சிறுவயதில் எனக்கு மிகப்பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் தபால்காரர் எல்லோருடைய வீட்டில் உள்ளவர்களின் பெயர்களையும் எப்படி மறக்காமல் நினைவுவைத்துக்கொள்கின்றார் என்று நினைத்து அதிசியத்து இருக்கின்றேன்…
என் அப்பாவுடைய பெயரை நினைவு வைத்து இருக்கலாம் ஆனால் எனக்கு மூன்றாம் வகுப்பு பரிட்சை ரிசல்ட் கார்டை என்னிடம் சரியாக வந்து கொடுத்த போது பிரமித்த போய் இருக்கின்றேன்... ஆனால் இப்போது ஏழுகழுதை வயசாகி போனபிறகுதான் அந்த உண்மை தெரிகின்றது...