Yennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.




ஒரு திரைப்படம்  நன்றாக ஒடுகின்றதா-? இல்லையா ? என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல்   சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இருக்கும்... ஆனால் ஒரு  இயக்குனர் ஒரு படத்தை   நன்றாக இயக்கி அந்த படம் தோல்வி படமாக மக்கள் நிராகரித்தாலும், நான்  என்னுடைய பெஸ்ட்டை கொடுத்தேன் மக்கள் அங்கீகரீக்கவில்லை என்று சொன்னால்அதில் ஒரு நியாயம் இருக்கின்றது... எந்த பெஸ்ட்டையும் கொடுக்காமல் ஆற்றில் ஒருக்கால் சேற்றில் ஒருக்கால்  வைத்தால் என்ன  செய்வது...?? அதுதான் தமிழ் திரையுலகில்  தற்போது நடந்துவருகின்றது.


இயக்குனர் கவுதம் மேனன் தனக்கு நன்றாக தெரிந்த விஷயத்தை கையில் எடுத்துக்கொண்டு அது கிளிஷேவாக இருந்தாலும் திரும்பவும் கையில் எடுத்துக்கொண்டு களம் இறங்கி... அஜித்தை வைத்து பீல்குட் என்டர்டெயினரை கொடுத்து இருக்கின்றார் என்றே சொல்ல வேண்டும்.

 அஜித் என்ற மாஸ் ஹீரோவுக்கு படம் செய்வது என்பது சாதாரண விஷயம் இல்லை.. டயலாக்கை  அவருக்கு ஏற்றார் போல எழுத வேண்டும்.. அப்படியே எழுதியதை அவர் பேசினாலும் அருடைய ரசிகர்கள் அதை ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொள்ள வேண்டும்...அதன் பின் எல்லோருக்கும் முக்கியத்துவம் உள்ளது போல் காட்சி அமைக்க வேண்டும்...  அதன்பின்தான் மேக்கிங்கில் கவனம்  செலுத்த வேண்டும்...

இந்த சூழலில் பொதுவாக  உணர்ச்சி வசப்பட்டு பல இயக்குனர்கள் ஒத்தையா ரெட்டையா  பிடித்து தோற்று போய் இருக்கின்றார்கள்.. கவுதம் ஒத்தையா ரெட்டையா பிடிக்காமல் தனக்கு என்ன  தெரியுமோ? தனக்கு எது சரியாக வருமோ? அதை  மட்டும் வைத்துக்கொண்டுகளம் இறங்கி இருக்கின்றார்...  அது கிளிஷேவாக இருந்தாலும் அந்த நம்பிக்கையில்  ஓரளவுக்கு வெற்றிபெற்றுள்ளார் என்றே சொல்ல வேண்டும்...

அதே போல மாஸ் ஹீரோக்களுக்கு எப்படி என்ட்ரி வைக்க வேண்டும் என்று ஒரு குழுவே தலையை பிய்த்துக்கொண்டு யோசிக்கும்... ஆனால் மிக  அநாயாநமாக ஹீரோ  தூங்குவது போல  என்ட்ரி கொடுத்ததில் இருந்தே  இது வழக்கமான அஜித் ரசிகர்களுக்கான  பில்டப் படம் இல்லை என்பதை இயக்குனர் புரியவைக்கின்றார்.

பொங்கலுக்கே வெளியாக வேண்டிய திரைப்படம்... ஆனாலும் அஜித் ரசிகர்கள்  ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்டு  அம்மா பொங்கலை எடுத்து பிரிட்ஜில் வைத்து விடு எனக்கு பிப்பரவரி ஐந்துதான் பொங்கல் என்று டுவிட் செய்து அது பேமஸ் ஆனது.

===
என்னை அறிந்தால் படத்தின் ஒன்லைன் என்ன?
அதர்மம்  தர்மம் இரண்டும்  சமன்பாட்டில் இருப்பதுதான் உலக நியதி. சில நேரத்தில் அதர்மம்  ஜெயித்து விடுகின்றது... தர்மம்  ஜெயிக்க தாமதம் ஆகின்றது. ஆனால் தர்மம் ஜெயிக்கும்... கொஞ்சம் லேட்டாக... இதுதான்  என்னைஅறிந்தால் படத்தின் ஒன்லைன்.
====


என்னை அறிந்தால் படத்தின் கதை என்ன..?
அஜித் (சத்யதேவ்) போலிஸ் அதிகாரி...  நிழல்உலக மாபியா   கூட்டத்தில் நுழைய,   சிறையில் இருக்கும்  அருண் விஜய்யோடு நட்பாக நடிக்கின்றார்...ஒரு கட்டத்தில் உண்மை தெரியவரும் போது, இரண்டு பேரும் முட்டிக்கொண்டு திரிகின்றார்கள்... இதுதான் இந்த திரைப்படத்தின் கதை.
========
படத்தின் சுவாரஸ்யங்கள்.
கவுதம்  அஜித் முதன் முறையாகஇணைகின்றார்கள் என்பதால் இந்த திரைப்படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவியதும்.. சண்டை போட்டுக்கொண்டு பிரிந்த ஹரிஸ் இந்த திரைப்படத்தின் மூலம் மீண்டும் கவுதமோடு கை கோர்த்ததும் இந்த படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி விட்டது  என்றே சொல்ல வேண்டும்... அதை முடிந்து வரை மூவர் கூட்டனி நிறைவு செய்து இருக்கின்றார்கள்.. முக்கியமாக லவ் போர்ஷன் மற்றும் அஜித் அப்பா நாசரோடு பேசும்  வசனங்கள் கிளாசிக்.

அப்பா கேரக்டரில்  நடித்து இருக்கும்  நாசர் தன் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக  செய்து இருக்கின்றார்...
ஒருவேளை கமர்ஷியலாக அஜித்தை வைத்து மாஸ் ஹீரோவுக்கான படம் செய்ய போகின்றேன் என்று கவுதம் தன் வழக்கமான பாணியை கையில் எடுக்காமல் இப்படத்தை எடுத்து இருந்தால் தெலுங்கு மகேஷ்பாபுவின்  ஆகடு போல  ஆகி இருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு..

அனுஷ்கா.. வாந்தி எடுக்கும் போது ஒருவர் மீது காதல் வருமா? வருகின்றது.. காதல் சனியனுக்கு அதெல்லாம் தெரிவதில்லை... பட் அவர் ஹேர் ஸ்டைல் மேல் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.. சட்டி கவுத்தது போல இருக்கின்றது..  அல்ட்ரா மார்டன் லுக்கிற்கு அப்படி செய்து  இருந்தாலும் ஒட்டவில்லை என்றே சொல்ல  வேண்டும்.
திரிஷா   செம கியூட்... அது மட்டுமல்ல... முகத்தில்  மலர்ச்சி இல்லை  பிரேமுக்கு பிரேம்  எதையோ பறிகொடுத்தை மனநிலையில் இருக்கின்றார்... பட் அவர் அணிந்து வரும் காஸ்ட்யூம் எல்லாம் கொள்ளை அழகு. அஜித்துக்கும்  திரிஷாவுக்கும் இருக்கும் அந்த லவ் போர்ஷன் செம கியூட்... முக்கியமா காதல் பூத்தவுடன் ரெண்டு பேருக்கும் இருக்கும் ரியாக்ஷன்ஸ்... பீமா படத்தில்  ரகசிய கனவுகள் ஜில் பாடலில்  வரும் கியூட்னஸ் இதில்இல்லை.

கவுதமை இந்த இடத்தில் பாராட்ட  வேண்டும்...  என் குழந்தை என் வீடு என்ற மாயயை உடைத்து  உன்னை பிடித்து விட்டாலே உன் குழந்தை  என் குழந்தை அல்லவா? என்ற  அந்த பரந்த  என்ன ஓட்டத்தை  வெகுஜன சினிமாவில்  காட்சிகளாக விதைத்தமைக்கு ஒரு பொக்கே. அதுக்கு அஜித் அடிக்கடி மெடிக்கல் ஷாப் போவனும் என்று சொல்லும் அந்த காட்சி  கியூட் அண்டு எதார்த்தம்

விவேக்இந்த படத்தில் அடக்கி வாசிக்க வைத்து இருக்கின்றார்கள்.. அது மட்டுமல்ல பரபரப்பானதிரைக்கதையில்  அவருக்கு டயலாக் கொடுக்கவே படாத பாடு பட்டு இருக்கின்றார்கள்.

 படத்தில்  தேவிடியா பசங்களா என்று  டயலாக்குகளில் நிறைய காட்சிகளில் வருகின்றது...மியூட்டில்  விட்டாலும்   அதை  மியூட் ஆக்காமல் விட்டு இருந்தால்இன்னும் நெருக்கமாக இருந்து இருக்கும் என்பது என் அபிப்ராயம்... இந்தி திரைப்படங்களில் மாதர் சோத் என்ற  வார்த்தைகளை அனுமதிக்கும் போது... இங்கே மட்டும் ஏன் பாராப்ட்சம் என்று தெரியவில்லை.

ஒளிப்பதிவு டேன் மெக்கந்தர்... பின்னி  இருக்கின்றார்.. முக்கியமாக குழந்தையும் அஜித்தும்  வட நாட்டுப்பக்கம் செல்லும்  காட்சிகள் அனைத்தும் கவிதை என்றே சொல்ல வேண்டும். வாழ்க்கை என்றால் என்ன? என்று தன் மகளுக்கு புரிய வைக்கும் காட்சிகள் கவிதை.

 எடிட்டர் ஆண்டனி .. நிறைய காட்சிகள் பின்னி இருக்கின்றார்..  முக்கியமா requiem for a dream படத்தில வருவது போல காட்சிகள்   நிறைய கட் பண்ணி இருக்கின்றார்.. அதுமட்டுமல்ல.. அஜித் ,அருண் ரெண்டு பேரும் பேசும் கடைசி டயலாக் போர்ஷன்  கூல்.....

படத்தின் தொய்வை தூக்கி நிறுத்துவது ஹாரிசின் பாடல்களே.. உனக்கென்ன  வேண்டும் சொல்லு... உலகத்தை காட்ட சொல்வேன்.. பாடல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.. அந்த பாடலை படமாக்கிய விதம்.. அதில் அஜித்துக்கும் அந்த குழந்தைக்கும் இருக்கும் அப்பா மகள் கெமிஸ்ட்ரி... சட்டென கண்ணில் நீர் பூக்கின்றது...  அதே போல நாலு வருட ஊர் சுற்றலுக்கு பிறகு அஜித்திடம் தன் மகளை கானோம்  என்று  நண்பன்  சொல்ல... குழந்தை ஷு எடுத்து வந்து  கொடுக்கும் போது வரும்  ஹாரிசின் பின்னனி இசை உடம்பை சிலுர்க்க செய்கின்றது.

==========
படத்தின் டிரைலர்.

======
படக்குழுவினர் விபரம்

Directed by Gautham Menon
Produced by A. M. Rathnam
S. Aishwarya
Written by Gautham Menon
Sridhar Raghavan
Thiagarajan Kumararaja
Starring Ajith Kumar
Trisha Krishnan
Anushka Shetty
Arun Vijay
Parvathy Nair
Vivek
Music by Harris Jayaraj
Cinematography Dan Macarthur
Edited by Anthony
Production
company
Shri Sai Raam Creations
Distributed by M K Enterprises[1]
Release dates
5 February 2015
Country India
Language Tamil
Budget INR500 million

=====
பைனல் கிக்.
முதல் பாதி விறுவிறுப்பு என்றாலும் பின் பாதியில்  கடைசி அரைமணி நேரம் அதகளம் என்றே  சொல்ல வேண்டும்... ஆர்கன்  திருட்டுக்களை  வெட்ட வெளிச்சமாக்கி இருக்கின்றார்கள்.  அதே போல  சித்தார்த் ராகவன் மற்றும் தியாகராஜன் குமாரராஜா இரண்டு பேரும் ஸ்கிரிட்டில் பங்களித்துள்ளார்கள்..இது  கண்டிப்பாக வரவேற்க்கபடவேண்டிய விஷயம். அசிஷ் வித்யார்த்தி இடைவேளையின்  போது சில  கேள்விகளை படம் பார்க்கும் நமக்கும் முன் வைக்கின்றார்.. அது இரண்டாம் பாதியில் ரிவில் ஆகவில்லை என்பது பெரிய உறுத்தல்... ஒரு வேளை  நிறைய எடுத்து விட்டு  நீளம் காரணமாக குறைத்து இருக்கலாம்.. அதே போல திரிஷா இறக்கும் போது  பேசும் வசனங்களும் நிறைய எடிட்டிங்கில்  காணாமல் போய்  இருக்க கூடும்..
 அருனோடு அஜித் மாபியா கேங்குக்கு செல்லும் போது  மைக் பின்னாடி பக்கம் இருக்கான்னுசெக் பண்ணணும் என்று சொல்ல ...  மைக் இல்லை ஆனால் இருக்க வேண்டிய இடத்தில்  இருக்கு என்று சொல்லும் போது ஸ்டன்ட் சிவா சிரிக்கும் போதுதான் நமக்கு  என்ன மைக் அது என்று புரிபடுகின்றது.

கல்யாணத்தின் போது வேண்டுமானால் திரிஷாவை அவர் வீட்டில்  விட்டு விட்டு செல்லலாம்... ஆனால் ஊரே பத்திக்கொண்டு எரியும் போது தனது மகளை பள்ளிக்கு யாராவது அனுப்புவார்களா? என்று சொதப்பல்கள் எரிச்சலை ஏற்ப்படுத்துகின்றன.
டேனியல் பாலாஜி. அந்த மொட்டை, என்று கவுதமின் வழக்கமான  ஆட்கள்  இந்த படத்திலும் தலைகாட்டுகின்றார்கள்.
வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, காக்க காக்க திரைப்படங்களை பல காட்சிகள் நினைவுபடுத்தினாலும்... இந்த படம் நிச்சயம் தியேட்டருக்கு சென்று ரிசிக்க கூடிய திரைப்படம் என்றால் அது மிகையில்லை.. அஜித்தின் அடக்கி வாசிக்கும் அந்த நடிப்பும் சின்ன வயதில் இருந்து 40 வயது வரை என்ற அந்த  டிரான்சிஷனை  உள்வாங்கி டயலாக் டெலிவரி, பாடி லாங்வேஜ் என்று சிறப்பாகவே செய்து இருக்கின்றார்... கவுதம் ஸ்டைலில் அஜித் நடித்து இருக்கும் திரைப்படம் என்னை அறிந்தால். பார்க்க  வேண்டிய திரைப்படம்.
===
படத்தோட ரேட்டிங்
பத்துக்கு ஏழு
====
பிரியங்களுடன்‘

ஜாக்கிசேகர்.

என்னை அறிந்தால் திரைப்படத்துக்கு  எனது வீடியோ விமர்சனம் பிடித்து இருந்தால்  நண்பர்கள் ஷேர் செய்யவும்.



நினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ....
.EVER YOURS...
 

6 comments:

  1. படத்தையே பார்த்தது போல இருக்கிறது உங்களின் விமர்சனம்.... பகிர்வுக்கு மிக்க நன்றி...
    மலர்

    ReplyDelete
  2. actor arun vijay pathi neenga ethuvumae sollalayae... its really dis-appointed.... He had a equal chance like ajith & he performed the same as very best.... a good break for arun vijay from this movie....

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner