இது நான் லீனியர் உப்புக்காத்து..
ஜாக்கி சார்...
நீங்க டிவி மீடியத்துல இருந்து சினிமாவுக்கு போயிட்டு எதுக்கு திரும்ப டிவி மீடியத்துக்கு வந்திங்க..??
சினிமாவுல இரண்டு வருஷம் இருந்தேன்.... 25 ஆயிரம் சம்பாதிச்சேன்.. ஆனா இந்த நேரத்துல ஒய்ப் லோன் போட்டாங்க...வீடு வாங்கிட்டோம்.... நம்பி வந்தவளை காசு இல்லாம தவிக்க விட முடியாது இல்லையா..? யாழினி பொறந்தா..... அப்புறம் எங்க சினிமா???
தமிழ் சினிமாவில் தலையெழுத்தை மாற்ற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு கடலூர் கூத்தப்பாக்கத்தில் இருந்து மரியாத்தா கோவில் சத்தியம் அடித்து விட்டு எல்லாம் நான் புறப்பட்டு வரவில்லை..
சினிமாவை நேசிக்கின்றேன்.. உண்மையாய் ...
பிராப்தம் இருந்தால் அது கை கொடுக்கட்டும்...
சினிமா எங்கேயும் ஓடிப்போகப்போவதில்லை.. கிளின்ட் ஈஸ்ட் உட் வயதிலும் சினிமாவில் சாதிக்கலாம்...
ஆனால் வாழ்க்கை...??
கட் டூ பிளாஷ் பேக்.........




