சமையல் எண்ணை உயர்வை பற்றியும் , மின்சார கட்டண உயர்வு பற்றியும் கிஞ்சித்தும் கவலை கொள்ளாத மேல்தட்டு சமுகம் வாழும் சென்னை பெசன்ட்நகர் பகுதியில் ஒரு பங்களா விட்டின் சுவற்றின் மீது அற்புதமான வாசகம் எழுதி வைத்து இருந்தார்கள் . "சுவற்றில் சிறுநீர் கழிப்பவன் மிருகம்" கிழே யாரோ ஒரு பொதுஜனம் கரித்துண்டால் பார்த்திபனின் கிறுக்கல் போல் ஒரு வாசகம் எழுதி வைத்து போய் இருந்தார் அது இப்படித்தான் இருந்தது
" இங்கு சுவற்றில் சிறுநீர் கழிப்பவன் மிருகம்
நான் அவசரத்திற்க்கு மிருகமாகி விடுவேன்"
அன்புடன் ஜாக்கி சேகர்
என் மானசீக குரு ஜாக்கிசானிடம் கற்றுக்கொள்ளுங்கள்
சரியாக 18 வருடங்களுக்கு முன் நான் ஆட்டோ ஓட்டியிருக்கிறேன் , மெரினா பீச்சில் டீ விற்று இருக்கிறேன் , அப்போது வாழ்க்கை பற்றிய பயம் அதிகம் இருந்தது. அந்த கஷ்டங்களி்ன் போது சொல்லிதர எவரும் எனக்கு இல்லாதபோது, armor of god படம் வெளியானது ,என் வாழ்வின் சோக பக்கங்களுக்கு அந்த படமே பெரிய ஆறுதல் , உங்களில் பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம் . அந்த நடிகனின் சிரிப்பு என்னை கவர்ந்தது , இயல்பான குறும்பு , 3 குத்து வாங்கி உதடு கிழிந்து வீரம் வரும் தமிழ் ஹீரோக்களுக்கு மத்தியில் நன்றாக உதை வாங்கி திருப்பி அடிக்கும் போது , என்னை சுழற்றி அடிக்கும் வாழ்வை நானே திருப்பி அடிபபது போல் இருந்தது என்பேன் . முக்கியமாக தான் எந்த அளவுக்கு ரத்தம் சிந்தி உழைத்தோம் என்பதை படத்தின் கடைசி டைட்டிலில் பகிர்ந்து கொன்ட நேர்த்தி என்னை மிகவும் கவர்ந்தது . அதன் பிறகு 5வருடங்களுக்கு முன்பு வரை அவரின் எந்த படம் ரிலீஸ் ஆனாலும் முதல் காட்சீயில் நான் இருந்தேன் , தான் எது செய்தாலும் தம் ரசிகர் அதனை பின் பற்றுவார்கள் என்பதால் TWIN BROTHER படத்தை தவிர எந்த படத்திலும் ஜாக்கி சிகரேட் பிடிப்பது போல் எந்த படத்திலும் காட்சி வைத்ததில்லை , தாசவதாரம் பட பாடல் வெளியீட்டு விழாவில் கூட எவ்வளவு அடக்கமாக உட்கார்ந்து இருந்தார் பாருங்கள் அதுதான் ஜாக்கி. அவர் ஹாலிவுட்டின் உச்ச நடிகர், கேசட் வெளியிட்டதும் அந்த ரிப்பன் கிழே கிடக்க அதனை எடுத்து குப்பையில் போட அலைந்தார் பாருங்கள் , அந்த பொறுப்பை தமிழ் நடிகர்கள் கற்று கொள்ள வேண்டும் .50 வயதுக்கு மேல் அதே சுறுசுறுப்பு , அதே புன்னகை. விழாவில் எவரைபற்றி பேசினாலும் அதற்க்கு புன்னகை செய்து கைதட்டி அவர்களின் பாராட்டுக்களை தலை குனிந்து ஏற்றுக்கொண்டது , நம் நடிகர்களை எவர்பாராட்டினாலும் , எந்த ரியாக் ஷனும் இல்லாமல் , யார் வீட்டு இழவோ பாய போட்டு அழுவோ , என உட்கார்ந்து இருந்தது என்னை போன்றவர்களை வியப்பில் ஆழ்த்தியது . என் மாணவர்கள் என்பதால் என்னால் செய்ய முடியாத எதையும் என் மாணவர்களை நான் செய்ய சொன்னது இல்லை என்ற அவரின் தலமை பண்பை அவரிடம் இருந்து கற்று கொள்ளுங்குகள் . குறிப்பு 84 வயதிலும் ஜாக்கி பற்றிய சிறு வயது மற்றும் வாழக்கை குறிப்புகளை பேசி தான் எந்த செயல் செய்தாலும் முழு இடுபாட்டுடன் செய்வேன் என்று நிருபித்த தமிழினத் தலைவருக்கு என் நன்றிகள்• இவ்வளவு பேசிய நீங்கள் உங்கள் மானசீக குரு கலந்து கொண்ட விழாவில் நீங்கள் ஏன் கலந்து கொள்ள வில்லை என்று கேட்கின்றீர்களா? எ/கா ஆக திருமணம் ஆனதும் 24 மணி நேரமும் மனைவியுடன் இருக்க வேண்டும் ஏன்று எண்ணுவோம் , 90 நாட்கள் கழித்து கை மேலே படும் போது கச கசன்னு இருக்குது கையை கொஞ்சம் டுக்கிறியா என்போமே , அதுபோல்தான். ஆனால் ,அன்பு மட்டும் மாறாத ஒன்று . அன்புடன் ... ஜாக்கி சேகர்
உலக தமிழர்களே உங்களுக்கு ஒருஅறிவிப்பு, சென்னை போடா வெண்ணை என்றும் சொல்லும்...
நீங்கள் வெகு தூரத்தில் இருந்து , இந்தியாவின் நான்காவது பெரிய நகரமான நம் தலைநகர் சென்னைக்கு வருகிறீர்கள் , நீங்கள் சென்னையில் கால் வைக்கும் போது இரவு மணி 11•30 என்று வைத்துக்கொள்ளுங்குகள்,நீங்கள் உங்கள் மனைவி குழந்தையுடன் இருக்கிறீர்கள், உங்கள் பண கையிருப்பு 500 ருபாய் என்று வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தினரால் பசியார முடியாது. ஏன் என்றால் எந்த கடையும் திறந்து இருக்காது , குழந்தை பசியால் அழும் உங்களால் எதுவும் செய்ய முடியாது. ஒரு டீக்கடை கூட திறந்து இருக்காது, நிலமை புரியாது உங்கள் மனைவி ஏங்க ஏதாவது செய்யுங்க என்பாள், நாம் எப்போதுமே ஸ்பைடர் மேன் இல்லை என்பதை மனைவிக்கு புரிய வைக்கவும் முடியாது. கையில் பணம் இருந்தும் குடும்பத்தினர் பசி ஆற்ற முடியாத நிலை எவருக்கும் வர கூடாது ,இரவு 11•30 மணிக்குமேல் ஏந்த கடை சென்னையில் திறந்து இருந்தாலும் சென்னை காவல் துறைக்கு வேர்த்து விடும் உடனே கடையை அடைக்க சொல்லி விடுகிறார்கள், ஏன் என்றால் காவல்துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறதாம். உஙக்ள் குடும்பத்தினர் பசிஆற ஒரு வழி இருக்கிறது, உடனே ஒரு ஆட்டோ பிடியுங்கள் , உங்கள் சொத்தில் பாதி கேட்பான் கொடுத்து விடுங்கள் ஏனென்றால் உங்கள் குடும்பத்தினர் பசி கலைவது உங்கள் கடமை அல்லவா? நேராக கன்னிமார, தாஜ் ,போன்ற நட்சத்திர ஒட்டல்களுக்கு செல்லுங்கள் ஏனெனில் அவைகள் மட்டுமே நடு இரவிலும் திறந்து இருக்கும் . காசு வைத்திருப்பவனுக்கும் , காரில் செல்பவனுக்கு மட்டுமே சென்னையில் நடு இரவில் பசி ஆற முழுத்தகுதியும் இருக்கின்றது என்பேன் . ஒரு ரகசியம் சொல்கிறேன் சென்னையில் நடு இரவில் டீ குடிக்க ஒரே வழி ,சென்னையில் உள்ள எல்லா போலிஸ்டேஷன் எதிரில் உள்ள டீ கடைகள் அனைத்தும் திறந்து இருக்கும் . அதுவும் கஞ்சா விற்பது பொல் பாதி ஷட்டர் திறந்த வியாபாரம் செய்வார்கள் . உங்களுக்கு ஒரு வேண்டுகோள் , யாரும் இரவில் குடும்பத்துடன் சென்னையில் வந்து பசியுடன் இறங்காதீர்கள் உங்களுக்கு சனி பிடித்துஇருக்கிறது என்று அர்த்தம், சென்னையில் அண்ணா சாலையில் விடியற்காலை 3 மணிக்கு போய் புகாரி ஓட்டலில் பிரியாணி சாப்பிட்டதெல்லாம் ஒரு காலம் என்று இப்போதே சொல்லுவோம் அன்புடன் / ஜாக்கி சேகர்
இந்த கோடையிலும் அதே தவறு நடக்க போகின்றது
அறுபது வருடத்தற்க்கு முன் நம்மை ஆட்சி செய்தவர்கள் ஆங்கிலேயர்கள் , அவர்களின் உடல்வாகு நமது தட்ப வெப்ப நிலையை ஏற்று கொள்ள முடியவில்லை, அதனால் அப்போது நீதி மன்றங்களில் பணி புரிந்த வெள்ளை கார துரைகள் , நீதிமன்றங்களுக்கு விடுமுறை விட்டுவிட்டு தன் மனைவிமார்களுடன் சல்லாபிக்க கொடைக்கானல், ஊட்டி சென்று விடுவார்கள், அதே போல் அப்போதைய மக்கள் தொகை ,பாரதி சொன்னது போல் முப்பதுகோடி முகம் மட்டுமே நமக்கு இருந்தது. அப்போது நாம் அடிமை வாழ்வு வாழ்ந்தோம் ரு பாய் 55 க்கு விற்ற சமையல் எண்ணை, ருபாய் 110 விலை ஏறிய போது எப்படி எந்த கேள்வியும் கேட்காமல் அப்பளம் பொறித்து சாப்பிடுகிறோமோ , அதே போல் தான் அப்போதைய இந்தியர் வாழ்கையும் இருந்தது , ஆனால் இன்று நாம் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகால ஜனநாயக இந்தியாவில் வாழ்கிறோம் , ஓய்வு ஒழிச்சல் இன்றி நாம் அனைவரும் ஒரே சிந்தனையுடன் முப்பது கோடி மக்கள் தொகையை இரவு பகல் பாராது உழைத்து 110 கோடிக்கு மக்கள் தொகையை உயர்த்தினோம். இதனால் பிரச்சனை அதிகமானது , பிரச்சனையை தீர்க்க வேண்டிய நீதிபதிகள் அதுவும் இந்திய நீதிபதிகள் கோடை விடுமுறை கோர்டுக்கு விட்டு விட்டு , தாங்கள் ஓய்வு எடுப்பது என்ன நியாயம் ? ஆண்டுக்கு பல கோடி வழக்குகள் நீதிமன்ற கொடன்களில் வவ்வால் நாற்றத்துடன் தூங்குவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது . இந்த லட்சனத்தில் பள்ளிபோல் இவர்களுக்கு கோடை விடுமுறை தேவையா? கட்டாய ஹெல்மட் சட்டத்தை அரசு எதிர்த்து்ம் , பஸ்ஸில் செல்லும் டிராபிக் ராமசுவாமி வழக்கு தொடர , அதை அப்படியே ஏற்றுக்கொண்டு பொது ஜனத்தை 108 டிகிரி வெய்யிலில் தலைகவசம் அணியவைத்து , வயிற்றெரிச்சல் கொட்டிக் கொள்ளும் நீதிதுறை இந்த விஷியத்தில் கவனம் செலுத்துமா ....?
திரைக்தைக்காக பார்க்க வேண்டியபடம் (vantage point)
vantage point (வச்சகுறி)
அற்புதமான திரைக்கதையுடன் ஒரு ஆங்கிலபடம் சமீபத்தில் வெளி வந்து இருக்கிறது அதன் பெயர் vantage point . தமிழில் வச்சகுறி என்ற பெயருடன் வெளிவந்து இருக்கிறது . அமெரிக்க அதிபர் பொதுகூட்டம் ஒன்றில் கொலை செய்யபடுகிறார். கொலை நடந்த 23 நிமிடத்திற்க்கு முன்பு அதிபரின் மெய்காப்பாளருடன் கதை பயணிக்கிறது. கொலை நடந்த போது வீடியோ எடுக்கும் பொது ஜன பார்வையில் கதை பயணிக்கிறது, கொலை செய்தவன் பார்வையில் மீண்டும் கதை பயணிக்கிறது, இப்படியாக நடந்த கொலை சம்பவத்தை வைத்து அற்புதமான திரைக்கதை அமைக்கபட்டுஇருக்கிறது. யார் கொலை செய்தார்கள் எதற்க்காக கொலை செய்தார்கள் என்ற படபடப்பு , குறைவில்லாத திரைக்கதை மிக அற்புதம். படத்தை pete trvis இயக்கி இருக்கிறார், கொலை நிகழ்ந்த சில மணி துளிகளில் அதே இடத்தில் மீண்டும் ஒரு பாம் வெடிப்பதும் , சுடப்பட்ட அதிபர் போலி என்பதும் திரைக்கதை டுவிஸ்டில் ஒரு சாம்பிள் மட்டுமே, பிரதான வேடத்தில் dennies quaid நடித்துஇருக்கிறார். அடுத்தது என்ன என்பதை எவரும் எளிதில் யூகிக்க முடியாத திரைக்கதை அமைத்து இருப்பவர் barryl.levy. சில படங்கள் படம் பார்த்த விட்டு வெளிவந்த பின்பும் அந்த படத்தை பற்றி நினைத்து கொண்டு இருப்போம் அந்த வகையில் இந்த படமும்....
அன்புடன் / ஜாக்கிசேகர்
அற்புதமான திரைக்கதையுடன் ஒரு ஆங்கிலபடம் சமீபத்தில் வெளி வந்து இருக்கிறது அதன் பெயர் vantage point . தமிழில் வச்சகுறி என்ற பெயருடன் வெளிவந்து இருக்கிறது . அமெரிக்க அதிபர் பொதுகூட்டம் ஒன்றில் கொலை செய்யபடுகிறார். கொலை நடந்த 23 நிமிடத்திற்க்கு முன்பு அதிபரின் மெய்காப்பாளருடன் கதை பயணிக்கிறது. கொலை நடந்த போது வீடியோ எடுக்கும் பொது ஜன பார்வையில் கதை பயணிக்கிறது, கொலை செய்தவன் பார்வையில் மீண்டும் கதை பயணிக்கிறது, இப்படியாக நடந்த கொலை சம்பவத்தை வைத்து அற்புதமான திரைக்கதை அமைக்கபட்டுஇருக்கிறது. யார் கொலை செய்தார்கள் எதற்க்காக கொலை செய்தார்கள் என்ற படபடப்பு , குறைவில்லாத திரைக்கதை மிக அற்புதம். படத்தை pete trvis இயக்கி இருக்கிறார், கொலை நிகழ்ந்த சில மணி துளிகளில் அதே இடத்தில் மீண்டும் ஒரு பாம் வெடிப்பதும் , சுடப்பட்ட அதிபர் போலி என்பதும் திரைக்கதை டுவிஸ்டில் ஒரு சாம்பிள் மட்டுமே, பிரதான வேடத்தில் dennies quaid நடித்துஇருக்கிறார். அடுத்தது என்ன என்பதை எவரும் எளிதில் யூகிக்க முடியாத திரைக்கதை அமைத்து இருப்பவர் barryl.levy. சில படங்கள் படம் பார்த்த விட்டு வெளிவந்த பின்பும் அந்த படத்தை பற்றி நினைத்து கொண்டு இருப்போம் அந்த வகையில் இந்த படமும்....
அன்புடன் / ஜாக்கிசேகர்
சந்தோஷமான தினங்கள். HAPPY DAYS.(தெலுங்கு சினிமா பற்றிய பார்வை)
ஒரு படம் முன்று மணி நேரம் சந்தோஷத்தை அளிக்குமா? அளிக்கும் அதுவும் தெலுங்கு படம் என்பதுதான் சிறப்பான செய்தி.
பத்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கு படம் என்பது , ரேய் நேனு சம்பிஸ்தானுடா ? என்று கன்ன தசைகள் ஆட கதாநாயகன் பேசுவதும், காதநாயகி தன் தொப்புளில் ஆப்பிள் சாத்துகுடி பழங்களால் இடித்து அதிர விடுவதுமாகவும், வெள்ளை சேலை அணிந்து வரும் காதாநாயகியை காதநாயகன் மோப்பம் பிடிப்பதும் ஆக இருந்தது . ஆனால் இப்போது நிலமை தலைகிழ் , திரு சேகர் கமனுல்லா இயக்கிய happy days என்ற தெலுங்கு படம் அந்த முன்று மணிநேர சந்தோஷத்தை தரவல்லது ( ஆந்திராவில் மொழி தியாகிகள் முதல்வராக இல்லை அதனால் தெலுங்கில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்ற பாச்சா அங்கு இல்லை அதனால் ஆங்கிலத்தில் பெயர்) இந்த படத்தின் இயக்குனர் இதற்க்கு முன் ஆனந் என்ற தெலுங்கு படம் இயக்கியிருக்கிறார் . அது ஒரு மென்மையான காதல் கதை , HAPPY DAYS ன் கதைஇதுதான் , ஒரு பொறியியல் கல்லுரியில் இரண்டு மாணவிகள் முன்று மாணவர்கள் வேவ்வேறு குடும்ப பின்னனியில் இருந்து வந்து சேர்கிறார்கள், அந்த கல்லுரியில் அவர்கள் சந்திக்கும் சந்தோஷங்களும் சங்கடங்களும் இதனிடையே அவர்களுக்குள் ஏற்படும் காதல் ,மோதல் தான் கதை, frame முழுவதும் கல்லுரி மாணவ மாணவிகள்தான் மிக அற்புதமான ஒளிப்பதிவு, மனதை மயக்கும் இசை, நீங்கள் college சென்று படிக்காதவரா? அந்த சந்தோஷத்தை உணராதவரா? சர்வ நிச்சயமாக இந்த படத்தை நீங்கள் பார்க்க வேண்டும்
அன்புடன் ஜாக்கிசேகர்
ஏப்ரல் மாத தமிழ் புத்தாண்டிற்க்கு வாழ்த்தி விடை கொடுப்போம்
தமிழர்கள் இனி புத்தாண்டினை தை மாதம் கொண்டாட வேண்டியதுதான் அப்படி பார்த்தால் இதுதான் நமது ஏப்ரல் மாத கடைசி தமிழ் புத்தாண்டு , எனவே சந்தோஷமாக விடை கொடுப்போம்
_______________________________________________________________________________________
அன்புடன்- நிழற்படம் ,கருத்து . ஜாக்கி சேகர்
_______________________________________________________________________________________
கண்டிப்பா பார்க்க வேண்டியபடம்
நிறையா பேரு இந்த படத்த பார்த்து இருப்பாங்க, அது மேட்டர் காதன்டி இந்த படம் பார்க்காதவங்களுக்கான நுவீஸ் இது
•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
__ நம்ப டைனோசர் படம் எடுத்த ஸ்பீல் பெர்க் துரை எடுத்த பஸ்ட்டு எடுத்த பாயாஸ்கோப் இது , அந்த ஊர்ல மாமியார் மருமக சண்ட இல்லை அதனால முக்கு சிந்த வைக்கிற சீரியல் எடுக்க சொல்லாம ஒரு படம் எடுக்க சொன்னாங்க , ஸ்பீல்பெர்க் தன் திறமைய நிருபிச்ச படம் . கதை தக்கனுன்டுதான். ஒருத்தன் ஒரு சிவப்பு கலர் கார்ல ஏறி கலிபோர்னியா பாலைவனம் வழியா ரொம்ப துரரம் கார்ல போறான் அப்போ ஒரு டேங்கர் லாரி அவ்ன் காரை கிராஸ் பன்னுது அப்புறம் , போய் டிவிடி வாங்கி பாருங்கன்னா . அஞ்சாதே படத்துல மொகம் காட்டாத மொட்ட பாஸ் கூட இந்த படத்தோட இன்ஸ்பிரேஷன்தான் ( குறிப்பு செலவே இல்லாம படம் எப்படி சுவாரஸ்யமா எடுக்கறது எப்படின்னு இந்த படம் கத்துதரும் எல்லா ஊடகத் துறை மாணவர்களும் தவறாம பார்க்க வேண்டிய படம் ______________________________________________________________________________________ அன்புடன்- ,கருத்து . ஜாக்கி சேகர் _______________________________________________________________________________________
சந்தோஷ செய்தி பகிர்வு
ஒரு வழியாக கத்திபார மேம்பாலம் ஒரு பகுதி மட்டும் திறந்து வைக்கபட்டது , பாலம் திறந்து வைக்கப்பட்ட சில மணி துளிகளில் நான் பாலத்தில் பயணம் செய்தேன் முதல்வர் வருகையால் எல்லா இடங்களிலும் போலிஸ் தலைகள் தென்பட்டன, பயணம் செய்தஎல்லோர் முகத்திலும் புன்னகை இருந்தது என் முகத்திலும் தான் , அதை விட பெரிய சந்தோஷம் அங்கு பணி புரிந்த அனைத்து வட நாட்டு கூலி தொழிளாலர்கள் அனைவரும் தலையில் ஆரஞ்சு கலர் தொப்பி அணிந்து பயணம் செய்த அனை த்து பயணிகளுக்கும் முகம் முழுதும் உற்சாகத்துடன் கை அசைத்துகொண்டே இருந்தது என்றும் நம் நினைவுகளில்
_______________________________________________________________________________________
அன்புடன்- ,கருத்து . ஜாக்கி சேகர்
_______________________________________________________________________________________
“நம்புங்கள் தமிழர்களே”
தமிழர்களே சிந்திப்பீர் கடந்த மாதம் 20 /03 /08 அன்று குறிப்பாக தென் தமிழகம் வெள்ளத்தால் நிறைந்தது நாம் அனைவரும் அறிந்ததே, கடண் வாங்கி பயிர் செய்த தென்னக விவசாயி ஒருவர் தற்கொலையே செய்து கொண்டார், நாம் மறந்து இருப்போம் அதற்க்கு காரணம் வாட்டாள் நாகராஜ் மற்றும் தமிழ் நடிகர்களின் உண்ணாவிரதமாக இருக்கலாம், இந்த எதிர்பாராத கோடை மழை விவசாயிகளின் வாழ்வை கேள்வி குறியாக்கியது,? மிகச்சரியாக 20 நாட்கள் கழித்து 6 வது சம்பள கமிஷனை எதிர்பார்த்து இருக்கும் அதிகாரவர்க்க அதிகாரிகள், கையில் மினரல் பாட்டில் சகிதம் தென்னக விவசாயிகள் துயர் துடைக்க எலிகாப்டர் ஏறி ஓடோடி வந்தார்கள் அவர்கள் வரும் வரை மழை நீர் வடியாமல் இருக்குமா? நீர் வடிந்து விட்டது . மத்திய அய்வு குழுவினர் மழை பாதித்த பகுதிகளை புகைபடத்தில் பார்த்து ச்சச்சோ என்று வருத்தபட்டனர், வந்த மத்தியகுழு எருமைகள் அமெரிக்காவில் இருந்து வரவில்லை நம் தலைநகர் டெல்லியில் இருந்துதான் வர வேண்டும், மத்திய அரசுக்கு போர்கால நடவடிக்கை என்றால் என்ன என்று தெரியவில்லை , பங்கு சந்தை சரிந்தால் உடனே பதறும் மத்திய அரசு , விவசாயிகள் என்றால் இளக்காரமா? மத்தியஅரசுக்கு ஒரு வேண்டுகோள் “ நிலவுக்கு மனிதனை அனுப்பவதில் காட்டும் ஆர்வத்தை ஒரே நிலப்பரப்பில் வாழும் தமிழன் மீதும் காட்ட வேண்டுகிறேன்” நம்புங்கள் தமிழர்களே நாம் சுதந்திரம் பெற்ற 60 ஆண்டுகால இந்தியாவில் வாழ்கிறோம்
_______________________________________________________________________________________
அன்புடன்- நிழற்படம் ,கருத்து . ஜாக்கி சேகர்
_______________________________________________________________________________________
நன்றி திரு சத்யராஜ் அவர்கள்
உண்ணாவிரத போராட்டத்தில் சத்யராஜ் மிக சரியாக பேசினார் ஆனால் சிலர் சொல்லலாம் பொது இடத்தில் பேசும் போது நா காக்க வேண்டும் என்று, ஒரு இனம் திரும்பிய இடமெல்லாம் உதை வாங்கும் போது அந்த இனத்தை நேசிப்பவர் கோபத்தில் இப்படித்தான் பேசுவார்கள் திரு சத்யராஜ் அவர்களுக்கு என் நன்றிகள் அப்படி உங்களை எவராவது குறை கூறினாள் அவர்கள் மன நோயாளிகள் என்பேன்
_______________________________________________________________________________________
அன்புடன்-கருத்து , ஜாக்கி சேகர்
_______________________________________________________________________________________
பேராசை
___________________________________
சிக்கலான தருனத்தில்
பிரச்சனை மிகுந்த நேரத்தில்
உன்னோடு பேச...
ஐந்து நிமிடம் போதும் என்றே
அண்டவனை வேண்டுகிறேன்
உன் முகம் பார்த்தவுடன்
முடியாது என்று தெரிந்தும்
ஐந்து நிமிட வேண்டுதல்
ஐந்து மணி நேரமாக
மாறி விடும்
மாயம்தான் என்ன...?
_________________ அன்புடன்- நிழற்படம் ,கவிதை . ஜாக்கி சேகர் _______________________________________________________________________________________
இனியும் பொறுக்க வேண்டுமா..? தமிழா..
கர்நாடகத்தில் மீண்டும் தமிழர்கள்
உதைபடுகிறார்கள் திரும்பவும்
ஆர்காட்டாரோ அல்லது டி.அர் பாலுவோ
பிரதமரை சந்திப்பார்கள்,
பா.மா.க, தே.மு.தி.க , போன்றவர்கள்
எல்லையில் போராட்டம் நடத்துவார்கள் , இந்தியாவில் இருந்து கொண்டே
வாட்டாள் நகராஜ் போன்றவர்கள் தமிழ்நாய்கள் உடனே கர்நாடகாவை விட்டு
வெளியேரவேண்டும் என்பார்கள் , நாம் அமைதி காப்போம் ஏனென்றால் நாம்
இந்தியஇறையான்மையை மதிப்பவர்கள் , நாம் இருப்பது இந்தியாவிலா
அல்லது இலங்கையிலா..?ராஜபக்சே-வாட்டாள் என்ன வித்யாசம்? தமிழா
நாம்
பல்லேலகக்கா சிவாஜி பாடல் பார்போம் . ரஜினியின் ரோபோ படம் பற்றி
கவலை கொள்வோம், ஏனெனில் நாம் தமிழர்கள் அல்லவா?
அன்புடன்- நிழற்படம் ,கருத்து . ஜாக்கி சேகர்
லட்சிய இளைஞர்கள்
அழுக்கேறிய ஜுன்சும்
ஆறுமாதகால தாடியும் தான்
இவர்களின்
அடையாளங்கள் ...
தொடர்ந்து புகைப்பதால்
தடித்த உதடுகளும்
எண்னைப் பார்க்காத தலையும்
அவர்களின்
அக்மார்க் முத்திரைகள்...
தூக்கம் தொலைந்த
கண்களில்
அரை நூற்றாண்டு
சரித்திரத்தை மாற்றும்
கனவுகள் இலவசம்.
புரிந்தாலும்
புரியாவிட்டாலும்
ஒரு நாவல் புத்தகம்
ஒரு கைக்குறிப்பேடு
இவர்களின் கையில்
நிச்சயம் இருக்கும்
தெருவோர
டீக்கடைகள் தான்
இவர்கள் இளைப்பாறும்
வேடந்தாங்கல்.
இவர்களின்
பெற்றோர்களின் கனவு
தன் மகனை
மருத்துவராகவோ
பொறியாளனாகவோ
பார்க்கத்தான் ஆசை
ஆனால்
இவர்களின் கனவோ
வேறானது...
திருமண வயதை தாண்டி
ஜன்னல் வழியாக
சாலை வெறித்துப்
பார்க்கும்
சகோதரிகள்...
ஒரு பக்க நுரையீரலை இழந்து
காச நோயால் அவதிப்படும்
அம்மா...
வெள்ளாமை பொய்த்தால்
ஐம்பது வயதிலும்
வேதனைப்படும்
அப்பா...
இது
எதுபற்றியும் இவர்களுக்கு
கவலை இல்லை
இவர்களின் ஒரே கவலை
"வாழ்நாள் கவலை"
நல்ல தமிழ் சினிமா
எடுப்பது தான்...
(சமர்ப்பணம் சினிமா பற்றிய புரிதல் இல்லாது சினிமா பார்ப்பதாலேயே தாணும் ஒரு இயக்குநராக மாறவேண்டும் என்று தென்மாவட்டங்களிலிருந்து பஸ் பிடிக்கும் அனைத்து இளைஞர்களுக்கும்)
தமிழ்நாட்டு இளைஞர்களை நினைத்து நொந்தபடியே,
அன்புடன் -ஜாக்கி சேகர்
Subscribe to:
Posts (Atom)