(THE BANNEN WAY-2010) 18+ ரசிக்க வைக்கும் போக்கிரி....


எச்சரிக்கை... பொது இடத்தில் இந்த படத்தின் விமர்சனம் படிக்கு போது மட்டும்....கவனம் தேவை....
ஒரு வேலையை செய்யும் போது நம்மில் பலர் கண்ணும் கருத்துமாய் இருப்போம்... அந்த விஷயத்தை தவிர வேறு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டோம்...ஆனால் ஒரு சிலர் இருக்கின்றார்கள்...  அவர்கள் எது பற்றியும் அலட்டிக்கொள்ளமாட்டார்கள்...

சென்னையின் புதிய மால் எக்ஸ்பிரஸ் அவென்யூ ஒரு பார்வை....

நேற்று ஞாயிறு....முந்தாநாள் சனிக்கிழமை... இரண்டு நாளும் எக்ஸ்பிரஸ் அவென்யூ போகும்  வாய்ப்பு கிடைத்தது.. நான் போக வேண்டும் என்றால் ஒரு வாரத்துக்கு மேல்  ஆகும்... ஆனால் என் மச்சான் பெங்களுரில் இருந்து வந்தான்.. இன்னும் சில மச்சான்கள்  வந்தார்கள்.. அவர்கள் எல்லாம் ஐடியில் வேலை செய்யும் மச்சகாரர்கள்... அதனால் எந்த மாலிலும் நுழையும் ஆற்றல் பெற்றவர்கள்...


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (ஞாயிறு=29•08•2010)

ஆல்பம்...

முந்தா நாள் இரவு சென்னையில் இரவு போக்குவரத்து நெரிசல் அது கிளியர் ஆக 5 மணி நேரம் ஆனது மக்கள்  திண்டாடி போனார்கள்....காரணம் பணி முடிந்த சின்னமலையில் சாப்பிட சென்ற மாநகர போக்குவரத்து டிரைவர்கள், சாப்பிடும் ஹோட்டலில்வாய்தகறாராக ஆரம்பிக்க...( அது டாஸ்மார்க்கில் நடந்து சண்டை என்று ஒரு தரப்பு சொல்கின்றது...)


ஆயிரத்தில் நான் ஒருவன்....

தனிமையில் வீட்டில் இருக்கின்றீர்கள்... பிளாக் எழுதி விட்டீர்கள்...ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கும் போது அதில் மனது லயிக்கவில்லை.. சர்வ நிச்சயமாக அந்த  வெற்றிடத்தை நிரப்ப இசைக்கு முக்கிய பங்கு உண்டு...

எனக்கு பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும் நிறைய பேருக்கு மெல்லிசை பிடிக்கும் எனக்கு வெஸ்டர்ன் இசை...பிடிக்கும்..அதே போல் எனது மூட் மாற மிக முக்கிய பங்கு இசைக்கு உண்டு...நான் மிகுந்த யோசனையில் மன உளைச்சலில் இருக்கும் போது நான் இந்த பாடலைதான் கேட்பேன்...


மாஸ்கோவின் காவேரி...திரைவிமர்சனம்

எந்த ஒரு படத்தை பார்க்கவும் ஏதாவது ஒரு தூண்டு கோல் இருக்க வேண்டும் அல்லவா? இந்த படத்தை நான் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை தோற்றுவித்தது... இந்த படத்தின் டிரைலர்தான்...

(PAY BACK-1999) மெல்கிப்சனின் முக்கியபடம்.....


உலகில் இருபது கேங்ஸ்டர் படங்களை பட்டியல் இட்டால் இந்த படத்துக்கு அந்த இருபது எண்ணுக்குள் ஒரு இடம் உண்டு....அப்படி  ஒரு ஸ்டைலான படம் இந்த படம்....

இன்று மெல்கிப்சன் உலகம் பாராட்டும் இயக்குனராக  இருந்தாலும்... அவரின் பிலிம் பயோகிராபியில் இந்த படத்துக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு என்பதை அவரே நினைத்தாலும் மறுக்கமுடியாது...

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்18+(புதன்=25•08•2010)

ஆல்பம்...
ஏதோ இந்தியா விளையாட்டுலையும் இருக்குதுன்னு அப்ப அப்ப சர்வதேச லெவல்ல செஸ் டோர்னமேன்டுல ஜெயிச்சி... இந்திய கொடியை பக்கத்துல வச்சிக்கினு விளையான்டா.. அவன் பல்லையே புடிச்சி பாக்கறது நம்ம அரசாங்கம்தான்....இந்த அளவுக்கு ஒருத்தனை அசிங்கபடுத்தகூடாது...

விடியற்காலை சென்னை மெரினா ஒரு பார்வை...(புகைபடங்களுடன்)சென்னையில்  எப்போதும் நடமாட்டம் இருந்து கொண்டே இருக்கும் இடம் எது தெரியுமா? சென்னை மெரினா பீச்சின் காந்தி சிலைதான்..எப்போதும் என்றால்? எந்த  நேரத்திலும் என்று அர்த்தம்....

விடியற்காலை 4 மணியில் இருந்து பார்ப்போம்...மெரினாவில் இருந்து பத்து கிலோமீட்டர், பதினைந்து கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்கும் பிரபலங்கள்... வாக்கிங் போய் கொண்டு இருப்பார்கள்... அப்படி போகையில் நான் சுஜாதா, நம்பியார்,சாருஹாசன், போன்றவர்களை பார்த்து இருக்கின்றேன்...

இனிது இனிது...நினைத்து பார்க்கும் நினைவுகள்...

தெலுங்கில் அந்த படம்  எத்தனை முறை  பார்த்து இருப்பேன் என்று எனக்கே தெரியாது... நான் பதிவு எழுத வந்த ஆரம்பத்தில் அந்த படத்தை  எழுதி இருக்கின்றேன்... அந்த  படத்தை மொட்டை தாத்தா குட்டையில் விழுந்தது போல் எழுதி இருப்பேன்.... அப்போது எல்லாம் ஒரு பதிவுக்கு 4 மணி நேரம் எடுத்துக்கொள்வேன்.... அப்படி எழுதிய ஹேப்பி  டேஸ் தெலுங்கு பட விமர்சனத்தை படிக்க இங்கே கிளிக்கவும்....மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு=22•08•2010)

ஆல்பம்....

நாடாளுமன்றம் இரண்டு நாட்களாக இரண்டு பட்டு கிடக்கின்றது....இப்போது அவர்கள்  வாங்கும் சம்பளம் 16 ஆயிரம்...  இப்போது அரசு 50000 கொடுக்க உத்தேசித்து உள்ளது... ஆனால் நமது எம்பிக்கள்80000 ரூபாய் உயர்த்த ஆர்பாட்டம் நடத்துகின்றார்கள்...நான் சொல்வது என்னவென்றால்... மாதம் இரண்டு லட்சம் கூட கொடுக்கலாம்....  ஏன் ஐந்து லட்சம் கூட கொடுக்கலாம்... ஆனால் எவனிடமும்  லஞ்ச பிச்சை கேட்ககூடாது... தொகுதி நிதியை ஒரு பைசா பாக்கி இல்லாமல் செலவழிக்க வேண்டும்...தொகுயில்தான் இருக்க வேண்டும்.... இதெல்லாம் செய்ய அவர்கள் உத்தேசித்தால் தாராளமாக தரளாம்...... ஆனால் அவர்களின் மாத சம்பாத்தியம்... இப்போது கேட்கும் அளவுக்குதான்அவர்கள் இப்போது சம்பாதிக்கின்றார்களா???


நான் மகான் அல்ல.. வாழ்த்துக்கள் இயக்குனர் சுசீந்திரன்..தினமும் நீங்கள் செய்திதாள் வாசித்தால் இந்த படத்தில் வரும் பல விஷயங்கள் நீங்கள் படித்து இருக்கலாம்... அல்லது நண்பர்கள் மூலம் லன்ச் பாக்ஸ் ஓப்பன் பண்ணும் போது   இது போலான செய்திகைளை நீங்கள் கேட்டு இருக்கலாம்..... அது போலான விஷயங்களை பின்னனியில் வைத்து சமுகத்தின் பிரதிபலிப்பை அப்படியே காட்டுகின்றார் இயக்குனர் அவருக்கு முதலில் வாழ்த்துக்கள்...

(RESTRAINT-2008\ 15+ஆஸ்திரேலியா) ஒரு வீடு மூன்று பேர்...

அந்த பெண் ஒரு பெட்ரோல் பங்கில் சில பொருட்கள் வாங்குகின்றாள்... காதலன் காருக்கு வெளியே  டென்ஷனுடன் நின்று கொண்டு இருக்கின்றான்...அவனிடம் வந்து 4 டாலர்பணம் கேட்கின்றாள்... அவனிடம் இல்லை அவள் திரும்வும் போகின்றாள் பணத்தை கடைகாரனிடம் கொடுக்கின்றாள்...


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/ 18•08•2010)


ஆல்பம்...


உமாசங்கர் ஐஏஎஸ் ஊழலுக்கு துணை நிற்க்கவில்லை என்ற காரணத்தால் அவரை பந்தாடுவது எந்த விதத்தில் நியாயம்.. அவர் மீது குற்றம் இருப்பின் மக்கள் மன்றத்தின் முன் நிறுத்தி அவர் செய்த தவறுகளை சொல்லுங்கள்... அதை விடுத்து அவரை சஸ்பெண்ட் செய்து அவமானபடுத்துவது எந்த விதத்தில் நியாயம்... தமிழகத்தில் நேர்மையாக இருப்பது தகுதி இழப்பு என்பது இன்னொரு முறை நிரூபனம் ஆகி இருக்கின்றுது...


வம்சம்... கிராமத்து திருவிழாவின் விவரனை...

முதலில் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்ததுக்கு ஒரே காரணம்... இந்த படத்தின் டிரைலர் என்றால் மிகையாகாது... அதில் ஒரு பாடலுக்கு அரள்நிதி கை ஆட்டி ஆட்டி அடும் அந்த ஆட்டம் ஏனோ  பார்த்தவுடன் பிடித்து போனது... இரண்டாவது  பாண்டி ராஜ்.... பசங்க படத்தின் இயக்கத்தில் எனக்கு அவர் மீது அளவுகடந்த  மரியாதை இருந்தது...

பாக்யா வார இதழின் மறுப்பு....பாக்யாவில் எனது படைப்பு

ஒரு வாரத்துக்கு முன்பு பாக்யா வார இதழின் சப் எடிட்டர்  பாலசங்கர் பேசினார்.... நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தார்..இப்போது வருத்தம் மற்றும் மறுப்பு தெரிவிக்க முடியாது... அடுத்த இதழுக்கான ஏற்பாடுகள் முடிந்து விட்டன... இனி இப்படி நிகழாது என்று சொன்னார்...மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு 15•08•2010)


ஆல்பம்....
எல்லோருக்கும் எனது 64வது சுதந்திர தின வாழ்த்துக்கள்...நாடு சுதந்திரம் அடைந்து அறுபத்தி நாலு வருடங்கள் ஆகின்றன... ஆனால் இன்னும் ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் பயண்பாட்டில் உள்ள பேருந்து நிலையங்களில் வைத்து இருக்கும் தண்ணீர் தொட்டிகளில் குடிக்க வைத்து இருக்கும் டம்ளர்களுக்கு என்று விடுதலை என்றுதெரியவில்லை....ஒவ்வொரு முறை அவைகளை பார்க்கும் போதும்....


கடற்கரை கழிவறையா????சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ பழக

நீங்கள் சென்னை வாசியா? அப்போது நீங்கள் நிச்சயம் இந்த அறிய காட்சியை பார்த்து இருக்கலாம்... அல்லது தமிழகத்தின் பல கடற்கரைகளில் பார்த்து இருக்கலாம்...

டூரிங் டாக்கிஸ் அல்லது செல்லமாக டென்ட் கொட்டா...
கால ஓட்டத்தில் காணமல் போனவைகள் தொடரில் இந்த பாகத்தில் தமிழகத்தில் பலரால் மறக்க முடியாத அந்த கால பொழுது போக்கு சாதனமான டுரிங் டாக்கிஸ் பற்றி இந்த வாரம் பார்ப்போம்


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/11•08•2010)

ஆல்பம்....


ஹரி ஓம்னு ஆரம்பிக்கவே இல்லை  அதுக்குள்ள இவ்வளவு அளப்பறியா என்று வடிவேல் தண்ணி அடிக்கும் முன்னே அவரை பார்த்து ஒரு படத்தில் சொல்லுவார்கள்.. அது போல இன்னும் காமன்வெல்த்  போட்டிகள் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை... அதற்குள் அதில் ஊழல்கள் பட்டியல் இட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.. ஆறு லட்ச ரூபாய் அடக்கவிலை கொண்ட விசயத்துக்கு 7 லட்சத்துக்கு மேல் வாடகை என்று  போட்டு வைத்து இருக்கின்றார்கள்...1500 கோடி ஒருத்தனே அடிக்கும் நாட்டில்,35 ஆயிரம் கோடி எனும் போது எத்தனை  கோடி கூட்டு சேர்ந்து அடிக்கலாம்..????
===================

(Mujeres infieles-2004) 18+ உலகசினிமா சிலி நாடு...கள்ள உறவுகள்... கலங்கி நிற்கும் நிஜ உறவுகள்...

போனவாரத்தில் வந்த ஒரு பத்திரிக்கை செய்தி என்னை கவர்ந்தது... அதாவது கணவனும் மனைவியும் சேர்ந்து மனைவியின் கள்ளகாதலனை கொன்ற கதை.. எனக்கு மிக நகைப்பாக இருந்தது... பொதுவாக கணவனின் கள்ளகாதலி, மனைவியின் கள்ளகாதலன் இப்படித்தான் கொலை நடக்கும்... ஆனால் மேலே உள்ள செய்தி சற்று வித்யாசமாக இருந்தது...


ஜாக்கிசேகர் பிளாக் ஸ்பாட் அலக்சா ரேங்கில் ஒரு லட்சத்துக்குள்....

ஒரு  நான்கு நாட்களுக்கு முன் வாசக நண்பர்  நாஞ்சில் நாதம் என்பவர் எனக்கு ஒரு  மெயில் அனுப்பி இருந்தார்...அந்த மெயிலில் அலேக்சா ரேங்கில்  லட்சத்து இரண்டாயிரமாக  எனது தளம் இருந்தது... அதை பார்க்கையில் எனக்கு மகுந்த மகிழ்ச்சியை தந்தது....இதற்கு முன் எனது தளம் ஒரு லட்சத்துக்குள் வந்து இருந்ததாக எனக்கு நண்பர்கள் சொல்லி இருக்கின்றார்கள்...மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/08•08•2010)


ஆல்பம்...

ஊர் பக்கம்  ஒரு பழமொழி ஒன்று சொல்வார்கள்... அவுங்க எல்லாம் நெய்யில பொறிச்சவங்க நாம எல்லாம் பீயில பொறிச்சவங்க என்று ஆளும் வர்கத்தை நோக்கி இயலாமையில் மக்கள்  வெதும்ப சொல்லும் ஊர் பக்க பழமொழி இது....மீண்டும் அது இப்போது நிரூபனம் ஆகி இருக்கின்றது...


(TOOL BOX MURDERS-2004) 18+ கபாலத்தில் சிக்கிய கோடாலி.....

தமிழகத்தில் வீடியோ டெக் அறிமுகமாகி  இருந்த நேரம்... தமிழக மக்களும் கடவுள் பக்தியில், கோவில் திருவிழாக்களில் சாக்கியத்துக்கு  ஒரு திருவிளையாடலோ ஒரு கந்தன் கருனையோ, சரஸ்வதி சபதமோ போட்டு விட்டு, மற்ற மூன்று படங்கள் சர்வ நிச்சயமாய்... வசந்த மாளிகை,குடியிருந்த கோவில், அன்பேவா போன்ற திரைப்படங்களாக இருக்கும்......


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(வியாழன்-05/08/2010)


ஆல்பம்....


நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன்.... நான் நேர்மையின் பருப்பு மன்னிக்கவும் பிறப்பு...என்றோ....நான் யோக்கியன் என்றோ என்னை எங்கேயும் சொன்னதில்லை....வரிக்கு வரி  காப்பி பேஸ்ட் பிரச்சனையை  பத்தி பேசனா? ஆளு ஆளுக்கு ஜாக்கி மட்டும் பைரேட் டிவிடி பார்க்கின்றார், புகைபடங்கள் காப்பி செய்து போடுகின்றார் என்று சொல்கின்றார்கள்...உண்மைதான்....இல்லை என்று மறுக்கவில்லை... அவதார் படத்தை பார்த்து விட்டு  அதை அப்படியே காப்பி செய்து ஏ பிலிம் பை ஜாக்கிசேகர் என்று போட்டுக்கொள்ளும் ரகம் நான் அல்ல...இப்படி யோக்கியம் சொல்லுபவர்கள் வீட்டில் மட்டும் அல்ல இந்தியாவில் எவன் வீட்டிலும் கல்யாண  வீடியோவை தவிர மத்தது எல்லாம் பைரேட்டேட்தான்...
=============


பாக்யா கட்டுரை பெயர் மாற்றசர்ச்சை/என் தரப்பு விளக்கங்கள்...

நேற்றில் இருந்து கண்டனத்தையும், உங்கள் கருத்தையும் எழுத்திலும் போனிலும் தொடர்ந்து பேசி  தெரிவித்தமைக்கு என் நன்றிகள்.... தலைவர் உண்மைதமிழன் போல் தமிழ் டைப்பில் நான் புலி அல்ல என்ற காரணத்தால் எல்லோருடைய பின்னுட்டத்துக்கு பதில் போட என்னால் முடியாது  என்பதால் இந்த சர்ச்சை குறித்து எனது விளக்கம் ஒரு பதிவாக...


திருடப்பட்ட என் பதிவு பாக்கியா வார இதழில்....

காலையில் ஒரு போன் பிஸ்கோத்துபயல் என்ற நண்பரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு .. முன்பு வலைதளத்தில் எழுதிக்கொண்டு இருந்தார்... இப்போது இல்லை... 


ஜாக்கி நீங்க ஏதாவது பத்திரிக்கைக்கு உங்க சினிமா விமர்சனத்தை அனுப்பி இருக்கிங்களா?


இல்லைப்பா....


போனவார பாக்யா பத்திரிக்கையை நண்பர் வாங்கினார்... அதை ஏதெச்சையாக திறந்து பார்த்த போது நீங்கள் எழுதி இருந்த நேக்கடு பியர் படத்தை பத்தி எழுதி இருந்தது... படிச்சப்ப அதை ஏற்கனவே படிச்சது போலவே இருந்தது... அப்படி யே உங்கதளத்துக்கு வந்து பார்த்த போது அப்படியே காப்பி பேஸ்ட் செஞ்சி இருப்பது தெரிந்தது..அதில் கொடுமை என்னவென்றால் ஸ்பெல்லிங் மிஸ்டேக் கூட சரி செய்யாமல் அப்படியே  வந்து இருப்பதாக சொல்ல......1955ல் வெளிவந்த திரைப்படம்... மிஸ்ஸியம்மா.... எப்போதும் என் மனம் கவர்ந்த அம்மா...


பொதுவாக எனக்கு பிளாக் அண்டு ஒயிட் படங்கள் பிடிக்காது.. டூரிங் டாக்கிசில் அந்த வகை  படங்கள்தான் எப்போதும் பார்த்து தொலைக்க வேண்டிஇருக்கும்.. டவுன் கொட்டகையில் கலர்படங்கள் பார்க்க ஆரம்பித்த பிறகு...பிளாக் அண்டு ஒயிட் படங்கள் சலிக்க சலிக்க பார்த்த மனதுக்கு..


கலர் படங்கள் மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தன.. அப்படியே ஸ்கோப்பில் பார்க்கும் போது அந்த சந்தோஷம் எனக்கு இன்னும் அதிகம் ஆகியது... அதனால் பிளாக் அண்டு ஒயிட் படங்கள் பாப்பது என்பது அரிதானது... ஆனால் அதற்காக பிளாக் ஆண்டு ஒயிட் படங்களுக்கு நான் எதிரி இல்லை...

மினி சாண்ட்விச் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/01•08•2010)

ஆல்பம்.....

 உலகம் எங்கும் இருந்து இந்த பக்கத்தை  வாசிக்கும் அனைவருக்கும்,சகபயணியாய் என்னோடு  கூடவே பயணிக்கும் நண்பர்களுக்கும், சக பதிவர்களுக்கும்  எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்......


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner