(பாகம் / 3 )டூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...



கால ஓட்டத்தில் காணமல் போனவைகள் தொடரில் இந்த பாகத்தில் தமிழகத்தில் பலரால் மறக்க முடியாத அந்த கால பொழுது போக்கு சாதனமான டுரிங் டாக்கிஸ் பற்றி இந்த வாரம் பார்ப்போம்

நெற்றிவேர்வை நிலத்தில் சிந்தி உழைத்த தமிழனை களைப்பு போக்கி சினிமா கலை வளர்ந்த அல்லது வளர்ந்த இடம் கிராமத்து டூரிங் டாக்கிஸ்கள் என்றால் அது மிகையில்லை.





இன்று ஐநாக்ஸ் சத்தியம் போன்ற திரையரங்குகளில் ஒரு படம் பார்க்க நுழைவு கட்டணமாக இன்று ரூபாய் 120ல் இருந்து 150,180 வரை கட்டணம் வசூலிக்கின்றார்கள், ஆனால் அப்போது படம் பார்க்க டூரிங் டாக்கி்ஸ் வசூலித்த கட்டணம் 30 பைசா அப்போது தியேட்டர்களில் அதிகபட்ச டிக்கெட் விலை 4லிருந்து 5ரூபாய் அவ்வளவுதான்.

அப்போதும் படம்தான் பார்த்தோம் இப்போதும் படம்தான் பார்க்கிறோம் என்ன சற்று வசதிகளைஅதிகப்படுத்தி இருக்கிறார்கள் அவ்வளவுதான். அது காலத்தின் கட்டாயம். இப்போது படம் பார்க்கும் போது சிம்ரன் வந்து நெஞ்சு அல்லது ...தடவி படம் பார்க்க வைக்கிறாரா? எதற்க்காக இவ்வளவு கட்டணம்? பாருங்கள் டாபிக் விட்டு கோபத்தில் வெளியே போய் விட்டேன்.

அப்போது டிவி எல்லோர் வீட்டிலும் தன் அழிச்சியாட்டத்தை அரம்பிக்காத நேரம். அதுவும் கலர் டிவி என்பது எல்லோருக்கும் பகல்கணவாய் இருந்த கால கட்டம் அது. உழைத்து களைத்த அத்தனை பேருக்கும் அரும் மருந்து இந்த டூரிங் டாக்கிஸ்கள்தான்.

சரி ஏன் டுரிங் டாக்கிஸ் தெரியுமா?சினிமா பேசாத காலகட்டத்தில் இருந்து பேசும் காலகட்டத்துக்கு வந்த போது அது பேசியதால் அதாவது டாக் செய்ததால் அதற்க்கு டாக்கிஸ் என்று பெயர் வைத்தார்கள்.

டுரிங்டாக்கிஸில் படம் பார்க்கின்றது என்பது என்னை பொருத்தவரை ரொம்ப சந்தோஷமான செயல் என்பேன். ஒரு நாளைக்குஇரண்டு காட்சிகள் மட்டுமே திரையிடுவார்கள் மாலைக்காட்சி அடுத்தது இரவு காட்சி. மாலை காட்சி இரவு எழு மணிக்கும், இரவு காட்சி பத்து மணிக்கும் ஆரம்பிப்பார்கள்.

டாக்கிஸ்ல் படம் துவங்கும் அழகே அழகு. முதலில் கூம்பு ஒலி பெருக்கியில் நாதஸ்வரம் இரவு 6.50க்கு போடுவார்கள். கிராமத்தில் படம் பார்க்க செல்லும் எல்லோர் வீட்டிலும் சின்ன பதட்டம் வந்து ஓட்டிக்கொள்ளும்.

“கொட்டாயில பாட்டு போட்டுட்டான் எல்லாரும் சீக்கிரம் கிளம்புங்க”

என்றவுடன் அடித்து பிடித்து ஓடிய அந்நநாளைய நினைவுகள் என்னை அந்த காலகட்டத்துக்கு அழைத்து செல்கின்றன.

நாதஸ்வரம் 5 நிமிடத்தில் முடிந்து ஒரு வெஸ்டன் இசை ஒளிக்க ஆரம்பிக்கும் அது முடிந்த உடன் சர்வ நிச்சயமாக எந்த மைனர் வந்தாலும் வரா விட்டாலும் படம் ஆரம்பித்துவிடும்அதானால் நாங்கள் அனைவரும் நடையில் ஓட்டத்தை சேர்ப்போம்.

30 பைசா டிக்கெட் தரை டிக்கெட்டில் படம் பார்பது போன்றதொறு சுகம் எனக்கு தெரிந்து சத்தியம் ஐநாக்சில் கூட இல்லை என்பேன்.பறந்த மணல் பகுதி அதில் நடுவில் கட்டை அல்லது சிமென்ட் கட்டை கட்டி ஆண்கள் பெண்கள் என்று பிரித்து இருப்பார்கள். அந்த வயதில் நாங்கள் பெண்கள் பகுதியில்தான் உட்காருவோம் ஏன் என்றால் அம்மாதானே படத்துக்கு அழைத்து செல்வார் அதனால்தான். அதே போல் படம் தெரியவில்லை என்றால் கூடுதலாக மணல் கூட்டி அதன் மீது உட்காருவோம்.

யாரவது எதிரில் மறைத்தால் அவர் பின்புறம் மணலை கொஞ்சம் நோண்டினால் அவர் மெல்ல கீழ் இறங்குவார்.
அதே போல் பசங்களுக்குள் விளையாடும் விளையாட்டும் அதுவே. மண் கூட்டி உட்கார்வதும் அதனை பின்னால் இருந்து பறிக்கும் தமிழர்களின் அரசியல் விளையாட்டை அப்போதே நாங்கள் விளையாடுவோம்.

அதே போல் இருபாலிணத்தையும் பிரிக்கும் கட்டை சுவர் பக்கம் ஆண்கள் பக்கம் என்றாலும் பெண்கள் பக்கம் என்றாலும் உட்காரவே கூடாது அப்படி உட்கார்ந்தால் ஒரு லிட்டர் பெனாயிலில் கை கழுவ வேண்டும் கட்டை சுவர் ஓரம் எல்லாம் வெற்றிலைபாக்கு எச்சில் துப்பி வைத்து இருப்பார்கள்


படம் முதல் இன்டர் வெல் விடும் போது அந்த கால முங்கள் ஊர் டாக்கி்ஸ்ல் அழது வடியும் 40 வாட்ஸ் பல்பு அழுது வடிந்து கடமைக்காக எரியும்.அப்போது கட்டை குரலில் தேங்காய் ரொட்டி முருக்கேய்,
தேங்காய் ரொட்டி முருக்கேய் என்று காலனி பசங்க அலுமினிய தட்டில் வைத்து தேங்காய் ரொட்டி முருக்கு போன்றவற்றை விற்ப்பார்கள்.
அதற்க்கு தட்டு முருக்கு என்று செல்ல பெயர் கூட உண்டு.


எங்க அம்மா ஒரு கஞ்சபிசினாரி வீட்டில் ஏற்க்னவே இருக்கும் காராசேவ், முருக்கு போன்ற தீன்பண்டங்களை ஓயர் கூடையில் போட்டு எடுத்து வந்து விடும்.

காளிமார்க் சோடா பாட்டிலில் அந்த காலத்து லோக்கல் பெப்சி கலர் கலர்கலராக இருக்கும் அது பிரிட்ஜ் இல்லாத காலம் அல்லது அந்த ஊர் டாக்கிஸ்க்கு கட்டுபடி ஆகாததால் தேர்மக்கோல் ஐஸ்கட்டிகள் வாங்கி ஐஸ் சீக்கிரம் உருகாமல் இருக்க உமி போட்டு வைத்து இருப்பபார்கள். ஒரு கலர் 1,50 ரூபாய் அதை வாங்கி கட்டையில் சாய்ந்தபடி ஸ்டைலாக வாங்கி குடித்த காலமும் உண்டு.

முக்கோன பன்னில் ஜாம் தடவி அதில் கலர் கலரான சேமியா போல் வெள்ளை ஜாம் மேல் ஒட்ட வைத்து இருப்பார்கள். அது என்னுடைய பேவரிட் திண்பண்டம்





இப்போது போல் அப்போது எல்லாம் புது படங்கள் டென்டு கொட்டாய்க்கு வரவே வராது. அல்லது வினியோகஸ்த்தர்கள் கொடுக்கவும் மாட்டார்கள்,அன்பே வா, துணிவே துனை,சவாலேசமாளி, வஞ்சிக்கோட்டை வாலிபன், மாயாபாஜார்,வசந்த மாளிகை போன்ற பழைய படங்கள்தான் திரையிடப்படும்.

சிவாஜி படத்துக்கு நிறைய பெண்கள் கூட்டத்தை பார்க்கலாம். எம்ஜியார் படத்துக்கு நிறைய ஆண்கள் கூட்டத்தையும் கொஞ்சமாக பெண்கள் கூட்டமும் இருக்கும். முக்கியமாக பாட்டாளி மக்கள் கூட்டம் மிக ஆதிகமாக வருவார்கள், நிறைய விசிலும் கூடவே சாராய நெடியும் பின்னி பெடெலெடுக்கும்.

ரஜினி கமல் படத்துக்க எல்லா சின்ன பசங்களும் வந்து கொட்டாய் சுற்றி ஓடிபிடித்து விளையாடுவதுமாக சண்டை போட்டுக்கொள்வதுமாக இருப்பார்கள் கமல் படங்கள் வந்ததால் அரும்பு மீசை வாலிபர் பட்டாளம் கைலியை ஏற்றி கட்டிக்கொண்டு வந்து நி்ற்க்கும். வெள்ளிக்கிழமையானால் படம் கண்டிப்பாக மாறிவிடும் எல்லோரும் பார்த்த படம் என்பதால் அந்த படத்துக்கு ஆயில் காலம் ஒரு வாரம்தான்.

பெண்கள் பக்கம் நான் உட்கார்ந்து படம் பார்க்கும் போது ஒரு நெலியவைக்கும் பிரச்சனை என்ன வென்றால் நம்மை சின்ன பையன் என்று எண்ணி நம் எதிரிலே துணி தூக்கி சுச்சு போவார்கள் . அதை விட கொடுமை ஆயாக்கள் எல்லாம் நின்ற படியே சுச்சு போவார்கள். அதனாலே நான் அடம் பிடித்து ஆண்கள் பக்கம் போய் உட்காருவேன்.


அதே போல் படங்கள் சரியாக ஓடவில்லை என்றால் சட்டென தகர சேரை மடக்கி ஒளிவரும் ஓட்டையை அடைத்தும் ரகளை செய்வார்கள். முதல்நாள் படம் ஓட்டுவதில் பிரச்சனை என்றால் ஒரு பாஸ் கொடுத்து அனுப்புவார்கள் அதை எடுத்து போய் டிக்கெட் இல்லாமல் படம் பார்க்கலாம். அந்த பாசுக்கு வேறு அடித்து கொள்வார்கள்...


கால மாற்றத்தில் காணாமல் போனாலும் இன்றளவும் பல விஷயங்களை கற்றுக்கொடுத்தது டுரிங் டாக்கிஸ்கள்தான். எப்போது அந்த டெண்ட் கொட்டைகளை பார்த்தாலும் பழைய நினைவுகள் என்னில் நிழலாடும் எங்கள் ஊர் கடலூர் கூத்தப்பாக்கத்தில் ஜெகதாம்பிகா என்ற டெண்ட் கொட்டகை இருந்தது, அந்த நினைவுகள்இதை எழுதும் போது எல்லாம் நினைவுக்கு வருகிறது.

இந்திரன் வந்ததும் சந்திரன் வந்ததும் இந்த சினிமாதான், அட என்டியார் வந்ததும் எம்ஜியார் வந்ததும் இந்த சினிமாதான், கலை வளர்ந்தது இங்கேதான் காதல் சொன்னதும் இங்கேதான், கட்சிவளர்த்ததும் ஆட்சி வளர்த்ததும் இந்த சினிமாதான் அட அமெரிக்காவுலா ஆட்சி புடித்ததும் இந்த சினிமாதான்

என்ற ஆண்பாவம் படத்து பாடல் எங்கேயோ கேட்பது போல் இல்லை, அந்த பாடலில் வரும் வரிகளில் உண்மை இல்லாமல் இல்லை.....


அன்புடன்/ஜாக்கிசேகர்

சுப்(ரன்)மணியசுவாமி


சில விஷயங்களை சட்டென புரிய வைக்க கொஞ்சம் வண்முறையும், முட்டை தக்காளி போன்றவை தேவை என்று சென்னை ஜக்கோர்ட் வக்கில்கள் முடிவுசெய்துவிட்டார்கள் போலும்...

அன்புடன்/ஜாக்கிசேகர்

முத்துக்குமார் வீர வணக்க அஞ்சலியும் என் முதல் பதிவர் சந்திப்பும்....


முத்துக்குமார் அஞ்சலி கூட்டம் நடை பெறுவதால் இந்த முறைபதிவர்களை சந்தித்து விடுவது என்று கங்கனம் கட்டிக்கொண்டதால் மலை நேரத்து கடற்கரை காற்று சாயங்கால சினிமா என எல்லாவற்றையும் தியாகம் செய்து விட்டு திநகர் நடேசன் பார்க் போனேன். போகும் போதே பெரும் குழப்பம் நடேசன் பார்க் ஜி என் செட்டி ரோட வெக்கட் நாராயண ரோட என்று குழப்ப அதிஷாவிடம் கைபேசியில் அழைத்து தெளிவு படுத்திக்கொண்டேன்.

4மணிக்கு கூட்டம் ஆரம்பம் நான் ஒரு அக்மார்க் இந்தியன் என்பதால்காலம் கடந்து 4,30க்கு சென்றேன். முதல் பதிவர் சந்திப்பு என்தால் கொஞ்சம் படபடப்பு அவ்வளவே.போனதும் அதிஷா என்னை வரவேற்றார். நாங்கள் கைபேசியில் பேசி இருந்தாலும் நேரில் பார்த்து கொண்டது இதுதான் முதல் முறை.

வட்டமாக பதிவர் சந்திப்பு நடந்தது. எல்லோரும் முத்துக்குமார் மரணம் பற்றியும் அதில் சன்டிவி கலைஞர் டிவி ஜெயா டிவி நடந்து கொண்ட முறை பற்றியும் காரசாராமாக விவாதிக்கப்பட்டது.

கலைஞர், இந்து ராம்,ஜே , சுப்ரமணிசாமி, மாலன் போன்றவர்களை வாணலியில் போட்டு பாரபட்சம் இல்லாமல் வருத்து எடுத்தார்கள்.சுகுனாதிவாகர் மற்றும் லக்கி லீட் எடுத்துக் கொடுத்து கொண்டு இருந்தார்கள்.

என்தரப்பு நியாயங்களாக எப்ப வட இந்திய எலக்ட்ரானிக் மீடியாக்கள் ஏழு கோடி மக்கள் சார்பாக தமிழகத்தில் ஏதாவது கருத்து கேட்க வேண்டும் என்றால் அவர்கள் தமிழகத்தில் மொத்தம் மூன்று பேரிடம் பேட்டி காண்கிறார்கள்.

1சுப்ரமணிய சுவாமி
2சோ
3இந்துராம்

இந்த முன்று பேரும்தான் எழு கோடி தமிழர்களின் குரலாக இன்றும் வட இந்தியமீடியாக்களில் ஒளிக்கின்றது என்று வருத்தப்ட்டேன். உடனே ஒரு பதிவர் பெண்கள் சார்பாக எப்போதும் குஷ்புவை பேட்டிகாண்பதாக தன் வருத்தத்தை பதிந்தார்.

கூட்டம் நடந்து கொண்டு இருக்கும் போதேஎதிரில் ஒரு ஜோடி என் கண்ணில் பட்டது.அந்த பெண் சுமாராக இருந்தால் அவன் தொப்பி போட்டு இருந்தான். முதலில் அவன் ஏதாவது முத்தம் கொடுத்து இருக்கலாம் மாறாக அவன் கையை எடுத்து அவள் கண்ணஙத்தில் அடித்தான், பின்அவள் சடை பிடித்து இழுத்து வலிமைகாட்டினான்.
அவள் முகத்தில் வலியின் ரேகைகள் அவள் எந்த எதிர்ப்பும் காட்ட வில்லைஅதனாலே அவன் முன்னிலும் வேகம் பெற்றுஅவன் அவள் கையை முறுக்க பதிவர் நர்சிம் அவர்களை கண்டித்தார்.


திரும்பவும் சிதறிய கவணத்தை முத்துக்குமார் மேல் நிலை நிறுத்தினோம்.அவர் எழுதி சென்ற கடிதத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துமற்ற மாநிலத்தவர் படிக்க உதவ வேண்டுமாய் கேட்டுக்கொள்ளபட்டார்கள்.

அடுத்து காங்கிரஸ்காரர்கள் வரக்கூடாது என்று சூளுரைத்தார்கள்.அதே போல் ஒருவர் பிஜேபி வர வேண்டும என்பதில் தெளிவாக இருந்தார்.

அடுத்ததாக பதிவர் அகிலன் பேசினார் இந்த போர் பத்து நாட்கள் தொடர்ந்து நீடித்தால் மூண்று லட்சம் தமிழர்களுக்கு வெகு விரைவில் வாய்க்கரிசி போட வேண்டி வரும் என்றார் அவர் பேசும் போது அனைவர் மனமும் கலங்கியது எல்லோரும் கையறு நிலையில் இருப்பதை அனைவர்முகமும் காட்டிக்கொடுத்தது.


எனக்கு ஈழம் வேண்டாம் ஏதுவும் வேண்டாம் போர் நிறுத்தப்பட்வேண்டும் சாவின் விளிப்பில் இருக்கும் அந்த மூன்று லட்சம் தமிழர்கள் காப்பற்ற பட வேண்டும் என்று அகிலன் பேசினார்.
15 நாளில் ஏதாவது செய்து அந்த சாவின் விளிம்பில் இருக்கும் மக்களை காப்பாற்ற பட வேண்டும் என்ற போது யாராலும் ஏதும் செய்ய முடியாது என்பது விளங்கி போயிற்று.


அகிலன் மேலும் சொல்லும் போது 800 பேர் இலங்கையில் பலி என்று செய்தி வந்தால் நான் தினமும் இறந்தவர் பட்டியலில் என் அம்மா பெயர் இருக்கின்றதா என்று இன்டர்நெட்டில தினமும் 5 முறை தேடுவேன் என்ற போது அந்த கொடுமை எவருக்கும் வரக்கூடாது என்று இறைவனை வேண்டினேன்.


பாழாய் போன மத்திய அரசு, சுயநல தமிழக தலைவர்கள் இப்படி இருக்கும் போது 15 நாளில் எதும் செய்ய முடியாது என்பது எல்லோருக்கம் விளங்கி போயிற்று...

மனநல மருத்துவர் ருத்ரன் வந்து இருந்தார்அவர் பக்கத்தில் இருந்த ஒரு பதிவர் நிறைய விஷயங்கள் பேசினர் .

அதே போல் பதிவர் கூட்ட்த்தில்இந்த எழுச்சியை அனையாமல் தொடர்ந்து பதிவர்கள் எழத வேண்டும என்றும் கொஞ்சம் சினிமா குறைத்துக்கொள்ளுங்கள் என்று பதிவர் அரவிந்தன் பேசினார்.

அதே போல் அவர் பெங்களுரில் முத்துக்குமார் மரணத்தை கன்னட மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக வரும் ஞாயிறு பெங்களுரில் எம் ஜி ரோட்டில் ஆர்பாட்டம் செய்ய போவதாக அறிவித்தார். அவருக்கு வாழ்த்துக்கள் சொன்னேன்.

அதன் பிறகு கொசு தொல்லை வேறு அதிகம் இருந்ததால் நாங்கள் எழுந்து நின்று பேசினோம் 6 மணி அளவில் ஒரு பெண்மனி பேச அதன் முடிவில் முத்துக்குமாருக்கு பதிவர்கள் சார்பில் மௌன அஞ்சலி செலுத்தினோம்.


பதிவர் ஸ்ரீராம் தேசிய கொடி எரிப்பு தவறு என்றார் அதே போல் அவர் சொன்ன கருத்தில் கடைசி வரை உறுதியாக இருந்தார். பலர் ஒரு இணம் அழிவதை வேடிக்கை பார்க்கும் போது இது சகஜம் என்றனர்.

பலர் பேசினாலும் எனக்கு பெயர்கள் தெரியவில்லை.
பதிவர்களில் ரொம்ப விடலையாக காட்சி அளித்தது லக்கியும்அதிஷாவும்தான்.
கேபிள் சங்கரோடு நிறைய நேரம் பேசினேன் நல்ல மனிதர்.

பதிவர் பாரதி , நட்டு போல்டு தன்னைதானே ஆறிமுகப்படுத்திகொண்டார்கள்.எல்லோரும் இலங்கை அகதிகள் போல் டீக்கடை தேடி அலைந்தோம்.

டீக்குடித்து எல்லோரும் கலைந்தாலும் நான், லக்கி, கேபிள் சங்கர், முரளி கண்ணன்,சுகுனாதிவாகர்,ஜயரோம் சுந்தர்,நர்சிம், நட்டு போல்டு, ஆழியுரான் ,அதிஷா போண்றவர்கள் வெகுநேரம் பேசினோம்.ஜயரோம் சுந்தரும் சுகுனாதிவாகரும் எல்லோரிடமும் விடை பெற்று செல்ல எல்லோரும் என்னை ஜாக்கிசேகர் என அழைத்தது மனதுக்கு நிறைவாக இருந்தது.


தலையில் இருக்கும் நாளு முடிக்கு சம்மர் கட்டிங் அடித்து சென்றதால் பலருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை,வண்டி எடுத்து கிளம்பும் போதுதான் முரளி கண்ணனுக்கு நான் யார் என்று தெரிந்தது. அறிமுகம் இல்லாமல் என் திருமணத்துக்கு கைபேசியில் வாழ்த்து தெரிவித்த ஒரே தமிழ்நாட்டு பதிவர் அவர்தான்

பதிவர்களில் பல பேர் பெயர் விடுபட்டு இருந்தால் அடியேனை மன்னிக்கவும். இது எனது முதல் பதிவர் சந்திப்பு.


வேலை பளு காரணமாக சந்திப்பில் கலந்து கொள்ள முடியாததால் பதிவர் சந்திப்பு எப்படி நடந்தது என உண்மைதமிழன் கைபேசியில் விசாரித்தார்.




நான் கேபிள்சங்கர், லக்கி, அதிஷா, நட்டு போல்டு, நர்சிம், அமேரிக்க ரிட்டன் ஸ்ரீராம், முரளிகண்ணன், போன்றவர்கள் இரவு ஒன்பது வரைபேசினோம்,

விடுதலைபுலிகள்,முத்துக்குமார், கலைஞர், இல்ங்கை,ஜெயலலிதா என்று நிறைய சொற்க்கள் பயண் படுத்த பட்டது. இரவு 9 மணியளவில் எல்லோரும் கலைந்து சென்றோம், மவுனசாட்சியாய் நிலா மட்டும் நாங்கள் கலைவதை வேடிக்கை பார்த்தது. ஆத்மாவோ ஆவியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில் எங்கள் உடன் இன்லெக்சுவல் முத்துக்குமாரும்.......





அன்புடன்/ஜாக்கிசேகர்

வட இந்தியர்களின் தமிழின பார்வை...


இது ரொம்ப நாட்களாக என் மனதில் ஓடிய விஷயம் தான் இப்போது உங்கள் முன்பார்வைக்கு அல்லது யோசிக்க வைக்கிறேன்.

கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி எங்கள் தமிழ் குடி என்று பெருமை பட்டு கொண்டு இருக்கிறோம்.
இன்று நேற்று அல்ல பல்லாண்டுகளாக இப்படித்தான் தமிழர்கள்பெருமைபடுகிறார்கள்.
ஆனால் மத்திய இந்தியாவில்இருக்கும் மக்கள் நம்மை பற்றிய அவர்களின் பார்வை எப்படி இருக்கின்றது .

உங்களுக்கு ஒரு கேள்வி நம் நாட்டின் இதிகாசங்கள் என்று எதை சொல்வோம்.

1 ராமாயணம்.
2 மகாபாரதம்.

மகாபாரதத்தை விட்டு தள்ளுவோம்... அது ஒரு பெண்ணை 5 பேர் வைத்துக்கொண்ட கதை...

நம் நாட்டின் முதன்மை இதிகாசம் ராமயணம் தான் அந்த ராமாயணத்தின் கதை என்ன? கதை விட்டவர் வால்மீகி.. அவர் என்ன அக்மார்க் தமிழரா என்ன?


கதையின் களம் இந்தியாவின் மையப்பகுதிஅங்கு இருக்கும் எல்லோரும்அழகானவர்கள் காதாநாயகனான ராமன் புஜபலம் மிக்கவன் நல்ல வில் வீரன், மிக அழகானவன் எல்லோரும் அழகானவர்கள் எல்லோரும் முக்கியமாக மனிதர்கள்...

நல்ல நாடு நல்ல மக்கள் எல்லோருக்கும் அழகான முகங்களை கொண்டவர்கள்

ராமன் மனைவி சீதை கடத்தபடுகிறாள்.
ராமனுக்கு ராவணனால் கடத்தபட்ட செய்தி கிடைக்கிறது .

மத்திய இந்தியாவில் இருந்து கீழே தெற்க்கு பக்கமாக தேடி வர வர எல்லோரும் குரங்காக இருக்கிறார்கள் அதாவது தென்னிந்தியாவில் எல்லோரும் குரங்குகள்...
அப்படியே கொஞ்சம் கிழே உள்ள இலங்கையில் எல்லோரும் ராட்சசரர்கள்.


கதை பல்லாயிரக்கனக்கான வருடத்துதுக்கு முன் எழுதப்பட்ட வெகு சுவாரஸ்யமான புனைவு என்றாலும்

இந்த வளர்ச்சியடைந்த கால கட்டத்திலும் நாம் என்னதான் நாய் மாதிரி கத்தினாலும் மத்திய அரசை பொறுத்தவரை நாம் குரங்குகள் போல்தான் நடத்தபடுகிறோம்...

நம்மை பொறுத்த வரைஅவர்கள் நம்மை எந்த விதத்தி்லும் மனிதர்களாக நடத்தவில்லை, மிருகங்களை போல்தான் நடத்தப்படுகிறோம்.

அதற்க்கு உதாரணங்கள்,இலங்கை பிரச்சனை, நெய்வேலி, முல்லைபெரியாறு, காவிரி போன்ற விஷயங்களை உதாரனமாக சொல்லலாம்...

யோசியுங்கள் தமிழர்களே....

அன்புடன்/ஜாக்கிசேகர்

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner