Arjun Reddy 2017 | அர்ஜுன் ரெட்டி தவறவிடக்கூடாத தெலுங்கு திரைப்படம்.



மீண்டும் விமர்சனம் எழுத வந்து இருக்கேன்… வாழ்த்துங்க பிரண்ட்ஸ்…
ரொம்ப நாள் எழுதனும்னு நினைச்சி தள்ளி போய்கிட்டே இருந்துச்சி.. அர்ஜுன் ரெட்டி  எழுத  வச்சிடுச்சி…

அர்ஜூன் ரெட்டி தவறவிடக்கூடாத  தெலுங்கு திரைப்படம்…


புளு சர்ட் மாறனை பார்த்து பயப்படுகின்றதா? தமிழ் திரையுலகம்



புளு சர்ட் மாறன்தான் டாக் ஆப் த டவுன்… நியூஸ் மினிட்டில் கட்டுரை எழுதி இருக்கின்றார்கள். 20 மில்லியன் வியூவ் விவேகம் ரிவியூவ் சென்று விட்டதாக அஜித் ரசிகர்கள் டென்ஷனில் இருக்கின்றார்கள்..
சில வருடங்களுக்கு முன் மாறன் எனக்கு போன் செய்து பேசி இருக்கின்றார்.. எனது பதிவுகளை படித்து விட்டு உலக சினிமாக்களில் சில சினிமா பதிவுகளை படித்து விட்டு என்னிடம் உரையாடி இருக்கின்றார்.


என்னது விவேகம் படத்தில் கதை இல்லையா?




#விவேகம் திரைப்படத்தின் கதையே இல்லை என்று சமுகவலைதளங்களில் ஓயாமல் பேசிக்கொண்டு இருக்கின்றார்கள். கதையே இல்லை என்று நிறைய படங்கள் இருக்கின்றன.. ஆனால் விவேகம் படத்தில் கதையே இல்லை என்று சொல்வதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது..


இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அத்தை




உங்களுக்கு எல்லாம் வீடு வாசல்லாம் இல்லை..??? நாளும் கிழமையான காலையில எழுந்து பல்லை கூட விளக்காம வந்துடுங்க… சனியன்க… என்று ராமு அத்தை என்னை திட்டுவார்.. காரணம் வீட்டை கழுவிக்கொண்டு இருப்பார்.
அதில் காலை துடைக்காமல் நடந்து போனால் யார்தான் திட்டமாட்டார்கள். நான் வழக்கம் போல இந்த காதில் வாங்கி அந்த காது வழியாக விட்டு விடுவேன்.
இத்தனைக்கும் அப்பாவின் உடன் பிறந்ததங்கை எல்லாம் இல்லை…கிராமங்களில் மாமா மச்சான் அண்ணன் தம்பி என்று பழகுவார்கள் இல்லையா அது போலத்தான்… ரொம்ப வருடம் கழித்து ஒரு ஏதோ ஒரு உறவின் மூலம் நடந்த திருமணம் மூலம் அத்தை வீடு சொந்தக்காரர்கள் ஆகி விட்டார்கள் என்று அப்பா சொன்னார்… அது என்னவோ கொஞ்சம் அன்னியப்படுத்தியது போல இருந்தது..

Vivegam -2017 Movie Review by Jackiesekar | விவேகம் திரைவிமர்சனம்



விவேகம் அஜித்துக்கு 25 வது வருட கொண்டாட்ட திரைப்படம்… அப்படியான திரைப்படத்தை சிவாவிடம் ஒப்படைக்கும் போது… அதற்கு அவர் எந்த அளவுக்கு உழைத்து இருக்க வேண்டும்…??? அஜித்தை வைத்துக்கு கொண்டு கரன்ஜோகர் கதைகளை டிரை செய்ய முடியாது…
அஜித்துக்கு பெரும் புகழ் பெற்றுதந்தவை பில்லா மற்றும் மங்காத்தா… காரணம் இளைஞர்களை  ஈர்க்கும் கிரைம்  இவைகளில் பொதிந்து இருந்தது.. அஜித் ரசிகர்கள் அத்தனை பேரும்  இளைஞர்கள் என்பதால் ஒரு கிரைம் சப்ஜெக்ட்  செய்து தப்பித்துக்கொள்ளலாம் என்று  சிவா முடிவு செய்து விட்டு எடுத்த படம்..

உலக புகைப்பட தினம்.


பிலிமில் போட்டோஎடுத்த காலங்கள் வாழ்வில் மறக்க முடீயாத காலங்கள்.. முகூர்த்த நேரம் வரும் முன் புது ரோல் மாற்றி வைத்துக்கொள்வேன்.. ரொம்பவும் பரபரப்பாக இருந்த காலகட்டம் அது....

பென்டக்ஸ் 1000 மற்றும் நிக்கான் எப்எம் டென் காலத்தில் இருந்து புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு இருக்கின்றேன்... அடுத்ததாக நிக்கான் டி 40 எக்ஸ்... கேமராவோடு நான் அப்கிரேட் ஆகவில்லை...

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner