அகரம் ஆரம்பித்த நடிகர் சூர்யாவுக்கும், விஜய்டிவிக்கும் நன்றிகள்.


தாம் வாழும் சமுகத்துக்கு எவன் ஒருவன் நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்கின்றானோ அவனே நல்ல மனிதன் என்பது என் கருத்து...

ஒரு பேட்டியில் பிரபல நடிகர்  விக்ரம் சொல்லி இருப்பார். ஐம்பது லட்சம் வரைதான் அது பணம் அதுக்கு மேல இருந்தா அது பேப்பர்  என்று சொல்லி இருக்கின்றார்.



பணம் எவன்கிட்ட வேனா இருக்கலாம் ஆனா  அந்த பணத்துக்கு மதிப்பும் மரியாதையும் கொடுக்க வைக்க சிலரால் மட்டுமே முடியும். தினசரியில் ஒரு செய்தி படித்தேன் அது என்னை வியக்கவைத்தது.. இற்ந்து போன பிச்சைக்கார பெண்மணியிட்ம் 35ஆயிரம் பணம் இருந்ததாக செய்தியை படித்த போது அந்த பிச்சைக்கார பெண்மணிமேல் எனக்கு பரிதாபம்  மேலிட்டது.

கடைசிவரை  நல்ல சாப்பாடு சாப்பிட்டு இருக்க வாய்ப்பு இல்லை... ஒரு பிரியாணி 50ரூபாய் அதை வைத்து ஐந்து நாளைக்கு காலையில் 4 இட்லி சாப்பிட்டு பசி போக்கி கொள்ளாலாம் என்று நினைத்து இருக்கலாம். அல்லது திடும் என அனாதையான தனக்கு உடல் சுகம் இல்லாமல் போனால் மருத்துவசெலவுக்கு இறுக்கி இறுக்கி  அந்த பணத்தை செலவு செய்யாமல் சேமித்து வைத்து இருக்கலாம். ஆனால் ஒரு பிச்சைக்கார பெண்மணி அப்படி இறுக்கி இறுக்கி பணத்தை செலவு  செய்யாமல் வைத்து இருந்தால் அதில் நியாயம் இருக்கின்றது.

ஆனால் கோடிகளில் அதுவும் ஒரு தலைமுறை இரு தலைமுறை அல்ல.....50 தலைமுறைக்கு மேல் உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு சொத்து  சேர்த்து வைத்து விட்டு, எச்சில் கையால் கூட காக்காய் ஓட்டா ஆட்களை நாம் அனுதினமும் தொலைகாட்சியில் பார்த்தபடிதான் இருக்கின்றோம்.

பிரபல இடத்தை தன் முயற்ச்சியால் தொட்டுவிட்டு கோடிகளில் சம்பளம் வாங்கி விட்டு அப்படியே போகாமல் தான் வாழும் சமுகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு மனிதன் நினைக்கின்றான் பாருங்கள்.. அவன்தான் உண்மையான ரியல் ஹீரோ...

அன்பின் சூர்யா நீங்களும் உங்கள் குடும்பமும் நீடுடி வாழ வேண்டும் ஐயா...  இதுவரை பல பிரபல நடிகர்களை தமிகம் கண்டு இருக்கின்றது.. அவர்கள் பிறந்தநாளின் போது அயன்பாக்ஸ் மூன்று சக்கர நாற்காலி கொடுத்து விட்டு முதலமைச்சர் நாற்காலி கனவில் இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில்  இலவசமாய் எதுவும் கொடுக்காமல் மீன்பிடிக்க தூண்டில் கொடுத்து எந்த இடத்தில் மீன் நிறைய இருக்கும் என்று சொல்லி பார்க்கும் அழகே அழகு....

தொலைகாட்சிகளில் தமிழில் ஒரு சில தரமான நிகழ்ச்சிகளை கொடுப்பது விஜய்டிவிதான் என்று நடுநிலையாளர்கள் பலர் ஒத்துக்கொண்ட விஷயம்.

அப்படி கடந்த ஞாயிற்று கிழமை ஆகஸ்ட் 15ம் தேதி போட்ட ஒரு புரோகிராமை மறு ஒளிபரப்பு செய்தார்கள் என்று எண்ணுகின்றேன்.. விதை சூர்யாவோடு  ஒரு வெற்றிபயனம் என்பதாக அந்த நிகழ்ச்சிக்கு தலைப்பு வைத்து இருந்தார்கள்...

எதெச்சையாக பார்த்த போது என்னை அந்த நிகழ்ச்சி நெகிழ வைத்தது மட்டும்  அல்லாமல் என்னையறியாமல் கண்கள் கலங்கவைத்து விட்டது..எதிர்காலம் தொலைந்துவிட்டது என்று கவலைகொண்ட பல ஏழை மாணவர்களின்  எதிர்கால கதவை திறந்து வைத்து இருக்கின்றார்கள்...



நடிகர் சூர்யா  தொடங்கி வைத்த இந்த விதை இன்னும் சில வருடங்களில் விருட்சமாக மாறிவிடும் என்று நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.. சுநடிகர் சூர்யா ஒரு தொகை போட, பத்துக்கு மேற்பட்ட தொழில் அதிபர்கள் தாங்களால் ஆனா பெரிய தொகையை கொடுக்க அந்த பணத்தை அப்படியே கேட்டவர்களுக்கு எல்லாம் கொடுத்து விடாமல் தமிழ் நாட்டில் பின் தங்கிய 11 மாவட்டங்கள்  தேர்வு செய்து...அந்த மாவட்டத்தில் இருக்கும் அரசு பள்ளிகளில் அதிக மதிப்பெண் எடுத்து திறமை இருந்தும் பொருளாதார சூழ்நிலையில் பின் தங்கி இருக்கும் மாணவர்களை தேர்ந்து எடுத்து அவர்களை படிக்க வைப்பதுதான்  அகரத்தின் முக்கிய குறிக்கோள்... அதை அவர்கள் எல்லாறு செய்தார்கள் என்பதை கீழே இருக்கும் புள்ளிவிவரத்தையும் வீடியோவையும் பாருங்கள்..


Student Selection - 14-Aug-2010


Details of Selection of students
1. Total No. of application received 6436
(of which nearly 1338 students were current year 12th passed out)
2. No. of applicants considered for House Visit 511
3. No. of Students Selected 159
OVERALL STUDENTS SELECTED
Total No. Of Male Count 84
Total no. Of Female Count 75
Community Count:
1. BC 77
2. MBC 45
3. SC 21
4. ST 4
5. OC 10
6. BCM 2
Total 159


மாணவர்கள் எப்படி தேர்ந்து எடுக்கபட்டார்கள் என்பதற்க்கான வீடியோ..கீழே



நெகிழ்ச்சியான இந்த வீடியோவை அனைவரும் பாருங்கள். நெகிழ்ச்சியாகவும் கண்கள் குளமாவதும் தவிர்க்க முடியாது..
==========
கீழே நான் பெயர் குறிப்பிடும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நெகிழ்ச்சியான நன்றிகள்.
========

இதில் நோக்கம் நல்ல இலக்கை அடையவேண்டும் என்று இரவுபகல்பாராமல் உழைத்தவர் பேராசிரியர் கல்யாணி அவர்கள் மற்றும் பாவாசெல்லதுரை அவர்களும். இந்த இயக்கத்துக்கு தோள் கொடுத்த வாலன்டியர்கள் எல்லோருமே ஐடியில் கை நிறைய பணம் சம்பாதிக்கும் சாப்ட்வேர்  என்ஜினியர்கள்... உதவி கிடைத்தாலும் தனது பிள்ளைகள் எந்த துறையை தேர்ந்து எடுக்க வேண்டும் என்று கனவில் மூழ்கிய பெற்றோர்களுக்கு எழுத்தாளர் ஞானி வழிகாட்டும் நிகழ்ச்சியில் பேசி இருக்கின்றார்...

ஒரு பெண் பிள்ளை அந்த பெண்ணின் அம்மா அப்பா எல்லோரும் இறந்து போய் பாட்டி தயவில் நன்றாக படிக்கும் 12ம் வகுப்பு படிக்கும் பெண்பிள்ளை.. அம்மா இறந்து போனதால்  பள்ளிக்கு வரவில்லை.. பரிட்சைக்கு பத்து நாள் இருக்கும் போது ஒரு ஆசிரியர் அந்த பெண்ணை அழைத்து வந்து எக்சாம் எழுதவைத்து அகரம் பவுண்டேஷனுக்கு அந்த பெண்ணின் இயலாமையை சொல்லி மேல்படிப்பு படிக்கவைக்க வழி செய்த ஆசிரியர் ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்குகின்றேன்...

ரிட்டேயர்மென்ட் வாங்கி விட்டோம் என்று சும்மா இருக்காமல் தன் முன்னாள் படிக்கும் மாணவன் ஏழ்மை நிலை உணர்ந்து அகரம் பவுண்டேஷனுக்கு தகவல் சொல்லி அந்த பையனையும் இன்ஜினியர் வகுப்பு தேர்வு செய்ய வைத்த முன்னாள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியருக்கும் என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

ஆனால் இப்படி இருக்கும் ஆசிரியர் சமுதாயத்தினருக்கு மத்தியில் பல கழிச்சடைகளும் தலைமை ஆசிரியர்  பொறுப்பில் இருப்பது வேதனை...800 பள்ளிகளுக்கு மேல் தகவல் அனுப்பி ஏழை மாணவனை அடையாளம் காட்டுங்கள் என்று  பள்ளி கல்விதுறை அதிகாரி அனுமதி கடிதத்துடன் அனுப்பியும் பதில் மரியாதை செய்தவர்கள் 150க்கும் குறைவே....த்தா சம்பளம் மட்டும் பத்தலைன்னு கொடிபிடிச்சிகிட்டு தலைமை செயலகம் வந்துடுவானுங்க பேமானிங்க....

ஒருத்தன் உதவறான் அந்த உதவி ஒரு சரியான ஏழை மாணவனை கூட நீ காட்டலைன்னா நீ  எல்லாம் எதுக்கு தலைமை ஆசிரியர்... எங்க பள்ளிகொடத்துல ஏழை மாணவனே இல்லைன்னு டாகல்ட்டி கதை  சொல்லாதே...
அந்த நிகழ்ச்சி  பார்க்கும் போது ரொம்பவும் நெகிழ்ந்து போனேன்.. சிலேட்டுக்கு பதில் முதலில் மதிய உணவுக்கு தட்டு எடுத்து பையில் வைத்து பள்ளிகூடம் சென்ற பையன்தான் நானும்.  பிறப்பில்  உயர்குடியில் பிறந்து ஏழைமாணவர்களை லோக்கல் என்று ஏளனம்  செய்யும் உயர்குடிகளுக்கு மத்தியில், அந்த லோக்கல் மாணவர்களை வேறு தளத்துக்கு மாற்ற போராடும் நடிகர் சூர்யா நீயும் என் நண்பனே.

வாழும் காலத்தில் தன் மகனை சான்றோன் எனக்கேட்டதந்தை நடிகர் சிவகுமாராக மட்டுமே இருக்க முடியும்...

இந்த பதிவு இன்னும் பலருக்கு  தெரியாமல் இருக்க வாய்ப்பு இருக்கின்றது.. இது பலருக்கும் சென்று சேரவே இந்த பதிவு.உங்களால் இயன்ற தொகையினை அகரத்துக்கு கொடுங்கள்.. அது நிச்சயம் நியாயமான ஏழை மாணவர்களுக்கு எதிர்காலத்துக்கு திறவுகோலாய் இருக்கின்றது...

பொதுவாய் இந்த வேலையை அரசாங்கம் செய்ய வேண்டும்.. தனி நபராக பல வேலைபளுவுக்கு மத்தியல் நடிகர் சூர்யா செய்கின்றார்... பல ஐடி வாலண்டியர்ஸ் ஒர்க் செய்கின்றார்கள்... நெகிழ்ச்சியாக இருக்கின்றது...

வறுமையில் படித்து வெளிவரம் மாணவனால்தான் குறைந்த பட்ச நேர்மையாக வாழ உறுதி கொள்ள முடியும். அந்த விதை விருட்சமாக பெரிதாய் மாற உங்களால் ஆனா உதவியை செய்யுங்கள்...

பணக்காரர்களே...
 நடிகை காஞ்சனா திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தியின் பெயரால் 20 கோடி மதிப்புள்ள சொத்தை எழுதி கொடுத்தார்.. அது அவரை பொறுத்தவரை புண்ணியம் என்று நினைத்துக்கொண்டு இருக்கின்றார்.. ஆனால்  உண்மையான புண்ணியம் வறுமைக்கோட்டுக்கீழே உள்ள மாணவர்களுக்கு கல்வி கண்ணை திறப்பதுதான்.. திருப்பதி ஏழுமலையானுக்கு பத்து ரூபாய் உண்டியலில் போடுங்கள்.. நம்ம வெங்கிகிட்ட நிறைய இருக்கு...சோ நிறைய சொத்து இருந்தா இது போல படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்யும் நேர்மையான அகரம் பவுண்டேஷனுக்கு உதவி  செய்யுங்கள் சொத்துக்களை தானமாக கொடுங்கள்..தயவு செய்து இல்லாதபட்டவர்களுக்கு கொடுங்கள்...

 நல்ல நிகழ்ச்சியை மறு  ஒளிபரப்பிய விஜய்க்கு தொடர்ந்து இது போலான நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும், நீண்ட நாட்களுக்கு பிறக எனது கண்களை கலங்க வைத்தமைக்கு எனது நன்றிகள்..

இந்த விதை இன்னும் பல இடங்களில் வெடித்து தெரித்து வீரிய வித்தான விதையாக மாற எல்லாம் வல்ல இறையை வேண்டுகின்றேன்.
இந்த விதையின் மீது நம்பிக்கை வைத்த சூர்யாவுக்கும் உனக்கு எதுக்கு இந்த வெட்டி வேலை என்று தடை போடாத அவர் குடும்பத்தாருக்கும் எனது நன்றிகள்.

அகரம் பவுண்டேஷன் பற்றி இன்னும் தெரிய இங்கு கிளிக்கவும்..

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

28 comments:

  1. அகரம் பவுண்டேஷன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்...
    நடிகர் சூர்யாவுக்கும் அவருக்கு உறுதுணையாய் இருக்கும் நடிகர் சிவக்குமாருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. intha mathiri nammalaala panna mudiyalaye nu yengiyirukken. suthanthira thinam anru antha programme pathen. thevaiyaana muyarchi... naamum thol koduppom..

    ReplyDelete
  3. பெறுவதில் மட்டுமல்ல பிள்ளைகளை வளர்ப்பதிலும் இருக்கிறது பண்பு!சிவகுமார் அவர்கள் திரையில் தோன்றும் ஒரு நடிகர் மட்டுமல்ல,பண்பான மனிதரும் கூட!அவருக்குப் பிறந்த பிள்ளை!சோடை போகாது!பல்லாண்டு வாழ வேண்டும்,"அகரமும்" கூட!!!!!!!

    ReplyDelete
  4. Ithu pondra ennam/ullam ellorukkum vara vendum endru naan aasai padugiraen.

    ReplyDelete
  5. எப்பவோ பாத்த ஞாபகம்... மாணவர்களுக்கான selection criteria அற்புதம்

    ReplyDelete
  6. //இதுவரை பல பிரபல நடிகர்களை தமிகம் கண்டு இருக்கின்றது.. அவர்கள் பிறந்தநாளின் போது அயன்பாக்ஸ் மூன்று சக்கர நாற்காலி கொடுத்து விட்டு முதலமைச்சர் நாற்காலி கனவில் இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில்//
    :))

    அகரம் பவுண்டேஷன் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  7. மிக சிறந்த பதிவு! நானும் வீடியோவைப் பார்த்து கண்கலங்கிவிட்டேன். இந்த ஏழ்மை நிலை மாறவேண்டும். எல்லோரும் சேர்ந்து உழைப்போம்! கண்டிப்பாக ஏழை நிலை இல்லாத உலகம் காண வேண்டும். நன்றி நண்பா!

    ReplyDelete
  8. அகரத்தின் பணி சிறக்க வாழ்த்துக்கள். பகிர்வுக்கு நன்றி ஜாக்கி.

    ReplyDelete
  9. its really a gud post..

    we saw that programe, its a gud one..

    all the best to "AGARAM" & Mr.Surya

    ReplyDelete
  10. முதல் ஒளிபரப்பின் போதே கண்டு கலங்கி...சூர்யாவை நிஜ ஹீரோவாக பார்த்தேன்...

    அகரம் மென்மேலும் வளரணும்....

    ReplyDelete
  11. சூப்பர், பயணம் தொடரட்டும்...
    இந்த நிகழ்ச்சிக்கு அப்புறம்தான் வருமான வரித்துறை பார்டிங்க எல்லாம் சூர்யா மற்றும் சில சினிமா பிரபலங்கள் ஊடு பூந்து எதையோ தேடிருக்காங்க. ஒரு நல்ல விஷயம் செஞ்சாலும் அது வரி ஏய்ப்புக்குனு நெனசுடரங்க எல்லாம்.

    ReplyDelete
  12. சூர்யாக்கு நான் தலைவணங்குகிறேன். நானும் என்னால் முயன்ற அளவு உதவிகளை செய்கிறேன்.

    ReplyDelete
  13. "வாழும் காலத்தில் தன் மகனை சான்றோன் எனக்கெட்டதந்தை நடிகர் சிவகுமாராக மட்டுமே இருக்க முடியும்"

    Kindly correct the word எனக்கெட்டதந்தை AS எனக்கேட்ட தந்தை. Otherwise the meaning would be different.

    ReplyDelete
  14. FC இலும் பின் தங்கியவர்கள் உள்ளார்கள். அவர்களுக்கும் இட ஒதுக்கீடு இருக்கவேண்டும்.

    ReplyDelete
  15. நல்லது சேகர்.

    ஆனால் அங்காடித்தெரு பார்த்தபின்னும் அங்காடித்தெருவின் முதன்மையான கடைக்கு விளம்பரம் செய்வதை எப்படி பார்ப்பது?

    அங்கு பணியாற்றும் பலரும் கல்வி பயிலவேண்டிய வயதில் இருப்பவர்கள்தான்?

    ஒரு நபரை அளவிட அவர் நேரடியாக செய்யும் செயலை மட்டும் கணக்கிடமுடியாது. மறைமுகமாக அவர் யாரை ஆதரிக்கிறார், பொது மற்றும் அரசியல் பிரசினைகளில் அவரது நிலைப்பாடு என்ன என்பதையும் பரிசீலிக்க வேண்டும்.

    ReplyDelete
  16. Please do not focus forward caste people only as culprit. There are other community people who take advantage of the backward people. I see some people write blog targetting always forward caste people. Please understand there are very good people from that community also, please write your blog considering your "manasatchi". Good and bad are everywhere.

    ReplyDelete
  17. அகரத்துக்கு வாழ்த்துகள். உங்கள் பதிவுக்கும்..!!

    ReplyDelete
  18. பின்னுட்டம் இட்ட அனைவருக்கு நன்றி..
    நன்றாக படிக்கும் பார்வேடு கம்யூனிட்டி பெண்பிள்ளை கூட கல்வி உதவி பெற்றார் என்பது ஒரு வீடியோ பார்த்த போது தெரிந்தது.

    ReplyDelete
  19. வக்கில் சார் உங்க கருத்து ஏற்புடையதே??

    ஆனால் அதே விளம்பர படத்தில் விக்ரம்,மற்றும் திரிஷா நடித்து இருந்தால் நாம் இந்த கேள்வியை கேட்க போவதில்லை... அந்நத பணமும் அப்படியே நிலமாக மாறிவிடும்..

    ஒரு துணிக்கடையில் இருக்கும் பிரச்சனையை சூர்யா என்ற தனி மனிதன் தீர்கக முடியாது.. அது அரசின் வேலை..

    சூர்யா அந்த விளம்பர படத்தில் நடிக்காவிட்டாலும் அங்கே நேர்மையின்மை அதிகார வர்கத்தால் தொடரும்...

    என் வாதம் என்னவென்றால் கேமரா பார்த்து பேசும் நடிகர்களுக்கு மத்தியில் சூர்யா வித்யாசமானவர்தான்..

    ReplyDelete
  20. //நம்ம வெங்கிகிட்ட நிறைய இருக்கு...சோ நிறைய சொத்து இருந்தா இது போல படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்யும் நேர்மையான அகரம் பவுண்டேஷனுக்கு உதவி செய்யுங்கள் //

    well said. Soorya is a real hero.

    ReplyDelete
  21. அவசியமான பதிவு.

    அந்த நிகழ்ச்சியை மீண்டும் பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. இந்த நிகழ்ச்சிக் குறித்து, நான் ஒரு பதிவு அப்பொழுது எழுதினேன். நேரம் கிடைத்தால் படித்துப் பார்க்கவும்.

    http://amaithiappa.blogspot.com/2010/08/blog-post.html

    நன்றி.

    ReplyDelete
  22. வளர்க சூர்யா நடிப்பு
    வாழ்த்துக்கள் உங்கள் நல்ல மக்கள் சேவைய

    ReplyDelete
  23. how to i now agaram foundation.......

    ReplyDelete
  24. how to i join the agaram foundation,because in my family problem.now i stuydying 2nd year. bcas erode... pls hlp any 1 person....

    ReplyDelete
  25. valdhukkal surya akaram fountation

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner