COLD FISH உலகசினிமா/ஜப்பான்18+..கஜ கஜ கொஜ கொஜ மனித கொத்துக்கறி..போன ஏழாவது சென்னை உலக படவிழாவில் ஆன்ட்டி கிரைஸ்ட் என்ற டென்மார்க் படம் .. படம் பார்ப்பவர்களை  போட்டு தாக்கியது... நிச்சயம் அந்த படத்தை பற்றி எப்படியும் இரண்டு  நாளைக்கு மேல் யோசித்துக்கொண்டு இருந்து இருப்பார்கள்...

பெண் உறுப்பில் இருக்கும்  மொட்டை கத்திரிக்கொலால் வெட்டியும்,கணவனின் ஆணுறுப்பை கட்டையால் அடித்து நசுக்குவதுமாக , அந்த படம் ரத்த வீச்சாக ஒரு பெரிய பரபரப்பை போனசென்னை உலக படவிழாவில் ஏற்படுத்தியது..  அதை விட இன்னும் ஒரு படி மேலே போய் இருக்கின்றது இந்த  கோல்ட் பிஷ் என்ற ஜப்பான் படம்....அவனை மாதிரி ஆட்களை நாம் நம் வாழ்வில் சந்தித்து இருப்போம்.. அவர்களுடைய வலை எல்லாம் யார் அப்பாவியாக நியாயத்துக்கு கவுரவத்துக்கும் பயந்து வாழ்கின்றார்களோ?? அவர்கள்தான் அவனுடைய இலக்கு... ஏதாவது உதவி செய்வது போல செய்,து கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பக்கம் இழுப்பதுதான் அவனை போன்ற ஆட்களின் வேலை... அவனை போன்ற ஆட்கள் முதலில் நம்மை பேச விடவே மாட்டார்கள்.. அவர்களே பேசிவிட்டு ,நம்ம உம் என்ற  வார்த்தை மட்டும் சொல்லும் விதமாக அவர்கள் பேச்சு இருக்கும்.

உதாரணத்துக்கு மகாநதி படம் நீங்கள் பார்த்து இருக்கலாம்.. அதில் தனுஷ் கேரக்டர் அப்பாவி கமலிடம் பேசி பேசி, ஊர்ல பாக்கு வியாபாரம் செஞ்சவனை சென்னைக்கு அழைத்து வந்து ஏமாற்றி ஜெயிலில்  தனுஷ் தள்ளுவானே அது போல கேரக்டர்கள்  நாமே சந்தித்து இருக்கலாம்.

தமிழ் நாட்டில் இந்த படத்தில் வருவது போல ஒரு சம்பவம் நடந்தது.. சென்னை மாணவர் நாவரசு என்பவரை ராக்கிங் செய்து அதன் மூலம் கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி அந்த பாடியை டிஸ்போஸ் செய்த சம்பவமும்... இன்னும் இது போலான பல சம்பவங்கள்  கேள்வி பட்டு இருக்கின்றோம்...


COLD FISH உலகசினிமா/ஜப்பான் படத்தின் கதை என்ன???

முராட்டா அவன் பொண்டாட்டியும் ஒரு மீன்கடை வைத்து நடத்துகின்றார்கள்.. வெயிட்.. மீன்கடைன்னதும் கவிச்சு அடிக்குமே அந்த கடைன்னு நினைச்சிக்கிட்டிங்களா??? அந்த கடை இல்லை...அழகுக்காகதொட்டி மீன்கள் விற்கும் கடை வைத்து இருக்கின்றான்...

அவன் கடையில் வேலை செய்யும் எல்லோருமே வயதுக்கு வந்த பெண்கள்.  எல்லோருமே ஏதோ கடவுள் சொல்வதை வேதவாக்காக எடுத்துக்கொள்வது போல முராட்டா சொல்வதுதான் அந்த பெண்ககளுக்கு வேத வாக்கு..

உதாரணத்துக்கு இப்ப உங்க பொண்ணை அந்த கடையில் வேலைக்கு சேர்க்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். காலையில் சேர்த்து விட்டு மாலையில் போய் உங்க பெண்ணை பார்க்க போன நீங்க யாருன்னு? உங்க பொண்ணு உங்களை கேட்கும்... சரி கேட்டா கூட பரவாயில்லை உங்களை பிச்சைக்காரன் போல ஒரு பார்வை பார்க்கும்.. அது எவ்வளவு கொடுமை... அப்படி என்னதான் சித்து வேலை முராட்டா செய்வான்னு தெரியாது....


சரி முரட்டா பத்தி கொஞ்சம் பார்க்கலாம்...

முராட்டாவும் அவன் மனைவியும் பணத்துக்காக எதையும் செய்வார்கள்.. எதுவும்னா? என்ன கேள்வி இது?? எது வேண்டுமானலும்...

உன் பொண்டாட்டி அழகா இருக்கா.. நான் கொஞ்சம் படுத்துக்குறேன்.. ஒய் நாட்.. போய் படுத்துக்கோ என்று சொல்லும் ரகம்.  சரி இவ்வளவுதானா?? இதுதான் பல இடத்துல நடக்குதே.... வேற வேற... வேறையா???சரி முரட்டா வை சந்திச்ச 30க்கு மேலானவர்கள்... காணமல் போய் இருக்கின்றார்கள். எந்த தடயமும் இல்லாமல்..??? அப்படியா?? வாயைபொலக்காதிங்க.... இதுக்கே இப்படின்னா எப்படி??

பணம் இருக்குது பிரச்சனை பண்ணறான்னு தெரிஞ்சுதுன்னு வச்சிக்க, அது யாரா இருந்தாலும் முராட்டவும் அவன் ஒய்ப்பும் நைசா பேசி.. அவனுக்கு டானிக் போல ஒரு சமாச்சாரத்தை கொடுப்பாங்க... அதை குடிச்சதும் நெஞ்சு அடைச்சுக்கும்...  செத்து போனதும் அந்த பொணத்தை எடுத்து போய் ஊருக்கு ஒதுக்குபுறமா இருக்கும்  அவனுக்கு சொந்தமான காட்டு பங்களாவுல.. பாத்டாப்ல  அந்த பொணத்தை போட்டு விட்டு புருசன், பொண்ஜாதி ரெண்டு பேரும், நம்ம காசி மேட்ல இருந்து மீன் வாங்கி வந்து நல்லா சம்மனமா உட்கார்ந்து கிட்டு மீன் ஆய்வது போல அந்த  பொணத்தை பீஸ் பீசா வெட்டுவாங்க.....

கொஞ்சம்கூட பயமோ அருவறுப்போ இல்லாம பொறுமையா  கொத்துகறி போல போட்டு அதை மட்டும் ஒரு பிளாஸ்ட்டிக் பையில வச்சிக்குவாங்க... எலும்பை எல்லாம் தனியா எடுத்து வெளிய ஒரு  கரி அடுப்பு இருக்கும், அதுல எலும்பை போட்டு எறிச்சி சாம்பலை எடுத்து.. காட்டுல இருக்கும் பள்ளதாக்குல தூவிடுவாங்க.. சரி அப்புறம் என்ன?  கொத்துகறியை பக்கத்துல இருக்கும் சின்ன ஆத்துல வீசிடுவாங்க.. அந்த மனித கறிகளை மீன்கள் தின்று விடும்....

முராட்டா இது போல ஒரு ஆள் ரெண்டு ஆளை சாகடிக்கலை 30 பேருக்கு மேல கொத்துக்கறி போட்ட முராட்டாகிட்ட ஒரு அப்பாவி குடும்ப தலைவன் சமட்டோ மற்றும் அவனது இரண்டாம் மனைவி , மற்றும் முதல் மனைவி மகள்  என முரட்டாவிடம் வந்து மாட்டிக்கிட்டு படும் பாடுதான் இந்த படம்.......அவுங்க எப்படி இவன்கிட்ட வந்து மாட்டிக்கின்றாங்கன்னு டவுன்லோடு பண்ணி பாருங்க.....
============

படத்தின் சுவாரஸ்யங்களில் சில.....

இந்த படம்  கடந்த 17ம்தேதி  சென்னை உட்லண்ஸ் திரையரங்கில் மதியம் 3 மணிக்கு  சென்னை 8வது உலகபடவிழாவின் போது திரையிடபட்டது...

இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கபட்டவை...ஒரு அப்பாவி குடும்பத்தலைவன் வாழ்வில் பத்து நாட்களில்நடக்கும் உண்மை சம்பவங்களே  இந்த படம்.

அதீத போதை , காமமும் கொலையும் என்பதாக வாழும் தம்பதிகள்.. முராட்டா... அதே போல் பிரச்சனை வரும் போது  அப்பாவி வேஷம் போடவும் தயங்கமாட்டார்கள்....

காணாமல் போனவனின் தம்பி முராட்டாவின் கடைக்கு வந்து கேட்டுக்கொண்டு இருக்கும் போது முராட்டா கெஞ்சி  எனக்கு எதுவும் தெரியாது என்று அழுதுக்கொண்டு இருக்கும் போது... பக்கத்து அறையில் முராட்டா ஒய்ப் ஒரு பெண்ணோடு  லெஸ்பியன் லீலையில் ஈடுபட்டுக்கொண்டு இருக்கும் போ,து முராட்டா தன் மனைவியுடம் வேண்டுமானாலும் கேளுங்கள் என்றதும் சட்டென அந்த பெண்ணை விட்டு விட்டு அடுத்த அறைக்கு வந்து அப்படியே கண்ணில் நீருடன் நிற்கும் காட்சியில் அந்த குடும்பமே ஜகஜால ஜிக்கி என்பதை தெரிந்துக்கொள்வோம்...ஒருவனோடு சட சுட உடலுறவு முடித்து அவனை பரலோகம் போக வைத்து  காட்டு பங்களாவில் அவன்  உடம்பை கொத்துக்கறி போட்டுக்கொண்டு இருக்கும் போது முராட்டா மனைவி... ரத்தமும் சதையுமான அவனது ஆணுறுப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு  கொஞ்ச நேரத்துக்கு முன்ன  அது என்னமா வேலை செஞ்சுதுன்னு சொல்லும் போது படம் பார்க்கும் நீங்கள் பயத்தில் உங்களுடையதை அனிச்சையாகதொட்டு பார்த்துக்கொள்வீர்கள்.


அடுப்பில் போட்டு எலும்பை  எரிக்கும்  காட்சியில் போதுமா?  உனக்கு இன்னும் வேண்டுமா? என்று கொலை செய்த ஆட்களின் பேரை சொல்லி அடுப்பில் போடுவது நல்ல காட்சி..

என்னதான் ஒருவன் அப்பாவியாக இருந்தாலும் ரத்தமும்  சதையும் பார்த்து ஒரு கட்டத்துக்கு மேல் அவனிடத்தில் மிருகத்தனம் எப்படி வியாபிக்கின்றது என்பதை கடைசி  காட்சியில் காட்சிபடுத்தி இருப்பார் இயக்குனர்.


ரொம்ப மரியாதை கொடுப்பவன்.. தன் மகள் எதிரில் உறவு வைத்துக்கொள்ளும் அளவுக்கு அவனை இந்த சமுகம் எப்படி மாற்றுகின்றது என்பது கவிதையான காட்சிகள்தான்...

கிளைமாக்சில் நம் தமிழ்படம் பார்ப்பது போலான காட்சிகள்..அதிகம் இருக்கும்...

சமட்டோ முகம் அப்பாவிதனத்தில் இருந்து மராட்டோ மனைவியிடம் மிரட்டி உடலுறவு கொள்ளும் போது மாறும் காட்சி மிக  அழகு...

Shion Sono ஒரு முடிவுடன்  இந்தகதையை படமாக்கியது இந்த படத்தை பார்த்தால் தெரியும்.. இந்த படம் கல்ட் மூவி வகையை  சார்ந்தது.


படத்தின் டிரைலர்...(ஜப்பான் தியேட்டரில் ஓடிய டிரைலர்  உங்களுக்காக..)
படக்குழுவினர் விபரம்.

Director:
Shion Sono
Writers:
Shion Sono (screenplay), Yoshiki Takahashi (screenplay)
Stars:
Makoto Ashikawa, Denden and Mitsuru Fukikoshi


பைனல் கிக்..

இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.. கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்... இந்த படம் பார்த்த  பிறகு இரண்டு நாட்கள்  நீங்கள் தூக்கம் இழப்பது நிச்சயம்...

பிரியங்களுடன்
ஜாக்கிசேகர்....

குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்.... ஓட்டு போடுவது குறித்து இண்டலி மற்றும் தமிழ்மணத்தில் விரிவாய் சொல்லி இருக்கின்றார்கள்

22 comments:

 1. பார்க்கவே பெரிய டெரரா இருக்கிறதே..

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  பத்து ஆண்டினுள் பாதித்த பாடல்கள்.

  ReplyDelete
 2. யப்பா? விமர்சனமே பயங்கரமா இருக்கே!!!!!!!11

  ReplyDelete
 3. வழக்கம் போல... அருமை..

  //Shion Sono ஒரு முடிவுடன் இந்தகதையை படமாக்கியது இந்த படத்தை பார்த்தால் தெரியும்..//

  பார்க்க தூண்டுகிறது.. உங்கள் விமர்சனம்... நன்றி ஜாக்கி சார்..

  ReplyDelete
 4. அய்யயோ படம் பயங்கரமா இருக்கும்போலயே உங்கள் எழுத்துக்களிலேயே தெரிகிறது அண்ணே

  விமர்சன பகிர்வுக்கு நன்றி

  //இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.//

  பார்த்துடுவோம் அன்ணே

  ReplyDelete
 5. என்ன ஒரு விமர்சனம்.. படிக்கும்போதே என்னவோசெய்கிறது.
  -- ஒரு ஆணுறுப்பை எடுத்து கையில் வைத்துக்கொண்டு கொஞ்ச நேரத்துக்கு முன்ன அது என்னமா வேலை செஞ்சுதுன்னு சொல்லும் போது படம் பார்க்கும் நீங்கள் பயத்தில் உங்களுடையதை அனிச்சையாகதொட்டு பார்த்துக்கொள்வீர்கள்.--
  படிக்கும்போதே கை அங்கு போகிறது.

  Wish You Happy New Year
  நன்றி நண்பரே.உங்கள் நண்பர்களிடம் என்னை அறிமுகபடுத்தவும்.

  http://sakthistudycentre.blogspot.com

  இந்த பதிவுக்கு மறக்காமல் ஓட்டு போடுட்டேன் தலைவா...
  என்னையும் கொஞ்சம் Follow பன்னுங்கப்பா...

  ReplyDelete
 6. நீங்க விமர்சனம் செய்தது படம் பார்த்த நிறைவு .அருமை நண்பரே

  ReplyDelete
 7. ௮ வோட்டு விழுந்திருக்கு கமெண்ட்ஸ் காணோம் வடை கிடைக்குமா?

  ReplyDelete
 8. கதையை படிக்கும் போதே இவ்வளவு டெர்ரரா இருக்குதே..!

  ReplyDelete
 9. இதோ இப்பவே going to download. பார்த்துட்டு சொல்றேன்

  ReplyDelete
 10. பின்னுட்டம் இட்ட அனைவருக்கும் என் நன்றிகள்.

  ReplyDelete
 11. // இந்த படம் பார்த்தே தீர வேண்டியபடம்.. கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்... இந்த படம் பார்த்த பிறகு இரண்டு நாட்கள் நீங்கள் தூக்கம் இழப்பது நிச்சயம்... //

  வேண்டாம் சாமி... ஏற்கனவே நான் ஒழுங்கா தூங்கி பல பாசம் ஆச்சு... இதுல இது வேறயா...

  ReplyDelete
 12. Give me download Links pls sir.....
  thanks for review

  ReplyDelete
 13. எதிர்வரும் புதுவருடம் தங்களுக்கு சிறப்பானதாக அமைய வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 14. அய்யா சாமீ இந்த பதிவ படிச்ச 2 மாசமா டவுன் லோட் லிங்க் தேடி கிட்டே இருக்கேன் கிடைக்க மாட்டேங்குது. எனக்கு டொராண்டுல டவுன் பண்ண தெரியாது. வேறேதாவது ஐடியா இருக்கா ?

  ReplyDelete
 15. இப்போ தான் இந்த விமர்சனம் படிச்சேன். நம்ம ஊர்ல இந்த மாதிரி எடுத்தா "பத்து பத்து", துரோகம் (நடந்தது என்ன) மாதிரிதான் இருக்கும் ...
  http://rsksudhakar.blogspot.com/
  நம்ம Blog பக்கத்தையும் கொஞ்சம் பார்த்து கருத்து சொல்லவும் !!!

  ReplyDelete
 16. இப்படிலாம் பயமுறுத்திட்டா நாங்க எப்படி தைரியமா பார்ப்போம்?

  ReplyDelete
 17. பார்க்கணும்னு ஆவல இருக்கு ஆன டவுன்லோட் எப்டி பன்றதுன்னு தெரில

  ReplyDelete
 18. பார்க்கணும்னு ஆவல இருக்கு ஆன டவுன்லோட் எப்டி பன்றதுன்னு தெரில

  ReplyDelete
 19. எப்படி தான் தேடி புடிச்சு இந்த மாதிரி படங்களை எல்லாம் பார்க்கிறீர்களோ? படிக்கும்போதே குலை நடுங்குது.

  ReplyDelete

Subscribe via email

Enter your email address:

Delivered by FeedBurner