மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் 18+(ஞாயிறு/28•11•2010)

ஆல்பம்..
இரண்டு வாரங்கள் அப்படி இப்படி என நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நடக்கவில்லை...பல கோடி மக்கள் வரிப்பணம் நட்டம்..எதிர்கட்சிகள் நாடளுமன்ற கூட்டுக்குழு விசாரனை கேட்கின்றது.. ஆளும் கட்சி விடாப்பிடியாகபொதுகணக்கு குழு விசாரனையே போதுமானது என்கின்றது.



பையில கனம் இருந்தாதானே வழியில பயம் என்ற பழ மொழியை மேற்கோள் காட்டினாலும் பையில் கனத்துக்கு பதில் டன் கணக்கில் அல்லவா வெயிட் இருக்கின்றது.
=================
எங்கள் ஊர் கடலூரில் மற்றும் தென்னார்காடு மாவட்டங்களில் வானம் பொத்துகிட்டு எல்லாம்ஊற்றவில்லை... வானம் கிழ்த்துக்கொண்டு ஊற்றுகின்றது.. என் வீட்டில் வாசபடி வரை தண்ணி வந்து விட்டது. வீட்டினுள் மட்டும் வரவில்லை. எங்கள் ஊரே வெள்ளக்காட்டில் மிதக்கின்றது..  ஊடகத்துறை சென்னை வடபழனியில் கணுக்கால் அளவுக்கு தண்ணி வந்து விட்டால் போதும் அவ்வளவுதான் மக்கள் வாழ்க்கை முடங்கியது.. சென்னை ஸ்தம்பித்து என்று போட்டிபோட்டுகொண்டு அலறுவார்கள்... ஆனால் பல தென் மாவட்டங்ங்களில் மக்கள் இந்த கடும் மழையில் சொல்லன்னா துயரத்தை அடைந்து வருகின்றார்கள். பல இடங்களில் தரைபாலம் அடித்து செல்லபட்டு விட்டது. அதை பற்றி  செய்தி அவ்வளவாக ஊடகங்களில் வருவதில்லை... சென்னையில் மட்டும் மனிதர்கள் இல்லை தென்மாவட்டத்திலும் மனிதர்கள் இருக்கின்றார்கள் என்பதை ஊடகங்கள் உணரவேண்டும்.
=====================
ஒரு அறிவிப்பு...

ஒரு சில விஷயங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றேன்.. அப்படி அது நல்ல விதமாக முடிந்தால் பதிவுகள் எழுதுவது பெருமளவில் குறைந்து விடும்... இருப்பினும் தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன். அதனால் ஆடிக்கு ஒரு போஸ்ட் அம்மாவாசைக்கு ஒன்று போட்டாலும் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டுகின்றேன்.
மிக்சர்..
வீட்டில் இருக்கும் பழைய பேப்பரை எல்லாம் போட்டேன் எடை தில்லு முல்லு பற்றி  பழைய பேப்பர் வாங்குபவர் விளக்கினார்... ஒரே ஒரு பேப்ப் வைத்து விட்டு அது மூணரை கீலோ காண்பிக்க வைத்தார்.. எனக்கு மயக்கமே வந்தது.. கிலோ ஏழு ரூபாய் என்றதும் வாய் பிளந்து கொடுத்தால் பத்து கிலோவுக்கு மேல் சுவாக செய்யமுடியும் ஜாக்கிரதை நான் இன்று போட்ட பேப்பர் போலதான் எப்போதும் போடுவேன். 45 ரூபாய் அல்லது 55ரூபாயை தாண்டியதாக சரித்திரம் இல்லை.. இன்று 185ரூபாய் கிடைத்தது.
=================


இந்தவார சலனபடம்...

சமீபத்தில் கேடிவியில் பவித்திரனின் வசந்தகாலபறவை படத்தை பார்த்தேன்.. 1990களில்  இந்த கன்னடத்து பைங்கிளி ஷாலி சிலகாலம் எனது கற்பனை காதலி கதாபாத்திரத்துக்கு இந்த பெண் பெரிதும் உதவினாள். அதுவும் மழைகாலத்தில் விடியலில் 4மணிக்கு மேல் விழிப்பு வந்து போர்வையை நன்றாக போத்திய படி, மெலிதான காமம் தலை தூக்க கற்பனை காதலிக்கு முகவடிவத்துக்கு உதவிய பெண். இந்த படத்தை இந்த பெண்ணுக்காக 5 முறைக்கு மேல் காசு இல்லாத காலத்தில் இந்த படத்தை பார்த்தேன்...வசந்தகால பறவைகள் என் வாழ்வில் மறக்க முடியாத படம்.. ஆனால் இன்று அந்த படத்தை பார்த்த போது இந்த படத்தையா ? 5முறைக்கு மேல் பார்த்தோம் என்ற ஆச்சர்ய பட்டு போனேன். அந்த படத்தில் ஒரு பாடல் உங்கள் பார்வைக்கு...



==============


ஒரு சந்திப்பு.....
வெள்ளிக்கிழிமை இரவு ஒரு  நண்பர் போன் செய்தார்.. பெயர் பாண்டியன் செல்லம்மாள் காலேஜ் பக்கத்தில்  இருக்கும் ஒரு கம்பெனியில் சாப்ட்வேர் என்ஜினியர் ஆக இருக்கின்றேன். இரவு நீங்கள் பிரியாக இருந்தால் சந்திக்கலாம் என்றார்.. நான் அப்போது ஒரு விளம்பரபடத்தின் படபிடிப்புக்காக மாயாஜல்  அருகில் இருந்தேன்.. கிண்டி ஒலிம்பியா பார்க் அருகில் சந்திப்பதாக சொன்னேன்.. நண்பர் பாண்டியனும் அங்கு வந்தார்..அவர் காரில்  போகும் போது உங்களோடு இரவு உணவை சாப்பிட ஆசை என்றார்...என் வீட்டு அம்மாவின் சைவ சாப்பாடில் இருந்து தப்பிக்க ஓகே என்றேன்...பிரான் சிக்கன் 65 சிக்கள் பிரியானி என்று நல்ல இரவு உணவு. பேச்சின் ஊடே... உங்களை பற்றி எனக்கு தெரியும் ஆனால் என்னை பற்றி என்று வெகுநாள் பழகிய நண்பரை போல எல்லா விஷயத்தையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். கார்த்திக் என்ற நண்பர்  உங்கள் வலையை அறிமுகபடுத்தியதாக சொனனார். எவ்வளவு நாளைக்கு முன் என்றேன்... இரண்டு நாளைக்கு முன் என்றார். எனக்கு  ரொம்ப பெருமையாக இருந்தது.
====================
இந்தவார கடிதம்..

சேகர் அண்ணனுக்கு வணக்கம், இதற்கு முன் உங்கள் பதிவுகளை அவ்வப்போது பார்த்து இருப்பினும் கருத்து சொல்வது இதுதான் முதல் முறை. பொதுவாக உங்கள் தமிழ் பட விமர்சனங்களில் காரம் கம்மியாக இருப்பதாக நினைக்கிறேன். தவறு என்றால் இன்னும் அழுத்தமாக சுட்டிக்காட்ட வேண்டும் என விரும்புகிறேன். குவார்ட்டர் கட்டிங் படத்தை கூட நீங்கள் அணுகிய விதம் சற்று அதிர்ச்சியாக இருந்தது. மந்திரப்புன்னகையும் அவ்வாறே என் நினைக்கிறேன். ஆனந்த விகடன் 39 மதிப்பெண் தந்துள்ளது. உங்கள் விமர்சனம் சற்று வேறு விதமாக உள்ளது என நினைக்கிறேன். உங்களிடம் இன்னும் சற்று நெத்தியடி விமர்சன வரிகளை எதிர்பார்க்கிறேன். தவறாக இருந்தால் மன்னிக்கவும். நன்றி!


நண்பர் சிவக்குமார் என்ற நண்பர் எனக்கு எழுதிய மடல் இது.....
===================
அன்பின் சிவக்குமார்.. ஆனந்த விகடன் 39 போட்டு விட்டால் அந்த படத்தை பாராட்டகூடாது என்று அர்த்தம் அல்ல..நீங்கள்  என் வலைதளத்தில்  தொடர்ந்து வாசித்தால் ஒன்று தெரியும். நன்றாக இல்லாத படங்களை நான் அதிகமாக விமர்சித்ததே இல்லை. அந்த நேரத்துக்கு ஒரு நல்ல படத்தை பற்றி எழுதிவிடலாம்.  நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லை என்று சொல்ல எனக்கு பிடிக்காது.. அதுதான் நல்லா இல்லையே அப்புறம் எதுக்கு அதை சொல்லிகிட்டு என்பது என் வாதம்.
 ஒரு படைப்பை அப்படி ஒரேஅடியாக குற்றம் சொல்லிவிடமுடியாது..ஒரு அரசியல் வாதி மக்களக்கு நல்லது செய்ய வேண்டும் அது அவன் கடமை.. நான் நல்லது செய்வேன் என்று நம்பிக்கை ஊட்டி ஓட்டு வாங்கி பதவிக்கு வந்து ஏமாற்றும்  போது கடுமையாக சாடுகின்றோம்.. சினிமா ஒரு கலை...நிறைய கலைகள் ஒன்று சேரும் இடம்..  அதில் நான் பணிபுரிவதால் எனக்கு  அதன் கஷ்டம் தெரியும். நெத்தியடி ஆக விமர்சனம் எழுத என்னாலும் முடியும். ஆனால் அதுக்கான தகுதி என்னிடத்தில் இல்லை... அப்படியே  ஒரு வெற்றிபடம் கொடுத்தாலும் நான் ஒரு படத்தைகுப்பை என்று சட்டென சொல்லிவிட மாட்டேன்.எட்டு வருட நல்ல காரோட்டி  ஒரு  பெரிய விபத்தை சந்திக்க முடியம்... அதுக்கு காரணம் பல காரணங்களை முன் வைக்க முடியும். அந்த விபத்தை ஏற்படுத்தினான் என்பதற்க்காக அவன் நல்ல காரோட்டி இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா?? மணிரத்னம் பெரிய டைரக்டர் சமீபத்திய இராவணன் அதற்கு நல்ல உதாரணம். ஒரு பொதுஜனம் எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் எழுதலாம்... அல்லது சொல்லலாம்...ஆனால் நான் அப்படி எழுத முடியாது..இந்த வலை உலகத்தில் அப்படி சொல்ல நிறைய பேர் இருக்கின்றார்கள்.... நான் வேறு எதற்கு சொல்லிகிட்டு... சட்டென எந்த படத்தையும் குப்பை என்று என்னால்  சொல்ல முடியாது. ஆனால் எனக்கு ஒரு படம் பிடித்து இருந்தால் அது குப்பையாக இருந்தாலும் அந்த படம் ஏன் எனக்கு பிடித்தது என்று சொல்ல முடியும்.. இன்று இப்படி நாளை நானே கூட குப்பை என்று விமர்சனம் சொல்லலாம்...கமல் விஜய் டிவி தீபாவளி பேட்டியில்  சொன்னது போல தமிழ்நாட்டில் எல்லோரும் திரைக்கதை ஆசிரியர்கள்தான். படம் பார்த்து விட்டு வெளியே வந்த அத்தனை பேரும் பர்ஸ்ட் ஆல்ப் செகன்ட் ஆல்ப் சொதப்பல் பற்றி நிறைய பேசுவார்கள்... நிறைய பேர் பேசுகின்றார்கள் நான் எனக்கு பிடித்த நல்ல படங்களை பற்றி  அதிகம் பேசுகின்றேன் இன்னும் பேசுவேன்..... இப்போதைக்கு இந்த விளக்கம் போதும்  நன்றி சிவக்குமார்.. இது குறித்து பல நண்பர்கள் என்னிடத்தில் எழுப்பிய கேள்விக்கு உங்கள் கடிதம் மூலம் பதில் அளித்து இருக்கின்றேன். மிக்க நன்றி சிவக்குமார்.
=======================

நன்றிகள்...
தொடர்ந்து தமிழ்முன்னனி வலைபதிவுகளில் பத்து இடத்துக்குள் ஒரு ஆளாக இந்த தளம் இருப்பதில் மகிழ்ச்சியே உங்களுக்கு எனது நன்றிகள்.
=================


பிலாசபி பாண்டி

                 கொலுசு போட்டா சத்தம் வரும்.ஆனா, சத்தம் போட்ட கொலுசு வருமா?

            பேக் வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும், ஃப்ரன்ட் வீல முந்த முடியாது.
===================================
இந்தவார புகைபடம்
இதுவும் நம்ம கேமரா கைங்கர்யம்தான்.
=================
நான்வெஜ் 18+
ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டார்.. அதில் .சுத்தபத்தம் பற்றி கேள்வி வந்த பொது உலகத்தில் அதிகமான சுத்தம் கொண்ட மனிதர்கள் யார்?? உங்களுக்கு தெரிந்தவர்களை சொல்லுங்கள் என்றார்.. ஒரு பையன் ஷகிலா ஆண்டி சார்... என்றான்... வாத்தியாருக்கு ரொம்ப ஆச்சர்யம் எப்படிடா? அவுங்கதான்சார் எப்பயுமே குளிச்சிகிட்டு இருக்காங்க...
===================
அம்மா அம்மா தம்பி பாப்பா எப்படி பொறக்கும்.. பையனுக்கு செக்ஸ் அறிவு வளரனும் என்ற காரணத்தால் அதுவாட செல்லம் நானும் ஒரு ஆணும்  நம்ம பெட்ரூம்ல ஒன்னா சேர்ந்தா தம்பி பாப்பா பொறக்கும். சரி அப்ப நீயும் உங்க ஆபிஸ்மேனேஜர் அங்கிளும் ஒன்னா பெட்ரூம்ல சேரரிங்க... ஆனா தம்பி பாப்பா வரலையே. அதுக்கு அவ சொன்னா அதுக்குதான் பிரிட்ஜ் எல்சிடி டிவி எல்லாம் கெடைக்குதே...
===============


பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு.. பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்.

20 comments:

  1. சினிமா விமர்சனம் பற்றிய உங்கள் கருத்து அருமை! :-)

    ReplyDelete
  2. // ஒரு சில விஷயங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றேன்.. அப்படி அது நல்ல விதமாக முடிந்தால் பதிவுகள் எழுதுவது பெருமளவில் குறைந்து விடும்... இருப்பினும் தொடர்ந்து எழுத முயற்சிக்கின்றேன். அதனால் ஆடிக்கு ஒரு போஸ்ட் அம்மாவாசைக்கு ஒன்று போட்டாலும் தொடர்ந்து ஆதரவு கொடுக்க வேண்டுகின்றேன். //
    டைரக்டர் ஆகப் போறீங்களா...?

    ReplyDelete
  3. அரசியல விமர்சனம் பண்ணுவேன், ஆனா சினிமாவ நல்லா இருந்தா மட்டும்தான் விமர்சனம் பண்ணுவேன்னு சொல்றது ஏற்புடைய கருது அல்ல. சினிமா என்பது வியாபாரம் சம்பந்தமானது, அது கலை வடிவம் என்று சொல்வது போலியான விசயம், அதீத பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டுதான் எல்லோரும் சினிமாவுக்கு வருகின்றனர். இதுவரை எத்தனை படங்கள் நேர்த்தியான கலை வடிவங்கள் என்பது அதிகம் சினிமா பார்க்கும் உங்களுக்கே வெளிச்சம்.

    மற்றபடி நிறைய பேரின் கூட்டு முயற்சி என்று சொல்லும் நீங்கள், டவுன் லோட் செய்து படம் பார்க்க மாட்டேன் என் சொல்லும் நீங்கள் பர்மா பஜாரில் வாங்கும் அத்தனை ஆங்கிலப் படங்களும் பைரசிதான்.. எழுதுவதற்கு முன் யோசித்துவிட்டு எழுதுங்கள், அல்லது எழுதிய பின்னாவது சரிபார்த்துவிட்டு பதிவேற்றுங்கள்..

    இதுதான் நான் முதன்முதலாக உங்களுக்கு எழுதும் எதிர்மறை பின்னூட்டம்...

    ReplyDelete
  4. ஒரு சில விஷயங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றேன்.. அப்படி அது நல்ல விதமாக முடிந்தால் பதிவுகள் எழுதுவது பெருமளவில் குறைந்து விடும்...

    எதுவாக இருந்தாலும் நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள் தலைவா.........

    ReplyDelete
  5. HI JACKIE ANNA

    REG YOUR ANSWER FOR CINEMA REVIEW... ITS GOOD AND ACCEPTABLE.

    MANO

    ReplyDelete
  6. வழக்கம்போலவே அசத்தல்...

    தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  7. vimarsanam patria ungal vimarsanam arumai

    ReplyDelete
  8. //எட்டு வருட நல்ல காரோட்டி ஒரு பெரிய விபத்தை சந்திக்க முடியம்... அதுக்கு காரணம் பல காரணங்களை முன் வைக்க முடியும். அந்த விபத்தை ஏற்படுத்தினான் என்பதற்காக அவன் நல்ல காரோட்டி இல்லை என்று சொல்ல முடியாது அல்லவா?சினிமா ஒரு கலை...நிறைய கலைகள் ஒன்று சேரும் இடம்.. அதில் நான் பணிபுரிவதால் எனக்கு அதன் கஷ்டம் தெரியும். நெத்தியடி ஆக விமர்சனம் எழுத என்னாலும் முடியும். ஆனால் அதுக்கான தகுதி என்னிடத்தில் இல்லை.// ........காரோட்டியின் பிரச்சனைகள் எனக்கு நன்கு பரிச்சயமானதுதான் சேகர் அண்ணா.. ஏனெனில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீது கொண்டு பேரன்பு காரணமாக சென்னைக்கு வந்து அவரிடமே காரோட்டியாக சேர்ந்து பல ஆண்டு காலம் சிவாஜி பிலிம்சில் பணி புரிந்தவர்தான் என் தந்தை. என் தந்தையின் பெயரும் கணேசன் என்பதால் அன்னை இல்லத்தினர் என் தந்தையை கணபதி என்று அழைப்பர். என் படிப்புக்காக பல உதவிகளை செய்த சிவாஜி குடும்பத்தை மறக்க இயலாது.திரைப்பட தொழிலாளிகள் படம் இன்னல்களை கண்ணெதிரே சந்தித்தவர்களில் நானும் ஒருவன்......... //நன்றாக இல்லாத படங்களை நான் அதிகமாக விமர்சித்ததே இல்லை. அந்த நேரத்துக்கு ஒரு நல்ல படத்தை பற்றி எழுதிவிடலாம். நல்லா இல்லாத படத்தை நல்லா இல்லை என்று சொல்ல எனக்கு பிடிக்காது.//.......என் பதிவகங்கள் madrasbhavan.blogspot.com மற்றும் nanbendaa.blogspot.com இரண்டிலுமே நான் எழுதிய சில திரைவிமர்சனங்கள் கூட நல்ல படங்களை பற்றியே இருக்கும். நல்ல படங்களை மட்டுமே தேர்ந்து எடுத்து பார்ப்பது கூட காரணமாக இருக்கலாம்......... //நான் ஒரு படத்தை குப்பை என்று சட்டென சொல்லிவிட மாட்டேன்// உங்கள் கருத்தை முற்றிலும் ஆமோதிக்கறேன். இதையேதான் நான் சாருவின் எந்திரன் படத்திற்கு எதிர் விமர்சனம் செய்கையில் குறிப்பிட்டிருந்தேன். ஆதாரம்: http://madrasbhavan.blogspot.com/2010/11/blog-post_13.html >>>>> அதன் சில துளிகள்...>>>>> சாரு, ....எந்திரனை குப்பை என்று அசால்ட்டாக சொல்லிவிட்டீர்கள். அது உங்கள் கருத்து. ஆனால், ஒரு படத்தையே ஒட்டு மொத்தமாக குப்பை என்பது குப்பையில் சேரவேண்டிய கருத்து என்பது என் கருத்து. ரஜினி, அல்லது ஷங்கர் மீது 'காண்டு' இருந்தால் அவர்களை விமர்சியுங்கள். அதை தடுக்கவா முடியும்? ஆனால் படத்தையே குப்பை என்கிறீர்கள். அதில் எத்தனை உழைப்பாளிகளின் பங்கு இருந்திருக்கும் என்பதை மறந்து. உணவளிக்கும் ப்ரொடக்சன் பாய், வாகன ஓட்டுனர், லைட்மேன், தையல்காரர், உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் ஸ்டன்ட் மேன் என பலருடைய உழைப்பையும் ஒரே வார்த்தையில் குப்பை என்று சொல்லி விட்டீர்களே..இனி அத்தகைய வார்த்தைகளை பிரயோகிப்பது சரியா என நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளுங்கள்.....<<<<<<<< .....ஏதோ ஒரு வகையில் உங்கள் எண்ணங்களோடு என் எண்ண ஓட்டங்கள் ஒத்துப்போகிறது என்பதை தெரிவிக்கவே இந்த மடலை எழுதினேன். சினிமா குறித்து சில விசயங்களை என்றாவது ஒருநாள் உங்களிடம் கலந்தாலோசிக்கும் நாள் கைகூடும் எனும் நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். அதுவரை....நன்றி மற்றும் வாழ்த்துகள்!.....

    ReplyDelete
  9. திரைவிமர்சனம் சார்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு, தெளிவான பக்குவப்பட்ட பதில் உங்களிடமிருந்த்து.

    ReplyDelete
  10. உங்களை பார்த்துதான் நானும் ஒரு வலைப்பதிவை தொடங்கினேன் பெருமையோடு நெல்பாண்டியர்

    ReplyDelete
  11. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் மிக்க நன்றி...

    ReplyDelete
  12. அன்பின் சிவக்குமார் நான் உங்களுக்கு அளித்த பதில் உங்களுக்கு புரிந்து போனதில் பெருமகிழ்ச்சி எனக்கு...உங்கள் தந்தை நடிகர்திலகம் சிவாஜிக்கு காரோட்டியா.. அந்த உதாரணம் மிக எதிர்பாராத விதமாக தந்தது.... நல்லது நாம் சந்திப்போம்.நேரம் இருந்தால் என்னிடம் போனில் பேசவும். விரைவில்...விரிவான உங்கள் பதிலுக்கு மிக்க நன்றி..

    ReplyDelete
  13. அன்பின் கேஆர்பி செந்தில்..ஒரு கேள்வி அதற்க்கான பதில் பதில் கொடுத்ததை கேள்வி கேட்டவர் புரிந்து கொண்டு விட்டார்...சிவக்குமாரின் விரிவான பதிலை வாசிக்கவும் சினிமா ஒரு கலை இல்லை என்பது உங்கள் வாதம்.. இருந்து விட்டு போகட்டும்..நான் இவ்வளவு நாளாக அப்படித்தான் தப்பாக நினைத்து விட்டேன். நன்றாக ஆழ்ந்து எனது கேள்வி பதிலை படித்து எதிர்கருத்து சொல்லியமைக்கு மிக்க நன்றி.

    சரி தம்பி ,எதிர்கருத்து சொல்லு சொல்லமா போ... அது கிடைக்கட்டும் கழுதை ...
    சேர்ந்து சரக்கு சாப்பிட்டு நாளாச்சி.. எப்பன்னு சொல்லு???

    ReplyDelete
  14. குளிருக்கு இங்கே வந்து குளிர்காயலாம் போல இருக்கே!
    ஜாக்கி உங்களுக்காகவே... வருக, வருக... ;)
    http://sugumarje.blogspot.com/2010/11/silk-amazing-photo-shoot.html

    ReplyDelete
  15. Dear Mr. Jackie,

    Our support will be there for u... forever...

    All the best....

    Rgrds,
    Vijay
    Muscat.

    ReplyDelete
  16. "அதுவும் மழைகாலத்தில் விடியலில் 4மணிக்கு மேல் விழிப்பு வந்து போர்வையை நன்றாக போத்திய படி, மெலிதான காமம் தலை தூக்க கற்பனை காதலிக்கு முகவடிவத்துக்கு உதவிய பெண்" very poetic 

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner