MADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு


தென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க  தென் சென்னையில் தெரியாம  இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்னையில் தெரியாம  இடிச்சிட்டா ஏய் கண்ணு என்னை தலையிலயா.. வச்சிக்கிட்டு இருக்கே..??  ஒம்மால பார்த்து போ.. என்ற சீறல்  இருக்கும்...


தென்  சென்னையில் அடிப்பட்ட நமக்கு ஏன் வம்புன்னு ஆபிஸ்க்கு போயிடுவான்.. வட சென்னையில அடிபட்ட ரோட்டு ஓரத்துல குந்திக்கினு இட்லி விக்கற ஆயா கூட ஆட்டோ கூட்டியாந்த அள்ளி போட்டுக்கிட்டு போவும்.. அதான் வித்தியாசம்...

வட சென்னை என்றால் ரவுடிகள் ராஜ்ஜியம் என்று தொடர்ந்து தமிழ் சினிமா கட்டமைத்துக்கொண்டு வந்தாலும் ... அதில் உண்மை இல்லாமல் இல்லை...
ஜார்ஜ்  கோட்டை கட்டி முதல் முறையாக சென்னை பட்டினம் என்று நாமகரனம் சூட்டிய போது உருவான இடங்கள் என்பதால் அதுதான் உண்மையான  மெட்ராஸ்... அவர்கள்தான்   சென்னையின் பராம்பரிய விழுதுகள்....


தமிழ் சினிமாவில் என்னை பொறுத்தவரை புதுப்பேட்டை திரைப்படம் வட சென்னை வாழ்வியலையும் அதன் கருப்பு பக்கத்தையும் மிக  தெளிவாக மிக நெருக்கமாக சொன்ன படம் என்று சொல்லுவேன்...

அதன் பின் இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா.. ரொம்ப டீடெய்லாக  விஜய் சேதுபதியை வைத்து  வட சென்னை வாழ்வியலை மிக அருமையாக பதிவு செய்த படம்.

இன்னும் சில படங்கள் இருக்கலாம் ஆனால் நினைவுக்கு வந்தவை இவைகள் மட்டுமே,.

ஆனால்  மெட்ராஸ் இன்னும்  ஒரு படி   மேலே  போய் விட்டது என்பதே  உண்மை.

அரத பழசான கதை... பார்த்து பார்த்து சலித்து போன கதை... கமலின்  சத்யா பட காலத்து டுவிஸ்ட்... ஆனால் அதை பிரசன்ட் செய்த விதத்தில் இயக்குனர் ரஞ்சித் சட்டைக்காலரை தூக்கி விட்டுக்கொள்கின்றார்.

கருப்பர் நகரம் திரைப்படத்தில் இரண்டு மாத காலம் கேமராமேன் விஜய்  ஆம்ஸ்ட்ராங்கோடு அந்த படத்தில் அசிஸ்டென்ட் கேமராமேனாக  வேலை பார்த்து  இருக்கின்றேன்... கும்பபங்களை இன்னும் நெருங்கி போய் அந்த மனிதர்களின் வாழ்வை இன்னும்  ரொம்ப நெருங்கி  பார்த்து இருக்கின்றேன்..
உண்மையை சொல்ல வேண்டும் என்றால்  பத்துக்கு பத்து வீடுகளில்  இருந்து பள்ளிக்கு கிளம்பி செல்லும் பிகர்களை  பார்த்து அசந்து போய் இருக்கின்றேன்... கலர் கொஞ்சம் கம்மியாக இருந்தாலும் மிக திருத்தமாக நீட்டாக பள்ளி, கல்லூரி, வேலைக்கு  செல்லும் பெண்களை  பார்த்து  பெருமூச்சு விட்டு இருக்கின்றேன்..

 சான்சே இல்லை... இத்தனைக்கு வீடுகள்  காரை பெயர்ந்து சுத்தம் அதிகம் இல்லாத கலிஜ் ஆக இருக்கும் ஆனால்  வீட்டினுள் பத்துக்கு  பத்து அறையாக இருந்தாலும் மிக திருத்தமாக சுத்தமாக வீடுகளை வைத்து இருப்பார்கள்...
 போஸ்டர் ஓட்டுவதில் இருந்து சாணி அடித்து சண்டை பிடிப்பது வரை வட சென்னையி அரசியல் பிரச்சனைகள் சகஜம்... அரசியல் வாதிகளும் தனது கெத்தை காண்பிக்க அங்கே இருக்கும் இளவட்டங்களை உசுப்பி குளிர்  காய்வார்கள்....

படத்தின் கதை..

 இரண்டு அரசியல் கட்சிகள் தேர்தலில்  சுவர் பிடிக்கும் போட்டியில் ஒரு கொலை  நடக்கின்றது.. அந்த வன்மம் அடுத்து கொலைக்கு வழி வகுக்கின்றது... கடைசியில் அந்த   பெரியசுவர் ஒரு   பக்கமே பல காலம் இருக்க அந்த சுவற்றை பிடிக்க   அப்போசிட் குருப் போராடுகின்றது.. அந்த சுவற்றை பிடித்தார்களா? அந்த சுவர் மேலும் எத்தனை பேர் வாழ்க்கையை போட்டு தள்ளியது..???? எத்தனை பேர் அழுது புரண்டார்கள்  எனபதுதான்   
மெட்ராஸ் படத்தின் கதை.

படத்தின் சுவாராஸ்யங்கள்..

ரெண்டு பெக்கு போட்டு உதடு துடைத்து காரபூந்தியை அள்ளிப்போட்டுக்கிட்டு ,  ஒத்தா பத்து நிமிஷம் படம் போனாதான் என்ன என்று நீங்கள் இந்த படத்துக்கு சென்றீர்கள் என்றால்... மிக அழகான அந்த ஓப்பனிங் சீனை இழக்க வேண்டி வரும்...


படம் வந்த மூன்றாம் நாள் இந்த படத்தை பார்த்தேன்.. பார்க்க வேண்டும் என்று மனதில் குறித்த படம்... முக்கியமாக டிரைலர் என்னை அசத்தியது...
26 ஆம் தேதியே படத்தை பார்க்க வேண்டும் என்று எனது  பேஸ்புக் பக்கத்தில் பதிந்தேன்... அது உங்களுக்காக கீழே

=======
கார்த்தி நடிக்கும் மெட்ராஸ் படத்தை பார்க்க வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும் ....
மெட்ராஸ் படத்தின் டீசரில் கார்த்தி என்ன?? உன்கிட்டதானே பேசறேன்??
உனக்கு என்னதான் வேண்டும்?? என்று கேட்க ---??
நாயகி காத்ரீன்
இன்னா நீதான் வேணும்.. கல்யாணம் பண்ணிக்கிறியா? என்று வள் என்று எரிந்து விழுவது போல கேட்கும் அந்த காட்சிக்காகவே படம் பார்க்கலாம் என்று இருக்கின்றேன்.
முக்கியமாக ஓட்டலில் சாப்பிட உட்கார்ந்து இருக்கும் போது ஒரு கையால் வாய் பக்கம் மறைத்து, கண்ணில் முழு காதலுடன் காற்றில் உதிர்க்கும் அந்த முத்தம் இருக்கே யப்பா 32 கலவிக்கு சமம்யா.
ஜாக்கிசேகர்
26/09/2014
============
நார்த்  மெட்ராஸ் என்றால் எல்லோரும் குடித்துக்கொண்டு தம் அடித்துக்கொண்டு  ஒரு கவர்ச்சி பாட்டு ஆடி என்று படம் வேறு திசையில் பயணிக்கும் .. ஆனால்இந்த படம் அவர்கள் வாழ்வியலை மிக நெருக்கமாக நம்மிடம் பிரதிபலிக்கின்றது...

சினிமாதனம் எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு  இருக்கக்கூடாது என்பதால்தான்  இயக்குனர் கார்த்தி அப்பாவையே புதிய ஆளாக போட்டது....
படத்தில்  இன்ட்ரோ ஆகும் எல்லோரும்  மனதுக்கு நெருக்கமானவர்களாக செட் ஆகி விட.... கார்த்தி மட்டும் படம் ஆரப்பித்து கால் மணி  நேரத்துக்கு அப்புறம்தான் செட் ஆகின்றார்...

 முதல் பத்து நிமிஷம் ஒரு கதையை  ஒரு வரலாற்றை எப்படி குழப்பம் இலலாம  சொல்லனும்ன்னுறதுக்கு எடுத்துக்காட்டி அந்த சுவர் ஹிஸ்ட்ரி...
 அதுக்கு ரொம்ப உதவி செஞ்சி இருக்கறவங்க மூனு பேரு... கேமராமேன் முரளி ,எடிட்டர் பிரவின்,சந்தோஷ் நாரயணன் மீயூசிக்... சான்சே இல்லை... இவுங்க மூன்று பேர் இல்லைன்னா... மெட்ராஸ் திரைப்படம் இல்லைன்னு சொல்லலாம்...

முக்கியமா இன்டர்வெல்  பிளாக் சேசிங்கை நாம ஓடறது போல பல ஆங்கிள்ள முக்கியமா ஆட்டோ துரத்துற ஷாட்டுங்களை எல்லாம்  உறுத்தாத  லைட்டிங்ல முரளி அசத்தி இருக்கார்...

சுவர்தான் பிரதானம்.. அதனால நைட் எபெக்ட்ல ஒரு  லைட்டை மேல கட்டி  அது  மினுக் மினுக்குன்னு  எரிவதை  இயல்பாய் படம் பிடித்து இருப்பதும்... அதே  சுவத்துகு எதிரே  கார்த்தி நின்னுக்கிட்டு இருக்க.... போர்கிரவுண்டில்  கேமரா வைத்து  பின்பக்கம் கார்த்தியின் நிழல் சுவற்றின் மீது பிரமாண்டமாக மாறுவது போல படம் பிடித்து இருப்பது படத்துக்கு   பெரிய பலம்.

நாயகனும் நாயகியம் தண்ணி பிடிக்க வரும் போது ரோட்டு தரை எல்லாம் கொழ கொழ மழை பேஞ்சி இருக்கும்.. அதுல  பாத்ரூம்  செப்பல் போட்டுக்கிட்டு வந்து  நடிச்சாலும்   ரொம்ப அலட்டமா நடிச்ச அத்தனை அர்ட்டிஸ்ட்டுகளின் டெடிகேஷனுக்கு   வாழ்த்துகள்.. இன்குலூடிங் கார்த்திக்கும்  சேர்த்துதான்...


படத்துல ஹீரோவோட பளிச்சுன்னு  பதியறது அன்பு பாத்திரமும் அவரது மனைவியாக நடித்த மேரியும்தான்... அதன் பின் ஜானி  கேரக்டர்... பின்னி இருக்கு...

ஏன்டி புருசன்  குத்துக்கல்லு போல உட்கார்ந்துக்கிட்டு இருக்கேன்.. நீ  என்னடான்னா   உன் தலைவன் போட்டோவுக்கு முத்தம் கொடுக்கற என்று கேட்க...


புருசன் குத்துக்கல்லு போல உட்கார்ந்துக்கிட்டு இருந்தா... நான் எங்க தலைவருக்குதான்...  முத்தம் கொடுக்க முடியும் என்று சொல்லி  கணவன் அன்புவை ஊடலுக்கு   அழைக்கும் அந்த காட்சி இருக்கின்றதே கிளாஸ்*... சான்சே இல்லை...
(அசத்திட்ட புள்ள... சான்சே இல்லை...டேடிக்கேஷன்னா நீதான்..)

 அதே போல அந்த அன்னியோன்யம்.. படம் முழுக்க இருக்கறதும் அன்பு செத்துகிடக்கறதை பார்த்து கதறுவதும்... அன்பு பாடிக்கு உதட்டுக்கிட்ட முத்தம் கொடுக்கற அந்த   காட்சி இருக்கே அதுதான் டீடெயிலிங்...

 சாவு வீட்டை இவ்வளவு டீடெய்லா கட்டியாதே இல்லை... நடுவுல  திடிர்ன்னு ராக்கர் பாய்ஸ்.. பூந்து ஸ்டெப் போட்டு  கானா பாலா  பாட்டுக்கு நடுவே ஒரு பீட்டுக்கு ஆடுவது வட சென்னையில்  மட்டுமே சாத்தியம்.. அதை மிக அழககாக பதிவு செய்து இருக்கின்றார்கள்...

கார்த்தியின்  அம்மா என்னுயிர் தோழன் நாயகி என்று நினைக்கின்றேன்..

====
படத்தின் டிரைவர்.. 


=======
படக்குழுவினர் விபரம்.
Directed by Pa. Ranjith
Produced by K. E. Gnanavel Raja
S. R. Prakashbabu
S. R. Prabhu
Written by Pa. Ranjith
Starring Karthi
Catherine Tresa
Music by Santhosh Narayanan
Cinematography G. Murali
Edited by Praveen K. L.
Production
company
Studio Green
Distributed by Dream Factory
Studio Green
Release dates 26 September 2014
Running time 156 minutes
Country India
Language Tamil
=====
 பைனல் கிக்.
காப்பி அடிக்காம  கழுவி கழுவி ஊத்திய கதையாக  இருந்தாலும் வட சென்னை மக்களின் வாழ்வியலை மிக நெருக்கமாக பதிவு செய்து இருக்கும் இயக்குனர் ரஞ்சித்துக்கு  ஒரு பூங்கொத்து...தலித் அரசியலை இந்த திரைப்படம் முன் வைக்கின்றது என்று பேச்சு இருக்கின்றது... 



வடசென்னையில் அக்ரஹார அரசியலையோ அல்லது  மயிலை , திருவல்லிக்கேனி வாழ்க்கையையா பதிவு செய்ய முடியும்???  பொதுவாக திரைப்படத்தை திரைப்படமாக பார்க்கப்பட வேண்டும் என்பதே  எனது எண்ணம்...ஜானி கேரக்டர் பேசும் பல விஷயங்கள் புரியவில்லை.. அப்படியே புரிய நேரும் ரசிகர்கள் கை தட்டலில் எதுவும் புரியாமல் போகின்றது..  


இந்த படத்துக்கு அந்த கேரக்டர் கொடுத்த  டெடிக்கேஷனுக்கு ஒரு பூங்கொத்து..   சந்தோஷ்  நாரயணனுக்கும்...ஒரு ஸ்பெஷல் பொக்கே.... இந்த படம் பார்த்தே தீர வேண்டிய  திரைப்படம்...



======
படத்தோட  ரேட்டிங்.
 பத்துக்கு எட்டு.
========
பிரியங்களுடன்

ஜாக்கிசேகர்.




நினைப்பது அல்ல நீ
நிரூபிப்பதே நீ.....
EVER YOURS...

9 comments:

  1. நட்ப பத்தி நல்லா ஆழமா காட்டி இருந்தாங்க.. நட்பு நட்புனு வாய்ல வட சுடாம படத்துல அழுத்தமா காட்டி இருந்தாங்க...

    ReplyDelete
  2. படத்தில் அந்த ஓவியமே நடிச்ச மாதிரி இருக்கு கவனிச்சீங்களா (ஒரு ஷாட்டில் குறிப்பா இரவில் பல் தெரிய சிரிச்சி பயமுறுத்துற மாதிரி பகலில் சாந்தத்துடன் இருக்குறமாதிரி)
    கிளைமாக்ஸ் முடிந்து தொடரும் ஹீரோவின் வாழக்கை குறிப்பு அவ்வளவாக ஒட்டவில்லை.. அரசியல் வாதி / அடுத்த அடிப்பொடியை காண்பிப்பதோடு முடித்திருந்தால் ஒரு ஹைப் இருந்திருக்கும்.

    ReplyDelete
  3. நல்ல பார்வை.
    வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  4. ஆஹா படத்த உடனே பார்க்க தோணுதே....நாளைக்கே போயிடுறேன் நன்றி சகோ...

    ReplyDelete
  5. Jackie sir.. Yow.. Your words only making me to watch the movies.. You are really gr8..

    ReplyDelete
  6. பாஸ்
    நல்ல விமர்சனம் ..

    ReplyDelete
  7. //வெளியிட வேண்டாம்//
    அப்படி என்ன அவசரம்
    எவ்வளவு ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்...
    மீண்டும் திருத்துங்க...
    ஒருமுறை பின்னூட்டம் இட்டு சோதித்த பின்னர் எழுதினேன்...
    உடன் திருத்துக ...

    ReplyDelete
  8. Hero and heroine both are match in the movie.

    ReplyDelete
  9. please visit,
    http://thaadikaran.blogspot.com/2014/11/three-days-korean-tv-series.html

    ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner