சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/(08•12•2010)


ஆல்பம்..

சென்னை மிதந்து கொண்டு இருக்கின்றது. நேற்று இரவோடு மழை விட்டு விட்டாலும் மழை ஏற்படுத்திய சுவடுகள் மறைய எப்படியும் ஒரு மாதத்துக்கு மேல் ஆகலாம். காரணம்.. அவ்வளவு தண்ணீர். இத்தனைக்கு மழை பெரிதாக பேயவில்லை என்பதே உண்மை.. ஒன்பது சென்டிமீட்டர் மற்றும்  பத்து பண்ணிரண்டு சென்டிமீட்டர்தான் பேய்ந்து இருக்கின்றது..15 நாட்கள் தொடர்ந்து தென்மாவட்டங்களில் மழை பெய்து இருக்கின்றது. ஆனால் அதனை ஒப்பிடும் போது சென்னையில் மழையின் அளவு குறைவு என்பேன்... சென்னை புறநகர் பகுதியான கேளம் பாக்கத்தில் மழையின் அளவு 17 சென்ட்டிமீட்டர் பேய்ந்தது.. சில வருடங்களுக்கு முன் மும்பையில் ஒரேநாளில் 90 சென்ட்டிமீட்டர் மழை பதிவானது அப்படி பெய்து இருந்தால் சென்னை மூழ்கி இருக்கும்.
===========================


சென்னையில் மழை பெய்த போது பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கவில்லை.. மறுநாள் மழை குறைவான போது பள்ளிக்கும் கல்லூரிக்கும் விடுமுறை விட்டனர் 1500 பேர் படிக்கும் எங்கள் கல்லூரியில் 50 பேர் மட்டுமே வந்து இருந்ததாக ஆசிரிய நண்பர்கள் சொன்னார்கள்.
===================

தென்மாவட்டத்தில்  மழையில் சாலைகள் பல இடங்களில் அடித்து செல்லப்பட்டு விட்டன.. பல தரைபாலங்கள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டன.15 நாட்களாக பள்ளிகள் விடுமுறை இரண்டு நாட்கள் மட்டுமே பள்ளி நடந்தது.. பள்ளி விடுமுறை அறிவிப்பை தொலைகாட்சியில் அறிவிக்கையில் பசங்களைவிடஆசிரியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்த்தாக எனது ஆசிரியர் தங்கை சொன்னாள்..


========================

மழையின் போது தென்மாவட்டகலெக்டர்கள் பலர் ரொம்பவும் சிறப்பாக பணியாற்றினார்கள்.. ஆனால்  எங்கள் ஊர் கடலூர் கலெக்டர்  பள்ளிக்கு விடுமுறை என்றால் முன்தினம் இரவே அறிவிக்காமல் மறுநாள் காலை பல் விளக்கி முகம் கழுவி  அதன் பறிகு பள்ளிக்கு விடுமுறை அறிவித்து இருக்கின்றார்.. இதனால் பள்ளி இருக்கின்றதா? இல்லையா? என்று தெரியாமல் பல பெற்றோர் மழயில் நனைந்து பிள்ளைகளுடன் பள்ளிவரை சென்று திரும்பி இருக்கின்றனர். அப்படி ஒரு அலட்சியம்.. மற்ற மாவட்டகலெக்டர்கள் முதல்நாள் இரவே  பள்ளி விடுமுறையை அறிவித்து விட கடலோர மாவட்டமான நம்ம ஊர் கடலூர் கலெக்டர் காலையில் அறிவித்த காரணம் என்ன என்று தெரியவில்லை.. ஒருவேளை பாண்டிச்சேரி சரக்கு காரணமோ...??
=========================================
வீராணம்  ஏறி சில வருடங்களுக்கு முன் இது போன்ற பெருமழையின் போது திறந்து விட பட்டது. அப்போது சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுபுறகிராமங்களில் ஏறி நீர் சூழ்ந்து பெரிய சேதத்தை உண்டுபண்ணியது. அப்போது மாவட்டஆட்சி தலைவராக இருந்து சுகன்தீப்சிங்பேடி இவர்கள் பொக்லைன் இயந்திரத்தில் உட்கார்ந்து கொண்டு பல உட்புறகிராமங்களுக்கு போய் வெள்ளநிவாரணபணி ஆற்றினார். அது போல இந்த முறை வீராணம் ஏறி திறந்தால் வெள்ளம் சூழும் என்று பல கிராமமக்கள் பீதியில் இருந்தார்கள்... ஆனால் 100 நாள் வேலைதிட்டத்தின் காரணமாக பல வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன இதனால் பெரும் ஆபத்து தவிர்க்கபட்டது...
====================================
இன்றோடு நாடுளுமன்றம் அமளியில் குதித்துகொண்டு இருக்கின்றது.. இன்று 19வது நாள் என்று எண்ணுகின்றேன் போகின்ற போக்கை பார்த்தால் சில்வர் ஜுப்ளி கொண்டாடிவிட்டுதான் மறுவேளை பார்ப்பார்களே போல.. தேவுடா.. ஐசா பைசான்னு ஒரு முடிவுக்கு வாங்கப்பா??
====================================
வாரனாசியில் குண்டு வெடித்து இருக்கின்றது.. வழக்கம் போல உள்துறை மந்திரி சம்பவ இடத்துக்கு விஜயம் செய்து இருக்கின்றார்..செம்டம்பர் 11வனுக்கு பிறகு அமெரிக்காவில் ஒரு பொட்டுபட்டாசு கூட வெடிக்கவில்லை என்று யாருக்காவது தெரியுமா??
============================
விக்கிலிக்ஸ் நிறுவனரை கைது செய்துவிட்டார்கள். இருந்தாலும் அமெரிக்காவின் குள்ளநரிதனத்தை வெளிபடுத்தியதை வரலாறு என்றும் போற்றும்..
===============================
மிக்சர்..
நண்பர்கள் பலர் விஜய்டிவி நிகழ்ச்சி ஏன் ஒளிபரப்பாகவில்லை என்று போனில் தொடர்புகொண்டு கேட்டனர் . அடுத்தவாரம் அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சி வரலாம் வராமலும் போகலாம்.
==========================
மன்மதன அம்பு பாடல்களில் கமல் தம்கட்டி பாடும் நீ நீலவானம் பாடல் இபோதைக்கு எனது காதல்பாடல்.. மிக அருமையான அந்த பாடலோடு கமலின் அந்த  வேண்டும் கவிதை அற்புதம்.

====================================
இந்தவார சலனபடம்... 18+
விழுந்து விழுந்து சிரிங்க...


========================
பார்த்ததில் பிடித்தது...

ஒரு விளம்பரம் இப்போது சென்னை நகர்  எங்கும் காண முடிகின்றது ஸ்ரீ பெரும்பத்தூர் அருகில் ஒரு பெரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டுகின்றது.. அத்ற்க்கான விளம்பரம் ரொம்ப சிம்பிள்.. ஒரு கை சாவி கொடுக்கின்றது இன்னொரு கை அதை வாங்குகின்றது... குட்பை ஹவுஸ்ஓனர் அம்மா என்ற இரண்டு வரி கேப்ஷன்  அற்புதம்.
==================================
வாழ்த்துக்கள்.

 எழுதுடான்னு நிறையவாட்டி சொல்லிட்டேன்.. கழுதை கேக்கவேயில்லை...
நல்லா எழுதறடான்னும்  சொல்லிட்டேன்... எப்பயாவதுதான் எழுதினான்.. ஆனா இப்ப தமிழ்மண நட்சத்திரமா இந்த வாரம் அறிவிச்சிட்டாங்க... இப்ப பயபுள்ள தொடர்ந்து எழுதுது.....

 வாழ்த்துக்கள் ஸ்ரீராம்
=============================
உயிர்மை பதிப்பகம் மூலம் நாசிம்மின் கவிதைகள் ‘தீக்கடல்’ என்ற பெயரில் தொகுப்பாக வெளிவருகிறது. நண்பருக்கு எனது வாழ்த்துக்கள். புத்தகவெளியீட்டு விழா வருகின்ற ஞாயிற்று கிழமை...  அனைவரும் வருக.

நாள் : 26/12/2010, ஞாயிறு.

இடம் : தேவநேயப்பாவணர் அரங்கம், LLA Building, அண்ணா சாலை. சென்னை.

நேரம் : மாலை 5:45 மணி.
==============================

நன்றிகள்.

அமெரிக்காவில் இருந்து போன்  பேசிய தேனி மாவட்டத்து நண்பர் சரவணன் நெடு நேரம் பேசினார்... அவர் மனைவி மற்றும் நணபர்கள் இந்த தளத்தை தொடர்ந்து வாசிப்பதாகக சொன்னார்.. தாய் மண்ணின் நிகழ்வுகள் உங்கள் தளம் மூலம் நிறைய அறிந்துகொள்ள உதவியாக இருப்பதாக சொன்னார்....சினிமாவில் இருப்பதால் உங்களுக்கு எந்த உதவி எப்போது வேண்டுமானாலும் கேளுங்கள் என்று சொன்ன அந்த அன்பு வாக்கியத்துக்கு என்  வந்தனங்கள்....

சவுதியில் இருந்து பேசி பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட ஆர்கே  நண்பன் போன்ற நண்பர்களுக்கு என் நன்றிகள்.

எனது டெஸ்க்டாப்பில் சில நாட்களாக இருக்கும் பிரச்சனையை எனது வீட்டுக்கே வந்து சரிபடுத்தி கொடுத்த  வாசக நண்பர் சேஷாத்ரிக்கு எனது நன்றிகள்.


======================
இந்தவார கடிதம்..


Hi bro,
i'm anuz frm srilanka,
everyday ur blog vaasika wait pannuven..
kaalai,maalai office'la ithu than velai..
aanaal neenga time'ku post upload pannalaati kobam varuthu...
anyway ur regular reader naan..
tamil'la type panna time illa..
manmathan ambu promo songs paarthen..
naan guess pannuren athu will smith's "Hitch" film'sa vachu eduthiruku enru..
ithayellaam perusaaka koodaathu than.. summa solli vachen...
ungaluku film vanthathum vimarsanam elutha easyaa irukum.. :P
ok
new backround super...
ta ta
tc
anuz.
(anushanth.U)
==========================
மிக்க நன்றி அனுஸ் எனக்கு நேரம் கிடைக்கும் போத எழுதுகின்றேன்...  அதனால் நேரமாற்றம் இயல்பு... இது பத்திரிக்கை அல்ல.. இருப்பினும் புதன் –ஞாயிறு சான்ட்வெஜ் மட்டும் தொடர்ந்து எழுதி வருகின்றேன்.
=======================
பிலாசபி பாண்டி

பெண்கள் மிக நெருக்கமாக இருந்தால் ..............ஹோட்டல்பில்
பெண்கள் தூரத்தில் இருந்தால்.................................... போன் பில்
பெண்கள் தூரமாகவே போய்விட்டால் ....................பார்பில்
இந்த பொண்ணுங்க சவகாசமே இப்படித்தான்.
==============================

இந்தவார நிழற்படம்..


 நம்ம மெரினா காந்தி சிலைக்கு பின்னாடி எடுத்தது.. நம்ம சப்ஜெக்ட்டு இல்லை அதான் நம்ம கேமராவுல தட்டிட்டேன்.

 ====================
நான்வெஜ் 18+

ஜோக்..1பள்ளி தோழிகள் இரண்டு பேர் சந்தித்துக்கொண்டார்கள்.  பள்ளிபடிப்பின்போது பார்த்து,, ஒருத்தி கேட்டாள்.. உங்க ஹஸ்பன்ட் என்ன படிச்சார்? எங்க வேலை பார்க்கின்றார்---? எம்பிஏ படிச்சிட்டு கால்சென்டர்ல வேலை பார்க்கின்றார்... அடுத்தவ கிட்ட கேட்ட போது அவ ரொம்ப சலிச்சிகிட்டு  பிளஸ் டூ படிச்சிட்டு அவரும் அதே வேலையைதான் டெய்லி என் வீட்ல  செய்றார்...பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

20 comments:

 1. Sandwich matrum padam nalla irukku....

  niraiya visayangalai pakirkireerkal...

  ReplyDelete
 2. வணக்கம்..ஜாக்கி பிரதர்.
  நீங்கள் தொகுத்து வழங்கும் தகவல்கள் அனைத்தும் அருமை..
  மீண்டும் மீண்டும் படிக்க தோன்றும் சிறந்த தளம்..

  என்னதான் நீங்க நிறைய விஷயங்கள் செய்தாலும் எனது
  பார்வையும் , மௌஸ்-ம் கடைசி வரிகளுக்கு சென்றுவிடுகிறது (18 + )

  இந்த வாரம் ஜோக் ரொம்ப பழசு தான்...
  நல்ல முயற்சி..

  தோழமையுடன்
  மஹாராஜா க.

  ReplyDelete
 3. அந்த 90+ சென்டிமீட்டர் மழை கூட ஒரு முழு நாளின் மழை அல்ல... காலையில் 11 மணிக்கு ஆரம்பித்து இரவு 3 மணி வரை பெய்த மழையே அது... (6 மணி நேர மழையில் சில இடங்களில் தேங்கிய தண்ணீரின் உயரம் கிட்டத்தட்ட 5 1/2அடி. என் அலுவலகம் இருந்த பகுதியில் மாலை நான்கு மணி நிலவரப்படி இருந்த தண்ணீர் 3 1/2 அடி) அப்படி சென்னையில் பெய்திருந்தால், சென்னை மட்டுமல்ல செங்கல்பட்டு வரை கூட மூழ்கி இருக்க வாய்ப்புண்டு...


  //வாரனாசியில் குண்டு வெடித்து இருக்கின்றது.. வழக்கம் போல உள்துறை மந்திரி சம்பவ இடத்துக்கு விஜயம் செய்து இருக்கின்றார்..செம்டம்பர் 11வனுக்கு பிறகு அமெரிக்காவில் ஒரு பொட்டுபட்டாசு கூட வெடிக்கவில்லை என்று யாருக்காவது தெரியுமா??//  நாலு குண்டை 10, ஜன்பத்துக்கோ, அம்மையார் சோனியா அவர்களது வீட்டிற்கோ அனுப்பி இருந்தால், இந்தியாவின் பரப்பளவு ஆப்கானிஸ்தான் வரை விரிந்திருக்கலாம்... எவர் கண்டார்...(பாகிஸ்தானை இல்லாமல் பண்ணி விட்டால், எல்லை நிச்சயமாக விரியும் அல்லவா).


  //பெண்கள் மிக நெருக்கமாக இருந்தால் ..............ஹோட்டல்பில்//  ஹோட்டல் பில் மட்டும் அல்ல... ஜவுளிக்கடை, ஐஸ்கிரீம் கடை பில், செருப்புக்கடை பில் என பல பில் எகிறிடும்...

  ReplyDelete
 4. அண்ணே, புகைப்பட கலை தொடர்பாக PiT போல வேறு ஏதேனும் தமிழ் வெப்சைட் அல்லது பிளாக் இருந்தா சொல்லுங்களேன் ...

  ReplyDelete
 5. வழ்க்கம்போலவே சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் அருமை அண்ணே,

  தொடரடும் உங்கள் பணி...
  நன்றி

  ReplyDelete
 6. //நல்லா எழுதறடான்னும் சொல்லிட்டேன்.// காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு??
  என்றும் அன்புடன்
  பாஸ்டன் ஸ்ரீராம்

  ReplyDelete
 7. "நன்றி ஹவுஸ் ஓனர் அம்மா" என்ற இரண்டு வரி கேப்ஷன் அற்புதம்.
  இல்ல ஜாக்கி அண்ணா, அது "குட் பை ஹவுஸ்ஓனர் அம்மா"
  நன்றி

  ReplyDelete
 8. //..செம்டம்பர் 11வனுக்கு பிறகு அமெரிக்காவில் ஒரு பொட்டுபட்டாசு கூட வெடிக்கவில்லை என்று யாருக்காவது தெரியுமா??//
  வெடிச்சிருந்தா இன்னும் மோசமாகி இருக்கும் தெரியாதுங்க. ஒரு குண்டு வெடிக்காம போயிருச்சு. தப்பிச்சுது. 2009ல் நடந்துச்சே ஞாபகம் இல்லையா ஜாக்கி?

  ReplyDelete
 9. பெண்கள் மிக நெருக்கமாக இருந்தால் ..............ஹோட்டல்பில்
  பெண்கள் தூரத்தில் இருந்தால்.................................... போன் பில்
  பெண்கள் தூரமாகவே போய்விட்டால் ....................பார்பில்
  இந்த பொண்ணுங்க சவகாசமே இப்படித்தான்.

  ////
  ரொம்ப ரொம்ப நெருங்கிட்டா ஆஸ்பிடல் பிரசவ பில்

  ReplyDelete
 10. இப்பொழுதெல்லாம் தினமும் குழந்தைகள் ஆர்வமாக செய்திகள் பார்க்கிறார்கள்...

  ReplyDelete
 11. அண்ணே இந்த பொடியன் பெயரையும் சொல்லி இருக்கீங்க.. நன்றி....

  மேலும் முதல் தடவை பேசும்போதே உரிமை எடுத்து சில அறிவுரையும், ஆலோசனையும் வழங்கியமைக்கு நன்றி..

  ReplyDelete
 12. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் கைது செய்யப்பட்டது எதிர்பார்க்பட்ட ஒன்று தான்.அனால் ஜூலியன் விக்கிலீக்ஸ் தொடர்ந்து இயங்கும் என்றும் அமெரிக்காவின் டவுசரை கழட்டாமல் விடமாட்டேன் என்பது போல் கொடுத்த பேட்டி கொஞ்சம் நிம்மதியாக இருக்கிறது.உண்மை இப்போது சிறையில்....

  ReplyDelete
 13. மிக்க நன்றி நண்பர்களே..

  இளா சின்னதா நடக்கறது சகஜம் இங்க பாருங்க எல்லாம் பெருசு பெருசா?? அவுங்க அலர்ட்டுக்கு அது போல எழுதினேன்.

  நன்றி ஆர்கே..

  நன்றி மகாராஜா உண்மையை ஒத்துக்கொண்டதுக்கு..


  மைக் உங்க பதிலை ரசிச்சேன்.

  ReplyDelete
 14. நன்றி வித்யாசமானகடவுள் உங்கள் ப்ம்பாய் தகவல் உபயோகமாய் இருந்தது.. நன்றி..

  ReplyDelete
 15. வழக்கம் போல் தூள் கிளப்புகிறீங்க நன்றி

  ReplyDelete
 16. http://tamil.techsatish.net/file/tamil-cinema-5/

  ReplyDelete
 17. http://tamil.techsatish.net/file/tamil-cinema-5/ ஆனாலும் அருண்பாண்டியன் அதிகமாகத்தான் கதைக்கிறார் இல்லையா ?

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner