சமீபத்தில் மியான்மரில் புரட்சி தலைவி(இவுங்க மெய்யாலுமே புரட்சி பண்ணி இருக்காங்க)சூகி 21 வருடம் வீட்டு காவலில் இருந்து விட்டு சமீபத்தில் விடுதலை செய்தது நேற்றைய பர்மிய அரசு. 21 வருடங்கள் அதே டைனிங், அதே கிச்சன், அதே டாய்லட் என வெறுத்து போய் விடும்... பர்மிய ராணுவம் குற்றவாளியாக அந்த பர்மாவின் புரட்சிதலைவியை 21 வருடங்கள் வீட்டு சிறையில் வைத்து இருந்து சில தினங்களுக்கு முன் அவரை விடுதலை செய்தது.
வீட்டு சிறை என்பது கொடுமை சொந்த நாட்டை விட்டு விட்டு வெளியேறினால் விடுதலை என்று சொல்லியும் தன் தாய் நாட்டை விட்டு ஒரு அடிகூட எடுத்து வைக்கவில்லை அந்த புரட்சிதலைவி. இதனால்தனது கணவர் இற்நத போதும் அவரின் முகத்தை கடைசிவரை பார்க்க முடியாமல் தகனம் செய்யபட்டது. தனது குழந்தைகளை விட்டும் 15 ஆண்டுகாலம் பிரிந்து இருந்தார்... காரணம் ராணுவத்தின் வீட்டுக்காவல்...
சரி ஒரு நாட்டின் புரட்சிதலைவி ராணுவ காவலில் 20 வருடம் வீட்டுக்காவலில் இருக்கலாம்.. ஆனால் ஒரு பிசினஸ்மேன் எட்டு வருசமா ஒரே ஹோட்டல் அறையில் தங்கி இருந்தா எப்படி இருக்கும்???
the Consequences of Love இத்தாலி நாட்டு படத்தின் கதை என்ன???
Titta Di Girolamo ஒரு பிசினஸ்மேன்..50 வயசு ஆள்... ஒரு நாள் இல்லை இரண்டு நாள் இல்லை எட்டு வருசம் ஒரே ஓட்டலில் தங்கி இருக்கின்றார்... அதுவிம் ஒரே அறையில்... பிரதி மாதம் 5ம் தேதி தங்கிய தொகை கரெக்ட்டா ஓட்டல் நிர்வாகத்துக்கு செக் போயிடும்...
அந்த ஆளுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?? ஆயிடுச்சி.. அப்ப பொண்டாட்டி வீட்ல இருக்கு... அதுகூட போன்ல பேசுவார்.. பிள்ளைங்க... அதுவும் இருக்கு.... அதுங்க கிட்டயும் போன்ல பேசுவார்... அந்த ஆள் என்ன மெண்டலா? அப்படி எல்லாம் இல்லை... நல்ல மனநிலையில் இருக்கும் ஆள்...சரி ஓட்டலில் எட்டுவருசமா இருக்காரே யாருகிட்டயாவது பிரன்ஷிப்போட இருப்பாபரா? அதுவும் இல்லை...
சோபியான்னு ஒரு வெயிட்டர் வெயிட்டர் மாதிரி இல்லாம செம வெயிட்டா இருக்கும் அந்த மாதிரியான பிகர்.. அது டெய்லி வந்து குட்மார்னிங் குட் ஈவினிங் சொல்லும் அதுக்கு கூட அந்த மனுசன் எந்த ரிப்ளையும் செய்யமாட்டார். அந்த பொண்ணு ஒரு நாள் கோபத்துல கேட்டே போயிடுச்சி.. யோவ் ஒரு விஷ் பண்ணா ரிப்ளை பண்ணா என்ன கொறஞ்சா போயிடுவேன்னு... அந்த சோபியா வெயிட்டர் முகத்துக்கு நேரா கத்தி கூட நோ பதில்.....
ஆனா வரத்து ஒரு நாள் பல பில்லியன் பணத்தை எடுத்துக்குன போய் பேங்கில் கட்டி விட்டு வருவார்.. வந்து ஹோட்டல் லாபியில் உட்கார்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே தெருவை வேடிக்கை பார்ப்பார்...
சோபியா வேலையை விட்டு போகம் முன் இவர் பார்வையில் இருக்கும் நிலைக்கண்ணாடி எதிரேதான்.டிரஸ் சேன்ஞ் பண்ணும்... சோபியாவின் மார்பகங்கள் தெரியும், இருந்தாலும் தலைவர் நோ ரியாக்ஷன்.
ஆனா புதன் கிழமை பத்து மணிக்கு ஹேராயின் போதை மருந்தை தனக்கு தானே கையில ஏத்திக்கும்.. இதுதான் கடந்த எட்டு வருட வாழ்க்கை.. சரி எதுக்கு இந்த எட்டு வருட ஹோட்டல் வாழ்க்கை???
டவுன்லோட் பண்ணியாச்சும்.. என்ன கருமத்துக்கு இப்படி ஒரு ஹோட்டல்ல வாழ்க்கை வாழனும்னு ஆர்வம் இருந்தா பாருங்க....
படத்தின் சுவாரஸ்யங்களில் சில..
படத்தோட போட்டோகிராபிக்காக நிச்சயம் இந்த படத்தை பார்க்கலாம்...
மிக முக்கியமா டைட்டில் போடும் போது ஒரு ஆங்கில் செட்பண்ணி வச்சிருப்பாங்க செம சூப்பர் அது..
எட்டுவருடம் அவர் வாழ்க்கையை பதிவு செய்ய வேண்டும் ஆனால் பிசினஸ்மேன் ஒரு சில வார்த்தைகள் பேசவிட்டு, சந்திக்கும் ஆட்கள் மூலமாக அந்த பிசனஸ்மேன் கதை சொல்ல வைத்து இருப்பது திரைக்கதை விறு விறுப்பு...
ஹேராயின் போட்டு அப்படியே பெட்ல சாஞ்சி, அப்டியே பின் பக்க தலையில் இருந்து முன் பக்க தலைக்கு வந்து திரும்ப பழைய பொசிஷனுக்கு வருவது ஒரு சின்ன ஷாட்டாக இருந்தாலும் அது புதுமை...
மாபியா தலைவனிடம் பேச கடைசியில் அழைத்து செல்லபடும் அந்த லென்தி ஷாட் செம அற்புதம்.
இந்த படம் ரொம்ப ஸ்லோவா இருந்தாலும் சில விஷயங்கள் ரசிகனுக்கு தெரியும் போது விறுவிறுப்பு வருவதை மறுப்பதற்கு இல்லை.
டைரக்டர் Paolo Sorrentino ஒரு ரசனையான ஆள் என்பதை படம் பார்க்கும் போதும், காட்சிகளின் அழகியலை பார்க்கும் போது மறுக்க முடியாது.
என்னதான் விருதுகள் வாங்கி இருந்தாலும் இந்த படம் பார்த்தே தீர வேண்டிய படத்தின் லிஸ்ட்டில் வர ஒரு சில புள்ளிகள் எனது பார்வையில் கொடுக்க முடியவில்லை...அதனால் இந்த படம் பார்க்கவேண்டியபடம். மிக முக்கியமாக ஒளிபதிவுக்காவும் பார்க்கவேண்டியபடம்.
படம்பெற்ற விருதுகள்..
The film won five David di Donatello awards including Best Film Best Director and Best Actor; and was nominated for the Palme D'Or at the 2004 Cannes Film Festival
==========
படத்தின் டிரைலர்
படக்குழுவினர் விபரம்.
Directed by Paolo Sorrentino
Written by Paolo Sorrentino
Starring Toni Servillo
Olivia Magnani
Adriano Giannini
Gianna Paola Scaffidi
Raffaele Pisu
Music by Pasquale Catalano
Cinematography Luca Bigazzi
Editing by Giogiò Franchini
Release date(s) 2004
Running time 100 minutes
Country Italy
Language Italian
பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....
குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.
தமிழ் பட விமர்சனம் எழுத டைம் இல்லையா தலிவா ? நேற்று நிறய படம் ரிலிஸ் ஆகிருக்கே.........
ReplyDeleteஉண்மையை சொல்லனும்னா டப்பு இல்லை..அப்படியே இருந்தாலும் மந்திரபுன்னகை நம்ம சாய்ஸ்..
ReplyDeletethanks
ReplyDeleteyennudan facebook la nearam sealavittathuku nandri
ReplyDeleteமெதுவாக நகரும் திரைகதையில்.. வசனங்கள் கூர்மையாக இருக்கும்.. நல்ல சினிமா ஆர்வலர்களுக்கான படம் இது.. வசனம் புரிந்து பார்த்தல் மட்டுமே விளங்கும்...
ReplyDeleteஎனது blogger dashboardல் உங்கள் updates கிடைப்பதில்லை... என்ன சிக்கலென்று தெரியவில்லை... எனவே இன்று உங்கள் தளத்தில் இருந்து unfollow செய்து பின்னர் மீண்டும் follow செய்திருக்கிறேன்... என்ன நடக்கிறதென்று பார்ப்போம்...
ReplyDeleteநல்ல விமர்சனம்
ReplyDelete