பதிவர் சிங்கை கிரிக்காகவும், ரஜினிக்காகவும் நான் எடுத்த புகைப்படம்...


பதிவர் கிரிக்காக நான் எடுத்த புகைப்படம் இது...


பின் புற படத்தில் இயந்திர தனமாய் கையில் ரோஜாப்பூ வைத்து இருப்பவர் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டவர், இந்த வயதிலும் அடுத்தவன் பொண்டாட்டியோடு மன்னிக்கவும், ஜஸ்வர்யாராயோடு ஆடுபவர்.

கீழே பிளாட்பாரத்தில் உட்கார்ந்து இருப்பவர்கள் கொஞ்சமாக ஆசிர்வதிக்கபட்டவர்கள்.

ஊண் குருடு இல்லாமல் பிறந்து தனது அந்திம காலத்தில் மருமகள், மகனின் வசவுகளை ஏற்று வாழ்பவர்கள்,
தன் சோகத்தை ரோட்டோரத்தில் உட்கார்ந்துதன் வயது ஒத்த நண்பர்களுடன் பேசுபவர்கள்.

ஹீம் ரஜினியோட பிறந்த நேரம் அப்படி, பாருங்கள் கடவுளின் திருவிளையாடல்களை ஒரே பூமி ரத்தம் சதை அழுகை உணர்வு, காமம் எல்லாம் ஒன்றே ஆனால் வாழ்க்கை தரம் மட்டும்????????

ஆனால் ரஜினிக்கு இந்த வாய்ப்பு சும்மா ஒன்றும் கிடைக்கவில்லை அந்த அசுர வளர்ச்சிக்கு பின் நிறைய காயங்களும் வேதனைகளும் இருக்கிறது, ரஜினி பெங்களுருவில் பஸ் கண்டக்டர், அவர் சென்னை லாயாலோ கல்லுரியில் படிக்க வில்லை. அவர் அப்பா பெயர் ஒன்றும் எஸ் ஏ சந்திரசேகர் அல்ல....



ஆனாலும் ரஜினி கடவுளால் ஆசிர்வதிக்கபட்டவர்தானே....


நான் எடுத்த புகைபடங்களில் இந்த படமும் என் ரசனை பட்டியலில்....





அன்புடன்/ ஜாக்கிசேகர்

ஒரு மனிதனின் பரிணாம வளர்ச்சி, அரிய புகைபடங்களுடன் ..(இ மெயிலில் வந்த சோக்கு)

ஒரு மனிதனின் பரிணாமவளர்ச்சி..............................








அன்புடன்/ ஜாக்கிசேகர்

இந்தியாவில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் நடக்கும் பத்து புளித்து போன நிகழ்வுகள்.....


நேற்று முன் தினம் தலைநகர் டெல்லியில் நடந்த குண்டு வெடிப்பில் இதுவரை 30 பேர் உடல் சிதறி மடற்றும் 100க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளனர்.



சில மாதங்களுக்கு முன் அகமதாபாத், பெங்களுர், சூரத் போன்ற இடக்ளில் குண்டு வெடித்து இறந்து போனது ஞாபகம் இருக்கலாம் அல்லது தமிழனாக இருக்கும் பட்சத்தில் அது மறந்து போய் இருக்கலாம்.இந்தியனாக இருக்கும் பட்சத்தில் அதை சகித்து கொண்டு இருக்கலாம். அல்லது பொதுவானாக இந்தியனாக இருந்தால் பக்கத்து வீட்டில்தானே நடந்தது நமக்கேன் கவலை என்ற உயர்ந்த பண்பு காரணமாகவும் நாம் மறந்து போய் இருக்கலாம்,


பெங்களுர், சூரத், அகமதாபத் போன்ற இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது எப்படி பொங்கி எழுந்து தீவரவாதத்தை அடக்குவதாக பாவித்து என்ன சூலுரைத்தார்களோ, அதே போல்தான் இப்போதும் பெரிய தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள்.


இதுவரை தீவரவாதத்தை அடக்க எந்த ஒரு முன் ஏற்பாடும் எடுத்ததாகதெரியவில்லை. உளவுதுறை என்ன மயிர் புடுங்கி கொண்டு இருக்கிறது என்பது புரியவில்லை.

இந்தியாவில் ஒவ்வோரு முறை குண்டு வெடிப்பின் போது கீழுள்ளவை நிகழும்...

1. குண்டு வெடிப்பு நிகழ்ந்ததும் உடல்களை உடனே அப்புறபடுத்தி உடனே லட்ச ரூபாய் நிவாரணம் அறிவிப்பார்கள்

2. காயம் பட்டவர்களை நேரில் பார்த்து ஆறுதல் கூறி ஒரு போட்டோ எடுத்து அதனை இந்தியா முழுவதும் வெளிவரும் பிராதன பத்திரிக்கைகளில் முதல் பக்கத்தில் வரும் படிபிரதமர் வட்டாரத்தினர் பார்த்து கொள்வார்கள்.

3.சோனியா காந்தியும் நேரில் போய் பார்க்கிறார் என்றால் குண்டு வெடிப்பு சேதம் அதிகம் என்று அர்த்தம்.

4. அத்வானி பொடா சட்டம் இருந்தால் தீவிரவாதமே நிகழாது என்று பேட்டி கொடுப்பார்.

5. இந்திய மீடியாக்கள் நான்கு நாட்கள் நாம் இருப்பது இந்தியாவிலா அல்லது இலங்கையிலா என்று தற்போது விஸ்காம் முடித்த வெள்ளை தோல் பெண்களை வைத்து மூண்றுநாள் ஓப்பாரி வைத்து விட்டு சல்மான்கான் யார் உதட்டில் இப்போது ஈரப்டுத்தி கொள்கிறார் என்பதை ஆராய போய் விடுகிறார்கள்.

6.கொஞ்சம் கோபம் உள்ளவர்கள் பத்திரிக்கையிலும் பிளாக்கிலும் எழுதி தன் கோபத்தை தீர்த்து கொள்கிறார்கள்.

7. எல்லா தலைவர்களும் கண்டனம் தெரிவிப்பார்கள்.

8.குண்டு வெடிப்பில் தன் உற்றாரை இழந்து வாடும் உறவினர்கள் மார்பில் அடித்துகொண்டு அழும் காட்சி மறுநாள் தினசரிகளில் நிச்சயம் இடம்பெறும்.



9. ஒருவாரம் கழித்து இறந்தவர் ஒருவருடைய சோக செய்தி வாரப் பத்திரிக்கையில் இடம்பெறும்.



10. இந்தியர்கள் பத்திரிக்கை, தொலைகாட்சி, வாரபத்திரிக்கைகளில் குண்டு வெடிப்பு செய்திகளை படித்து விட்டு பார்த்து விட்டு, த்சோ த்சோ என்று சொல்வார்கள் .


அடுத்த குண்டு வெடிப்பு நடந்ததும் இதே செயல்கள் இந்தியாவில் நிச்சயம் நடைபெறும் இந்தியர்கள் த்சோ, த்சோ சொல்ல காத்து இருப்பார்கள்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

திருமணம் முடிந்த சில மணித்துளிகளில்(புது மாப்பிள்ளை) மங்களுர் சிவா வீட்டில் நான்...


எல்லா பதிவர்களும் நேரில் மங்களுர் சிவாவை வாழ்த்தினாலும் அருகில் இருந்தும் என்னால் நேரில் சென்று திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை, வேலை முடிந்து அவர் அண்ணன் வீட்டுக்கு சென்று அவரை சந்தித்து வாழ்த்து கூறினேன்.


மணமக்கள் இருவரும் எல்லா வல்ல இறைவன் அருளாள் நீடுடி வாழட்டும்.

வாழ்த்துக்கள் மங்களுர் சிவா, பூங்கொடி

அன்புடன்/ஜாக்கிசேகர்

வலைபதிவர்களுக்கு என் நன்றிகள்


கடந்த மூன்று மாதத்தில் நான் வலை பதிவு ஆரம்பித்து இதுவரை பத்தாயிரம் பேர் என் பதிவை இன்றோடு படித்து இருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து என் எழுத்துக்கு கொடுத்து வரும் ஆதரவு உங்களை எல்லோரையும் நினைக்கும் போது என்னை மெய் சிலிர்க்க வைக்கின்றன.


குடும்ப பாரத்தை தாங்க தூர தேசம் சென்று தன் கனவுகளை நனவாக்க இரவு பகல் பாராது உழைத்து, மனைவி பிள்ளைகளை நினைத்து தலையனைக்கு முத்தம் கொடுத்து விட்டு மல்லாக்க விட்டம் பார்க்கும் என் தமிழ் ரத்த சொந்தங்கள்.

தாய் நாட்டில் என்னதான் நடக்கிறது என்பதை அறிய விரிவாய் அலச விரிவாய் பேச இந்த வலை இனைப்பு மட்டும்தானே ஒரே வழி

என்னை பொறுத்தவரை தூர தேசத்தில் இருக்கும் என் ரத்த சொந்தங்களுக்கும் உள்ளுர் சொந்தங்களுக்கும் எதாவத செய்தியை என் பார்வையில் உங்களோடு பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதே என்னை பொறுத்தவரை மகிழ்வான விஷயம்.

தொடர்ந்து எனக்கு அதரவு கொடுத்தும் பின்னுட்டம் இட்டும் என்னை உற்சாகப்படுத்தும்


எல்லோருக்கும் என் நன்றிகன்


அன்புடன் /ஜாக்கிசேகர்

மங்களுர் சிவா திருமணம் முடிந்ததும் பாடும் பாடல் என்ன?



நம்ம சக பதிவர் மங்களுர் சிவாவுக்கு வரும் 11 ம் தேதி சென்னை வடபழனியில் திருமணம் வெகு விமர்சியாக நடக்க இருக்கிறது. வலைபதிவர் சார்பாகவும் என் குடும்பத்தினர் சார்பாகவும், அவருக்கும் அவர் வாழ்கை துணைக்கும் எல்லாம் இனிதே நடக்க எல்லாம் வல்ல பரம் பொருளை வேண்டுகிறேன். இனிவரும் காலங்கள் வசந்தமாய் வாழ எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன்.

ஓ இன்னம் மேட்டருக்கு வரலியா? ஓகே நம்ம சிவா திருமணம் முடிந்து பாடும் பாடல்

“‘ஜெர்மணியில் செந்தேன் மலரே, தமிழ்மகனின் பொன்னே சிலையே காதல் தேவதையே, காதல் தேவதை பார்வை கண்டதும் நான் எனை மறந்தேன்....”

என்ன சிவா இந்த பாடலை தானே உங்கள் உதடு முனு முனுக்கும்.....?

வாழ்த்துக்கள் சிவா.


அன்புடன்/ ஜாக்கிசேகர்

(பாகம்/1) கால ஓட்டத்தில் காணமல் போனவைகள். (தொடர் விளையாட்டு)




ஹரிக்கேன் விளக்கு...




தமிழகம் முழுவதும் மின் வெட்டால் பொதுமக்கள் தினறி, கழுத்து வியற்வை,அக்குள் வியற்வை பிசு பிசுப்புடன், கலைஞர் கவர்மெண்ட்டை திட்டிக்கொண்டு இருக்கும், இந்த வேளையில் இது பற்றி எழுதுவது நல்லது என்பேன்.


பொதுவாய் இந்த மாதிரி விளக்குகளைஎல்லா கிராமங்களிலும் பயண்படுத்துவர்.
பொதுவாய் விவசாயிகள் இரவில் தண்ணீர் பாய்ச்சவும், இரவில் வரப்பு பார்த்த நடக்கவும் இந்த விளக்குகள் பயன்படும்.

இதற்க்கு ஹரிக்கேன் விளக்கு என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? புயல் காற்றுகளின் போது அல்லது எந்த பயங்கர காற்றுகளுக்கும் ஈடு கொடுத்து அனைந்து போகாமல் வெளிச்சத்தை கொடுக்க வல்லது.
ஹரிக்கேன் என்றாலே புயல்தானே...


இதற்க்கு கடலுர் மற்றும் சற்று வட்டாரங்களில் இதற்க்கு லாந்தர் என்று பெயரிட்டும் அழைப்பர்.

இந்த விளக்குகளை மீனவர்களின் உற்ற தோழன் என்று சொன்னால் அது மிகையில்லை...

மின்சாரம் எட்டி பார்க்காத அந்த கால கட்டத்தில் எங்கள் அம்மா அந்த லாந்தர் விளக்கை சாயிந்திரம் 5 மணிக்கெல்லாம் எடுதது முந்தின நாள் இரவில் அந்த விளக்கு உழைத்து கலைத்ததால் அதன் கண்ணாடியில் கருப்பு சுவாலைகள் படிந்து இருக்கும். அந்த கரும் ஜுவாலைகளை துடைத்தால்தான் பளிச்சென ஒளி கிடைக்கும்.

கண்ணாடி தொடைக்கவும் கக்கூஸ் கழுவவும் ஸ்பிரே வராத அந்த காலத்தில் மதியம் சமையல் செய்து நீர்த்து போன வரட்டி
( மாட்டு சாணத்தில் செய்த எரி பொருள்) சாம்பலை எடுத்து அந்த குடுவை போன்ற கண்ணாடி குடுவை உள்ளே, சர்ம்பலை உள்ளே போட்டு துணியால் துடைத்ததும் அந்த குடுவை பளிச்சிடும் பாருங்கள் அடா அடா....

அப்போது என்ன சுட்டி டிவி குட்டி டிவி போன்ற போழுது போக்குகளா இருந்தது?. கவனம் சிதற, அதனால் எங்க அம்மா செய்யும் இந்த வேளையை இமை பிசக்காமல் பக்கத்தில் உட்கார்ந்து கவனித்து கொண்டு இருப்பேன்.

நம்ம எல்லோருக்கும் நாம் செய்யும் வேலையை பிறர் கவனித்தால் ஒரு தடிப்பு நம்மில் வந்து ஒட்டி கொள்ளுமே அது போல் கண்ணாடியை சாம்பலால் துடைக்கும் அந்த வேளையை, என் அம்மா ஏதோ அனு சக்தி ஓப்பந்தத்துக்கு கோப்பு ரெடி செய்வது போல் அந்த துடைக்கும் வேலையை செய்து கொண்டு இருப்பாள்.

இப்போதெல்லாம் லாந்தர் என்ற ஹரிக்கேன் விளக்குகளை ரஜினி,கமல் போல் அடிக்கடி பார்க்க முடிவதில்லை நடிகர் கார்த்திக்கை போல் எப்போதாவதுதான் கண்ணில் படுகின்றது.

ஆனால் அந்த விளக்கு வெளிச்சத்தில்தான் 50 பைசா அட்டை புத்தகத்தில்
அனா ஆவன்னா படித்தேன், தப்பாக எழுத்துக்களை படித்து, என் அம்மா மூஞ்சி ராட்சசியாக மாறி தலையிலும் தொடையிலும் கொலை வெறி தாக்குதல் நடத்தி தடுக்க முடியாமல் அழுது வீங்கிய கண்ணங்களுடன் வீட்டின் மூலையில் உட்கார்ந்து இருந்தது, இன்றும் என் நினைவின் ஈர அடுக்குகளில்.....


மழைகாலங்களில் அந்த லாந்தர் விளக்கு என் கூரை வீட்டின் நடு மையத்தில் உள்ள கொக்கியில் மாட்டி இருக்கும். அது காற்றில் அசையும் போதெல்லாம் எல்லா பொருட்களின் நிழல்களும் மாறுபாடு அடைந்து பக்கத்து சுவர்களில் தெரியும்.

அதுதெரியும் போது நீட்டி விழும் அந்த நிழல்களுக்கு எதாவது உருவங்களை உருவகப்படுத்தி நடு சாமம் வரை ரசிப்பேன்.

ஹரிக்கேன் விளக்கை தொட்டு பல வருடங்கள் ஓடி விட்டன இருப்பினும், அந்த மண்ணெண்னை வாசமும் அது சில நேரங்களில் பக் என்று பற்றிகொண்டதும் அலறி அடித்து அம்மாவின் தொடைகளை கட்டி கொண்டு பாதுகாப்பு தேடியதும்,விளக்கை சரி செய்து பயத்தை போக்க தலை முடி கோதி தூங்க வைத்ததை எப்படி மறப்பது.

ஹரிக்கேன் விளக்குக்கும் என் அம்மாவுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது இருவருமே பணி செய்துவிட்டு பலன் எதிர்பார்க்ககாதவர்கள்.

என் அம்மா மட்டும் அல்ல, இன்னும் நிறைய குடும்பங்களின் அம்மாக்கள் ஹரிக்கேன் விளக்குகளாய் வீழ்ந்தும்,
இன்னும் வாழ்ந்தும் வருகிறார்கள்.

தன் மேல் தினமும் படியும் கரும்புகை ஜுவாலைகளை மறைத்தபடி....


என் பழைய பதியப்பாடாத வாழ்கையை பதிவில் பதிய வைக்க உரிமையோடு தொடர் ஓட்டத்தில் சேர்த்த மங்களூர் சிவா என் நன்றிக்கு உரியவர்.

அதே போல் என் அம்மாவின் கோபத்தையும், என் அம்மாவின் பாலு ஜுவல்லர்ஸ் புன்னகையும், ரொம்ப நாட்களுக்கு பிறகு லாந்தர் விளக்கின் மஞ்சள் வெளிச்சத்தை மனதில் உருவகப்படுத்தி, அதில் என் இறந்து போன என் இளைமைக்கால அம்மாமுகத்தை பொருத்தி யோசிக்க வைத்ததிற்க்கு என் கோடன கோடி நன்றிகள்.

நன்றி மங்களூர்சிவா..

அன்புடன் /ஜாக்கிசேகர்.

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner