sanveg and nonveg | சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் | 28/10/2015
சாண்ட்வெஜ்  அண்டு நான்வெஜ்…28/10/2015
  ஆல்பம்.

மத்தியில் பிரதமர்   மோடி ரெஸ்ட் எடுக்காமல்இந்தியாவின்  வளர்ச்சிக்கா நாடு நாடாக சுற்றிக்கொண்டு இருக்கிறார்… பெஸ்ட்டிவல் தினம் என்பதால் தீபாவளிக்கு   சொந்த நாட்டுக்கு வந்துள்ளார்… 
 

Heritage Bridge Built by British at Tamilnadu | Koppadi Bridge | கோப்பாடி பாலம் அல்லது கோப்பாடி செட் கோப்பாடி பாலம்..

சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார் கோவில் செல்லும் வழியில் இருக்கும் சிறிய ஊராட்சியின் பெயர் குமராட்சி...

Beware - Dog Lovers | Pet Animal Lovers must Watch Video | True Story | ஒரு நெகிழ்ச்சிக் கதை

பெட் அனிமல் வச்சி இருக்கறங்க….   முக்கியமாக   நாய் பூனை வளர்க்கறவங்க கண்டிப்பாக பார்க்க வேண்டிய பகிர்ந்துக்க வேண்டிய  பதிவு இது..


கடலூர் நியூசினிமா தியேட்டர் எதிரில் தரைகாத்த காளியம்மன்  கோவில் இருக்கு… அதுக்கு பக்கத்து   கெடிலம் ஆத்து ஒரமா எனது  நண்பர் குமார் என்பவர் டிங்கர் ஒர்க்ஷாப்  வச்சி இருக்கார்… அவுங்க வீட்டுல ஆடு மாடுங்க கோழிங்க அதிகம்…

Naanum Rowdy Dhaan (2015) Movie Review by Jackie Sekar | நானும் ரவுடிதான் திரைவிமர்சனம்நானும் ரவுடிதான்..


விஜய் டிவி விருது வழங்கும் விழாவில் யாருடன் உங்களுக்கு நடிக்க விருப்பம் என்று  விஜய்சேதிபதியிடம் கேட்டு வைக்க… அவரும் முகம் எல்லாம் வழிச்சலோடு நயன்தாரா என்று ரொம்ப கூச்சமாக அதே சமயம் கியூட்டாக சொன்னார்… 

10 Endrathukulla Movie review | 10 எண்றதுக்குள்ள திரைவிமர்சனம்.
 10எண்றதுக்குள்ள… 

1990 ஆம் ஆண்டு என் காதல் கண்மணி திரைப்படத்தின் மூலம் சியான் விக்ரம்  தமிழ் திரையுலகில் கால் பதித்து 25 வருடங்கள் ஆகி விட்டன. அவருடைய முதல் படம் அக்டோபர் 17 ஆம் தேதி ரிலிஸ் ஆனாது..  25 ஆண்டுகள் கழித்து அவருடைய படமான பத்து எண்றதுக்குள்ள  அதே அக்டோபர் மாதத்தில் ரிலிஸ் ஆகின்றது…


happy anniversary


 
அது நடந்து ஏழு வருடங்கள் ஆகி விட்டன...
ரிசப்ஷன் தொடங்க இன்னும் பத்து நிமிடம் இருக்கும் போது மணமக்கள் சண்டை போட்டுக்கொள்கின்றார்கள்..
திருமணத்திற்கு வருபவர்களுக்கு தேங்காய் வெற்றிலை பாக்கு என தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கும் உறவினர் பசங்கள் முதலில் அதிர்ச்சி அடைந்தாலு ம் தொடர்ந்து தாம்புல பை போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்...
சண்டை என்றால் அப்படியான சண்டை...
ஆயிரத்து 500 பத்திரிக்கை மேல் வைத்தாகி விட்டது... ஆயிரத்துக்கு மேல் தேங்காய் தாம்புல பை ரெடியாகி கொண்டு இருக்கின்றது.,,
மாலை மூன்று மணியில் இருந்தே இரவு விருந்துக்கு சமையல் ஆட்கள் வியற்வை கசகசப்போடு மண்டபத்தில் சமைத்துக்கொண்டு இருக்கின்றார்கள்..

CHENNAI MYLAPORE VERY FAMOUS AND OLD KARPAGAMBAAL SWEET STALL | மயிலை கற்பகம்பாள் இனிப்பு கடை
கைமணம் நிகழ்ச்சியில் இன்று நாம் காண இருக்கும் கடை… மயிலையில் இருக்கும் கற்பகாம்பாள்   இனிப்பக கடையைத்தான் இந்த பக்கத்தில் பார்க்க  இருக்கிறோம்.


Nusrat Fateh Ali Khan birthday | இன்று நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…
இன்று பாகிஸ்தான் பாடகர் நுசுரத் பதே அலிகான் அவர்கள் பிறந்த தினம்…
இந்தியா பாகிஸ்தான் ஒற்றுமையாக இருந்து பிரிந்து மூன்று மாதம் கழித்து பாகிஸ்தான் பஞ்சாபில் பிறந்தவர்…

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் மட்டும் நுசுரத் பதே  அலிகானை அவரது வந்தே மாதரம் இசை ஆல்பத்தில் பாட வைக்காமல் இருந்து இருந்தால்.. என்னை போன்ற இசையறிவு அதிகம் இல்லாத கடலூர் கார பயலுக்கு இவரை பற்றி தெரியாமலே போய் இருக்கும்..

கவாலி இசையின் ராஜா என்று  இவரை இசை உலகம் போற்றுகின்றது…ஹைபிட்சில் கவாலி இசையில் பாடுவதில் வல்லவரான இவரை.. 50 வது பொன்விழா ஆண்டில்  ரகுமான் வெளியிட்ட இசை ஆல்பத்தில் நுசுரத்தின் பங்கும் இடம்  பெற்றது..

வழக்கம் போல  தானும் படுக்க மாட்டான்  தள்ளியும் படுக்கமாட்டன் என்பது போல நுசுரத் பதே அலிகானை  பாட வைத்தற்கு எதிர்பு கிளம்பியது…
 வந்தே மாதர்ம் இசை ஆல்பத்தில் "Gurus of Peace" பாடலை ரகுமானும் நுசுரத்தும் சேர்ந்து பாடி கலக்கினார்கள்….

வந்தே மாதரம் இசை ஆல்பமான மா துஜே சலாம் தயாரிப்பின் போது முதல் போடும் சோனி நிறுவனம் சொன்னது.. யாராவது பிரபலமானவரை உங்களோடு இணைந்து பாடச்செய்தால்.. இன்னும் இந்த ஆல்பம் சிறப்பாக இருக்கும்  அது மட்டுமல்ல.. இந்திய இசை உலகம் எங்கும் கூடுதல் கவனம் பெறும் என்றதோடு… டைட்டானிக் படத்தில்   உச்சஸ்தாயில் பாடும் செலின் டியோன் பெயரை   சோனி பரிந்துரைத்தது.. ஆனால் ரகுமான் அந்த பெயரை நிராகரித்ததோடு… எங்கள் தோழமை தேசமான பாகிஸ்தானில்  உள்ள பாடகர் நுசுரத்  பதே அலிகான் பாடினால் சிறப்பாக இருக்கும் என்றதோடு…தண்ணியும் எண்ணெயும் எப்போதும் ஒன்று சேராமல் எதிரும் புதிருமான   தேசத்தில் இருந்து முதல் முறையாக இரண்டு குரல்கள்  ஒன்றாக இணைந்தன.. அந்த பாடல்தான்… வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம் பெற்ற "Gurus of Peace"
 கருத்தாம்மாவில் வரும் போறாளே பொண்ணுதாயி பாடலை கொஞ்சம் நாகசு செய்து மாற்றி இருந்தார்…


பாடலின் துவக்கத்திலேயே  நுசுரத்  பதே அலிகான் கலக்கி இருந்தாலும்..2 ,27 இல் பின்னி இருப்பார்… 
 முதல் முறையாக  இந்த பாடலை கேட்ட போது இவர் யார் என்று அறிந்துக்கொள்ளும் ஆர்வம் வந்ததோடு புதிய குரல்….
பிறகு இணையத்தில் தேடி இவரை பற்றி அறிந்துக்கொண்டேன்…  வந்தே மாதரம் இசை ஆல்பம் வெளியான  தினம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி… சரியாக  ஐந்து நாட்கள் கழித்து கிட்னி செயல் இழப்பு காரணமாக இறந்து போனார்..


இந்தி பாடல்களில் அவர் பிரபலம்… ஆனால் கடைகோடி தமிழனுக்கு Nusrat Fateh Ali Khan அறிமுகப்படுத்தியதில் பெரும் பங்கு ரகுமானுக்கு உண்டு
உலகின் நம்பர் ஒன் தேடுதல் இயந்திரம் கூகுள்..  இவரது புகைப்படத்தை தேடுதல் இயந்திரத்தின் முகப்பில் வைத்து இவருடைய பிறந்த தினத்துக்கு மரியாதை செய்துள்ளது

இனிய பிறந்தநாள்  வாழ்த்துகள் ‘
Nusrat Fateh Ali Khan jiநினைப்பது அல்ல நீ
 நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

CHENNAI BEST BURMA FOOD ATHO | சென்னை பாரிஸ்கார்னர் பர்மிய உணவு அத்தோ

கைமணம்  பகுதியில்...

இன்று நாம் சுவைக்க இருக்கும் உணவு அத்தோ.
அத்தோ  பர்மாவின் தேசிய உணவு….


puli ( 2015) movie review | புலி திரைவிமர்சனம்.
புலி திரை விமர்சனம்.

பாகுபலி போலா..??? என்று கேட்டால் ஆம்.. ஆது போன்று ஒரு பேன்டசி கதைதான்.. ஆனால் பாகுபலி நீண்ட கால தயாரிப்பு... புலி குறைந்தகால தயாரிப்பு... ஆனாலும் தமிழல் அரைத்த மாவையே அரைக்காமல் பேன்டசி ஜேனரில் ஒரு பெரிய ஹீரோவை வைத்து  கதையை யோசித்த வகையில் அதில் விஜய்  நடித்த வகையில்   இருவருக்கும் ஒரு ஸ்பெஷல் பொக்கே..
 
====
புலி படத்தின் கதை என்ன?
 
வேதாள தேசம்... மனிதர்களை விட சக்தி வாய்ந்தவர்கள்... அவர்கள் கட்டுபாட்டில் 59 க்கும் மேற்ப்பட்ட   கிராமங்கள் உள்ளன.. அதில் உள்ள ஒரு ஊரில் மருதீஸ்வரன் (விஜய்) தனது அப்பா பிரபுவோடு வசிக்கின்றார்...அதே ஊரில் வசிக்கும் நரேனின் மகள் ஸ்ருதியோடு லவ்வு.. ஒரு சப யோக சுபதினத்தில் ஸ்ருதியை வேதாள தேசத்து  ஆட்கள் கடத்தி செல்கின்றார்கள்... விஜய் தன் காதலியான ஸ்ருதியை எப்படி மீட்டார் என்பதே  புலி திரைப்படத்தின் கதை...
 
=====
 
படத்தின் சுவாரஸ்யங்கள்..
 
 விஜய் கொடுத்த பாத்திரத்தை நிறைவு செய்து இருக்கின்றார்.. ஆனால் நிறைய இடங்களில் அவர்காட்டும் ரியாக்ஷன் பண்டைய கால  பாண்டசி திரைப்படத்தை பார்க்கும் உணர்வை குறைப்பதை மறுக்க முடியாது அதே வேளையில் ஸ்ருதியை அழைத்து வருவதும் தனது கடமை என்று விஜய் சொல்லும் அந்த காட்சியில் ரசிக்க வைக்கின்றார்...
 
 
========
 
 
 
வீடியோ விமர்சனம்..
 நினைப்பது அல்ல நீ

நிரூபிப்பதே நீ....

.EVER YOURS..

.

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner