அயோத்தி நில வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழக்கிய தீர்ப்பு என்ன ?சூடான ரிப்போர்ட்

எல்லா சாலைகளும் ரோமை  நோக்கி என்பது போல், இன்று இந்தியாவே லக்னோ பக்கம் பார்வையை திருப்பி வைத்துக்கொண்டு இருக்கின்றன. இந்தியா மட்டும் அல்ல நமது எதிரிநாடுகள் மற்றும் உலக நாடுகள் அனைத்தும் லக்னோ பக்கம் பார்வையை திருப்பி இருக்கின்றன.


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/29•09•2010)

ஆல்பம்..
நாளை சர்ச்சைகுறிய நிலத்தின் மீதான தீர்ப்பு வர போகின்றது. இந்த தீர்ப்பு வரும் காரணத்தால்தான் எந்திரன் பட ரிலிசையும் தள்ளி வைத்தது சன்பிக்சர்ஸ். நாளை தீர்ப்பு வர போகின்றது.. மத்திய அரசு அனைத்து மொழி பத்திரிக்கைகளிலும் அமைதி  காக்க வேண்டும் என்று கெஞ்சிகொண்டு இருக்கின்றது. என்னை பொறுத்தவரை அந்த சர்ச்சைக்குறிய நிலத்தின் தீர்ப்பு இப்படித்தான் இருக்க வேண்டும்… அந்த இடத்தை மத்திய அரசின் தடை செய்யபட்ட இடமாக அறிவிக்க வேண்டும். யாருக்கும் உரிமை இல்லை என்று சொல்வதுதான் எனக்கு தெரிந்து சரி என்று படுகின்றது.


பாட்டியின் சுருக்கு பைகள். (கால ஓட்டத்தில் காணமல் போனவைகள்…)


எனக்கு இரண்டு பாட்டிகள். ஒருவர் அம்மாவை பெற்றவள், அடுத்தவர் அப்பாவை வளர்த்தவள். அப்பாவை பெற்று கொஞ்ச நாளில் பாட்டி இறந்து போய்விட்டதாகவும், பாட்டியின் உடன்பிறந்த தங்கை சின்னபாட்டி அப்பாவை வளர்த்ததாக சொல்லுவார்கள்.


(MULLUM MALARUM)முள்ளும் மலரும் ரஜினியின் நடிப்புக்கான மகுடம்.

எனது வலைப்பூவில் முதல் முறையாக ரஜினி படத்துக்கு நான் எழுதும் விமர்சனம் இந்த படம்தான்…

ரஜினி நடித்த திரைபடங்களில்  பார்த்தேதீரவேண்டியபடங்கள் என்று ஒரு லிஸ்ட் எடுத்தால் அது ஒரு சில படங்களை மட்டுமேசுட்டிக்காட்டும்.ரஜினி நல்ல நடிகர்.. அவர் மீது வெறியனாக இருந்த போது இதே முள்ளும் மலரும் படத்தை நான் மதிக்கவில்லை… ஏன் சீன்ட கூட இல்லை.. ஒரு பைட்டு இல்லை. ஒரு டான்ஸ் இல்லை இதெல்லாம் ஒரு படமா என்று பள்ளி காலத்தில் தூற்றி இருக்கின்றேன்…மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/26•09•2010)

ஆல்பம்..
ராஜராஜசோழன் தமிழ்நாட்டு ராஜா.  அவனின் மிச்சம் இன்றும் இருக்கின்றது. 1000 ஆண்டு  கழித்தும் இன்னும் அந்த கம்பீரம் குறையாமல் இருக்கின்றது.. எனக்கு தமிழக கோவில்களில் எனக்கு ரொம்பவும் பிடித்த  கோவில் தஞ்சை பெரிய கோவில்தான்…


சென்னை வடபழனி முருகன் கோவில், ஒரு பார்வை…


அண்ணன் உண்மைதமிழனை விட அதிகம் என் வீட்டில் உச்சரிக்கபடும் வார்த்தை, அப்பனே முருகா ! இந்த வார்த்தையை  என் அப்பா சொல்லாத நாள் இல்லை... அப்பா தீவிர முருகபக்தர். சின்னவயதில் இருந்தே முருககடவுள் மேல் என் வீட்டு நபர்களுக்கு தீவிர பக்தி உண்டு.


ஒரு படபிடிப்பும், சில வருத்தங்களும். (சிறுகதை) சினிமாகதைகள் 2

 சினிமா கதைகள் வரிசையில் இது இரண்டாவது கதை.. போட்டோகிராபர் மோகன் கதைக்கு நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி…அந்த கதை வளவள என்று இருப்பபதாகவும் அதனை சுருக்கி இப்படித்தான் இருக்க வேண்டும் என்று கூட நண்பர்கள் பின்னுட்டத்தில் சொல்லி இருந்தார்கள்… நான் குமுதம் பத்திரிக்கையில் ஒரு பக்க கதை எழுதவில்லை.. நான் எழுதும் கதைகளில் நிறைய டிடெயில் மற்றும் நான் உற்றுபார்த்த பலவிஷயங்கள் இடம் பெற வேண்டும் என்று நினைக்கின்றேன்..


டேப்ரிக்கார்டர் கேசட் என்கின்ற ஆடியோ கேசட்… கா..ஓ..கா.. போனவைகள்…


என்  வீட்டில் பாடல் கேட்க வேண்டும் என்றால்  ஒரு பிலிப்ஸ் ரேடியோ அப்போது என் வீட்டில் இருந்தது… அதில்தான் 80களில் பாடல் கேட்போம்… இப்போது போல் எந்த புது படத்தின் பாடல்களும் அப்போது உடனே ரேடியோவில் ஒளிபரப்பமாட்டார்கள்… 3 வருடத்துக்கு பிறகுதான் அந்த பாடல்  ஒளிபரப்பபடும்… இதுதான் அப்போதைய தலைஎழுத்து…..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/22•09•2010)

ஆல்பம்..

நல்ல வேலை பாலம் காமன்வெல்த் போட்டி நடக்கும் போது இடிந்து விழவில்லை... விழுந்து இருந்தால் சர்வதேச அளவில் நம்ம மானம் கப்பலேறி இருக்கும்.. அந்தளவுக்கு ஊழல் மிதமிஞ்சி போய் இருக்கு என்பது நன்றாக தெரிகின்றது....
==========================

சில இன்பாக்ஸ் ஜோக்ஸ் மற்றும் பீலிங்ஸ்

காய படுத்தி காணமல் போகும் காதலை விட…

காரி துப்பினாலும் டிரீட் கேட்கும் நட்பே சிறந்தது……

நண்பேன்டா……

======================

அன்புள்ள அம்மாவுக்கு..!

அன்புள்ள அம்மாவுக்கு.. 

ஜாக்கி எழுதிக் கொள்வது...!

உனக்கு இன்னைக்கு திவசம். நீ எங்களையெல்லாம விட்டுப் போயி எப்படியும்  பதினைஞ்சு வருசத்துக்கு மேல இருக்கும். நான் சொன்ன கணக்கு தப்பாக்கூட இருக்கலாம்.. கிருஷ்ணர் சொன்னதுபோல நான் மறந்தால் அல்லவா, உன்னை நினைப்பதற்கு.. ஆனாலும் அம்மா.. இன்று உனக்கு திவசம்.


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/19•09•2010)

ஆல்பம்..
சமீபத்தில் தமிழகத்தில் மோசமான சாலைகள் பற்றி அனைத்து பத்திரிக்கைகளும் ஆளும் கட்சியை கிழி கிழி என்று கிழிக்க.. இப்போது அரசுக்கு பயம் வந்து ரூபாய் ஆயிரம் கோடி செலவில், எல்லா ஊர் நகராட்சி, போருராட்சி, கிராமம் என பாகு பாடு இல்லாமல் எல்லா சாலைகளையும் போட போகின்றார்களாம்..  எல்லா சாலைகளையும்  அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள்  போட்டு முடிக்க திட்டமாம்... இந்த ஞானோதயத்துக்கு தேர்தல் காரணத்தை சொன்னாலும்... ரோடு போடாமல்  ஆளும் கட்சி தேர்தலை  சந்தித்தாலும் நாம் யாரும் எதையும் கேட்க முடியாது என்பதே இந்தியாவின் ஜனநாயக  உண்மை.... என்ன நான் சொல்லவது???


(ANTI CHRIST-2009) 18++ உலகசினிமா/டென்மார்க்... காமத்தின் உச்சம், குழந்தையின் மரணம்???

எச்சரிக்கை.... இந்த படத்தின் பதிவை மட்டும் பொது இடத்தில் படிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றேன்...
நீங்கள் எதாவது ஒரு வேலை செய்து  கொண்டு இருக்கின்றீர்கள்... உதாரணத்துக்கு கார் ஓட்டிக்கொண்டு  இருக்கினிறீர்கள்... செல்போனில் கால் வருகின்றது என்னசெய்வீர்கள்..? ஒன்று காரை ஓரம் நிறுத்தி கால் அட்டென்ட் செய்வீர்கள்... அல்லது காரை ஓட்டிக்கொண்டே பேசுவீர்கள்...


(THE DISAPPERANCE OF ALICE CREED-2009) 15+ உலகசினிமா/ இங்கிலாந்து... மிக நேர்த்தியாய் ஒரு பெண் கடத்தல்

சமீபத்தில் ஆந்திராவில் நடந்த  அந்த கொடூர கடத்தல் கொலை பத்திரிக்கையில்  எல்லோரும் படித்த செய்திதான்.. சொத்துக்காக ஒரு சிறுமியை கடத்தி அடுப்பில் உயிரோடு எறித்ததும் அந்த சின்ன பெண்ணின் போட்டோவை பார்த்து விட்டு நாம் எல்லோரும் பரிதாபபட்டதும் நம் நினைவுக்கு வரலாம்...


போட்டோகிராபர் மோகன்... (சிறுகதை)

பொதுவாக சிறுகதை நிறைய எழுதவேண்டும் என்பது எனது ஆசை என்றாலும் நேரமின்மைதான் முதல் காரணமாக இருக்கின்றது...பல்வேறு இடங்களில் கிடைக்கபெற்ற கருக்களை அப்படியே எழுதாமல் சினிமா பின்னனியில் வைத்தும்,  ஒரளவுக்கு அதன் தொழில்நுட்பம் சார்ந்தும் எழுதலாம் என்று நினைக்கின்றேன்...ஒரு சின்ன பார்ட்டிலாவது இது போலான கதைகள் சினிமாவை சம்பந்தபடுத்தி இருக்கும்... இதற்கு லேபிள்... சினிமாகதைகள் என்று வைத்து இருக்கின்றேன்..தொடர்ந்து எழுத நேரமும் உங்கள் வரவேற்பும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்
உங்கள்
ஜாக்கிசேகர்
=====================

சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/15•09•2010)

ஆல்பம்..
சென்னையில்,தலைமைசெயலகம், பெரிய  நூலகம், பெரிய  பாலங்கள்  எல்லாம் மாயாபஜார் ரங்காராவ் கை அசைப்பில் உருவானது போல, சடுதியில் கட்டி  முடிக்கபட்டு விடுகின்றன... ஆனால் பல லட்ச மக்கள் பயண்படுத்தும் மீன்சுருட்டி அருகே இருக்கும் அணைக்கரை பாலம் இன்னும் கட்டவே ஆரம்பிக்க வில்லை.. ஆய்வு நிலையில் அப்படியே உள்ளது... பல லட்சம் மக்கள் சுற்றிக்கொன்டு செல்கின்றார்கள்..  பணவிரயம் பயணநேரம் எல்லாம் கோவிந்தா......


(KOMARAM PULI ---TELUGU/2010 )எஸ் ஜே சூர்யாவின் தெலுங்கு ஆக்ஷன்படம்...

தமிழ் இயக்குனர் எஸ்ஜேசூர்யாவின் இரண்டு வருட கால உழைப்பு... இந்த தெலுங்கு படத்தின் மீதான ஈடுபாட்டின் காரணத்துக்காக அவர் தமிழில் எந்த படமும் செய்யவில்லை...அவரின் முதல் ஆக்ஷன் பேக்... இந்த கொமரபுலி என்ற தெலுங்கு படம்


கமலஹாசன் பதிவின் பின்னுட்டங்களுக்கான எதிர்வினையும், என் விளக்கமும்...

பெப்சி பாட்டிலை திறந்தால் வேகமாக பொங்குமே அது போல எல்லோரும் பொங்கி விட்டார்கள்... பக்கம் பக்கமாய் எல்லோரும் தங்கள் தரப்பை சொல்லிவிட்டார்கள்...அனைவருக்கும் தனிதனியாக பின்னுட்டத்துக்கு பதில் போட முடியாது என்ற காரணத்தால் இந்த தனிபதிவில் சில விளக்கமும் சில விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்....


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/12•09•2010)

ஆல்பம்...

எந்திரனின் டிரைலர் நேற்று வெளியிடபட்டது...நிறைய பேரிடம் என்னிடம் இருந்த மகிழ்ச்சி அப்படியே காண முடிந்தது... இந்த படத்தை பற்றி நிறைய எதிர்பார்ப்பு இருக்கின்றது....மன்னன் படம் வரையில் ரஜினி நடித்த முதல் காட்சி பார்த்து விட்டு விசில் அடிக்கும் ரகம் நான்... இப்போது அப்படி இல்லை..  நேரம்கிடைக்கும் போது பார்க்கின்றேன்.... பள்ளி படிக்கும் போது ரஜினிக்காக சண்டை போட்டு உதடு கிழித்துக்கொண்ட அக்மார்க் தமிழன்நான்...


பாஸ் என்கின்ற பாஸ்கரன்...கலக்கலோ கலக்கல்....

சிவா மனசுல சக்தி படத்தை கொஞ்சம் நாள் கழிச்சி பார்த்தப்ப.. அடடா இந்த படத்தை எப்படி நாம மிஸ் பண்ணோம் என்று பீல் பண்ணினேன்... காரணம் ஆரம்பம் முதல் முடிவு வரைக்கு, ஒரு ஊடல் பீலிங் மற்றும் காதலையும் மிக அழகாக எதார்த்தமாக சொல்லி இருந்தார்கள்...எல்லாவற்றையும் விட அந்த படத்தின்  காமெடி ரொம்பவும்  பிடித்து இருந்தது...


கமலும் தமிழ் சினிமா இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா?

கமலும் தமிழ் சினிமா  இயக்குனர்களும் காப்பி அடிப்பவர்கள்தானா ?இந்த உண்மையை அப்படியே ஒத்துக்கொள்ளவா?? ஆம் அவர்கள் காப்பி அடிப்பவர்கள்தான்... முதலில் ஒருவிளக்கம் இது கமலுக்கு துதிபாடும் பதிவு அல்ல... கமலின் பல கொள்கைகளுக்கு எனக்கே உடன்பாடு இல்லை...அதே போல் இந்த பதிவில் சாதி சாயத்தை  நான் தொடபோவதில்லை.....எனக்கு  தெரிந்த விஷயங்களை பகிர்ந்துக்கொள்கின்றேன்...


பத்து லட்சம் ஹிட்ஸ்களை கடந்து விட்ட எனது வலைப்பூ...உங்களுக்கு என் நன்றிகள்...


எனது வலைப்பூ பத்து லட்சம் ஹிட்ஸ்களை நேற்று கடந்து இருக்கின்றது...தமிழில் பத்து லட்சத்தை தாண்டிய வைலைப்பூவை விரல் விட்டு எண்ணிவிடலாம்...அந்த பத்து விரல்களுக்குள் எனது வலைப்பூவும் ஒன்று...நேற்று பெங்களுர் நண்பர் ஜெய் இந்த  செய்தியை என்னிடத்தில் பகிர்ந்து கொண்டார்....குழுவாக இல்லாமல் தனி நபராக பத்து லட்சத்தை ஒரு பிராந்திய மொழியில் கடப்பது என்பது பெரிய விஷயம்...அதற்கு காரணமான உங்களுக்கு என் நன்றிகள்..


என் கம்யூட்டருக்கு தெரியும் நான் எதாவது பதிவு எழுத ரெடி ஆகும் பட்சத்தில் எதாவது கோக்கு மாக்கு செய்து என்னை டென்ஷன் செய்வதுதான் அதுக்கு வேலை....காலையில் அப்படி ஒரு கோக்கு மாக்கு வேலையை செய்து விட்டு தேமே என என் கம்யூட்டர் ஒன்னும் தெரியாத பாப்பா போல நடிக்க... நான் நண்பர் வடிவேலுக்கு போன் செய்ய, அவருக்கு வேலை இருப்பதாகவும் சாயந்திரம் வந்து பார்ப்பதாக சொன்னார்.... அதே நேரத்தில் நண்பர் சதந்திர மென்பொருள் பிரபு சரியான நேரத்தில் உதவி செய்தார்... நண்பர்கள்  இருவருக்கும் என் நன்றிகள்...

எழுத வந்த இரண்டு வருடத்தில் பத்து லட்சம் ஹிட்சை தாண்டி இருப்பது என்பது சாதாரண விஷயமாக எனக்கு தோன்றவில்லை...குழுவாக இல்லாமல் தனி நபராக விரல் விடும் எண்ணிக்கையில், நானும் ஒருவனாகி இருப்பது எனக்கு சந்தோஷத்தை தருகின்றது.....நடுவில் இரண்டு படத்துக்கு வெளியூர் படடப்பிடிப்புக்கு, இரண்டு மாதகாலம் போய் விட்டதால் நடுவில் வலைபக்கமே வர முடியவில்லை...

சென்னை லோக்கலில் படப்பிடிப்பின் போது இரவு 8மணிக்கு வந்து....சாப்பிட்டு இரவு 12 மணி வரை எழுதி போஸ்ட் செய்து... காலையில் 5 மணிக்கு எழுந்து படப்பிடிப்புக்கு போய்... திரும்ப இரவு வீட்டுக்கு வந்து கண் விழித்து எழுதி என இப்படித்தான் நான் பதிவுகள் எழுதினேன்... அந்த உழைப்புக்கான பலன்தான் இது..

முதலில் இந்த பதிவுலகம் எனக்கு நேர விழுங்கியாகவே பட்டது... ஆனால் ஒரு வருடத்தில் அது என்னை வேறு ஒரு தளத்துக்கு அழைத்து சென்றது...கடினமான வேலைபளுவுக்கு மத்தியில் நான் எழுத காரணம்.....என்னோடு மனம் விட்டு பேசுவது போல் எழுதி வரும் கடிதங்களை , சில பின்னுட்டங்களை பார்க்கும் போதும், எனக்கு வரும் கைபேசி அழைப்புகளில் பேசும் போதும் இன்னும் கண்விழித்து எழுதலாம் என்ற உத்வேகத்தை கொடுக்கின்றது...

முன்பை விட இப்போது நான் மாறி இருக்கும் விஷயம் ஒரு போஸ்ட் போட்டு விட்டு... எதையாவது நோண்டிக்கொண்டு இருப்பேன்...பின்னுட்டத்துக்கு எதிர்பார்த்து காத்து இருப்பேன்... அதனால் நிறையநேரம் அபிட் ஆயிருக்கின்றது.. ஆனால் இப்போது எல்லாம் போஸ்ட் போட்டு விட்டு எல்லா திரட்டியிலும் இணைத்து விட்டு சட்டென கம்யூட்டரை ஆப் செய்து விடுகின்றேன்...

இருப்பினும் இது என்க்கு சந்தோஷமே...இந்த வெற்றிக்கு காரணம் நீங்கள்தான்...  வாசிக்கும் உங்கள் ஒவ்வோருவருக்கும் தனித்தனியான என் நன்றிகள்...இந்த இரண்டு வருட காலத்தில் என் வலைப்பெயர் ஒரளவுக்கு பிரபலமாயிருக்கின்றது....

ஒரு வருடத்துக்கு முன் எல்லாம் என்னை ஜாக்கி என்று அழைத்தால்... கொஞ்சம் லேட்டாகதான் ரியாக்ஷன் தருவேன்..
 ஆனால் இப்போது அப்படி இல்லை...உடனே சட்டென ரியாக்ஷன் செய்கின்றேன்..அந்த பெயரை கூப்பிடும் போது எனக்கு ஒரு சந்தோஷம் கிடைக்கின்றது...பொதுவான சில நண்பர்கள் என்னை தல என்று அழைக்கின்றார்கள்...இந்த தறுதலைக்கு வந்த வாழ்வு அப்படி.....

தமிழ்மணம்,இன்டலி மற்றும் எல்லா திரட்டிகளிலும் எனக்கு தவறாமல் ஓட்டு போடும் எல்லா நண்பர்களுக்கு மற்றும் 654 சொச்ச பாலோயர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள்...இனி தைரியமாக சொல்லலாம் பத்து லட்சத்தை தாண்டிய தனி நபர் வலைப்பூ என்று.....இதை சாத்தியமாக்கிய உங்களுக்கு என் நன்றிகள்..

சில நேரங்களில் கோபம் கோபமாக வந்தாலும் பொறுத்துக்கொண்டு எழுதி முடிக்கும்வரை காத்து இருந்து, சண்டை போடும் என் மனைவிக்கு இந்த நேரத்தில் நன்றி சொல்வது பொறுத்தமாக இருக்கும் என்று நினைக்கின்றேன்..அவரின் பொறுமைக்கு என் நன்றிகள்...பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்..


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்/08•09•2010)

ஆல்பம்....
இன்று காலை நடிகர் முரளி இறந்து விட்டார்...ஹார்ட் அட்டாக்கில் இன்று காலைஅவர் உயிர் பிரிந்து விட்டது.. முரளி நடித்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது... இதயம் மற்றும் வெற்றிக்கொடிகட்டு.... தனது மகனை ஹீரோவாக பானா காத்தாடி படத்தில் அறிமுகபடுத்தி அந்த நிறைவோடு இறந்து போய் இருக்கின்றார்... இன்னும் காலேஜ் பையன் போல அதே பாத்திரத்தில் நடித்துக்கொண்டு இருக்கின்றார் என்ற பொறாமை சக நடிகர்களுக்கு நிறைய உண்டு...பூந்தோட்டம என்று ஒரு படம் முரளி நல்ல நடிகன் என்று சொல்ல அந்த ஒரு படம் போதும்....


சென்னை ஆட்டோ கட்டண கொள்ளை... சென்னையில் (தமிழ்நாட்டில்) வாழ பழக...(பாகம்/9)

 சாரு விகடனில் எழுதிய கட்டுரையில்... ஒரு கணவன் மனைவி தனது குழந்தையுடன் இரு சக்கரவாகனத்தில் செல்லும் போது குடி போதையில் கார் ஓட்டிய ஒருவன் அவர்கள் மீது மோதினான்....அந்த விபத்து பற்றிய செய்தி கூட பலர் அறிந்ததுதான்...அந்த குடும்பம் பெரிய விபத்தில் இருந்து மீண்டு வந்து இருக்கின்றது...


(GAYAM-2 TELUGU) புதிய தெலுங்குபட திரைவிமர்சனம்...

தெலுங்கு படங்களை இப்போது தொடர்ந்து பார்த்து வருகின்றேன்....சப் டைட்டில் இல்லாமல் புரிந்து கொள்ளவும்..தியேட்டரில்பார்க்கின்றேன்... படங்கள் நன்றாகவும் புரிகின்றது....கஜபதிபாபுவை எனக்கு அனுக்க குண்டோ ஒக்க ரோஜு படத்தில், அந்த ஹீரோவை பிடித்தது.. ஏன் அந்த படமே எனக்கு ரொம்பவும் பிடித்தது...நல்ல திரில்லர்... அந்த படம் பார்த்தே  தீர வேண்டியபடம்... அந்த படம் பற்றி வாசிக்க இங்கே கிளிக்கவும்


மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/ 05•09•2010)

ஆல்பம்...

இன்று ஆசிரியர் தின விழா.... கல்லூரியில் பணியாற்றும் போது, மாணவர்கள் கேக் வாங்கி கட் செய்து, எங்களோடு சந்தோஷமாக கழித்த தினங்கள் நினைவுக்கு வருகின்றது...ரொம்ப நெருக்கமான மாணவ,மாணவிகள், பைவ்ஸ்டார், மற்றும் கேட்பரிஸ் கொடுத்து தனிப்பட்ட முறையில் வாழ்த்துவார்கள்...கடந்த பல வருடங்கள் செப்டம்பர் 5ல் கல்லூரி பேருந்தில்  ஏறியதில் இருந்து  வீடு வரும் வரை ...எதிர்படும்எல்லோரும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் சொல்வார்கள்...


(BEHIND ENEMY LINES-2001)எமன்கிட்ட சிக்கறதும், எதிரிகிட்ட சிக்கறதும் ஒன்னுதான்...

எங்கள் ஊரில் ஒரு திருடன் மாட்டிக்கொண்டான்... அவனுக்கு அன்னைக்கு ஏழரை போல...முதலில் அவனை  கரண்டு மரத்தில் கட்டி வைத்தார்கள்... அதன் பிறகு ஊரில் தொலைந்து போன எல்லா பொருளுக்கும், அவனை குற்றம் சாட்டிவெளுத்துக்கட்டினார்கள்...


ஒரு ரியல் டென்சன் ஜோக்....

முதலில் கொஞ்சம் பேசுவோம்... அப்புறம் ஜோக் படிப்போம்.....


சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(புதன்=01•09•2010)

ஆல்பம்...

இன்று  கிருஷ்ணஜெயந்தி அரசு விடுமுறை... பள்ளி படிக்கும் போது... இந்த ஒரு நாளை  நாங்கள் போற்றுவோம் ..காரணம் பள்ளி விடுமுறை... கிருஷ்ணணை பற்றிய பாடல்களில்...கோகுலத்தில் பசுக்கள் எல்லாம் கோபாலன் குரலை கேட்டு என்ற அந்த பாடல்  எனக்கு மிகவும் பிடித்த பாடல்..அந்த  கோகுலனின் பெயரை சொல்லி மூடி வைத்த பாத்திரத்தில் மூன்று படி  நெய் இருக்குது.. ராமாயி என்ற அந்த பாடலும், அந்த பாடலில் இடையில் வரும் புல்லாங்குழல் இசையும் அற்புதம்....
============


Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner