பண்டிகை கால அவசரம்... ஆம்னி பேருந்து கட்டண கொள்ளை....

சென்னைவாசிகள் என்று பார்த்தால் குறைந்த அளவு மக்களே இருப்பார்கள்.. ஆனால் தென்மாவட்டத்து மக்கள்தான் சென்னையை ஆக்கிரமித்து இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.



நான் கடலூர்காரன் ஆனால் தீபாவளியின் போது பேருந்து கிடைக்காமல் பல வருடங்கள் படியில் உட்கார்ந்து பயணம் செய்வதுதான் எனது வழக்கம்..எனக்கு சென்னையில் இருந்து 4 மணி நேர பயணம்... 175 கிலோமீட்டர் தான்.. ஆனால் சற்றே யோசித்து பாருங்கள். 450கிலோமீட்டர் பயணம் என்றால் எப்படி படியில் உட்கார்ந்து பயணிப்பது???

அதனால்தான் ரயிலில் முன்பதிவு ஓப்பன் செய்தவுடன் முடிந்து போகின்றது.. இருப்பினும் மாநில அரசு சிறப்பு பேருந்துகளாக 175 பேருந்துகள் இயக்குகின்றது... ஆனால் அந்த பேருந்தை விட அதிக மக்கள் வருவார்கள் எனபதே நிதர்சன உண்மை.

திநகரில் பேருந்து நிலையத்தில் கோட்ட மேலாளாரிடம் நல்ல பேர் எடுக்க ஒயிட் போர்டு மற்றும் சாதாரண பேருந்துகள் எல்லாம் சட்டென போர்டு மாற்றி எம் மற்றும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளாக   மாற்றி காசுகளை அள்ளுவதாக புகார்கள் பொது மக்கள் இடம் இருந்து வந்தன.... எக்ஸ்ட்ரா ஒருரூபாய்ஐம்பது பைசா மட்டுமே.... அதுக்கே நடுத்தர மக்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள்...

ஆனால் தென்மாவட்டங்களுக்கு ஒரு டிக்கெட் 450ரூபாய்க்கு கொடுத்து சென்றவர்கள் எல்லாம் தீபாவளியை காரணம் காட்டி 450ரூபாய் டிக்கெட் எல்லாம் 1500ரூபாய்கு விற்க்க படுகின்ற அவலம் நடக்கின்றது...

நேற்று பத்திரிக்கையில் இந்த செய்தி வெளியிட.. அரசு முழித்துக்கொண்டு அதிக விலைக்கு டிக்கெட் கட்டணம் விற்றால் நடவடிக்கை எடுப்பேன் என்று எச்சரித்து இருக்கின்றது...

அப்படி ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணத்தை அதிக அளவுக்கு  விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என்றும் மீறுபவர்கள் மீது புகார் அளித்தால் பர்மிட் ரத்து  நடவடிக்கை எடுக்கபடும் என்று அரசு கீழ்வரும் எண்களை கொடுத்து இருக்கின்றது...

044/ 23452323
044/28555036
044/23452320 ஆகிய எண்களில் புகார் செய்யலாம் என்று தெரிவித்து இருக்கின்றது...


ஆனால் இந்த  விஷயம் மிக நியாயமாக நடந்தால் ஒரு பேருந்து கூட ஆம்னி பேருந்து நிலையத்தில் இருக்காது....எல்லா பேருந்துகளின் பர்மிட்டையும் ரத்து செய்ய நேரிடும்...

இருப்பினும் இந்த   எச்சரிக்கையை மதிக்காமல் நடந்து கொள்வதுதான் நமது பாலிசி.... இது எந்தளவுக்கு நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை....

இது போலான விசேஷகாலங்களில் நிறைய தென்மாவட்ட தனியார்பேருந்துகளை சென்னையில் களம் இறக்க வேண்டும்..  தீபாவளிக்கு மூன்று நாட்களுக்கு முன்னும், தீபாவளிக்கு மூன்று நாட்கள் பின்னும் மட்டும் பர்மிட்டை தளர்த்தி விருப்பம் போல் தமிழ்நாடு முழுவதும் இயக்கலாம் என்று சொல்லி கட்டணத்தை அரசே நிர்ணயிக்கலாம்....

உதாரணமாக ஜெ ஆட்சியில் தமிழக போக்குவரத்து சங்கங்கள் போனஸ் பிரச்சனையில்  இதே போல ஒரு தீபாவளியின் போது முரண்டு பண்ண தீபாவளிக்கு மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்த போது...  எந்தபேருந்தும் சென்னை வந்து பயணிகளை ஏற்றுச்செல்லாம் என்று அறிவிக்க... முதன் முதலாக சென்னை மாநகரம் தனியார் மற்றும் மினி பேருந்துகளை தனது வீதிகளில் முதல் முறையாக பார்த்து மகிழ்ந்தது...

ஆம்னி பேருந்து முதலாளிகளின் கொட்டத்தை அடக்க இதுவே சிறந்த வழி... இந்த எருமைகள் கொள்ளை அடிக்க அரசு இவர்களுக்கு மெயினான நிலத்தை ஒதுக்கி பேருந்து நிலையம் வேறு அமைத்துக்கொடுத்தது...ஆனால் இவர்கள் ஈவு இரக்கம் இல்லாமல் மக்கள் பணத்தை சுரண்டுவதை மட்டும் நிறுத்தவே இல்லை...

ஒரு டிக்கெட்1500ரூபாய்  என்றால் ஒரு குடும்பத்தில் நாம் இருவர் நமக்கு ஒருவர்  என்று அரசு கொள்கை படி வாழ்ந்தாலே கூட டிக்கெட் 4500ரூபாய் தெண்டம் அழ வேண்டி இருக்கின்றது... அப்புறம் எப்படி அது ஊருக்கு போகும் போது அந்த குடும்பத்துக்கு அது தித்திக்கும் தீபாவளியாக இருக்கும்???

சாதரணமாக விசேஷ நாள் இல்லாமல் வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு  பெங்களுருக்கு செல்ல ஆம்னி பேருந்துகளை அணுகினால் அன்று மட்டும் யானைவிலை, குதிரை விலை சொல்லுவார்கள்... அதை இதுவரை இந்த அரசு தட்டிக்கேட்டதாக எனக்கு தெரியவில்லை.. அந்த சோக கதையை பெங்களுர் டூ சென்னை செல்லும் பயணிகள்... சனி ஞாயிறு நடக்கும் கொள்ளையை கண்ணீரோடு சொல்லுவார்கள்...

எனக்கு தெரிந்து அரசே டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து டிக்கெட் அடித்து கொடுப்பதையும் அதனை ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் வாங்கி பேருந்தில் கொடுப்பது மட்டுமே ஆம்னிமுதலைகளை கட்டு படுத்த எளிய வழி என்பேன்..

நல்லவேளை இந்த வேகம் கூட தேர்தல் வெகுவிரைவில் வரும் காரணத்தால் என்று, பொதுமக்கள் முணு முணுப்பது நமது காதில் விழாமல் இல்லை.

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள். 

23 comments:

  1. உண்மை ஜாக்கி! நண்பன் ஒருவன் வெறுத்து போயி ஊருக்கே போகவில்லை இந்த வருடம்!!!!

    ReplyDelete
  2. அட நீயி இவ்ளோ அப்பாவியா??
    ஆம்னி பஸ்ஸுக்கு அர்த்தம் தெரியுமா? ஆம்னி பஸ்ஸில் தனித்தனி பயணிகளை ஏத்தவே கூடாது தெரியுமா? It is for a group of people to book the complete bus and travel - Not for Individual passengers. யாராவது ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்து டிக்கட் வாங்கியதை பார்த்திருக்கியா? (Ticket for Travel என்று அச்சிட்டு இருக்கணும்), அடிப்படையே தவறு - அதயே எந்த அரசாங்கமும் கவனிக்கல, இதப்போயி... நல்லா வருது வாயில

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  3. தொடர்ச்சி: கடலூர் காரன் தானே நீயி??
    பாண்டி டு கடலூர் நெறய அரசாங்க / தனியார் பஸ் பாத்திருப்பியே.. அந்த தனியார் பஸ்காரங்க எல்லாம் ரூட் பர்மிட் வாங்கி அந்த வழித்தடத்தில் பஸ் ஓட்டுவாங்க. அந்த பஸ்ஸெல்லாம் பேருந்து நிலையத்துக்கு வரும், டிக்கெட் கொடுப்பாங்க - இப்பொ புரியுதா வித்தியாசம் - ஆம்னி பஸ்காரங்க ரூட் அடிக்கிறதே சட்ட விரோதம்தான்..

    என்றும் அன்புடன்
    பாஸ்டன் ஸ்ரீராம்

    ReplyDelete
  4. சென்னையிலேயே பிறந்து இங்கேயே வளர்ந்து வருவதால் உங்கள் வழியை உணர முடியவில்லை... இருப்பினும் எப்போதும் உங்கள் ஆதரவாளனாக...

    ReplyDelete
  5. //இருப்பினும் இந்த எச்சரிக்கையை மதிக்காமல் நடந்து கொள்வதுதான் நமது பாலிசி...// all autos and omnibuses are connected with politicians and police... pillayaiyum killi vittu thottilaiyum aattum kadhai thaan idhu...

    ReplyDelete
  6. அப்படியா தல!

    எங்கள் ஊரில் கொழும்பு-யாழ்ப்பாணம் தனியார் சொகுசு பஸ் சேவைகள் எல்லாம் 1200/- கட்டணத்தை 900/- ஆக குறைத்திருக்கிறார்கள் தீபாவளிக்காக!

    வாழ்த்துக்கள் உங்கள் சமூக அக்கறைக்கு (நீங்க எப்பவுமே அப்படித்தானே)!

    :)

    ReplyDelete
  7. எப்படி சினிமா தியேட்டர்களில் அதிகபட்ச கட்டணமாக 120 ரூபாய் வசூலிக்கிறார்களோ,அதேபோல் அரசே பஸ்களிற்கான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும்.சரியான நேரத்தில் வந்திருக்கும் அவசியமான பதிவு இது!

    ReplyDelete
  8. //
    எனக்கு தெரிந்து அரசே டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து டிக்கெட் அடித்து கொடுப்பதையும் அதனை ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் வாங்கி பேருந்தில் கொடுப்பது மட்டுமே ஆம்னிமுதலைகளை கட்டு படுத்த எளிய வழி என்பேன்..//

    இந்த இடத்தில் ஆட்டோவுக்கு பிரிபெய்டு முறையை அறிமுகப்படுத்தியதை ஒப்பிட்டு பார்க்கலாம். அதே போல தனியார் பேரூந்துகளுக்கும் செய்தால் இவர்களின் கட்டணக் கொள்ளையை தடுக்கலாம். ஆனால் அரசு செய்யாது. ஏனென்றால், ஒரு பக்கம் போக்குவரத்து போன்ற மக்கள் நலனை பாதிக்கும் துறைகளை தனியார்மயப்படுத்த வேண்டும் என்கிறது உலக வங்கி, இன்னொரு பக்கம் இவ்வாறு அரசு கட்டுப்படுத்துவதை முதலாளிகள் எதிர்க்கிறார்கள். உலகமய பொருளாதாரக் கொள்கையின் கீழ் அரசே டீலக்ஸ் பேருந்து என கொள்ளை அடிக்கும் போது, இதுதான் கிடைக்கும்.

    ReplyDelete
  9. இங்கே கோவையிலும் இதே நிலைதான் வாங்குகிற போனஸ் பணத்தில் கையை விட்டு நேரடியாகவே எடுக்கும் அடாவடி ரௌடிகள் இவர்கள்.

    ReplyDelete
  10. //எனக்கு தெரிந்து அரசே டிக்கெட் விலையை நிர்ணயம் செய்து டிக்கெட் அடித்து கொடுப்பதையும் அதனை ஆம்னி பேருந்துகள் நிர்வாகம் வாங்கி பேருந்தில் கொடுப்பது மட்டுமே ஆம்னிமுதலைகளை கட்டு படுத்த எளிய வழி என்பேன்..//


    அதுசரி...

    இது நடக்குமா... இல்ல நடக்க விடுவாங்களா...
    கல்விக் கட்டணத்தையே இன்னும் முறைப்படுத்த முடியலை.

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இதுக்கெல்லாம் தீர்வே கிடையாது...

    ReplyDelete
  12. நெல்லைக்கும் சென்னைக்கும் 600 கிமி க்கும் மேலே. பயண நேரம் 12 மணியளவு.

    ReplyDelete
  13. தாங்கள் அடிக்கும் கொள்ளை லாபத்தில் ஒரு பங்கு அரசியல்வாதிகளுக்கு கொடுக்கும்போது, பொது மக்களுக்கு ஆரும் உதவி செய்யமாட்டார்.

    எல்லாருக்கும் பெர்மிட் என்றால், ஓட்டைக்கார்களில் ஆட்களை ஆடுமந்தைகளப்போலேற்றிக்க்கொண்டு, ஒட்டுமொத்தமாக ஜனங்கள் பலர் சாவும் விபத்துகள் உண்டாகும்.

    ReplyDelete
  14. மக்கள் எல்லாரும் லோன் வாங்கி கார் வாங்கி டியூ கட்டமாட்டோம்னு ஒரு போராட்டம் நடத்தினாத்தான் சரியாகும் ஜாக்கி!!

    ReplyDelete
  15. ஆம்னி பஸ்ஸுக்கு அர்த்தம் தெரியுமா? ஆம்னி பஸ்ஸில் தனித்தனி பயணிகளை ஏத்தவே கூடாது தெரியுமா? It is for a group of people to book the complete bus and travel - Not for Individual passengers. யாராவது ஆம்னி பஸ்ஸில் பயணம் செய்து டிக்கட் வாங்கியதை பார்த்திருக்கியா? (Ticket for Travel என்று அச்சிட்டு இருக்கணும்), அடிப்படையே தவறு - அதயே எந்த அரசாங்கமும் கவனிக்கல, இதப்போயி... நல்லா வருது வாயில
    சாரி ஜாக்கி எனக்கும் இப்பொதான் தெரியும்.

    ReplyDelete
  16. பின்னுடம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள் ..ஸ்ரீ இப்பதான் ஆம்னி பஸ் அர்த்தம் தெரிஞ்சிகிட்டேன்...மிக்க நன்றி..

    ReplyDelete
  17. இந்த வெள்ளி ஞாயிறுல பெங்களுர் சென்னை ஆம்னி பஸ் அடிக்கும் கொள்ளை அந்த ஆண்டவனுக்கே அடுக்காது..

    ReplyDelete
  18. கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தங்கி படிக்கும் தென்னக மாணவர்களை அந்த பள்ளி கல்லூரிகள் நிர்வாகங்கள் அவர்களது வாகனங்களை பயன்படுத்தி மதுரை கோவை வரை விட்டாலே கூட்டம் குறைந்து விடும்.

    ReplyDelete
  19. ஐயோ உடன்பிறப்பே நீ உன் ஊருக்கு போக எவ்வளவு கஷ்டப்படுகிறாய். கவலை படாதே வரும் தேர்தலிலும் எமக்கே ஒட்டு போடு. உடனே இலவசமாக ஊருக்கு சென்றுவர பேருந்து நியமிக்கிறேன். மறந்து விடாதே ஓட்டும், வரலாறும் முக்கியம்.

    ReplyDelete
  20. பகல் கொள்ளை என்று சொல்லுவாங்களே இதுதான்.........

    ReplyDelete
  21. பொது மக்கள் நாம் அதிக பணம் கொடுத்து போதும் வரை..இதற்க்கு தீர்வு கிடையாது..முற்றிலும் புறக்கணித்தால் தான் விடிவு வரும்..! பதிவிற்க்கு நன்றி..!

    ReplyDelete
  22. நீங்க தனியார் பேருந்து கொள்ளையை பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்க... இதை படிச்சு பாருங்க... http://mightymaverick.blogspot.com/2010/10/blog-post_13.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner