சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(3•11•2010)

ஆல்பம்...

பேப்பரை திறந்தால், செய்தி சேனலை பார்த்தால், கடத்தல் சம்பவங்கள் பற்றிய செய்திகள் அதிகரித்துவிட்டன.. வழக்கம் போல சினிமா பார்த்துவிட்டு இது  போல சம்பவங்கள் நடப்பதாக சிலர் சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்..



விட்டால் சினிமாகாரர்களே கடத்தல் செய்கின்றார்கள் என்று சொல்லிவாதாடவும் சில பண்ணாடைகள் இருக்கின்றன...ஏன்னா சினிமாகாரனை தொட்டா பப்ளிசிட்டி ஈசியா கெடைக்கும் இல்லையா??

ரைட்டு நான் கேட்பது எல்லாம் ஒன்னுதான்...இந்தியாவின் இதிகாசம் இராமாயனம்....பன்னெடுங்காலமாக கூறிவரும் இதிகாசகதை....சலிக்க சலிக்க இந்தியமக்கள் கேட்ட கதை....சினிமான்னு ஒரு ஊடகமே இல்லாத காலகட்டம் அது..

சீதையை இராவணன் கடத்திய போது எந்த சினிமாவை பார்த்துட்டு கடத்தினார் என்று யாராவது சொல்லுங்களேன் பிளிஸ்.......
============

இன்றோடு மூன்று மரணங்கள். அதிகாரவர்கத்தால் தமிழகத்தில் நிகழ்த்தபட்டு இருக்கின்றன.  ஒன்று சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பில் லிப்ட்டில் பூ கொடுக்க போன பையன்  ரிப்பேரான லிப்ட்டில் ஏறி  உடல் நசுங்கி இறந்து போய் இருக்கின்றான்...
இரண்டு நோக்கியா எனும் பன்னாட்டு கம்பெனியில்  கீழே விழுந்த செல்போனின் மதர் போர்டை எடுக்க முனைந்த பெண் கழுத்து அறுபட்டு இறந்து போய் இருக்கின்றார்...

மூன்றாவது பள்ளி மாணவி ஒருவர் பொள்ளாச்சியில் இன்று மின்வேலியில் சிக்கி இறந்து போய் இருக்கின்றார்...

ஏழை சொல் எப்போதும் அம்பலம் ஏறாது என்பது போல இது எல்லோராலும் மறக்கபட்டு விடும்.. ஆனால் பூ  விற்று அம்மாவை காப்பாற்ற நினைத்த ஒரு இளம் குருத்தின் கனவு  ரிப்பேர் லிப்டினால் சிதைக்கபட்டு இருக்கின்றது.

சொற்ப சம்பளத்தில் தனது தம்பியை படிக்க வைத்து பிறகு திருமணம் செய்து கொள்ள நினைத்த அம்பிகா என்ற அபலை பெண்ணின் கனவு நோக்கியா தொழிற்சாலையில் சிதைக்கபட்டு இருக்கின்றது.
என்ன கனவுகள் இருந்ததோ தெரியவில்லை...

ஒரு விலங்கினம் போல மின்வேலியில் சிக்கி ஒரு பள்ளி மாணவி இறந்து போய் இருக்கின்றாள்...இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்னவென்றால் இறந்து போனவர்கள் எல்லாம் பெரும்பணக்காரர்கள் வீட்டு பிள்ளைகள் கிடையாது... அன்னாடம் காட்சி என்றும் பணம்படைத்தோரால் லோக்கல் என்றும் அழைக்கும் குடும்பத்தை சேர்ந்தவர்கள்...
கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு அதிகார வர்கத்துக்கு ஒத்து ஊத பல ஊடகங்கள் தயாராக இருக்கின்றன....
===========
ஒரு மாணவன் கடத்தலில் பணம் கொடுத்து உயிருடன் மீட்டு அதன் பிறகு கடத்தலை முடிவுக்கு கொண்டு வந்து இருக்கின்றது சென்னை போலிஸ்.... நேற்று கமிஷ்னர் பேட்டி கொடுக்கும் போது அந்த கடத்தபட்ட பையன் நமுட்டு சிரிப்பு சிரித்துக்கொண்டு இருந்தான்.. எனக்குதெரிந்தவரை கமிஷ்னர் பேசிய ஆங்கிலத்துக்கு  என்பது எனது எண்ணம்....
===========
ஒரு பதினோரு வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்து இருக்கின்றார்கள்...சில நாட்களுக்கு முன் ஒரு ஜோக் எழுதும் போது ஒரு கவர்ச்சி நடிகை சொல்வதாக ஒரு எஸ்எம் எஸ் ஜோக் சென்னை முழுவதும் சுற்றி வந்தது.... அது...... ரேப் ஒரு கிரைம் இல்லை அது சர்பிரைஸ் செக்ஸ் என்று  வந்தது.....அதனை நான்வெஜ் பகுதியில் போடும் போது அந்த கவர்ச்சி நடிகை பெயர் போட மறந்து விட்டேன்... உடனே  அதற்கு அதை எடுத்து விடும் படி ஒரு முன்று நாட்களுக்கு பின் எனது பதிவை  வாசிக்கும் பெண்மணி எனக்கு வேண்டுகோள்விடுவித்தார்... நான் அதில் அந்தகவர்ச்சி நடிகை பெயரை விடுபட்டது எனக்கு அப்போதுதான் தெரிந்தது.. அப்புறம் அந்த வரிகளை நீக்கி விட்டேன்.. ரேப்பில் இறந்து போகாமல் உயிரோடு அவர்கள் படும் துயரங்களை நான் நேரில் பார்த்தவன்.. பார்டர் டவுன்  என்ற ஒரு படத்தில் அதே காட்சிகைளை வைத்து இருப்பார்கள்... அந்த படத்தை பற்றி நான் அப்போது விமர்சனம் எழுதினேன்......இப்போது நோக்கியா கம்பெனியில் எப்படி பிழிகின்றார்கள்... அது போல அந்த படத்தில்  பல காட்சிகள்....வைத்து இருப்பார்கள்... அந்த படத்தை பற்றி வாசிக்க.. இங்கே கிளிக்கவும் இந்த படத்தில் கற்பழிப்பின்கொடுமைகளையும்...குறைந்த கூலிக்கு போராடும் நடுத்தர மக்களின் பிரச்சனைகளையும் எழுதி இருப்பேன்... படித்து பாருங்கள்.....
=============
இந்தவார புகைபடம்.
thanks ngc
 =============
மிக்சர்.

ஏர்டெல் ரேட் கட்டர் போடும் போது ரொம்பவும் கவனமாக இருக்கவும்.. 195க்கு போடும் பிளானில் இப்போது அதர் மொபைலுக்கு60வது பைசாவாம்... 225க்கு ஒரு பிளான் இருக்கின்றது அது போட்டால் அதர் மொபைலுக்கு 50 பைசாவாம்... 195 போட்டு தொலைக்க வேண்டாம்... அதர்த மொபலைலில் ஒருவரிடம் ஒரு நாளைக்கு பத்து நிமிஷம் பேசினாலும் ஒரு ரூபாய்  என்றால் முப்பது நாளைக்கு 30ரூபாய் போய்விடும்... அதே போல் அதர் மொபைலுக்கு பத்து நிமிடத்தில் மட்டும் பேசி வைக்கும் ஆட்கள் நாம் கிடையாது.. அதனால் 225 பெட்டர்...அவன் கொள்ளைகாரன்.. நாமதான் ஜாக்கிரதையா இருக்கனும்....
===========
தீபாவளிக்கு திநகர் பக்கம் போக முடியவில்லை இன்று இன்னும் ரொம்ப மோசமாக இருக்கின்றது.. நடக்க முடியவில்லை.. டைம்ஸ்அப் இந்தியாவில்  இரண்டு நாளைக்கு முன் ரங்கநாதன் தெருவில் எடுத்த ஒரு போட்டோ போட்டார்கள்... அந்த போட்டோவை பார்த்த போது ரங்கநாதன் தெருவை பார்த்தால் ரொம்ப மலைப்பாக இருக்கின்றது... எல்லா இடத்திலும் மனித தலைகள்....கீழே கால் தவறி விழுந்து விட்டால் சட்னிதான்..
=================
கொங்கு மண்டலத்தில் கடந்த 6 மாதத்தில் நடந்த கொலைகள் 250க்கு மேல் இதில் பல கொலைகள் கள்ளகாதலுக்காக நடந்தது என்பதை படிக்கும் போது  செம காமெடியாக இருக்கின்றது. யோக்கியம் பேசும் தமிழகம்....
===============
ஒபாமா  வருகை பற்றி எழுதிய போது தமிழ்பதிவுலகில் ஒபாமா வருகை பற்றி எல்லாம் எழுதுகின்றார்கள் என்று ஒரு நண்பர் என்னை டூவிட்டரில் பெருமைபடுத்தி இருந்தார்... அவருக்காக கீழே.....

யானை வரும் முன்னே மணி ஓசை வருவது போல

40விமானங்கள்...
6ஆயுதம் தாங்கிய கார்கள்.
3கடற்படைஹெலிகாப்டர்கள்
30மோப்பநாய்கள்
அதிபர் பயணிக்க எழுடன் எடைகொண்ட பிரத்யோக குண்டு துளைக்காத கார். என எல்லாம் வந்து இந்தியாவில் இறங்கிவிட்டன...

தங்கபோகும் மவுரியா ஹோட்டலின் அறைகள் எல்லாம் இரண்டு நாளைக்கு புக்கிங்..
இந்தியாவுல இருக்கும் யாரும் அவரை போய் பார்க்கமுடியாது.. புல் செக்யூரிட்டி முழுவதும் அவர்களுடையது..

இந்த விசிட்டில் அதிபர் நம்ம தாஜ்மகாலை போய் பார்க்கவில்லை.....
ஒரு நாளைக்கான செலவு மட்டும் 900ம் கோடியாம் அது அமெரிக்கா கொடுக்குமாம்..
=======================
சந்தோஷம்....மிக்க மகிழ்ச்சி...
ஏதாவது ஒரு பதிவின் தலைப்பில் என் பெயரை போட்டு பதிவை பிரபலமாக்குவது சமீபத்தில் நடந்து  வருகின்றது... நான் அந்தஅளவுக்கு ஒர்த் இல்லைம்மா.. ஏன் இப்படி??? இருப்பினும் மகிழ்ச்சி....நல்ல வௌம்பரம்..கீப் இட் அப்...
 ===========================
படித்ததில் பிடித்தது.....
ஒளிபதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங் அழகு தமிழில் பல டெக்னிக்கல் விஷயங்கள் எழுதிவருவது தெரிந்த விணயம்தான் இருப்பினும் ஒளிப்பதிவின் பேசிக் என்பது 3 பாயின்ட் லைட்டிங் என்பார்கள் அது பற்றி மிக அழகாக அனைவருக்கும் புரியும் வண்ணம்... படங்களுடன் மிக அழாக எழுதி இருக்கின்றார்... ஒளிபதிவை விரும்கின்றவர்கள் அவசியம் படிக்கவேண்டிய தளம் இது.. இருப்பினும்.. இந்த பகுதியை அனைவரும் வாசிக்க  இங்கே கிளிக்கவும்..
=============
இந்தவார சலனபடம்
நம்ம ஊரில் கொள்ளை லாபம் பார்க்காத இடமே இல்லை.. இயற்கை உபாதை கழிக்க  நாம் மூன்ற ரூபாய் கொடுத்து விட்டு மூக்கை பிடித்துக்கொண்டுதான் போகவேண்டும்...  பாருங்கள் பிலிபைன்சில் எவ்வளவு சுத்தமாக இருக்கின்றது... அது மட்டும அல்ல கம்யூனிகேஷனுக்கு எப்படி முடிச்சி போட்டாங்க தெரியுதுல்ல.. அது...


======================
நன்றிகள்....
புதியதலைமுறை பார்த்து என் வெப்சைட்டுக்கு போய் பார்த்து விட்டு போன் செய்த அன்பர்களுக்கும் லக்கிக்கும் எனது நன்றிகள்...
==========
நன்றிகள்..
வலையுலகத்தில் சில யோக்கியவான்கள் வயிற்று எரிச்சலில் வசவுகளை பொழியும் போது... இந்த வலையினால்,பல பெரிய மனிதர்களின் சந்திப்புகள்  எனக்கு நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன...ஒரு இசையமைப்பாளரின் மெயில் எனக்கு வந்தது.. அது  கீழே....

வணக்கம் ஜாக்கி சேகர்
முதல் முறையாக உங்கள் வலைக்கு சென்றேன் .மிகவும் அருமை 
ஏறக்குறைய பாதிக்கு மேல்  படித்துவிட்டேன் .உலக திரைப்படங்கள் அதிகமாக பார்ப்பது என்னுடைய பொழுதுபோக்கு .
நான் பார்க்காத பல படங்களினுடைய விபரங்களை எழுதியுள்ளீர்கள்.அதன் விபரங்களை நான் குரிப்பெடுத்துவிட்டேன் 
கண்டிப்பாக வாங்கிவிடுவேன் விரைவில் .உங்கள் முகம் எனக்கு பரிச்சயமாகவிருக்கின்றது .எங்கே சந்தித்தோம் என்று தெரியவில்லை .
உங்களை சந்திக்க விரும்புகிறேன் .கோடம்பாக்கத்தில் இசை அமைப்பாளர் ரகுமானின் வீட்டுக்கு அருகில் என்னுடைய கம்போசிங் அறை
இருக்கிறது .காலம் அனுமதிக்கிரபோது  சந்திப்போம்.
உதயா இசை அமைப்பாளர் 

அவரை நேரில் நேற்று  சந்தித்தேன்...மிகவும் எளிமையான மனிதர்...பரவசம் என்ற படத்துக்கு  ஒரு பாடலை பதிவு செய்து கொண்டு இருந்தார்..பல உதவி இயக்குனர்களை அங்கு சந்தித்தேன்... ஒரு பாடல் பதிவு செய்த போது அருகில் இருந்து பார்த்த போது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது... இன்னும் இதில் ஆச்சர்யம் என்னவென்றால் கூகுளில் தேடும் போது எதேச்சையாக எனது தளம் அவரதுதளம் என் கண்ணில் பட்டது என்றார்... நான் எழுதிய பல உலகபடங்களை லிஸ்ட் போட்டு கையில் வைத்து இருந்தார்.. அது என்  உழைப்புக்கு கிடைத்தவெகுமதி அது....

நன்றி உதயா...
==============

இந்தவாரகடிதம்...

Dear Jackie,
I feel really happy after talking to you today. I was thinking to call you for a very long time. I am a regular reader of your blog.
Very simple & good, Keep it up. Kindly ignore others who criticize your blog.
Instead spending your time for replying them, better you can do other important work.
This is my opinion , pls forgive me if you not accept my point.
As discussed I am sending the details of DSLR type camera spec for your reference.
Model : Fuji FinePix HS10
Pixel :     10.3
Image Sensor: 1/2.3 -inch BSI-CMOS
Lens : Fujinon 30x optical zoom lens, F2.8 (Wide) - F5.6 (Telephoto)
I am not good in photography,  just want to learn good photography.
kindly advise me in this regard.
Thanks & Regards,
Saravanakumar.P
============================
சரவணகுமார் போட்டோகிராபி பற்றி நண்பர் விஜய ஆம்ஸ்ட்ராங் தளத்தை அறிமுகபடுத்தி இருக்கின்றேன்... படித்து பயன்பெறுங்கள்..
============
Hello,  Jakkisekar  sir,  Good morning,

How r u , this is  priya,  from usa, basically i am from india in chennai, i have been reading u r website  since  6 months, realy its  fantastic, u r realy outspoken, i appriciated u,
i tried to contact  u r cellphone, but i could ,nt get through, any how   Wish u happy Wedding anversary,
 
thank u  very much,
===========
மிக்க நன்றி பாராதிராஜா மற்றும் பிரியா இருவருக்கும் என் நன்றிகள்....
===============
எல்லோருக்கும் பயண்படும்
இந்த கடிதம் உங்களுக்கும் உபயோகபடும்... எனக்கு நில கடிதங்கள் திட்டி வருகின்றன என எழுதியதும் எனது நண்பர் கருந்தேள்கண்ணாயிரம் அனுப்பிய கடிதம்.... எனக்கு அப்படி வரும் கடிதங்களை யார் என்று யோசிக்காமல் அதனை மார்க்டு ஆஸ் ஸ்பேர்ம் கொடுத்து விடுவேன்...அந்த வாக்கியங்களை பார்த்து எனக்காய் மெனெக்கெட்டு கடிதம் அனுப்பிய ராஜேஷுக்கு எனது நன்றிகள்..

ஹாய் ஜாக்கி,

உங்கள் பதிவு பார்த்தேன். உங்களுக்கு வரும் ஆபாச மெயில்களை அனுப்புபவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது. 

அவர்கள் அனுப்பும் மெயிலைத் திறந்து கொள்ளுங்கள். அதன்பின், வலது மேல் மூலையில், Reply ஆப்ஷனுக்குப் பக்கத்தில் உள்ள கீழ் சுட்டும் அம்புக்குறியைக் க்ளிக் செய்யுங்கள். அதில், Show original என்று இருக்கும் ஆப்ஷனைக் க்ளிக் செய்யுங்கள். இப்போது, மெயிலின் முழு விபரங்களும் திறக்கப்படும். அதில், நான்காவது லைனில், Received-SPF என்று தொடங்கும் வரியின் இறுதியில், blogger.bounces.google.com designates
10.142.221.10
as permitted sender) client-ip=10.142.221.10 என்று இருக்கும். இதில்,
client ip என்று இருக்கும் நம்பரே, அனுப்பும் நாதாரியின் ஐபி அட்ரஸ்.

இந்த நம்பரை, இண்ரட்நெட்டில் கொடுத்தால், ஊர் மற்றும் அவனின் இண்டர்நெட் விபரங்கள் கொட்டும். இந்த சைட்டில் அந்த ஐபியைக் கொடுங்கள்.


கொடுத்தால், சகல விபரங்களும் கிடைக்கும். அடி பின்னலாம்.

சில சமயங்களில், எதிராளி, தனது ஐபியை ஒளித்து வைக்கும் விஷயமும் நடக்கும். அந்த நேரங்களில், மேலே சொன்ன முறை உதவாது. ஆனாலும், முயன்று பாருங்கள்.

அன்புடன்
ராஜேஷ்
===================================================
வாழ்த்துக்கள்...
பதிவுலகம் வந்து இன்றோடு இரண்டாவது ஆண்டில் எடுத்து வைக்கும் தம்பி கார்த்திகை பாண்டியனுக்கு எனது வாழ்த்துக்கள்...மதுரை நணபர்கள் பலர் சொல்லி இருக்கின்றார்கள்.. எனது தளத்தை பலருக்கு அறிமுகபடுத்தியவர் கார்த்திகை பாண்டியன்... இன்னும் பல சிறப்புகள் பெற பரம்பொருளை வேண்டுகின்றேன்.
===========================

தீபாவளி நல்வாழ்த்துகள்...

என்னோடு சகபயணியாய் பயணிக்கும் அத்தனை பேருக்கும் எனது நலம் விரும்பிகளுக்கும்... என் வளர்ச்சியில் தூக்கம் இழந்து தவிக்கும் நண்பர்களுக்கும், எனக்காய் மெனெக்கெட்டு திட்டி இதுவரை மெயில் அனுப்பிய நண்பர்களுக்கும்...(நான்கு நாட்களாய் ஏதும்வரவில்லை) எனது இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

 =============================
பிலாசபி பாண்டி...

உலகத்தின் மூலையில் எங்கு அநியாயம் நடந்தாலும் அது தன் இனத்திற்கே என்றாலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தீர்களேயானால் நாம் இருவரும் தமிழர்களே.

பேஸ்புக்கில் ஒரு  நண்பர் குறிப்பிட்டு இருந்த வாசகம் இது...
=================
நான்வெஜ் 18+ 

ஜோக் 1
ஒரு சயிண்டிஸ்ட் கஸ்டபட்டு ஒரு அழகான பொண்ணு  ரோபோவை உருவாக்கினார்... அதை அவருடைய எல்லா பர்பசுக்கு யூஸ் பண்ணிகிட்டார்.... அவருக்கு ஒரு பிரண்ட் அவன் எப்பயுமே ரொம்ப யோக்கியமா பேசுவான்...அதாவது தலையில துண்டு போட்டுக்குனு போயி ஜோதியில படம் பார்க்கற ஜாதின்னு வச்சிக்கோங்க... எல்லாத்தையும் அபாசம்னு சொல்லுவான்..தினமும் ஆபாசத்துக்கு எதிரா போர்கொடி தூக்கி தன்னை ரொம்ப நல்லவன்னு காமிச்சிக்கிற டைப்பு...ஒரு நாள் சயின்டிஸ்ட் நீதான் ரொம்ப யோக்கியன்... இந்த பெண் ரோபோவை உன்னை தவிர கண்ணியமா பார்த்துக்க முடியாது... அதனால இந்த லேபை பார்த்துக்கோ நான் இரண்டு நாள் ஊரில் இல்லைன்னு வெளியூர் போயிட்டார்....யோக்கியன் நேரா லேபுக்கு வந்தான்.. அந்த ரோபோ பொண்ணோட அழகு என்னவோ அவனை செய்ய.... யாருமில்லாத தைரியத்துல அந்த பெண் ரோபோவோட ஒரு பக்கத்து கண்ணத்தை தட்ட அது..... எஸ் பாஸ் லட்டர் டிக்டேட் பண்ணநான் ரெடின்னு சொல்லுச்சி.... இந்த யோக்கியனுக்கு செம ஆச்சர்யம்.. இன்னோரு பக்க கண்ணத்தை தட்ட... சொல்லுங்க பாஸ் நீங்க என்ன சொன்னாலும் டைப் அடிக்கிறேன்னு சொல்லுச்சு...சட்னு அந்த ரோபோ பெண்ணோட கவர்ச்சியில மயங்கி அந்த பொண் ரோபோவை பலவந்தபடுத்த ஆரம்பிச்சான்....

கொஞ்ச நேரத்துல லேப்ல பயங்கரமா.. ஐயோ.. அம்மான்னு பயங்கர சத்தம்....ரிலாக்சுக்காக சொந்த ஊர் வந்த சயின்டிஸ்ட் வயக்காட்டுல கேழ்வரகு கூழ் சாப்பிடும் போது ஐயய்யோ அந்த யோக்கியன் கிட்ட நாம ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டுமேன்னு அவரு சட்ன்னு ஆங்கிலத்தில் யோசிச்சார்.... அது என்னன்னா கீழே பாருங்க...

  "Shit! I forgot to tell him her ass is a pencil sharpener!"

 ========================
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 
 

34 comments:

  1. தீபாவளி வாழ்த்துக்கள் ஜாக்கி!

    ReplyDelete
  2. me the first.. கோவை சம்பவம் மிக கொடூரம்.

    தீப ஒளி திருநாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  3. தல இதெல்லாம் சரியில்ல. காலையிலிருந்து எப்ப சாண்ட்வெஜ் வரும் f5 பட்டனை அழுத்தி அழுத்தி தேய்ந்தே போய்விட்டது.இனிமே நேரத்தோட சாண்ட்வெஜ் கொடுங்க.

    ReplyDelete
  4. தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஜாக்கி : தீபாவளி வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. Enna Sir,

    Neenga eppavum periya alungala than meet pannuveenga...
    Nan keta solla mataegureenga....

    ReplyDelete
  7. வழக்கம்போலவே அசத்தல் அண்ணே,

    உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் மற்றும் பதிவுலக நண்பர்கள்,வாசகர்கள் அனைவருக்கும் எனது இனிய இதயம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    வாழ்க வளமுடன்

    நன்றி
    என்றும் நட்புடன்
    மாணவன்

    ReplyDelete
  8. தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்... பத்திரமா வெடி வெடிங்க....

    ReplyDelete
  10. தீபாவளி வாழ்த்துக்கள் நண்பரே!!!சாண்ட்வெஜ் அருமை

    ReplyDelete
  11. what are the difference between "Enthiran" and "Bicentennial Man"???? Pls compare.

    ReplyDelete
  12. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  13. தீபாவளி வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. தீபாவளி வாழ்த்துக்கள்.. அப்புறம் புதிய தலைமுறைகள் இதழில் வலைபதிவுகளை நக்கல் அடித்திருப்பதை நீங்கள் கவனிக்கவில்லையா?

    ReplyDelete
  15. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  16. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ஜாக்கி.

    ReplyDelete
  17. Obamavukku oru naal selavu 900 kodiya.spelling mistaka irukkumo

    ReplyDelete
  18. ///////


    விட்டால் சினிமாகாரர்களே கடத்தல் செய்கின்றார்கள் என்று சொல்லிவாதாடவும் சில பண்ணாடைகள் இருக்கின்றன...ஏன்னா சினிமாகாரனை தொட்டா பப்ளிசிட்டி ஈசியா கெடைக்கும் இல்லையா??


    சீதையை இராவணன் கடத்திய போது எந்த சினிமாவை பார்த்துட்டு கடத்தினார் என்று யாராவது சொல்லுங்களேன் பிளிஸ்.......
    /////////////////

    நண்பரே உங்கள் கோபம் புரிகிறது.நீங்கள் சினிமாவில் இருப்பதால் எல்லாவற்றையும் ஞயாயப்படுத்தி விட முடியாது.

    அந்தகாலத்தில் சினிமா இல்லாததால் ராவணன் கடத்தியதோடு விட்டான். அதே ராவணன் இப்ப இருந்திருந்தால் சீதையை ரேப் செய்து புதைத்திருப்பான்.

    ReplyDelete
  19. //சீதையை இராவணன் கடத்திய போது எந்த சினிமாவை பார்த்துட்டு கடத்தினார் என்று யாராவது சொல்லுங்களேன் பிளிஸ்.......//

    நல்ல கேள்வி!
    கடத்தினார்....ஆனால் பலாத்காரம் செய்யவில்லை; காசு கேட்கவில்லை; கொலைசெய்யவில்லை; அவள் மனம் மாறும்வரை பொறுமை காத்தார்...இதை அன்றைய திரைப்படங்களுக்குச் சமமாக இருந்த பிரசங்கங்கள்; கதைகள்; பாடல்கள்; கூத்துகள்; நாடகங்கள்.... சாதாரண மனிதனுக்கும் போதித்துக் கொண்டே இருந்தது. அதாவது மனிதமனம்...தடுமாறும்போது அவர்களை நீதி போதனைகள் நிமிர்த்தியது.
    இன்று எல்லோருக்குமே அவப்பொழுதா? தவப்பொழுதா? அது திரைப்படமே...என்றாகிவிட்டது. அந்தத் திரைப்படங்களில் இன்றைய கெமிஸ்ரிகள் நீங்கள் அறியாததல்ல அத்துடன்
    நேற்று ஒரு பதிவர் கிராமத்து திருவிழாக் கூத்து என ஒரு பதிவு போட்டாரே!! அத்துடன் கலைஞர் முதல்வர் ரசிக்கும் மானாட மயிராட கெமிஸ்ரி இப்படியெல்லாம் சூடாக்கி விடுவதால் தான் இக்கொடுமைகள் நடக்கிறது.
    இன்றைய இளைஞர்கள் பொழுது போக்குகள் பல அவர்களில் பலரில் ஆட்டம் காணும் சிந்தனைக்கு தவறான வழி காட்டுவது உண்மையே!

    ReplyDelete
  20. cha cha naan nethuthan airtel 195 booster potene...

    ReplyDelete
  21. Happy Diwali wishes Jackie, convey our wishes to your family too.

    ReplyDelete
  22. சூப்பர்...! தீபாவளி வாழ்த்துக்கள் தல!

    ReplyDelete
  23. இனிய தீபாவளி வாழ்த்துகள் ஜாக்கி! :))

    ReplyDelete
  24. இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

    ReplyDelete
  25. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
    - Prasanna (Bahrain)

    ReplyDelete
  26. உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும், நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த இனிய தீப திருநாள் நல்வாழ்த்துகள் சார்.

    ReplyDelete
  27. தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner