நான் வலைப்பூவுக்கு வந்த போது கலக்கிகொண்டு இருந்தது...லக்கிலுக்தான்... அவர் பதிவுகள் தமிழ்மணத்திலும் மற்ற திரட்டிகளிலும் செக்கை போடு போட்டுக்கொண்டு இருந்த நேரம்... அந்த நக்கல் நையாண்டியாக எழுதும் அந்த நபர் எப்படி இருப்பார்??? என்ற ஆவல் என்னுள் இருந்தது.
இரண்டு பேருக்குமே கலைஞர் பிடித்தமானவர்.... ஆனால் என்னை பொறுத்தவரை யார் தவறு செய்தாலும் சுட்டிக்காட்டுவது எனது வழக்கம்....அது கலைஞராகவே இருந்தாலும்...அதுமட்டும அல்ல லக்கி அரசியல் நிகழ்வுகளில் கொடுக்கும் புள்ளி விபரங்கள் என்னை ரசிக்கவைத்தன... லக்கியை பார்த்து பதிவு எழுத பதிவுலகம் வந்தவர்கள் ஏராளம்...நண்பர் கார்த்திகை பாண்டியன் கூட லக்கி எழுத்துகளை வாசித்து விட்டு பிளாக் ஆரம்பித்தேன் என்று என்னிடம் சொல்லி இருக்கின்றார்.
அப்படி ஒரு ஆள் எப்படி இருப்பார் என்று நான் நினைத்தகாலங்கள் உண்டு...வலையுலகத்துக்கு நான் புதியவன்..எனது திருமணபத்திரிக்கையை அதிஷாதான் முதன்முதலில் அவரது வலைதளத்தில் வெளியிட்டார்...நாம யாருக்கு தெரிஞ்சி இருக்க போறோம்?? என்று நான் நினைத்துக்கொண்டு இருந்த போது என் திருமணத்துக்கு ஏழு போன்கால்கள் வந்தன வாழ்த்துக்கள் சொன்னார்கள். அப்போதுதான் வலையுலகத்தின் ரீச் அறிந்தேன்.. நிறைய பதிவர் சந்திப்புகள் நடக்கும் போது நண்பர் அதிஷா போன் செய்து அவசியம் வர சொல்லுவார்... ஆனால் நான் போனது கிடையாது... காரணம் கூச்சம்.. ஆனாலும் போனால் லக்கி அதிஷாவை பார்க்கலாம் என்று ஆசைபட்டதுண்டு... காரணம் அப்போது மிக தீவிரமாக இயங்கியவர்கள் இருவர்...
முத்துகுமாரன் இறப்புக்கு அஞ்சலி செலுத்த நடந்த பதிவர் சந்திப்புக்கு போனபோதுதான் நான் பதிவர்கள் பலரை பார்த்தேன்...எனக்கு லக்கி, அதிஷா இருவரையும் பார்க்க ஆவல்......அன்று பார்த்தேன்... இரண்டு பேருமே நடிகர் நாகேஷ் அவர்களின் தூரத்து உறவினர்கள் போல இருந்தார்கள்...இவர்களா இப்படி எழுதுகின்றார்கள் என்று வியந்து போனது உண்டு...
அப்போதுதான் பாஸ்டன் ஸ்ரீராமை நேரில் சந்தித்து ஒரு அரை மணிநேரம் பேசி இருப்பேன்.. அவ்வளவே... அப்போதுதான் பதிவர்கள் பலரை சந்தித்தேன்.
அதன் பின் லக்கியோடு பல சந்தர்பங்களில் உரையாடியதுண்டு... எனக்கு அவருக்குமே பல கருத்து வேறுபாடுகள்... ஆனால் பல விஷயங்களில் இருவரும் எண்ணங்களும் ஒரே நேர்கோட்டில் பயணித்து இருக்கின்றன...
முன்பு எனக்கு ஒரு பிரச்சனை பதிவுலகத்தில் வந்ததது.. அப்போது போன் செய்த லக்கி பேசிய பல விஷயங்கள் எனக்கு இன்னும் நினைவில் இருக்கின்றன....ஜாக்கி தயவு செய்து வேற போஸ்ட் போட்டு தன்னிலை விளக்கம் எல்லாம் கொடுக்காதிங்க... நீங்க மாஸ்.. அது பல பேருக்கு புடிக்கலை... என்று என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்...ஒரு அரைமணிநேரம் பேசிமுடித்ததும் நான் என் மனைவியடம் சொன்னேன்.
எனக்கு போன் பண்ணி பேசனும்னு அவசியம் இல்லை.. ஒரு அரைமணிநேரம் அட்வைஸ் செய்யறார் என்றேன்..
கடந்த ஒரு சில வாரத்துக்கு முன் அதே போல சில விஷயங்களை என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார்...சில விஷயங்களில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று அறிவுறித்தினார்... எனக்கு சீனியர்...அவர்.. வலையில் நடந்த பலவிஷயங்கள் நான் அவரிடத்தில் பேசும் போது தெரிந்து கொண்டு இருக்கின்றேன்.... ஆனால் வலை நண்பர்கள் லக்கி பற்றி முன் வைக்கும் விமர்சனங்கள் பல... என்னை பற்றி கூட சில பதிவுகளில் வம்புக்கு இழுத்து இருப்பார்... இருப்பினும் இன்றுவரை அவரோடு நட்பு பாராட்டி இருக்கின்றேன்....
அப்படி நான் வலையுலகத்து வந்த போது வியந்த ஒரு மனிதன் என்னை பற்றி புதிய தலைமுறை பத்திரிக்கையில் எழுதிய வலைவீசம்மா வலைவீசு என்ற கட்டுரையில் என்னை பற்றியும் என் வளர்ச்சி பற்றியும் மிக உயர்வாக குறிப்பிட்டு இருக்கின்றார்... அந்த வரிகள் கீழே....
'பிரபல' போட்டியில் இப்போது பிரதானப் போட்டியாளர்களாக இருப்பவர்கள் ஜாக்கிசேகரும் (jackiesekar.com), கேபிள் சங்கரும் (cablesankar.blogspot.com). உலகளவில் இணையத் தளங்களின் பிரபலத்தை அளவிடும் 'அலெக்ஸா' தரவரிசையில் முதல் ஒரு லட்சம் இடங்களுக்குள் இருப்பவர்கள் இவ்விருவரும். இந்திய அளவில் முதல் பத்தாயிரம் இடங்களுக்குள்ளாக இருக்கிறார்கள்.
என்று எழுதி இருக்கின்றார்... ஆனால் கேபிளுக்கும் எனக்கும் போட்டி என்பதாய் பொதுபார்வையில் எழுதி இருக்கின்றார்... போனவருடம் ஷுட்டிங்கிற்கு ஹைதராபாத் மற்றும் அலப்புழா சென்ற போது எனது அலக்சா ரேங் ஒரு லட்சத்து 15 ஆயிரத்தில் இருந்தது... வேலை அதிகமானகாரணத்தால் பதிவு எழுத முடியவில்லை அதனால் அலக்சா ரேங் ஒன்றரை லட்சத்துக்கு மேல் போய்விட்டது..... காரணம் வேலைபளு... அதனால் அந்த ரேங் எல்லாம் நான் போட்டியாக கருதவில்லை....நாளை அதிக வேலை காரணமாக பதிவு எழுத முடியவில்லை என்றால் அந்த ரேங் 5 லட்சத்துக்கு கூட போகும்.... ஆனால் ஒரு லட்சத்துக்குள் வைத்து இருக்கும் தொடர்வாசிப்பாளர்களுக்கு என் நன்றிகள்.
புதியதலைமுறை தீபாவளி சிறப்பிதழ் இன்று வெளியாகி இருக்கின்றது கட்டுரை கடைசி பக்கத்தில் வலைவீசம்மா வலைவீசு என்று வலையுலகம் பற்றி மிக விரிவாக அந்த கட்டுரை அலசுகின்றது...

வழக்கமான லக்கியின் ஸ்டைலான நக்கலுக்கும்,உள்குத்துக்கும் எந்த விதத்திலும் அந்த கட்டுரையில் குறைவு இல்லை..
அந்த கட்டுரை வெளியிட்ட புதியதலைமுறை பத்திரிக்கைக்கு எனது நன்றிகள்...இப்படி ஒரு கட்டுரையை மட்டும் எனது அன்னை வாசித்து இருந்தால் எப்படி இருக்கும்??? என்னவிதமான ரியாக்ஷன் இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்...
இந்த தீபாவளி சிறப்பிதழ் பதிய தலைமுறை புத்தகம் வாங்கி, அக்கம், பக்கம்,சொந்தம், பந்தம் என எல்லோரிடமும், காட்டி மகிழ்ந்து இருப்பாள்..காலையில் வாங்கிய புதியதலைமுறை புத்தகத்தை மதியத்துக்குள் பழைய தலைமுறையாக மாற வைத்து இருப்பாள்....அவளுக்கு என் மீது அவ்வளவு பாசம்.
நன்றி லக்கி.
நன்றிபுதியதலைமுறை.
குறிப்பு....
மற்றவர்களுக்கு இது சாதாரணவிஷயமாகபடலாம்... எனக்கு இது மிகப்பெரிய விஷயம்.
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
வாழ்க லக்கி..
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி...
ReplyDeleteவாழ்க லக்கி வளர்க ஜாக்கி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteவாழ்க லக்கி
வாழ்த்துக்கள் தல.....
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி
ReplyDeleteHappy Deepavali
வாழ்த்துக்கள் ஜாக்கி !
ReplyDeleteநெசமா நீ மாஸ் தான்யா ஜாக்கி வாழ்த்துக்கள்.நானும் சொல்ல நினைத்த விஷயம் சில தேவையற்ற விஷயங்களில் உங்கள் கவனம் திரும்பியதால் பழைய ஸ்பீட் கொஞ்சம் மிஸ்ஸிங் கொஞ்சம் டாப் கியர போடுங்க.
ReplyDeleteLucky and Bala Bharati are my All time Favourites.
ReplyDeleteவாழ்த்துக்கள் லக்கி ஜாக்கி :)
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள் அண்ணே ..
ReplyDeleteசங்கு சுட்டாலும் வெண்மை தரும். வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteவாழ்த்துகள்!
ReplyDeleteVaalthukkal Anna
ReplyDeleteRegrds
sha
பழுத்த மரம் தான் கல்லடி படும்.... ஜாக்கி
ReplyDeleteஅண்ணே புதிய தலைமுறை என்று ஒரு பத்திரிக்கை வருவதே இந்த கட்டுரை மூலம் தான் தெரிந்துகொண்டேன்.எப்படியோ உங்கள் விளம்பரம் மூலம் மேலும் சர்குலேஷன் அதிகரிக்கும், புதியதலைமுறைக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஜாக்கி.
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி, இன்னும் பல உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்
ReplyDeleteவாழ்த்துக்கள் :) :)
ReplyDeleteகணினி முன் அமர்ந்தவுடன் உங்கள் வலைத்தளத்தின் பெயர்தான் முதலில் கை டைப் செய்கிறது.
ReplyDeleteஉங்கள் எழுத்தில் ஏதோ ஓர் ஈர்ப்பு உள்ளது.
♫வாழ்த்துக்கள்♫
//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
ReplyDeleteஅண்ணே புதிய தலைமுறை என்று ஒரு பத்திரிக்கை வருவதே இந்த கட்டுரை மூலம் தான் தெரிந்துகொண்டேன்//
இதெல்லாம் கொஞ்சம் டூ மச்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
வாழ்த்துக்கள் ஜாக்கி !
ReplyDelete//|கீதப்ப்ரியன்|Geethappriyan| said...
ReplyDeleteஅண்ணே புதிய தலைமுறை என்று ஒரு பத்திரிக்கை வருவதே இந்த கட்டுரை மூலம் தான் தெரிந்துகொண்டேன்//
இதெல்லாம் கொஞ்சம் டூ மச்..
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
டூ டூ மச்..
:)
உங்களுக்கு வாழ்த்துக்கள், லக்கி, அதிஷா விற்கு நன்றிகள்
ReplyDeleteதீபாவளி நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தல! வாழ்க லக்கி! :)
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணே.... enjoy.....
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி...
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி!
ReplyDeleteவாழ்த்துக்கள் தல... You Deserve it...!!
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி..............
ReplyDeleteஎன் மீது மதிப்பு வைத்து வாழ்த்து சொன்ன அத்தனை நண்பர்களுக்கும் என் நன்றிகள்...
ReplyDeleteஸ்ரீ, விசா...... ,கார்த்தி அமீரகத்துல இருப்பதால் புதியதலைமுறை புத்தகம் பற்றி தெரியாமல் இருந்தாலும் இருக்கலாம்...
i dont wall tell anything.
ReplyDeleteநல்வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteலக்கி மற்றும் அதிஷாவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி அண்ணா.
ReplyDeleteThis is not a small matter. A big recognition. Congrats Jackie
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜாக்கி...
ReplyDeleteவாழ்த்துக்கள்.உங்கள் கட்டுரையில் என் மனம் கவர்ந்த வரிகள்>>>>..இப்படி ஒரு கட்டுரையை மட்டும் எனது அன்னை வாசித்து இருந்தால் எப்படி இருக்கும்??? என்னவிதமான ரியாக்ஷன் இருக்கும் என்று யோசித்து பார்த்தேன்...>>>
ReplyDeleteஎல்லோருக்கும் உள்ள மனம் தான் உங்களுக்கும் ஆனால் தக்க சமயத்தில் அதை வெளீப்படுத்திய விதத்தில் உய்ர்ந்து நிற்கிறீர்
வாழ்த்துக்கள் மீண்டும்
வாழ்த்துக்கள் ஜாக்கி சார்!
ReplyDelete