
எத்தனை முறை பேசி இருப்போம் எத்தனை முறை கெஞ்சி கூத்தாடி இருப்போம், அவர் அப்படித்தான் நேற்றுவரை சொன்னார், இலங்கை இறையான்மைக்கு வேட்டு வைக்கும் விடுதலைபுலிகளை ஒழிப்போம் என்றார் ..
எல்லோரும் சொன்னார்கள் புலிகள் வேறு மக்கள் வேறு அல்ல இந்த போராட்த்தை புலிகள் நடத்துவதே மக்களுக்காத்தான் என்று மன்றாடினோம் . கிஞ்சித்தும் காது கொடுத்து கேட்காமல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் பிரபாகரனை பிடித்து இந்தியாவிடம் ஒப்படைக்கவேண்டும் என்றார் சூளுரைத்தார் ...
கலைஞர் எதாவது தீர்மானம் நிறைவேற்றினாரா? அல்லது பிரபாகரனை கைது செய்ய வேண்டும் என்று பத்திரிக்கையில் பேட்டி ஏதாவது கொடுத்தாரா? அவர் தமிழன துரோகிதான்....
போர் நிறுத்தம் வேண்டும் என்று மனித சங்கிலி நடத்தியவர் கலைஞர் அதனை பார்த்து எள்ளி நகையாடியது யார், மனசாட்சியோடு பதில் சொல்லுங்கள், அதை விட எறியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் போரில் மக்கள் இறப்பது இயல்பு என்றார் மறுநாளே நான் அப்படி சொல்லவில்லை என்றும் சொன்னார்....
ஆமாம் கலைஞர் துரோகிதான்....
இதுவரை எதிர்கட்சி தலைவராக இருந்த ஜெ இதுவரை இலங்கை பிரச்சனை பற்றி பேசவில்லை குறைந்த பட்ச கண்டனம் கூட தெரிவிக்கவில்லை...இப்போது தேர்தல் நேரத்தில் வருத்தப்டுகின்றார்...
ஈழத்தமிழர்களுக்காக இரண்டு முறை ஆட்சியை இழந்தவர் கலைஞர் ... ஆமாம் அவர் துரோகிதான்..
ஒரே ஒரு முறைதான் புலிகளுக்காக பேசினார் வைகோ தேசிய பாதுக்காப்பு சட்டம் போட்டு ஒன்றரை வருடம் ஈழத்துக்காக எப்போதும் குரல் கொடுக்கும் அந்த நண்பரை கம்பி எண்ண வைத்தார்.
பாசிச வெறிப்பிடித்த ஜெயலலிதா என்று கர்ஜித்தார்..சீமான் போல் மூன்று மாதம் நான்கு மாதம் அல்ல ஒன்றரை வருடம் கொசுக்கடியில் உள்ளே இருந்தார் ....
ஆமாம் கலைஞர் தமிழின துரோகி மற்றும் நாடகம் ஆடுபவர்தான்.....
பிரபாகரனை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றவருடன் வைகோ கூட்டு வைத்தார்
அமாம் கலைஞர் இன துரோகிதான்
நேற்று வரை மத்திய அரசில்அங்கம் வகித்து விட்டு இன்று ஜெவுடன் கூட்டு வைத்துஈழப்பிரச்சனையில் கலைஞர் துரோகம் செய்து விட்டார் என்று சொல்கிறார்...
ஆமாம் கலைஞர் தமிழின துரோகிதான்.....
அன்று வைகோ கைதுக்கு பிறகு யாரும் பேசவில்லை மீறி பேசியவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளே தள்ளப்பட்டார்கள் யாரும் பேசவில்லை பேசவும் பயம். ஏன் அம்மாவாசை இரண்டாம் நாள் என்று கவிஞர் தாமரையால் வருனிக்கப்ப்ட்ட கலைஞர் ஆட்சியில் கூட இந்தியாவில் விடுதலைபுலிகள் இயக்கம் தடை செய்யப்ட்ட இயக்கம்தான்...
ஆனால் எத்தனை பேர் பேசினார்கள் முறையே அமீர், சீமான், தாமரை,சுபவீ, கொளத்தூர் மணி, நாஞ்சில் சம்பத், என்று எத்தனை பேர் வாய் கிழிய பேசினார்கள் என்ன நடந்தது எல்லோருமா? கைது செய்யப்ட்டார்கள் அவர்கள் மீது வெளிவரமுடியாத வழக்குகளா? கலைஞர் போட்டார்
சீமான்,நாஞ்சில் சம்பத் மட்டும் கைது செய்யப்பட்டார்கள் இரவரும் விடுதலை ஆனார்கள் வெளியே வர முடியாத வழக்கு போட்டு உள்ளே தள்ளுவது பெரிய விஷயம் இல்லை...
ஆம் கலைஞர் தமிழின துரோகிதான்
அதை எல்லாம் விடுங்கள் இறந்த முத்துக்குமார் உடலில் புலிக்கொடி போர்த்தப்பட்டது புலித்தலைவர் பிரபாகரன் போட்டோ வெகு காலத்துக்கு பிறகு தமிழகத்தில் வெளியே வந்தது அதனை ஜெ வாக இருந்து இருந்தால் அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருப்பார்...
ஊர்வத்தில் பிரபாகரன் போட்டோ எடுத்து வந்தவர்கள் எல்லாம் பொடாவில் கைது செய்யப்பட்டு உள்ளே போய் இருப்பார்கள் என்பதே நிதர்சன உண்மை....
ஏன் முத்துக்குமார் பினம் அன்றே புதைக்கப்பட்டு அப்படி ஒரு நபர் இருந்தான் என்று வெளி உலகத்துக்கு தெரியாத அளவுக்கு செய்து இருப்பார்
அம் கலைஞர் நடிப்பவர்தான்....தமிழின துரோகிதான்
எந்த புரட்சி பண்ணி வந்தார் அவர் ? அவரை புரட்சித்தலைவி என்று சொல்லுகிறீர்கள் வள்ளுவர் கோட்டம் மற்றும் ஐயன் வள்ளுவருக்கு சிலை வைத்தான் அது போதும் அதனால்தான் அவன் தமிழின தலைவர் என்று பெயர் போட்டுக்கொள்ளலாம் தப்பில்லை ....
எந்த மூச்சியை வைத்துக்கொண்டு இப்போது மட்டும் காப்பாற்றங்கள் என்று சொல்லுகிறீர்கள் அன்று தொண்ட்ர் நிதியில் 50 ஆயிரம் ருபாய் கொடுத்ததை கூட பிரபாகரன் வாங்கவில்லை (ஜுவி செய்தி) ஆனால் இன்று கூட கலைஞர் பிரபாகரன் என் நண்பர் என்று சொல்லுகிறார்....
அமாம் கலைஞர் துரோகிதான்.....
கலைஞரோடு இப்போது இருப்பவர்கள் ஈழத்துக்காக பல கள போராட்டங்கள் நடத்திய சுபவி, திருமாவளவன் போன்றவர்கள்தான்... ஆம் கலைஞர் துரோகிதான்
நேற்றுதான் அவருக்கு ஈழத்மிழர்கள் படும் துயரம் தெரிந்ததாம் அதை இப்போதாவது சிடி கொடுத்து புரிய வைத்த சாமியார் ரவிசங்கர் அவர்கள் கோடான கோடி நன்றிகள்....
இப்போது ஜெ சொல்லி விட்டார் தனி ஈழம் மட்டுமே தீர்வு என்று சொல்லி இருக்கின்றார் இந்த தேர்தலில் தமிழ் இன துரோகிகள் கலைஞர், திருமா போன்றவர்கள் தோற்க்கட்டும் அம்மா வரட்டும் தனி ஈழம் மலரட்டும் சந்தோஷம்.. வரவேற்க்கின்றோம்...
கலைஞர் புலிகளை கண்முடித்தனமாக ஆதரித்ததும் இல்லை எதிர்த்து்ம் இல்லை அதனால் கலைஞர் துரோகிதான் நாடகம் நடத்துபவர்தான்....
கலைஞர் மீது எனக்கும் கோபம் இருக்கின்றது காங்கிரஸ் மீதும் அதை விட கோபம் இருக்கின்றது. உங்கள் கோபத்தை காங்கிரஸ் மீது காட்டுங்கள்...
150நாள் எஸ்டேட்டில் போய் ஓய்வெடுத்து விட்டு வரவில்லை எப்போதும் செய்திகளில் அறக்கையில் இருக்கும் அந்த 85 கிழவன் தமிழின துரோகிதான், ஆம் நீங்கள் சொல்வது போல் அவர் தமிழர்களுக்காக என்ன செய்தார், ? அவர் குடும்பத்தினர் மட்டும் வளர்ந்ததை தவிர ?
சொல்லுங்கள் அதை தவிர உங்களால் என்ன செய்ய முடியும்.... நல்லவேளை தாமரை முதல்நாள் என்ற சொல்லாமல் இரண்டாம் நாள் என்றார் பரவாயில்லை அந்த அளவுக்காவது பெயர் வாங்கி வைத்து இருக்கின்றாரே?

ஒரு கதை நினைவுக்கு வருகின்றது தினமும் பிச்சைக்காரனுக்கு ஒரு பெண் சோறு போட்டால் ஆனால் பக்கத்து வீட்டுக்கார பெண் அந்த பிச்சைகாரனுக்கு எச்சில் கையில் கூட காக்கா ஓட்டாதவள்..
ஒருநாள் தினமும் பிச்சை போடுபவளுக்கு உடல்நிலை சரியில்லை, அது மட்டும் இல்லாமல் அவளே கஞ்சிசாதம் சாப்பிட்டு கொண்டு இருந்தாள் அவளுக்கு மட்டும் கொஞ்சம் வைத்து இருந்தாள்.... அதனால் அன்று அந்த பிச்சைகாரனுக்கு
பிச்சைஇல்லை என்று சொல்லி விட்டாள்...என்னைக்கும் பிச்சை போடதவ அன்னைக்கு என்று பார்த்து கொஞ்சம் சாப்பாடு அந்த பிச்சைக்காரனுக்கு போட்டாள்...
அதற்க்கு அந்த பிச்சைகாரன் இப்படி சொன்னான்..
என்னைக்கும் போடற தேவிடியா பிச்சை போடலை
என்னைக்கும் போடாத மகாராசி இன்னைக்கு போட்டு்ட்டா... என்று சொன்னானாம் .
இது எப்படி இருக்கு???
(குறிப்பு /கட்ந்த சில பதிவுகளின் பின்னுட்டத்தில் நான் கலைஞர் விட்டு பக்கத்து விட்டுகாரன் போல் சிலர் எழுதினார்கள். நான் ராதகிருஷ்ணன் ரோட்டில் கடற்கரை செல்லும் வேளையில்,சட்டென மனசு மாறி சினிமா பார்க்கும் ஆசையில் கோபாலபுரம் வழியாக சத்தியம் தியேட்டர் செல்வேன். அவ்வளவே கலைஞருக்கும் எனக்குமான சம்பந்தம்...)
அன்புடன் ஜாக்கிசேகர்