங்க…

Happy New Year-2014/ அசத்தும் இந்தி திரைப்படம் ஹேப்பி நியூயர்.எழுத்தாளர் ஞானிசங்கரன் மகன் மனுஷ் நந்தன் ஹேப்பி நீயூயர் திரைப்படத்துக்கு   ஒளிப்பதிவு செய்து இருப்பதாகவும்... சாந்தி தியேட்டரில் அப்படத்தின் தமிழ் வெர்ஷன்  பார்த்ததையும் மக்கள் மிகவும் ரசித்ததையும் தனது முகநூலில் எழுதி இருந்தார்... 


நம்ம ஊர்காரர் ஒளிப்பதிவு செய்த பிரமாண்ட படம் எப்படி இருக்கின்றது  என்று பார்த்து விட்டு வரலாம் என்று சாந்தி தியேட்டரில்  தமிழ் வெர்ஷனுக்கே புக் செய்தேன்....

கடந்த ஓராண்டுகளாக ஹேப்பிநியூயர்  படத்தின் பிரோமோஷன் இல்லாத ஊடகமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு   சலிக்க சலிக்க பிரமோஷன் இருந்தது  என்றே சொல்ல வேண்டும். இப்படியான  பிரமாண்ட படம்  எப்படி மனுஷ் நந்தனுக்கு கிடைத்தது..

Sunday, October 26, 2014

சந்திரபாபுவுக்கு வந்த சத்திய சோதனை.

 இருக்கும் நாலு முடியை ஒதுக்க  சலூனுக்கு  சென்று  மாதத்துக்கு  125 ருபா  தண்டமாக கொடுப்பது என் இயல்பு...  

தலையில் எந்த புதுமையும்  செய்யலாம் என்று ஆசை இருந்தாலும்  இறைவன் கொடுத்த வாய்ப்பை பறித்து விட்ட காரணத்தால் மீசை மற்றும் கிருதாவில் எதையாவது கொடுக்கும் காசுக்கு எதையாவது செய்ய சொல்லி பார்ப்பதும்  பார்பரை செய்ய சொல்லி இம்சிப்பதும்  என் இயல்பு.

Saturday, October 25, 2014

Dilwale Dulhania Le Jayenge-1995/ இந்தி சினிமா / மும்பையில் 990 வாரங்களை கடந்து ஓடும் திரைப்படம்.மிகச்சரியா  ஐந்து நாட்களுக்கு முன்... அதாவது ஆக்டோபர் 20 ஆம் தேதி 1995 ஆம் ஆண்டு தில்வாலே துல்ஹனியா லேஜாயேங்கே திரைப்படம் மும்பையில் உள்ள மராத்தாமந்தீர் திரையரங்கில்  திரையிடப்பட்டு 19 வருடமாக ஓடிக்கொண்டு இருக்கின்றது..

நண்பர் வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....
நண்பர்  வெட்டிக்காடு ரவிச்சந்திரன் சோமு.....


தஞ்சை அருகே இருக்கும் வெட்டிக்காடு என்னும் சிறுகிராமத்தில் பிறந்து, 

படிப்பில் முதல் மாணவனாக திகழம் போதே அப்பாவோடு வயலில் கடலை கொல்லையில் கவளையில் தண்ணீர் இறைப்பது, மடை கட்டுவது, வயலில் களை எடுப்பது, கதிர் அறுப்பது, இரவில் களத்திற்கு காவலுக்கு படுக்க போவது, என்று வயல் வேலைகள் செய்துக்கொண்டே .... 


Friday, October 24, 2014

பெருங்களத்தூர் பைக் ஸ்டேன்ட் பக்கிங்க... ஜாக்கிரதை மக்களே...

பெருங்களத்தூர் ஒரு முக்கிய ஜங்கஷனாக உருவெடுக்கும் என்று யாரும் நினைத்துக்கூட பார்த்து இருக்க மாட்டார்கள்..


முக்கியமா என்றைக்கு மதுரவாயல் பைபபாஸ் தொடங்கியதால்  கோயம்பேடு செல்லும் பேருந்துகள் நகரத்தினுள் நுழையாமல் பைபாஸ் சாலையில் செல்ல ஆரம்பித்ததோ...??

என்றைக்கு தென்மாவட்ட பேருந்துகள்... கோயம்பேட்டில் இருந்து கிளம்பி.... வடபழனி கிண்டி தாம்பரம், வழியாகக  செல்லாமல் பைபாஸ் வழியாக செல்ல ஆரம்பித்ததோ.. அன்றில் இருந்து பெருங்களத்தூர் ஜங்ஷன் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாற ஆரம்பித்தது....

நடிகர் விஜய் மீதான விமர்சனங்கள் ஒரு பார்வை.
பத்தாவது  படித்து பாஸ் பண்ணி  ஸ்கூலுக்கு போய்  மார்க் ஷீட்டுல கையெழுத்து போட சொல்லி மார்க்ஷீட் கொடுப்பாங்க... அதே போல பிளஸ் டூ பாஸ் ஆனதும் அதே போல மார்க்ஷீட்டுல கையெழுத்து போட சொல்லி  மார்க்ஷீட் கொடுப்பாங்க.. 

இரண்டு கையெழுத்தையும் வித்தியாசத்தை பாருங்க.. நிறைய இருக்கும்.. முக்கியமா இரண்டு வருஷம்தான்... இத்தனைக்கு இரண்டுமே  நாம்  போட்ட கையெழுத்துதான்.


Thursday, October 23, 2014

Kaththi-2014 /கத்தி திரைவிமர்சனம்.ஒரு நடிகன் அரசியலுக்கு வர ஆசைப்பட்டால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை நடிகர் விஜய்க்கு சமீபத்தில் நிகழ்வதை  இந்த தலைமுறை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்..


Bangalore days- பெ(ண்)ங்களூர் டேஸ்.... யாழினியோடு  ஒரு வாரம் மற்றும்  கடந்த சனி ஞாயிறு என்று இரண்டு நாட்கள் பெண்களூர் வாசம்... பெண்களூரில் நிறைய மாற்றங்கள்.. அதுமட்டுமல்ல... போற்றி புகழ்ந்த பெங்களூர் டேஸ் திரைப்படம் பார்த்தாயிற்று ...  

Tuesday, October 21, 2014

வாழ்த்தியமைக்கு நன்றிகள்.
திருமணநாள் வாழ்த்து மழையில் நனையவைத்த அத்தனை உள்ளங்களுக்கும்  என் நன்றிகள்...கல்யாண நாள் ஞாயிறு என்பதால்  அப்பாவை பார்த்து ஆசி வாங்க குடும்பத்துடன் கடலூருக்கு சென்றேன்..

திண்டிவனத்தில் இருக்கும் வனிதா அத்தை வீட்டில் ஆசிர்வாதம் பெற்று தம்பி பாலா குடும்பத்துடன்  கடலூர் சென்று அப்பாவிடம் ஆசி வாங்கி... அப்படியே திருவகீந்தபுரம் பெருமாளையும் ஹயகிரிவரையும் வணங்கி விட்டு ஞூயிறு இரவு பாண்டியில் கம்பன் கலையாரங்கம் எதிரில் உள்ள லாட்ஜில் தம்பி பாலா குடும்பதோடு தங்கினோம்....


நேற்று முழுக்க பாண்டி பீச், ஆரோவில், என்று சுற்றி விட்டு நேற்று இரவுதான் சென்னைக்கு வந்தோம்...

அதனால் கமென்ட் இட்ட நண்பர்களுக்கு  நன்றி சொல்ல முடியவில்லை.


THE NOVEMBER MAN -2014/குரு சிஷ்ய உளவாளிகளின் கதை.
இயக்குனர்  டோனிஸ்காட் இயக்கத்தில்  ராபர்ட் ரெட்போர்ட், மற்றும் பிராட் பிட் நடித்து வெளிவந்த மகத்தான காவியத்தை யாரெல்லாம் கண்டு ரசிச்சி இருக்கிங்க..??


உளவாளி என்ற வேலை இருக்கின்றதே... நாமே வலியபோய் வாண்டட் ஆக வண்டியில் ஏறி  பிரச்சனைகளை சந்திக்கும் தொழில்.....  எந்த நேரத்திலும் தம் உயிருக்கும் குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து வரலாம்...

 வில்லன் குரூப்பில்  உளவாளியாக  சேந்து விட்டால்  சொந்த நாட்டு  மக்களேயே  கொல்ல வேண்டி வரும்..

Sunday, October 19, 2014

வாழ்த்துகள் வேண்டி ...சுதா மேடம் உங்க வாழ்க்கையில ரீவைன்ட் பட்ட்னை கடவுள் உங்க கிட்ட கொடுத்தா.. உங்க வாழ்கையில  நடந்த ஒரே விஷயத்தை நீங்க மாத்திக்கலாம் ஆனா ஒரு கண்டிஷன்.....ஒரே  ஒரு சான்ஸ்தான்  என்ன செய்விங்க...??? என் மனைவியின் அலுவலகத்தில் அவள்  நண்பர்கள் என் மனைவியிடத்தில் கேட்ட கேள்வி.

யோசிக்க நேரம் எல்லாம் எடுத்துக்கொள்ளவில்லை...

 சட்டென என் மனைவி சொன்னாள்... 


Thursday, October 16, 2014

கிரேசி மோகன்

இன்று காமெடி நடிகர், வசனகர்த்தா, நாடக கலைஞர் கிரேசிமோகனுக்கு பிறந்தநாள்…

தொழில் நுட்ப வளர்ச்சி அடைந்த இந்த காலத்திலும் நாடக கலைக்கு உயிர் கொடுத்துவரும் ஒரு சிலரில் கிரேசியும் ஒருவர்.

இதுவரை 5000க்கு மேற்ப்பட்ட மேடை நாடகங்களை மேடையேற்றிய திறமை சாலி. இன்னமும் கருத்து மோதல் அற்று கிரேசி கிரியேஷனில் ஒரு குடும்பமாக அவரது நண்பர்கள் நடித்து வருகின்றார்கள் என்றால் அதுதான் இந்த கால கட்டத்தில் பெரிய விஷயம்.

கடலூர் கிருஷ்ணாலயா தியேட்டரில் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தை இரண்டரை ரூபாய் டிக்கெட்டுக்கு சட்டையை கிழித்துக்கொண்டு  பார்த்தவைகள் என் நியாபக அடுக்குகளில்....

அந்த படத்தில் வில்லன் நாகேஷ் பேசும் வசனம் ஒன்று வரும்.. தாடி வச்சவன் எல்லாம் தாகூரும் இல்லை.. சுருட்டு புடிக்கறவன் எல்லாம்  வின்ஸடன் சர்ச்சிலும் இல்லை என்று நாகேஷ் பேசும் வசனம் எனக்கு மிகவும் பிடித்தது....


Tuesday, October 14, 2014

நல்ல நண்பர்கள்.

இரவு உணவுக்கு மயிலையில்  உள்ள ஒட்டலுக்கு சென்றோம்... யாழினி வழக்கம் போல கண்ணில்பட்டதை எல்லாம் வாங்கி கொடுக்க வேண்டும் என்று கேட்டு நச்சரித்தாள்...


 எதிர் மேசையில்  மொத்தம் 12 பேர் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்கள்.. அதில் இரண்டு பேர் பெண்கள்...

வாட்ஸ் அப்,ஹேப்பி நியூயர்  ஷாருக்கின் சிக்ஸ் பேக்,அஜித்தின் லுக், பேஸ்புக்,எதிர்பார்த்த பேங்க் பேங்க் மொக்கையான கதை என்று இன்றைய இளைஞர்களின்  வாழ்வை பேச்சில் பிரதிபலித்துக்கொண்டு இருந்தார்கள்...

பெண் நண்பர்களோடு கெட்டு கெதர் வந்து இருந்தாலும்.. அதே  நட்பு கூட்டத்தில் யாரோ ஒருவனை இரண்டு பேரில் ஒருத்திக்கு பிடித்து இருக்க வேண்டும். கண்களில் மகிழ்ச்சி, அதை விட காதலில் சிக்கியவள் கண்களில் வெளிப்படும் போதையான அலட்டல்.... ஹீ இஸ் மை மேன் அப்படின்ற ஒரு அலட்டல் அவளின்  கண்கள்,உடல்மொழி போன்றவற்றில்   வெளிப்பட்டுக்கொண்டு இருந்ததது...

 எங்கேயாவது என்னை போன்ற ஒரு ஆள் அவள் நண்பர்கள் கூட்டத்தில் அவள்  வெளிப்படுத்தலை கண்டுபிடித்து தொலைய போகின்றான் என்ற கவலை அவ்வப்போது  அவள் அலட்டலை குறைத்ததோடு  அவள் இயல்புக்கு திரும்ப ரொம்பவே  பிரயத்தனப்பட்டுக்கொண்டு இருந்தாள்.

மற்றொரு பெண் எல்லா பசங்களோடும் நின்றுக்கொண்டு  செல்பி எடுத்துக்கொண்டு இருந்தது...

பில் செட்டிலிங் டைம்...

இரண்டு பேர்  ஓஎம்ஆர் அருகில் இருக்கும் பிரமாண்ட வளாகத்தில் இன்ட்ர்வியூவிக்கு செல்ல போவதாக சொல்ல...

என் மனைவி அவர்கள் பேச்சில் ஆர்வமானாள்...

என் மனைவி மேனேஜராக இருக்கும் வளாகத்தில்  உள்ள ஒரு கம்பெனியில்  ஒப்பனிங் இருப்பதாக அவர்கள் பேசிக்கொள்ள.....

ஏங்க.. அந்த பசங்க ரெஸ்யூமை எனக்கு  அனுப்ப சொல்லுங்க..  எங்க கம்பெனியில் ஓப்பனிங்க இருந்தா சொல்லலாம் இல்லை என்றாள்..

நான் அவர்களில் ஒருவனை அழைத்தேன்.... அவன் முதலில் ஏன் இந்த ஆள் அழைக்கின்றான்...? என்று கேள்விகுறி முகத்தில் அப்பிக்கொண்டு  தயங்கி தயங்கி  என் முன்னே வந்தான்....

நீ இன்டர்வியூக்கு போற இல்லை.. அதே வளாகத்தில்  இருக்கும் பிரபல கம்பெனியில்  அங்க இவுங்கதான் மேனேஜர்...நீ இன்ர்வியூவுக்கு போறபடி போ... உன் ரெசியூமை இவங்களுக்கு அனுப்பு... இவுங்க கம்பெனியில் ஓப்பனிங் இருந்தா கண்டிப்பா  சொல்லுவாங்க.. என்றேன்..

தேங்யூ சார்...

ஆண்ட்டி ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி..

ஆண்ட்டியா...?  அப்ப உனக்கு வேலைக்கு ஹெல்ப் பண்ணமாட்டாயா? என்று கலாய்த்தேன்..


சாரிக்கா.... என்று சொல்லி விட்டு மெயில் ஐடி வாங்கி கொண்டு  வேலை தேடும் பையன்  சென்று விட்டான்..

பில் செட்டில் செய்து பேரர் வரும் வரை வெளியே அரட்டை அடித்துக்கொண்டு இருந்தார்கள்...

அதில் இரண்டு பேர்  உள்ளே வந்தார்கள்...

மேம்...எங்க  செட்டுல  எல்லோருக்கும் வேலை கிடைச்சிடுச்சி... அவனக்குமட்டும்தான் இன்னும் வேலைகெடைக்கலை.. அவனும் டிரைப்பண்ணிக்கிட்டுதான் இருக்கான்...எங்க எல்லாருக்கும் ரொம்ப கஷ்டமா இருக்கு... பிளிஸ்மேம் அவனுக்கு எங்கயாவது ஓப்பனிங் இருந்தா சொல்லுங்க மேம் என்று  கெஞ்சினார்கள்...

என் வாழ்வில், என் முன்னேற்றத்தில் நண்பர்களின் பங்கு இன்றியமையாதது... அவர்களின் தூண்டுதலாலே வளர்ச்சியடைந்தேன்....

 பாருங்கள்... தன் நண்பனு வேலைவேண்டி கெஞ்சிக்கொண்டு இருக்கும் இரண்டு இளைஞர்களை பார்க்கையில் எனக்கு பெருமையாக இருந்தது..

நல்ல  நண்பர்கள் அமைந்தவர்கள் பாக்கியசாலிகள்...

அவர்கள் சென்றஉடன் தளபதி படத்தில்  வரும்... கீழுள்ள வரிகளும் என் நண்பர்களும் நினைவில்  வந்தார்கள் என்பதே உண்மை.
======
பந்தம் என்ன சொந்தம் என்ன போன என்ன வந்த என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட ஜென்மம் நானில்ல
பாசம் வைக்க நேசம் வைக்க தோழன் உண்டு வாழவைக்க
அவனை தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே
உள்ளமட்டும் நானே உசுரகூட தானே
என் நண்பன் கேட்டா வாங்கிக்கன்னு சொல்லுவேன்
என் நண்பன் போட்ட சோறு நிதமும் தின்னேன் பாரு
நட்பை கூட கற்பை போல எண்ணுவேன்
சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு ராகமிட்டு தாளமிட்டு பாட்டு பாடும் வானம்பாடி நாம் தான்

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்
14/10/2014நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...
 

Wednesday, October 1, 2014

MADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு


தென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க  தென் சென்னையில் தெரியாம  இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்னையில் தெரியாம  இடிச்சிட்டா ஏய் கண்ணு என்னை தலையிலயா.. வச்சிக்கிட்டு இருக்கே..??  ஒம்மால பார்த்து போ.. என்ற சீறல்  இருக்கும்...

Tuesday, September 23, 2014

அன்புள்ள அம்மா. 23/09/201423/09/1996....இதே தேதியில் பதினெட்டு வருடங்களுக்கு முன் அந்த காலையை என்னால் மறக்கவே முடியாது....


அழுதே பார்க்காத என் அப்பா உடைந்து அழுததை பார்த்தேன்...


பாண்டி ஜிப்மர் எதிரில் இருக்கும் நெஞ்சக நோய் மருத்துவமனையில் நேற்றுவரை மூன்றாம் நம்பர் பெட்டில் படுத்து வலி பொருத்து என்னோடு வேதனையோடு பேசிய என் தாய் ....


படுத்து இருந்த படுக்கை காலியாய் கிடந்தது...


Thursday, September 18, 2014

சின்ன சிறுகதை.(( நிறைய உண்மை சம்பவங்கள்))அவர்  ஒரு எடிட்டர்.பேரு பாலுன்னு வச்சிக்குவோம்.. சென்னையில் இருக்கும் பல மாடி கட்டிடத்தில் இயங்கும் தொலைகாட்சியில்  வேலை பார்த்தவர்... 

திடிர் என்று வேலையை விட்டு விட்டு   உப்புமா படங்கள் எடிட் செய்ய செல்லுவார்...

பாலுவுக்கு வேலை தெரியும் என்றாலும் நிறைய அள்ளி விடுவார்... எப்படி என்றால் ? எனக்கு கமிஷ்னரை தெரியும் என்ற ரேஞ்சிக்கு...பாலுவுக்கு சினிமா வேலை இல்லாத காரணத்தால்  அவசரத்து வேறு ஒரு தொலைகாட்சியில்  வேலைக்கு சேர்ந்தார்....

அங்கே  சேவியர்  என்ற எடிட்டர்   வேலை பார்த்தார் ....

சேவியருக்கு சம்பளம் கம்மி...

ஒர்க் லோட் அதிகம்...


Wednesday, September 17, 2014

சாண்ட் வெஜ் அண்டு நான் வெஜ்/17/09/2014


நீண்ட நாட்கள்  ஆகி விட்டது... இனி நேரம்  கிடைக்கும் போதாவது சாண்வெஜ் நான் வெஜ் எழுதி வைப்போம்.
  ஆல்பம்.
 ஆசை60 வது நாள் மோகம்  முப்பது நாள்ன்னு சொல்லுவாங்க...  இந்தியாவில் மோடி பீவர் முடிந்து விட்டது என்று கட்டியம் கூறுவது போல 9 மாநிலங்களில் நடந்த இடை தேர்தல்களில் பாரதீய ஜனதாவுக்கு பெருத்த  பின்னடைவு ஏற்பட்டுள்ளது..நாடாளுமன்ற தேர்தலில் இந்தியாவை ரட்சிக்க வந்த பிதாமகன் மோடிதான் என்று நினைத்து  பொருவாரியான தொகுதிகளில் வாக்களித்த மக்கள்... 100 நாட்களில் இப்படி ஒரு முடிவை கொடுத்து  பிஜேபிக்கு வயிற்றில் புளியை கரைத்து விட்டனர்.
====

Tuesday, September 16, 2014

HOW OLD ARE YOU-2014/உலகசினிமா/மலையாளம்/இந்தியா/35 வயதை கடந்த பெண்கள் அவசியம் காண வேண்டிய சித்திரம்.

பொதுவாக இந்தியாவில் எல்லாவற்றிர்க்கும்  புனித பிம்பம்கள் கொடுத்த விட்டு   பின்னால்  எல்லா களவானி  தனங்களும் அனுதினமும் நடக்கும்  தேசம்.

 இங்கு எல்லாம புனிதம்தான்...

 ரோஜா படத்தில் தேசிய கொடியை எறித்தால் உணர்ச்சி வசப்பட்டு அதனை  நாயகன் அணைப்பான் படம் பார்க்கும் நமக்கு ஜிவ் என்று இருக்கும்...

 ஆனால் அமெரிக்காவில் கொடியை எரிப்பார்கள்....  அவர்கள் நாட்டு  கொடியில்  ஜட்டி செய்துக்கூட போட்டுக்கொள்ளுவார்கள்... ஆனால்  நகரம் தூய்மையாக   இருக்கும்...

எதற்கு புனித பிம்பம் கொடுக்க வேண்டுமோ...? அதற்கு கொடுப்பார்கள்... எல்லாத்தையும்  புனிதமான பார்க்கமாட்டார்கள்...

எர்போர்ஸ் ஒன் திரைப்படத்தில்  அமெரிக்க  அதிபரை அசிங்கமாக திட்டுவார்கள்... எச்சி துப்புவார்கள்... அடிப்பார்கள் துவைப்பார்கள்... வில்லன் சரிக்கு சரியாக பேசுவான்... எல்லாம் இருக்கும் ஆனாலும் அவர்கள்  சொல்ல வந்த விஷயத்தை  வாழை பழத்தில்  ஊசி ஏற்றுவது போல ஏற்றி விட்டு சென்று விடுவார்கள்..

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner