மந்திரப்புன்னகை தமிழ் சினிமாவில் ராவான திரைப்படம்,ஏம்பா ஆங்கில படங்கள் எழுதிகிட்டு இருக்கே... புது படம் ரிலிஸ் ஆகி இருக்கு எழுதலையா என்று வெள்ளிக்கிழமை நண்பர் கேட்ட  போது, இப்ப  கைல துட்டு இல்லை பட் என் சாய்ஸ் மந்திரபுன்னகை என்று ஒரு சில பதிவுகளுக்கு முன் சொல்லி வைத்து இருந்தேன். காரணம் கரு பழனியப்பன்... அவரின் வசனங்கள் எனக்கு ரொம்பவும் பிடிக்கும்.. ஒரு கேரக்டரை பிடிக்காமல் போக பல காரணங்களை சொல்லலாம். ஆனால் எனக்கு கருபழனியப்பன் மீதான கவர்தலுக்கு ஒரேகாரணம் ஒரு வரி வசனம்தான்..  அடுக்கி வச்சா அதுக்கு பேரு மியூசியம் கலைஞ்சி கிடந்தால்தான் அதுக்கு பேரு வீடு என்று ஒரு டயலாக் இவரின் பார்த்தீபன் கனவு படத்தில் வரும்.. அந்த சனியன் புடிச்ச டயலாக்கை கேட்டதில் இருந்து என் வீடு 6 மாதத்துக்கு ஒருமுறை எப்போதாவதுதான் மியூசியமாகமாறும்... கலைந்து கிடக்கும் வீட்டை பார்த்தாலும் அந்த டயலாக் மனதில் வந்து ஒருமுறை சொல்லி பார்த்து சகித்துக்கொள்வேன். அதுதான் கருபழனியப்பனை நான் கொண்டாட காரணம்.

பெண்களை தொடர்ந்து பூஜித்து வரும் படங்கள்தான் தமிழ் சினிமாவில் அதிகம் வந்து இருக்கின்றது..  காரணம் நாம் எல்லாம் அம்மா சென்டிமென்டில் வாழ்பவர்கள்..பட் வாழ்வின் உண்மைகளை உரக்க சொல்ல அல்லது பொட்டில் அடித்தது போல கருத்து சொல்லும் தமிழ் திரைபடங்கள் மிக குறைவு என்பேன். அந்த குறையை  இந்த படம் போக்கும்...

கதை விவாதத்தின் போது முடிந்த வரை லேடிசை திட்டுவதை குறைத்தே வசனங்கள் வைப்பார்கள்... காரணம் லேடிஸ் படத்துக்கு வரமாட்டர்ர்கள் என்பதால் ரொம்பவும் சீண்டமாட்டார்கள். ஆனால் இந்த படம் தமிழ்சினிமாவின் எல்லாதடைகளையும்  வசனங்கள் மூலம் உடைக்கின்றது.

இதை விட பல வருடங்களுக்கு முன் ஒரு தமிழ் படம் இது போலவே பெண்களை ரொம்ப கேவலமாக சாடியது..

அந்த படத்தில் ஒரு காட்சி...இப்படிக்கு எதிர்விட்டு ஜன்னல் என்று ஒரு கடிதம் ரவுடிக்கு வரும் ... அந்த கடிதத்தை படித்து காட்டியதும் எதிர் வீட்ல வீடு இருந்தாத்தானே ஜன்னல் இருக்கும் என்று பார்த்தீபன் பல வருடங்களுக்கு முன் கைலியை தூக்கி கட்டிக்கொண்டு சலும்பியதை  நாம் பார்த்து இருக்கலாம். அதே படத்தில் நிரோத் உபயோகியுங்கள் நிரோத் உபயோகியுங்கள்னு டிவியிலயும் ரேடியோவுலயும் காத்தறானுங்களே எதுக்கு?? என்னை மாதிரி அனாதைங்க உருவாக கூடாதுன்னுதான் என்று சொல்லி ஒரு பெண்ணை உதைப்பார்... தமிழகபெண்கள் அந்த கூற்றில் இருக்கும் நிதர்சன உண்மை புரிந்து பெண்களே அந்த படத்தை வெற்றிபடமாக்கியது வரலாறு....

பார்த்தீபனின் சிஷ்ய கோடி கரு பழனியப்பன் குரு வழியில் பேன்ட் சர்ட் போட்டு இன்டெலேக்சுவலாக திட்டுகின்றார்.. காரணம் இல்லாமல் இல்லை. அதுப்டம் பார்க்குட்ம போது உங்களுக்கே தெரியும்.

பட் கருபழனியிப்பனின் முந்தைய படங்கள் எல்லாம் பீல் குட் மூவி வகையை சார்ந்த திரைபடங்கள். அவரின் சிவப்பதிகாரம் படத்தை தவிர்த்து பார்த்தால் பார்த்தீபன் கனவு,பிரிவோம் சந்திப்போம், போன்றபடங்கள் மெல்லிய நெஞ்சை வருடும் திரைப்படங்கள்தான்.

மந்திரப்புன்னகை படத்தின் கதை என்ன???
 
கதிர்(கருபழனியப்பன்) ஒரு ஆர்க்கிடெட்.. தினமும் தண்ணி, குட்டி என்று தனக்கான வாழ்க்கையை எந்த காம்பிரமைசுக்கும் இடம் கொடுக்காமல் வாழ்பவன். அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் பெண் ........... அவனை போலவே ஒரு அவுட்ஸ்போக்கன் லேடி..கதிர் எப்படி இருந்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்கின்றாள்.. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கும் தருணத்தின் போது அவளுக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக கதிருக்கு தெரியவருகின்றது. அவளை கொலை செய்து விட்டு போலிஸ் நிலையம் சென்று சரணடைகின்றான்... சரி அப்புறம்...... ம் நொப்புரம் போ போ போய் தியேட்டர்ல போய் பாரு.

படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

எனக்கு பழனியப்பன் கேரக்டர் ரொம்பவும் பிடித்து இருக்கின்றது..  காரணம் அந்த கேரக்டரில் முக்கால்வாசிநான்தான்... ஊருக்காக வாழாமல் தனக்காக வாழும் கேரக்டர்..நான் தண்ணி அடிக்கறவன்னு உன் பொண்டாட்டிகிட்ட சொல்லு... சார் அவ தப்பா நினைப்பா?? நினைச்சா நினைச்சிட்டு போவட்டும் அவுங்க கொடுக்கும் நல்லவன் சர்ட்டிபிகேட்டை எங்க பரேம் பண்ணி மாட்டுவது..??? என்பதாகட்டும்.

வாயை திறந்தால் யோசித்த வார்த்தைகளை, அது எந்த வார்த்தையாக இருந்தாலும் நான் கொட்டிவிடும் ரகம்... எனக்கு கோபம் வந்தால் என் சுபாவம் அப்படி.. அதைதான் அந்த கேரக்டரும் பிரதிபலிக்கின்றது.

எனக்கான வாழ்க்கையை நான்தான் வாழுவேன்.. அந்த வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை.. அதைதான்  கதிர் கேரக்டர் செய்கின்றது...


குடிக்கமாட்டேன் என்று சொன்னவனை 1970க்கு பிறகு தமிழ்நாட்டில் குடிக்காதவன் இருக்கின்றானா? உங்க பாஸ்பேர்ட் சைஸ் போட்டோ இரண்டு கொடுங்க  வச்சி பார்த்துக்குறேன் என்று நக்கல் அடிப்பதாகட்டும் எல்லாம் செமை.

இந்த படத்தில் நான் ரசித்த பாடல்
மேஸ்திரி கோமணத்தை எடுத்து வருகின்றேன் என்று சொல்ல.. ஏண்டா செத்து போன கிளிக்கு கூண்டு என்று சொல்வது எல்லாம் கிராமத்து மக்களின் பேச்சு வழக்கு... அதை இரட்டை அர்த்தம் என்று சொன்னால் இன்னும் கிராமபுறங்களில் இதைவிட மோசமாக சொல்வார்கள்... மிக முக்கியமாக நமது தெருக்கூத்தில் கட்டியகாரன் அந்த செத்து போன கிளி எப்படி இருக்கும் என்பதாய் செய்து காட்டுவான். ஆனாலும் படத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லை என்று சொல்ல முடியாது.. நிறையவே...


சந்தானம் படத்தின் பெரிய பலம் பல காட்சிகளில் வெகுவாய் சிரிக்கவைக்கின்றார்... கவுண்டர் பண்ணிய கமர்கட் மண்டையா போன்ற பட்ட பெயர்களை வைத்து காமெடி செய்வது போல சந்தானமும் சப்பாளங்கட்டைவாயா என்று பட்டபெயர் வைத்து கவுண்டர் பானியில் திட்டிகாமெடி செய்கின்றார்.


பாண்டிக்கு போவதை பற்றி ஆபிசில் பிளான் போட்டுக்கொண்டு இருப்பதையும் இன்றைய பழையமகாபலிபுரம் சாலைபக்கம் நடக்கும் விஷயங்களை நிறைய கிண்டல் அடித்து இருக்கின்றார்கள்.


சாகப்போகும் பாட்டியை பார்க்க போகாமல் 85 வயது பாட்டிக்கு நாம கொடுப்பது சாவு எனும் விடுதலைதான். நான் போய் பார்த்தா வாழனும்னு ஆசைவரும்...அதான் போய் பார்கக்லை என்று சொல்வதும்....


கதாநாயகி  சொல்றா... அவன் என் மார்ப்பை பார்த்து எனக்கு தெரியும் அதுக்காக நான் ஒன்னும் கொறஞ்சி போயிட போறதில்லை. இது தப்புன்னு சொன்னா எந்த இடத்திலையும் அழகான பொண்ணை ரிசப்ஷனில் வைக்கவே கூடாது...


கார் கம்பெனி பிளான் அதுக்கான விவரனை ரசிக்கிவைக்கின்றது....


அப்பா தோளில் இருக்கும் பையனுக்குதான் முதலில் சாமி தெரிகின்றது ஆனால் இது பல அப்பாக்களுக்கு புரிவதில்லை...என அந்த ஜென்ரேஷன் கேப்பை கதை சொல்லல்  மூலம் சொல்லி இருப்பது சூப்பர்..


சேகர் எதுக்குப்பா போற உள்ள வந்து ஒரு  காப்பி சாப்பிட்டு போகலாம் என்றும் ஊர் ஆயிரம் சொல்லும் நீ வாப்பா  என்று சொல்லும் விகல்பமான அந்த அப்பா கதாபாத்திரம் அருமை...ஆனால் இப்படி பல நண்பர்கள் இருக்கின்றார்கள்.நிதர்சனம்  அந்த காட்சி..

பொண்டாட்டியை டெய்லியும் எவனாலையும் பாராட்டிகிட்டே இருக்க முடியாது.

செல்போன் கண்டுபிடிச்சதே உடனே பேசதான் ஆனால் இங்க எடுத்துக்கு ஓரமா எல்லாரும் போய் பேசறாங்க...ஏன்...காட்சிகளில் வரும் வசனங்கள் பல இன்டலெக்சுவல் ரகம்.. தீவிர வாசிப்பும், சமுகத்தினை பற்றியபார்வையும் இருப்பவனால்தான் இப்படி டயலாக் ரசித்து  எழுத முடியும்...


குணா படம் போல அந்த ரவுண்ட் ஷாட் கிளிஷேவை எடுக்காமல் விட்டு இருக்கலாம் அல்லது ஏதாவது ஒரு காரிடரில் நடப்பது போல ஒரு லென்தி ஷாட் வைத்து இருக்கலாம்.


நாக்சலைட்கள் அதீவாசி மக்களின் கடவுள் என்று சொல்ல ஒரு தைரியம் வெனும் என்று அருந்ததீராயை பாராட்டுவது,ஈழத்து மக்களின் வேதனையை சொல்வது என அந்த டயலாக் திணிக்கபட்டததாகவே இருந்தாலும் வெகுஜன மீடியாமூலம்தான் சில விஷயங்களை சொல்ல முடியும். அந்த டயலாக் இன்னும் ஒரு முறை கேட்கவேண்டும்.. அந்த இடத்தில் ஏர்டெல். ரிங்டோன் பாடல் பற்றி ஏர்டெல் அழைப்பு அந்த காட்சியை ரசிக்கவிடாமல் பண்ணிவிட்டது.


கதாநாயகியை விபச்சாரி கதாபாத்திரத்துக்கும், விபச்சாரிகதாபார்த்திரத்தை கநாயகியாகவும் போட்டு இருக்கலாம் என்பது என் எண்ணம்...
விபாச்சார பாத்திரத்துக்கு கொஞ்சம் பெரிதான உடம்பு இருப்பதால் அது சாத்தியம் ஆகி இருக்காது.. பெரிய உடம்பும் வேறு....


கதாநாயகி மீனாட்சி ஒரு சில இடங்களில் அழகாகவும் பல இடங்களில் முகம் தவிர்த்து நம் கண்கள் மேய விட மெனக்கெடுகின்றார்...பாண்டி என ஒருபடம் கருணாசுடன் காமெடி செய்யும் போது அவர் கவர்ச்சியாகவே பல காட்சிகளில் கலக்குவார்... இந்த படத்தில் இயக்குனர் கட்டுபடுத்தி இருக்கின்றார்.மீனாட்சி நடிக்கவும் செய்து இருக்கின்றார்.ஸ்ரீகாந்தோடு கருப்பு சேலையில் செமை.


ஸ்ரீகாந் ஒரு காட்சியில் நடித்து இருக்கின்றார்.. அவருக்கு ரகசிய இடத்தில் மச்சம் இருப்பது இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்ததில் இருந்தே தெரிகின்றது. அதே போல ஸ்ரீகாந் இடத்தில் நான் இருந்து இருந்தால் பணமே வாங்கி இருக்கமாட்டேன்.. கார் ஏறும் போது டைரக்டர் உங்க பேமன்ட் என்று சொல்ல வந்தால், கரும்பு தின்ன கூலியா? என்று மானஸ்தனாக வந்து இருப்பேன்... அனேகமாக ஸ்ரீகாந் கரும்பு தின்ன கூலி வாங்கி இருப்பார் என்று நம்புகின்றேன்.

முக்கியமாக அந்த டயலாக் கதிர் கூப்பிட்டா என்னை அனுப்பாதே ... ஏன்?? அவன் கல்யனம் பண்ணிக்கபோறான் போல இருக்கு... அது அவனுக்கும் நல்லதில்லை எனக்கும் நல்லதில்லை- என்ற டயலாக்..


விப்சசார பெண்ணோடு புரளாமல் வேறு உடை குளியில் என விஷுவலில் அந்த மேட்டரை முடித்து இருப்பார் இயக்குனர்.ராமைய்யா மூலமாக நாட்டுநடப்புகளை சொன்னாலும் அந்த அப்ப்ர்ட்மென்ட் கூட்டம் கிளிஷேதான்..


வித்யாசாகரின் பாடல்களில் பல மெலோடிரகம்...இந்த காதலை நான் அடைய எத்தனை காமம் கடந்து வந்தேன். என்ற அந்த பாடல் எனது பேவரிட்.
ஒளிபதிவு ராம்நாத்ஷெட்டி இவருடன் இயக்குனர் பார்த்தீபன் அவர்களின் வித்தகன் படத்தில் கிளாஷ் ஒர்க் செய்து இருக்கின்றேன்..


சென்னைநகரின் பல காட்சிகள் நன்றாகவே இருக்கின்றன. முதலில் டைட்டில் சாங்கில் முகம் பற்றி பாடலில் கேமரா தேடி சென்று எடுத்த முகங்கள் ஒரு வித்யாசமான ஹைகூ


படத்தில் பல இடங்களில் மெயின் கேரக்டர் இருவருக்கும் லிப்சிங்க் ஆகமாட்டேன் என்கின்றது.


படத்தினை முழுவதும் ரசித்தாலும் யூகிக்க கூடிய கிளைமாக்ஸ் என்பதால் படம் சலிப்புட்டும் இடம் அந்த இடம்தான்.. டயலாக்கில் காட்டிய கான்சன்டேரஷனை கிளைமாக்ஸ் பகுதியில் வேறு கொஞ்சம் யோசித்து இருக்கலாம்.


இந்த கதைக்கு இதுதான் கிளைமாக்ஸ் என்றாலும் அதில் நெகிழ்ச்சி இல்லை.


ஆனால் ஒரு இடத்தில் இந்த படத்தின் கவுன்டர் டயலாக் நான் ரொம்பவும் ரசித்தேன்.


 நந்தினி கதிர்வேனாம் அவன் கூட வாழ போறேன்னு நளாயினி வேசம் எல்லாம் போட வேண்டாம் என்று சொல்ல அதுக்கு நந்தினி நீ ஒரு 500 பேருகிட்ட படுத்து இருப்பியா? ஆனா இவனைதானே பார்க்கவரனும்னு தோனிச்சு அதனால நளாயினியா நான் மாறல்ம் தப்பில்லை எனும் இடத்தில் நன்றாகவே மினாக்ட்சி நடித்து இருந்தார் அந்த சீன் எனக்கு பிடித்த சீன்.

படத்தின் ரிசல்ட் டிஸ்கி..


ஒரு ராவான தமிழ்படத்தை பார்க்கவிரும்புவர்ககள் இந்த படத்தை தாராளமாக பார்க்கலாம்... படம் டயலாக்குகளுக்காக ஒரு முறை அவசியம் பார்க்கலாம்...


பின் பாதியில் கிளைமாக்ஸ் இடம் தவிர்த்து படம் நன்றாகவே போகின்றது...அதனால் இந்த படம் பார்க்கவேண்டிய படம் லிஸ்ட்தான்...அரைத்த கதை என்றாலும் புளிக்கவில்லை என்பதே படத்தின் பலம்.


பலவீனம்  குழந்தை முத்தம் போல சுவாரஸ்யம் இல்லாத உப்பு சப்பு இல்லாத கிளைமாக்ஸ்.


கருபழனியப்பன் முகம் குறித்து ஏதோஒரு தளத்தில் கிண்டல் அடிக்கபட்டது. பெங்களுர் ஹீரோக்களுக்கு 100சதவீதம் பெட்டர்.


இந்த படம் நான் அதிகம் எழுத ஒரே காரணம் கதிர் கேரக்டர் போலதான் நான் அதனால் இந்த படம் எனக்கு பிடித்து இருந்தது.. சில நண்பர்கள் படத்தினை  மொக்கை என்று சொன்னார்கள். பலர் கிளைமாக்ஸ் மட்டும்தான் சரியில்லை மற்றபடி நிறைவான படம் என்றார்கள்.
படத்தின் டிரைலர்படக்குழுவினர் விபரம்.

Directed by     Karu Pazhaniappan
Produced by     Karthic Nagarajan
Written by     Karu Pazhaniappan
Starring     Karu Pazhaniappan
Meenakshi
Santhanam
Music by     Vidyasagar
Cinematography     Ramanath Shetty
Studio     Indira Pictures
Release date(s)     November 19, 2010 (2010-11-19)
Country     India
Language     Tamilஏவிஎம் பிரிவியூ தியேட்டர் டிஸ்கி.

பதிவர்களுடன் சேர்ந்து பார்த்த முதல் தமிழ்படம் இதுதான்... ஏற்கனவே கிழக்குபதிப்பகம் மொட்டை மாடியில் உலகபடங்கள் ஒரு சிலது பதிவர்களுடன் பார்த்து இருந்தாலும் இதுதான் அனைவரோடும் பார்த்த தமிழ்படம்...

ஏவிஎம்பிரிவியூவில் பார்த்து முதல் படம் இதுதான்.

படம் பார்த்து நான் ரசிக்கும் போது எது எதுக்கெல்லாம் நான் கைதட்டினேன் சிரித்தேன் என என்னை கவனித்து ஒரு கும்பல் நக்கல் அடித்துக்கொண்டு இருந்தது.

படம் பார்த்து முடிந்ததும்  இந்த படம் லேடிசுக்கு அதிகம் பிடிக்காது உனக்கு எப்படி என்று என் மனைவியின் தம்பி என் மனைவியிடம் கேட்க.. அவள் கிளைமாக்ஸ் தவிர்த்து படம் பிடித்து இருப்பதாக சொல்ல.. அவன் அப்படியே திரும்பி என் பக்கம் பார்த்து சேர்ந்த சேர்க்கை அப்படி என்றான்.

என் மனைவி படம் பிடித்து இருக்கின்றது.. இவ்வளவு இன்லேக்சுவல் மனநிலை சரியில்லாத கேரக்டருக்கு வைக்காம அந்த விஷயத்தை வேற ஒரு கேரக்டருக்கு அதே டைரகட்ர் செய்தாலும் நன்றாக இருக்கும் என்றார்..

 என் மனைவிக்கு கதிர் கேரக்டர் பிடித்து இருக்கின்றது முக்கியமாக டயலாக் மாடுலேஷன் பிடித்து இருப்பதாகவும்,எல்லா டயலாக்கும் மெச்சூர்டாக இருக்கின்றதும் என்றும். சந்தானம் செம ஸ்மார்ட் ஆகிவிட்டதாகவும், முக்கியமாக அப்பாகிட்ட திருவிழா கதை சொல்லியபடி பார்க்கில் நடக்கும் அந்த காட்சி தனக்கு மிகவும் பிடித்த காட்சி என  என்னிடத்தில் படத்தை பற்றி கமென்ட் தெரிவித்தார்.

படத்தில் கிளைமாக்சில் அப்பா கேரக்டர் ஏதும் பேசாமல் நடக்க நான் யப்பா இப்பவாவது என் வாயை முடினியே என்று சொல்ல தியேட்டர் கொல்.....எல்லோரிடமும் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு கடைசியாக போனவன் நான் மட்டும்தான்..


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

28 comments:

 1. நல்லா சொல்லி இருக்கீங்க தல! என்னவோ எனக்கும் கரு. பழனியப்பன் படங்களில் ஒரு ஈர்ப்பு!( குறிப்பா வசனங்கள்தான்) பார்க்கணும்!! :))

  ReplyDelete
 2. arumaiyaana vimarsanam..

  It was nice meeting u there,,, but could not talk much as I came late ..
  looking forward to meet u in some other occasion

  ReplyDelete
 3. Mandira punnagaiyil kuraikal kuraivudhan

  ReplyDelete
 4. இன்னும் பார்க்கல, பார்க்கவும் முடியாது இந்த ஆப்கான்தேசத்தில்..டோரண்ட்ல பார்த்துட்டு இன்னும் ஒருமுறை உங்க விமர்சனத்தை படிக்கிறேன்..

  ReplyDelete
 5. ஜாக்கி...

  நிச்சயமாக இந்த படம் பார்த்ததே ஒரு அனுபவம். படமும் ஒரு அனுபவமாக இருந்ததும் மகிழ்ச்சியே...

  அன்பு நித்யன்

  ReplyDelete
 6. http://thatstamil.oneindia.in/movies/specials/2010/11/24-karu-pazhaniyappan-bloggers-show.html

  ReplyDelete
 7. வலைப்பூ எனப்படும் பிளாக் எழுதுவது இன்று ஒரு பேஷனாகவே மாறிவிட்டது. தெரிந்ததையெல்லாம் மொழி, இலக்கணம், நடை எதைப் பற்றியும் கவலைப் படாமல் எழுதித் தள்ளலாம் என்ற வசதி, எல்லோரையுமே ஒரு முறை எழுதிப் பார்க்கத் தூண்டியுள்ளது வலையுலகில்.

  சிலர் இதிலேயே கணிசமாக பணம் பார்ப்பதும் நடக்கிறது. தனி நபர் நிறுவனங்கள் சில விளம்பரமெல்லாம் தருகின்றன!

  வெகுஜன ஊடகங்களில் எட்டிப் பார்க்காத அறிவு ஜீவித்தனங்களும் இவற்றில் உண்டு... அதேநேரம் அங்கே காட்ட முடியாத வக்கிரங்கள், ஆபாசங்களையும் சிலர் கொட்டித் தீர்ப்பதையும் பார்க்க முடிகிறது. பலர் ஏற்கெனவே வந்ததை காப்பி பேஸ்ட் செய்வதே ப்ளாக் எழுதுவது என்பதில் தெளிவாக உள்ளனர்.

  இவர்களுக்கென்று சங்கமெல்லாம் வைத்திருக்கிறார்கள்.

  கிட்டத்தட்ட 3000 பதிவர்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவர்களில் சிலருக்கென வாசகர் வட்டமும் உள்ளன. பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் சினிமா விமர்சனம் எழுதுகிறார்கள். நாலு வரி, நாலு பக்கம் என்று அவரவர் நோக்கத்துக்கு எழுதுகிறார்கள்.

  இப்போது இந்த விமர்சனங்களுக்கு ஒரு அங்கீகாரம் தரும் நோக்கில் இயக்குநர் கரு பழனியப்பன் தனது மந்திரப் புன்னகை படத்துக்காக தனி ஷோ ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். இதற்கு ஞாநி உள்பட 50க்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்கள் திரண்டிருந்தனர்.

  இது கரு பழனியப்பனுக்கு சந்தோஷத்தை அளித்தாலும், ஏற்கெனவே இணையதள பத்திரிகையாளர்களை தடுப்பதில் குறியாக உள்ள சில பிஆர்ஓக்களுக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளதாம்.

  'இவிங்களும் இனி ரெகுலர் ஷோவுக்கு வருவாங்களோ...' என்று ஒருவருக்கொருவர் கவலையுடன் பேசிக் கொண்டதுதான் கரு பழனியப்பனின் ப்ளாக்கர்ஸ் ஷோவின் ஹைலைட்!

  ReplyDelete
 8. விமர்சனம் அருமை அண்ணே,

  கலக்கீட்டீங்க...

  ReplyDelete
 9. விமர்சனத்திற்கு நன்றி தம்பி..!

  ReplyDelete
 10. நல்ல விமர்சனம்...படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டியது.

  --செங்கோவி

  ReplyDelete
 11. After reading reviews of this movie, this was not in my watch list but now it is...after your review...your approach is really different...keep it up...

  ReplyDelete
 12. தமிழ் சினிமா நல்லதொரு பாதைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது. நிச்சயம் மக்கள் புரிந்து ரசிப்பார்கள் என்றே தோன்றுகிறது.

  ReplyDelete
 13. சந்தனக் கலருக்குள்ள எழுதியிருக்கும் எழுத்துகள் சரியாக தெரியவில்லை. எழுத்துகளுக்கு கருப்பு நிறம் கொடுக்கலாமே!,.

  ReplyDelete
 14. படத்தில இருக்கிற வசனங்களை நீங்க சொல்லி விதம், பார்க்க தூண்டிகிற விதத்தில் நல்லா இருக்கு ஜாக்கி...

  //பலவீனம் குழந்தை முத்தம் போல சுவாரஸ்யம் இல்லாத உப்பு சப்பு இல்லாத கிளைமாக்ஸ்.//

  குழந்தைங்க முத்தம் கடவுளின் முத்தம் பாஸ், சுவாரசியம் இல்லை என்று சொன்னா எப்படி? ம்ஹும்....

  ReplyDelete
 15. Naan migavum rasitha padangalil ondru mandhira punnagai..matravargalidam parka solli thitu vangiyadhu dhan micham...ungal vimarsanam en mana kayathuku marundhu agiradhu..Kandippaga karu.palaniappan parata pada vendiyavar..idhil kodumai ennavendral B and C centargalail padam release agavae illai..Pondy, cuddalore, vridhacahclam, neyveli engayum padam release agaave illai..migavum manam nondha tharunam adhu..!!! Adutha padam avaruku kidaipadhu kastam dhan..Indha madhri nalla padam edupavargalin nilayum adhu dhan..tamil rasigargalin parisu idhu..vetkakedana vishayam..:(

  ReplyDelete
 16. ஆவலைத் தூண்டும் விமர்சனம்,உங்களுக்குரிய தனி ஸ்டைலில்.

  ReplyDelete
 17. விமர்சனத்தின் ஊடே குறிப்பிட்டுள்ள மற்ற சம்பவங்களின் தொகுப்பு அருமை...

  ReplyDelete
 18. இந்தப் படத்துக்கு இவ்வளவு பெரிய விமர்சனம் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

  படம் எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.
  கரு. பழனியப்பன் பிறந்த காரைக்குடிகாரனாக இருந்தாலும் அவர் நடிக்காமல் திரைக்குப் பின்னால் மட்டும் இருந்திருந்தால் படம் நல்லா இருந்திருக்குமோ என்னவோ...

  டயலாக் பேசும்போது சுத்தமாக பாடி லாங்க்வேஷே இல்லை... மரக்கட்டை பேசுவது போல் இருக்கிறது பழனியப்பனின் நடிப்பு.

  அவரின் முந்தைய படங்களை ரசித்துப் பார்த்தவன் நான்... அடுத்த படத்தில் நடிக்கும் எண்ணத்தைவிட்டு இயக்கமட்டும் செய்ய்ட்டும் திரு.பழனியப்பன்.

  ReplyDelete
 19. // எனக்கு பழனியப்பன் கேரக்டர் ரொம்பவும் பிடித்து இருக்கின்றது.. காரணம் அந்த கேரக்டரில் முக்கால்வாசிநான்தான்... //
  நாங்களும் அதேதான்...

  // ஸ்ரீகாந்தோடு கருப்பு சேலையில் செமை. //
  Same Feeling...

  ReplyDelete
 20. மன்மதன் அன்பு படத்தில் கமல் கவிதை நடையுடன் ஓர் பாடல் வருகிறது .அதை கேட்டுவிட்டு அந்த பாடலை பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .குறிப்பு உங்களுக்கு ஏற்ற metter அதில் உண்டு .

  ReplyDelete
 21. மன்மதன் அன்பு படத்தில் கமல் கவிதை நடையுடன் ஓர் பாடல் வருகிறது .அதை கேட்டுவிட்டு அந்த பாடலை பற்றி ஒரு பதிவு போடுமாறு கேட்டுக்கொள்கிறேன் .குறிப்பு உங்களுக்கு ஏற்ற metter அதில் உண்டு .

  ReplyDelete
 22. //எல்லோரிடமும் பேசிவிட்டு அந்த இடத்தை விட்டு கடைசியாக போனவன் நான் மட்டும்தான்//


  எல்லோரும் போன பின் நீ மட்டும் அங்க என்ன பண்ண முடியும்?

  ReplyDelete
 23. //நாக்சலைட்கள் ஆயுதம் ஏந்திய காந்தி என்று சொல்ல ஒரு தைரியம் வெனும் என்று அருந்ததீராயை பாராட்டுவது// விமர்சனம் கிளாச்சிக் !

  ReplyDelete
 24. :)))) நல்ல விமர்சனம் சார்

  ReplyDelete
 25. :))))))நல்ல விமர்சனம் சார்

  ReplyDelete
 26. meenakshi with karunas i think the movie name is "rajathi raja" not pandi

  ReplyDelete
 27. சேகர் அண்ணனுக்கு வணக்கம், இதற்கு முன் உங்கள் பதிவுகளை அவ்வப்போது பார்த்து இருப்பினும் கருத்து சொல்வது இதுதான் முதல் முறை. பொதுவாக உங்கள் தமிழ் பட விமர்சனங்களில் காரம் கம்மியாக இருப்பதாக நினைக்கிறேன். தவறு என்றால் இன்னும் அழுத்தமாக சுட்டிக்காட்ட வேண்டும் என விரும்புகிறேன். குவார்ட்டர் கட்டிங் படத்தை கூட நீங்கள் அணுகிய விதம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. மந்திரப்புன்னகையும் அவ்வாறே என் நினைக்கிறேன். ஆனந்த விகடன் 39 மதிப்பெண் தந்துள்ளது. உங்கள் விமர்சனம் சற்று வேறு விதமாக உள்ளது என நினைக்கிறேன். உங்களிடம் இன்னும் சற்று நெத்தியடி விமர்சன வரிகளை எதிர்பார்க்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி! (madrasbhavan.blogspot.com and nanbendaa.blogspot.com)

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner